இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
சீனாவின் வெற்றியின் இரகசியம்
|
ஒரு சீன கிறிஸ்தவ குடும்ப ஆட்சி தலைவராகிய வரலாற்று ஆசிரியர் சொன்னார், சீன அரசாங்கம் எந்தக் கொள்கையைப் பின்பற்றுகிறது என்பதைக் கவனிக்காமல், வரப்போகும் தலைமுறைக்கு உலகளவில் உள்ள கிறிஸ்தவத்துக்கு ஆழ்ந்த செயல் தூண்டும் வடிவ நிலையைச் சீனாவில் உள்ள சபை உருவாக்கி இருக்கிறது. [ஏறக்குறைய] எழுபது மில்லியன் ஆத்துமாக்கள் [இப்பொழுது 160 மில்லியன்] மற்றும் வருடத்துக்கு 7 சதவீத வளர்ச்சியோடு, இந்தப் பூமியிலுள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சீனாவிலுள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையைவிட குறைவானதாகும். இருபத்தியோராம் நூற்றாண்டின் சபையில் வளர்ந்துவரும் நாடுகள் முழுவதிலுமுள்ள கிறிஸ்தவர்களைப்போல, சீன கிறிஸ்தவர்களும் முன்னணி படைகளாக [முதல் தரத்தில்] இருக்கிறார்கள் (Thomas Alan Harvey, Acquainted With Grief, Brazos Press, 2002, p. 159). டேவிட் அகிமான், Jesus in Beijing, என்ற தமது புத்தகத்தில், சொன்னார், எண்ணிக்கையை மட்டுமே வைத்து மதிப்பிடுவது போதாது, ஆனால் அறிவை மையமாக வைத்து மதிப்பிட வேண்டும்... கிறிஸ்தவம் ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்காவை விட்டுச் சீனா ஒரு உலகளாவிய மிகுந்த சக்தி வாய்ந்ததாக மாறியுள்ளது... சீனாவின் வீட்டுச் சபை தலைவருக்குள் இந்த நம்பிக்கை மற்றும் கிரியை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்பட்டிருக்கலாம் (David Aikman, Jesus in Beijing, Regnery Publishing, 2003, pp. 291, 292). இன்று சீனா “சபை வீட்டில்” என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்பதைப்பற்றி கிறிஸ்து சிமிர்னா சபையைப் படமாக விளக்கி காட்டுகிறார், “உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், (நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும்) உனக்கிருக்கிற தரித்திரத் தையும்… அறிந்திருக்கிறேன்” (வெளிப்படுத்தல் 2:9). சிமிர்னாவில் இருந்த சபையைப்பற்றி, டாக்டர் ஜேம்ஸ் ஓ. கோம்பஸ் சொன்னார், சிமிர்னா, வடஎபேசுவாகிய சிமிர்னா, பாலிகார்ப் அவர்களால் பல பத்தாண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது மற்றும் அவர் கி.பி. 155ல் அவரது 90வது வயதில் ஒரு இரத்தச் சாட்சியாக மரித்தார்... உலகப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் அவர்கள் அதிகமான பாடுகள் பட்டார்கள், ஆனால் அவர்கள் ஆவிக்குரிய பணக்காரர்களாக இருந்தார்கள் (James O. Combs, D.Min., Litt.D., Rainbows From Revelation, Tribune Publishers, 1994, p. 33). சிமிர்னாவிலிருந்த சபையைப்போல, சீனாவில் உள்ள உண்மையுள்ள வீட்டுச் சபைகளின் தலைவர்களான கிறிஸ்தவர்கள் மிகுந்த உபத்திரவங்கள் மற்றும் “பாடுகளை” அடைந்தார்கள் இருந்தாலும் அவர்கள் ஆவிக்குரிய “பணக்காரர்களாக” இருக்கிறார்கள் அவர்களுடைய சுவிசேஷ ஊழியம் “வருடத்துக்கு 7 சதவீத” வளர்ச்சியைக் கொடுக்கிறது (Thomas Alan Harvey, ibid.). இவ்வாறாக, சீனாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை “இந்தப் பூமியின் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டது.” 