Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




ஒரு ஆத்துமாவை கிறிஸ்துவிடம் நடத்துவது எப்படி –
மனந்திரும்புதலுக்காக கலந்தாய்வு செய்தல்!

HOW TO LEAD A SOUL TO CHRIST–
COUNSELING FOR CONVERSIONS!
(Tamil)

கிறிஸ்டோபர் எல். கேஹன் , பிஎச்.டி. (யூசிஎல்ஏ),
எம். திவ். (டால்போட் செமினரி), பிஎச்.டி. (தி கிளார் மோண்ட் கிராஜ்வேட் பள்ளி)
அவர்களால் எழுதப்பட்டது, மற்றும் ரெவரன்ட் ஜான் சாமுவேல் கேஹன் அவர்களால் லாஸ் ஏன்ஜல்ஸின் பாப்டிஸ்டு ஆசரிப்புக் கூடாரத்தில் ஆகஸ்டு 26, 2018, கர்த்தருடைய நாள் காலை வேளையில் பிரசங்கிக்கப்பட்ட ஒரு போதனை
A sermon written by Christopher L. Cagan, Ph.D. (UCLA),
M.Div. (Talbot Seminary), Ph.D. (the Claremont Graduate School),
and preached by Rev. John Samuel Cagan
at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, August 26, 2018

“நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகா விட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்” (மத்தேயு 18:3).


ஒரு நபர் மனந்திரும்ப – ஒரு மாறுதல் அடைய வேண்டும் – வேண்டியது அவசியம் இல்லையானால் அவனால் பரலோகத்துக்குப் போக முடியாது என்று இயேசுவானவர் சொன்னார். “மனந்திரும்பு” என்ற வார்த்தை “எபிஸ்டிரிபோ” என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகும். இதன் பொருள் “ஒரு திருப்பம்” என்பதாகும். இது ஒரு பாவியின் ஜெபத்தை சொல்லுவது அல்ல அல்லது ஒரு கையை உயர்த்துவது அல்ல. இது ஒரு புதுபிறப்பின் நேரத்தில் ஒரு பாவிக்குத் தேவன் கொடுக்கும் மாற்றப்பட்ட இருதயமாகும். நிக்கொதேமுவிடம் இயேசுவானவர் சொன்னார், “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்” (யோவான் 3:3). மறுபடியுமாக, கிறிஸ்து சொன்னார், “நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும்” (யோவான் 3:7). இது இருதயத்தின் அடியில் மாற்றம் ஆகும். வேதாகமம் சொல்லுகிறது, “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் [புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்] பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (II கொரிந்தியர் 5:17). இது ஒரு பாவியின் ஜெபத்தை வெறுமனே சொல்லுவது அல்ல. இது மனந்திரும்புதல்! இந்தக் காலையில் ஒரு பாவி மனந்திரும்பி கிறிஸ்துவிடம் கொண்டுவர கலந்தாய்வு செய்வதைப்பற்றி நான் பேச விரும்புகிறேன்.

மனந்திரும்புதல் என்றால் என்ன? நாம் என்ன நடக்க வேண்டுமென்று விரும்புகிறோம்? பாவிக்கு ஒரு தீர்மானம் அல்ல, மனந்திரும்புதல் தேவை. சார்லஸ் பின்னியின் காலம் வரைக்கும் (1792-1875) உலகமுழுவதிலும் அநேக சபைகளில் “தீர்மானஇஸம்” மனந்திரும்புதலின் இடத்தை எடுத்துக்கொண்டிருந்தது. மில்லியன் கணக்கான மக்கள் ஒரு தீர்மானம் எடுத்தார்கள், ஆனால் மனந்திரும்பவில்லை.

“தீர்மானஇஸம்” என்றால் என்ன? மனந்திரும்புதல் என்றால் என்ன? இன்றைய கொள்கை மீறுதல் என்ற புத்தகம், டாக்டர் ஹைமர்ஸ் மற்றும் எனது அப்பா டாக்டர் கேஹன் அவர்களால் எழுதப்பட்டது அதிலிருந்து இங்கே விளக்கம் கொடுக்கப்படுகிறது.

     தீர்மானஇஸம் என்பது ஒரு நபர் முன்னே வருவதாலும், கையை உயர்த்துவதாலும், ஒரு ஜெபத்தை சொல்லுவதாலும், ஒரு கோட்பாட்டை நம்புவதாலும், ஒரு கர்த்தத்துவ ஒப்புக்கொடுத்தலும், அல்லது மற்ற வெளிப்படையான காரியங்களால், மனித செயலால், அதற்குச் சமமாக எடுத்துக்கொள்ளப்பட்டதால், மற்றும் நிருபணங்களால், உள்ளான மாறுதலின் அற்புதத்தால்; ஒரு வெறுமையான வெளிப்படையான தீர்மானத்தினால் முகவான்மையினால் ஒரு நபர் இரட்சிக்கப்பட்டதாக நம்பிக்கை கொள்வது; இப்படிப்பட்ட ஒருவித மனுஷீக செயல்களினால் ஒரு நபர் இரட்சிக்கப்பட்டதாக காட்டுவதாகும்.
     மனந்திரும்புதல் என்பது ஒரு இழக்கப்பட்ட பாவியை இயேசு கிறிஸ்துவிடம் நீதிமானக்குவதற்காக மற்றும் மறுஜென்மம், மற்றும் அந்தப் பாவியை மாற்றி இழக்கப்பட்டதிலிருந்து தேவனுக்கு முன்பாக இரட்சிக்கப்பட்டவராக கொண்டுவரும் பரிசுத்த ஆவியானவரின் வேலையின் விளைவாகும், கீழ்த்தரமான நடத்தை கெட்ட ஆத்துமாவுக்குத் தெய்வீக ஜீவனை கொடுப்பதாகும், இவ்வாறாக மனந்திரும்பின வாழ்க்கைக்கு ஒரு புது திசையைக் காட்டுவதாகும். இரட்சிப்பின் புலனால் அறியக்கூடிய பகுதி நீதிமானாக்குதலாகும். இரட்சிப்பின் உள்ளுணர்வின் பகுதி மறுஜென்மமாகும். இதன் விளைவுதான் மனந்திரும்புதல் ஆகும். (Today’s Apostasy, pp. 17, 18).

ஒரு தீர்மானம் எடுப்பது என்பது ஒரு மனுஷீக செயலாகும் அதை யார் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் செய்யமுடியும். மனந்திரும்புதல் என்பது தெய்வீக செயலாகும் அது ஒரு நபருடைய வாழ்க்கை மற்றும் நித்தியமாக மாற்றமுடியாத முடிவை உண்டாக்குவதாகும்.

ஒரு ஆத்துமாவை மனந்திரும்ப செய்வதைவிட அதிக சுலபமானது ஒரு தீர்மானம் எடுக்க செய்வதாகும். அந்தப் பிரசங்கியார் எண்ணிக்கைக்கு அதிக “தீர்மானங்களை” பெறமுடியும். எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும், ஒரு தீர்மானத்தை நீ பெற்றுக்கொள்ள முடியும். அந்தப் பாவியின் ஜெபத்தை மக்களோடு கதவுக்கு முன்பாகவும், ஒரு ஆகாய விமானத்திலும், அல்லது எங்கு வேண்டுமானாலும் செய்ய முடியும். நீ அவர்களைக் கணக்கிட்டுக்கொள்ள முடியும், ஆனால் ஒருவேளை அவர்களை ஒருபோதும் காணமுடியாமலும் போகலாம். அவர்கள் ஒரு தீர்மானம் செய்தார்கள், ஆனால் ஒரு மனந்திரும்புதலை அனுபவிக்கவில்லை.

