இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
கிதியோனின் சேனை!GIDEON’S ARMY! ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் ஜூன் 24, 2018 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் “அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நான் மீதியானியரை உன்னோடிருக்கிற ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு அவர்கள் மிகுதியாயிருக்கிறார் கள். என் கை என்னை ரட்சித்தது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு இடமாகும்” (நியாயாதிபதிகள் 7:2). |
இது ஒரு எளிமையான கதை. ஆனால் இது மிகவும் முக்கியமான கதை. ஒரு பெரிய தேவதுரோக காலத்தில் வாழ்ந்த ஒரு இளம் மனிதன் கிதியோன் ஆகும். இப்பொழுது நாம் பெரிய தேவதுரோக காலத்தின் முடிவில் வாழும் காரணத்தால் அது நம்முடைய கவனத்தை இறுகபற்றிபிடிக்க வேண்டியது அவசியமாகும். I. முதலாவது, அந்த தேவதுரோகம். இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்தார்கள். மற்றும் தேவன் அவர்களை மீதியானியரின் கைகளில் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததின் மூலமாக அவர்களைத் தண்டித்தார். அவர்கள் இஸ்ரவேலரின் சத்துருக்களாக இருந்தார்கள். இந்தக் காட்டுமிராண்டிகளான மீதியானியர்களுக்கு இஸ்ரவேலர் பின்வாங்கினார்கள். இந்தத் தேவனற்ற மீதியானியர்களுக்கு இஸ்ரவேலர் பயந்து குகைகளில் ஒளிந்து கொண்டார்கள். இந்த மீதியானியர்கள் மிகவும் பலமுள்ளவர்களாக இருந்தபடியால் இஸ்ரவேலரின் நிலத்தின் விளைச்சலை அழித்தார்கள். அவர்களுடைய ஆடுகள் மற்றும் மாடுகள் மற்றும் கழுதைகளைத் திருடினார்கள். இஸ்ரவேலர் நெருக்கப்பட்டார்கள் மற்றும் நம்பிக்கையற்றுப் போனார்கள். அதன்பிறகு அவர்கள் கர்த்தரிடம் அழுதார்கள். அதன்பிறகு தேவன் கிதியோனிடம் வந்தார். அவன் மீதியானியர்களுக்குப் பயந்து ஒளிந்து கொண்டிருந்தபோது தேவன் அவனிடம் வந்தார். மற்றும் தேவன் கிதியோனிடம் சொன்னார், “பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” (நியாயாதிபதிகள் 6:12). சன் பிரான்சிஸ்கோவுக்கு வடக்கே இருந்த ஒரு லிபரல், வேதாகமத்தை புறக்கணித்த செமினரிக்கு நான் போனபொழுது நான் ஒரு பராக்கிரமசாலி இல்லை. நான் ஒரு சாந்தமான மற்றும் கனிவான பாப்டிஸ்ட் பிரசங்கியான பையனாக இருந்தேன். ஆனால் நான் அந்த செமினரியில் பார்த்த காரியம் என்னை நவீன சுவிசேஷகத்தின்மீது மிகவும் கோபப்படும்படியாக செய்தது. அவர்கள் வேதாகமத்தின் தேவனை நம்பவில்லை. அவர்கள் மீதியானியர்களால் – தேவனை ஒரு இடுக்கமானபையில் போடவேண்டும் என்று விரும்புகிறவர்கள் – தங்கள் சிந்தனைகளை மற்றும் வாழ்க்கையைத் தேவன் கட்டுப்படுத்த விரும்பாதவர்கள். டாக்டர் டேவிட் எப். வெல்ஸ் நமது காலத்தில் உள்ள சுவிசேஷகத்தின் ஊழலைப்பற்றி ஒரு குறிப்பிடத்தக்க புத்தகத்தை எழுதி இருக்கிறார். அதன் பெயர், அது சத்தியத்துக்கு இடமில்லை: அல்லது சுவிசேஷக தியாலஜியில் என்ன நடந்தாலும் சரியா? (Eerdmans, 1993). டாக்டர் வெல்ஸ் ஒரு கோபக்கார மனிதர். அவர் சொல்லுகிறார், “இந்த சுவிசேஷக உலகம் தனது முற்போக்கை இழந்து விட்டது” (p. 295). சுவிசேஷக சபைகள் இளம் மக்களை மூலாதார கிறிஸ்தவர்களாக இருக்க உணர்த்துவதில்லை. அவர்கள் மிருதுவாக, பெலவீனமாக, மற்றும் சுயநலமுள்ளவர்களாக இருக்கிறார்கள் – தங்களைப்பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயத்தால் வெளிப்படையாக