இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
மிஷனெரிகளாக இருக்க நம்முடைய அழைப்பு!OUR CALL TO BE MISSIONARIES! டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் |
ஏசாயா, எல்லா தீர்க்கதரிசிகளையும்விட, மிகப்பெரிய தீர்க்கதரிசி என்று எனக்கு தெரிகிறது. ஆனால் ஏசாயா அப்படிப்பட்ட தேவமனிதனாக எப்படி மாறினார்? ஏசாயாவின் ஆறாம் அதிகாரத்தில், நமக்கு அதற்குப் பதில் இருக்கிறது. “உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன், அவருடைய வஸ்திரத்தொங்க லால் தேவாலயம் நிறைந்திருந்தது” (ஏசாயா 6:1). ஏசாயா கேட்டார், “சேனைகளின் கர்த்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது” என்று சேராபீன்கள் கூப்பிட்டுச் சொன்னதை ஏசாயா கேட்டார் (ஏசாயா 6:3). உசியா என்ற கனம் பொறுந்திய ஒரு நல்ல ராஜாவை, இளமையான ஏசாயா நேசித்தார். ஆனால் இப்பொழுது அந்த நல்ல ராஜா மரித்துவிட்டார். அந்த நல்ல ராஜா மரித்துவிட்ட அப்பொழுது ஏசாயாவுக்கு என்ன நடந்தது? உங்களில் சிலரைப்போல அந்த இளம் மனிதர் உணர்ந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நமது சபை முடிந்துவிட்டது என்று நீங்கள் சோர்வாக உணருகிறீர்கள் என நான் நினைக்கிறேன். ஆனால் தேவன் ஏசாயாவோடு தொடர்ந்து இருக்கவில்லை. தேவனுடைய தரிசனம் அவருடைய ஆத்துமாவைப் பற்றிபிடித்தது. ஏசாயா உதவி அற்ற சோர்வில் விழுந்துவிடவில்லை. அதற்குப் பதிலாக, தேவனுடைய தரிசனம் அவரை வித்தியாசமான வழியில் உறுதியாகப் பற்றிபிடித்தது. அவர் சொன்னார், “அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன், சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்” (ஏசாயா 6:5).
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + இளமையான ஏசாயாவுக்கு இது ஒரு ஆவிக்குரிய தடைதகர்க்கப்பட்ட வழி ஆகும்! உங்களுக்கும் அனுபவத்தில் இது ஒரு தடைதகர்க்கப்பட்ட வழி. மற்ற எல்லாவற்றையும்விட தேவனை அதிகமாக வாஞ்சிக்க வேண்டியது உங்களுக்கு அவசியமாக இருக்கிறது! டாக்டர் A.W. டோசர் சொன்னார், “அவர்கள் தேவனை விரும்பவில்லை என்ற காரணத்தினால் சபையிலிருந்து வெளியே நடந்துவிடவில்லை – ஆனால் அவர்கள் தேவனைவிட அதிகமாக விரும்பின ஏதோ சிலவற்றை கண்டு கொண்டார்கள்... அவர்களுடைய பழைய சுபாவம் கிளர்ந்து எழுந்தபொழுது அவர்கள் தேவனுக்குத் தங்கள் முதுகைக் காட்டினார்கள் மற்றும் தங்களுடைய சபையைவிட்டு வெளியே நடந்தார்கள். அவர்கள் தேவனற்ற இளம் பெண் அல்லது ஆணின் உறவுக்குள்ளாகப் போனார்கள். அவர்கள் உலகபிரகாரமான நட்புக்குள் போனார்கள். தேவனைப் பிரியப்படுத்த சந்தர்ப்பம் இல்லாத வேலையை எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் திரும்ப உலகத்துக்குப் போனார்கள். அவர்கள் மிகவும் அதிகமாக விரும்பினதைப் பெற்றுக்கொள்ள தீர்மானம் செய்துகொண்டார்கள்... நீங்கள் தற்கால உலகத்தை நேசியுங்கள் மற்றும் கிறிஸ்தவர்களாக இருங்கள் என்று சொல்லி அவர்களை ஏமாற்ற மற்றும் சாபம்கூற நான் மறுக்கிறேன், ஏனென்றால் அப்படி நீ செய்யமுடியாது. ஆமாம், நீ உலகத்தை நேசித்து மற்றும் ஒரு மாய்மாலகரனாக இருக்க முடியும். நீ ஒரு ஏமாற்றப்பட்ட போதகனாக மற்றும் உலகத்தை நேசிக்கிறவனாக இருக்க முடியும். நீ ஒரு மலிவான நவீன சுவிசேஷகனாக மற்றும் உலகத்தை நேசிக்கிறவனாக இருக்க முடியும். ஆனால் நீ ஒரு உண்மையான வேதத்தை உடைய கிறிஸ்தவனாக மற்றும் உலகத்தை நேசிக்கிறவனாக இருக்க முடியாது. இந்தக் கோட்பாட்டிலே தனிமையாக நிற்பது என்னை துக்கப்படுத்தும், ஆனால் அதைப்பற்றி உங்களிடத்தில் நான் பொய்ச் சொல்லமாட்டேன்” (The Tozer Pulpit). மறுபடியுமாக, டாக்டர் டோசர் சொன்னார், “என்னுடைய அபிப்பிராயம் என்னவென்றால், இன்று தேவையான மிகப்பெரிய ஒரே தேவை என்னவென்றால் மெல்லிய இருதயமுள்ள, மேலெழுந்தவாரியான சுவிசேஷகர்கள் உயரமும் உன்னதமுமானவரின் வஸ்திர தொங்கலால் தேவாலயம் நிரம்பி இருக்கும் தேவதரிசனத்தால் கீழேதள்ளப்பட வேண்டும் என்பது.” அப்படிப்பட்ட தேவதரிசனமில்லாமல் “நாம் நமது சொந்த சாதனங்களுக்கு விடப்பட்டோம், மற்றும் மலிவான மற்றும் தகுதியற்ற வெறும் பகட்டான செயல்பாடுகளால் சபை மக்களின் கவனத்தை பிடித்து வைக்க பலவந்தம் செய்யப்படுகிறோம்... இடுக்கமான வழியில் இருக்க நாம் மிகவும் பயப்படுகிறோம் அதனால் நமது உலகபிரகாரமான கதவுகளைத் திறந்து விட்டோம். இது ஆவிக்குரிய துக்கத்துக்கு மட்டுமே நடத்தும்... தேவனுடைய நடத்தைக்குக் குறைவாக சுவிசேஷகம் விழுந்துபோய்விட்டது, மற்றும் பாவநடக்கையை நோக்கி விழுந்துபோய்விட்டது” (Leaning Into the Wind). வசனம் 5ஐ கவனிக்கவும், “அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன், சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்” (ஏசாயா 6:5). அதன்பிறகு மட்டுமே அந்த இளம் ஏசாயா தேவனுடைய அக்கினியின் மூலமாக சுத்திகரிக்கப்பட்டார் “உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவர்த்தியானது” (ஏசாயா 6:7). இப்பொழுது 8ஆம் வசனத்தை பாருங்கள். “பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான் இதோ, அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும் என்றேன்” (ஏசாயா 6:8). சபைபிளவு ஏற்பட்டபொழுது நான் சுவிசேஷகத்தின்மீது எனக்கிருந்த வைராக்கியத்தை நான் இழந்து விடுவேன் என்று நிச்சயமாக உணர்ந்தேன். அதனால் கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் இழந்த மூன்று மனிதர்களோடு ஒவ்வொரு இரவையும் செலவிட தீர்மானம் செய்தேன் – போதகர் ரிச்சர்டு உம்ராண்டு, ஜான் வெஸ்லி, மற்றும் சீனாவுக்குக் கடைசியாக சென்ற முன்னோடி மிஷனரி, ஜோனாத்தான் கோபோர்த். அது ஞானமுள்ள ஒரு தீர்மானமாக இருந்தது. எங்களுடைய படுக்கை அறையை அடுத்து, ஒரு சிறிய குளியல் அறையை, எனது ஜெபஇடமாக மற்றும் இந்தப் பெரிய தேவனுடைய மனிதர்களோடு நான் ஐக்கியம் கொள்ளும் இடமாக உண்டாக்கினேன். உம்ராண்டு அவர்களிடமிருந்து உறுதியைக் கற்றுக்கொண்டேன். வெஸ்லி அவர்களிடமிருந்து ஒன்றன்பின் ஒன்றான சோதனைகளின் ஊடாக தொடர்ந்து செல்ல நான் கற்றுக்கொண்டேன். கோபோர்த் மற்றும் அவருடைய மனைவி ரோசலன்டு அவர்களிடமிருந்து, நமது முழங்காலில் இருந்து ஜெபித்து நாம் முன்னேறி செல்ல வேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். ஹட்சன் டெய்லர் ஒரு