இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
டாக்டர் ஜான்சங் அவர்களின் மெய்யான மனந்திரும்புதல்
|
ஜூன் 4ந்தேதி, 2018 “டையானான்மன் ஸ்கொயர் படுகொலை”இன் இருபத்தி ஒன்பதாவது ஆண்டு நிறைவாக குறிக்கப்பட்ட நாளாகும். 1989ல் ஆயிரக்கணக்கான சீன மாணவர்கள், ஆறு வாரங்களாக அதிக சுதந்தர எண்ண அழைப்புக்காக, செயல்முறை விளக்கங்களைச் சமாதானமாக கொடுத்தார்கள். பிறகு, ஜூன் 4ன் ஆரம்ப மணி நேரத்தில், அரசாங்கத் தரைபடையினர் செயல்முறை விளக்கம் அளித்த ஆயுதமற்றவர்கள்மீது துப்பாக்கி சூடு நடத்தி ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றார்கள், மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் அதிகமாக காயம் அடைந்தார்கள். ஆங் யூஜியான் அவர்கள் ஒரு பெனிசில்வானியா பல்கலைகழகப் பரிமாற்று மாணவராக இருந்தபொழுது இந்தக் கொடுமை வெளியிடப்பட்டதை பீஜீங்கில் தொலைக்காட்சியில் கவனித்தார். அந்த டையானான்மன் ஸ்கொயர் படுகொலை அவருடைய அறிவியல் மற்றும் அரசியல் மீதிருந்த நம்பிக்கையைக் கேள்விகுறியாக்கி அவரை ஒரு கிறிஸ்தவராக மாறும்படி செய்தது என்று அவர் சொன்னார். அந்த டையானான்மனில் நடந்த படுகொலை அவருக்கும் மற்றும் மற்றவர்களுக்கும் தங்கள் பாவங்களைப் பார்க்கும்படிக்கும் மற்றும் கிறிஸ்துவின் தேவையை உணரும்படிக்கும் உதவி செய்தது என்று அவர் சொல்லுகிறார்: “சீன மக்களின் இருதயத்தை ஆயத்தப்படுத்தவும் மற்றும் அந்த வழியை உண்டாக்கவும் தேவன் இதை உபயோகப்படுத்தினார் என்று நான் நினைக்கிறேன்” (World Magazine, June 6, 2009, p. 38). “எல்லாம் இயேசுவுக்காக.” அந்தப் பாடலைப் பாடுங்கள்! எல்லாம் இயேசுவுக்காக! எல்லாம் இயேசுவுக்காக! உலகச் செய்திதாள்கள் சொன்னது, சீனாவில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி வேகம் கடந்த 20 ஆண்டுகளில் அதிகமாக தள்ளிவிடப்பட்டுள்ளது. வேகமாக நகரமயமாக்கும் வல்லுனர்கள் மற்றும் செல்வாக்குமிக்க சிந்தனையாளர்கள் அதிக எண்ணிக்கையில் கிறிஸ்துவை தழுவினார்கள் (ibid.). 1949ல், கம்யுனிஸ்டுகள் சீனாவை எடுத்துக்கொண்டபொழுது, 1 மில்லியனுக்கும் குறைவான சீன கிறிஸ்தவர்கள்தான் இருந்தார்கள். இன்று 160 மில்லியனுக்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் சீனாவில் இருக்கிறார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது! இப்பொழுது அதிகமான கிறிஸ்தவர்கள் சீனாவில் ஞாயிற்றுக்கிழமையில் சபையில் இருக்கிறார்கள் அமெரிக்கா, கனடா, கிரேட் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா அனைத்திலும் உள்ள கிறிஸ்தவர்களைவிட! டாக்டர் சி. எல். கேஹன் அவர்கள், ஒரு புள்ளிவிபரத் தொகுப்பாளரானவர், கணக்கிட்டபடி சீனாவில் ஒரு நாளைக்கு 24 மணிநேரமும், ஒவ்வொரு மணி நேரத்திலும் 700 பேர், கிறிஸ்தவத்துக்கு மாற்றப்படுகிறார்கள். “எல்லாம் இயேசுவுக்காக.” அந்தப் பாடலை மறுபடியும் பாடுங்கள்! எல்லாம் இயேசுவுக்காக! எல்லாம் இயேசுவுக்காக! எல்லா