Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




பிரசங்கத்திற்கு முன் பாடிய பாடல்: “உயர் நிலம்” (by Johnson Oatman, Jr., 1856-1926).

இந்தக் கொரோனோ வைரஸ் நம்மை நிறுத்துமா?

SHALL THE CORONAVIRUS STOP US?
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்,
பாஸ்டர் எமெரிடஸ்
by Dr. R. L. Hymers, Jr.,
Pastor Emeritus

மே 10, 2020 கர்த்தருடைய நாள் பிற்பகல் வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Afternoon, May 10, 2020


தயவுசெய்து லூக்கா 21:8-11க்கு திருப்பிக்கொள்ளவும்.

“அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள். யுத்தங்களையும் கலகங்களையுங் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்க வேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும். பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்” (லூக்கா 21:8-11).

இப்பொழுது மத்தேயு 24:4-8க்கு திருப்பிக்கொள்ளவும்.

“இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்” (மத்தேயு 24:4-8).

இந்தப் பகுதிகளிலே நீங்கள் ஒரு வார்த்தையைக் கவனிக்கும்படியாக நான் விரும்புகிறேன் – “கொள்ளைநோய்கள்” என்ற வார்த்தையை. அதன்பிறகு மத்தேயு 24:8ல், “இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்” என்ற வாக்கியத்தைக் கவனியுங்கள்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

எங்களது பிரசங்கம் இப்போது உங்கள் கைப்பேசியில் கிடைக்கிறது.
WWW.SERMONSFORTHEWORLD.COM
என்கிற இணையதளத்திற்குச் செல்லவும்,
“APP” என்று எழுதப்பட்ட அந்தப் பச்சை நிற பொத்தானை அழுத்தவும்.
அதன்பிறகு வரும் வழிமுறையைப் பின்பற்றவும்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

இப்பொழுது “கொள்ளைநோய்கள்” என்ற வார்த்தை முக்கியமானது, அது லோயிமோயி (பன்மை) என்ற கிரேக்க வார்த்தையாகும். உங்கர்ஸ் வேதாகமத்தின் விமர்சனத்தில் அந்த வார்த்தை “கொள்ளை நோய்க்கு... ஒப்பிடபட்டுள்ளது” என்று சொல்லுகிறது. கொள்ளை நோயாகிய எய்ட்ஸ் பற்றியும் இயேசுவானவர் முன்னறிவித்து இருக்கிறார். அந்த வார்த்தை கொரோனா வைரஸ் பெரும் பரபரப்பை உண்டாக்குவதைப் பற்றியும் பேசுகிறது. இந்தக் கொள்ளை நோய்களைப்பற்றி இயேசுவானவர் 8ஆம் வசனத்தில் என்ன சொல்லுகிறார், என்று கவனியுங்கள், “இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.” இதன் கிரேக்க அர்த்தம் “பிரசவ வேதனைகளின் ஆரம்பம்” என்பதாகும் (மெக் ஆர்த்தர்).

நமது நாட்களைப்பற்றி பேசும்பொழுது, ஜே.என். டார்பி சொன்னார், “அங்கே ஒரு பொய்யான சபை இருக்கும்: அங்கே பஞ்சங்கள், கொள்ளை நோய்கள், பூமி அதிர்ச்சிகள் உண்டாகும்.” வைன்ஸ் விளக்க அகராதி சொல்லுகிறது “லூக்கா 21:11ல் பல இடங்களில் கொள்ளைநோய்களும் உண்டாகும் என்று பன்மையில் உபயோகப்படுத்தியுள்ளது”.