160 மில்லியனுக்கும் அதிகமான சீன கிறிஸ்தவர்கள் உண்மையாக மனந்திரும்பினவர்கள் என்று நான் நினைக்கிறேன், மற்றும் ஐக்கிய நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்களைவிட அதிகமான உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் ஏற்கனவே சீனாவில் இருக்கிறார்கள். அது மலைக்க வைக்கிறது! நாம் நம்மையே ஏன் கேட்கக் கூடாது, “அவர்களுடைய வெற்றியின் இரகசியம் என்ன? அவர்களுடைய சுவிசேஷ ஊழியத்தின் இரகசியம் என்ன?” அவர்களைப் பற்றி ஏன் இவ்வாறாகச் சொல்லக்கூடாது, “உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், (நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும்) உனக்கிருக்கிற தரித்திரத் தையும்… அறிந்திருக்கிறேன்” (வெளிப்படுத்தல் 2:9). அந்த உண்மையை நாம் ஆராய்ந்து பார்க்கும்பொழுது அமெரிக்காவில் சுவிசேஷக கிறிஸ்தவம் வளரவே இல்லை, மற்றும் மரித்துக்கொண்டிருக்கிறது என்று அநேகர் சொல்லுகிறார்கள், அமெரிக்காவில் இருக்கும் நாம் அவர்களிடம் இல்லாதது நம்மிடம் என்ன இருக்கிறது, மற்றும் நம்மிடம் இல்லாதது அவர்களிடம் இருப்பது என்ன என்று நாம் சிந்திக்க வேண்டும். + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + I. முதலாவதாக, அவர்களிடம் இல்லாதது நம்மிடம் என்ன இருக்கிறது. அவர்களுக்குச் சபை கட்டிடங்கள் இல்லை! “மூன்று சுய” சபைகளுக்கு மட்டுமே கட்டிடங்கள் உள்ளன. ஆனால் வளர்ந்துவரும் “வீட்டு சபைகளுக்கு,” ஒரு சில சபை கட்டிடங்கள் மட்டுமே உள்ளன. நமக்கு இருப்பதைபோல சபை கட்டிடங்கள் அவர்களில் அதிகமானவர்களுக்கு இல்லை! அவர்களுக்கு அரசாங்க அனுமதி இல்லை. அவர்கள் சீன அரசாங்கத்தால் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு இருப்பதுபோல மதசுதந்திரம் அவர்களுக்கு இல்லை! நமக்கு இருப்பதுபோல போதகர்களைப் பயிற்றுவிக்க செமினரிகள் அவர்களுக்கு இல்லை. சீனாவில் போதகர்களைப் பயிற்றுவிக்க ஒருவருடைய வீட்டில்தான் – மற்றும் அதிமான ஊடுவழியாக அல்ல மற்றும் மிக குறுகிய காலமே போதகர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள். அவர்களால் முடிந்தவரையிலும் “ஓட்டத்திலே” பயிற்சியைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள். ஞாயிறுபள்ளி கட்டிடங்கள் அவர்களுக்கு இல்லை. “பேருந்து ஊழியங்களுக்காக” பேருந்துகள் அவர்களுக்கு இல்லை. “கிறிஸ்தவ தொலைக்காட்சிகள்” அவர்களுக்கு இல்லை. “கிறிஸ்தவ வானொலிகள்” அவர்களுக்கு இல்லை. கிறிஸ்தவ வெளியீட்டு வீடுகள் அவர்களுக்கு இல்லை. “பவர் பாயின்ட்களுக்காக” சாதனங்கள் அவர்களுக்கு இல்லை. பிரசங்கிகளைப் பெரிய திரையில் காட்டும் டிவி புரஜக்டர்கள் அவர்களுக்கு இல்லை. “கிறிஸ்தவ பாடல் குழுக்கள்” அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு ஆர்கன்கள் இல்லை, மற்றும் வழக்கமாக பியானோக்கள்கூட அவர்களுக்கு இல்லை. அச்சிடப்பட்ட ஞாயிறு பள்ளி உபகரணப் பொருட்கள் அவர்களுக்கு