Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




சீஷர்கள் மற்றும் பிசாசுகள்

DISCIPLES AND DEMONS
(Tamil)

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் எழுதப்பட்டு
ஜுலை 22, 2018 கர்த்தருடைய நாள் காலை வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில்
ரெவரண்ட் ஜான் சாமுவேல் கேஹனால் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon written by Dr. R. L. Hymers, Jr.
and preached by Rev. John Samuel Cagan
at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Morning, July 22, 2018


கிறிஸ்து தமது சீஷர்களுக்கு பயிற்சி கொடுத்ததில் இருந்து இது நாம் கொடுக்கும் மூன்றாவது பாடமாகும். இயேசுவானவர் தமது சீஷர்களுக்கு பயிற்சி கொடுத்ததை நாம் பின்பற்றும்பொழுது, சீஷர்களுக்கு பயிற்சி கொடுப்பது எப்படி என்று நாம் கற்றுக்கொள்ளுகிறோம்.

நமது சபைகள் இளம் மக்களை இன்று பயிற்சி கொடுக்க முயற்சிப்பதுபோல இயேசுவானவர் தமது சீஷர்களுக்கு பயிற்சி கொடுக்கவில்லை. இயேசுவானவர் தமது சீஷர்களுக்கு பயிற்சி கொடுத்ததை நாம் நெருக்கமாக பின்பற்ற வேண்டியது அவசியமாகும், ஏனென்றால் அவர் அதில் அதிகமாக வெற்றிபெற்றார், மற்றும் நமது சபைகள் வழக்கமாக தோல்வி அடைகின்றன. நமது சீஷர்கள் மாற்றப்படுவதற்கு முன்பாக நாம் அவர்களுக்குப் போதித்து சீஷராக்க முயற்சி செய்கிறோம் இது இன்று நம்முடைய தவறுகளில் ஒன்றாகும். ஆனால் இயேசுவானவர் தமது சீஷர்கள் மறுபடியும் பிறப்பதற்கு முன்பாக, மூன்று வருடங்கள் அவர்களுக்குப் போதித்தார் (யோவான் 20:22; ஜே. வெர்னான் மெக்ஜீ மற்றும் தாமஸ் ஹேல் பார்க்கவும்). இயேசுவானவர் தமது சீஷர்களுக்கு பயிற்சி கொடுத்ததும், மற்றும் நாம் இன்று பயிற்சி கொடுக்க முயற்சிப்பதற்கும் இது ஒரு பிரதானமான வித்தியாசமாகும்.

மற்றொரு பிரதானமான வித்தியாசம் கிறிஸ்து அவர்களுக்குப் போதித்த பாடங்களில் இருக்கிறது. ஆரம்பத்திலேயே இயேசுவானவர் அவர்களை அழைத்து சொன்னார், “உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்” (மாற்கு 1:17). அவர்களுக்கு ஒரு பிரதானமான நோக்கத்துக்காக பயிற்சி கொடுத்தார் – மற்றவர்கள் சீஷர்களாக மாறுவதற்கு உதவி செய்பவர்களாக அவர்களை மாற்றினார். அதுவே இயேசுவானவருடைய இலக்கு என்று ஆரம்பத்திலேயே அவர்களுக்குச் சொன்னார். அதுவே என்னுடைய இலக்காகவும் இருக்கிறது. இன்று ஞாயிறு பள்ளிகளில் போதிப்பதைப்போல, வேதாகம கதைகளை நான் இங்கே போதிக்கவில்லை. நீங்கள் ஆத்தும ஆதாயம் செய்பவர்களாக மாறவேண்டும், மற்றவர்கள் இயேசுவை பின்பற்ற மற்றும் இழக்கப்பட்ட ஆத்துமாக்கள் வெற்றிகொள்ளப்பட வேண்டும் என்பதாக போதிப்பது எனது இலக்கு ஆகும். இதை இயேசுவானவர் ஆரம்பத்திலேயே அவர்களுக்கு சொன்னார். (மாற்கு 1:16-20ஐ பார்க்கவும்).