பேச அச்சப்படுவார்கள். சபைகள் மறுமலர்ச்சி அடைய வேண்டும் மற்றும் ஜீவனுள்ளவைகளாக இருக்க வேண்டும் என்று விரும்பும் எவரிடமும் இந்த சுவிசேஷ நிறுவனம் இன்று யுத்தம் செய்யும். டாக்டர் வெல்ஸ் சொன்னார், “இந்த சுவிசேஷக உலகத்தில் நிரந்தரம் ஒரு வல்லமைமிக்க சக்தியாகும், மற்றும் அது அதிவிரைவில் நெருக்கி தனிமைபடுத்தி அதிப்தியாளராக்கும்” (p. 295). நான் கலந்து கொண்ட செமினரியில் அவர்களுடைய அவிசுவாசத்தில் என்னை அழைத்து நிரந்தரம் செய்ய அவர்கள் கடினமாக முயற்சி செய்தார்கள். நான் வேதத்தை தொடர்ந்து சார்ந்து கொண்டிருந்தால் எனக்கு ஒருபோதும் ஒரு சதரன் பாப்டிஸ்டு சபை கிடைக்காது என்று எனக்கு அவர்கள் சொன்னார்கள். நான் அவர்களுக்குச் சொன்னேன், “அதுதான் அதன் கிரயம் என்றால், நான் அப்படி ஒன்றை விரும்பவில்லை”. அந்த நிலையில் நின்ற காரணத்தால் நான் சகலவற்றையும் இழந்தேன். நான் இழப்பதற்கு என்ன இருந்தது? ஏற்கனவே நான் எல்லாம் இழந்த நிலையில் இருந்தேன். நான் விரும்பின ஒன்றும் சதரன் பாப்டிஸ்டுகள் பெற்றிருந்ததில்லை. அந்தச் சமயக்கிளை பெயரை நான் வெறுத்தேன். அந்த செமினரியை நான் வெறுத்தேன். எனக்குத் துணைசெய்யாதபடியினால் எனது சபையை நான் வெறுத்தேன். எனது வாழ்க்கையை நான் வெறுத்தேன். இயேசு மற்றும் இந்த வேதாகமம் தவிர மற்ற எல்லாவற்றையும் நான் வெறுத்தேன். நான் இரவிலே தனிமையாக நடந்து போனேன். நான் நடந்துகொண்டே இருக்க வேண்டியதாக இருந்தது அல்லது எனது மனதை இழந்தவனாக நான் உணர்ந்தேன். இறுதியாக ஒரு இரவில் இழந்துபோன நிலையில் எனது தங்கும் அறையில் தூங்கினேன். தேவனே என்னை எழுப்பினார். அந்தத் தங்கும்விடுதி முழுவதும் அமைதியாக இருந்தது. ஒரு சத்தமும் இல்லை. அந்த இரவிலே நான் வெளியே நடந்தேன். அந்த செமினரிக்கு பக்கத்திலிருந்த ஒரு குன்றின்மீது நான் நின்றபொழுது சன் பிராக்சிஸ்கோவின் விளக்குகளை வளைகுடா தண்ணீருக்குக் குறுக்கே என்னால் காணமுடிந்தது. காற்று எனது தலைமுடி மற்றும் உடைகளின் ஊடாக அடித்தது. நான் எலும்பு வரையிலும் குளிர்ந்து போனேன். மற்றும் அந்தக் காற்றிலே தேவன் என்னிடம் சொன்னார், “நீ இந்த இரவை ஒருபோதும் மறக்க முடியாது. இப்பொழுது நீ என்னை மட்டும் பிரியப்படுத்தும்படி பிரசங்கம் செய்வாய். இப்பொழுது நீ பயப்படாமல் இருக்க கற்றுக்கொள்ளுவாய். இப்பொழுது நீ எனக்காக மட்டுமே பேசுவாய். நான் உன்னொடு இருப்பேன்.” அதுதான் என்னை பிரசங்கம் செய்ய அழைத்தது என்று இப்பொழுது நான் அறிந்திருக்கிறேன். அதற்கு முன்பாக நான் ஒரு தன்னார்வமுள்ளவனாக இருந்தேன். இப்பொழுது நான் தேவனால் அழைக்கப்பட்ட ஒரு பிரசங்கியாக இருக்கிறேன். பயமற்ற ஒவ்வொரு பிரசங்கியும் சத்தியத்தைப் பேசவேண்டும் என்று தேவன் நம்ப வேண்டுமானால் அவன் இப்படிப்பட்ட ஒரு நெருக்கத்தின் ஊடாக கடந்து வரவேண்டியது அவசியம் என்று நான் விசுவாசிக்கிறேன். அங்கே மனஎழுச்சி இல்லை. இது ஒன்றுதான், “நீ இதை சொல்லவில்லையானால் வேறுயாரும் சொல்ல மாட்டார்கள், இது சொல்லப்பட வேண்டிய அத்தியவசியம் இருக்கிறது – மற்றும் மற்றவர்கள் இதை சொல்ல பயப்படுவார்கள், அதனால் நீ இதை சொல்லாவிட்டால், வேறுயாரும் சொல்ல மாட்டார்கள், அல்லது குறைந்தபட்சமாக அவர்கள் நல்லபடி சொல்ல மாட்டார்கள்.” இந்தச் சிந்தனைகள் எப்பொழுதும் எனது மனதில் முத்திரை பதிப்பாக பதித்தவனாக