இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
ஒரு கிறிஸ்தவ சீஷனாக மாறுவதற்கு என்ன கிரயம் செலுத்த வேண்டிதாக இருக்கும்WHAT IT COSTS TO BECOME A CHRISTIAN DISCIPLE டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr. “உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து… அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப் பானோ?” (லூக்கா 14:28, 30) |
இப்பொழுது என்னோடுகூட, மத்தேயு 16, வசனம் 24க்கு திருப்பிக் கொள்ளுங்கள். “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொணடு; என்னைப் பின்பற்றக்கடவன்” (மத்தேயு 16:24). இன்று அநேக அதிகமான இளம் மக்கள் எந்தவிதத்திலும் கிறிஸ்துவை பின்பற்றாமல் மற்றும் தங்கள் வாழ்க்கையில் எந்த நோக்கமும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு நாள் பிறகு அடுத்த நாள் என்று நீ அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கிறாய். உண்மையில், இன்று இளம் மக்கள் நிமிஷத்துக்கு நிமிஷம் வாழ்வதாக காணப்படுகிறது. நீ தொலைக்காட்சியில் அலைவரிசைகளைத் திருப்புவதைப்போல உன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறாய் – நீ ஒரு நிகழ்ச்சியையும் முழுமையாக ஒழுங்காய் ஒருபோதும் பார்க்காமல் அடிக்கடி ஒரு சேனலில் இருந்து மறுசேனலுக்குத் திருப்பிக் கொண்டேயிருக்கிறாய். இப்பொழுது அதிலே ஒரு அபாயம் இருக்கிறது. உனக்கு எந்த முழுகதையும் ஒருபோதும் கிடைப்பதில்லை. அவ்விதமாகதான் அநேக இளம் மக்கள் இந்தச் சபையில் நடந்து கொள்ளுகிறார்கள். “சேனலை மாற்றிக்கொண்டிருக்கும்” நீங்கள் – உள்ளும் வெளியுமாக இருந்து கொண்டிருப்பவர்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமை லாஸ் வேகாஸ்க்கும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஆலயத்துக்கும் சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்படி இருந்தால் அந்த முழுகதையும் ஒருபோதும் உனக்குக் கிடைக்காது. உனக்குத் துண்டுகளும் துணுக்குகளும்தான் கிடைக்கும். உதாரணமாக, நீ பரிணாம கோட்பாட்டை மட்டுமே கேட்கிறாய், ஆனால் இம்மை மறுமை கோட்பாடு, சோடெரியாலஜி, பேய்நிலை ஆய்வு, மற்றும் அநேக பாடங்களை நீ தவறவிடுகிறாய். ஒரு உண்மையான கிறிஸ்தவனாக மாறும்படியாக நீ உன்னை கிறிஸ்துவிடம் முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட வேண்டியது அவசியம்: “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொணடு; என்னைப் பின்பற்றக்கடவன்” (மத்தேயு 16:24). இப்பொழுது, கிருபையினாலே இரட்சிப்புக் கிடைத்து இருக்கிறது. ஒரு மாற்றப்படாத மனிதன் இயேசு சொன்ன வார்த்தையின்படி ஒரு போதும் செய்ய முடியாது, “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொணடு; என்னைப் பின்பற்றக்கடவன்.” ஆனால் தேவன் சுவிசேஷத்தை கேட்கும்படியாக உன்னை இந்தச் சபைக்கு இழுத்திருக்கிறார். அந்தப் பூரிட்டன் தாமஸ் வாட்சன் சரியாக சொன்னார், “தேவன் இழுக்க ஆரம்பிக்கும்பொழுது நாம் பின்பற்றலாம்.” அல்லது, நீ பின்பற்றாமல் இருக்க முடிவு செய்யலாம், இருந்தாலும், உன் உள்ளத்தின் ஆழத்திலே, நீ பின்பற்ற வேண்டும் என்று உனக்குத் தெரியும். மாற்றப்படாத மனிதன் எதிர் முறன்பாடு நிறைந்தவனாக இருப்பான். நீ சபைக்கு வந்து பிரசங்கியொடும் வேதாகமத்தோடும் உள்ளான ஒரு வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறாய். உன் இருதயத்திலே சொல்லுகிறாய், “நான் இந்த வேதாகமத்தை நம்பவில்லை” என்று. ஆனால் அதன்பிறகு நீ நினைக்கிறாய், “நான் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவன். நான் இருக்கிற இந்த வழியிலே எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை” என்று. நீ முன்னும் பின்னுமாக இழுக்கப்பட்டாய். உன்னில் ஒரு பகுதி தேவனுக்கு விரோதமாக கலகம் செய்கிறது மற்றும் ஒரு பகுதி தேவனிடத்தில் நம்பிக்கை இருக்கிறது என்று விசுவாசிக்க விரும்புகிறது. உனக்கு உள்ளே ஒரு போராட்டம் நடக்கிறது. இந்த மாலையிலே இங்கே உள்ள ஒவ்வொருவருக்கும் இதைபோன்ற ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சபையின் மக்களிடையில் மேலும் கீழுமாக நான் சுற்றி நடந்து இந்த இரவிலே இங்கிருக்கும் இளம்மக்களிடமிருந்து கதைக்கதையாக நான் சொல்ல முடியும். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு உள்ளான போராட்டம் நடக்கிறது. ஒருவேளை அது உனக்கு இருப்பதைப்போல மற்றவருக்கு அப்படியே இல்லாமல் இருக்கலாம், ஆனால் எப்பொழுதும் ஒன்றுபோலவே இருக்கிறது. உன்னில் ஒரு பகுதியில் சபைக்குத் திரும்ப வரவேண்டும் ஒரு தேவன் இருக்கிறார் மற்றும் இரட்சிப்பு இருக்கிறது என்ற விருப்பம் இருக்கும் மற்றும் மற்ற ஒருபாதியில் தேவனுக்கு விரோதமாக, வேதாகமத்துக்கு மற்றும் பிரசங்கிக்கு விரோதமாக கலகம் செய்யும். + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + முதலாவதாக, உன்னில் உள்ள இந்தப் போராட்டத்துக்கு மூலகாரணங்கள் என்ன? முதலாவது, இந்த உலகம் (பெற்றோர், நண்பர்கள், கேளிக்கை). அதன்பிறகு உன்னுடைய மாம்சம் (சபையைத் தவறவிட்டு, சுயாதீனமாக பாலுறவு கொள்ள விருப்பம், உன் சொந்த காரியங்களைச் செய்ய விருப்பம்). அதன்பிறகு அங்கே பிசாசு இருக்கிறான். மறுபக்கத்தில், பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். அவர் உனது மனசாட்சியில் அமர்ந்த மெல்லிய சத்தமாக பேசுகிறவராக இருக்கிறார். இயேசுவிடம் வரும்படியாக மற்றும் இந்த ஸ்தல சபைக்கு வரும்படியாக அவர் உன்னை அழைக்கிறார். அதனால், உனது ஆத்துமாவுக்கு ஒரு போராட்டம் இருக்கிறது. தேவன் ஒரு பக்கம் உன்னை அழைக்கிறார் – மற்றும் பாவம் மற்றும் உலக இன்பம் மறுபக்கம் உன்னை அழைக்கிறது. வேதாகமம் சொல்லுகிறது, “யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் [அமெரிக்கர்களின்] தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்” (யோசுவா 24:15). நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது. துர்ரதிர்ஷ்டவசமாக, உங்களில் அதிகமானவர்கள் தவறான தேர்வைத்தான் தெரிந்து கொள்ளுகிறீர்கள். என்னுடைய 60 வருட ஊழிய அனுபவம் சொல்லுகிறது