இல்லை. அவர்களிடம் ஒவ்வொருவருக்கும் வேதாகமம், அல்லது பாட்டுப் புத்தகங்கள்கூட அடிக்கடி இருப்பதில்லை. இல்லை, நமக்கு உள்ளவைகள் அவர்களுக்கு இல்லை! அதற்குப் பதிலாக, அவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து சிதறலான உபத்திரவங்கள் மற்றும் பாடுகள் உள்ளன. அவர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால் சில நேரங்களில் சிறைக்குப் போகவேண்டியதாக இருக்கிறது. தீவிரமாக கிறிஸ்தவர்களாக மாறும் எவருக்கும் எப்பொழுதும் பயமுறுத்தல் இருக்கிறது! சீனாவில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு உண்டாகும் பாடுகளைப்பற்றி படிக்க www.persecution.com என்ற வலைதளத்துக்கு செல்லுங்கள். இருந்தாலும் சீனாவில் உள்ள கிறிஸ்தவர்கள் இழக்கப்பட்ட ஆத்துமாக்களை விரிவாக வெற்றிகொள்ளுகிறார்கள். நவீனகால வரலாற்றின் மிகப்பெரிய எழுப்புதலால், சீனா முழுவதிலும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வெடித்துக்கொண்டிருக்கிறது! “உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், (நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும்) உனக்கிருக்கிற தரித்திரத் தையும்… அறிந்திருக்கிறேன்” (வெளிப்படுத்தல் 2:9). லவோதிக்கேயா சபைக்கு இயேசுவானவர் சொன்னது நல்லது என்று அமெரிக்காவில் உள்ள நமது அநேக சபைகளுக்கு விவரிக்கபடுமோ என்று நான் பயப்படுகிறேன், “நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம் பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும், சொல்லுகிறபடியால்” (வெளிப்படுத்தல் 3:17). II. இரண்டாவதாக, நம்மிடம் இல்லாதது அவர்களிடம் இருப்பது என்ன. இதோ சொல்கிறேன் இங்கே நம்மிடம் இல்லாதது அவர்களிடம் இருப்பது பற்றி. இங்குதான் அவர்களின் வெற்றியின் இரகசியம் இருக்கிறது – நமது தோல்வியின் காரணமும் அடங்கியிருக்கிறது! அவர்களுக்குப் பாடுகள் இருக்கிறது –அப்படியாக அவர்கள் சிலுவையைச் சுமக்க கற்றுக்கொள்ளுகிறார்கள்! ஜெபகூட்டத்துக்கு ஒரு வாரத்துக்கு ஒரு மாலை நேரத்தில் போவதற்கு உண்டாகும் நஷ்டத்தை தாங்கிக்கொள்ள அநேக அமெரிக்க கிறிஸ்தவர்களுக்கு விருப்பமில்லை. ஒரு வாரத்துக்கு ஒரு மாலை நேரத்தில் ஆத்தும ஆதாயம் செய்ய போவதற்கு உண்டாகும் நஷ்டத்தை தாங்கிக்கொள்ள அநேக அமெரிக்க கிறிஸ்தவர்களுக்கு விருப்பமில்லை. ஒரு ஞாயிறு மாலையில் சபையில் இருப்பதால் உண்டாகும் நஷ்டத்தை தாங்கிக்கொள்ள அதற்காக அவர்களுடைய சௌகரியத்தை இழக்க அநேக அமெரிக்க கிறிஸ்தவர்களுக்கு விருப்பமில்லை! அமெரிக்காவில் அநேக போதகர்கள் தங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும். சில கலோரிகள் நஷ்டமாவதை நாம் தாங்கிக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஆனால் சீனாவில் பிரசங்கிகள் ஒல்லியாக இருக்கிறார்கள். அதனால் அவர்களால் வல்லமையோடும் வீரியத்தோடும் பிரசங்கிக்க முடிகிறது. நாம் உடல் எடையைக் குறைக்க வேண்டும், இல்லையானால் நம்மால் வல்லமையோடும் வீரியத்தோடும் பிரசங்கிக்க முடியாது. சீனாவில் பிரசங்கிகள் ஒல்லியாக இருக்கிறார்கள் அவர்கள் பிரசங்கிக்கும்பொழுது