நான் சென்றேன். டாக்டர் W. A. டோஸர், பின்வரும் தலைப்புக் கொண்ட ஒரு கட்டுரையில் “தீர்க்கதரிசன உட்பார்வையின் வரம்,” இதைச் சொன்னார்: “அவர் தேவனுடைய நாமத்திலே நேர்மாறாக பேச, வெளிப்படையாக கண்டனம் செய்ய மற்றும் எதிர்ப்புத் தெரிவிக்க சித்தமுள்ளவராக இருக்கிறார் மற்றும் கிறிஸ்தவத்தின் ஒரு பெரிய பிரிவின் வெறுப்பை மற்றும் எதிர்ப்பை பெறவேண்டும் என்று அவர் சித்தமுள்ளவராக இருக்கிறார்... ஆனால் அவர் மரணப் பெருமூச்சுவிடும் ஒன்றுக்கும் பயப்படமாட்டார்.” ஒருவேளை அதனால்தான் டாக்டர் போப் ஜோன்ஸ் III சொன்னார் “நான் செயல் வகையில் மற்றும் ஆவியில் ஒரு பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியை போல இருக்கிறேன்.” இவைகள் எல்லாவற்றுக்கும் மேற்கொண்டு விளக்கம் அறிய, பின்வரும் தலைப்புக் கொண்ட எனது சுய சரிதையை வாசியுங்கள், “எல்லா பயத்துக்கும் எதிராக”. தேவனோடு அந்த நடுஇரவு அனுபவம் கிதியோனைபோல ஒரு மனிதனாக என்னை புரிந்து கொள்ள செய்தது. தேவன் அவனிடம் சொன்னார், “பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.” ஒருவேளை நான் கிதியோனாக இல்லாமல் போனாலும், குறைந்த பட்சமாக அவனை இப்பொழுது புரிந்து கொள்ளுகிறேன். கிதியோன் சொன்னான், “கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்பக்கொடுத்தாரே” (நியாயாதிபதிகள் 6:13). கிதியோன் தகுதி இல்லாதவனாக மற்றும் இதை செய்ய இயலாதவனாக உணர்ந்தான். மோசேயைபோல, கிதியோன் சாக்குபோக்குச் சொல்லுகிறான். இங்கே நாம், எனது நண்பர்கள், பெரிய தேவதுரோகத்தின் மத்தியில் கடைசி நாட்களில் இருக்கிறோம். இந்தப் புதிய சுவிசேஷக மீதியானியர்களான பொய்யான மதத்தினரோடு போராட நாம் தகுதி இல்லாதவர்கள் மற்றும் நம்மால் முடியாது என்று நாம் உணருகிறோம். இந்தத் தேவதுரோகம் மிகவும் ஆழமானதாக இருக்கிறது. சுவிசேஷக மீதியானியர்களின் வல்லமை மிகவும் பெரியதாக இருக்கிறது. வேதாகமத்தையும் வேதாகமத்தின் தேவனையும் காப்பாற்ற இந்தத் தேவதுரோக காலத்தில் நம்மால் எதையும் செய்ய முடியாது. II. இரண்டாவதாக, இந்த வேதாகமத்தின் தேவன் இன்னும் ஜீவிக்கிறார்! தேவன் சொன்னார், “நான் கர்த்தர், நான் மாறாதவர்”! (மல்கியா 3:6). பிறகு கிதியோன்மீது தேவனுடைய ஆவி வந்தது. மீதியானியருக்கு விரோதமாக யுத்தம்செய்ய இஸ்ரவேலரைக் கூட்டி சேர்க்கும்படி அவன் ஆட்களை அனுப்பினான். “அப்பொழுது கிதியோனாகிய யெருபாகாலும் அவனோ டிருந்த ஜனங்கள் யாவரும் காலமே எழுந்து புறப்பட்டு, ஆரோத் என்னும் நீரூற்றின் கிட்டப் பாளயமிறங்கினார் கள். மீதியானியரின் பாளயம் அவனுக்கு வடக்கே மோரே மேட்டிற்குப் பின்னான பள்ளத்தாக்கிலே இருந்தது. அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நான் மீதியானியரை உன்னோடிருக்கிற ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு அவர்கள் மிகுதியாயிருக்கிறார் கள். என் கை என்னை ரட்சித்தது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு இடமாகும். ஆகையால் பயமும் திகிலும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி, கீலேயாத் மலைகளிலிருந்து விரைவாய் ஓடிப் போகக்கடவன் என்று, நீ ஜனங்களின் செவிகள் கேட்கப் பிரசித்தப்படுத்து என்றார்; அப்பொழுது ஜனத்தில் இருபத்தீராயிரம் பேர் திரும்பிப் போய்விட்டார்கள். பதினாயிரம்பேர் மீதியாயிருந்தார்கள்“ (நியாயாதிபதிகள் 7:1-3). தேவன் கிதியோனிடம் சொன்னார், “உன்னோடிருக்கிற