இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
சீஷத்துவத்துக்கு அழைப்புTHE CALL TO DISCIPLESHIP ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் ஜூலை 1, 2018 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் “பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்” (லூக்கா 9:23-24). |
இதை கிறிஸ்து யாருக்குச் சொல்லுகிறார்? இங்கே இருந்த 12 சீஷர் அனைவருக்கும் அவர் சொன்னார். ஆனால் இதற்கு இணையான பகுதியாகிய மாற்கு 8:34ல் அவர் இதை சொன்னார். “பின்பு அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக் அதனால் இயேசுவானவர் இதை தம்மை பின்பற்றும் அநேக மக்களுக்கு – அந்த பன்னிரண்டுபேர் உட்பட சொன்னார் என்பது தெளிவாகிறது. இயேசுவானவரின் சீஷராக இருப்பதற்கு நீங்கள் அனைவரும் உங்களை வெறுத்து, உங்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு, அவரை பின்பற்ற வேண்டும். அதை நீ செய்யவில்லையானால், நீ ஒரு உண்மையான கிறிஸ்தவனாக இருக்க முடியாது – ஒரு பெலவீனமான சுவிசேஷகனாக, பெயரளவில் மட்டுமே ஒரு கிறிஸ்தவனாக நீ இருப்பாய்! இயேசு சொல்லுகிறார், “நீ என்னை பின்பற்றுகிறவனாக இருக்க விரும்புகிறாயா? அப்படியானால் உன்னை வெறுத்து, உன் சிலுவையை எடுத்துக்கொண்டு, மற்றும் என்னை பின்பற்ற வேண்டும்.” அதை செய்யமறுத்தால் உனக்கு என்ன நடக்கும்? இந்தப் பகுதி அதை தெளிவாக்குகிறது. வசனம் 24ஐ வாசியுங்கள், “தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்” (லூக்கா 9:24). இரண்டு விதமான மக்கள் நமது சபைக்கு வருகிறார்கள். நான் அவர்களை “எடுப்பவர்கள்” மற்றும் “கொடுப்பவர்கள்” என்று அழைக்கிறேன். “எடுப்பவர்கள்” என்றால் சபையிலிருந்து எதையாவது “பெற்றுக்கொள்ளலாம்” என்று வருபவர்கள் ஆகும். “கொடுப்பவர்கள்” என்றால் கிறிஸ்துவின் சீஷர்களாக இருக்க தங்களையே கொடுப்பவர்களாகும். நீங்கள் சுயநலமுள்ள மக்களால் ஒரு நூறு நாற்காலிகளை நிரப்பலாம். அது என்ன செய்யும்? அப்படிப்பட்ட நூறு மக்கள் இருந்தால் அது இந்தச் சபையைக் கொன்றுவிடும்! அவர்கள் ஞாயிறு மாலை கூட்டத்துக்குகூட வரமாட்டார்கள்! அவர்கள் சுவிசேஷக “எடுப்பவர்கள்” ஆகும். மற்றும் எடுத்துக்கொண்டே மற்றும் எடுத்துக்கொண்டே இருப்பவர்கள் சபையைக் கொள்ளை இடுபவர்கள் ஆகும் – அவர்கள் ஒருபோதும் ஒரு சபைக்கு உதவி செய்ய மாட்டார்கள். அவர்கள் ஒருபோதும் கிறிஸ்துவின் சீஷர்களாக மாறமாட்டார்கள்! அவர்கள் ஒரு சபையை அழிப்பார்கள்! அப்படிப்பட்ட சுயநலமுள்ள மக்களை கொண்டுவர துணிவுகொள்ளாதீர்கள்! “அதிகமானதை விட குறைவானது மிகநல்லது.” “தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்” (லூக்கா 9:24). யாரோ சொல்லுகிறார்கள், “விடவேண்டியது மிக அதிகமாக இருக்கிறது – மிக அதிகமாக இழப்பு ஏற்படும்”. அதனால், அவர் எல்லாவற்றையும் இழக்கிறார் அதனால், அவர் நரகத்துக்குப் போகிறார்! இயேசுவை நம்புவதற்காக, நீ வேறு எதையும் நம்ப முடியாது. இயேசு கிறிஸ்துவை தவிர வேறு எதையாவது நீ நம்பினால், நீ எல்லாவற்றையும் இழந்துவிடுவாய். “தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்” (லூக்கா 9:24). நான் பதினேழு வயதுள்ளவனாக இருந்தபொழுது நான் “பிரசிங்கிப்பதற்கு ஒப்புக்கொடுத்தேன்.” அந்தப் பழைய பாணிநடையை நான் விரும்புகிறேன், “பிரசிங்கிப்பதற்கு ஒப்புக்கொடுத்தல்”. அதை நான் இனிமேலும் கேட்கவில்லை. ஆனால் அது எப்பொழுதையும்போல இப்பொழுது உண்மையாக இருக்கிறது. ஒரு உண்மையான பிரசங்கி பிரசிங்கிப்பதற்கு “ஒப்புக்கொடுத்தல்” அவசியம். அது சுலபமானது அல்ல என்று அவருக்குத் தெரியும். அதனால் அதிக பணம் சம்பாதிக்க முடியாது என்று அவருக்குத் தெரியும். உலகம் கைகொட்டி தன்னை வரவேற்காது என்று அவருக்குத் தெரியும். அவர் செல்லவிருக்கும் கஷ்டம் பாடுபற்றி ஒரு சிறிது அவருக்குத் தெரியும். மிக சிறந்த பிரசங்கிகள் இந்தக் காரியங்களை அறிந்திருக்கிறார்கள். அநேக ஆண்டுகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் – அதிக சம்பளமில்லாத ஒரு வேலைதான் கிடைக்கும் – இழக்கப்பட்ட இந்த உலகம் இது உபயோகமில்லாத ஒரு வேலை என்று நினைக்கும் – அவன் பரிகாசம் செய்யப்படவும் மற்றும் உலகத்தின் அதிகமான மக்களுக்கு விரோதமாக போராட வேண்டிய ஒரு வேலையாகும். நான் 17 வயதுக்குப் பிறகு இதை விரைவாக அறிந்து கொண்டேன். எனது கல்லூரி பட்டத்தைபெற இரவில் எட்டு வருடங்கள் அது எடுத்துக் கொண்டது (ஒரு நாளுக்கு எட்டு மணிநேர வேலை மற்றும் இரவில் கல்லூரிக்குச் செல்ல வேண்டும்). நான் ஒரு நாளைக்கு 16 மணி நேரங்கள், வாரத்தின் ஏழு நாட்களிலும், இரவு கல்லூரி படிப்புக்காக கட்டணம் செலுத்த உழைக்க வேண்டியதாக இருந்தது. என்னுடைய இறையியல் படிப்புக்காக, மேலும் மூன்று வருடங்கள் மேல் படிப்புப் பட்டம்பெற உழைத்தேன், நான் வெறுத்தேன். இதுபோன்ற ஒரு சபையை பெற்றுக்கொள்ள எனக்கு நாற்பது வருடங்கள் எடுத்துக்கொண்டது. நான் மறுபடியுமாக இதையெல்லாம் செய்ய முடியுமா? ஓ, ஆமாம்! அதைபற்றி எந்தக் கேள்வியும் இல்லை! நான் ஏன் இதற்குள் போனேன்? நான் பிரசிங்கிப்பதற்கு ஒப்புக்கொடுத்திருந்தேன். இது அதை போன்ற அவ்வளவு எளிதானது. நான் 17 வயதாக இருந்தால் மறுபடியும் அதை செய்வேனா? ஓ, ஆமாம்! நிச்சயமாக! அதைப்பற்றி எந்த கேள்வியும் இல்லை! இந்தத் தேவதுரோகமான நாட்களில் தேவனால் அழைக்கப்பட்ட ஒரு பிரசங்கியாக இருப்பது – ஒரு பெரிய திருப்தி இதில் இருப்பதை நான் கண்டு கொண்டேன்! இந்த உலகம் முழுவதிலும் வேறுஎந்த உத்தியோகமாக இருந்தாலும் – ஐக்கிய நாட்டு ஜனாதிபதியிலிருந்து ஒரு அக்காடமி விருதுபெரும் நடிகர் வரைக்கும், நான் தயக்கமில்லாமல் இந்தச் சபையின் போதகராக இருப்பதையே தெரிந்து கொள்ளுவேன். நான் உங்களிடம் உண்மையைச் சொல்லுகிறேன் என்று தேவன் அறிவார்! அப்படியே என்னுடைய மகன், ராபர்ட்டும் செய்வார். நமது சபை பிரிவுபட்டு விழுந்தபொழுது, நிலைத்திருந்த மகத்தான கிறிஸ்தவர்களைப் பாருங்கள். அவர்கள் இந்தச் சபையைக் காப்பாற்றினார்கள். “அந்த முப்பத்தொன்பதுபேர்” என்று நாம் அவர்களை அழைக்கிறோம். அவர்களுடைய நண்பர்கள் அனைவரும் போய்விட்டார்கள். அந்தச் சபை பிளவிலே – அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்களை இழந்துவிட்டார்கள்! அதை எளிதானதாக நினைக்கிறீர்களா? மற்ற எந்தக் கிறிஸ்தவர்களைக் காட்டிலும் அதிக கடினமாக அவர்கள் உழைத்தார்கள் – இளம் மக்களாகிய நீங்களும் அவர்களோடு சேர்ந்து உழைத்தீர்கள் இது எனக்குத் தெரியும். அவர்கள் தசம பாகத்துக்கும் மேலாக – ஆயிரமாயிரக்கணக்கான டாலர்களைக் கொடுத்தார்கள். அவர்கள் ஒவ்வொரு கூட்டங்களுக்கும் வந்து இந்தச் சபையைக் காப்பாற்ற மேலும் மேலும் – அந்த இரவில் உழைத்தார்கள். அநேகருடைய சொந்த பிள்ளைகளே அவர்களைவிட்டுப் போனார்கள், மற்றும் அவர்கள் உலகத்துக்குத் திரும்பிவிட்டார்கள். இயேசுவுக்காக இந்தச் சபையைக் காப்பாற்ற அவர்கள் பெரிய நஷ்டங்களை அடைந்தார்கள். இயேசுவுக்காக தங்களுடைய அனைத்தையும் கொடுத்ததால் அவர்கள் வருத்தப்பட்டார்களா என்று அவர்களைக் கேட்டுப்பாருங்கள்! அவர்களைக் கேட்டுப்பாருங்கள்! அவர்களைக் கேட்டுப்பாருங்கள்! இயேசு கிறிஸ்துவுக்காக இந்தச் சபையை காப்பாற்ற அநேகர் தங்கள் வாழ்க்கையைக் குப்பையாக்கினார்கள். அவர்கள் ஏதாவது தவறு செய்தார்களா என்று அவர்களைக் கேட்டுப்பாருங்கள்! மறுபடியும் அப்படி செய்வார்களா என்று அவர்களைக் கேட்டுப்பாருங்கள். மேலே செல்லுங்கள், அவர்களைக் கேட்டுப்பாருங்கள்! திருவாளர் புருடோமியைக் கேட்டுப்பாருங்கள். அவர் நீச்சல் குளத்தோடு இருந்த ஒரு வீட்டை இழந்தார். அவள் அதை எடுத்துக் கொண்டாள். அவள் இரவு முழுவதும் அவரிடம் அலறிக்கொண்டே இருந்தாள். தான் நரகத்தில் இருப்பதைபோல அவர் உணர்ந்தார். அவள் அவருடைய வாழ்க்கையைக் குப்பையாக்கினாள்! அது யார் என்று உங்களுக்குத் தெரியும். திருவாளர் புருடோமி ஏதாவது ஒரு தவறு செய்தாரா? அவர் எல்லாவற்றையும் இழந்ததற்காக வருத்தப்பட்டாரா? தன்னைத்தான் வெறுத்துத் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவின் பின் செல்லுவதைவிட்டு துக்கத்தில் பின்நோக்கி பார்த்தாரா? இல்லை, அப்படி அவர் செய்யவில்லை! இதைநான் சொல்லுவேன் என்று நான் அவரிடம் சொல்லவில்லை. அவரிடம் சொல்ல வேண்டியதேவை எனக்கு ஏற்படவில்லை. அவர் அறிந்திருந்தார், அவருடைய ஆத்துமாவின் ஆழத்தில், “என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக் கொள்ளுவான்” (லூக்கா 9:24). திருமதி சாளாசாரைக் கேளுங்கள்! போங்கள், சென்றுகேளுங்கள். அவளது கணவர் மரித்துவிட்டார். அவளது பிள்ளைகள் போய்விட்டார்கள். அவள் வருத்தமாக இருக்கிறாளா அவள் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவை பின்பற்றினாள். நான் இப்படிச் சொல்வதற்கு அவளிடம் கேட்கவில்லை. நான் அவளிடம் கேட்க வேண்டியது இல்லை. அவள் அதேகாரியத்தை முழுவதுமாக மறுபடியும் செய்வாள் என்று எனக்குத் தெரியும். அவளுக்குத் தெரியும் “என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்”. திருமதி ஹைமர்ஸை கேளுங்கள். என்னை விவாகம் செய்ததன் மூலமாக அவளுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை! எங்களிடம் ஒன்றும் இருந்ததில்லை. நாங்கள் ஒரு