இந்தக் கோவிட் கொள்ளை நோய்க்கு பிறகு மக்கள் எப்படி “சபையில் செயல்படுவார்கள்” என்று இப்பொழுது ஆராய்ந்து பார்ப்போம். இப்பொழுது onenewsnow.com என்ற வலைதளத்தில் (ஏப்ரல் 24, 2020), இந்தக் “கோவிட் நெருக்கடிக்குப் பிறகு மக்கள் எப்படி ‘சபையில் செயல்படுவார்கள்?’” என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அநேக மக்கள் “ஆன்லைன் நிகழ்ச்சிகளில்” கலந்து கொள்வார்கள் என்று அது சொல்லுகிறது. “இந்தப் பெரும் பரப்பு தொற்றுநோயைத் தொடர்ந்து சபை வாழ்க்கையானது முன்பு இருந்ததைவிட குறிப்பிட்ட அளவுக்கு வித்தியாசமாக காணப்படகூடும்” என்று அது சொல்லுகிறது. “இந்தப் பெரும் பரப்பு தொற்றுநோய்க்குப் பிறகு முன்பு இருந்ததைவிட கொடுப்பது மோசமாக இருக்கும் என்று 42% சொல்லுகிறது”. “சபை தலைவர்கள் மத்தியில் கவலையின் அளவு கனிசமாக காணப்படும் இந்த ஊரடங்கு முடிந்த பிறகு அவர்கள் என்ன சந்திக்க போகிறார்கள் என்ற பயம் நிறைந்தவர்களாக இருப்பார்கள்”. “அமெரிக்கா முழுவதிலும் அதிக அளவில் மெகாசபைகளில் செல்லும் மக்களால், சபை தலைவர்கள் மத்தியில் அச்சத்தின் அளவு அதிகமாக காணப்படும்”. ‘‘அதற்குப் பதிலாக, ‘நாடக காட்சிகள்’ அதிக விரும்பப்படதக்கதாக இருக்கும் என்று வாழ்க்கை போக்கு விஞ்ஞானிகளாகிய நாங்கள் விசுவாசிக்கிறோம் – அது அநேக பாஸ்டர்களின் கரிசனையாக இருக்கிறது.” “தேவயான பொருள்கள் கிடைக்கும்... என்று எதிர்பார்க்க முடியும் என பண்பாட்டுநிலை மக்களுக்குக் கற்பிக்கிறது.”

இந்த ஊழியத்தில் 62 ஆண்டுகள் செலவிட்ட பிறகு, இந்தப் பயங்கள் நன்றாக வேரூண்றி இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். இதுவும் II தெசலோனிக்கேயர் 2:3ல் சொல்லப்பட்ட கடைசிகால தீர்க்கதரிசனத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன், “எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.” (ஹிபோஸ்டாசியா – விசுவாச துரோகம்). டாக்டர் மெரில் எப். உங்கர் சொன்னார், “முழுமையாக எல்லா நம்பிக்கையும் கைவிடுவதன் மூலமாக கிறிஸ்தவ உலகத்துக்கு – பகுதியாக விழுதல் என்பது முழுமையான வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது” (பிப்லிகல் டிமோனோலஜி, ப. 207). இந்த முக்கியமான வேத வசனத்துக்குக் கீழ்ப்படிய தவறினால் நாம் உண்மையான கிறிஸ்தவர்களாக இருக்க முடியுமா?

“சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக் கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்” (எபிரேயர் 10:25).

டாக்டர் டபல்யு.ஏ. கிரிஸ்வெல் இந்த வசனத்தைப்பற்றி சொன்னார், “எபிரேய நிருபத்தை எழுதினவர் கிறிஸ்துவின் நாள் சமீபித்து வருவதால்... சபைகூடிவரும் பழக்கம் அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்... இது ஸ்தல சபையின் மிகமுக்கியமான பயனுள்ளது, மற்றும் அவசியமான ஸ்தல பரிசுத்தவான்களின் சமுதாயத்துக்கு உண்மையாக இருக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் நெருக்கி ஏவக்கூடிய ஒன்றாகும்” (கிரிஸ்வெல் ஸ்டடி வேதாகமத்தில்; எபிரேயர் 10:25க்கு உள்ள மேற்குறிப்பு).

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நெருங்கி வருவதை நாம் பார்க்கும் வேளையில், இந்த வார்த்தைகள் அதிகமான அர்த்தத்தைக் கொடுக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். புதிய சுவிசேஷகர்கள் இந்த வார்த்தைக்குக் கீழ்ப்படியமாட்டார்கள். நாம் மகா உபத்திரவத்தை நோக்கி செல்லும்போது இது இன்னும் அதிகமாகத் தள்ளிவிடப்படும். உண்மையான கிறிஸ்தவர்களை அதிகமாகப் பெலவீனப்படுத்த தங்களுடைய ஸ்தல சபைகளிலிருந்து பிரிக்க வேண்டியது அவசியம், அதனால் இறுதியாக அவர்களை அந்திகிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்கலாம் என்று சாத்தானுக்குத் தெரியும்.