ஜனங்கள் மிகுதியாயிருக்கிறார்கள்.” அதனால், “பயமும் திகிலும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி, கீலேயாத் மலைகளிலிருந்து விரைவாய் ஓடிப்போகக்கடவன் என்று சொல்லு” (நியாயாதிபதிகள் 7:3). அங்கே இருபத்தி இரண்டாயிரம்பேர் திரும்பி போய்விட்டார்கள். கிதியோனோடு பத்தாயிரம்பேர் மீதியாக இருந்தார்கள். அதுதான் நமக்கு நடந்தது. நாம் லீ கான்டி ஜூனியர் உயர்நிலை பள்ளியில் கூடினபொழுது 1,100 பேர் வரையிலும் நமது சபை உயர்ந்தது. ஆனால் அவர்களில் அநேகர் தங்கள் வாழக்கையை இயேசுவுக்கு ஒப்புக்கொடுக்க பயந்தார்கள். மற்றவர்கள் “கேளிக்கைக்காக” – அல்லது பால்உணர்வு – அல்லது போதைப் பொருள்களுக்காக நமது சபையை விட்டு போய்விட்டார்கள். அப்படி விட்டுப்போனவர்களை இயேசுவானவர் விதைக்கிறவனுடைய உவமையில் சொன்னபடி விவரிக்கலாம். லூக்கா 8:10-15ல் அந்த உவமை விளக்கப்பட்டு இருக்கிறது. முதலாவது வகை மக்கள் தேவனுடைய வசனத்தைக் கேட்பவர்கள், மற்றும் சாத்தான் வருகிறான் அந்த வார்த்தையை இதயங்களிலிருந்து எடுத்துப்போடுகிறான் “அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்கு” (லூக்கா 8:12). இதை நாம் ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் பார்க்கிறோம். அவர்கள் உள்ளே வருகிறார்கள் மற்றும் போதனையைக் கவனிப்பதற்குப் பதிலாக தங்கள் ஐ பேடை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லது தங்கள் கண்களை மூடிக்கொள்ளுகிறார்கள் மற்றும் வேறு எதையோ நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தேவனுடைய வசனம் அவர்களுக்கு எந்த நன்மையும் செய்வதில்லை, ஏனென்றால் அவர்கள் தங்கள் இருதயத்தில் உள்ள வார்த்தையை எடுத்துப் போட சாத்தானை அனுமதிக்கிறார்கள். இரண்டாவது வகை மகிழ்ச்சியோடு வார்த்தையைக் கேட்பவர்கள். ஆனால் அவர்கள் கிறிஸ்துவில் வேர் கொள்ளவில்லை. அதனால் அவர்கள் சிறிது காலம் விசுவாசிப்பதுபோல காணப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் சோதிக்கப்படும்போது விழுந்து போகிறார்கள். மூன்றாவதுவகை மக்கள் வார்த்தையைக் கேட்கிறார்கள் மற்றும் தங்கள் வழியே போகிறார்கள். அவர்கள் கவலைகள் மற்றும் செல்வம் மற்றும் வாழ்க்கையின் இன்பத்தால் மூழ்கி போகிறார்கள், “மற்றும் பரிபூரணத்தின் கனி இல்லாமல் போகிறார்கள்.” டாக்டர் வெர்னான் மெக்ஜீ சொன்னபொழுது இந்த மூன்று வகையான மக்களும் ஒருபோதும் மாற்றப்படாதவர்கள் என்று சரியாக சொன்னார். கடந்த காலத்தில் நமது சபையைவிட்டு பிரிந்துபோன மக்களை இது படம் பிடித்துக் காட்டுகிறது. அவர்களில் ஒருவரும் மெய்யாகவே மாற்றப்படாதவர்கள் என்பதை அவர்களுடைய வாழ்க்கை காட்டுகிறது. அவர்கள் கேளிக்கைக்காக மற்றும் ஐக்கியத்துக்காக மட்டும் சபைக்கு வந்தார்கள். ஆனால் அவர்கள் சோதிக்கப்பட்டபோது அவர்கள் விட்டுப் போனார்கள் ஏனென்றால் அவர்கள் ஒருபோதும் மனந்திரும்பவில்லை மற்றும் அவர்கள் ஒருபோதும் மறுபிறப்படையவில்லை. அவர்கள் கிதியோனுக்கு உதவி செய்ய வந்த இருபத்தி இரண்டாயிரம் மக்களைப் போன்று ஒரு படக்காட்சி ஆகும் ஆனால் அவர்கள் ஒட்டிக்கொண்டிருக்க மற்றும் தேவனுடைய போர்வீரர்களாகமாற பயப்பட்டவர்கள்! சிலுவையின் போர்வீரர்களாகமாற மிகவும் பயப்பட்டவர்கள்! “கர்த்தர் கிதியோனை நோக்கி: நான் மீதியானியரை உன்னோடிருக்கிற ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக் கிறதற்கு