ஆவியினால் நிறைந்திருக்கிறார்கள். அதிமான உடல் எடை உள்ள சீனபிரசங்கி ஒருவரையும் “சபை வீட்டில்” ஒருபோதும் நான் பார்க்கவில்லை. இங்கே அமெரிக்காவில் மற்றும் மேற்கத்திய உலகம் முழுவதிலும் கிறிஸ்தவம் காய்ந்துபோய், உதிர்ந்து கொண்டு இருக்கும்பொழுது, சீனமக்கள் பெரிய எழுப்புதலை அனுபவிப்பதில் ஆச்சரியமில்லை! இதற்குப் பயிற்சி எடுக்க ஒரு குறிப்பிட்ட அளவு பாடுகளை அனுபவிக்க வேண்டும். உனது உடல் எடையைக் குறைக்கும் வரைக்கும் நீ உணவை குறைத்துக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய பாடு இருக்கிறது! தேவன் விரும்பும் அந்த விதமான மனிதனாக நீ மாற பாடுகள் படவேண்டியதாக இருக்கிறது! அந்தப் பெரிய சீன சுவிசேஷகர் டாக்டர் ஜான் சங் சொன்னார், பெரிய பாடு பெரிய எழுப்புதலைக் கொண்டு வருகிறது... அவற்றின் மிகப்பெரிய உபயோகத்தைத் தேவன் பார்க்கிறார்... அவைகள் மிகவும் கஷ்டமான சூழ்நிலைகளில் சாணைபிடிக்கபட்டன... அதிக பாடுகள் அதிக பலன்களைக் கொண்டு வருகின்றன... சீஷர்களுடைய வாழ்க்கை ஒலிவ விதைகளைப் போன்றவை: எவ்வளவு கஷ்டப்பட்டு பிழிகிறோமோ, அவ்வளவு அதிகமான ஒலிவ எண்ணையை அதிலிருந்து பிழிய முடியும். பாடுகளின் ஊடாக கடந்து வந்தவர்கள் மட்டுமே தயவு இரக்கத்தை [அன்பு] மற்றும் ஆறுதலை மற்றவர்களுக்கு காட்ட முடியும் (John Sung, Ph.D., The Journal Once Lost, Genesis Books, 2008, p. 534). இயேசுவானவர் சொன்னார், “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (மத்தேயு 16:24). மறுபடியுமாக, இயேசுவானவர் சொன்னார், “உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், (நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும்) உனக்கிருக்கிற தரித்திரத் தையும்… அறிந்திருக்கிறேன்” (வெளிப்படுத்தல் 2:9). சீனாவிலே அவர்களுக்குப் பாடுகள் இருக்கின்றன! அதனால் தேவனுடைய ஆசீர்வாதத்தின் எழுப்புதல் ஐசுவரியங்கள் அவர்களுக்குக் கிடைக்கின்றன! இங்கே நமது சபையிலும் நாமும் நம்மை வெறுப்போம், மற்றும் நமது சிலுவைகளை எடுத்துக்கொள்ளுவோம் கிறிஸ்துவை பின்செல்லுவோம் – அதனால் என்ன விலைகொடுத்தாலும் பரவாயில்லை! இரண்டாவதாக, இழக்கப்பட்டவர்களுக்காக அவர்கள் ஜெபிக்கும்பொழுது கண்ணீர்கள் இருக்கின்றன! இதை அறிந்த, ஒரு சகோதரன், என்னிடம் சொன்னார், “அங்கே சீனாவில் அநேக கண்ணீர்கள் இருக்கின்றன.” அவர் சரியாக சொன்னார்! இழக்கப்பட்டவர்களுக்காக அவர்கள் ஜெபிக்கும்பொழுது அவர்கள் அழுகிறார்கள். அங்கே அநேகர் கிறிஸ்துவில் மாறுதல்கள் அடைவதில் ஆச்சரியமில்லை! வேதாகமம் சொல்லுகிறது, “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்” (சங்கீதம் 126:5). இழக்கப்பட்ட ஆத்துமாக்களுக்காக ஒரு நொறுங்குண்ட இருதயத்தைக் கொடுக்கும்படி ஜெபியுங்கள்! (அனைவரும் ஜெபித்தார்கள்). மூன்றாவதாக, அவர்கள் தங்கள் “சபை வீடுகளுக்கு” இழக்கப்பட்ட ஆத்துமாக்களைக் கொண்டுவர தங்கள் முழுசக்தியோடு உழைக்கிறார்கள். டி. எல். மூடி அவர்கள் சொன்னார்கள், “அவர்களை உள்ளாக நேசியுங்கள்.” அவ்விதமாகதான் சீனாவில் அவர்கள் மக்களைச் சபை வீடுகளுக்குக் கொண்டு