இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
ஜெபத்தில் கண்ணீர்TEARS IN PRAYER டாக்டர் கிறிஸ்டோபர் எல். கேஹன் “அவர் [கிறிஸ்து] மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு” (எபிரேயர் 5:7). |
இயேசுவானவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்நாள் இரவு, கெத்செமனேவில் அவர் ஜெபித்ததைப்பற்றி நமது பாடம் பேசுகிறது. அங்கே நம்முடைய பாவம் அவர்மீது வைக்கப்பட்டதால் அவர் மிகுந்த அழுத்தத்தின்கீழ் இருந்தார், அடுத்த நாளில் தமது சரீரத்திலே சிலுவைக்குச் சுமந்து சென்றார். லூக்கா சுவிசேஷம் நமக்குச் சொல்லுகிறது, “அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார் அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44). அந்த இரவிலே “வேதனையோடு” கிறிஸ்து ஜெபித்தார். நமது பாடம் சொல்லுகிறது “பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்தார்” என்று. இயேசுவானவரின் ஜெபம் உணர்ச்சி வேகம் மற்றும் உள்எழுச்சி நிறைந்ததாக, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் இருந்தது. இந்த இரவிலே ஜெபத்தில் உணர்ச்சி வேகம் மற்றும் உள்எழுச்சியைபற்றி நான் பேசவிரும்புகிறேன்.
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + I. முதலாவது, உள்எழுச்சியோடு உள்ள பொய்யான ஜெபம். உள்எழுச்சியோடும் உணர்ச்சி வேகத்தோடும் சத்தமிடுவது, மற்றும் அழுவது, ஜெபத்தின் முக்கியமான பாகங்கள் என்று அநேக பெந்தேகொஸ்தே மற்றும் கரீஸ்மேடிக்கள் நினைக்கிறார்கள். ஜெபத்தில் அலறுதல் மற்றும் அழுதல் இருந்தால் அங்கே பரிசுத்த ஆவி இருக்கிறது, மற்றும் குலுக்குதல் மற்றும் கூக்குரலிடுதல் இல்லையானால் அங்கே பரிசுத்த ஆவி இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஜெபத்தில் மட்டுமல்ல, ஆனால் அவர்கள் பாடும்பொழுது நடிப்பது, அவர்கள் ஒரு போதனையைக் கேட்கும்பொழுது, மற்றும் சபையில் நடக்கும் சகலவற்றிலும் நடிப்பதினால் அங்கே பரிசுத்த ஆவி இருக்கிறது என்று அவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் அவர்கள் தவறானவர்கள். உணர்ச்சி வேகம் என்று சொன்னால் அது தன்னில் ஒன்றுமில்லை என்பது அதன் அர்த்தமாகும். அதை ஜெபத்திலிருந்து எடுத்துப்போட முடியும். அது பிசாசினுடையதாக இருக்க முடியும். உள்எழுச்சியோடு உள்ள பொய்யான ஜெபத்துக்கு ஒரு உதாரணத்தை வேதாகமத்திலிருந்து நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். எலியா பாகால் தீர்க்கதரிசிகளை எதிர்கொண்டார். ஒரு நாள் முழுவதும் பாகாலிடம் அழுங்கள் என்று அவர்களிடம் அவர் சொன்னார், அவர் இஸ்ரவேலின் தேவனிடம் ஜெபம் செய்வேன் என்றார். அக்கினியினால் பதில் அளிக்கும் தேவனே உண்மையான தேவன் என்றார். பாகால் தீர்க்கதரிசிகள் தங்கள் ஜெபங்களில் கட்டுப்பாடில்லாமல் மற்றும் உள்எழுச்சியோடு