அறை அப்பார்ட்மென்ட்டில் வாழ்ந்தோம். எங்களிடம் தட்டுமுட்டுச் சாமான்கள் இல்லை. எங்களிடம் தொலைக்காட்சி இல்லை. எங்களுக்கு யாரோ ஒருவர் கொடுத்த ஒரு கூண்டுக்கிளி இருந்தது அதைதான் தரையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம். எனக்கு மட்டுமே மிக சிறிதளவு சம்பளம் இருந்தது. ஒவ்வொருவரும் எங்களைத் தாக்கினார்கள். அவள் என்னோடு அவைகளைத் தாங்கிக்கொண்டு இருந்தாள் – ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்ட சபை பிளவினால் உண்டான பயங்கரத்தினால் மற்றவர்களால் நான் உள்ளாக கிழிக்கப்பட்டேன். இந்த இரவிலே நாம் பெற்றிருக்கும் இந்தப் பெரிய சபையை உருவாக்க எனது சிறிய மனைவி கடந்து வந்த பாடுகளைப்போல எந்த ஒரு இளம் பெண்ணும் பாடுபட்டிருக்க முடியாது. அவள் ஒரு தவறு செய்தாளா என்று கேட்டுப்பாருங்கள். மறுபடியும் அப்படி செய்வாளா என்று கேட்டுப்பாருங்கள். இதை நான் சொல்லுவேன் என்று அவளிடம் நான் கேட்டுக்கொள்ளவில்லை. நான் அவளைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை! இயேசுவுக்காக அவள் மறுபடியும் இதை செய்வாள் என்று நான் அறிந்திருக்கிறேன்! திருவாளர் லீ அவர்களைக் கேட்டுப்பாருங்கள். அவர் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவை பின்பற்றி வந்ததால் அவரது பெற்றோர் அவருக்கு விரோதமாக எழும்பினார்கள். அவர் இயேசுவை பின்பற்றி வந்ததால் தனது வாழ்கையைக் குப்பையாக்கிக் கொண்டார் அவர் ஒரு தவறு செய்தாரா என்று கேட்டுப்பாருங்கள். அவர் எந்த முறுமுறுப்பும் குற்றச்சாட்டும் இல்லாமல், மறுபடியும் இதை செய்வார் என்று நான் அறிந்திருக்கிறேன். திருவாளர் மாட்சுசாக்காவை கேளுங்கள். அவர் போலீஸ் காவலுக்குப் போயிருக்க வேண்டும். அவர்கள் அப்படி விரும்பினார்கள். ஆனால் அவர் இந்தச் சபைக்கு உதவி செய்ய எவராலும் தடைசெய்ய முடியாத ஒரு தீர்மானமான முடிவோடு செயல்பட்டார். இந்தச் சபையைக் காப்பாற்ற எங்களுக்கு உதவி செய்தபொழுது போலீஸின் அதிகார கட்டாயத்தினால் அவர் ஒரு நல்ல வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டதை நான் நினைத்துபார்க்கிறேன். அந்த “முப்பத்து ஒன்பதில்” ஒன்றாக இருக்க எப்படியாக அவர் தன்னைத்தான் வெறுத்துச் சிலுவையைச் சுமக்க முடிந்தது என்பதை நான் நினைத்துப்பார்க்கிறேன். அன்பான சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பார்! நீ என்ன செய்தாயோ அதை நான் ஒரு நாளும் மறக்கமாட்டேன் – அப்படியே தேவனும் மறக்கமாட்டார்! உங்களுடைய முன்மாதிரியினால் ஜான் சாமுவேல் கேஹன் இரட்சிக்கப்பட்டார். நீ ஏராளமாக கொடுத்தாய், ஆனால் நீ நமது சபைக்கு அடுத்த போதகராக மாற்றப்பட்டாய். கிறிஸ்து திரும்ப வரும்பொழுது நீ “எடுப்பவராக” அல்ல, “கொடுப்பவர்” அடையபோகும் சந்தோஷத்தை அறிந்து கொள்ளுவாய். கிறிஸ்துவின் இராஜ்ஜியத்தில் நீ என்றென்றுமாக அவரோடுகூட அரசாளுவாய்! ஜிம் எலியாட் அவர்கள் ஒரு புறஜாதி பழங்குடியினருக்குச் சுவிசேஷத்தை அறிவித்ததற்காக, ஒரு இரத்தச் சாட்சியாக