உங்களில் அதிகமானவர்கள் ஒருவேளை தவறாகத்தான் தெரிந்து கொள்ளுகிறீர்கள் என்று. வேதாகமம் சொல்லுகிறது, “ஜீவனைப்பார்க்கிலும் மரணமே விருப்பமாயிருக்கும்” (எரேமியா 8:3). உன்னைப்பற்றி என்ன? இரண்டாவதாக, நீ ஏன் சரியானதைத் தெரிந்து கொள்ள வேண்டும்? நீ ஏன் இங்கே இந்த ஸ்தல சபைக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வரவேண்டும்? நீ கிறிஸ்துவிடம் வந்து ஏன் மாற்றப்பட வேண்டும்? 1. ஏனென்றால் அது நீ வாழ்வதற்கு ஒரு காரணத்தைக் கொடுக்கும். 2. ஏனென்றால் அது உனது தோல்வியை மாற்றி திருப்பும். கிறிஸ்துவை கண்டு கொண்ட ஒருவரும் தோல்வி அடைவதில்லை. 3. ஏனென்றால் அது எதிர்காலத்துக்கு உனக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். 4. ஏனென்றால் அது உனது குற்றத்தை எடுத்துப்போடும் மற்றும் உன்னை ஒரு அபரிமிதமான, சமாதானமான வாழ்க்கைக்கு நடத்தும். சபினா வாம்பிராண்டு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட எல்லா சோதனைகளிலும் ஒரு பிரகாசமான, மகிழ்ச்சி புன்சிரிப்புள்ள ஸ்திரியாக இருந்தாள் ஏனென்றால் அவள் இயேசு கிறிஸ்துவை தனிப்பட்ட விதத்தில் அறிந்திருந்தாள். நாம் ஒரு சுதந்தரமான பாப்டிஸ்டு சபை என்று அறியப்படுவதற்கு அநேக காலத்துக்கு முன்பாகவே சபினா நமது சபையைச் சேர்ந்தவராக இருந்தார். எனது மனைவியும் நானும் போதகர் மற்றும் திருமதி வாம்பிராண்டு அவர்களோடு அவர்களுடைய அப்பார்ட்மெட்டில் விருந்து உண்டோம். அவள் கிறிஸ்துவின் நிமித்தமாக எல்லாவற்றையும் தியாகம் செய்தாள். ஆனால் நான் எப்பொழுதும் அறிந்த ஸ்திரிகள் எல்லாரையும்விட அவள் மிகவும் மகிழ்ச்சி உள்ளவர்களில் ஒருத்தியாக இருந்தாள். சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கே இருந்தவர்களில் யாரையாவது கேளுங்கள்! இப்பொழுது பரலோகத்தில் உள்ள, சபினா வாம்பிராண்டை பற்றிக் கேளுங்கள்! அது உண்மை என்று சொல்லுவார்கள்! இந்த ஸ்தலசபையில் இருக்க வேண்டுமா மற்றும் மாறுபட வேண்டுமா என்பதை நீதான் தெரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் இது சரியான தெரிந்து கொள்ளுதல். அதனால்தான் உனது இருதயத்தில் ஒரு சிறிய சத்தம் சொல்லுகிறது, “அவர் சரியானவர் என்று நீ அறிந்துகொள்” என்று. அதன்பிறகு, மூன்றாவதாக, நீ கிறிஸ்தவ வாழ்க்கை வாழவிரும்பினால் விட்டுவிட வேண்டிய காரியங்கள் உண்டு மற்றும் செய்ய வேண்டிய காரியங்களை ஆரம்பிக்க வேண்டும் என்பதை நான் உனக்குச் சொல்ல வேண்டியது அவசியமாகும். இயேசுவானவர் சொன்னார்: “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொணடு; என்னைப் பின்பற்றக்கடவன்” (மத்தேயு 16:24). நீ வேதாகமத்துக்கு வரும்பொழுது தேவன் மொத்தமான அர்ப்பணிப்பைக் கேட்கிறார் என்பதை நீ காண்பாய். ஆபிரகாமிடத்தில் தேவன் எதைக் கேட்டார் என்று பாருங்கள். ஒரு நாள் தேவன் சொன்னார், “ஆபிரகாமே, நீ மோரியா மலைக்குப் போகவேண்டும் மற்றும் இத்தனை ஆண்டுகளாக காத்திருந்து பெற்ற, இந்த உலகத்திலே நீ எல்லாவற்றையும்விட மிகவும் அதிகமாக நேசிக்கும், உனது சிறிய குமாரனை எடுத்து செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன், மற்றும் அவனை ஒரு பலிபீடத்தில் பலியிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று சொன்னார். ஆபிரகாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்தான் மற்றும் புறப்பட்டு சென்று தனது மகனைப் பலிபீடத்தின்மேல் வைத்து ஒரு நீண்ட கருக்கான கத்தியை எடுத்துத் தேவனுக்குக் கீழ்ப்படிந்தவனாக தன் மகனின் இதயத்தின் மீது கத்தியை ஓங்கினான். ஆனால் தேவன் அவனை மத்திய வானத்திலிருந்து தடுத்து நிறுத்திவிட்டார். தேவன் சொன்னார், “ஆபிரகாமே, இம்மட்டும் போதும். நீ என்னோடு வழியெல்லாம் வரத் தயாராக இருக்கிறாய் என்று இப்பொழுது எனக்குத் தெரிந்தது”. அல்லது மோசேயை எடுத்துக்கொள்ளுங்கள். மோசே பார்வோனுடைய குமாரத்தியினால் சீராட்டி வளர்க்கப்பட்ட மகன். அவன் எகிப்தின் சிங்காசனத்துக்கு வாரிசாக இருந்தவன். அவனுடைய நாட்களில் இருந்த உலகத்தின் பெரிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக மாறத்தகுதி வாய்ந்தவன். ஒரு மனிதன் பெறக்கூடிய எல்லா செல்வமும் எல்லா வல்லமையும் எல்லா மகிமையும் அவன் பெற்றிருந்தான். ஆனால் மோசே தேவனுடைய மக்களோடு பாடனுபவிக்கத்தக்கதாக அவைகளுக்கெல்லாம் தனது முதுகைத் திருப்பினான். அவனைத் தேவன் உபயோகபடுத்தத்தக்கதாக மோசே அவை எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்று சொன்னார். அதன்பிறகு வனாந்திரத்தின் பின்பக்கம் அவனை வைத்துப் பயிற்சி கொடுத்து, ஜெபிக்கவும், மற்றும் படிப்பினையைக் கற்றுக்கொள்ளவும் செய்தார். அல்லது யோசேப்பைப் பாருங்கள். யோசேப்பு தனது சகோதரர்களால் ஒரு அடிமையாக விற்கப்பட்டான். அவன் போத்திபார் என்ற ஒரு எகிப்தியனிடம் வேலை செய்ய வேண்டியதாக இருந்தது. அவன் தனது குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் தூரமாக இருந்தான். அவன் வாலிபனாக இருந்தான். அவன் ஒத்துப்போயிருக்க முடியும். அதைத் தேவன் தவிர, ஒருவரும் அறிந்திருக்க முடியாது. மற்றும் போத்திபாரின் மனைவி மிகவும் அழகுள்ளவளாக இருந்தாள். அவளோடு பாலுறவு கொள்ள அவனை வற்புறுத்தி முயற்சி செய்தாள். போத்திபாரின் மனைவியின் துணையினால் அவன் இராஜ்ஜியத்தில் முன்னேற்றம் அடைய முடியும் என்று அவனுக்குத் தெரியும் – ஆனால் அவன் அதை மறுத்து விட்டான். அவள் அவனை பிடித்து இழுத்தபோது அவன் தனது தளர்ச்சியான அங்கியை விட்டு ஓடிப்போனான். அது அவனுக்கு சிறையையும் மரண தண்டனையையும் கொடுத்தது. அவன் மெய்யாகவே அதை அர்த்தப்படுத்துகிறவ னாக இருக்கிறானா என்று பார்க்க தேவன் அந்த இளம் மனிதனைச் சோதித்தார். அதன்பிறகு சிறையிலிருந்து அவன் விடுவிக்கப்பட்டு எகிப்தின் உயர்ந்த பதவியின் இரண்டாம் இடத்துக்கு உயர்த்தப்பட்டான். “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொணடு; என்னைப் பின்பற்றக்கடவன்” (மத்தேயு 16:24). அல்லது தானியேலை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் சொன்னார்கள், “தானியேலே, இனிமேலும் நீ பாபிலோனில் ஜெபிக்கக்கூடாது. அப்படி