மாறினார்கள். இன்று இது அநேக சபைகளில் நல்லதாக காணப்படுகிறது! அவர்கள் “தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்” (I இராஜாக்கள் 18:26). மத்தியான வேளையிலே “அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்” (I இராஜாக்கள் 18:28). ஆனால் “ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை” (I இராஜாக்கள் 18:29). அதன் பிறகு எலியா தேவனிடம் ஒரு எளிய ஜெபம் செய்தார் மற்றும் தேவன் வானத்திலிருந்து அக்கினியை அனுப்பினார். அந்தப் பிசாசின் உள்எழுச்சி, மேலும் கீழும் குதித்தது, சத்தமிட்டது மற்றும் அழுதது, மற்றும் சகலகாரியங்களையும் அந்தப் பொய்த் தீர்க்கதரிசிகள் செய்தது ஒன்றும் பிரயோஜனமில்லை. உணர்ச்சி வேகம் என்று சொன்னால் அது தன்னில் ஒன்றுமில்லை என்பது அதன் அர்த்தமாகும். நான் அநேகந்தரம் உணர்ச்சி வேகத்தை அதன் சொந்த தன்மையைப் பார்த்திருக்கிறேன். அது ஒருபோதும் எந்த நன்மையும் செய்ததில்லை. ஒரு சமயம் நான் ஆலோசனை அறையிலே ஒரு பெண்ணுக்கு ஆலோசனை கொடுத்து, அவளை கிறிஸ்துவிடம் நடத்த முயற்சி செய்துகொண்டிருந்தேன். அவள் அழுதுகொண்டும் நடுங்கிக்கொண்டும் இருந்தாள். நான் கேட்டுக் கொண்டபொழுது அவளால் நிருத்த முடியவில்லை. அவள் தனது பாவங்களுக்காக அழுவதாக சொன்னாள், ஆனால் அந்த அழுகையிலிருந்து அவள் இயேசுவானவரிடம் ஒருபோதும் அசையவில்லை. அவள் கிறிஸ்துவிடம் தனது கவனத்தை ஒருபோதும் திருப்பவில்லை. அவள் ஒருபோதும் இரட்சிக்கப் படவில்லை. அதன்பிறகு அவள் சபையைவிட்டு போய்விட்டாள் மற்றும் ஆழமான பாவவாழ்க்கைக்குப் போனாள். சில மக்கள் மிகவும் உணர்ச்சி வேகம் உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் எதற்கெடுத்தாலும் உடைந்து மற்றும் அழுவார்கள். அதேபோல செய்த வேறொரு பெண் எனது நினைவில் இருக்கிறது. அது ஒரு போதனைக்குப் பிறகு, அல்லது அவள் கிறிஸ்துவை நம்ப வேண்டும் என்று ஆலோசனை கொடுத்தபொழுது நடந்தது. அது எந்த நேரமாக இருந்தாலும் சரி. அவள் கண்ணீர் விடுவாள் மற்றும் அழுவாள். அவள் கிறிஸ்துவின்மீது, அல்லது சபையின்மீது, அல்லது வேதாகமத்தின்மீது தனது மனதை வைக்கமாட்டாள். ஒரு நாள் அவள் துக்கப்பட்டாள். அவள் தனது உணர்வுகளைப் பின்பற்றினாள் மற்றும் சபையை விட்டு போய்விட்டாள். நான் அவளை ஒருபோதும் மறுபடியும் பார்க்கவில்லை. அழுவதும் மற்றும் சத்தமிடுவதும் “உண்மையான” எதையும் உண்டாக்க முடியாது. அது ஜெபத்தை உண்மையுள்ளதாக செய்யாது. நீயாக அழுது அல்லது சத்தமிட முயற்சிப்பதால் எதையும் உண்டாக்க முடியாது. நீ ஜெபிக்கும்பொழுது, என்ன ஜெபிக்கிறாய் என்று யோசனைசெய். நீ கண்ணீரோடு ஜெபிக்கலாம் அல்லது கண்ணீர் இல்லாமல் இருக்கலாம். இயேசுவானவர் கெத்செமனே தோட்டத்தில் உணர்ச்சி