இடங்களிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்குச் சீனாவில் கிறிஸ்தவத்தின் வரலாறு மிகவும் கவர்ச்சியூட்டும் வகையில் இருக்கபோகிறது. சீனாவில் நவீன மிஷனரி இயக்கம் ராபர்ட் மார்ஷனுடன் ஆரம்பித்தது (1782-1834). ராபர்ட் மார்ஷன் 1807ல் லன்டன் மிஷனரி சொசைடி மூலமாக சீனாவுக்கு அனுப்பப்பட்டார். அவரது உடன் வேலையாள், வில்லியம் மில்னி மூலமாக உதவி பெற்றவராக, அவர் 1821ல் முழுவேதாகமத்தையும் சீனமொழியில் மொழி பெயர்த்தார். அவர் சீனாவில் இருந்த 27 வருட காலத்தில் ஒரு சில சீனர்கள் மட்டுமே ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் – அவர்கள் அனைவரும் உண்மையுள்ள கிறிஸ்தவர்களாக இதுவரையிலும் நிலைத்திருக்கிறார்கள். மார்ஷன் மொழிபெயர்த்த சீன வேதாகமம், மற்றும் சுவிசேஷ இலக்கிய அச்சுக்கள், சீனாவில் சுவிசேஷ கிறிஸ்தவத்தின் அஸ்திபாரமாக மாறியது. 1853ல் ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர் என்ற, ஒரு ஆங்கில மருத்துவ டாக்டர், சீனாவுக்குச் சென்றார். 1860ல் அவர் சீன இன்லேன்டு மிஷனை ஏற்படுத்தினார், இப்பொழுது அது ஓவர்சீஸ் மிஷனரி பெலோசிப் என்று அறியப்படுகிறது. டாக்டர் டெய்லருடைய கூட்டாளிகள் கிறிஸ்தவத்தை சீனாவின் உட்பகுதிகள் முழுவதிலும் பரப்பினார்கள். ஹட்சன் டெய்லர் அவர்கள் சங்ஷாவில் 1905ல் மரித்தார். 1901ல் ஜான் சங் அவர்கள் பிறந்தார்கள். அவர் சீன சரித்திரத்தில் மிகப்பெரிய சுவிசேஷகர் என்று அறியபட்டவராக மாறினார். அவருடைய பிரசங்கத்தின் மூலமாக மனந்திரும்பினவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் 1949ல் கமினிஸ்டுகள் சீனாவை ஆண்டபொழுது உண்மையுள்ளவர்களாக நிலைத்திருந்தார்கள். கடந்த 60 ஆண்டுகளில் நவீன வரலாற்றின் மிகப்பெரிய கிறிஸ்தவ எழுப்புதலில் சீனாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டது. இந்தக் காலையில் டாக்டர் ஜான் சங் அவர்களின் குறிப்பிடத்தக்க கதையை உங்களுக்குச் சொல்லப்போகிறேன். அவருடைய வாழ்க்கையை டாக்டர் எல்ஜின் எஸ். மோயர் அவர்களின் எழுத்திலிருந்து வெளிகோடு கொடுத்து நான் ஆரம்பிக்க போகிறேன். ஜான் சங் அவர்கள் (1901-1944), தேச புகழ்பெற்ற சீன சுவிசேஷகர் ஆகும்; அவர் இன்ங்வாவில், புக்கின், சீனாவில்; ஒரு மெத்தடிஸ்ட் போதகருக்கு மகனாக பிறந்தார். [ஒன்பது வயதில் ஒரு பொய்யான “மாறுதலை” அடைந்தார்.] அவர் புத்திசாலியான மாணவன், வெஸ்லியான் பல்கலைகழகம், ஓகியோ ஸ்டேட் பல்கலைகழகம், மற்றும் யூனியன் தியோலஜிகல் செமினரியில் படித்தார். வேதியலில் Ph.D. பட்டம் பெற்றார். சீனாவுக்குத் திரும்பிய அவர் அறிவியல் போதிப்பதற்குப் பதிலாக சுவிசேஷத்தை பிரசங்கித்தார். சீனா முழுவதும் மற்றும் சுற்றியுள்ள நாடுகளிலும் ஒப்பற்ற வல்லமையோடும் செல்வாக்கோடும் பதினைந்து வருடங்கள் சுவிசேஷத்தை பிரசங்கித்தார் (Elgin S. Moyer, Ph.D., Who Was Who in Church History, Moody Press, 1968 edition, p. 394). “எல்லாம் இயேசுவுக்காக.” அந்தப் பாடலை மறுபடியும் பாடுங்கள்! எல்லாம் இயேசுவுக்காக! எல்லாம் இயேசுவுக்காக! டாக்டர் ஜான் சங் அவர்களது