அவர்கள் மிகுதியாயிருக்கிறார்கள். என் கை என்னை ரட்சித்தது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு இடமாகும்” (நியாயாதிபதிகள் 7:2). ஆனால் இன்னும் மக்கள் அதிகமாக இருந்தார்கள். தேவன் கிதியோனிடம் சொன்னார், “கர்த்தர் கிதியோனை நோக்கி: ஜனங்கள் இன்னும் அதிகம், அவர்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப்போகப்பண்ணு; அங்கே அவர்களைப் பரிட்சித்துக்காட்டுவேன்” (நியாயாதிபதிகள் 7:4). அங்கே மிகவும் உஷ்ணமாக இருந்தது “மோரே மேட்டிற்குப் பின்னான பள்ளத்தாக்கிலே” (நியாயாதிபதிகள் 7:1). இஸ்ரவேல் மக்கள் மிகவும் தாகமாக இருந்தார்கள். கிதியோனின் மனிதர்களில் அநேகர் தண்ணீரை நோக்கி ஓடினார்கள், முழங்கால்படியிட்டு குனிந்தார்கள் தங்கள் கரங்களைத் தண்ணீரில் ஊன்றினார்கள், அதை பேராவலோடு விழுங்கினார்கள். “தங்கள் கையால் அள்ளி, தங்கள் வாய்க்கெடுத்து, நக்கிக்கொண்டவர்களின் லக்கம் முந்நூறுபேர்” (நியாயாதிபதிகள் 7:6). அநேகர் முழங்கால்படியிட்டு குனிந்தார்கள் தங்கள் கரங்களைத் தண்ணீரில் ஊன்றினார்கள் ஏனென்றால் அவர்கள் மிகவும் தாகமாக இருந்தார்கள். ஆனால் தங்கள் கையால் அள்ளி தங்கள் வாய்க்கெடுத்து நக்கிக்கொண்டவர்களின் லக்கம் முந்நூறுபேர் மட்டுமே. அவர்கள் தங்கள் தலையைக் கவனமாக உயர்த்தி வைத்து, மீதியானியர் வருகிறார்களா என்று எச்சரிக்கையாக இருக்க அறிந்திருந்தார்கள். “அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த முந்நூறுபேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற ஜனங்களெல்லாரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகக்கடவர்கள் என்றார்” (நியாயாதிபதிகள் 7:7). இன்று இரவிலே நாம் அதுபோலவே முடிந்தவரையிலும் கிதியோனுடைய கணக்கின்படி முன்னூறு பேராக செல்லுவோம். பள்ளத்தாக்கிலே மீதியானியர்கள் இருந்தார்கள், “மீதியானியரும், அமலேக்கியரும், சகல கிழக்கத்திப் புத்திரரும், வெட்டுக்கிளிகளைப் போலத் திரளாய்ப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள்; அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாயிருந்தது” (நியாயாதிபதிகள் 7:12). அந்த இரவிலே தேவன் மீதியானியருடைய வல்லமைமிக்க படையை கிதியோனின் முன்னூறு பேரிடம் ஒப்புக்கொடுத்தார். மீதியானியர்கள் தங்கள் பிராணன் தப்ப ஓடிப்போனார்கள். இஸ்ரவேலர்கள் மீதியானியரின், ஓரேப் மற்றும் சேப் என்ற அதிபதிகளின், தலைகளை வெட்டி கிதியோனிடத்தில் கொண்டு வந்தார்கள் (நியாயாதிபதிகள் 7:25ஐ பார்க்கவும்). சிறிய குழுவாக இருந்த முன்னூறு போர்வீரர்கள் மூலமாக தேவன் வெற்றியைக் கொடுத்தார்! இங்கே இந்த இரவிலே இது நமக்குப் பாடம். இன்று அநேக சபைகள் எண்ணிக்கையிலே மட்டும் விருப்பமுள்ள மனிதர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் சுவிசேஷ மீதியானியர்கள். நூற்றுக்கணக்கான மக்கள் ஆஜராகி இருக்க வேண்டியது அவசியம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மற்றும் அப்படி இருந்தும் அவர்கள் வல்லமை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பிரசங்கிகள் கிதியோனையும் அவருடைய குறைந்த எண்ணிக்கையான உண்மையுள்ள வீரர்களையும்பற்றி நினைத்தால் அது அவர்களுக்கு அதிக நன்மையை தரும். ஜோனத்தான் எஸ். டிக்கர்சன் ஒரு மகத்தான புத்தகத்தை எழுதியிருக்கிறார் அதன் தலைப்பு பெரிய சுவிசேஷ பின்னடைவு (பேக்கர் புக்ஸ்). அவர் அந்தப் புள்ளி