இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
நீ பின்னால் விடப்படுவாயா?WILL YOU BE LEFT BEHIND? டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் “உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்” (மத்தேயு 24:42). |
கிட்டத்தட்ட நான் படிக்கும் ஒவ்வொரு செய்தி தாள்களிலும் வேதாகமத் தீர்க்கதரிசனத்துக்குச் சம்மந்தமான சில காரியங்கள் இருக்கிறது, மற்றும் நாம் அறிந்திருக்கிறபடி உலகம் முடிவில் இருக்கிறது. நமது உலகம் ஒரு முடிவுக்கு வருவதற்கு எவ்வளவு குறைவான நேரம் விடப்பட்டிருக்கிறது என்பதற்கு இவைகளெல்லாம் தேவன் நமக்குக் காட்டும்படி கொடுத்த அடையாளங்களாகும். இங்கே லாஸ் ஏன்ஜல்சில் அனுதினச் செய்திகளின் தலைப்புகளைக் கவனியுங்கள். பாலங்கள் உடைந்து விழும் நிலையில் உள்ளன. நமது நாட்டின் ஒரு கால் பாகத்துக்கும் அதிகமான பாலங்கள் மிகவும் பலவீனமாக உள்ளன, இடிந்து பாழான அல்லது அதிக பளுதாங்க முடியாத நிலையில் அவைகளால் தற்போதய போக்குவரத்தை சமாளிக்க முடியாத நிலையில் உள்ளன அவை அமெரிக்க சாலை ஒழுங்குக்கு ஒரு அடி தூரம் கூட இல்லை என்று பெடரல் பதிவுகளில் காணப்படுகின்றன. இந்தப் பூமியில் அமெரிக்கா மிகப்பெரிய தேசமாகும், ஆனால் சாலைகளையும் பாலங்களையும்கூட சரியான முறையில் பயன்படும் வகையில் நம்மால் வைக்க முடியவில்லை! மருந்து குறைவுகள் மருத்துவமனைகளைத் தாக்கு கின்றன. தேசிய அளவில் மருத்துவமனைகளில் கடுஞ்சோதனையான நோய்தடுப்பு டெட்டனஸ் குறைவு இருக்கிறது... இந்தக் காரணத்தால் பெரிய அளவில் குருசியல் வேகசின் குறைவு காணப்படுகின்றன. வருட கணக்கில் மருத்துவமனைகள் சந்திக்கும் மிகமோசமான மருந்து குறைபாடுகளில் இதுவும் ஒன்றாகும் – மற்றும் இதுவே கடைசியாக இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். மருத்துவமனைகள் [இப்பொழுது] ஒவ்வொரு நாளும் அதிகமாக மருந்து குறைபாடுகளை அடிக்கடி சந்திக்கின்றன, மற்றும் மோசமாக, அதிகமாக அடிக்கடி சில நல்ல மாற்று மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள்... [அது] வழக்கமாக மருத்துவர்கள் மற்றும் பார்மசிஸ்ட்களை வேட்டையாடி மூடசெய்கிறது... இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவு மருத்துவமனைகள் இந்தக் குறைவுகளை உணருகின்றன ஏனென்றால், மருத்துவச் செலவுகளில் கடும்வீழ்ச்சி, கண்டுபிடிப்புகளின் சப்ளையானது அதிகமாக சில நாட்களுக்கு மட்டுமே இப்பொழுது வைக்கிறார்கள். கிலிமான்ஜாரோ பனிக்கட்டி நிலம் உருகுதல். இந்த வெண்பனிக்கட்டி ஆப்பிரிக்க மலை உச்சியில் கிலிமான்ஜரோ மறைந்து கொண்டு [இருக்கிறது], இந்த உருகும் மலை பனிப்பாறைகளின் பாதிப்புகள் எங்கும் உள்ளன. இந்தப் பனிகட்டிகள் “தட்பவெப்ப மாற்றத்தினால்” உருகுகின்றன அது இந்த இரவில் உலக முழுவதையும் பயமுறுத்துகின்றன! பெரிய பூமி அதிர்ச்சிகள் அநேக மக்களுக்கு அதிமான பயத்தைக் கொடுக்கின்றன! கார் வெடிகுண்டு எருசலேமில் வெடித்தது. எருசலேமில் கண்டிப்பான பழைமை வாதயூதர்களின் அருகாமையில் ஒரு கார் வெடி குண்டு வெடித்தது, கட்டிடங்கள் அதிர்ந்தன