ஜெபித்தால், நீ சிங்கங்களின் கெபியிலே போடப்படுவாய்”. ஆனால் தானியேல் ஜன்னல்கள் திறந்திருக்க ஒரு நாளைக்கு மூன்று வேளையும் ஜெபித்தார். அவர் அந்த நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தாலும், அவர்கள் அவரைச் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள். தேவன் அந்தச் சிங்கங்களின் வாயைக் கட்டிவிடுவார் என்று தானியேலுக்குத் தெரியாது. கிரயத்தைக் கொடுக்க வேண்டும் என்று தேவன் அவரை அழைத்துக் கொண்டிருந்தார் மற்றும் அதை செய்ய அவர் சித்தமாக இருந்தார். இந்த மாலையிலே இயேசுவானவர் உன்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார், “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொணடு; என்னைப் பின்பற்றக்கடவன்” (மத்தேயு 16:24). இதன் பொருள் என்னவென்றால் நீ மற்ற மக்களுக்கு வித்தியாசமாக மாறவேண்டும் என்பதாகும். இன்று அநேக மக்கள் ஒன்றுபோலவே உடை உடுத்துகிறார்கள். அவர்கள் ஒன்றுபோலவே காணப்படுகிறார்கள். அவர்கள் ஒன்றுபோலவே நடிக்கிறார்கள். அவர்கள் வித்தியாசமாக இருக்க பயப்படுகிறார்கள். தங்கள் தலைகளைச் சிறைத்துத் தங்கள் மூக்கில் வளையத்தை போட்டுக்கொள்ளும் நண்பர்கள் உனக்கு இருந்தால், நீயும்கூட அப்படியே உன் தலையைச் சிறைத்து உனது மூக்கில் வளையத்தைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாய் – அதனால் வித்தியாசமாக காணப்பட நீ விரும்பவில்லை – அதனால் நீ அவர்களோடு பொறுந்திவிடுகிறாய். ஆனால் வேதாகமம் உன்னை வேறுவிதமாக இருக்க அழைக்கிறது – அந்தத் திரளிலிருந்து வெளியே வந்து மனதளவில் மற்றும் ஆவிக்குரிய விதத்தில் ஒரு ஒத்துப்போகாதவராக நீ மாறவேண்டும் என்று அழைக்கிறது. மற்றவர்கள் தேவன் இல்லை என்று சொல்லும்பொழுது அல்லது தேவனைப்பற்றி கவலை இல்லை என்று சொல்லும்பொழுது, நீ தேவன் இருக்கிறார் அவர் எனக்கு பொறுத்தமானவர் மற்றும் தேவன் எனது வாழ்க்கையின் மையமாக இருக்கிறார் என்று நீ விருப்பத்தோடு சொல்லி நிமிர்ந்து நிற்க வேண்டியது அவசியம்! சபினா வாம்பிராண்டு அதை செய்தாள், அவளுடைய இரண்டு சகோதரர் மற்றும் சகோதரி, அவளுடைய பெற்றோர் எல்லோரும் 2ஆம் உலக யுத்தத்தில் ரொமேனியாவிலிருந்து யூதர்களைக் கடத்திக் கொண்டு வந்ததால் ஹிட்லருடைய ஒருமுகபடுத்தப்பட்ட முகாம்களால் சிரச்சேதம் செய்யப்பட்ட பொழுது சபினா வாம்பிராண்டு அதை செய்தாள். மற்றவர்கள் சொல்லும்பொழுது, “அந்த பாப்டிஸ்ட் சபைக்குத் திரும்ப போக வேண்டாம். என்னோடு வா. நாம் வேறு எங்காவது போவோம்,” நீ விருப்பத்தோடு சொல்ல வேண்டும், “இல்லை. நான் திரும்ப அங்கே போகிறேன். எனக்குத் தேவன் வேண்டும். என்ன கிரயங்களானாலும் பரவாயில்லை எனக்கு இயேசு கிறிஸ்து வேண்டும்! அந்த மூலதத்துவ பிரசங்கியார் சொல்வதை நான் கேட்க விரும்புகிறேன். அந்த பாப்டிஸ்டு ஆசாரிப்புக்கூடார மக்கள் பெற்றிருப்பதை நான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்!” நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் போதனைக்கு முன்னதாக தனிப்பாடல் பாடியவர் திரு. ஜேக் நான்: |