வாழ்க்கையில் அது ஒரு சுருக்கமான வரைபடம் ஆகும். அவர் ஒன்பது வயதில் மாற்றப்பட்டார் என்பதை நான் விசுவாசிக்கவில்லை. அவர் மாற்றப்பட்டார் என்பதை நான் விசுவாசிக்கவில்லை பிப்ரவரி, 1927 வரையிலும். அவருடைய 26வது வயதில் அமெரிக்காவில் ஒரு ஆவிக்குரிய நெருக்கடியின் ஊடாக போகும் வரையிலும் அவர் மனந்திரும்பவில்லை என்று டாக்டர் சங் சொன்னார். அவருக்கு ஒன்பது வயது இருக்கும்போது ஹிங்வாவில் ஒரு எழுப்புதல் ஏற்பட்டது. ஒரு மாதத்துக்குள்ளாக 3,000 பேர் கிறிஸ்துவில் விசுவாசம் உள்ளவர்களாக வெளிப்படையாக அறிவித்தார்கள். புனித வெள்ளி அன்று காலையில் “கெத்சமெனே தோட்டத்தில் இயேசு” என்ற ஒரு போதனையை அவர் கேட்டார். பிரசங்கியார் பயமில்லாதிருந்த இயேசுவோடு தூங்கும் சீஷர்களின் முற்றிலும் மாறுபட்ட தன்மையைக் குறித்துப் பிரசங்கித்தார். போதனையின் முடிவில் அநேக மக்கள் துக்கப்பட்டு அழுதார்கள். அப்படி அழுதவர்கள் மத்தியில் ஒரு சீன மெத்தடிஸ்டு பிரசங்கியின் ஒன்பது வயது மகன், ஜான் சங் அவர்களும் இருந்தார். ஜான் சங் அந்த நேரத்தில் மெய்யாக மனந்திரும்பினதாக இல்லை ஆனால் தனது வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு “அர்ப்பணிப்பு” செய்ததாக இது காணப்படுகிறது. சீன பாப்டிஸ்டு சபையின் எனது முன்னாள் போதகர், டாக்டர் தீமோத்தேயு லின் (அவருடைய அப்பாவும் ஒரு பிரசங்கியாராக இருந்தார்கள்), அவர்களைபோல ஜான் சங் அவர்கள் பதிமூன்று வயதில் பிரசங்கிக்க ஆரம்பித்தார் மற்றும் அவருடைய அப்பாவுக்கு உதவியாக இருந்தார். ஆனால், அதேபோல டாக்டர் லின், அவர்களும் இன்னும் உண்மையான மனந்திரும்புதலை அனுபவிக்கவில்லை. ஜான் சங் அவர்கள் ஒரு புத்திசாலியான மாணவன் மற்றும் டாப் கிலாசில் உயர் பள்ளியை முடித்தவர். அந்தச் சமயத்தில் அவர் “சின்ன போதகர்” என்று அறியப்பட்டார். ஆனால் அவருடைய வைராக்கிய வாஞ்சை மற்றும் செயல்பாடுகளால் அவரது இருதயம் முழுமையாக திருப்தி அடையவில்லை. அவர் ஊழியத்தில் செய்து கொண்டிருந்த வேலையைப்பற்றி “ஒரு கிங்பிஸ்ஸரின் இறகு கண்களைக் கவர்ந்து இழுக்கிற நீலத்தைபோல, திரளான வேனிற்கால இலைகொத்தாக இருந்தாலும், கர்த்தராகிய இயேசுவுக்குப் பரித்துக் கொடுக்க ஒரு புதிய கனியும் இல்லை” என்று அவர் வர்ணித்தார் (Leslie T. Lyall, A Biography of John Sung, China Inland Mission, 1965 edition, p. 15). 1919ல் சங் அவர்கள், தனது 18வது வயதில், அமெரிக்கா போவதற்குத் தீர்மானம் செய்தார், மற்றும் அவருக்கு ஓகியோ வெஸ்லியான் பல்கலைகழகத்தில் இலவச கல்வி தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. அவர் ஒரு முன் மருத்துவ மற்றும் முன் இறையியல் பாடத்திட்டத்தை ஆரம்பித்தார், ஆனால் முன் இறையியல் பாடத்திட்டத்தை விட்டுவிட்டார் மற்றும் கணிதத்தையும் வேதியலையும் சிறப்புப் பாடமாக்க தீர்மானித்தார். அவர் ஒழுங்காக சபைக்குச் சென்றார் மற்றும் மாணவர்கள் மத்தியில சுவிசேஷ பாண்டுகளை நடத்தினார். ஆனால் அவருடைய கடைசி காலகட்டத்தில் அவர் வேத ஆராய்ச்சி மற்றும் ஜெபத்தை புறக்கணிக்க ஆரம்பித்தார், மற்றும் அவரது தேர்வு தாள்களில் ஒன்றில் ஏமாற்றினார். 