மனந்திரும்புதலுக்காக, அநேக மக்கள் சபைக்கு வரவேண்டும் மற்றும் அநேக முறை சுவிசேஷத்தை கேட்க வேண்டும் அதை புரிந்துகொண்டு மற்றும் கிறிஸ்துவை நம்ப வேண்டும். சில மக்கள் மந்திரும்புவதற்கு முன்பாக அநேக மாதங்கள் மற்றும் வருடங்கள் சபைக்கு வருகிறார்கள்.

மக்களை கிறிஸ்துவிடம் நடத்துவதற்காக உன்னுடைய அழைப்புக்கு மறுமொழி கொடுத்து வந்தபிறகு, நீ தனித்தனியாக, அவர்களிடம் பேசவேண்டியது அவசியமாகும். நீ அவர்களோடு பேசகூடிய தனி இடத்துக்கு அவர்களை எடுத்துச் செல். ஒரு விரைவான ஜெபத்தோடு தன்னிச்சையாக அவர்களை நடத்தி விடாதே. ஒரு பாவியின் ஜெபத்தை சொல்லுவது இயேசுவை நம்புவதைப் போன்றது அல்ல. கையை உயர்த்துவது, முன்னுக்கு வருவது, அல்லது ஞானஸ்நானம் கொடுப்பது இயேசுவை நம்புவதை போன்றது அல்ல. அந்தக் காரியங்களைச் செய்ததினால் ஒரு நபர் இயேசுவை நம்பினார் என்பதை நிரூபிக்காது. இயேசுவை நம்புவது என்பது வித்தியாசமான காரியம், அது ஒப்பற்றது மற்றும் அது சிறப்பானது. இயேசுவை நம்புவது என்பது இயேசுவை நம்புவதுதான்.

கிறிஸ்துவிடம் ஒரு நபரை நடத்துவதற்கு மற்றும் ஒரு உண்மையான மனந்திரும்புதலை அனுபவிப்பதற்கு நேரம், முயற்சிகள், உள்பார்வை, ஜெபம், மற்றும் தேவனுடைய கிருபை அதிகமாக தேவைப்படும். டாக்டர் ஹைமர்ஸ் மற்றும் டாக்டர் கேஹன் மக்களுக்கு முப்பது வருடங்களுக்கு மேலாக கலந்தாய்வு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கற்றுக்கொண்டவைகளில் சிலவற்றை இங்கே தருகிறோம்.

1. முதலாவது, போதகர்கள் பாவிகளிடம் செவிகொடுக்க வேண்டும்.

நடைமுறையில் எல்லா சுவிசேஷ பிரசங்கிகள் செய்வதைபோல – அந்தப் பாவி சுவிசேஷத்தை ஏற்கனவே புரிந்து கொண்டதாக – நீங்களாக யூகிக்க வேண்டாம். அவர் என்ன விசுவாசிக்கிறார் என்று அவரைக் கேட்டு கவனித்துக் கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். அவருடைய மத பின்னனி என்ன? அவர் இயேசுவைப்பற்றி என்ன விசுவாசிக்கிறார்? கிறிஸ்துவை ஒரு ஆவியாக நினைக்கிறாரா? அவருடைய இருதயத்தில் கிறிஸ்து ஏற்கனவே ஜீவிப்பதாக நினைக்கிறாரா? இயேசு அவரிடம் கோபமாக இருப்பதாக நினைக்கிறாரா? அவர் என்ன நினைக்கிறார் அவர் பரலோகத்துக்குப் போவாரா, அல்லது போகமாட்டாரா? அவர் என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள். அதன்பிறகு சத்தியத்தை எடுத்துக்காட்டுங்கள் மற்றும் உண்மையான கிறிஸ்துவிடம் அவரை நடத்துங்கள்.

அந்தப் பாவி எப்படி ஜீவிக்கிறார்? அவர் ஒரு கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்குத் தடையாக ஏதாவது இருக்கிறதா – இழிவான இலக்கியம், விபச்சாரம், அல்லது குடும்ப அங்கத்தினரால் எதிர்ப்பு? பாவிகள் அவர்களாகவே இரட்சிக்கப்படுவதற்குத் தங்களை பரிபூரணம் செய்து கொள்ள முடியாது – அவர்களால் முடியாது. ஆனால் பிரதானமான பாவம் கிறிஸ்துவை நம்பமுடியாதபடி யாராவது ஒருவர் விருப்பத்தோடு மற்றும் விடாபிடியாக இருக்கிறதா என்றும் கவனிக்க வேண்டும். அல்லது, அவர் தன்னில் தான் நம்பிக்கை வைத்திருக்கிறாரா என்றும் கவனிக்க வேண்டும்.

நீங்கள் பாவிகளுக்குச் செவிகொடுக்காவிட்டால், உங்களால் அவருக்கு உதவி செய்ய முடியாது. அந்தப் பாவி உன்னிடம் ஏன் பேச வந்தார் என்று நீ கண்டு பிடிக்க வேண்டும். இயேசு அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார்? அவர் ஏன் வந்தார்? ஒரு நபர் தனக்கு ஒரு வேலையை இயேசு கொடுக்க வேண்டும் என்று விரும்புவதாக சொன்னார். ஆனால் அது இரட்சிப்பு அல்ல! இயேசு அவருக்கு ஒரு வேலையைக் கொடுத்தாலும், அவர் இன்னும் இழக்கப்பட்டவராகவே இருப்பார். அந்த நபர் இயேசுவின் இரத்தத்தினால் தனது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று விரும்ப வேண்டியது அவசியம்.

2. இரண்டாவதாக, பாவிகள் இயேசு கிறிஸ்துவைபற்றி தவறு செய்வார்கள்.

இயேசுவைப்பற்றி அந்தப் பாவி என்ன நினைக்கிறார்? அவரைக் கேளுங்கள், “இப்பொழுது இயேசு எங்கே இருக்கிறார்?” இயேசுவானவர் பரலோகத்தில் பிதாவாகிய “தேவனுடைய வலது பக்கத்தில் இருக்கிறார்” என்று வேதம் சொல்லுகிறது (ரோமர் 8:34). ஆனால் அதிகமான இழக்கப்பட்ட பாப்டிஸ்டுகள் ஏற்கனவே இயேசு தங்கள் இருதயங்களில் இருப்பதாக, அல்லது அவர் ஒரு ஆவியாக ஆகாயத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறார்கள். இயேசு எங்கே இருக்கிறார் என்று உனக்குத் தெரியாவிட்டால் நீ அவரிடம் வரமுடியாது.

அந்தப் பாவியிடம் கேளுங்கள், “இயேசு யார்?” அவர் ஒரு சாதாரண மனிதன், வரலாற்றின் ஒரு பெரிய போதகர்களில் ஒருவர் என்று அநேக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அந்த “இயேசு” ஒருவரையும் இரட்சிக்க முடியாது. அவர் ஒரு ஆவி, அல்லது இயேசு தான் பரிசுத்த ஆவி என்று சில மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் கிறிஸ்து ஒரு ஆவியல்ல. இயேசுவானவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, வேதாகமம் சொல்லுகிறது,

“அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்: நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில் புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து” (லூக்கா 24:37-43).

மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, இயேசுவானவர் புசித்தார். ஒரு ஆவி சாப்பிடாது. கிறிஸ்துவுக்கு இருந்ததுபோல ஒரு ஆவிக்கு மாம்சமும் எலும்பும் இருக்காது. மற்றும் ஒரு ஆவிக்கு – பரிசுத்த ஆவிக்கும்கூட – பாவத்தை கழுவி நீக்க இரத்தம் இருக்காது!

அந்தப் பாவியைக் கேளுங்கள், “இயேசுவானவர் உன்மீது கோபமாக இருக்கிறாரா?” அவர் அப்படி கோபமாக இருப்பதாக அநேக கத்தோலிக்கர்கள் மற்றும் மற்றவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் ஒரு கோபமான “கிறிஸ்துவை” விசுவாசிக்கிறார்கள் – அது புதிய ஏற்பாட்டின் இயேசு அல்ல. இயேசு பாவிகளை நேசிக்கிறார் என்று வேதாகமம் சொல்லுகிறது. அவர் சிலுவையில் இருந்த கள்ளனையும் விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயையும் நேசித்தார். தன்னோடு கோபமாக உள்ள ஒருவரை ஒரு பாவி எப்படி நம்ப முடியும்? இந்தத் தவறுகளைச் சரிசெய்த பிறகு மெய்யான இயேசுவை அந்தப் பாவிக்குக் காட்டுங்கள்.

3. மூன்றாவதாக, இரட்சிப்பைப்பற்றி பாவிகள் தவறு செய்வார்கள்.

இரட்சிப்பைப்பற்றி மூன்று விதமான பிரதான தவறுகள் உள்ளன. அநேக பாவிகள் இந்தத் தவறுகளில் ஒன்றை செய்தால், அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறார்கள் – அல்லது இந்தக் காரியங்களில் ஒன்றை செய்தால், அவர்கள் இரட்சிக்கப்பட்டவர்கள் என்று நிரூபணமாகிறது. கிறிஸ்துவுக்குப் பதிலாக பாவிகள் நம்பும் மூன்று பிரதானமான காரியங்களை இங்கே கொடுக்கிறோம்.

சரீரபிரகாரமான செய்கை: ஞானஸ்நானம், முன்னே செல்லுதல், கையை உயர்த்துதல், ஒரு காத்தத்துவ ஒப்புக்கொடுத்தலை செய்தல், சில பாவங்களை விடுதல் (இது வேதாகம மனந்திரும்புதல் அல்ல, ஒரு மனதை மாற்றுதல் ஆகும்), அந்தப் பாவியின் ஜெபத்தை சொல்லுதல். இப்படிப்பட்டவைகள் ஒருவரையும் இரட்சிக்க முடியாத மனித செயல்பாடுகள். வேதாகமம் சொல்லுகிறது, “நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்” (தீத்து 3:5).

மனதின் செயல்பாடு: சரியான சிந்தனை உள்ளவர்களாக இருத்தல், அல்லது இயேசுவைப்பற்றிய அல்லது இரட்சிப்பைப்பற்றிய வேதாகம உண்மைகளை விசுவாசித்தல். பாவிகள் அடிக்கடி சொல்லுகிறார்கள், “இயேசு எனக்காக சிலுவையிலே மரித்தார் என்பதை நான் விசுவாசிக்கிறேன்.” ஆனால் மில்லியன் கணக்கான மக்கள் இந்த உண்மையை விசுவாசிக்கிறார்கள். இயேசு தேவனுடைய குமாரன் சிலுவையிலே மரித்தவர் மற்றும் உயிர்த்தெழுந்தவர் என்று பிசாசு விசுவாசிக்கிறது. அவன் அதை பார்த்தான். வேதாகமம் சொல்லுகிறது, “பிசாசுகளும் [சாத்தான்கள்] விசுவாசித்து, நடுங்குகின்றன” (யாக்கோபு 2:19). அந்தப் பாவி இயேசு கிறிஸ்துவை நம்ப வேண்டியது அவசியம், அவரைப்பற்றிய உண்மையை மட்டுமல்ல.

உணர்ச்சிவயப்பட்ட செயல்பாடுகள்: உணர்ச்சிகள் மற்றும் அனுபவங்கள், கிறிஸ்துவை பார்ப்பதற்குப் பதிலாக “உத்தரவாதம்” தேடுதல், வாழ்க்கையில் சிறந்ததை பார்த்தல். உயர்வு மற்றும் தாழ்வுக்குப் போவதாக உணர்தல். ஒவ்வொருவருக்கும் நல்ல எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் இருக்கின்றன. அதேபோல ஒவ்வொருவருக்கும் கெட்ட எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் இருக்கின்றன. அந்தப் பாவி இதை அறிந்திருக்கிறார். அவருக்கு அப்படிப்பட்ட உணர்வுகள் இருந்தன. உன்னுடைய உணர்வுகளை நீ நம்பினால், நீ இரட்சிக்கப்பட்டவன் என்று நினைப்பாய் அதன்பிறகு இழக்கப்படுவாய், இழக்கப்படுவாய் பிறகு இரட்சிக்கப்படுவாய், உன் வாழ்நாளெல்லாம் அப்படியே இருக்கும். இரட்சிப்பு உணர்வில் அல்ல, கிறிஸ்துவில் மட்டுமே. ஒரு பெரிய பழைய பாடல் சொல்லுகிறது,

எனது நம்பிக்கை கட்டப்பட்து அதற்கு குறைவாக ஒன்றுமில்லை
   இயேசுவின் இரத்தம் மற்றும் நீதியில்தான்.
நான் மிக இனிமையான கட்டமைதியில் நம்பிக்கை கொள்ளத்துணியேன்
[மனம், உணர்வு என்ற கட்டமைதிகள்]
   ஆனால் இயேசுவின் நாமத்தில் முழுமையாக சார்ந்து கொள்ளுவேன்.
உறுதியான பாறையான, கிறிஸ்துவின் மேல், நான் நிற்கிறேன்,
   மற்ற எல்லா நிலங்களும் உளையான மணல்நிலமாக உள்ளன;
மற்ற எல்லா நிலங்களும் உளையான மணல்நிலமாக உள்ளன.
(“The Solid Rock,” Edward Mote, 1797-1874).

இந்தத் தவறுகளைச் சரி செய்யுங்கள் மற்றும் அந்தப் பாவிக்கு இயேசுவையே நேராக காட்டுங்கள், அவருடைய இரத்தத்தின் மூலமாக பாவம் மன்னிக்கப்படுதலைக் காட்டுங்கள்.