கொல்லப்பட்டார். ஜிம் எலியாட் சொன்னது இது, “வைத்துக்கொள்ள முடியாததைக் கொடுத்து இழக்க முடியாததை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிற அவர் ஒரு முட்டாள் அல்ல” ஆமென். நமது சபையில் ஒரு இளம் வாலிபன் டாக்டர் கேஹன் அவர்களிடம் சொன்னான், “இப்பொழுது நான் ஒரு உத்தியோகஸ்தன். இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அதிகபடியான வேலையை இந்தச் சபையில் என்னால் செய்ய முடியாது.” அதற்கு டாக்டர் கேஹான் சொன்னார், “டாக்டர் சென் அவர்களைப்பற்றி என்ன நினைக்கிறாய்? அவர் ஒரு மருத்துவர். அவர் ஒரு உத்தியோகிஸ்தர்! அவர் சபையில் கணக்கில்லாத மணி நேரமாக உழைக்கிறார் – மற்றும் கல்லூரிகளில் கணக்கில்லாத மணி நேரமாக சுவிசேஷ ஊழியம் செய்கிறார், எந்த ஒருவரும் செய்வதற்கு மேலாக அவர் உழைக்கிறார்.” ஆமாம், டாக்டர் சென் அவர்களைப் பாருங்கள்! இயேசுவானவர் சொன்னது சரியானது என அவர் அறிந்திருக்கிறார் – “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” (லூக்கா 9:23). பிறகு டாக்டர் கேஹான் அவர்களைப் பாருங்கள். அவருக்கு மிகவும் உயர்ந்த சம்பளத்தோடு பாதுகாப்போடு மற்றும் பெரிய நன்மைகளோடு உத்தியோகத்தை அவர்கள் கொடுத்தார்கள் – ஒருதரம் மட்டுமல்ல, ஆனால் நான்கு தருணங்கள். அவர் அவைகள் எல்லாவற்றையும் கீழேபோட்டு விட்டார். ஏன்? அவர் லாஸ் ஏன்ஜல்ஸ்ஸை விடவேண்டும் மற்றும் நியூயார்க் நகரத்துக்குப் போகவேண்டும், அல்லது வாஷிங்டன்கு, போகவேண்டும். அவர் அவைகள் எல்லாவற்றையும் கீழேபோட்டு விட்டார் – இந்தச் சபையிலே தங்கி இருந்து அந்தச் சபை பிளவின் அழிவிலிருந்து இதை காப்பாற்ற – நூறாயிரம் கணக்கான டாலர்களை இழந்தார். அவர் ஒரு முட்டாளா? கிறிஸ்துவுக்காக ஒரு இரத்தச் சாட்சியாக தனது ஜீவனைக்கொடுத்த, ஜிம் எலியாட் சொல்லுவதைக் கவனியுங்கள். அவர் சொன்னதை உங்கள் வேதாகமத்தின் முன்பக்கத்தில் எழுதிக்கொள்ளுங்கள். “வைத்துக்கொள்ள முடியாததை கொடுத்து இழக்க முடியாததை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிற அவர் ஒரு முட்டாள் அல்ல” (ஜிம் எலியாட், கிறிஸ்துவுக்காக இரத்தச் சாட்சியாக ஜீவனைக் கொடுத்தவர்) சிலுவையை சுமந்து மற்றும் சுயத்தை தியாகம் செய்த, “அந்த முப்பத்தி ஒன்பது” நபர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கமுடியும் – திருவாளர் சாங், திருவாளர் மான்சிகா, திருவாளர் கிரிபித் – புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது சரீரத்தில் தொங்கிக்கொண்டிருந்த டியூபோடு தன்னை இழுத்துக்கொண்டு சபைக்கு வந்தார். ஒரு வெண்மையான முகத்தோடு மற்றும் நெற்றியில் வியர்வை வழிந்தோட, சோர்ந்து விழுந்து விடாமல் இருக்க புல்பிட்டை பற்றிக்கொண்டு – பாடிக்கொண்டே இருந்தார், பொன் வெள்ளியை பெறுவதைவிட திருவாளர் கிரிபித் ஒரு முட்டாளாக இருந்தாரா? “வைத்துக்கொள்ள முடியாததை கொடுத்து இழக்க முடியாததை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிற அவர் ஒரு முட்டாள் அல்ல” கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்காக