கிறிஸ்துவானவர் அவர்களுக்குப் போதித்த இரண்டாவது காரியம் சாத்தானோடும் மற்றும் அவனுடைய பிசாசுகளோடும் எப்படி சலக்கிரனைச் செய்வது என்பதாகும். மாற்கு 1:21-27ஐ பாருங்கள்.

“பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, போதகம் பண்ணினார். அவர் வேதபாரகரைப்போலப் போதியா மல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடி யினால், அவருடைய போதகத்தைக்குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான். அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான். அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார். உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிட்டு, அவனை விட்டுப் போய்விட்டது. எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடு கிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண் டார்கள்” (மாற்கு 1:21-27).

மேலே பாருங்கள். கிறிஸ்து தமது முதலாவது நான்கு சீஷர்களுக்கு கற்றுக் கொடுத்த இரண்டாவது காரியம் சாத்தான் மற்றும் அவனுடைய பிசாசுகள் மீது அவருக்கு இருந்த வல்லமையை பற்றியதாகும். தி ரிபர்மேஷன் ஸ்டடி வேதாகமம் (பக்கம் 290) சொல்லுகிறது,

“பிசாசுகள் கீழேவிழுந்த தூதர்களாகும்... அவர்கள் சாத்தானை சேவிப்பவர்கள். சாத்தானுடைய கலகத்தில் அவனோடு சேர்ந்ததினால், அவர்கள் பரலோகத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டவர்கள்... சாத்தானுடைய பிசாசு களின் சேனை அநேக விதங்களில் ஏமாற்று மற்றும் தைரியம் அடைய [உபயோகம்] செய்பவைகள். அவை களை எதிர்த்துப் போராட ஆவிக்குரிய யுத்தம் இருக்கிறது” (எபேசியர் 6:10-18).

ஒரு புதிய சீஷனாக, சாத்தான் மற்றும் அவனுடைய பிசாசுகளைப்பற்றி நீ அறிந்துகொள்ள வேண்டும் என்று இயேசுவானவர் விரும்புகிறார். இயேசுவானர் எதிர்கொண்ட ஒரு மனிதர்களில் ஒருவன் பிசாசு பிடித்த மனிதனாகும். கிங் ஜேம்ஸ் வேதாகமத்தில் பிசாசுகள் என்ற கிரேக்க வார்த்தைக்கு “பேய்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்டது. மாற்கு 1:39ஐ பார்க்கவும்,

“கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெபஆலயங் களில் அவர் [இயேசு] பிரசங்கம் பண்ணிக்கொண்டும், பிசாசகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்” (மாற்கு 1:39).

இயேசுவானவரின் ஒரு சீஷனாக நீ மாறும்பொழுது, உன்னை சுற்றியுள்ள பிசாசுகளைப்பற்றிய விழிப்புணர்வு உனக்கு இருக்க வேண்டியது அவசியமாகும். வேதாகமததில் கொடுக்கப்பட்ட சத்தியத்தை அறியாதபடி பிசாசுகள் மக்களைக் குருடாக மாற்றும். நீங்கள் எங்கள் சபைக்கு வராதபடி பிசாசுகள் உங்களைக் காயப்படுத்தும் மற்றும் நிறுத்த முயற்சி செய்யும். நீ ஒரு கிறிஸ்தவனாக மாறாதபடி பிசாசுகள் உங்களை நிறுத்த முயற்சி செய்யும். டாக்டர் தாமஸ் ஹேல் சொன்னார்,