1923ல் அவர் பட்டமும் பாராட்டும் பெற்றார், முன்னூறு மாணவர்கள் அடங்கிய வகுப்பில் நான்கு பேரில் ஒருவராக தலைமை இடத்தை பெற்றார். அவருக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது மேலும் இயற்பியல் மற்றும் வேதியலுக்காக ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. அவர் பை பீட்டா காப்பா தோழமைக்காக தேர்வு செய்யப்பட்டார், பிறரை வியக்கவைக்கும் சங்க முன்னணி அறிஞர்களில் ஒருவராக அவர் தேர்வு செய்யப்பட்டார், மற்றும் அவருக்கு ஒரு பொன் சாவி, ஒரு தனிசிறப்பு மிக்க பெரிய உதவித்தொகை அடையாள சின்னம் வழங்கப்பட்டது. இப்பொழுது அவருக்கு அநேக பல்கலைகழகங்கள், ஹார்வார்டு பல்கலைகழகமும் சேர்ந்து உதவித்தொகை கொடுத்தன. ஓஹியோ ஸ்டேட் பல்கலைகழகத்தின் அறிவியலில் மாஸ்டர் என்ற ஒரு பட்டத்துக்காக ஒரு உதவி தொகையை அவர் ஏற்றுக்கொண்டார். அவர் இந்தப் பட்டத்தை ஒன்பது மாதங்களில் பெற்றார்! அதன்பிறகு அவருக்கு ஹார்வார்டில் மருத்துவம் படிக்க ஒரு உதவிதொகை வழங்கப்பட்டது. இறையியல் படிக்கவும் அவருக்கு மற்றொரு தன்விருப்ப கொடை கிடைத்தது. அவர் இறைமையியல் ஆய்வுத்துறையில் படிக்க வேண்டும் என்று நினைத்தார், ஆனால் அவருக்கு கிடைத்த புகழ் அவர் ஒரு ஊழியராக வேண்டும் என்ற ஆசையை மழுக்கிவிட்டது. அவர் அதற்குப்பதிலாக ஓஹியோ ஸ்டேட் பல்கலைகழகத்தின் வேதியலில் ஒரு முனைவர் திட்டத்தில் நுழைந்தார். அவர் தமது Ph.Dயை இருபத்தி ஒரு மாதங்களிலேயே பெற்றார்! இவ்வாறாக அவர் ஐக்கிய நாடுகளில் ஒரு Ph.Dயை பெற்ற முதல் சீனராக மாறினார். அவர் “ஓஹியோவின் மிகவும் புகழ்பெற்ற மாணவர்” என்று செய்தித்தாள்களில் வர்ணிக்கப்பட்டார். “ஆனால் அவருடைய இருதயத்தின் ஆழத்தில் சமாதானம் இல்லை. ஒரு ஆவிக்குரிய இளைப்பாறுதல் இன்மை காணப்பட்டது இந்தக் காலங்களில் ஆழமான மன அழுத்தம் தானாக வளர்ந்தது” (Lyall, ibid., p. 22). இந்தக் காலகட்டத்தில் அவர் லிபரல் தியாலஜி, மற்றும் அவர்களுடைய போதனையான “சமுதாய சுவிசேஷம்” என்னும் செல்வாக்கின்கீழ் வந்தார். இயேசு ஒரு உயர்ந்த உதாரணம், ஆனால் இரட்சகர் அல்ல என்று லிபரல் தியாலஜி கற்பிக்கிறது. ஜான் சங் ஒன்பது வயதாக இருக்கும்பொழுது இயேசு ஒரு “உயர்ந்த உதாரணம்” மட்டுமே என்று நினைத்தார் என்று எனக்குக் காணப்படுகிறது, அந்தக் காரணத்துக்காக அவர் அப்பொழுது ஒரு பொய்யான மாறுதல் அடைந்தார். ஆனால் தேவன் இன்னும் அவரை அழைத்துக்கொண்டே இருந்தார். ஒரு மாலையில் அவர் தனிமையாக அமர்ந்திருக்கும்பொழுது அவருக்குத் தேவனுடைய சத்தம் கேட்டது, “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” அடுத்த நாளில் அவர் ஒரு மெத்தடிஸ்டு விரியுரையாளரிடம் உரையாடினார். அவர் தொடக்கத்தில் இறையியல் படிக்கவே அமெரிக்கா வந்ததாக அந்த விரியுரையாளரிடம் சொன்னார். அதனால் அவரை நியுயார்க் சென்று மதத்தைப்பற்றிய தி எக்ஸ்டீரிமிலி தியாலஜிகலி