மற்றும் காற்று வழியாக உலோகங்கள் பெரும் சத்தத்தோடு அனுப்பப்பட்டன. இவைகள் அங்கொன்றும் இங்கொன்றுமான சம்பவங்களைப் போல காணப்படலாம். ஆனால் வேதாகமத்தின் தீர்க்கதரிசனங்களைப்பற்றி அறிந்தவர்கள் அவைகள் கடைசி நாட்களில் வசிக்கிறோம் என்பதற்கு அடையாளங்கள் என்று உணர்ந்து கொள்ளுவார்கள். வேதாகமத்தின் தீர்க்கதரிசனங்களைப் புரிந்து கொண்டவர்களுக்கு அவைகள் உலக முடிவின் கடைசி நாட்கள் மிகவும் நெருங்கி வருகிறது என்று தோன்றும் என்று நாம் அறிவோம். இயேசுவானவர் சொன்னார்: “உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்” (மத்தேயு 24:42). தேதிகளைக் குறிப்பதற்கு விரோதமாக இயேசுவானவர் எச்சரித்தார் (மத்தேயு 24:36; அப்போஸ்தலர் 1:7). ஆனால் பொதுவான அடையாளங்களால் முடிவு நெருங்குவதைக் கவனிக்க வேண்டும் என்று அவர் நமக்குச் சொல்லி இருக்கிறார். இப்பொழுது நாம் அந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். முடிவு சமீபமாக இருக்கிறது என்று வேதாகமம் நமக்குப் போதிக்கிறது. கிறிஸ்து ஆகாயத்தில் வரபோகிறார் என்பதை வேதாகமம் போதிக்கிறது. மெய்யாக மனந்திரும்பின கிறிஸ்தவர்கள், உயிரோடு இருப்பவர்களும் மரித்தவர்களும், அவரை ஆகாயத்தில் சந்திக்க எழுப்பப்படுவார்கள் (குறிப்பு I தெசலோனிக்கேயர் 4:14-18). வேதாகமத்தை விசுவாசியாத சிலர் வேதாகமத்தின் இந்தத் தீர்க்கதரிசனத்தைப் பரிகாசம் செய்வார்கள். இது ஒருபோதும் நடக்காது என்று அவர்கள் சிரிப்பார்கள் மற்றும் சொல்லுவார்கள். ஆனால் அவர்கள் சொல்லுவது தவறாகும். ஒரே நாளில் விரைவில் எடுத்துக்கொள்ளுதல் சம்பவிக்கும். மற்றும் நீ பின்னால் விடப்படுவாய்! எடுத்துக்கொள்ளப்படுதல் தொடர்பான மூன்று காரியங்களை நாம் சுருக்கமாக சிந்திப்போம். I. முதலாவதாக, எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பாக இருக்கும் நிலைமைகள். எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பாக நிலைமைகள் என்னவாக இருக்கும் என்று வேதாகமம் நமக்குச் சரியாக சொல்லுகிறது. இயேசுவானவர் சொன்னார்: “(நோவாவின்) காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படி யெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே (நோவா) பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்” (மத்தேயு 24:37-39). நோவா நீதியைப் பிரசங்கிங்கிக்கிற ஒருவராக இருந்தார் (II பேதுரு 2:5). நியாயத்தீர்ப்பு வரப்போகிறது என்று தமது தலைமுறையினரை எச்சரித்தார். ஆனால் மக்கள் அவரைப் பார்த்துச் சிரித்தார்கள் அவரது செய்தியைப் பரிகாசம் செய்தார்கள். அவர்கள் கவனிக்கவில்லை. தங்கள் பொருளாதாரத்தில், பாவம் நிறைந்த வாழ்க்கையோடு கடந்து போனார்கள். அதுபோலவே இன்றும் இருக்கிறது. யாராவது ஒருவர் உன்னை சபைக்குக் கொண்டு வருகிறார்கள். நீ போதனையைக் கேட்கிறாய். பிறகு உன்னுடைய பழைய வழியில் வாழ்வதற்குத் திரும்பி போய்விடுகிறாய். நீ மனந்திரும்பவில்லை. நீ இயேசு கிறிஸ்துவை நம்பவில்லை. நாங்கள் உனக்குப் போன் செய்யும்பொழுது, இந்தச் சபைக்கு நீ திரும்ப வருவதில்லை. உனக்குக் கேளிக்கை வேண்டும். டாக்டர் A. W. டோசர் தமது நினைவாற்றல் மிக்க வாக்கியத்தில் உபயோகித்தது போல, இந்த உலகம் “ஒரு போர்க்களம் என்பதற்குப் பதிலாக இது ஒரு விளையாட்டு அரங்கம்” என்று நீ நினைக்கிறாய். வாழ்க்கை ஒருவிதமான டிஸ்னேலேன்டு என்று நீ நினைக்கிறாய். உனது வாழ்க்கையின் நோக்கம் முழுவதும் “கேளிக்கையாக” இருப்பது என்று நீ நினைக்கிறாய். