Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




கிறிஸ்துவின் சோதனை மற்றும் சாத்தானின் வீழ்ச்சி!

THE TEMPTATION OF CHRIST AND THE FALL OF SATAN!
(Tamil)

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

ஜூலை 29, 2018 கர்த்தருடைய நாள் காலை வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Morning, July 29, 2018


கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சாத்தானை எதிர்த்தார். மத்தேயு 4:1ஐ பாருங்கள். அது ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமத்தில் 997ஆம் பக்கத்தில் உள்ளது.

“அப்பொழுது இயேசு பிசாசினால் [மூலமாக] சோதிக்கப்
படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்” (மத்தேயு 4:1).

மேலே பாருங்கள். இங்கே சாத்தானுக்குக் கொடுக்கப்பட்ட முதல் பெயர் “பிசாசு” ஆகும். இது “டயாபோலோஸ்” என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது இதன் பொருள் “தூற்றுபவர்” அல்லது “அவதூறு பேசுபவர்” என்பதாகும். அவன் இயேசுவானவரை “அவதூறு செய்யும்படியாக” அவரைச் சோதித்தான். இப்பொழுது மூன்றாம் வசனத்தைப் பாருங்கள்,

“அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்” (மத்தேயு 4:3).

சாத்தானுக்கு இங்கே கொடுக்கப்பட்ட இரண்டாவது பெயர் “சோதனைக்காரன்” என்பதாகும். இது “பியாராசோ” என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகும் அதன் பொருள் “சோதனை செய்” அல்லது “பரீட்சித்துப் பார்” என்பதாகும். இயேசுவானவர் வேதாகமத்திலிருந்து, உபாகமம் 8:3ஐ குறிப்பிட்டார், “மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” (மத்தேயு 4:4).

இப்பொழுது, பிசாசுதானே வேதவசனத்தைக் குறிப்பிட்டான். சேக்ஸ்பியர் சரியாக சொன்னார், “பிசாசு தனது நோக்கத்துக்காக வேதவசனத்தை எடுத்துக்காட்ட முடியும்”. பிசாசு சங்கீதம் 91:11-12 வசனங்களைக் குறிப்பிட்டது, இருந்தாலும் அதை சரியான நுணுக்கமாக சொல்லவில்லை. யேகோவா விட்னஸ் மற்றும் மார்மான்ஸ் போன்ற சடங்காச்சாரவாதிகள் சில வேதவசனங்களை எடுத்துக்காட்டுவார்கள், ஆனால் அவைகளைச் சரியான நுணுக்கத்தோடு குறிப்பிடமாட்டார்கள். இயேசுவானவர் நுணுக்கமாக பிசாசுக்குப் பதில் அளித்தார்,

“அதற்கு இயேசு: உன தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்” உபாகமம் 6:16 (மத்தேயு 4:7).

பின்பு பிசாசு இயேசுவானவரை மூன்றாவது முறையாக சோதித்தான், அதாவது இயேசுவானவர் அவனை தொழுதுகொண்டால் உலகத்தின் இராஜ்ஜியங்களை எல்லாம் அவருக்குத் தருவதாக அவன் சொன்னான். இப்பொழுது மத்தேயு 4:10ஐ பாருங்கள்,

“அப்பொழுது இயேசு அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்” மேற்கோள் காட்டுகிறார் உபாகமம் 6:13 மற்றும் 10:20 (மத்தேயு 4:10).

டாக்டர் வெர்னான் மெக்ஜீ சொன்னார், “கர்த்தராகிய இயேசு சாத்தானுக்கு ஒவ்வொருமுறையும் வேதவசனத்திலிருந்து [வேதாகமம்] பதிலளித்தார். அவர் சரியான நல்ல பதில்களை [வேதாகமம்] கொடுத்ததாக பிசாசு நினைத்தான் என்பதாக காணப்பட்டது ஏனென்றால் அடுத்த வசனத்தில் நாம் வாசிக்கிறோம் ‘அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான்’ (மத்தேயு 4:11)” (J. Vernon McGee, Thru the Bible, notes on Matthew 4:1-11)