வேகத்தைக் காட்டினார். அவர் “பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணினார்.” ஆனால் அது தானாக அழுதது இல்லை. அவரது கண்ணீர் ஜெபத்தை நன்றாக உருவாக்க வில்லை. அவரது ஜெபத்தால் கண்ணீர் வெளியே வந்தது. அவரது ஜெபத்திலிருந்து அவை எழுந்தன. மனித வர்க்கத்தின் பாவங்கள் அவர்மீது வைக்கப்பட்டதால், அவர் தமது கடும்துன்பத்தினால், அழுத்தத்தினால் மற்றும் வேதனையினால் பலத்த சத்தமிட்டார். அவரது நல்லுணர்வு நிலையில், அவரது கவலையில், அவரது தேவையில், அவரது பாரத்தில், அவரது பாடுகளில் அவரது அழுகை வெளியே வந்தது. உனக்கும் அப்படியே இருக்க வேண்டும். அழுவதற்கு நீ முயற்சி செய்யாதே. அழுவதற்கு நீ திட்டம் செய்யாதே அல்லது அழுவதற்கு நீ ஆயத்தப்படாதே. அப்படியே ஜெபி. தேவன் உன்னை அழுகைக்கு நடத்தலாம், அல்லது நடத்தாமலும் இருக்கலாம், ஆனால் எந்தவிதத்திலும் அது உண்மையான ஜெபமாக இருக்க வேண்டும். II. இரண்டாவது, உணர்வில்லாமல் பொய்யாக ஜெபம் செய்வது. இன்று ஒரு பெரிய அளவில் “ஜெபம்” என்று அழைக்கப்படுவது அது ஜெபமே அல்ல. அது ஒரு நபர் சாதாரணமாக சிலவற்றை சொல்லுவது, அது தேவனுக்கு உண்மையான ஜெபம் அல்ல. அது நல்லதாக சத்தமிடும், அதாவது மதத்தின் சத்தமாகிய வார்த்தைகள், ஆனால் அவைகள் பெயரளவிற்கு, அர்த்தமில்லாமல், தேவனிடத்திற்குத் திரும்பாமல் மற்றும் சிலவற்றை கேட்டுக்கொண்டிருப்பது ஆகும். நான் அநேக பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொண்டிருந்திருக்கிறேன். விழாவின் ஆரம்பத்தில் “வேண்டுதல்” என்று சொல்லப்படும் சிலது இருக்கும். அது ஜெபத்தைப்போல இருக்க வேண்டும், ஆனால் அது அப்படி இருக்காது. அந்தப் பட்டமளிப்பு நன்றாக இருக்க வேண்டும், மற்றும் மாணவர்கள் நன்றாக வாழவேண்டும் என்று அந்த நபர் சில வார்த்தைகளை வேகமாக சொல்லுவார். ஆனால் தேவன் பதிலளிக்க வேண்டும் மற்றும் மெய்யாகவே – அந்த நபர் “ஜெபித்துக்கொண்டிருப்பதுபோல” எதையாவது செய்ய வேண்டும் அல்லது சிலவற்றை மாற்ற வேண்டும் என்று ஒருவரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு வேண்டுதலில் எந்த ஒரு உணர்வோ அல்லது இருதய வெளிப்பாடோ ஒருபோதும் இருக்காது. ஒரு சமயம் நமது நாட்டின் தலைநகராகிய வாஷிங்டன், டி.சிக்கு, விஜயம் செய்தேன். அங்கே இருந்த தேசிய மாவட்ட தலைமை கிறிஸ்தவ கோயிலுக்குச் சென்றேன். ஜனாதிபதி ரீகன் அப்பொழுதுதான் மரித்துப்போனார், அவரது அடக்க கூட்டத்துக்காக ஆயத்தமாகி கொண்டிருந்தார்கள். அங்கே ஒரு மேற்றாணி பாதிரியார் ஒரு “ஜெபம்” என்று சில வார்த்தைகள் சொன்னதை நான் கேட்டேன். ஆனால் அவர் ஜெபிக்கவே இல்லை. ஒரு புத்தகத்திலிருந்து வார்த்தைகளை வாசித்துக் கொண்டிருந்தார். அவை எல்லாம் அவ்வளவுதான். தேவன் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் கேட்கவில்லை. அவர் ஒரு பதிலையும் எதிர்பார்க்கவில்லை. அவர் ஏதோ சில வார்த்தைகளைச் சொன்னார் ஏனென்றால் அவர் செய்ய வேண்டியது அவ்வளவுதான். இருதயத்திலிருந்து எந்த உணர்வும் இல்லை. தேவாலயத்துக்கு ஜெபிக்க சென்ற ஒரு பரிசேயனைப்பற்றி இயேசுவானவர் சொன்னார். அந்த மனிதன் சொன்னான், “பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்” (லூக்கா 18:11, 12). அவன் ஜெபமே செய்யவில்லை. அவன் தேவனிடம் எதையும் கேட்கவில்லை. அதற்குப் பதிலாக அவன் எவ்வளவு நல்லவனாக இருந்தான் என்பதை தேவனுக்குச் சொன்னான். கிறிஸ்து சொன்னார் அவன் “தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்” (லூக்கா 18:11). அவன் உணர்வை வெளியே காட்டவில்லை. அவன் இருதயத்திலிருந்து ஜெபிக்கவில்லை. கிறிஸ்துவானவர் பரிசேயர்களுடைய பொய்யான ஜெபத்தைக் கடிந்து கொண்டார். அவர் சொன்னார், “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்: இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்” (மத்தேயு 23:14). தாங்கள் பரிசுத்தமானவர்கள் என்பதைக் காட்டும்படியாக அவர்கள் நீண்ட ஜெபங்களைச் செய்தார்கள். ஆனால் அவர்கள் மெய்யாகவே விரும்பினது என்னவென்றால் அந்த வயதான ஸ்திரீகளிடமிருந்து வீடுகள் மற்றும் பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதுபோல அது அவ்வளவு எளிதானது. அவர்கள் என்னவிதமான உணர்வைக் காட்டினாலும் அது அவர்களை நல்லவர்கள்போல காட்டும் ஒரு வெளிப்படையான சுருட்டுத்தான். அவர்கள் தங்கள் இருதயத்திலிருந்து ஜெபிப்பது இல்லை. அவர்களுடைய இருதயங்கள் சரியாக இல்லை. நீ சொல்லலாம், “நான் அவர்களைப்போல இல்லை” என்று. ஆனால் வெறுமையான வார்த்தைகளால், நீ பொய்யாக ஜெபிக்கிறாயா? நான் அதைச் செய்திருக்கிறேன். உனது தனி ஜெபநேரத்தில், மக்களைப்பற்றி மற்றும் நீ ஜெபிக்கும் காரியங்களைக் குறிப்பிட்டு, அவர்களைப்பற்றிய நினைவில்லாமல், தேவன் பதிலளிக்க வேண்டும் என்று மெய்யாகவே கேட்காமல் ஜெபிக்கிறாயா? அப்படியாக சபையில் ஜெபகூட்டத்தில் செய்தாயா? நான் அதைச் செய்திருக்கிறேன். ஏதோ சிலவற்றை ஜெபிக்க வேண்டும் என்ற காரணத்துக்காக – உனது ஜெபமுறை வந்துவிட்டது என்பதற்காக நீ ஜெபித்தாயா? கூட்டம் முடிந்து விட்டபொழுது இனிமேல் நீ ஜெபிக்க வேண்டியதில்லை என்று மகிழ்ச்சி அடைந்தாயா. அது உண்மையான ஜெபம் அல்ல. அது ஏதோ நீ கடந்துபோன சில காரியம். மற்ற யாருக்காவது உணர்த்த வேண்டும் என்பதற்காக “நன்றாக ஜெபிக்க” வேண்டும் என்று முயற்சி செய்தாயா? நேரத்துக்கு முன்னதாக தனது ஜெபத்தைத் திட்டமிடும் சிலர் எனக்குத் தெரியும். அது உண்மையான ஜெபம் அல்ல, அது ஒரு சொற்பொழிவு, ஒரு மேடைபேச்சு. நான் சொல்லுகிறேன், “உனது ஜெபங்களுக்குத் திட்டமிடாதே, அவர்களுக்காக ஜெபி!” ஜெபகூட்டத்துக்கு முன்பாக, தேவன் உனக்கு ஜெபிக்க உதவி செய்ய வேண்டும் என்று சில நிமிடங்கள் வேண்டிக்கொள். மற்றும் நீ ஒரு கூட்டத்தில் அல்லது தனிமையில் ஜெபிக்கும்பொழுது, நீ என்ன ஜெபிக்கிறாய் என்பதைப்பற்றி நினைத்துப்பார். தேவன் உதவி செய்யாவிட்டால் சூழ்நிலை எவ்வளவு கெட்டதாக உள்ளது என்று நினைத்துப்பார். தேவனுடைய பதில் எவ்வளவாக உனக்குத் தேவையாக இருக்கிறது என்று நினைத்துப்பார். உபவாசம் உன் ஜெபங்களுக்கு உதவியாக இருக்கும், அது உனது கவனத்தை ஒன்று கூட்டி நீ தீவிரதேவையில் இருக்கிறாய் என்று தேவனுக்குக் காட்டும். ஜெபத்தில் தேவனிடம் திரும்பு மற்றும் நீ கேட்டுக்கொள்ளுவதைத் தேவன் உனக்குக் கொடுக்க வேண்டும் என்று கெஞ்சிகேள். நீ உணர்வினால் மிகவும் நன்றாக அழலாம். நீயாக நிருத்தாதே. தேவன் அதை உனக்குள் நகர்த்தினார். சில நேரங்களில் நீ அழாமல் இருக்கலாம். நீ அழவேண்டும் என்று உன்னை கட்டாயப்படுத்தாதே. அழுகை இருக்கும் காரணத்தால் ஒரு ஜெபம் நன்றாக இருக்கும் என்பதல்ல – அல்லது அழுகை இல்லாத காரணத்தால் ஒரு ஜெபம் நன்றாக இருக்காது என்பதுமல்ல. தேவன் அதிலே இருந்தால் ஒரு ஜெபம் நன்றாக இருக்கும்! III. மூன்றாவது, உணர்வோடு மற்றும் உணர்வில்லாமல் உள்ள மெய்யான ஜெபம். நமது பாடம் கிறிஸ்து கெத்செமனே தோட்டத்தில் “பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணினார்” என்று சொல்லுகிறது. ஆனால் சில நேரங்களில் சிறிதளவு உணர்வு அல்லது உணர்வு இல்லாமல் ஜெபித்த உண்மையான ஜெபத்துக்குப் பதில் கிடைத்திருக்கிறது. பாகாலின் தீர்க்கதரிசிகள் தங்கள் பொய்யான தேவனிடம் எப்படி ஜெபித்தார்கள் என்று நான் உங்களுக்குச் சொன்னேன். எலியா எப்படி ஜெபித்தார் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர் சொன்னார், “அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படியே செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும். கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்” (I இராஜாக்கள் 18: 36, 37). ஏலியா அழுதார் என்று எந்தப் பதிவும் இல்லை. அவர் மேலும் கீழும் குதித்தார் என்று எந்தப் பதிவும் இல்லை. அவர் நிச்சயமாக தன்னைத்தானே வெட்டிக்கொள்ளவில்லை! அவர் தேவனிடம் ஒரு தீவிரமான ஜெபத்தைச் செய்தார். தேவன் மெய்யான தேவன் என்று காட்டும்படி அவர் தேவனிடம் வேண்டினார். மற்றும் தேவன் அந்த ஜெபத்துக்குப் பதில் அளித்தார் மற்றும் எலியாவின் பலியைப் பட்சிக்க தேவன் வானத்திலிருந்து அக்கினியை அனுப்பினார். அந்த மக்கள் சொன்னார்கள், “ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து கர்த்தரே தெய்வம் என்றார்கள்” (I இராஜாக்கள் 18:39). எலியாவின் தீவிரமான ஜெபம், எந்த மனஎழுச்சியும் பதிவு இல்லாத ஜெபம், வனாந்திரத்திலே பாகாலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக இருந்தது. உண்மையான ஜெபத்துக்கு உணர்வு இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அதற்கு தேவன் இருக்க வேண்டும்! ஆனால் அநேக நேரங்களில் உணர்வு, கண்ணீரும்கூட, உண்மையான ஜெபத்தோடு செல்லுகிறது. உனது தேவையை நீ உணர்ந்தால், உணர்வு அடைவது மட்டுமே உனக்கு இயற்கையானதாக இருக்கும். நீ தேவனைப் பாசத்தோடு, அவசரமாக, மற்றும் அழுகையோடு அழைக்கலாம். நீ உடைந்துபோய் மற்றும் கண்ணீரோடு கெஞ்சலாம். நேரத்துக்கு நேரம் கண்ணீர் மற்றும் ஜெபத்தை வேதாகமம் இணைக்கிறது. சங்கீதக்காரர் ஜெபித்தார், “கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்: என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்” (சங்கீதம் 39:12). எசேக்கியா ராஜா மரணத்துக்கு ஏதுவான வியாதியாக இருந்தார். எசேக்கியா கர்த்தரிடம் ஜெபித்தார். அவர் எப்படி ஜெபித்தார்? வேதாகமம் சொல்லுகிறது, “எசேக்கியா மிகவும் அழுதான்” (II இராஜாக்கள் 20:3). ஒருவேளை அவர் அழுதார். அவர் மரிக்க போகிறார். அவர் ஆழமாக அழுதார். அவர் தமது ஜெபத்திலே அழுதார். அதன்பிறகு கர்த்தருடைய வார்த்தை ஏசாயா தீர்க்கதரிசிக்கு உண்டானது. ஏசாயா சொன்னார், “நீ திரும்பிப்போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன், இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்” (II இராஜாக்கள் 20:5). “உன் கண்ணீரைக் கண்டேன்.” எசேக்கியாவின் உதவியற்ற, கெஞ்சலின் ஜெபத்தைத் தேவன் பார்த்தார் மற்றும் கண்ணீரை உணர்ந்தார். தேவன் பதிலளித்தார் மற்றும் ராஜாவின் ஜீவனை இரட்சித்தார். புதிய ஏற்பாட்டிலே, ஒரு மனிதன் இயேசுவானவரிடம் வந்தான். அவனுடைய மகன் பிசாசினால் பிடிக்கப்பட்டிருந்தான். அவனுடைய மகனைக் குணமாக்க முடியும் என்று அவன் விசுவாசித்தால் அவனுடைய மகன் குணமாவான் என்று கிறிஸ்து அவனிடம் சொன்னார். மற்றும் “உடனே பிள்ளையின் தகப்பன் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்” (மாற்கு 9:24). இயேசுவானவர் அந்தப் பையனிடமிருந்த பிசாசைத் துரத்தினார். விசுவாசத்தில் பெலவீனமாக இருக்கிறவர்கள்களும் தேவனிடம் பதிலைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதைக் காட்ட அடிக்கடி இந்தப் பகுதி உபயோகப்படுத்தப்பட்டது. “என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்.” மேலும் இந்தப் பகுதியில் அந்தத் தகப்பன் “கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்” என்றும் பார்க்கிறோம். அந்த மனிதன் சீஷர்களில் ஒருவன் அல்ல. அவன் ஒரு மாற்றப்பட்ட மனிதனும் அல்ல. அவன் “ஜனக்கூட்டத்தில் ஒருவன்” திரளான கூட்டத்தில் ஒருவனாக இருந்தான் (மாற்கு 9:17). அவன் தனது மகனை இயேசுவானவரிடம் கொண்டு வந்தான் மற்றும் அவரிடம் கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான். அந்த மனிதன் ஏன் இயேசுவானவரிடம் கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்? அவன் ஒரு