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சபையில் தேவனுக்காக நேரம் கொடுக்க மறுக்கிறாய். ஏதாவது சிறிய காரியம் இடையில் வந்தாலும், நீ சபையைத் தவறவிடுகிறாய். நீ மனந்திரும்பவில்லை. நீ ஒரு உண்மையான கிறிஸ்தவன் அல்ல. உனக்கு மரணம் வரும்பொழுது, நீ ஆயத்தமாக இருக்க மாட்டாய். எடுத்துக்கொள்ளுதல் வரும்பொழுது, நீ பின்னால் விடப்படுவாய்! திருவாளர் கிரிபித் சற்று முன்பாக பாடினதுபோல, “குமாரன் வந்துவிட்டார், மற்றும் நீ பின்னால் விடப்பட்டாய்.” இயேசுவானவர் சொன்னார்: “உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்” (மத்தேயு 24:42). II. பிறகு, இரண்டாவதாக, எடுத்துக்கொள்ளப்படுவதற்கு ஆயத்தமில்லாதிருப்ப தால் ஏற்படும் அபாயத்தை நினை. தயவுசெய்து, மத்தேயு 25க்கு திருப்பிக்கொள்ளுங்கள். இது ஸ்கோபீல்டு வேதாகமத்தில் 1035ஆம் பக்கத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் குறிப்பிடப்பட்ட கன்னிகைகள் கிறிஸ்துவை சந்திக்க ஆயத்தமில்லாதவர்கள் என்று பழைய பிரசங்கிகள் அனைவரும் சொன்னார்கள். அவர்கள் சொன்னதுசரி என்று நான் உணர்த்தப்பட்டேன். இந்தப் பகுதியில், இயேசுவானவர் ஒரு பெரிய ஆவிக்குரிய சத்தியத்தை விளக்கும் ஒரு கதையாக, ஒரு உவமையைக் கொடுத்தார். அவர் சொல்லிக் கொண்டிருந்த பெரிய சத்தியம் என்னவாக இருக்கிறது? மத்தேயு 25:13ஐ பாருங்கள். இயேசுவானவர் சொன்னார்: “மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்” (மத்தேயு 25:13). அதனால், இந்தப் பகுதி உனக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது! இந்தக் கன்னிகைகளில் ஐந்துபேர் ஆயத்தமாக இருந்தார்கள். அவர்கள் கிறிஸ்துவின் வருகைக்காக ஆயத்தமாக இருந்தார்கள். ஆனால் மற்ற ஐந்துபேர் அவர் வரும்பொழுது ஆயத்தமாக இல்லை. ஒரு உவமையைப் புரிந்து கொள்ள அதன் உள்ளே விளக்கமான அதிக ஆழமாக போவது ஆபத்தானது. இந்தப் பகுதியின் எளிமையான செய்தி இதுதான்: இயேசுவானவர் எடுத்துக்கொள்ள வரும்பொழுது அநேக மக்கள் தயாராக இருக்கமாட்டார்கள். இப்பொழுது பத்தாம் வசனத்தை பாருங்கள்: “அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடே கூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது” (மத்தேயு 25:10). நோவாவின் பேழையின் கதவு அடைக்கப்பட்டது போல, உண்மையான கிறிஸ்தவர்கள் எடுத்துக்கொள்ளப்பட்டபிறகு, கதவு அடைக்கப்படும். அதன்பிறகு எந்த மக்களும் உள்ளே போக முடியாது. “கதவும் அடைக்கப்பட்டது.” 