டேவிட் எரேமியா போன்றவர்கள் ஸ்தல சபைகளில் தொடர்ந்து ஒழுங்காக கலந்து கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தாமல் இருப்பதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். டாக்டர் எரேமியா மகாபெரிய உபத்திரவத்துக்கு எப்படி ஆயத்தப்படுத்த வேண்டும் என்று தமது சபையாருக்குச் சொல்ல தவறிவிட்டார்.

இப்பொழுது மத்தேயு 24:6-8 திருப்பவும்.

“யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப் படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்” (மத்தேயு 24:6, 7, 8).

“முடிவு இன்னும் வரவில்லை” (24:6).

“ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்” (மத்தேயு 24:7, 8).

“இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்” (மத்தேயு 24:8).

மத்தேயு 24:9 மகா உபத்திரவத்தின் ஆரம்பம் என்பதை நான் இப்பொழுது டாக்டர் வெர்னான் மெக்ஜீ அவர்களோடு ஒத்துக்கொள்கிறேன். டாக்டர் ஏ. டபள்யு. டோசர் சொன்னார்,

“மெய்யாகவே நாட்கள் பொல்லாதவைகளாக இருக்கிறது மற்றும் நேரங்கள் காலதாமதம் ஆகிறது (வளர்ந்து கொண்டு இருக்கிறது) ஆனால், மெய்யான கிறிஸ்தவன் ஜாக்கிரதை இல்லாதவனாக இருக்கமாட்டான். அவன் முன்பாக எச்சரிக்கப்பட்டிருப்பான். அப்படிப்பட்ட நேரங்களில் அவன் அவைகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பான்” (“ஆப் காட் அன்டு மேன்,” ப. 131).

தயவுசெய்து நான் படிக்கும்போது எழுந்து நிற்கவும் மத்தேயு 24:7-14.

“ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள். அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்
பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” (மத்தேயு 24:7-14).

இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும் அதாவது எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பாக முன் உபத்திரவத்தை நான் இதுவரை விசுவாசிக்கிறதில்லை. தேவனுடைய கோபாக்கினை ஊற்றப்படுவதற்கு முன்பாக எடுத்துக்கொள்ளப்படுதல் இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். இவ்வாறாக, பொதுவான, கோபாக்கினைக்கு முன்பாக சபை எடுத்துக்கொள்ளப்படுதலை நான் விசுவாசிக்கிறேன், அதுபோல மார்வின் ரோசன்தல் அவர்கள் தி பிரி-ராத் ரேப்சர் ஆப் த சர்ச் (தாமஸ் நெல்சன் பப்லிகேசன், 1990) என்ற புத்தகத்தில் சொல்லி இருக்கிறார். ரோல்சன் புத்தகத்தை முதலாவது படிக்காமல் தயவுசெய்து அதை நியாயம் தீர்க்க வேண்டாம்.

மார்வின் ஜே. ரோசன்தல் அவர்கள், என்னை போன்றவர், உபத்திரவத்துக்கு முன்பாக சபை எடுத்துக்கொள்ளப்படுதலை உறுதியாக விசுவாசிக்கிறவர். திரு. ரோசன்தல், தமது புத்தகத்தில், வெளிப்படுத்தல் 16ல் சொல்லப்பட்ட கோபகலசங்கள் ஊற்றப்படும் நியாயத்தீர்ப்பு நிகழும் வரையிலும் எடுத்துக்கொள்ளப்படுதல் சம்பவிக்காது என்று தமது புத்தகத்தில் போதிக்கிறார். இவ்வாறாக, நான் எடுத்துக்கொள்ளப்படுதலை விசுவாசிக்கிறேன், ஆனால் நான் வெளிப்படுத்தல் 16ல் சொல்லப்பட்ட கோபகலசங்கள் ஊற்றப்படும் நியாயதீர்ப்புக்கு முன்பாக எடுத்துக்கொள்ளப்படுதல் சம்பவிக்கும் என்பதை நான் விசுவாசிக்கவில்லை. இது எதிரான ஒன்று அல்ல, ஆனால் வேதாகமம் என்ன முன்னறிவித்ததோ அதேதான் இது. பெரிய சீன சுவிசேஷகர் ஜான் சங் இதையே விசுவாசிக்கிறார். அப்படியே டாக்டர் தீமோத்தேயு லின், எனது வழிகாட்டியான மற்றும் 24 ஆண்டுகளாக போதகராக இருந்த அவர்களும் விசுவாசித்தார். டாக்டர் கிறிஸ்டோபர் எல். கேஹன் அவர்களும் அப்படியே இதை விசுவாசிக்கிறார்.