கடிதம் எழுதினார் அது கோபோர்த் மற்றும் அவருடைய மனைவியை உயிர்ப்பித்து உற்சாகப்படுத்தியது. ஹட்சன் டெய்லர் சொன்னார், “நாங்கள் ஒரு மிஷனாக இரண்டு வருடங்களாக ஆனான் மாகாணத்துக்குள் [சீனா] நுழைய முயற்சி செய்தோம், மற்றும் சமீபகாலத்தில்தான் வெற்றி கிடைத்தது. சகோதரரே, நீங்கள் அந்த மாகாணத்தில் நுழைந்தால், உங்கள் முழங்காலில் இருந்து ஜெபித்து முன்னேற வேண்டியது அவசியம்.” ஹட்சன் டெய்லர் அவர்களிடமிருந்து வந்த அந்த வார்த்தைகள் கோபோர்த்தின் வட ஆனான் மிஷனின் கொள்கை குரலாக மாறினது. அதன்பிறகு அவர்களுடைய குழந்தை இறந்தது. கோபோர்த் எழுதினார், “கெர்ட்ரூடு மரித்துவிட்டாள். இது எங்களுடைய ஒரு பயங்கரமான இழப்பு. இரண்டு வாரங்களுக்குக் குறைவாகவே அவள் நன்றாக இருந்தாள், ஆனால் ஜூலை 24ல் அவள் மரித்தாள், ஆறு நாட்கள் வயிற்றுப்போக்குக்குப் பிறகு அவள் சுகவீனமடைந்து மரித்தாள். நான் அவளுடைய சரீரத்தை ஒரு வண்டியில் ஐம்பது மையில்கள் எடுத்துச் செல்ல வேண்டியதிருந்தது... அங்கே ஒரு மாலை அரையிருளில் எங்கள் பிரியமான குழந்தையை இளைப்பாறும்படியாக கிடத்தினோம்.” எங்களுடைய விலையேறப்பெற்ற குழந்தையின் கல்லறைக்கு இரண்டு சிறிய சீனப்பெண்கள் ஒவ்வொரு காலையிலும் வந்து புது மலர்களை வைத்தார்கள். கெர்ட்ரூடுவின் மரணத்தைத் தொடர்ந்து, திருமதி கோபோர்த்துக்கு ஒரு அழகான பையன் பிறந்தான். அவர்கள் அவனை “வீ டோனால்டு” என்று அழைத்தார்கள். அவன் விழுந்தான் மற்றும் அவனது சிறிய தலையில் அடிபட்டது. அவன் மெதுவாக தனது கைகளையும் கால்களையும் உபயோகிக்கும் சக்தியை இழந்தான். கோடையின் கொடிய வெப்பத்தில், ஜூலை 25ஆம் நாள், பத்தொன்பது மாதமே இருந்தபொழுது, வீ டோனால்டு மரித்தான். இரண்டாவது முறையாக கோபோர்த் தனது பையன் வீயை ஒரு வண்டியில் ஐம்பது மையில்கள் எடுத்துச் சென்றார். வீ டோனால்டு தனது சிறிய சகோதரி, கெர்ட்ரூடுவின் பக்கத்திலே ஒரு கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டான். அவர் திரும்பின உடனே, கோபோர்த்தும் அவருடைய அன்பான மனைவியும் வடக்கு ஆனானின் உள்ளே இருந்த தங்கள் புதிய வீட்டுக்குச் செல்ல ஆயத்தப்பட்டார்கள். அவர்களுடைய ஐந்துமாத குழந்தை பவுல் அவர்களோடு சென்றது. அதன்பிறகு யோனத்தான் கோபோர்த் டைபாய்டு சுரத்தினால் மிகவும் மரணப் படுக்கையில் இருந்தார். அவரது வாழ்க்கை மரணம் மற்றும் ஜீவனுக்கு இடையில் ஊசலாடியது. ஜனவரி 3ல், புலோரன்ஸ் குழந்தை பிறந்தது. அந்தக் கோடையில் மிகவும் வெப்பமாக இருந்தபடியினால் சிறிய பவுல் வெப்பத்தாக்குதலால் ஏறக்குறைய மரித்த நிலைக்கு வந்தான், ஆனால் வெப்பம் மரித்துக் குறைந்தபொழுது சமாளித்துப் பிழைத்தான். அநேக கொடிய கஷ்டங்கள் மற்றும் சோதனைகள் தொடர்ந்தன. தளிர்பருவ காலத்திலே அவர்களுடைய முதல் குழந்தை மரித்தது. அதன்பிறகு மற்ற குழந்தைகள் மலேரியாவிலும் மற்றும் தண்டு மூளைக்கவிகைச் சவ்வழற்சியிலும் மரித்தனர். அதன்பிறகு கோபோர்த் மற்றும் அவரது மனைவி பாக்ஸர் ரிபலினியரிடமிருந்து தப்பி ஓடினார்கள். அவர்கள் கொலைசெய்யப்படுவதிலிருந்து ஒரு அற்புதத்தினால் மட்டுமே தப்பினார்கள். திருமதி ரோசலின்டு கோபோர்த் செவிடாக மாறினார். அவர் அவளுடைய காதுகளாக இருந்தார். கோபோர்த் முழுவதும் குருடானபோது, அவள் அவருடைய கண்களாக இருந்தாள். அவருடைய மனைவி குளியலறையில் இருந்தபொழுது அவர் தமது தூக்கத்தில் மரித்துப் போனார். அவரது அடக்கத்தின்போது, அவரது மகன் பவுல் அவரைப்பற்றி சொன்னார், “எனது தகப்பனார் எனக்கு ஒரு பெரிய மனிதர்.” அவரது மகள் ரூத் வியட்நாமில் ஒரு மிஷனரியாக இருந்தாள். ரூத் தனது தாயாருக்கு எழுதினாள், “அப்பா போவதின் மகிமை பகுதியை மட்டுமே என்னால் நினைக்க முடிகிறது... தேவன் அவரை எளிமையாக மேலான ஒரு சேவைக்கு உயர்த்தி இருக்கிறார்.” அவரது மரணத்துக்குப் பிறகு, கோபோர்த் ஆப் சீனா என்ற புத்தகம், அவரது மனைவி ரோசலின்டு மூலமாக எழுதப்பட்டது. ரோசலின்டு கோபோர்த் என்ன ஒரு உண்மையுள்ள அற்புதமான மிஷனரியாக இருந்தார்! அவருடைய வேதாகமத்தை முதலில் அவள் பார்த்த பிறகு அவரைச் சந்தித்தாள், “அவருடைய வேதாகமம் அட்டையிலிருந்து அட்டைவரை குறிக்கப்பட்டு, கிழிந்து ஏறக்குறைய கந்தலாக இருந்ததை நான் கண்டேன்.” ரோசலின்டு சொன்னார், “இந்த மனிதரை நான் விவாகம் செய்துகொள்ள விரும்புகிறேன்.” அந்த இலையுதிர் காலத்தில் அவர் அவளிடம் சொன்னார், “சீனாவுக்காக உனது வாழ்க்கையை என்னோடு நீ இணைத்துக்கொள்ளுவாயா?” அவளுடைய பதில் “ஆமாம்” என்பதாகும். சில நாட்களுக்குப் பிறகு அவர் அவளிடம் சொன்னார், “என்னுடைய ஆண்டவர் மற்றும் அவருடைய ஊழியத்தை எப்பொழுதும் உனக்கும் முன்பாக முதலாவதாக வைக்க என்னை அனுமதிக்க, எனக்கு உனது வாக்கைக் கொடுப்பாயா?” அதற்கு அவள் பதில் சொன்னாள், “ஆமாம், நான் எப்பொழுதும், சித்தமாக இருக்கிறேன்.” சிறிது காலத்துக்குப் பிறகு அந்த வாக்கினுடைய விலைக்கிரயம் என்ன என்பதை அவள் அறிந்து கொண்டாள்! “பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும் என்றேன்” (ஏசாயா 6:8). மிஷனரிகளாக இருக்க விரும்பாதவர்களை நமது சபை இழந்துவிட்டது. இந்தப் பிற்பகலிலே இங்கே இருக்கும் ஒவ்வொரு நபரும் ஒரு மிஷனரியாக மாறவேண்டும் என்பது என்னுடைய ஜெபமாகும். போதுமான அளவு பணத்தைச் சேகரித்து நமது வலைதள பணியைத் தொடர்ந்து செய்ய நமக்கு ஒரு கடினமான நேரம் இருக்கும். நீங்களும் நானும் இந்த உலக முழுவதற்கும் இவைமூலமாக மிஷனரிகளாக இருக்க முடியும் (1) ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துதல்; (2) உலகளவான மிஷன்களுக்காக ஜெபித்தல்; (3) ஒவ்வொரு மாதமும் போதுமான பணத்தைக் கொடுத்து நமது போதனைகளை, இந்தப் போதனையையும் சேர்த்து, வலைதள மிஷனில் வெளியே அனுப்ப உதவி செய்யவும் மூன்றாம் உலகத்தில் உள்ள மிஷனரிகள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் உதவி செய்யவும். ஒரு மிஷனரி பாஸ்டர் சொன்னார், “நமது தேவன் முழுஉலகளாவிய தேவனாக இருக்கிற காரணத்தால் நாமும் உலகளாவிய கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.” ரோசலின்டு கோபோர்த்தோடு சேர்ந்து, “ஆமாம், நான் எப்பொழுதும், சித்தமாக இருக்கிறேன்” என்று பதில் சொல்ல முடியுமா? எனது தரிசனத்தை எல்லாம் நிரப்பும், இரட்சகரே, நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் |