லிபரல் யூனியன் தியாலஜிகல் செமினரியில் படிக்கும்படி அந்த விரியுரையாளர் சவாலோடு அவரிடம் சொன்னார். ஒரு வினாடி மட்டுமே தயங்கின பிறகு அங்கு போக தீர்மானித்தார். அந்த யூனியன் செமினரியில் அவருக்கு முழு உதவிதொகை மற்றும் தாராளமாக வாழும் செலவுத்தொகை கொடுக்கப்பட்டது. அவருக்கு ஊழியத்தில் விருப்பம் இல்லை, ஆனால் தமது அப்பாவைத் திருப்திபடுத்த மட்டுமே ஒருவருட தியாலஜி படிப்புப் படிக்க விரும்பினார் என்று பின்னர் அவர் சொன்னார், அதன்பிறகு அவர் ஒரு விஞ்ஞான வேலைக்குத் திரும்பினார். அவரது இருதயம் குழப்பம் மற்றும் இருள் நிறைந்ததாக இருந்தது. 1926 ன் இலையுதிர் காலத்தில் டாக்டர் ஜான் சங் யூனியன் தியாலஜிகல் செமினரியில் சேர்ந்தார். மிகவும் முற்போக்காளரான டாக்டர் ஹென்றி ஸ்லோனி கோபின் அப்பொழுதுதான் அதன் தலைவராக ஏற்படுத்தப்பட்டார். விரியுரையாளர் மத்தியில் வேதாகமத்தை விசுவாசிக்கும் கிறிஸ்துவத்துக்கு விரோதமாக அநேக புத்தகங்களின் ஆசிரியர், டாக்டர் ஹாரி எமர்சன் போஸ்டிக் போன்ற கடினனமான முற்போக்காளர்கள் இருந்தார்கள். அவர் “நவீன உபயோக வேதாகமம்” மற்றும் “எஜமானுடைய ஆண்மை” போன்ற புத்தகங்களை எழுதினார். போஸ்டிக்கின் அதிக பிரபலமான விரிவுரை “அடிப்படையாளர்கள் வெற்றி பெறுவார்களா?” (1922). போஸ்டிக் கிறிஸ்துவின் சரீர உயிர்த்தெழுதலுக்கும் வேதாகமத்தின் உண்மைக்கும் விரோதமாக ஒவ்வொரு வாரமும் தனது வானொலி நிகழ்ச்சியில் பிரசங்கம் செய்தார். அந்தச் செமினரியில் வேதாகமத்தை பரிகாசம் செய்வதும் சுவிசேஷ தியாலஜியைப் புறக்கணிப்பதுமான ஒரு வெப்ப படுக்கையாக இருந்தது. “வேதாகமத்தில் விஞ்ஞான பூர்வமாக நீதிகரிக்க முடியாத எதுவாக இருந்தாலும் அது நம்புவதற்குத் தகுதியற்றதாக தள்ளுபடி செய்யப்பட்டது! ஆதியாகமம் வரலாற்றில் இல்லாததாக மற்றும் அற்புதங்களில் நம்பிக்கை விஞ்ஞானமற்றதாக இருந்தது. சரித்திர இயேசு இலக்கிய நடையைப் பின்பற்றுபவரைபோல முன்வைக்கப்பட்டார், அவர் மாற்றாளாக மரணம் அடைந்ததின் மதிப்பு, மற்றும் அவரது சரீர உயிர்த்தெழுதல் மறுதலிக்கப்பட்டன. ஜெபம் என்பது நேரத்தை வீணடிப்பதாக கருதப்பட்டது. இப்படிப்பட்ட [அதோடு ஒத்துபோகாத] கோணங்களை இரக்கத்துக்கு ஏதுவான ஒரு பொருளாக அல்லது கேலிகூத்தாக மாறியிருந்தது” (Lyall, ibid., pp. 29-30). டாக்டர் சங் அவர்கள் தன்னுடைய லிபரல் தியாலஜி படிப்பினால் தனது புத்தியின் எல்லா வல்லமையும் சரிந்தன. அந்த வருடத்தில் அவர் உயர் கிரேடுகளைப் பெற்றார், ஆனால் அவர் புத்தக்கொள்கை மற்றும் தாய்க் கொள்கையைப் படித்தபொழுது கிறிஸ்தவத்தை விட்டு திரும்பினார். சுயவெறுப்பு அவருக்குச் சமாதானத்தைக் கொடுக்கும் என்று நம்பி, புத்தமத சுலோகங்களைத் தனது தனிமையான அறையிலே கோஷமிட ஆரம்பித்தார், ஆனால் அது சமாதானத்தைக் கொடுக்கவில்லை. அவர் எழுதினார், “எனது ஆத்துமா ஒரு வனாந்திரத்திலே அலைந்து திரிந்தது”. அவரது வாழ்க்கை அவரால் பொறுத்துக்கொள்ள முடியாததாக மாறியது. அவர் எழுதினார், “என்னால் தூங்கவும் முடியவில்லை சாப்பிடவும் முடியவில்லை... எனது