ரோசன்தல் அவர்கள் சரியாக சொன்னாரா? சரியாக இருப்பதற்கு மிகவும் நெருக்கமாக இவர் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் ரோசன்தல் அவர்களை தள்ளிவிடுவதற்கு முன்பாக, நீங்கள் அவருடைய புத்தகத்தின் பதினாராவது அதிகாரத்தைப் படித்து ஆராய வேண்டியது அவசியம், “வருகை மற்றும் முடிவு” என்ற புத்தகம்.

நான் இந்தப் போதனையை செய்வதன் நோக்கம் என்னவென்றால் “கிறிஸ்தவர்களாகிய” நாம் மகா உபத்திரவத்திற்கு முன்பாக இந்த நாட்களில் ஒரு “சாவுஉண்டாக்குகிற கொள்ளை நோய்க்கு” முன்பாக நிற்க முடியவில்லையானால், அவர்கள் மகா பெரிய உபத்திரவத்தின் சமயத்தில் எப்படி மெய்யாக நிற்க முடியும்?

“ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களி னிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்” (மத்தேயு 24:21, 22).

இந்த வசனங்கள் “மிகுந்த உபத்திரவத்தை” பற்றி சுட்டிகாட்டுகின்றன. டாக்டர் வெர்னான் மெக்ஜீ சொன்னார், “வெளிப்படுத்தின விசேஷத்தில் மிகுந்த உபத்திரவக் காலத்தில் பூமியில் இருக்கும் மக்களில் மூன்றில் ஒரு பாகம் மக்கள் அழிக்கப்படுவார்கள்... அந்தக் காலகட்டத்தில் பேரழிவு உண்டாகும். இது மிகைபடுத்தப்பட்டதாகக் காணப்பட்ட ஒரு காலம் இருந்தது. எப்படியானாலும், தற்காலத்தில் உலகத்தின் பல நாடுகளில் அணு குண்டுகள் உள்ளன, அவை உலக மக்கள் தொகை முழுவதையும் அழிக்க கூடியவைகளாக உள்ளன, அதனால் இனி மிகைபடுத்தப்பட்டதாக காணப்பட வாய்ப்பு இல்லை” (துரு த பைபிள்; மத்தேயு 24:22ன் மேற்குறிப்பில் உள்ளவை).

இயேசுவானவர் சொன்னார், “மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. (வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்)” (மத்தேயு 24:15). டாக்டர் மெக்ஜீ சொன்னார், “நமது கர்த்தர் சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொன்னார்... அது ஒரு அந்திக்கிறிஸ்துவின் உருவம் (தானியேல் 12:11ஐ பார்க்கவும்) அது [மறுபடியும் கட்டப்படும்] தேவாலயத்திலே வைக்கப்படும்.”

“ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களி னிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்” (மத்தேயு 24:21, 22).

டாக்டர் மெக்ஜீ சொன்னார், “மனிதவர்க்கத்தை தற்கொலை செய்துகொள்ள தேவன் விடமாட்டார். அதன் காரணமாகத்தான் இது ஒரு குறுகிய காலமாக இருக்கும்” (டாக்டர் மெக்ஜீ, ஐபிட்., மத்தேயு 24:22ன் மேல் குறிப்பு). மேலும் கவனியுங்கள் “தெரிந்துகொள்ளப்பட்ட” கிறிஸ்தவர்கள் இன்னும் இங்கே இருப்பார்கள், மார்வின் ஜே. ரோசன்தல் அவர்கள், தி பிரி - ராத் ரேப்சர் ஆப் த சர்ச் என்ற தமது புத்தகத்தில் சொன்னதுபோல.

இப்பொழுது தயவுசெய்து திருப்பிக்கொள்ளுங்கள் II தெசலோனிக்கேயர் 2:3.

“எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம் போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது” (II தெசலோனிக்கேயர் 2:3).

“முதலாவது விசுவாச துரோகம் ஏற்பட்டாலொழிய” (நவீன மொழிபெயர்ப்பு).