கிறிஸ்துவைபற்றி அநேக பொய்யான யோசனைகள் குறிப்பிடப்படுகின்றன, ஆனால் “அவரை கீழே போட்டுவிடுகிறார்கள்” அல்லது வேறு ஏதாவது காரியத்தின் மூலமாக “குழாயினால் அவரை இணைக்கிறார்கள்.” நீ ஞானஸ்நானம் பண்ணப்பட்டால், கிறிஸ்துவில் நீ இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளுகிறாய் என்று சிலர் நினைக்கிறார்கள். இது தண்ணீர் ஞானஸ்நானத்தின் “மூலமாக” மற்றும் கிறிஸ்துவை “கீழே” தள்ளுவதாகும். நீ அந்தப் பாவியின் ஜெபத்தை சொன்னால் நீ இரட்சிக்கப்படுவாய் என்று அநேகர் நினைக்கிறார்கள், அந்த ஜெபம் இயேசுவை நம்புவதைப் போன்றதுதான். அதில் வெகு சிலர் மட்டுமே இயேசுவை நம்பி மனந்திரும்புகிறார்கள் அப்படி இருக்கும்பொழுது, அதனால் அவர்கள் மக்களை அப்படி ஜெபம் செய்ய சொல்லி அவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளுகிறார்கள். அது கிறிஸ்துவை ஒரு ஜெபத்தின் வார்த்தைகளுக்கு “கீழாக” மற்றும் அதன் “மூலமாக” தள்ளுவதாகும். வேதாகமம் சொல்லுகிறது “இயேசு கிறிஸ்துதான்” அந்தப் பிரதான மூலைக்கல் (எபேசியர் 2:20), பாவிகளின் ஜெப வார்த்தைகள் அந்த மூலைக்கல் அல்ல. இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைக்கும்படி அந்த பாவிக்கு எடுத்துக்காட்டு.

ஒரு தவறிலிருந்து மற்றொரு தவறுக்கு மக்கள் ஓடுவதை நான் பார்க்கிறேன். அவர்கள் ஒரு உணர்வுக்காக காத்திருப்பதாக ஆரம்பிக்க முடியும். அடுத்த முறை அவர்கள் சொல்லுவார்கள், “எனக்கு உணர்வு ஒன்றும் கிடைக்கவில்லை. கிறிஸ்து எனக்காக மரித்தார் என்று அதை நான் விசுவாசிக்கிறேன்” என்று சொல்லுவார்கள். அந்தப் பாவி ஒரு உணர்வுக்காக காத்திருப்பதாக ஆரம்பித்த தவறைவிட்டு கிறிஸ்துவைபற்றிய ஒரு உண்மையை நம்பும் மற்றொரு தவறுக்குப் போகிறார். அந்தப் பாவியின் பொய்களான அடைக்கலத்தை வேட்டையாடி கண்டுபிடியுங்கள் மற்றும் அவருக்கு கிறிஸ்துவை காட்டுங்கள்.

4. நான்காவதாக, பாவிகளுக்கு அவர்களுடைய இருதயங்களில் பாவத்தின் உணர்த்துதல் தேவையாக இருக்கிறது.

ஒரு பாவி தன்னுடைய பாவத்தினால் இருதயத்தில் உணர்த்தப்பட வேண்டியது அவசியமாகும். ஏதோ சில வழியில் தாங்கள் பாவிகள் என்று ஒவ்வொருவரும் ஒத்துக்கொள்ளுகிறார்கள். தாங்கள் பரிபூரணமுள்ளவர்கள் அல்ல, சில தவறுகள் செய்திருக்கிறோம் என்று ஒவ்வொருவரும் ஒத்துக்கொள்ளு கிறார்கள். நான் அதைப்பற்றி பேசவில்லை.

உண்மையான அல்லது குறிப்பிட்ட பாவவிழிப்புணர்வைப்பற்றி நான் பேசவில்லை. ஆமாம், அந்தப் பாவி அநேக பாவங்களைச் செய்திருக்கிறார். ஆனால் அந்தப் பாவங்களைப்பற்றி வெறுமையாக நினைத்துக் கொண்டிருப்பது அவரை இரட்சிக்காது. நீ ஒரு குறிப்பிட்ட பாவப்பட்டியலைக் காட்டி சொன்னால், அந்தப் பாவி நினைக்கலாம், “அந்தப் பாவங்களை எல்லாம் நான் செய்யவில்லை, அதனால் நான் இரட்சிக்கப்பட முடியும்”. அல்லது ஒருவேளை அவர் நினைக்கலாம், “நான் அந்தக் காரியங்களைச் செய்வதை நிறுத்தி விடுகிறேன் மற்றும் நான் இரட்சிக்கப்பட்டிருப்பதை அது காட்டும்”.

பாவம் அதற்கும் இன்னும் அதிக ஆழமாக போகிறது. நாம் ஒவ்வொருவரும் ஆதாமிடமிருந்து சுதந்தரித்துக் கொண்ட ஒரு பாவசுபாவத்தின் காரணமாக, நாம் உள்ளாக பாவிகளாக இருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் பொல்லாத இருதயம் உள்ளவர்களாக இருக்கிறோம். வேதம் சொல்லுகிறது, “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமா யிருக்கிறது” (எரேமியா 17:9). ஒவ்வொரு பாவியும் உள்ளாக சுயநலம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு பாவியும் தன்னுடை இருதயத்தில் தேவனுக்கு விரோதமாக உள்ளவர்களாக இருக்கிறார்கள். இது ஒரு நபர் செய்த குறிப்பிட்ட பாவங்களைக் காட்டிலும் அதிக ஆழமானதாகும். அவர்கள் என்னவாக இருக்கிறார்களோ அதிலிருந்து வந்ததுதான் அவர்கள் செய்தவைகள் ஆகும். ஒரு பாவி செய்தவைகளைவிட அதிக ஆழமாக, அவனுடைய இருதயத்திலும், அவனது முழுஆள்தத்துவத்திலும், பாவம் நிறைந்து மற்றும் தவறுகள் உள்ளன. பாவி தன்னுடைய சொந்த இருதயத்தின் பாவத்தை உணர வேண்டியது அவசியம். இந்தப் போதனைக்குப் பிறகு, அவரிடம் பேசும்போது அவருடைய இருதயத்தின் பாவத்தை அவருக்குச் சொல்லுங்கள்.

ஒரு வெள்ளாடு தன்னால் ஒரு செம்மறி ஆடாக மாற்றிக்கொள்ள முடியாததுபோல, ஒரு பாவி தன்னுடைய சொந்த இருதயத்தை தன்னால் மாற்றிக்கொள்ள முடியாது. அவன் இழக்கப்பட்டான் மற்றும் அவனால் தன்னை தானே இரட்சித்துக்கொள்ள முடியாது என்பதற்கு அதுதான் அர்த்தமாகும். அவன் தானாகவே கிறிஸ்துவை நம்ப முடியாது. தேவன் மட்டுமே அவனை இயேசுவிடம் இழுக்க முடியும். கிறிஸ்து சொன்னார், “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” (யோவான் 6:44). இது “அந்த சுவிசேஷ பிடிப்பு” என்று அழைக்கப்படுகிறது – அந்தப் பாவி கிறிஸ்துவிடம் வரவேண்டியது அவசியமாகும், ஆனால் அதை அவனால் செய்ய முடியாது. தன்னை தானே இரட்சித்துக்கொள்ள அவனால் ஒன்றும் செய்ய முடியாது. வேதாகமம் சொல்லுவதைப்போல, “இரட்சிப்பு கர்த்தருடையது” (யோனா 2:9). அந்தப் பாவி ஏசாயா சொன்னதுபோல இருக்க வேண்டும், “நான்: ஐயோ! அதமானேன்” (ஏசாயா 6:5). அவனுடைய இருதயத்தின் பாவத்தை அவனுக்குக் காட்டுங்கள். தன்னை தானே இரட்சித்துக்கொள்ள அவனால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை அவனுக்குக் காட்டுங்கள். அவனுக்கு இரக்கம் வேண்டும் என்பதை அவனுக்குக் காட்டுங்கள். அதன்பிறகு அவன் ஒருவேளை கிறிஸ்துவிடம் வருவான்.