ஒரு ஜீவனுள்ள சபையாக மாற்ற தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றின “அந்த முப்பத்தி ஒன்பது” நபர்கள் – ஒவ்வொரு பெண்கள் மற்றும் ஆண்கள் பற்றியும் பெயர் சொல்லி, நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கமுடியும். இந்தக் கட்டிடத்தின்மீது அடைமான பத்திரம் நமக்கு வந்தபொழுது இளம் மக்களாகிய உங்களிடம் நிறுத்துங்கள் மற்றும் யோசியுங்கள் என்று நான் சொன்னேன். நாங்கள் சீக்கிரமாக சென்று விடுவோம். திருமதி ரூப் அவர்களின் ஆர்கன் இடத்தை யார் எடுத்துக்கொள்ள முடியும்? திருமதி ரூப் அவர்களின் வாசல் காக்கும் பணி இடத்தை யார் எடுத்துக்கொள்ள முடியும்? பகலுக்குப் பகல் மற்றும் இரவுக்கு இரவு, பாதுகாக்கும்பணியை உங்களில் யார் எடுத்துக்கொள்ள முடியும் – ரிச்சர்டு மற்றும் ரோனால்டு பிளண்டின் பணி இடத்தை உங்களை வெறுத்து யார் எடுத்துக்கொள்ள முடியும்? எந்தப் பூமிக்குரிய வெகுமதியும் இல்லாமல், மணிக்குப்பின் மணி, நாளுக்குபின் நாள், அவர்கள் போனபிறகு அவர்கள் இடத்தை, யார் எடுத்துக்கொள்ள முடியும்? – “அந்த முப்பத்தி ஒன்பது” நபர்கள் விரைவில் கடந்து போவோம் – அதிக விரைவாக எண்ணமற்ற இளம் மக்கள் எப்போதாவது இதை நினைத்துப் பார்த்தது உண்டா. சமையலிலே திருமதி கூக் அவர்களை மாற்றப்போவது யார்? வில்லி டிக்சனை மாற்றப்போவது யார்? நீங்கள் அவர்களுடைய உணவைச் சாப்பிடுகிறீர்கள். இப்பொழுது எண்பது வயதாக இருக்கும் திருவாளர் டிக்சனைக்கூட, உங்களில் யாராவது ஒருவர் மாற்றமுடியுமா என்று என்னால் நினைக்க முடியவில்லை. அந்த வயதான அன்பு மனிதனை மாற்றப்போவது யார் என்று என்னால் காணமுடியவில்லை! அவர் என்ன செய்கிறார் என்றாவது உங்களுக்குத் தெரியுமா? ஒரு வாரத்தில் அநேக நாட்கள் மற்றும் இரவுகள், உங்களைப் போஷிப்பதற்காக, செலவு செய்யும் அவர் ஒரு முட்டாளா? அவர் ஒரு முட்டாளா? “வைத்துக்கொள்ள முடியாததை கொடுத்து இழக்க முடியாததை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிற அவர் ஒரு முட்டாள் அல்ல” இளம் மக்களாகிய உங்களில் எல்லாவற்றையும் தியாகம் செய்து அடுத்த முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்குச் சபையைப் பலத்தோடு நடத்தப்போவது யார்? டாக்டர் கேஹன் அவர்கள் போவார். அவரிடத்தை நிரப்பபோவது யார்? டாக்டர் சென் அவர்கள் போவார். அவரிடத்தை நிரப்பபோவது யார்? உங்களில் அதிகமானவர்கள் திருவாளர் டிக்சன் அல்லது ரிக் மற்றும் ரோன் பினான்டின் இடங்களை நிரப்ப வேண்டும்! அவர்கள் முக்கியமானவர்கள் அல்ல என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அவர்களிடங்களை உங்களால் நிரப்ப முடியாது! அதற்குச் சுய இழப்புத் தேவையாக இருக்கும். அதற்குச் சிலுவை சுமக்க வேண்டியது அவசியமாக இருக்கும். இயேசுவானவர் சொன்னார், “பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்பு தேவன் டாக்டர் கேஹான் அவர்களை அழைத்துக்கொண்டிருந்தபோது அவர் போதகர் உம்பிராண்டு எழுதிய கிறிஸ்துவுக்காக