பிசாசு பிடித்தல் என்பது ஒருவித மனநோய் போன்றதல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். பிசாசுகள் அல்லது பொல்லாத ஆவிகள், பிசாசுகளின் தலைவனாகிய, சாத்தானுடைய அடிமைகள். அவைகள் பொல்லாதவைகளைச் செய்பவைகள். அவைகள் ஒரு மனிதனுக்குள் வரும்பொழுது, அவைகள் அவனை ஒரு சிறைக்கைதியாக அல்லது சாத்தானுக்கு அடிமையாக மாற்றுகின்றன. இயேசுவானவரின் வல்லமையினால் மட்டுமே இந்தப் பிசாசுகளை வெற்றிகொள்ள முடியும் மற்றும் அந்த மனிதனுக்கு விடுதலை கொடுக்க முடியும் (Thomas Hale, M.D., The Applied New Testament Commentary; note on Mark 1:21-28).

பொல்லாத போதையினால், மறைவான குற்றங்களால், மற்றும் தேவனுக்கு விரோதமான ஆழமான கலகங்களால் மக்கள் பிசாசினால் பிடிக்கப்படுகிறார்கள்.

“நல்லது,” ஒருவர் சொல்லுகிறார், “நான் போதைப் பொருளை எடுத்துக் கொள்ளுவதில்லை, நான் மறைவான குற்றங்களைச் செய்வதில்லை, இவைகளை நான் செய்யவில்லை.” நீங்கள் பாவத்தில் இவ்வளவாக போகாததற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் எப்படியானாலும், உங்கள் மனம் இவைகளில் ஈடுபட்டு வேலை செய்துகொண்டு இருந்திருக்கும் (சக்தியூட்டப்பட்டு) “ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவியினால்” (சாத்தான்; எபேசியர் 2:2). அதனால் உன்னுடைய மாற்றப்படாத மனது சாத்தானால் சக்தியூட்டபடுகிறது, “ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவியினால்”.

சாத்தான் செய்யும் இரண்டாவது காரியம் சத்தியத்துக்கு உன்னை குருடாக்குவது. II கொரிந்தியர் 4:3-4ஐ கவனியுங்கள்.

“எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப் போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமை யான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர் களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கி னான்” (II கொரிந்தியர் 4:3-4).

“இப்பிரபஞ்சத்தின் தேவனானவன்” என்பதை “இந்தக் காலத்தின் தேவன்” என்று மொழிபெயர்த்திருந்தால் நல்லது. இந்தக் காலத்தின் தேவன் சாத்தான். “அவர்கள் விசுவாசியாதபடிக்கு” அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். கிறிஸ்துவின் சுவிசேஷத்தை உங்களால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை என்று ஒருவேளை நீங்கள் ஆச்சரியப்படலாம். இதற்குப் பதில் எளிமையானது – இந்தக் காலத்தின் தேவன் [சாத்தான்] உன்னுடைய மனதைக் குருடாக்கினான். ஆனால் கிறிஸ்துவுக்குச் சாத்தனைவிட அல்லது அவனுடைய பிசாசுகள் எல்லாவற்றையும் விட, மிகவும் அதிகமான வல்லமை இருக்கிறது. அதனால்தான் இயேசுவானவர் கப்பர்நகூமில் அந்தப் பிசாசை எளிதாக துரத்தினார். கிறிஸ்து சொன்னார், “அவனை விட்டு வெளியே வா” அந்தப் பிசாசு “அவனை விட்டு வெளியே வந்தது” (மாற்கு 1:25, 26).

நீ ஒரு மெய்யான கிறிஸ்தவனாக மற்றும் இயேசுவின் ஒரு சீஷனாக இருக்க விரும்பினால், பிறகு உன்னுடைய சிந்தனையிலிருந்து சாத்தானுடைய கட்டுப்பாட்டை எடுத்துப்போட வேண்டியது அவசியமாகும். ஒரு ஹிப்பி ஒரு சமயம் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களிடம் சொன்னான், “எனக்கு ஒரு மூளை மாற்று சிகிச்சை தேவை.” அந்த வழி மிகவும் உச்ச அளவாகும். அந்த இளம் மனிதனுக்குத் தேவையானது என்னவென்றால் அவனது மனது இயேசுவின் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட வேண்டும். இயேசுவானர் செய்யும் வழி மிகவும் எளியதாகும். அவர் உனது மனதை தேவ வார்த்தையினால் கழுவுகிறார் – வேதாகமம். வேதாகமம் சொல்லுகிறது “அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறார்” (எபேசியர் 5:26). சங்கீதம் 119:130 சொல்லுகிறது,

“உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்” (சங்கீதம் 119:130).