5. ஐந்தாவதாக, அந்தப் பாவி தனது இருதயத்தின் பாவத்தினால் உணர்த்தப்பட்டால், கிறிஸ்துவிடம் அவனை நடத்த முயற்சி செய்யுங்கள்.

என்னிடம் பேசுவதற்காக வரும் ஒவ்வொருவரையும் நான் கிறிஸ்துவிடம் நடத்துவதில்லை! சில மக்கள் அறிய ஆவல் உள்ளவர்களாக மட்டுமே இருப்பார்கள். அவர்கள் தங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட விரும்பமாட்டார்கள். சில மக்கள் மற்றவர்கள் வருவதை பார்த்ததால் மட்டுமே வருகிறார்கள். சில மக்களுக்குத் தங்கள் பாவத்தைப்பற்றிய உணர்வே இருக்காது மற்றும் தேவனால் கொடுக்கப்பட்ட எழுப்புதல் இருக்காது. சுற்றிலும் உள்ளவர்களை முட்டாளாக்கும் மக்களை ஒரு ஜெபத்தில் கிறிஸ்துவை நம்பும்படி நடத்துதல் ஒரு பொய்யான மாறுதலுக்கு மட்டுமே கொண்டுவரும். ஒரு நபர் கிறிஸ்துவை நம்புவார் என்று எப்பொழுது காணப்படும்?

அந்தப் பாவி “தன்னைத்தானே அருவருக்க வேண்டியது அவசியம்”, நமது சபையில் ஒரு பெண் சொன்னதுபோல. அவன் “தன்னை வெறுத்து விட்டுவிட” வேண்டியது அவசியம். அவன் “தன்னுடைய முடிவில் வர” வேண்டியது அவசியம். ஏசாயா சொன்னபொழுது அவர் தமது முடிவில் தானாக வந்தார், “நான் ஐயோ! அதமானேன்” (ஏசாயா 6:5). அதன்பிறகு இயேசுவை நம்புவது இன்னும் அதிக எளிமையானதாகும். அவர் ஏதையாவது சிலவற்றை கற்றுக்கொள்ள முயற்சி செய்யவில்லை. அவரை இரட்சிக்க கிறிஸ்து அவருக்குத் தேவையாக இருக்கிறார்.

அந்தப் பாவி கிறிஸ்துவைதானே நம்ப வேண்டும். அந்தப் பாவியை இயேசு கிறிஸ்துவிடம் மற்றும் அவருடைய இரத்தத்தின் மூலமாக பாவமன்னிப்புக்கு நடத்துங்கள். நீங்கள் அந்த நபரை ஒரு எளிமையான ஜெபத்தினால் அவரை நடத்த முடியும் உதாரணமாக “இயேசுவே, நான் உம்மை நம்புகிறேன். உம்முடைய இரத்தத்தினால் என்னுடைய பாவங்களைக் கழுவியருளும்”. அல்லது ஜெபமே இல்லாவிட்டாலும் பரவாயில்லை, கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக மன்னிப்புக்கு அவரை கிறிஸ்துவின் பக்கமாக கொஞ்சம் திருப்பி விடுங்கள். அந்தப் பாவி ஒரு ஜெபத்தை செய்ய வேண்டிய தேவை இல்லை. அந்தப் பாவி இயேசுவை ஒரு படமாக தனது மனதிலே வைக்க வேண்டிய தேவை இல்லை. வார்த்தைகள் “சரியாக” இருக்க வேண்டும் என்பதல்ல. சில மக்கள் மனப்பாடம் செய்து – அதை திரும்ப சொல்லுவார்கள் – “சரியான” வார்த்தைகளை சொல்லுவார்கள் ஆனால் கிறிஸ்துவை நம்பமாட்டார்கள். சிலுவையில் இருந்த கள்ளன் பரிபூரணமான வார்த்தைகளைச் சொல்லவில்லை. அவன் சொன்னான், “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” (லூக்கா 23:42). ஆனால் அவன் தன்னை ஒரு நம்பிக்கையில்லாத பாவியாக அறிந்திருந்தான் மற்றும் அவன் கிறிஸ்துவிடம் திரும்பினான். அது அவ்வளவு எளிமையாக இருந்தது! கர்த்தர் அவனிடம் சொன்னார், “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்” (லூக்கா 23:43). வார்த்தைகளைச் சொல்லுவதைவிட கிறிஸ்துவை நம்புவது மிகவும் அதிகமான முக்கியமானதாகும்!

6. ஆறாவதாக, அந்த பாவியோடு நீ பேசின பிறகு, ஒருசில எளிமையான கேள்விகளை கேட்க வேண்டும்.

அவரைக் கேளுங்கள், “நீ இயேசுவை நம்பிவிட்டாயா?” அவர் “இல்லை” என்று சொன்னால், மறுபடியுமாக அவரோடு பேசுங்கள். அவர் “ஆம்” என்று சொன்னால் எப்பொழுது அவர் இயேசுவை நம்பினார் என்று கேளுங்கள். அவர், “என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் அவரை நம்பினேன்” என்று சொன்னால் அல்லது “நீண்ட நாட்களுக்கு முன்பாகவே நான் அவரை நம்பினேன்,” என்று சொன்னால் அவர் இன்னும் இரட்சிக்கப்படவில்லை.

அவர், “நான் இப்பொழுதுதான் கிறிஸ்துவை நம்பினேன்,” என்று சொன்னால் அவர் என்ன செய்தார் என்று அவரிடம் கேளுங்கள். அவருடைய நம்பிக்கையின் செயலைச் சொந்த வார்த்தைகளால் அவரே விவரிக்கும்படி முயற்சி செய்யுங்கள். மக்கள் அவர்கள் கேட்கும் “சபை வார்த்தைகளை” மனப்பாடம் செய்துகொண்டு திரும்ப அவைகளைச் சொல்லுவார்கள் ஒருவேளை அவர்கள் மனந்திரும்பாமல் இருந்தாலும் அப்படி செய்வார்கள். தன்னுடைய நம்பிக்கையில் அந்தப் பாவி என்ன செய்தான்? இயேசுவைப் பற்றி அவன் சிலவற்றை விசுவாசித்தானா? அவன் ஒரு உணர்ச்சியை நம்பினானா? அல்லது கிறிஸ்துவைதானே நேரடியாக நம்பினானா?