வருகிறார்கள் – அது போல் தான் நாமும் செய்ய வேண்டும்! “அவர்களை உள்ளாக நேசியுங்கள்.” ஆத்துமாவை வெற்றி கொள்வது என்பது உண்மையில் மக்களை நேசித்து கிறிஸ்துவுக்குள் கொண்டு செல்வதாகும் – அருகிலிருக்கும் சபைக்குக் கொண்டு செல்லுதல் என்பதாகும். “அவர்களை உள்ளாக நேசியுங்கள்.” அதன் பொருள் தாராளவாதம் என்பது அல்ல! அது “வாழ்க்கை வகை” சுவிசேஷகம் அல்ல! அது டி. எல். மூடி அவர்கள்! அவர் மிக சரியாக சொன்னார் என்று நான் நினைக்கிறேன். அது சீனாவில் வேலை செய்கிறது – மற்றும் அது இங்கேயும் வேலை செய்யும்! “அவர்களை உள்ளாக நேசியுங்கள்”. நாம் கூட்டங்களிலிருந்து விரைவாக வெளியேறுவோமானால் ஆத்துமாக்களை நாம் ஆதாயம் செய்ய முடியாது. தயங்குபவர்கள் மட்டுமே ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய முடியும். கூட்டத்துக்கு முன்பாகவும் மற்றும் கூட்டத்துக்கு பிறகும் இழக்கப்பட்டவர்களோடு நட்பாக இருப்பவர்கள் மட்டுமே ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய முடியும். இழக்கப்பட்ட ஆத்துமாக்களை ஒரு சபையிலே சேர்க்க வேறு எந்தவழியும் கிடையாது! நாம் “அவர்களை உள்ளாக நேசிக்க” வேண்டியது அவசியம் – சீனாவில் செய்வதுபோல! “ஆசீர்வாதத்தின் ஒரு ஊற்றாக என்னை மாற்றும்” என்ற பாடலைப் பாடுங்கள்! இது உங்கள் பாட்டுத்தாளில் 4வது பாடலாகும். ஆசீர்வாதத்தின் ஒரு ஊற்றாக இன்று என்னை மாற்றும், இதுவரையிலும் மனந்திரும்பாதவர்களுக்காக ஒரு சில வார்த்தைகளைச் சொல்லாமல் இந்தக் கூட்டத்தை நான் முடிக்கமாட்டேன். சபைக்கு வருவதினால் நீ மனந்திரும்பி விட்டாய் என்பது அர்த்தமல்ல. வேதாகமத்தைப் படிப்பது மட்டுமே உன்னை மனந்திரும்ப செய்யாது. நீ உனது பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு மனந்திரும்ப வேண்டியது அவசியமாகும். நீ இயேசு கிறிஸ்துவிடம் திரும்பி அவரிடம் வரவேண்டும். உனது ஆத்துமாவை இரட்சிக்க அவர் சிலுவையிலே வேதனையோடு இரத்தம் சிந்தி மரித்தார். அவருடைய இரத்தத்தின் மூலமாக உன்னுடைய பாவங்களைக் கழுவி சுத்திகரித்துகொள்ள வேண்டியது அவசியமாகும். நீ இயேசுவிடம் வா மற்றும் பாவம், மரணம் மற்றும் நரகத்திலிருந்து இரட்சிக்கப்படு. இது உன்னுடைய அனுபவமாக இருப்பதாக, என்பது என்னுடைய ஜெபமாகும். ஆமென். நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் போதனைக்கு முன்னதாக தனிப்பாடல் பாடியவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: “Jesus Loves Me” (Anna B. Warner, 1820-1915). |
முக்கிய குறிப்புகள் சீனாவின் வெற்றியின் இரகசியம் THE SECRETOF SUCCESS IN CHINA டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் “உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், (நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும்) உனக்கிருக்கிற தரித்திரத் தையும்… அறிந்திருக்கிறேன்” (வெளிப்படுத்தல் 2:9). I. முதலாவதாக, அவர்களிடம் இல்லாதது நம்மிடம் என்ன இருக்கிறது, வேளிப்படுத்தல் 3:17. II. இரண்டாவதாக, நம்மிடம் இல்லாதது அவர்களிடம் இருப்பது என்ன, மத்தேயு 16:24; சங்கீதம் 126:5. |