வாதிக்கப்பட்டவர்கள் என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். போதகர் உம்பிராண்டைப்போல அவர் ஒரு யூதராக இருந்த காரணத்தால் அவர் இயற்கையாக போதகர் உம்பிராண்டை நேசித்தார். அவர் “கிறிஸ்துவுக்காக வாதிக்கப்பட்டவர்கள்” என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தபொழுது, போதகர் உம்பிராண்டு கற்பிக்கப்பட்டு வளர்ந்த ஒரு சபையைப்போன்ற தியாக மதிப்புமிக்க போதனையைக் கொடுக்கும் ஒரு சபையைக் கண்டு அங்கு போகவேண்டும் என்று டாக்டர் கேஹன் நினைத்தார். UCLAவுக்கு அருகே இருந்த ஒரு தெருவில் பிரசங்கம் செய்த என்னை டாக்டர் கேஹன் கண்டார். மக்கள் என்னை எதிர்த்து சத்தமிட்டதையும் மற்றும் என்மீது பொருள்களை எரிந்ததையும் அவர் கண்டார். டாக்டர் கேஹன் நினைத்தார், “இந்த மனிதன் பிரசங்கிப்பதைதான் நான் கேட்க வேண்டும்”. அதனால் நமது சபை எங்கே இருக்கிறது என்று அவர் கண்டுபிடித்து அங்கே வந்தார். அடுத்த இரவு அவர் கேட்டதாக சொன்னார், “நீங்கள் ஏதோ சில காரியங்களுக்காக எரிந்துவிழ போகிறீர்கள். கிறிஸ்துவுக்காக ஏன் நீங்கள் எரியக்கூடாது?” என்று நான் பிரசங்கித்ததை. டாக்டர் கேஹன் அப்பொழுது, தமது இருபதுகளில் இருந்த ஒரு இளம் மனிதராக இருந்தார். ஒரு இளம் மனிதனுடைய உள்ளத்தில் இருந்த ஒரு எண்ணம் எப்படிப்பட்டது! “நீ ஏதோ சில காரியங்களுக்காக எரிந்துவிழ போகிறாய்.” ஒருவேளை! ஒவ்வொருவரும் விரைவாகவோ அல்லது தாமதமாகவோ “எரிந்து விழப்போகிறோம்”! உங்கள் தலை மயிர் விழஆரம்பிக்கிறது. உங்கள் முகங்களில் கோடுகள் வருகின்றன. வாழ்க்கையின் சிறப்புக் கடினமானது. அடுத்த காரியம் உங்களுக்கு வயதாகிக்கொண்டு இருக்கிறது. அதன்பிறகு நீ எரிந்து மரிக்க போகிறாய். “நீ ஏதோ சில காரியங்களுக்காக எரிந்துவிழ போகிறாய்.” ஆமாம், உண்மையில், அது உனக்கு நடக்கப்போகிறது. நீ எரியப் போகிறாய்! அதன்பிறகு இன்னும் அதிகமான ஒரு சிந்தனை – “கிறிஸ்துவுக்காக ஏன் நீ எரியக்கூடாது?” கடந்த காலங்களில் பெரிய கிறிஸ்தவர்கள் அனைவரும் இப்படிப்பட்ட சிந்தனைகளை நினைத்தார்கள் – “நீங்கள் ஏதோ சில காரியங்களுக்காக எரிந்துவிழ போகிறீர்கள். கிறிஸ்துவுக்காக ஏன் நீங்கள் எரியக் கூடாது?” ஹென்றி மார்டீனைபற்றி (1781-1812) 31வது வயதில் அவர் “எரிந்துவிழ” விரும்பினதை நீங்கள் எப்படி படித்தீர்கள் என்று எனக்குத் தெரியாது. ராபர்ட் மெக்சைனி (1813-1843) அவர்கள் தனது 29வது வயதில் கிறிஸ்துக்காக “எரிந்துவிழ” விரும்பினதை நீங்கள் எப்படி படித்தீர்கள் என்று எனக்குத் தெரியாது. உங்களில் சிலர் அவர்களைப்பற்றி படிக்க மற்றும் விக்கிபீடியாவில் அவர்களைப் பார்க்ககூட மிகவும் பயப்பட்டிருக்கிறீர்கள். அவர்கள் உங்களுக்குப் பழக்கமாகி விடுவார்கள் என்று பயப்பட்டிருக்கிறீர்களா? ஹென்றி மார்டீன் மற்றும் ராபர்ட் மெக்சைனி போன்ற ஆண்கள் எங்கே? கிலாடிஸ் ஆல்வார்டு போன்ற இளம் பெண்கள் எங்கே? நீ ஒரு சீஷனாகி இளம் மக்களுக்கு அந்த வழியை காட்டாவிட்டால், நமது சபையை ஒருபோதும் உயிர்ப்பிக்க முடியாது! நமது சொந்த திருமதி கூக் தான் பிறப்பதற்கு இருபது வருடங்களுக்கு முன்பு