பத்தாம் வசனத்தில் இயேசுவானவர் பிசாசுக்கு மூன்றாவது பெயரைக் கொடுப்பதைக் குறித்துக்கொள்ளுங்கள், “எனக்குப் பின்னாலே போ, சாத்தானே...” இது கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகும், “சாட்டானாஸ்,” இதன் பொருள் “குற்றம் சாட்டுபவன்” என்பதாகும். இயேசுவானவர் உடைந்து கீழே விழவில்லை என்று நிரூபிப்பதற்காக அவர் சோதிக்கப்பட்டார். நீங்களும் நானும் இயேசுவானவரைப்போல அவ்வளவு பலம் உள்ளவர்கள் அல்ல என்று எனக்குத் தெரியும். ஆனால் நாம் அவருடைய மாதிரியைப் பின்பற்ற முடியும் மற்றும் அவருடைய சிப்பாய்களாக மற்றும் சீஷர்களாக இருக்க பயிற்சி எடுக்க முடியும்! கிறிஸ்துவானவர் ஒவ்வொரு சோதனையிலும் வேதாகமத்தை, தேவவசனத்தைக் குறிப்பிட்டுப் பதிலளித்தார் என்பதை கவனியுங்கள். அவர் சொல்லவில்லை, “நல்லது, நான் இதை அல்லது அதை நினைக்கிறேன்,” அல்லது “நல்லது, இது சிறந்த வழியாக இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன்”. இயேசுவானவர் சரியான தேவவசனத்தைக் குறிப்பிட்டுப் பிசாசுக்குப் பதிலளித்தார். வேதாகமத்தை புறக்கணிக்கும் மிகவும் சுயாதீனமான ஒரு இறையியல் கல்லூரியிலே, நான் எனது மேல்பட்ட படிப்பைப் படித்தேன். ஜான் கேஹன் படிக்கும் ஒரு நல்ல இறையியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க எனக்குப் போதுமான பணவசதி இல்லாதபடியினால் நான் அங்கே போகவேண்டியதாக இருந்தது. ஆனால் நான் அந்தக் கெட்ட கல்லூரியில் ஒன்றையும் கற்றுக்கொள்ளவில்லை. அங்கே விரியுரையாளர்களிடம் வேதாகமத்தைக் காட்டி அவர்களுக்குப் பதில் சொல்ல நான் கற்றுக்கொண்டேன். அவர்கள் என்னை குறுகிய மனமுள்ள அடிப்படைவாதி என்று அழைத்தார்கள். அது என்னை பாதிக்கவே இல்லை! நான் இயேசுவானவரைப் பின்பற்றிக்கொண்டு இருந்தேன். நான் அவருடைய சீஷனாக இருந்தேன் – அவர்களுடையவனாக இல்லை!

அதனால்தான் நீங்கள் இங்கே திரும்ப வந்து வேதாகமத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியது உங்களுக்கு மிகவும் முக்கியமாகும். வேறு சபைகளுக்கு அல்லது வேத ஆராய்ச்சிக்கு ஓடிவிட வேண்டாம். அந்தக் குழுவை நடத்தும் நபர் மிக நன்றாக வேதாகமத்தை அறியாதவராக இருக்கலாம், அதனால் அவர்களால் உன்னை கிறிஸ்துவின் ஒரு சீஷனாக பயிற்சி கொடுக்க முடியாது. நீ இங்கே தொடர்ந்து வந்துகொண்டு இருந்தால், நாங்கள் உனக்கு சுத்தமான தேவனுடைய வசனத்தை போதிப்போம், மற்றும் அநேக சாவி வசனங்களை மனப்பாடம் செய்ய வைப்போம். இன்று நீ மனப்பாடம் செய்ய ஒரு வசனம் இங்கே உள்ளது.

“நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்” (சங்கீதம் 119:11).

இப்பொழுது சாத்தான் எங்கே இருந்து வந்தான் என்று, வேத வசனத்திலிருந்து, நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தப் பெலவீனமான புதிய சுவிசேஷகரில் சிலர் சாத்தானைப்பற்றி அறிந்துகொள்ளுவது அவ்வளவு முக்கியம் அல்ல என்று சொல்லுவார்கள். ஆனால் நீ கிறிஸ்துவின் சீஷராக இருக்க விரும்பினால் பிசாசைப்பற்றி சிலவற்றை அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும்! ஏசாயா 14:12-15க்கு திருப்பிக்கொள்ளுங்கள். இது ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமத்தில் 726ஆம் பக்கத்தில் உள்ளது. தயவுசெய்து அதை எழுந்து நின்று நான் அதை சத்தமாக வாசிக்கும்பொழுது நீங்கள் அமைதியாக வாசிக்கவும்.

“அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத் திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்: உன்னதமானவருக்கு ஒப்பாவேன் (நான் தேவனாக இருப்பேன்!) என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்” (ஏசாயா 14:12-15).

நீங்கள் அமரலாம்.