இந்த விசுவாச துரோக நாட்களில், கிரிட்டன் மற்றும் வால்டிரிப், போன்ற அநேக பிரசங்கிகள் I தீமோத்தேயு 4:1, 2ல் கொடுக்கப்பட்ட எச்சரிப்பைப்பற்றி மறந்துவிட்டார்கள். I தீமோத்தேயு 4:1, 2 திருப்பிக்கொள்ளுங்கள்.

“ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்” (I தீமோத்தேயு 4:1).

இந்தத் தீர்க்க தரிசனத்தைப்பற்றி எல்லாவற்றையும் அவர்கள் மறந்துவிட்டபடியினால், அவர்கள் “மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் (குட்டிசாத்தான்கள்) உபதேசங்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்.” அதனால்தான் அவர்களைப்போன்ற மனிதர்கள் சபைகளைப் பிரிக்கிறார்கள். ஏன்? ஏனென்றால் அவர்கள் குருட்டுத்தனமாக “பிசாசுகளின் உபதேசங்களுக்குச் செவிகொடுக்கிறார்கள்,” அதனால் தான்!

இங்கே சில சபையைப் பிரிக்கும் “தலைவர்களின்” அநேக குணாதிசயங்களைப்பற்றி குறிப்பிடுகிறேன். இவைகள் டாக்டர் ராய் பிரான்டுசன் அவர்களால், சபை பிளவு என்ற தமது புத்தகத்தில், கொடுக்கப்பட்டவை ஆகும் (பக்கங்கள் 29-31).


1. அவர்கள் ஈகோடிஸ்டுகள். அவர்கள் தங்களைவிட ஞானமுள்ளவர்களாக ஒருவரையும், பாஸ்டர்களும்கூட, ஏற்றுக்கொள்ள சித்தமில்லாதவர்கள்.

2. அவர்கள் சுயநலமுள்ளவர்கள். யாரானாலும் அல்லது என்ன பாடுகள்பட்டாலும் பரவாயில்லை, அவர்கள் தங்கள் சொந்த வழியையே விரும்புவார்கள்.

3. அவர்கள் தவறாக இருக்கும்பொழுது அதை ஒத்துக்கொள்ளமாட்டார்கள். இது ஒரு ஈகோடிஸ்டின் மற்றொரு அடையாளம் ஆகும்.

4. தனிப்பட்ட அங்கிகாரம் மற்றும் மகிமைக்கு பசியுள்ளவர்கள்.

5. அவர்கள் ஒருவரின் கீழ் பணிசெய்யாதவர்கள். பாஸ்டர்களின் அதிகாரபூர்வமான எந்த வேதபோதனையும் மற்றும் புத்திமதியையும் அவர்கள் பின்பற்றவோ மற்றும் கீழ்ப்படியவோமாட்டார்கள். அவர்கள் கிறிஸ்துவுக்கு பற்றுறுதி காட்டுபவர்கள் என்று சொல்லுவார்கள். பாஸ்டர் ஒரு கொடுங்கோலன் என்று சொல்லுவார்கள்.

6. அவர்கள் ஏமாற்றுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் சபையின்மீது கரிசனை உள்ளவர்கள்போல நடிப்பார்கள். ஆனால் உண்மையில் தங்களுடைய சொந்த ஆதிக்கம் மற்றும் பதவியில் கரிசனை உள்ளவர்களாக இருப்பார்கள்.

7. அவர்கள் வார்த்தைகளை தவறாக பயன்படுத்துவார்கள், “நான் பாஸ்டரை நேசிக்கிறேன், ஆனால்...” அதன்பிறகு அவர்கள் பாஸ்டரைத் தாக்குவார்கள்.

8. அவர்கள் பாஸ்டரைத் தவறாக குறிப்பிடுவார்கள், அல்லது அவருடைய வார்த்தைகள்மீது தவறான நோக்கங்களைக் கற்பிப்பார்கள்.

9. பாஸ்டர் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் தவறான நோக்கங்களைக் கற்பிப்பார்கள்.

10. அவர்கள் போதனைகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் வேதாகமம் என்ன சொல்லுகிறதோ அதற்கு “வெளியே திருப்புவார்கள்”.