அவரிடம் கேளுங்கள், “இயேசு கிறிஸ்து உனக்காக என்ன செய்தார்?” அந்த நபர் கிறிஸ்துவின் மன்னிப்பு மற்றும் அவருடைய இரத்தத்தின் மூலமாக பாவ மன்னிப்பு பற்றி பேசவில்லையானால், தன்னுடைய சொந்தக் கருத்துகளை அல்லது உணர்ச்சிகளை அல்லது நன்மைகளைப் பற்றி பேசினால், அவன் இரட்சிக்கப்படவில்லை!

அவனிடம் கேளுங்கள், “இன்றைக்கு நீ மரித்தால், பரலோகத்துக்குப் போவாயா அல்லது நரகத்துக்குப் போவாயா?” அவன் “பரலோகம்” என்று சொன்னால், அவனிடம் ஏனென்று கேளுங்கள். அவன் ஏன் பரலோகத்துக்கு விட வேண்டும் என்று அவனைத் தேவன் கேட்டால் அவன் தேவனிடம் என்ன சொல்லுவான்? அந்த நபர் நற்கிரியைகளைப் பற்றி பேசினால் அல்லது கிறிஸ்துவுக்குப் பின்னாக சில காரியங்களைப் பற்றி சொன்னால் மற்றும் அவருடைய இரத்தத்துக்குப் பின்னாக சில காரியங்களைச் சொன்னால், அவன் இரட்சிக்கப்படவில்லை! அதன்பிறகு அவரிடம் கேளுங்கள், “இப்பொழுது இருந்து ஒரு வருடத்துக்கு, உன்னிடம் ஒரு தீமையான எண்ணம் இருந்தால் பிறகு நீ மரித்தால், நீ எங்கே போவாய்?” அவன் “நரகத்துக்கு” என்று சொன்னால், அவன் தன்னுடைய நன்மையைச் சார்ந்திருக்கிறான் மற்றும் கிறிஸ்துவின் மேல் சார்ந்திருக்கவில்லை. அதன்பிறகு அவரிடம் கேளுங்கள், “இப்பொழுது இருந்து ஒரு வருடத்திற்குப் பிறகு, நீர் சபையை விட்டு பின்வாங்கிபோனால், மற்றும் ஒரு பெண்ணோடு (அல்லது ஆணோடு) விவாகமாகாமல் வாழ்ந்தால், பாலுறவு வைத்துக் கொண்டால், மற்றும் நீ ஒவ்வொரு நாளும் போதைப் பொருள்களை எடுத்துக்கொண்டால், உன்னால் ஒரு கிறிஸ்தவனாக இருக்க முடியுமா அல்லது முடியாதா?” அவர் “ஆம்” என்று சொன்னால் இன்னும் ஒருபோதும் பாவத்தின் பிரச்சனையில் சலகிரணை செய்யவில்லை, மற்றும் இழக்கப்பட்டவராக இருக்கிறார்.

அவரிடம் கேட்கவேண்டியது முக்கியம் வெறும் வார்த்தையாகச் சொல்வதைவிட, “நான் இயேசுவை நம்பினேன்,” என்ற வார்த்தைகளை விட அவருடைய நம்பிக்கையின் சமயத்தில் அவர் இயேசுவோடு என்ன செய்தார் என்பது விவரிக்கப்பட வேண்டும். அவருடைய முழு வாழ்க்கை கதையை அல்ல, ஆனால் அவருடைய நம்பிக்கையின் நேரத்தைப் பற்றி அறிந்துகொள்ள விருப்பமாக இருக்க வேண்டும் அல்லது அந்த நாளில் நடந்த எல்லா காரிங்களையும் பற்றி அல்ல. ஒரு குறிப்பிட்ட கருத்து அல்லது உணர்ச்சி அவசியமல்ல. ஆனால் அவனுடைய பாவத்தில் மூலக்கூருகள் மற்றும் அந்தப் பாவம் கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் மன்னிக்கப்பட்டது மற்றும் கிறிஸ்துவை மட்டுமே நம்பும் செயல் அங்கே இருக்க வேண்டியது அவசியம். வித்தியாசமான மக்களுக்கு அனுபவங்களின் விவரங்கள் வித்தியாசமானதாக இருக்கலாம். போலித்தனம் இல்லாததாக, அந்த நபர் உண்மையாக என்ன சொல்லுகிறார் என்பதை நான் எதிர்பார்க்கிறேன்.

அந்த நபர் ஏதாவது தவறாக சொன்னால், அந்தத் தவறைச் சரி செய்யுங்கள் மற்றும் மறுபடியும் அவரோடு பேசுங்கள். ஆனால் ஒரு நபர் ஒரே தவறைத் திரும்பத்திரும்பச்செய்தால் அதைப்பற்றி சீரியஸாக இல்லாதிருந்தால் அவர் மனந்திரும்பவில்லை என்பதை அது காட்டுகிறது. இரட்சிப்புக்காக தேவனால் இழுக்கப்படுகிறவர்கள் போதனைக்குச் செவி கொடுப்பார்கள் மற்றும் உங்கள் ஆலோசனைகளுக்கும் செவிகொடுப்பார்கள். கவனிக்காதவர்கள் மனந்திரும்ப மாட்டார்கள்.

நீ ஒரு நபரோடு பேசினபிறகும் அவர் மனந்திரும்பாமல் போனால் சோர்ந்து போய்விட வேண்டாம். முதல்முறையாக சுவிசேஷத்தை கேட்கும்பொழுது ஒரு சில மக்களே மனந்திரும்பலாம், ஆனால் அதிகமானவர்கள் அல்ல. அநேக மக்கள் சுவிஷேத்தை மறுபடியும் மறுபடியுமாக கேட்ட பிறகுதான் கிறிஸ்துவை நம்புவார்கள்.

ஒருதரத்துக்கும் அதிகமாக ஒவ்வொரு நபரையும் சோதனை செய்யுங்கள். மக்களுக்கு உடனடியாக ஞானஸ்நானம் கொடுக்க வேண்டாம். அவர்களை குறைந்த பட்சம் ஒரு வருடமாவது காத்திருக்க சொல்லுங்கள், ஒருவேளை இரண்டு வருடங்கள் இந்தத் தேவதூஷணம் நிறைந்த சபைகள் உள்ள நமது நாட்களுக்கு அது இன்னும் நல்லது. ஒருவேளை இரண்டு அல்லது மூன்று வருடங்கள் மிகவும் நல்லது. அவர்களுடைய விசுவாசம் உண்மையானதுதானா என்பதை பார்க்க அது வசதியாக இருக்கும். அந்தக் காலத்தில் அந்த நபரை பலவழிகளில் சோதித்து அறியலாம். அவருடைய சாட்சியைக் கேட்கலாம் – ஒரு சபைகூட்டத்துக்கு வெளியே. பல வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பிறகு நீங்கள் மறுபடியும் கேட்க முடியும். கிறிஸ்துவை நம்பாதவர்கள் தங்களுடைய “சாட்சியை” மறந்து விடுவார்கள் மற்றும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் தவறுகள் செய்வார்கள். அவர்கள் “கடந்துசெல்ல” மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட மட்டுமே விரும்புவார்கள், ஆனால் அவர்கள் இயேசுவை நம்பமாட்டார்கள். மற்றவர்களால் வேதவசனங்களை மனப்பாடம் செய்து திரும்ப சொல்ல முடியும், ஆனால் அவர்களுக்கு என்ன சொல்லுவது என்று அறியாமல் இருப்பார்கள், ஏனென்றால் அவர்கள் இயேசுவை நம்பினதில் தனிப்பட்ட அனுபவம் இல்லாதிருப்பார்கள்.

அவர்களுடைய நடத்தை மற்றும் நடைமுறையைப் பாருங்கள். உங்கள் சபையை விட்டுப்போகும் அல்லது உங்களுக்குச் செவிகொடுக்க மறுக்கும் ஒரு நபர் பாவத்தைக்குறித்து சீரியஸாக இல்லாதவர் மற்றும் கிறிஸ்துவை நம்பாதவர் என்பதைக் காட்டுகிறது. சபை மற்றும் கிறிஸ்தவர்களைவிட்டு தீய நடத்தையில் பிடிவாதமான ஒருநபர் பாவத்தைக்குறித்து சீரியஸாக இல்லாதவர் மற்றும் கிறிஸ்துவை நம்பாதவர் என்பதை காட்டுகிறது.

7. ஏழாவதாக, மெய்யான சோதனையான கலந்தாய்வு ஊழியத்தை கவனத்தில் கொள்ளுங்கள்.

மெய்யான சோதனையான கலந்தாய்வு ஊழியம் என்பது இது: அந்த நாளில் ஒரு நபர் கிறிஸ்துவை நம்பவில்லை அல்லது மனந்திரும்பவில்லை என்று உண்மையாக சொல்ல முடியுமா? ஒரு நபர் அவருடைய இரட்சிப்பைப்பற்றி திரும்ப வந்து உன்னோடு மறுபடியும் பேசினார் என்று உண்மையாக சொல்ல முடியுமா? எந்த ஒரு போதகரும் இதை செய்ததை நான் அறியேன். அதனால்தான் நம்முடைய சபைகள் இழக்கப்பட்ட மக்களால் நிறைந்திருக்கிறது, ஞாயிறு பள்ளி ஆசிரியர்கள், உதவிக்காரர்கள், போதகருடைய மனைவிகள், மற்றும் போதகர்களும்கூட இழக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். போதகர்கள் தங்களது அழைப்பை ஏற்று தங்களிடம் வரும் ஒவ்வொருவரையும் மேற்போக்காக ஜெபித்து அனுப்பி விடுகிறார். அவர்கள் ஞானஸ்நானம் கொடுத்த நபர்களை கணக்கிட அப்படி செய்கிறார்கள். அவர்கள் ஞானஸ்நானம் கொடுத்த நபர்களில் ஒருவரும் இரட்சிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் மறுபடியும் பிறக்காதவர்கள் ஆனபடியால் சபையில் உண்மையாக நிற்க மாட்டார்கள். இந்த மக்கள் “பின்வாங்கி போனவர்கள்” அல்ல. அவர்கள் இழக்கப்பட்டவர்கள் ஏனென்றால் போதகர் நேரம் எடுத்து அவர்கள் மெய்யாக மனந்திரும்பினவர்களா என்று நிச்சயப்படுத்தவில்லை. ஒரு நபர் இன்னும் இழக்கப்பட்டவராக இருக்கிறார் அவர் மறுபடியும் வரவேண்டும் என்று அறிவதுதான் மெய்யான உனது ஊழியத்தின் சோதனை ஆகும். இந்த வசனங்களில் கூறப்படும் மக்களைப்போல நீ இருக்கிறாயா “அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்”? (யோவான் 12:43). அல்லது மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உண்மையைப் பேசுகிறவனாக நீ இருக்கிறாயா?

இது இப்படி சொல்லக்கூடிய ஒருவழி: நீ உண்மையான மனந்திரும்புதலில் நம்பிக்கையாக இருக்கிறாயா – கிறிஸ்துவில் உண்மையாக நம்பிக்கை கொண்டிருப்பது ஒரு மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கையை உண்டாக்கும்? நீ ஒவ்வொருவரையும் ஒரு ஜெபத்திலே வற்புறுத்தினால், அல்லது தங்கள் கைகளை உயர்த்தும்படி செய்தால், அல்லது ஒரு அட்டையில் கையெழுத்து இடும்படி சொன்னால், நீ ஒரு “தீர்மானஇஸத்தை” சோந்தவன். தேவன் உன்னிடம் அனுப்பின மனித ஆத்துமாக்கள்மீது நீ கவனம் எடுத்துக்கொள்ளவில்லை.

உங்களில் சிலர் மெய்யான மனந்திரும்புதலில் விசுவாசம் வைத்திருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு நபரும் கிறிஸ்துவை நம்பி இருக்கிறார்கள் மற்றும் மெய்யாக மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று நேரம் எடுத்து நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டியதின் தேவையை, உங்களில் சிலர் பார்க்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு உண்மையுள்ள போதகர் செய்யவேண்டியது இதுதான். உண்மையுள்ள மேய்ப்பன் தனது ஆட்டுக்காக கவலைப்படுவான். உங்கள் மக்கள் ஒவ்வொரு நபரும் கிறிஸ்துவை நம்பி இருக்கிறார்கள் மற்றும் மெய்யாக மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று நேரம் எடுத்து உங்களால் முடிந்த வரையிலும் நிச்சயப்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.

இதிலே அதிக விளக்கமாக உள்ளே சென்றுவிட்டேன் என்று நீங்கள் நினைக்கலாம், அதாவது மனந்திரும்புதல் உண்மையாக ஒரு எளிமையான காரியம் அதற்கு அதிகமான கருத்து அவசியமில்லை என்று நினைக்கலாம். ஆனால் அந்த மருத்துவர் ஒரு குழந்தை பிரசவத்துக்கு எப்படி தாய்மை மருத்துவம் பார்ப்பது என்பதை விளக்கமாக அறியாதிருந்தால் என்ன ஆகும்? எல்லாரும் ஒரே காரியத்தைச் செய்தால், அல்லது தங்கள் கைகளைக் கழுவாவிட்டால், பிரசவ நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பவைகள் சரியாக தெரியாவிட்டால், என்ன ஆகும்? நாம் ஆத்துமாக்களின் பிரசவவிப்பை அந்தக் குழந்தை பிரசவத்தைப்போல கவனித்தால், மில்லியன் கணக்கான குழந்தைகள் அவசியமில்லாமல் மாண்டு போகும் மற்றும் நரகத்துக்குப் போகும் – ஏனென்றால் இப்பொழுதே மில்லியன் கணக்கான ஆத்துமாக்கள் அவசியமில்லாமல் மாண்டு நரகத்துக்குப் போகிறார்கள் ஏனென்றால் நாம் ஒவ்வொரு நபரும் கிறிஸ்துவை நம்பி இருக்கிறார்கள் மற்றும் மெய்யாக மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று நேரம் எடுத்து நம்மால் முடிந்த வரையிலும் நிச்சயப்படுத்திக் கொள்ளவில்லை, அல்லது நமது வேதப்பள்ளிகளிலும் செமினரிகளிலும் மக்களுக்கு இதை போதிக்கவில்லை – இது ஒருபோதும் எங்கும் கற்பிக்கப்படுவதே இல்லை!!!