நீ இயேசுவின் ஒரு சீஷனாக இருக்க விரும்புகிறாயா? ஆரம்பிப்பதற்கு ஒரு அனுபவபூர்வமான வழி இங்கே இருக்கிறது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் போதனை பிரதிகளில் இருந்து ஒரு போதனையை நீ படுக்கைக்குப் போவதற்கு முன்னதாக வாசி. எங்களது வலைதளம் www.sermonsfortheworld.com. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் போதனை பிரதிகளில் இருந்து ஒரு போதனையை நீ படுக்கைக்குப் போவதற்கு முன்னதாக ஒவ்வொரு நாளும் வாசித்தால், வேதவசனங்கள் மற்றும் விமர்சனங்கள் உனது மனதை சுத்திகரிக்கும் நீ விரைவாக இயேசுவை நம்புவாய் மற்றும் இரட்சிக்கப்படுவாய்! பாடல் எண் 5ஐ தயவுசெய்து எழுந்து நின்று பாடவும், “வேதாகமம் உண்மை என்று நான் அறிந்திருக்கிறேன்.”

வேதாகமம் தேவனிடமிருந்து அனுப்பப்பட்டது
என்று நான் அறிந்திருக்கிறேன்,
பழைய, அதேசமயம் புதிய ஏற்பாடுகளும்;
   ஏவப்பட்ட பரிசுத்தமான, ஜீவனுள்ள வார்த்தை,
   வேதாகமம் உண்மை என்று நான் அறிந்திருக்கிறேன்.
எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும்,
வேதாகமம் உண்மை என்று எனக்குத் தெரியும்;
   தெய்வீகமாக முழுமையான வழியிலும் ஏவப்பட்டு அருளப்பட்டது,
   வேதாகமம் உண்மை என்று நான் அறிந்திருக்கிறேன்.

வேதாகமம் முழுமையும் உண்மை என்று நான் அறிந்திருக்கிறேன்,
எனக்குள்ளாக இது சமாதானத்தை கொடுத்தது;
   இது என்னை காண்கிறது, நாளுக்கு நாள் என்னை ஆற்றுகிறது,
   மற்றும் பாவத்தின்மேல் எனக்கு வெற்றி தருகிறது.
எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும்,
வேதாகமம் உண்மை என்று எனக்குத் தெரியும்;
   தெய்வீகமாக முழுமையான வழியிலும் ஏவப்பட்டு அருளப்பட்டது,
   வேதாகமம் உண்மை என்று நான் அறிந்திருக்கிறேன்.

எதிரிகள் தைரியமான ஒரு ஆவியோடு மறுத்தாலும்
அந்தச் செய்தி பழையது, ஆனால் இன்னும் புதியது,
   அதன் சொல் அதன் சத்தியம் ஒவ்வொரு தரமும் இனிக்கும்,
   வேதாகமம் உண்மை என்று நான் அறிந்திருக்கிறேன்.
எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும்,
வேதாகமம் உண்மை என்று எனக்குத் தெரியும்;
   தெய்வீகமாக முழுமையான வழியிலும் ஏவப்பட்டு அருளப்பட்டது,
   வேதாகமம் உண்மை என்று நான் அறிந்திருக்கிறேன்.
(“I Know the Bible is True,” Dr. B. B. McKinney, 1886-1952).

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
     “I Know the Bible is True” (Dr. B. B. McKinney, 1886-1952).