மரித்த ஒரு வயதான மனிதன்மீது அன்பு கொண்டிருந்தார். அவர் மிகவும் செல்வாக்குள்ள ஒரு குடும்பத்திலே பிறந்தார் மற்றும் அவர் எல்லா பணத்தையும் சுதந்தரித்துக் கொண்டார். அவர் உலகப் புகழ்பெற்ற ஒரு விளையாட்டு வீரராகவும் இருந்தார். அதன்பிறகு அவர் இயேசுவானவரின் சீடராக மாறினார். அவர் தமது பணம் முழுவதையும் மிகவும் கவனமாக மற்றும் துணிவாக கொடுத்துவிட்டார். அதன்பிறகு அவர் சீனாவின் உட்பகுதிக்கு, ஒரு அருட்பணியாளராக சென்றார். புறஜாதிகளுக்கு பிரசங்கிக்க அழைக்கப்பட்டதின் காரணமாக பதினான்கு வருடங்களாக தன் மனைவி மற்றும் பிள்ளையை விட்டு பிரிந்து இருந்தார். அதன் பின்னர் ஆப்பிரிக்காவின் இருதய பாகத்துக்கே சென்றார், மற்றும் ஒரு புதிய இறைபணி தளத்தை ஆரம்பித்தார். இறுதியாக தூரமான ஆப்பிரிக்காவின் உட்பகுதியில், அவர் மரித்தார். அவருடைய பணிகள் மற்றும் செல்வவளம் – கிறிஸ்துவுக்காக சென்றது. அவருடைய தாயகம் மற்றும் குடும்ப வாழ்க்கையும்கூட கிறிஸ்துவுக்காக சென்றுபோனது. அவருடைய வாழ்க்கையின் முடிவு சமீபிக்கும்பொழுது, இந்த அற்புதமான வயதான மனிதர் சொன்னார், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்காக இன்னும் ஏதாவது அதிகமாக என்னால் தியாகம் செய்ய முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.” நமது திருமதி கூக் தான் பிறப்பதற்கு இருபது வருடங்களுக்கு முன்பு மரித்த ஒரு வயதான இந்த மனிதன்மீது அன்பு கொண்டிருந்தார். அவள் அப்படி செய்ததற்காக நான் மகிழ்சி அடைகிறேன். அவள் அவரை நேசிக்கவில்லையானால் மற்றும் அவரது செல்வாக்கு அவளுக்கு இல்லாதிருந்தால், அவள் மற்றொரு சுயநலமான மத்திய வயது வெள்ளைக்கார பெண்ணாக, அவள் சன் பெர்னான்டோ வேலியிலே உயர்தர இன நாய்களை உயர்த்துபவளாக இருந்திருப்பாள். அவர் சி. டி. ஸ்டட்டின் செல்வாக்கை பெற்ற காரணத்தினாலே இந்த லாஸ் ஏன்ஜல்சின் இருதய பாகமாகிய இங்கே, நூற்றுக்கணக்கான மணி நேரத்தை இளம் மக்களாகிய உங்களை போஷிக்க மற்றும் கவனிக்க செலவிடுகிறாள். சில வருடங்களுக்கு முன்பாக, திருமதி கூக் எனக்காக ஒரு எழுத்துப்பலகையைச் செய்து, அதில் அவளது தலைவர் சார்லஸ் ஸ்டட்டின் வார்த்தைகளை பதித்திருந்தாள். எனது தியானத்தில் ஒவ்வொரு நாளும் நான் அதை பார்ப்பேன். அது சொல்லுகிறது, “ஒரேஒரு வாழ்க்கை, இயேசுவானவர் நம் அனைவருக்கும் சொல்லுகிறார், “பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்பு நாம் சில இளம் மக்களை இரட்சிக்க மற்றும் இயேசுவின் சீஷராக பயிற்றுவிக்க விரும்பினால் கிறிஸ்துவின் இளம் சீஷர்கள் நிறைந்த ஒரு சபையாக இருக்க வேண்டியது அவசியம்! தயவுசெய்து எழுந்து நின்று பாடல் எண் 2ஐ பாடுவோம், “அதிகமான அன்பு உமக்கே”. அதிகமான அன்பு உமக்கே, ஓ கிறிஸ்துவே, அதிகமான அன்பு உமக்கே! நான் ஒரு காலத்தில் பூமிக்குரிய மகிழ்ச்சிக்காக ஏங்கினேன், பிறகு எனது சமீபித்திய மூச்சு மெல்ல உமது துதியை பேசும்; நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: “More Love to Thee” (Elizabeth P. Prentiss, 1818-1878). |