இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
வேதாகமத்தின்படியான உதவிக்காரர்கள்BIBLICAL DEACONS டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் பாடத்துக்கு முன்பாக பாடப்பட்ட கீர்த்தனை: |
இன்று பிற்பகலில் உதவிக்காரர்களைக் குறித்து தேவன் என்ன சொல்லுகிறார் என்பதைப்பற்றி நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போஸ்தலர் 6:1-7 க்கு தயவுசெய்து திருப்பிக்கொள்ளுங்கள். “அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்க ரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லை யென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள். அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து நாங்கள் தேவ வசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல. ஆதலால் சகோதரரே, பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்து கொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம். நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள். இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்தஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு, அவர்களை அப்போஸ்தலருக்கு முன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள். தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று: ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்” (அப்போஸ்தலர் 6:1-7). நீங்கள் அமரலாம். லாஸ் ஏன்ஜல்சின் முதல் சீன பாப்டிஸ்டு சபையின் நீண்டகாலமாக என்னுடைய பாஸ்டராக இருந்த, டாக்டர் தீமோத்தேயு லின் அவர்கள், சகல உதவிக்காரர்களுக்கும் வேண்டிய பத்து வாக்குறுதிகளை அவைகளைக் கனப்படுத்தும்படியாக ஏற்படுத்தினார்: “சபையிலே ஒரு உதவிக்காரருக்கு ‘கண்டிப்பாக இருக்க வேண்டிய’ பத்துக் காரியங்கள்” (1) ஒரு உதவிக்காரனாக கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்க வேண்டும் மற்றும் ஒருவரை ஒருவர் கனம் பண்ண வேண்டும் என்ற விருப்பம் இருக்க வேண்டும். (2) I தீமோத்தேயு 3:1-10ல் கொடுக்கப்பட்டுள்ள காரியங்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். (3) வேதாகமத்தை அனுதினமும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும் மற்றும் ஜெபிக்க வேண்டும் மற்றும் ஒழுங்காக மற்றும் மகிழ்ச்சியோடு தசம பாகங்களைக் கொடுக்க வேண்டும். (4) கண்டிப்பாக விவாகம் செய்தவராக இருக்க வேண்டும் மற்றும் அவருடைய மனைவி தனது கணவராகிய உதவிக்காரருக்கு தனது சிறந்த திறமையோடு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். (5) கண்டிப்பாக ஞாயிறு பள்ளியில் போதிக்க கூடியவராக இருக்க வேண்டும். (6) கண்டிப்பாக எந்தவிதத்திலும் கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளவராக, விசேஷமாக ஆத்துமாக்களைச் சந்திப்பதில் ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும். (7) ஆராதனை கூட்டங்கள், ஞாயிறு பள்ளி, ஜெபக்கூட்டங்கள், அலுவலர் கூட்டங்கள், மற்றும் ஊழியர் கூட்டங்கள் போன்ற எல்லாவித அடிப்படைக்கூட்டங்களிலும் தவறாமல் கலந்து கொள்ளுபவராக இருக்க வேண்டும்; மற்றும் சபையின் எல்லாவித நிர்வாகங்கள் மற்றும் செயல்பாடுகளில் உதவி செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். (8) பயிற்சி கொடுக்கப்படும் தருணங்களில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டியது அவசியம் மற்றும் சபையின்மூலமாக மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்படும் தருணங்களில் அல்லது மற்றும்பிற நிகழ்சிகளில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். (9) இளம் கிறிஸ்தவர்களுக்கு முன்பாக ஒரு நல்ல மாதிரியாக இருக்க வேண்டியது அவசியம். அவர்களோடு ஒருபோதும் வாக்குவாதம் செய்யக்கூடாது அல்லது ஒரு பயிற்சி கொடுக்கும் நோக்கமே அல்லாமல் அவர்களிடம் கோபம் கொள்ளக்கூடாது.