இருதயம் ஆழமான மகிழ்ச்சியின்மையினால் நிறைந்திருந்தது”. அவர் தொடர்ந்த மன அழுத்த நிலையில் இருந்ததை அந்தச் செமினரியின் அதிகாரிகள் கவனித்தார்கள். இந்தவிதமான மனநிலையில் இருந்த சமயத்தில் டாக்டர் ஐ. எம். ஹால்டுமேன், வேதாகமத்தை விசுவாசிப்பவர், பண்டமென்டலிஸ்டானவர், நியூயார்கின் முதல் பாப்டிஸ்டு சபையில் போதகரானவர் போதனையைக் கேட்க மற்ற மாணவர்களோடு சென்றார். டாக்டர் ஹால்டுமேன் அவர்கள், “கன்னி பிறப்பை மறுதலிக்கிறவன் வேதாகம கிறிஸ்தவத்தை மறுதலிக்கிறவன்” என்று சொன்னதில் புகழ் பெற்றவர். டாக்டர் ஹால்டுமேன் அவர்கள் யூனியன் தியாலஜிகல் செமினரியோடும் டாக்டர் ஹாரி எமர்சன் போஸ்டிக்யோடும் நேரடியான ஒரு மோதலோடு இருந்தார். ஜான் சங் அவர்கள் அறிய ஆர்வமுள்ள இயல்போடு அவர் பிரசங்கத்தைக் கேட்க சென்றார். ஆனால் அந்த இரவிலே டாக்டர் ஹால்டுமேன் அவர்கள் பிரசங்கிக்கவில்லை. அதற்குப் பதிலாக ஒரு பதினைந்து வயது பெண் தனது சாட்சியைக் கொடுத்தாள். அவள் வேதாகமத்தை வாசித்தாள் மற்றும் மாற்றாளாக கிறிஸ்து சிலுவையில் மரித்ததைப்பற்றி பேசினாள். அந்தக் கூட்டத்திலே தேவனுடைய பிரசன்னத்தை உணர முடிந்ததாக சங் அவர்கள் சொன்னார். செமினரியிலிருந்து வந்த அவருடைய தோழர்கள் பரிகாசம் செய்தார்கள் மற்றும் நகைத்தார்கள், ஆனால் அவர் தானாகவே தொடர்ந்து நான்கு மாலைகளில் சுவிசேஷ கூட்டங்களுக்கு இடைவிடாமல் சென்றார். “எல்லாம் இயேசுவுக்காக.” அந்தப் பாடலை மறுபடியும் பாடுங்கள்! எல்லாம் இயேசுவுக்காக! எல்லாம் இயேசுவுக்காக! அந்த முதல் பாப்டிஸ்டு சபை சுவிசேஷ கூட்டங்களில் அவர் உணர்ந்த வல்லமையை கண்டுபிடிக்க அவர் ஜான்வெஸ்லி, ஜார்ஜ் ஒயிட் பீல்டு மற்றும் பல பெரிய பிரசங்கிகளின், கிறிஸ்தவ வாழ்க்கை வரலாறுகளை படிக்க ஆரம்பித்தார். செமினரியின் ஒரு வகுப்பில் ஒரு விரிவுரையாளர் கிறிஸ்து சிலுவையில் மாற்றாளாக மரித்தார் என்பதற்கு விரோதமாக பலமாக பேசினார். அந்தப் பேச்சின் முடிவில் ஜான் சங் அவர்கள் எழுந்து திடுக்கிட்ட மாணவர்களின் முன்பாக அவருக்குப் பதிலளித்தார். இறுதியாக, பிப்ரவரி 10, 1927ல், அவர் மெய்யான ஒரு மனந்திரும்புதலை அனுபவித்தார். “அவருடைய வாழ்க்கையின் பாவங்களெல்லாம் அவருக்கு முன்பாக விரிக்கப்பட்டதை அவர் கண்டார். அவரது பாவங்களிலிருந்து விடுவிக்க வழியில்லாததுபோல முதலில் காணப்பட்டது மற்றும் அவர் நரகத்துக்குதான் போகவேண்டும். தனது பாவங்களை மறக்க அவர் முயற்சி செய்தார், ஆனால் அவரால் முடியவில்லை. அவைகள் அவருடைய இருதயத்தை துளைத்தது. அதன்பிறகு அவர் லூக்கா xxiiiன் சிலுவையின் கதைக்குத் திருப்பினார், மற்றும் அவர் அந்தக் கதையைப் படித்தபொழுது உயிரோட்டம் வந்தது... அவர் அங்கே சிலுவையின் அடியில் [கிறிஸ்துவின்] விலையேறப்பெற்ற இரத்தத்தில் தனது சகல பாவங்களையும் கழுவும்படி வேண்டிக்கொண்டு இருந்தார்... அவர் தொடர்ந்து நடு இரவு வரையிலும் அழுதுகொண்டும் ஜெபித்து கொண்டும் இருந்தார். அதன்பிறகு [அவர் கேட்டதாக] ஒரு