11. அவர்கள் மற்றவர்களுடைய காரியங்களில் பாஸ்டருக்கு விரோதமாக குற்றம் சாட்டுவதில் வீரமுதல்வராக இருப்பார்கள். அவ்வாறாக, அவர்கள் வரப்போகும் சபை பிளவுக்குத் துணை சேர்ப்பார்கள்.


இப்படிப்பட்ட சகல குணாதிசியங்களும் கிரிட்டன்/வால்டிரிப் பிரிவின்போது காணப்பட்டன.

நான் பிரசங்கிக்கும்போது என்னால் எழுந்து நிற்க முடியாதிருந்தது. இந்தத் துணிவுள்ள கிரைட்டன். அவன் பயங்கொள்ளியான மனிதனல்ல, அவனைப் பிரதான பிரசங்கி ஆக்கவில்லை என்று என்மீது கோபமாக இருந்தான். அவன் கவிழ்ந்துவிடவில்லை என்று மேலும்மேலும் சொன்னான். அவன் “திருப்தி அடைய” தக்கதாக பிரசங்கம் செய்யவேண்டிய அவசியமில்லை என்று டாக்டர் கேஹனுக்குக் கடிதம் எழுதினான். நான் அவனைப் பிரசங்கிக்க விடவில்லை ஏனென்றால் அவனுக்கு அதைச்செய்யும் வரம் இல்லை. அவன் அதை ஒத்துக்கொள்ளுகிறேன் என்று சொன்னான். ஆனால் அப்படி அவன் சொன்னபொழுது பொய்ச் சொன்னான். அவனுடைய வயதிலுள்ள மற்ற இளம் மக்களைப்போல, அவன் தனது சொந்த தகப்பனிடம் ஒரு தவறான உறவு வைத்திருந்தான். அதனால், நான் சுகவீனம் அடைந்தபொழுது, என்மீது தனது தகப்பனுக்கு விரோதமாக கலகத்தை வெளியே எடுத்தான். ஆனால் இதை அவன் ரகசியமாக செய்தான். என்னிடம் பேசுவதற்குப் பதிலாக, மற்றொரு பிரசங்கியிடம் ரகசிய சந்திப்புக்கொள்ள ஆரம்பித்தான், ஜான் வால்டிரிப் என்ற பிரசங்கி. அவன் வால்டிரிப்பை சந்திப்பது எனக்குத் தெரியாமலிருந்தது. இந்த “ரகசிய” சந்திப்பினால் வால்டிரிப் உடன் கூட்டாளியாக மாறினான்.

அதன்பிறகு அவன் என்னோடு ஒத்துப்போகாததைக் கிரைட்டன் மற்றவர்கள் அறியும்படி செய்ய ஆரம்பித்தான். ஆனால் அவனுடைய ஒத்துழையாமையைப்பற்றி என்னிடம் ஒருமுறைகூட ஒருபோதும் அவன் சொன்னதில்லை. கிரைட்டனுடைய கலகத்தைப்பற்றி நான் அறிந்தபொழுது அது மிகவும் காலதாமதமாகி இருந்தது. அவன் மூன்றில் இரண்டு பங்கு இளம்மக்களை வெளியே எடுத்து அவர்களோடு தனது சொந்த “சபையாக” ஆரம்பித்தான். நாங்கள் பொறுப்பு மீராத 35 பேர் மட்டும் மீதியாக விடப்பட்டிருந்தோம்.

பிளவின் நேரத்தில், நான் ஏறக்குறைய 80 வயதுள்ளவனாகவும், மற்றும் சுகவீனமாகவும் இருந்தேன். இதற்கு முன்பாக காரியங்கள் நடந்து கொண்டிருந்தபொழுது, தேவன் என்னோடு இருந்தார் என்று நான் அறிந்திருந்தேன், அதனால் அதைப்பற்றி நான் அதிகமாக கவலைபடவில்லை.

ஒரு டீக்கன் முதலாவதாக என்னிடம் சண்டையிட ஆரம்பிக்க முயற்சித்தான். மற்றொரு டீக்கன் தன்னுடைய மற்றும் ஒரு பெண்ணுடைய புரோனோ கிராபிக் போட்டோவை தனது வெப்சைட்டில் போட்டான். நமது சபையில் நான் கருப்பு மக்களுக்கு விரோதமாக குருட்டுப்பிடி செய்ததாக மற்றொரு தலைவன் சொன்னான். எந்த விதத்திலும் உதவி செய்யப்படாத LGBTQS மக்கள் மூலமாக ஏற்பட்ட தாக்குதலால், நான் தெரு பிரசங்கத்தை நிறுத்தி விட்டதாக மற்றொரு தலைவன் குற்றம் சாட்டினான்.