(10) பாஸ்டரோடு இணைந்து செயல்படுபவராக இருக்க வேண்டியது அவசியம். டாக்டர் தீமோத்தேயு லின் அவர்கள் சரியாக சொல்லி இருக்கிறார்கள். டாக்டர் தீமோத்தேயு லின் அவர்கள் சொன்னவைகளை உதவிக்காரர்கள் பின்பற்றுவார்களானால், சபை பிளவுபடுவதற்கு அவர்கள் காரணமாக இருக்கமாட்டார்கள். ஆனால் இன்று அப்படியாக இல்லை. உதவிக்காரர்கள், நமது சபைகளைப்போல சுதேசிசபைகளாக, சபை பிளவுபடுவதற்கு அவர்கள் அதிக காரணமாக இருக்கிறார்கள். உதவிக்காரர்கள் 92 சதவீதம் நமது சபைகள் பிளவுபடுவதற்கு அதிக காரணமாக இருக்கிறார்கள். சதரன் பாப்டிஸ்டு சபைகளில் உதவிக்காரர்கள் 93 சதவீதம் சபைகள் பிளவுபடுவதற்கு அதிக காரணமாக இருக்கிறார்கள். இந்தக் கருத்துக்கணிப்புப் புள்ளி விபரங்கள் டாக்டர் ராய் எல். பிரான்சன் அவர்களின் சபை பிளவு என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது. டாக்டர் ராய் எல். பிரான்சன் அவர்களின் சபை பிளவு என்ற நூலை பற்றி, டாக்டர் டபல்யூ. ஏ. கிரிஸ்வெல் அவர்கள் சொன்னார். நீங்கள் இந்த ஆண்டிலே எந்தப் புத்தகத்தைத் தவறவிட்டாலும் சபை பிளவு என்ற நூலை மட்டும் தவறவிட வேண்டாம். ஒவ்வொரு பாஸ்டரும் படிக்க வேண்டிய புத்தகங்களில் இது ஒன்றாகும்.
– டாக்டர் டபல்யூ. ஏ. கிரிஸ்வெல், டாக்டர் பிரான்சன் அவர்களின் சபை பிளவு என்ற நூலைப் பற்றி, டென்னாசி டெம்புள் யுனிவர்சிடியின் சேன்சிலர், டாக்டர் லீ ராபார்சன் அவர்கள் சொன்னார், இந்தப் புத்தகத்தை வாசிப்பதன் மூலமாக பாஸ்டர்கள் மற்றும் தலைவர்கள் பயன்பெறுவார்கள். டாக்டர் பிரான்சன் அவர்கள் சொன்னார், “அநேக உதவிக்காரர்கள் அபாயகரமானவர்களாளாக இருக்கிறார்கள் ஏனென்றால் தாங்கள் தகுதிபெறாத ஒரு வேலையை அவர்கள் செய்ய முயற்சி செய்கிறார்கள்” (பிரான்சன், ப. 51). நாம் எதிர்காலத்தில் பிளவுகளை எப்படி தவிர்க்க முடியும்? நாம் முதல் கோட்பாடுகளுக்குத் திரும்ப வேண்டியது அவசியம் என்று டாக்டர் பிரான்சன் அவர்கள் சொல்லுகிறார். டாக்டர் பிரான்சன் அவர்கள் சொல்லுகிறதாவது அ. அவர்கள் செய்ய வேண்டியவைகள் ஜெபம், பிரசங்கம், போதனை மற்றும் சுவிசேஷ ஊழியம். ஆ. அவர்கள் தங்கள் பாஸ்டர்களால் ஆளப்பட வேண்டும். “தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்” (எபிரெயர் 13:7). “உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர் களான படியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்: அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமா யிருக்கமாட்டாதே” (எபிரெயர் 13:17). இ. இழக்கப்பட்டவர்களை வெற்றி கொள்ள வேண்டும் மற்றும் அவர்களுக்கு அன்போடு போதனை செய்ய வேண்டும். ஈ. எல்லாவற்றையும் எளிமையாக்க வேண்டும்! அவர்கள் செய்ய வேண்டியவைகளான ஜெபம், பிரசங்கம், போதனை மற்றும் சுவிசேஷ ஊழியங்களை தவிர மற்ற எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும். 1. மாதாந்திர அலுவல் கூட்டங்களிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும். 2. உதவிக்காரர்களின் கூட்டங்களிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும். 3. இன்னும் பலவிதமான காரியங்களிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும் (பக்கங்கள் 228, 229, 230 பிரான்சன்). 