ஜெபவீரன் அல்ல. அவன் ஒரு இரட்சிக்கப்பட்ட மனிதனும் அல்ல. அந்த விதமாக கிறிஸ்துவிடம் அவன் பேசுவது இயற்கையானது, அவன் தனது சொந்த அவசியமான தேவையைக் கண்டான். அவனுடைய மகன் பிசாசினால் பிடிக்கப்பட்டிருந்தான் இயேசுவானவரை அல்லாமல் ஒருவராலும் அவனை விடுதலையாக்க வேறுவழி இல்லை. அந்த மனிதன் தானாக அழுகையை வருவித்துக் கொள்ளவில்லை. அவனுடைய தேவை, மற்றும் அவனுடைய விரக்தியிலிருந்து, அவனுக்குக் கண்ணீர் வந்தது. தேவையை உணரும்பொழுது, விரக்தியான மற்றும் உதவியற்ற நிலைமையைப்பற்றி, விழிப்புணர்வு வரும்பொழுது அடிக்கடி அழுகைக்கு மற்றும் கண்ணீருக்கு நடத்துகிறது. அவன் உண்மையான ஜெபத்தில், உணர்வோடு பேசினான். மற்றும் அது நம்மை நமது பாடத்துக்கு நடத்துகிறது. கிறிஸ்துவானவர் தோட்டத்தில் “பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணினார்.” அவர் அழுகிற ஒரு குழந்தை அல்ல. அவர் எதற்கெடுத்தாலும் அழுகிற ஒரு மனகிளர்ச்சி உள்ள பெண் அல்ல. அவர் முப்பது வயதுக்கும் மேலான, ஒரு வளர்ந்த மனிதர். அவர் ஏன் அழுதார்? ஏனென்றால் அவர் தமது இருதயத்தில் அசைக்கப்பட்டார். ஒவ்வொரு மனிதனுடைய மற்றும் மனுஷியுடைய பாவமும் அவர்மேல் வைக்கப்பட்டதை அவர் உணர்ந்தார். அடுத்த நாளில் அவர் சிலுவையிலே படபோகும் கொடுமையான பாடுகளை அவர் தாங்கவேண்டும் என்பதை நினைத்தார், இல்லையானால் ஒருவரும் இரட்சிக்கப்பட முடியாது. இருந்தாலும் மனித வர்கத்தின் பாவ பாரம் அவரை ஏறக்குறைய கொன்றது. தேவனுடைய கிருபை இல்லாமல், அவர் அந்த இரவிலே தோட்டத்தில் மரித்திருந்தால் ஒருபோதும் சிலுவை இருந்திருக்காது. கிறிஸ்து தமது இருதயத்தில் மூழ்கினார். அதனாலதான் அவர் “பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணினார்.” அந்தச் சூழ்நிலையிலே அது சாதாரணமானது மற்றும் இயற்கையானது. அவர் உணர்வோடு ஜெபிக்காவிட்டால் அது ஆச்சரியமாக இருந்திருக்கும். இயேசுவானவர் “பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணினார்.” மேலும் நமது பாடம் சொல்லுகிறது அவர் “கேட்கப்பட்டார்.” தேவன் அவருடைய ஜெபத்துக்குப் பதிலளித்தார் மற்றும் அவர் அடுத்த நாளில் சிலுவைக்குச் செல்லும் வரையிலும் உயிரோடு வைத்தார். தேவன் அவருடைய “பலத்த சத்தத்துக்கும் கண்ணீருக்கும்” பதில் அளித்தார். கிறிஸ்தவரே, நான் உன்னை கேட்கிறேன், “நீ அழுகையோடும் கண்ணீரோடும் ஜெபிக்கிறாயா?” நீ செய்யும் ஒவ்வொரு ஜெபத்தைப்பற்றியும் நான் பேசவில்லை. ஆனால் மறுபடியும் நான் உன்னை கேட்கிறேன், “நீ எப்பொழுதாவது அழுகையோடும் கண்ணீரோடும் ஜெபம் செய்திருக்கிறாயா?” நான் ஏறக்குறைய, அடிக்கடி என்னால் முடிந்தவரையிலும் ஜெபிக்க முடியவில்லை. நீ சில நேரத்தில் ஜெபபாரத்தோடு தேவைகளுக்காக ஜெபிக்கிறாய், பதிலுக்காக தேவனிடம் கெஞ்சுகிறாய் – சில