இந்தக் காரியங்கள் எல்லாம் வெளிவந்தபோது, நான் பாஸ்டர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தேன் மற்றும் டாக்டர் கேஹன் பாஸ்டராக நியமிக்கப்பட்டார். அவருடைய சொந்த மகன், அடுத்த பாஸ்டராக இருப்பான் என்று நான் நினைத்தேன், அவன் விட்டுப் போனான், மேலும் அவனை எனது நெருங்கின நண்பனாக கருதி இருந்தேன்.

அதன்பிறகு இந்தக் கொரோனோ வைரஸ் தாக்குதல்! அதனால் நாங்கள் பழைய சபை கட்டிடத்திலிருந்து வெளியேறி மற்றும் வீடுகளில் கூட ஆரம்பித்தோம், பாஸ்டராகிய என்னோடு வீடுகளிலிருந்து, பாஸ்டர் எமெரிடஸ், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு போதனையாக டிவியில் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

லாஸ் ஏன்ஜல்ஸின் புறநகரில் ஒரு புதிய சபை கட்டிடத்தை விலைக்கு வாங்கி இருக்கிறோம். என்னால் பிரசிங்கிக்க முடியாதபோது நான் ஒரு இளம் சீன மனிதனை வழிநடத்தி பொறுப்பெடுத்துக்கொள்ள செய்வேன்.

தேவைகள் மற்றும் சபை பிளவின் நிமித்தமாக நான் ஏளனம் செய்யப்பட்டேன், ஆனால் “மூன்றாம் உலகத்தில்” எனக்கு ஒரு பெரிய கேட்போர் கூட்டம் உள்ளது அவர்கள் மூன்றாம் உலகம் முழுவதிலும் 43 பாஷைகளில் எனது போதனைகளை வாசிக்கிறார்கள். அமெரிக்காவைபோல “மூன்றாம் உலகத்திலும்” இப்பொழுது சபை பிளவுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன, இந்தப் போதனைகள் நம்மைபோல அவர்களுக்கும் ஒரு பெரிய உதவியாக இருக்கும். நாம் ஒரு புதிய சீன சபை ஆரம்பிக்கும்பொழுது இந்தத் தலைப்பில் பேசவேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்று நான் உணருகிறேன்.

நான் 19 வயது இருக்கும்பொழுது சீன மக்களுக்கு ஒரு மிஷனரியாக இருக்கும்படி தேவன் என்னை அழைத்ததற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தேவன் அநேக ஆண்டுகளுக்கு முன்பாக என்ன செய்ய வேண்டும் என்று அழைத்தாரோ அதை 60 ஆண்டுகளுக்கு மேலாக நான் இன்னும் செய்து கொண்டு இருக்கிறேன். தேவனுடைய கிருபையினாலே நான் இன்னும் ஒரு மிஷனரியாகவே இருக்கிறேன். நீண்ட காலத்துக்கு முன்பாக மற்ற எதையும் செய்யவேண்டும் என்ற யோசனையை நான் விட்டுவிட்டேன்! பெரிய ஜான் வெஸ்லி அவர்கள் தமது குறிப்புப் புத்தகத்தில் குறிப்பிட்ட ஒரு சிறிய செய்யுளை இங்கே கொடுக்கிறேன்,

ஒரு சிறிய ஆடம்பரம், ஒரு சிறிய ஊசலாட்டம்,
ஒரு மழைகால நாளில் ஒரு ஞாயிறு வெளிச்சம்,
சகல பெரிய மற்றும் வல்லமை இருக்கிறதா
தொட்டிலுக்கும் கல்லறைக்கும் மத்தியில்!

எனது 62 வருட பிரசங்கத்தினால் “அடிதளத்திலிருந்து” நான் அநேக சபைகளை ஆரம்பித்தேன். மறுபடியுமாக ஆரம்பிக்க டாக்டர் கேஹனுக்கும் மற்றும் எனக்கும் தேவன் உதவி செய்வார் என்று நான் நிச்சயமாக இருக்கிறேன்.