12ஆம் வசனத்தில் பிசாசானவன் “லூசிப்பர்” என்று அழைக்கப்படுகிறான். எபிரெய பதத்தில் லூசிப்பர் என்றால் “பிரகாசமான வெளிச்சம்” என்பதாகும். பிசாசின் பெயர் “பிரகாசமான வெளிச்சம்” என்பதை அறிந்து கொண்டால் அது உங்களில் சிலருக்குப் பின்னர் உதவியாக இருக்கும். சில மதவாதிகள் மற்றும் பெந்தகோஸ்து குழுவினர் ஒரு “பிரகாசமான வெளிச்சம்” கண்டு அதை பரிசுத்த ஆவி என்று நினைக்கிறார்கள். இல்லை! இல்லை! அது சாத்தான்! அது லூசிப்பர்! II கொரிந்தியர் 11:14ல், வேதாகமம் சொல்லுகிறது, “சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.” நீங்கள் யாராவது ஒருவருடைய தலையின்மீது ஒரு வெளிச்சத்தைப் பார்க்கும்பொழுது, அது சாத்தான்! அது தேவன் அல்ல! அது பரிசுத்த ஆவி அல்ல. அது சாத்தான், “ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டவன்.” இன்று பிரபலமான புத்தகங்கள் உள்ளன அவைகளில் மக்கள் மரித்துப் போனார்கள், பிறகு பரலோகத்துக்குப் போனார்கள், பிறகு திரும்ப பூமிக்கு வந்தார்கள் என்பதைபற்றி பேசுகிறார்கள். அவர்கள் ஏறக்குறைய எப்பொழுதும் பரலோகத்தில் ஒரு “வெளிச்சத்தை” கண்டதாக பேசுவார்கள். நடைமுறையில் ஒவ்வொரு சம்பவத்திலும் அவர்கள் சாத்தான் மூலமாக ஏமாற்றப்பட்டவர்கள் – அவர்கள் சாத்தானைப் பார்த்தார்கள் மற்றும் அது தேவன் என்று நினைத்தார்கள்! ஆனால் அது சாத்தியமல்ல. கிறிஸ்து நமக்குச் சொன்னார்,

“தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை” (யோவான் 1:18).

அவர்கள் ஒரு “வெளிச்சத்தை” மெய்யாகவே கண்டிருந்தால் அது தேவன் அல்ல! அது ஒன்று லூசிபராக (சாத்தான்) இருக்க வேண்டும் அல்லது அவனுடைய பிசாசுகளில் ஒருவனாக இருக்க வேண்டும்! அது ஒருபோதும் தேவனல்ல!

ஏசாயா 14:12க்கு திரும்ப வருவோம். லூசிபர் பரலோகத்தைவிட்டு பூமியில் தள்ளப்பட்டபொழுது “நாடுகளை பலவீனப்படுத்தினான்.” உண்மையில் லூசிப்பரானவன் பரலோகத்திலே ஒரு வல்லமையுள்ள தூதனாக இருந்தான். ஆனால் லூசிப்பரானவன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொள்ள முயற்சி செய்தபடியினால் அவன் பரலோகத்தை விட்டு தள்ளப்பட்டான். ஏசாயா 14:13-15ஐ பாருங்கள், நான் அதை மறுபடியுமாக வாசிக்கிறேன். நீங்கள் தயவுசெய்து எழுந்து நில்லுங்கள்.

“நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்: உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்” (ஏசாயா 14:13-15).

ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமத்தில் 726ஆம் பக்கத்தில் அடியில் உள்ள குறிப்பை கவனியுங்கள். அது சொல்லுகிறது, “12-14 வசனங்கள் ஆதாரபூர்வமாக சாத்தானை குறிக்கிறது... இந்தப் பயங்கரமான பக்கம் இந்தப் பிரபஞ்சத்தில் பாவம் ஆரம்பித்ததைப்பற்றி குறிப்பிடுகிறது. லூசிப்பர் சொன்னபொழுது, “நான் சித்தமாக இருக்கிறேன்”, பாவம் ஆரம்பித்தது.” இப்பொழுது வெளிப்படுத்தல் 12:9ஐ பாருங்கள். அது ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமத்தில் 1341ஆம் பக்கத்தில் வேதாகம கடைசியில் இருக்கிறது. நான் இதை வாசிக்கும்பொழுது என்னை பின்பற்றுங்கள்.

“உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்” (வெளிப்படுத்தல் 12:9).