சத்தம் வந்தது, ‘மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது,’ அதன்பிறகு உடனே அவருடைய பாவபாரம் எல்லாம் அவரது தோளிலிருந்து விழுந்ததாகவும்... அவர் துள்ளி குதித்து ஒரு சத்தமிட்டார் ‘அல்லேலூயா!’” (Lyall, ibid., pp. 33-34). அவர் தங்கியிருந்த விடுதியின் ஹால்களிலே சத்தமாக தேவனைத் துதித்துக்கொண்டு ஓடினார். இப்பொழுது அவர் அவர்களுக்கு கிறிஸ்துவின் தேவையைப்பற்றி, ஒவ்வொருவரிடமும் அவருடைய வகுப்புத் தோழர்கள் மற்றும் ஆசிரியரிடமும் பேச ஆரம்பித்தார். டாக்டர் ஹாரி எமர்சன் போஸ்டிக்யோடும் அவர் இரட்சிக்கப்பட வேண்டியது அவசியம் என்று சொன்னார். “எல்லாம் இயேசுவுக்காக.” அந்தப் பாடலை மறுபடியும் பாடுங்கள்! எல்லாம் இயேசுவுக்காக! எல்லாம் இயேசுவுக்காக! அவர் அதிகமான இடைநிலைகால உழைப்பினால் தனது மனநிலையை இழந்திருந்தார் என்று, அந்தச் செமினரியின் தலைவர் நினைத்துப் பித்துப்பிடித்த காப்பகத்தில் மனநிலை மருத்துவ பிரிவில் அவரைச் சேர்த்தார். அந்தக் காப்பகத்தில் கட்டுப்படுத்தப்பட்டவராக ஆறு மாதங்கள் செலவிட்டார். அங்கே அவருக்கு ஒரு இடுக்கமான சட்டை அணிவித்திருந்தனர். அந்தச் சமயத்தில் அவர் வேதாகமத்தை ஆரம்பம் முதல் கடைசிவரை நாற்பது முறை வாசித்தார். “அந்த மனநிலை மருத்துவமனை ஜான் சங்க்கு உண்மையான வேதாகம கல்லூரியாக மாறினது!” (Lyall, p. 38). இறுதியாக அவர் சீனாவுக்குத் திரும்ப வேண்டிய நிலைமையில் விடுவிக்கப்பட்டார் – அவர் அமெரிக்காவுக்குத் திரும்பவில்லை. ஜான் சங் அவர்கள் யூனியன் செமினரியின் தொடர்பைத் துண்டித்துக்கொண்டார், தன்னுடைய லிபரல் தியாலஜிகல் புத்தகங்களை எரித்தபொழுது, அவைகளை “பிசாசுகளின் புத்தகங்கள்” என்று அழைத்தார். அவர் சீனாவுக்குத் திரும்பி வரும்வழியில் அவருக்கு ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் வேதியல் விரியுரையாளராக ஒரு பதவியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அவருக்குத் தெரியும். “ஒருநாள், கப்பல் தனது பயணத்தை முடிக்கும் சமயத்தில், தனது அறைக்கு ஜான் சங் சென்றார், தனது பட்டயங்களை, பதக்கங்களை மற்றும் பல்கலைக்கழக மாணவர் கழக சாவிகளைப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்தார் மற்றும் அவைகள் அனைத்தையும் கப்பலுக்கு வெளியே [கடலுக்குள்] எரிந்தார். தனது டாக்டர் பட்டயத்தை மட்டும், தமது அப்பாவைத் திருப்திப்படுத்துவதற்காக அவர் வைத்துக்கொண்டார்” (Lyall, p. 40). அந்த கப்பலிலிருந்து ஸங்கையில் 1927ன் முடிவில் காலடி வைத்தார், அவர் சீன வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற சுவிசேஷகராக மாறினார். அவர் அடிக்கடி “சீனாவின் வெஸ்லி” என்று அழைக்கப்பட்டார். ஜான் சங் அவர்கள் மிகவும் வல்லமையான ஒரு சுவிசேஷ பிரசங்கியாக மாறினார். 