நேரத்தில் அழுகையோடும் கண்ணீரோடும் ஜெபம் செய்திருக்கிறாயா? அப்படி நீ ஒருபோதும் செய்யவில்லையானால், உனக்கு ஒரு நல்ல ஜெபவாழ்க்கை இல்லை. அந்த வழியில் நீ இருந்தால், ஜெபிப்பதை நிருத்தாதே மற்றும் உனது ஜெபங்கள் சிறந்ததாகும் வரைக்கும் காத்திரு. தேவன் விரும்புவது அதுதான். ஆனால் உனது தேவையைப் பற்றிய உணர்த்துதலைக் கொடுக்கும்படி ஜெபி, அதன்பிறகு உணர்வோடு நீ ஜெபிப்பாய். நீ உபவாசமாக இருந்தால், உனக்குப் பசிக்கும்போதெல்லாம், நீ எதற்காக ஜெபிக்கிறாய் என்பதை நினை. தேவனிடம் திரும்பு மற்றும் ஜெபி. உங்களில் சிலர் இழக்கப்பட்டவர்களாக இருக்கிறீர்கள். நீ இயேசுவானவரை நம்பவில்லை. நான் உன்னைக் கேட்கிறேன், “உன்னுடைய பாவம் ஏதோ சில நேரத்திலாவது – அழுகையோடும் கண்ணீரோடும் உணர செய்திருக்கிறதா?” உன் பாவத்தைப்பற்றி ஏதாவது உனக்கு உணர்த்துதல் இருக்கிறதா? அழுகை அந்த இலக்கு அல்ல – இயேசுவானவரே அந்த இலக்கு. நீ அழுதாலும் இல்லையானாலும் அவரை நம்பு. ஆனால் நான் சொல்லுகிறேன், “உனது இருதயத்தின் பாவத்தின்மீது ஏதாவது துக்கத்தை நீ உணருகிறாயா?” நீ உணர வேண்டும், உனது இருதயம் “மகா கேடுள்ளதாகயிருக்கிறது” (எரேமியா 17:9). உனது இருதயத்தின் மிகமோசமான பாவத்தைக் காட்டும்படி தேவனிடம் ஜெபம் செய். அதன்பிறகு தேவன் உன்னை கிறிஸ்துவிடம் இழுத்து வரும்படி ஜெபம் செய். உனது தேவைக்கு இயேசுவானவரே பதிலாக இருக்கிறார். உன்னுடைய பாவத்துக்கு அவரே பரிகாரமாக மற்றும் கிரயமாக இருக்கிறார். ஒவ்வொரு பாவத்துக்கும், உனது இருதயத்தின் பாவத்துக்கும் உரிய கிரயத்தைச் செலுத்தம்படி அவர் சிலுவையிலே மரித்தார். உனது பாவத்தை மூட மற்றும் என்றென்றுமாக கழுவி நீக்க அவர் தமது இரத்தத்தைச் சிந்தினார். மரணத்தை ஜீவனாலே ஜெயிக்க, அவருக்காக மட்டுமல்ல உனக்காகவும் அவர் உயிரோடு எழுந்தார். நீ இயேசுவானவரை நம்பினால், நீ என்றென்றுமாக இரட்சிக்கப்படுவாய். கிறிஸ்துவை நம்புவதைப்பற்றி நீ எங்களோடு பேசவிரும்பினால், தயவுசெய்து வந்து முதல் இரண்டு வரிசைகளில் அமரவும். ஆமென். நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் போதனைக்கு முன்பாக தனிப்பாடல் பாடியவர் திரு. ஜேக் நாஹன்: |
முக்கிய குறிப்புகள் ஜெபத்தில் கண்ணீர்TEARS IN PRAYER டாக்டர் கிறிஸ்டோபர் எல். கேஹன் “அவர் [கிறிஸ்து] மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு” (எபிரேயர் 5:7). (லூக்கா 22:44) I. முதலாவது, உள்எழுச்சியோடு உள்ள பொய்யான ஜெபம், I இராஜாக்கள் 18:26, 28, 29. II. இரண்டாவது, உணர்வில்லாமல் பொய்யாக ஜெபம் செய்வது, லூக்கா 18:11, 12; மத்தேயு 23:14. III. மூன்றாவது, உணர்வோடு மற்றும் உணர்வில்லாமல் உள்ள மெய்யான ஜெபம், I இராஜாக்கள் 18:36, 37, 39; சங்கீதம் 39:12; II இராஜாக்கள் 20:3, 5; மாற்கு 9:24, 17; எரேமியா 17:9. |