இங்கே அந்தப் பெரிய வலுசர்ப்பம் லூசிப்பர் ஆகும், சாத்தான், “பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பு”. இது உலகத்தின் முடிவில் சாத்தானுடைய மற்றொரு விழ்ச்சி என்று அநேக நவீன வல்லுனர்கள் சொல்லுகிறார்கள். ஏசாயா 14ல் நாம் வாசிக்கும் அதே வீழ்ச்சியை புரிந்துகொள்ள இந்த வசனம் உதவி செய்கிறது. இரண்டு சம்பவங்களிலும், சாத்தான் அங்கிருந்துதான் வருகிறான். 9ஆம் வசனத்தில் நமக்குச் சொல்லப்படுகிறது “அதனோடேகூட அதைச்சேர்ந்ததூதரும் தள்ளப்பட்டார்கள்”. இந்தக் கலகமுள்ள தூதர்கள் பிசாசுகளாகமாறி வேதாகமத்தின் இயேசுவானவரை எதிர்த்தார்கள். வெளிப்படுத்தல் 12:9ல் மற்றொரு வாக்கியத்தை கவனிக்க வேண்டும், “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற சாத்தான்”.

வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு சபைக்குப் போகாத கிறிஸ்தவராக இருந்தாலும், பிசாசு என்ற ஒன்று இருக்கிறது என்று அவர் புரிந்து கொண்டு இருந்தார். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் மற்றும் ஜெர்மானிய படைக்குப் பின்னால் பொல்லாத வல்லமையுள்ள பிசாசு இருந்தான் என்று சர்சிலுக்குத் தெரியும். அதனால்தான் அவரால் ஹிட்லரோடு சமாதானம் செய்துகொள்ள முடியாது என்று சர்ச்சில் அறிந்திருந்தார். மற்றவர்களான சாம்பர்லின், லாடு ஆலிபாக்ஸ் மற்றும் “சமாதானப்போக்காளர்கள்” ஹிட்லரோடு சமாதானம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தார்கள். ஆனால் இந்த உலகத்தில் பிசாசுகளின் வல்லமை நிறுத்தப்பட வேண்டும் அல்லது இறுதியில் சர்ச்சில் சொன்ன “கிறிஸ்தவ நாகரீகம்” முடிவுக்கு வந்துவிடும்.

கிறிஸ்துவின் சீஷர்களாக அதற்காக நாம் போராட வேண்டியது அவசியம். எனது தோழர், ரெவரண்ட் ஜான் கேஹன், நமது சத்துருவைப்பற்றி பிரசங்கிப்பார் – பிசாசு – இன்று இரவு 6.15க்கு பிரசங்கிப்பார். உங்களுக்கு ஒரு நல்ல, சூடான ஆகாரம் செய்து வைத்திருக்கிறோம் மற்றும் போதகர் ஜான் பிரசங்கத்தை கேளுங்கள். இன்று இரவு 6.15க்கு திரும்ப வருவதற்கு நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்!

தயவுசெய்து எழுந்து நின்று லூத்தர் அவர்களின் பாடலைப் பாடுங்கள், “நமது தேவன் ஒரு வல்லமையான கோட்டை”. இது உங்கள் பாட்டுத்தாளில் முதலாவது பாடலாகும். தயவுசெய்து எழுந்து நின்று இதை பாடவும்!

நமது தேவன் ஒரு வல்லமையான கோட்டை,
ஒருபோதும் தவறாத ஒரு கொத்தளம்,
   அழிவின் வெள்ள தீமைகள் பெருக்கின் மத்தியில்,
   அவர் நமது உதவியாளர்.
நமது பழைய சத்துரு நமக்குத் தீங்கு செய்ய
கிரியை செய்ய தேடும் வேளையில்;
   அவனுடைய ஏமாற்று மற்றும் வல்லமை பெரியது, மற்றும்,
   கொடூர வெறுப்பின் ஆயுதம் அணிந்தவன்,
பூமியிலே அவனுக்கு இணை இல்லை.

நமது சொந்த பெலத்தை நம்பி செயலாற்றினோமா,
நமது முயற்சி தோற்றுபோகும்,
   தேவனால் சொந்தமாக தெரிந்து கொள்ளப்பட்ட,
   சரியான மனிதர் நமது பக்கத்தில் இருக்கிறார்.
அது யாராக இருக்கும் என்று கேட்கிறாயா?
அது கிறிஸ்து இயேசுவே, அவரேதான்;
   அவரது பெயர் ஓய்வுநாளின் கர்த்தர்,
   காலத்தின் துவக்கமுதல் முடிவு மட்டும் மாறாதது,
மற்றும் அவரே யுத்தத்தில் ஜெயிக்க வேண்டும்.
(“A Mighty Fortress is Our God,” Martin Luther, 1483-1546).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“A Mighty Fortress Is Our God” (Martin Luther, 1483-1546).