நான் வாசிக்கப்போகிறேன் “பிறகு இயேசு வந்தார்,” என்ற ஓஸ்வால்டு ஜே. ஸ்மித்தின் வார்த்தைகளை மற்றும் ஹோமர் ரோடிஹேவர் அவர்களின் இசையின் மூலமாக நான் வாசிக்கப்போகிறேன். இயேசுவானவர் உனது வாழ்க்கையில் வரும்பொழுது, அவருடைய இரத்தம் உனது எல்லா பாவங்களையும் கழுவும்; சிலுவையிலே அவர் சிந்தின இரத்தம் உனது பாவங்களைக் கழுவ இன்னும் தயாராக இருக்கிறது. உனக்கு நித்திய ஜீவனைக்கொடுக்க இயேசுவானவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். இயேசுவானவரை மட்டும் நம்பு அவர் உனது பாவத்தை மன்னிப்பார் மற்றும் உனக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பார். நீங்கள் இன்று இரவு 6.15க்கு உள்ள விருந்துக்கு எங்களோடு திரும்ப வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் ஒரு சுவிசேஷ போதனையைப் பிரசங்கிப்பார் அதன் தலைப்பு, “இயேசுவானவரால் குணமாக்கப்பட்ட ஒரு குருடன்”. இன்று இரவு 6:15க்கு திரும்பி வருவதற்கு நிச்சயப்படுத்திக் கொண்டு டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் பிரசங்கத்துக்குப் பிறகு விருந்துக்குத் தங்கி இருங்கள்.

பிச்சைக்காரன் ஒருவன் நெடுஞ்சாலை ஓரத்திலே
தனியாக அமர்ந்திருந்தான்,
அவனது கண்கள் குருடாவை, வெளிச்சத்தை அவனால் பார்க்க முடியாது.
அவன் தனது கந்தைகளை பற்றியிருந்தான்
மற்றும் நிழலில் நடுங்கி கொண்டிருந்தான்
பிறகு இயேசு வந்தார் மற்றும் அவனது இருள் ஓடிவிட்டது.
இயேசு வரும்பொழுது,
சோதனைகாரனின் வல்லமை உடைக்கப்படுகிறது;
இயேசு வரும்பொழுது,
கண்ணீர்கள் துடைக்கப்படுகிறது,
அவர் இருளை எடுத்துக்கொண்டு
வாழ்க்கையை மகிமையினால் நிரப்புகிறார்,
இயேசு வந்து தங்கும்பொழுது எல்லாம் மாறிவிடுகிறது.

வீட்டிலிருந்தும் நண்பர்களிடமிருந்தும்
பொல்லாத ஆவிகள் அவனை துரத்திவிட்டன,
கல்லறைகளிலே அவன் பரிதாபத்தோடு வசித்தான்;
பிசாசுகளின் வல்லமை அவனை பிடித்திருந்ததால்
தன்னை தானே வெட்டிக்கொண்டான்,
பிறகு இயேசு வந்தார் மற்றும் அந்த அடிமையை விடுவித்தார்.
இயேசு வரும்பொழுது,
சோதனைகாரனின் வல்லமை உடைக்கப்படுகிறது;
இயேசு வரும்பொழுது,
கண்ணீர்கள் துடைக்கப்படுகிறது,
அவர் இருளை எடுத்துக்கொண்டு
வாழ்க்கையை மகிமையினால் நிரப்புகிறார்,
இயேசு வந்து தங்கும்பொழுது எல்லாம் மாறிவிடுகிறது.

அதனால் மக்கள் இன்று இரட்சகரை கண்டுகொள்ள முடிகிறது,
அவர்களால் இச்சை, காமம் மற்றும் பாவத்தை ஜெயிக்க முடியாது;
அவர்களது உடைந்த இருதயங்கள்
அவர்களை துக்கமாக மற்றும் தனிமையில் விட்டது,
பிறகு இயேசு வந்தார் மற்றும் அவராகவே, அவனில், வாசம்செய்தார்.
இயேசு வரும்பொழுது,
சோதனைகாரனின் வல்லமை உடைக்கப்படுகிறது;
இயேசு வரும்பொழுது,
கண்ணீர்கள் துடைக்கப்படுகிறது,
அவர் இருளை எடுத்துக்கொண்டு
வாழ்க்கையை மகிமையினால் நிரப்புகிறார்,
இயேசு வந்து தங்கும்பொழுது எல்லாம் மாறிவிடுகிறது.
(“Then Jesus Came” by Dr. Oswald J. Smith, 1889-1986;
music by Homer Rodeheaver, 1880-1955).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“Then Jesus Came” (by Dr. Oswald J. Smith, 1889-1986; music by Homer Rodeheaver, 1880-1955).


முக்கிய குறிப்புகள்

ஒரு ஆத்துமாவை கிறிஸ்துவிடம் நடத்துவது எப்படி –
மனந்திரும்புதலுக்காக கலந்தாய்வு செய்தல்!

HOW TO LEAD A SOUL TO CHRIST –
COUNSELING FOR CONVERSIONS!

சி. எல். கேஹன் அவர்களால் எழுதப்பட்டு ரெவரன்ட் ஜான் சாமுவேல் கேஹன் அவர்களால் பிரசங்கிக்கப்பட்ட ஒரு போதனை
A sermon written by Dr. C. L. Cagan
and preached by Rev. John Samuel Cagan

“நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகா விட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்” (மத்தேயு 18:3).

(யோவான் 3:3, 7; II கொரிந்தியர் 5:17)

1.  முதலாவது, போதகர்கள் பாவிகளிடம் செவிகொடுக்க வேண்டும்.

2.  இரண்டாவதாக, பாவிகள் இயேசு கிறிஸ்துவைப்பற்றி தவறு செய்வார்கள், ரோமர் 8:34; லூக்கா 24:37-43.

3.  மூன்றாவதாக, இரட்சிப்பைப்பற்றி பாவிகள் தவறு செய்வார்கள்,
தீத்து 3:5; யாக்கோபு 2:19; எபேசியர் 2:20.

4.  நான்காவதாக, பாவிகளுக்கு அவர்களுடைய இருதயங்களில் பாவத்தின் உணர்த்துதல் தேவையாக இருக்கிறது, எரேமியா 17:9;
யோவான் 6:44; யோனா 2:9; ஏசாயா 6:5.

5.  ஐந்தாவதாக, அந்தப் பாவி தனது இருதயத்தின் பாவத்தினால் உணர்த்தப் பட்டால், கிறிஸ்துவிடம் அவனை நடத்த முயற்சி செய்யுங்கள், ஏசாயா 6:5; லூக்கா 23:42, 43.

6.  ஆறாவதாக, அந்தப் பாவியோடு நீ பேசின பிறகு, ஒருசில எளிமையான கேள்விகளைக் கேட்க வேண்டும்.

7.  ஏழாவதாக, மெய்யான சோதனையான கலந்தாய்வு ஊழியத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள், யோவான் 12:43.