11ஆம் வசனத்தைப் பாருங்கள், “பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். அதற்கு அவர் உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” (மத்தேயு 25:11-12). அதன் பிறகு, 13ஆம் வசனத்தில், இந்தக் கருத்து உனக்குப் பொருந்தும்படி இயேசுவானவர் கொடுக்கிறார்: “மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்” (மத்தேயு 25:13). பொதுவான காலம் நமக்குத் தெரியும், ஆனால் அந்த நாளும் நாழிகையும் தெரியாது. அந்த நாளும் நாழிகையும் வரும்பொழுது, அது உனக்கு மிகவும் காலதாமதம் ஆகிவிடும். திருவாளர் கிரிபித் இந்தப் போதனைக்கு முன்பாக பாடினதுபோல, “குமாரன் வந்துவிட்டார், மற்றும் நீ பின்னால் விடப்பட்டாய்.” III. அதன்பிறகு, மூன்றாவதாக, எடுத்துக்கொள்ளப்படுதலில் விடப்பட்டவர்கள் தேவனால் கைவிடப்படுவார்கள். அவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள், இரட்சிக்கப்பட முடியாதவர்கள். வெளிப்படுத்தல் பதினாறாம் அதிகாரத்தை, கவனியுங்கள். இந்தப் பகுதியில் நாம் தேவனுடைய கோபாக்கினையைக் காண்கிறோம், அது எடுத்துக்கொள்ளுதலுக்குப் பிறகு கிறிஸ்துவை புறக்கணித்த உலகத்தின் மீது ஊற்றப்படுவதாகும். அவர்களுக்கு வேதனை நிறைந்த புண்கள் உண்டாகும் என்று இரண்டாம் வசனம் நமக்குச் சொல்கிறது. நீர்நிலைகள் விஷமாக்கப்படும் என்று நான்காம் வசனம் நமக்குச் சொல்கிறது. அக்கினியினால் மனிதவர்க்கம் தகிக்கப்படும் என்று எட்டாம் வசனம் நமக்குச் சொல்கிறது. பெரிய இருள் உண்டாகும் மற்றும் வேதனையினால் மக்கள் தங்கள் நாவுகளைக் கடித்துக்கொள்ளுவார்கள் என்று பத்தாம் வசனம் நமக்குச் சொல்கிறது. பெரிய பூமி அதிர்ச்சி உண்டாகும் என்று பதினெட்டாம் வசனம் நமக்குச் சொல்கிறது. வானத்திலிருந்து மனுஷர்மேல் “பெரிய கல்மழை” விழும் என்று, இருபத்தி ஒன்றாம் வசனம் நமக்குச் சொல்கிறது. இவைகள் நடக்கும்பொழுது மக்கள் கிறிஸ்துவிடம் திரும்புவார்களா? இல்லை! ஒன்பதாம் வசனத்தின் பிற்பகுதியைக் கவனியுங்கள்: “அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை” (வெளிப்படுத்தல் 16:9). மற்றும் பதினோறாம் வசனம்: “தங்கள் வருத்தங்களாலும், தங்கள் புண்களாலும், பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை” (வெளிப்படுத்தல் 16:11). மற்றும் இருபத்தி ஒன்றாம் வசனத்தின் முடிவில்: “அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் [மனுஷர்கள்] தேவனைத் தூஷித்தார்கள்; அந்த வாதை மகா கொடிதாயிருந்தது” (வெளிப்படுத்தல் 16:21). பாருங்கள், அவர்கள் தேவனால் கைவிடப்பட்டவர்கள். அவர்கள் இரட்சிக்கப் படாதபடிக்குக் காலம் மிகவும் கடந்துவிட்டது. அவர்கள் மன்னிக்க முடியாத பாவம் செய்தவர்களாக இருந்தார்கள். “தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்” (ரோமர் 1:24). “தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்” (ரோமர் 1:26). “தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக் கொடுத்தார்” (ரோமர் 1:28). திருவாளர் கிரிபித் பாடினதுபோல, “குமாரன் வந்துவிட்டார், மற்றும் நீ பின்னால் விடப்பட்டாய்.” நீ எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று விரும்பினால், நீ இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால், இப்பொழுதே இரட்சிக்கப்பட வேண்டியது அவசியமாகும், தேவன் உன்னோடு பேசிக்கொண்டு இருக்கும்பொழுதே. நீ மிக அதிகமாக காத்திருந்தால், அது மிக அதிக காலதாமதம் ஆகிவிடும். சென்ற வாரமுடிவில் புலோரன்ஸ் சூராவளிக்காற்று வடக்கு மற்றும் தெற்குக் கரோலினாவில் அடித்தது. மக்கள் வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டார்கள். அவர்களை ஜனாதிபதி எச்சரித்தார். அவர்களை ஆளுனர் எச்சரித்தார். காவலர் மற்றும் தீ அணைப்பு துறையினர் அவர்களுடைய தெருக்களில் வந்து வெளியேற வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலமாக எச்சரித்தார்கள். மக்கள் மறுபடியும் மறுபடியுமாக எச்சரிக்கப்பட்டார்கள். ஆனால் சில முட்டாள் மக்கள் அங்கேயே தங்கி இருந்தார்கள் – மற்றும் அவர்கள் தண்ணீர் வெள்ளத்தில் அமிழ்ந்து போனார்கள். கிறிஸ்து வருகிறார் என்று உனக்கு எச்சரிப்புக் கொடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. நீ கவனிக்காவிட்டால், எடுத்துக்கொள்ளப்படும்போது நீ பின்னால் விடப்படுவாய். நீ மிக அதிகமாக காத்திருந்தால், அது மிக அதிக காலதாமதம் ஆகிவிடும். உன்னுடைய பாவங்களுக்குரிய தண்டனை கிரயத்தைச் செலுத்த கிறிஸ்து மரித்தார். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் மற்றும் பரலோகத்தில் தேவனுடைய வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார். இப்பொழுது அவரை விசுவாசி மற்றும் அவருடைய இரத்தம் உன்னுடைய பாவங்களைக் கழுவி நீக்கும், மற்றும் எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு நீ ஆயத்தமாக இருப்பாய். நீ பொறுத்திருந்தால், அது உனக்குச் சொல்லப்படும், “குமாரன் வந்துவிட்டார், மற்றும் நீ பின்னால் விடப்பட்டாய்.” திருவாளர் கிரிபித் பாடினதுபோல, “குமாரன் வந்துவிட்டார், மற்றும் நீ பின்னால் விடப்பட்டாய்.” இது உங்கள் பாட்டுத் தாளில் 3வது பாடல். அதை எழுந்து நின்று பாடுங்கள். அதிக வேகமாக அல்ல. அந்த வார்த்தைகளை சிந்தித்துப் பாடுங்கள்! வாழ்க்கை துப்பாக்கி மற்றும் போர் நிறைந்ததாக இருந்தது, பின்னால் விடப்பட்டவராக இருக்க வேண்டாம். இயேசுவை நம்பு மற்றும் இன்றிரவே, இப்பொழுதே இரட்சிக்கப்படு! நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் போதனைக்கு முன்னதாக படித்த வேதப்பகுதி: மத்தேயு 24:37-42. |
முக்கிய குறிப்புகள் நீ பின்னால் விடப்படுவாயா? WILL YOU BE LEFT BEHIND? டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் “உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்” (மத்தேயு 24:42). I. முதலாவதாக, எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பாக நிலைமைகள், மத்தேயு 24:37-41.
II. இரண்டாவதாக, எடுத்துக் கொள்ளப்படுவதற்கு ஆயத்தமில்லாதிருந்தால் ஏற்படும் அபாயம்,
III. மூன்றாவதாக, எடுத்துக்கொள்ளப்படுதலில் விடப்பட்டவர்கள் அநேகர் தேவனால் கைவிடப்பட்டவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள், வெளிப்படுத்தல் 16:9, 11, 21. |