100,000 மக்களுக்கு மேலாக அவருடைய பிரசங்கத்தின் மூலமாக சீனாவில் மூன்று வருடங்களில் மட்டும் மாற்றப்பட்டார்கள்! அவர் பர்மா, கம்போடியா, சிங்கப்பூர், கொரியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளிலும் பிரசங்கம் செய்தார். அவர் எப்பொழும் சீனாவிலும்கூட, ஒரு மொழிபெயர்பாளர்ரோடு பிரசங்கிப்பார், ஏனென்றால் அவருடைய பேச்சுவழக்குவகை அதிகமாக அறியப்படவில்லை. ஜார்ஜ் ஒயிட்பீல்டைபோல, ஜான் சங் தமது பிரசங்கத்துக்குப் பதிலளிப்பவர்கள் அநேகருக்குத் தனிபட்டவகையில் தானே ஆலோசனை வழங்குவார். “சீனா மற்றும் தாய்வானில் இன்றுள்ள கிறிஸ்தவர்கள் சங் அவர்களின் ஊழியத்துக்கு அதிகமாக கடன் பட்டிருக்கிறார்கள்; இருபதாம் நூற்றாண்டில் தூரகிழக்கு நாடுகளுக்கு அவர் தேவனால் அளிக்கப்பட்ட மிகப்பெரிய பரிசு ஆகும்” (T. Farak, in J. D. Douglas, Ph.D., Who’s Who in Christian History, Tyndale House, 1992, p. 650). டாக்டர் சங் அவர்களின் மிகசிறந்த வாழ்க்கை வரலாறு ரெவரண்ட் வில்லியம் ஈ. ஸ்கூபர்ட் அவர்களின் “நான் ஜான் சங்கை நினைவுகூருகிறேன்” என்ற தலைப்பில் உள்ளதாகும், அது கிடைக்கும் வலைதளம் http://www.strategicpress.org/. ரெவரண்ட் ஸ்கூபர்ட் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வாங்க இங்கே கிளிக் செய்யவும். லிஸ்லி லியாள் அவர்களது டாக்டர் ஜான் சங் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வாங்க இங்கே கிளிக் செய்யவும் (ஸ்கூபர்ட் அவர்களுடையதைபோல அவ்வளவு நன்றாக இருக்காது ஆனால் சிக்கலான வேளையில் ஓரளவு உற்சாகமாக இருக்கும்). டாக்டர் ஜான் சங் அவர்களின் டைரியை வாங்க இங்கே கிளிக் செய்யவும், தலைப்பு “ஒருகாலத்தில் இழக்கப்பட்டவரின் நாட்குறிப்பு”. டாக்டர் சங்கின் விக்கிபீடியா கட்டுரை படிக்க இங்கே கிளிக் செய்யவும். அவர் புற்றுநோயுற்று 1944ல், தமது நாற்பத்தி இரண்டாம் வயதில் மரித்தார். “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36). நீ ஒரு மெய்யான மனந்திரும்புதலை அனுபவிக்க வேண்டும் என்பது என்னுடைய ஜெபமாகும், டாக்டர் சங் செய்ததுபோல. இந்த வாழ்க்கையின் வெறுமையை தேவன் உனக்குக் காட்டுவார் என்று நான் ஜெபிக்கிறேன்; மற்றும் அதனால் பாவத்தின் ஆழமான உணர்வின்கீழ் தேவன் உன்னை கொண்டு வருவார்; மற்றும் அதனால் தேவன் உன்னை கிறிஸ்துவிடம் கொண்டுவந்து அவருடைய ஈடுசெய்யும் இரத்தத்தினால் உன்னுடைய பாவத்திலிருந்து சுத்திகரிப்பார். நீ கிறிஸ்துவை நம்பும்பொழுது நீ மறுபடியும் பிறப்பாய், மற்றும் அவருக்குள் அற்புதமான ஒரு புதிய ஜீவனை பெற்றுக்கொள்ளுவாய். மற்றும் நீ இன்று இரவு 6:15 மணிக்கு திரும்ப வந்து மற்றொரு போதனையைக் கேட்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன் தலைப்பு, “ஒரு லிபரல் செமினரில் டாக்டர் ஜான் சங் அவர்களோடு” (அதை படிக்க இங்கே கிளிக் செய்யவும்). ஆமென். உங்கள் பாட்டுத்தாளில் முதலாவது பாடலைத் தயவுசெய்து எழுந்து நின்று பாடவும், “இதையெல்லாம் இயேசு செலுத்தி விட்டார்.” இரட்சகர் சொல்வதை நான் கேட்கிறேன், கர்த்தாவே, இப்பொழுது உமது வல்லமையை கண்டேன், நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் போதனைக்கு முன்னதாக தனிப்பாடல் பாடியவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: |