விபரத்தைக் கொடுத்திருந்தார். இன்று சுவிசேஷ கிறிஸ்தவர்களாக உரிமை பாராட்டும் இளம் மக்கள் 7% மட்டுமே. நாற்பத்தைந்து சதவீத சுவிசேஷ கிறிஸ்தவர்கள் அடுத்த இருபது ஆண்டுகளில் மரித்துப்போவார்கள். அதன் அர்த்தம் இளம் சுவிசேஷ கிறிஸ்தவர்கள் 7%லிருந்து விரைவாக குறைந்து ஏறக்குறைய “4 சதவீதம் அல்லது அதைவிட குறைவாக இருப்பார்கள் – புதிய சீஷர்கள் உருவாக்கப்படாவிட்டால்” (ibid., p. 144). சபைகளிலே உள்ள இளம் மக்களின் எண்ணிக்கையிலே ஏன் இப்படி ஒரு வீழ்ச்சி? ஏனென்றால் அவர்கள் ஜீவனுள்ள கிறிஸ்தவத்தின் மூலமாக சவால் விடப்படவில்லை என்று நான் உணர்த்தப்பட்டேன். நமது இலக்கு என்ன? இந்தச் சபையில் நமது இலக்கு இளம்மக்கள் கிறிஸ்துவின் உள்ளார்ந்த ஆற்றலை உயர்ந்த அளவில் அடைய உதவி செய்ய வேண்டும். கிதியோனின் போர்வீரர்களைப்போல ஒரு இளம் மக்கள் குழுவை எழுப்ப வேண்டும். இளம் மக்கள் நமது சபைக்கு வந்து இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாகமாற உதவி செய்ய வேண்டி நாம் இங்கே இருக்கிறோம். கிறிஸ்துவின் போர்ப்படையில் நாம் சேர்க்க விரும்பும் மக்கள் இளம் மக்கள். அவர்கள் இளம் மக்கள் சில புதிய காரியங்களைச் செய்ய தயாராக மற்றும் சவாலாக இருப்பவர்கள். இயேசு சொன்னார், “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” (மாற்கு 8:34). இயேசுவைப் பின்பற்ற விருப்பமில்லாதவர்கள், என்ன விலை கொடுத்தாலும், களை எடுக்கப்பட வேண்டும். தங்களைக் குழந்தைகளைப்போல கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறவர்களை நான் “எடுப்பவர்கள்” என்று அழைப்பேன். அப்படிப்பட்ட “எடுப்பவர்கள்” தங்களை வெறுக்க விரும்ப மாட்டார்கள். அவர்கள் இயேசுவுக்கு எதையும் கொடுக்க விரும்பமாட்டார்கள். என்றென்றுமாக கவனிக்கப்பட வேண்டும் என்று நீ விரும்பினால், இது உங்களுக்கு ஏற்ற சபை அல்ல. எனது மனைவி இல்லியானா நமது சபைக்குப் பதினாறு வயது இருக்கும்போதுதான் வந்தாள். மூன்று வாரங்களுக்குள்ளாக அவளாகவே சபைக்கு வர ஆரம்பித்தாள். மூன்று வாரங்களுக்குப் பிறகு அவளை “அழைத்து வரவேண்டும்” என்ற அவசியம் ஏற்படவில்லை. உடனடியாக அவள் நமது சபையின் ஒரு வேலைக்காரியாக மாறினாள். அவள் 17 வயதில் ஒரு போனராக மாறினாள். அவள் 19 வயது மட்டுமே இருந்தபொழுது என்னை விவாகம் செய்து கொண்டாள். எங்கள் இரட்டை குழந்தைகள் பிறந்த முதல் ஞாயிற்றுக்கிழமையில் அவர்களை சபைக்குக் கொண்டு வந்தாள். எனது மகன் லிஸ்லி பிறந்த நாளிலிருந்து ஒரு ஞாயிற்றுக்கிழமைகூட சபைக்கு வராமல் ஒருபோதும் இருந்ததில்லை. வெஸ்லி தனது வாழ்நாளில் சுகவீனம் காரணமாக ஒரேயொரு ஞாயிறு மட்டும் தவறவிட்டான். மற்ற அநேக பெண்கள் இது மிகவும் அதிகம் என்று சொன்னார்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு சிறிய சாக்கு இருந்தாலும் வீட்டிலே விட்டு விடுகிறார்கள். ஆனால் எனது மனைவி செய்தது சரி மற்றவர்கள் செய்தது தவறு. ஏறக்குறைய அவர்களுடைய பிள்ளைகள் அனைவரும் ஒரு சுயநல வாழ்க்கை வாழ்வதற்காக சபையை விட்டுவிட்டார்கள். எனது இரண்டு பையன்களும் ஒவ்வொரு கூட்டத்துக்கும் இந்த நாள் வரையிலும் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் இங்கே இருக்க காரணம் எனது மனைவி கிறிஸ்துவின் ஒரு சீஷி. டாக்டர் கிரைட்டன் எல். சென், இன்னும் சில நிமிடங்களில் தமது அறுபதாவது பிறந்த நாளுக்காக கனம்பண்ணப்பட