4. அலுவல் கூட்டங்களிலிருந்தும் மற்றும் எல்லா போர்டு மற்றும் ஆலோசனை கூட்டங்களிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும். டாக்டர் பிரான்சன் அவர்கள் சொன்னார், “வேதாகமத்தில் குறிப்பிடப்பட்ட ஒரே ‘அலுவல் கூட்டம்’ போதகர்கள்/தீர்க்கதரிசிகள் கூடியிருந்தபொழுது மக்களைக்கூட்டி, ‘நாங்கள் இதைதான் செய்யப்போகிறோம்,’ என்று சாராம்சமாக சொன்னார்கள் அதற்கு மக்கள் பதில் சொன்னார்கள், ‘மிகவும் நல்லது, நாங்கள் அதை செய்வோம்’” டாக்டர் பிரான்சன் அவர்கள் சொல்லுகிறார், “அநேக உதவிக்காரர்கள் அபாயகரமானவர்களாளாக இருக்கிறார்கள் ஏனென்றால் தாங்கள் தகுதிபெறாத ஒரு வேலையை அவர்கள் செய்ய முயற்சி செய்கிறார்கள்” (ப. 51). உதவிக்காரர்கள் நிர்வாக போர்டுகள் அல்ல; வேதாகமத்தில் அவர்களுக்கு எந்தத் தீர்மானமும் எடுக்கும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை. சபையின் மீதான ஆளுகையானது தெளிவாகப் பாஸ்டர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவன் சொல்லுகிறார், “உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர் களான படியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்: அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமா யிருக்கமாட்டாதே” (எபிரெயர் 13:17). உதவிக்காரர்களில் ஒருவர் கேட்டார், “நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படிதான் உதவிக்காரர்கள் செய்ய வேண்டுமா?” என்று. அந்தப் பாஸ்டர் அப்போஸ்தலர் 6:1-6ஜ திறந்தார். பிறகு அந்தப் பாஸ்டர் சொன்னார், “இங்கே வேதாகமத்திலே பிரத்தியேகமாக ஒரே வேலை கொடுக்கப்பட்டுள்ளது.” அந்த உதவிக்காரர் சொன்னார், “அதைவிட மிகவும் அதிகமான அதிகாரத்தை உதவிக்காரர்களுக்கு வேதாகமம் ஏராளமாக கொடுத்திருக்கிறது!” பிறகு வேறொரு உதவிக்காரர் சொன்னார், “அதைவிட மிகவும் அதிகமான அதிகாரத்தை உதவிக்காரர்களுக்கு வேதாகமம் ஏராளமாகக் கொடுத்திருக்கிறது என்று எனக்கு தெரியும்.” அந்தப் பாஸ்டர் சொன்னார், “அந்தப் பாடத்தைக் குறித்து நாம் கடைசியாகக் கேட்டது அதுதான். ஏன்? ஏனென்றால் வேதாகமத்திலே வேறொன்றும் காணப்படவில்லை.” இதுவரையிலும் உதவிக்காரர்கள் ஏற்படுத்தப்படவில்லை மற்றும் பாஸ்டருக்கு என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்யக்கூடாது என்று சொல்லவில்லை, இந்தச் சபையின் ஸ்தாபகர் மற்றும் ஓய்வுபெற்ற போதகர் என்றவகையில், இப்பொழுது மூன்று மனிதர்களை உதவிக்காரர்களாக ஒரு வருடத்துக்கு நான் நியமனம் செய்வேன். திரு. மென்சியா, திரு. நாகன் மற்றும் ஜான் வெஸ்லி ஹைமர்ஸ் இவர்களை உதவிக்காரர்களாக ஒரு வருடத்துக்கும், மற்றும் டாக்டர் கேஹன் அவர்களை இரண்டு வருடங்களுக்கும் நான் நியமனம் செய்கிறேன். ஒவ்வொரு ஜனவரியிலும் ஒரு அலுவலர் கூட்டத்தை நாம் நடத்துவோம், அதிலே அடுத்த வருடத்துக்கு அப்படி செய்வது பொறுத்தமானதாக நான் கண்டால், உதவிக்காரர்களை நான் நியமனம் செய்வேன் அல்லது மறுநியமனம் செய்வேன். இப்பொழுது நான் மறுபடியுமாக ஆரம்ப திறப்புப் பாகத்தை வாசிக்கிறேன். அப்போஸ்தலர் 6:1-7 க்கு தயவுசெய்து திருப்பிக்கொள்ளுங்கள். “அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்க ரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லை யென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள். அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து நாங்கள் தேவ வசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல. ஆதலால் சகோதரரே, பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்து கொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம். நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள். இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்தஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு, அவர்களை அப்போஸ்தலருக்கு முன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள். தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று: ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்” (அப்போஸ்தலர் 6:1-7). இன்றய நமது பாடலை தயவுசெய்து எழுந்து நின்று பாடுங்கள், பரிசுத்தமாக இருப்தற்கு நேரம் எடுத்துக்கொள், நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் |