இருந்தாலும், அது அவ்வளவு எளிதானதாக இருக்காது. நாங்கள், தேவனுடைய கிருபையினாலே, இந்தப் புதிய சபையை இந்தக் கடைசி நாட்களில் அற ஒழுக்கமில்லாத புதிய சுவிசேஷகர்களின் மத்தியில் ஆரம்பிக்கப்போகிறோம். கடினமான மறபுக்கோட்பாடோடு இருக்க வேண்டியதாக இருக்கும். கொரோனா வைரஸ் போன்ற சிறிய காரியம் உங்களுக்கு இவ்வளவு பெரிய கடினமாக இருந்தாலும் நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்காக இருக்க வேண்டியபடி இருப்பதை நிறுத்திவிடாது, டாக்டர் தீமோத்தேயு லின் மற்றும் பாஸ்டர் ரிச்சர்டு உம்ராண்டு போல உங்களால் இருக்க முடியும். நினைவில் கொள்ளுவோம், “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும்” (அப்போஸ்தலர் 14:22).

நான் மேல் நோக்கும் வழியில் முன்னேறுகிறேன்,
ஒவ்வொரு நாளும் புதிய உயரங்களை வெற்றிகொள்ளுகிறேன்;
   மேலாக கட்டப்பட்டும் நான் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன்,
   “கர்த்தாவே, எனது பாதங்களை உயர்ந்த நிலத்தில் நிறுத்தும்.”
கர்த்தாவே, என்னைத் தூக்கிவிடும் நான் நிற்கும்படி,
விசுவாசத்தின் மூலமாக, பரலோக நிலத்தின் மேஜைமீது.
   நான் கண்டுபிடித்ததைவிட மேலான ஒரு பரப்பு
   எனது பாதங்களை உயர்ந்த நிலத்தில் நிறுத்தும்

எங்கே சந்தேகம் பயம் மற்றும் திகில் இருக்கிறதோ
அங்கே தங்கிதரிக்க எனது இருதயத்தில் ஆசை இல்லை;
   இவை பெருகி இருக்கும் இடத்தில் சிலர் வாசம் பண்ணினாலும்,
   எனது ஜெபம், எனது நோக்கம், உயர்ந்த நிலத்தில் இருப்பதே.
கர்த்தாவே, என்னைத் தூக்கிவிடும் நான் நிற்கும்படி,
விசுவாசத்தின் மூலமாக, பரலோக நிலத்தின் மேஜைமீது.
   நான் கண்டுபிடித்ததைவிட மேலான ஒரு பரப்பு
   எனது பாதங்களை உயர்ந்த நிலத்தில் நிறுத்தும்

நான் உலகத்தாரைவிட உயர்ந்து வாழ விரும்புகிறேன்,
சாத்தான் என்மீது அம்புகளை எரிந்தாலும்;
   மகிழ்ச்சி நிறைந்த சத்தத்தை விசுவாசம் பற்றியிருப்பதால்,
   உயர்ந்த நிலத்தில் பரிசுத்தவான்களின் பாடலைப் பாடுவேன்.
கர்த்தாவே, என்னைத் தூக்கிவிடும் நான் நிற்கும்படி,
விசுவாசத்தின் மூலமாக, பரலோக நிலத்தின் மேஜைமீது.
   நான் கண்டுபிடித்ததைவிட மேலான ஒரு பரப்பு
   எனது பாதங்களை உயர்ந்த நிலத்தில் நிறுத்தும்

இயலும் உச்ச அளவு உயரத்துக்கு உயர்ந்து மகிமை பிரகாசத்தின்
ஒளிக்கதிர் கத்தையை நான் பிடிக்க விரும்புகிறேன்;
   ஆனால் பரலோகத்தை காணும்வரை இன்னும் நான் ஜெபிப்பேன்,
   “கர்த்தாவே, உயர்ந்த இடத்துக்கு என்னை நடத்தும்.”
கர்த்தாவே, என்னைத் தூக்கிவிடும் நான் நிற்கும்படி,
விசுவாசத்தின் மூலமாக, பரலோக நிலத்தின் மேஜைமீது.
   நான் கண்டுபிடித்ததைவிட மேலான ஒரு பரப்பு
   எனது பாதங்களை உயர்ந்த நிலத்தில் நிறுத்தும்
(“Higher Ground,” Johnson Oatman, Jr., 1856-1926).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.