போகிறார், அவர் திருமதி ஹைமர்ஸை பற்றி சொன்னார், “அவள் நமது சபைக்கு முதலாவது வந்தபொழுது எனக்குத் தெரியும். அப்பொழுது அவள் கிறிஸ்துவுக்காக பெரிய அன்பு கொண்டிருந்தாள், மற்றும் இழக்கப்பட்ட ஆத்துமாக்களுக்காக ஒரு இரக்கம் கொண்டிருந்தாள், அதில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஒரு [டீன்ஏஜர்] இளம் வயதில் இருக்கும்பொழுதே தனது வாழ்க்கையை நமது சபை ஊழியத்துக்குக் கொடுத்துவிட்டாள் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை... இளம் மக்களே, திருமதி ஹைமர்ஸ் உங்கள் மாதிரியாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவளுடைய உதாரணத்தை பின்பற்றினால், நமது சபை ஒரு பிரகாசமான மற்றும் மகிமையான எதிர்காலத்தை உடையதாக இருக்கும்.” நாம் டாக்டர் சென் அவர்களின் அறுபதாவது பிறந்த நாளை இன்று இரவு நாம் கொண்டாட இருக்கிறபடியினால் அவரும் கிறிஸ்துவின் சீஷருக்கு ஒரு பிரகாசமான உதாரணமாகும் என்று அவரைப்பற்றி நான் சொல்ல வேண்டும். அவர் நமது சபையில் நியமிக்கப்பட்ட போதகராகும். அவர் குழந்தையாக இருந்தபொழுது மிகவும் சுகவீனமாக இருந்தார். அவர் மிகவும் சுகவீனமாக இருந்தபடியால் அவரது குழந்தை பருவம் முழுவதும் அதிகமாக கண்ணாடி பெட்டிக்குள் வைத்திருந்தார்கள். அவர் ஒரு மருத்துவ டாக்டர் படித்தபொழுது ஒரு இளம்பெண்ணாக நமது சபைக்கு வந்தார். அவர் முப்பது வயதுக்கு மேலாக வாழமுடியாது என்று மற்றமருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். அவர் ஒரு பெலவீனமான சிறிய மனிதனாக சபை பொறுப்பெடுக்க வேண்டும் என்று விரும்புகிறவராக இருந்திருக்க வேண்டும். ஆனால் இல்லை! அவர் தம்மை சபையினுடைய வேலைக்காக கொடுத்தார் மற்றும் ஒரு கிறிஸ்துவின் சீஷனாக மாறினார். அவர் அதிக முயற்சிகளில் ஈடுபடக்கூடாது அப்படி ஈடுபட்டால் முப்பது வயதுக்கு முன்பாகவே மரித்துப்போவார் என்று சொன்னார்கள். ஆனால் கிறிஸ்துவின் வேலை டாக்டர் சென் அவர்களைப் பெலப்படுத்தினது. அவர் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக முப்பது ஆண்டுகள், ஒரு நல்ல பெலமான வாழ்க்கை வாழ்ந்தார். அவர் தமது சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவைப் பின்பற்றினார். இப்பொழுது அவர் அறுபது வயதில் ஒரு பராக்கிரமசாலியாக இந்த மேடையிலே அமர்ந்திருக்கிறார்! நான் இவர்களைப்பற்றி தொடர்ந்து சொல்ல முடியும் திருவாளர் மெனிசியா, மற்றும் திருமதி சாலாசார், மற்றும் திருவாளர் பென் கிரிப்பித், அவர் இன்று இரவு பருவ விடுமுறையில் தனது மனைவியோடு இருக்கிறார். நான் இவர்களைப்பற்றி சொல்ல முடியும் திருவாளர் மற்றும் திருமதி விர்ஜில் நிக்கல், இந்தக் கட்டடத்தை விலைக்கு வாங்க அதிகபடியான பணத்தைக் கடனாக கொடுத்தார்கள். திருவாளர் நிக்கல் 75 வயதுள்ள சர்க்கரை நோயாளி – இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒரு மணிநேரம் வண்டி ஓட்டி ஒவ்வொரு புதன் இரவிலும், ஒவ்வொரு ஞாயிறு காலை, மற்றும் ஒவ்வொரு ஞாயிறு இரவிலும் தவறாமல் வருகிறார். அல்லது இந்த அற்புதமான இளம் மனிதனைப்பற்றி நான் சொல்லமுடியும், ரெவரண்டு ஜான் சாமுவேல் கேஹன் அவர் விரைவில் எனக்குப் பதிலாக இந்தச் சபையின் போதகராக மாறுவார். இந்த மக்கள் எல்லாரும் இயேசுவின் சீஷர்களாக, மற்றும் சிலுவையின் சிப்பாய்களாக மாறினவர்கள். எனது போதகர் டாக்டர் தீமோத்தேயு லின் சொன்னார், “அதிகமானதைவிட சிறந்தது குறைவானது... ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தின் எல்லா இருக்கைகளும் நிறைந்திருக்கலாம், ஆனால் ஜெபக்கூட்டத்தில் ஒரு கையளவான மக்கள் மட்டுமே இருப்பார்கள் என்பது உண்மை... அது ஆரோக்கியமானது என்று நம்மால் சொல்ல முடியாது” (The Secret of Church Growth, p. 39). வேதாகமம் முழுவதையும் பாருங்கள். மறுபடியும் மறுபடியுமாக உங்களால் பார்க்க முடியும் “அதிகமானதைவிட சிறந்தது குறைவானது”. இயேசுவானவர் 11 மனிதர்களைக் கொண்டு உலகத்தை மாற்றினார் ஏனென்றால் அவரது மனிதர்கள் அவருக்காக மற்றும் அவரது காரியங்களுக்காக மரிக்க சித்தமாக இருந்தார்கள். இதே பாடத்தை நாம் சபை வரலாற்றிலும் பார்க்கிறோம். பெந்தேகொஸ்தே நாளில் 120 மக்கள் மட்டுமே ஆஜராகி இருந்தார்கள். நவீன மிஷன் இயக்கத்தை ஒரு சில மாரவியான் கிறிஸ்தவர்கள் மட்டுமே விளக்கேற்றினார்கள். ஒரு சில மெத்தடிஸ்டுகள் மட்டுமே, ஒரு கையளவானவர்கள், பெரிய எழுப்புதலை உண்டாக்கினார்கள். ஜேம்ஸ் அட்சன் டெய்லரைப் பின்பற்றி ஒரு சிலர் மட்டுமே சீனாவின் உட்பகுதியிலே சுவிசேஷ ஊழியம் செய்தார்கள். தங்களுடைய சிறந்ததை கிறிஸ்துவுக்குக் கொடுக்க விருப்பம் இல்லாதவர்கள் களையெடுக்கப்பட வேண்டும். தங்களை எப்பொழுதும் குழந்தைகளாக நடத்த வேண்டும் என்று விரும்புகிறவர்கள் களையெடுக்கப்பட வேண்டும். தங்கள் வசதியான மூலைகளை விட்டு ஒருபோதும் அசைய விரும்பாதவர்கள் களையெடுக்கப்பட வேண்டும். அவர்கள் நிலையான “எடுப்பவர்கள்” கிறிஸ்துவுக்காக ஒருபோதும் ஒன்றையும் கொடுக்காதவர்கள். நாம் ஒரு சீஷர்களின் சபையாக இருக்க விரும்பினால் எடுப்பவர்கள் போகவிடவேண்டியது அவசியம், மென்னையான புதிய சுவிசேஷக மீதியானியருக்கு சவால் விடவும் மற்றும் அதை மாற்ற விரும்பும் இளம் மக்களை உடையவர்களாக, நாம் இருக்க வேண்டும். கிறிஸ்துவுக்காக தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுப்பவர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டியது அவசியம். மற்றும் தங்களை எப்பொழுதும் குழந்தைகளாக நடத்த வேண்டும் என்று விரும்புகிறவர்களை ஒருபோதும் வளராதவர்களை நாம் துணிவூட்டக் கூடாது! நாம் கிறிஸ்துவின் சீஷர்களாக இருக்க விரும்புகிறவர்களை உற்சாகப்படுத்த வேண்டியது அவசியம், மற்றவர்களை கிதியோன் செய்ததைபோல வீட்டுக்குப் போகவிட வேண்டியது அவசியம்! உங்கள் பாட்டுத்தாளிலே உள்ள பாடல் எண் 1ஐ தயவுசெய்து எழுந்து நின்று பாடவும், “கிறிஸ்தவ போர்வீரனே, முன்னேறு.” அதை பாடுங்கள்! கிறிஸ்தவ போர்வீரனே, முன்னேறு, யுத்தத்திற்கு அணிவகுத்து வா, நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர்: |
முக்கிய குறிப்புகள் கிதியோனின் சேனை! GIDEON’S ARMY! ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் “அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நான் மீதியானியரை உன்னோடிருக்கிற ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு அவர்கள் மிகுதியாயிருக்கிறார் கள். என் கை என்னை ரட்சித்தது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு இடமாகும்” (நியாயாதிபதிகள் 7:2). I. முதலாவது, அந்த தேவதுரோகம், நியாயாதிபதிகள் 6:12, 13. II. இரண்டாவதாக, இந்த வேதாகமத்தின் தேவன் இன்னும் ஜீவிக்கிறார்! மல்கியா 3:6; நியாயாதிபதிகள் 7:1-3; லூக்கா 8:12; நியாயாதிபதிகள் 7:4, 1, 6, 7, 12; மாற்கு 8:34. |