இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
வேதாகமமும் இன்றய தேவதுரோகமும்!THE BIBLE AND TODAY’S APOSTASY! ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் ஜூன் 17, 2018 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் |
உங்கள் வேதாகமத்தை இரண்டு தீமோத்தேயு மூன்றாம் அதிகாரத்துக்கு, தயவுசெய்து திருப்பிக்கொள்ளுங்கள். இது ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமத்தில் 1280ஆம் பக்கத்தில் உள்ளது. இப்பொழுது மேலே பாருங்கள். அந்த அதிகாரத்தை உங்கள் வேதாகமத்தில் தயவுசெய்து திறந்து வைத்துக்கொள்ளுங்கள். வேதாகமத்தில் இன்று நமக்கு மிகவும் முக்கியமான பகுதிகளாக II தீமோத்தேயு, மூன்று மற்றும் நான்கு அதிகாரங்கள், இருக்கின்றன என்று நான் கருதுகிறேன். II தீமோத்தேயு வேதாமத்துக்காக அப்போஸ்தலன் பவுல் எழுதின கடைசி காரியமாகும். அது கி.பி. 67ல் எழுதப்பட்டிருக்கலாம். பவுல் ஒரு கிறிஸ்தவ போதகனாக இருந்த காரணத்தால் நீரோ மன்னனால் கைது செய்யப்பட்டார். அவர் கொலோசியமுக்கு ஒரு குறுகிய தூரத்தில் இருந்த, மாமர்டின் சிறையில் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தார். நானும் எனது மனைவியும் அந்த இருளான சிறைக்குச் சென்று இருந்தோம். அங்கு இருந்துதான் இந்தக் கடிதத்தை பவுல் எழுதினார். II தீமோத்தேயுவை எழுதின ஒருசில மாதங்களில் அவர் சிரச்சேதம் செய்யப்பட்டார். தேவதுரோகம் உள்ள ஒரு காலத்தில் அவிசுவாசம் மற்றும் கிறிஸ்தவத்தை புறக்கணிக்கும் ஒரு காலத்தில் – கிறிஸ்தவர்களாக வாழ்வது எப்படி என்பதை நமக்குக் காட்டுவதற்காக எழுதப்பட்டது II தீமோத்தேயு ஆகும். நாம் வாழும் இந்தக் காலத்துக்காக சிறப்பாக இது எழுதப்பட்டது! உலக வரலாற்றில் 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டு அதிகமான தேவனற்ற காலமாகும். பாருங்கள், 3ஆம் அதிகாரம் 1ஆம் வசனத்தை பாருங்கள். “மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக” (II தீமோத்தேயு 3:1). தயவுசெய்து, மேலே பாருங்கள். கிறிஸ்து பரம் ஏறினதிலிருந்து உள்ள முழுகாலம் இது என்று சில எழுத்தாளர்கள் சொல்லுகிறார்கள். அதை நான் விசுவாசிக்கவில்லை. டாக்டர் ஜே. வெர்னான் மெக்ஜீ சொன்னார், “நாம், கடைசி காலத்தை நோக்கி, நகர்ந்து கொண்டு இருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன்... அப்படிப்பட்ட ‘கொடிய’ காலங்களில் இப்பொழுது [ஜீவிக்கிறோம்] நாம் இருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எனக்குத் தெரியாது, ஆனால் இது இன்னும் மோசமாக போகும் என்று நான் நிச்சயித்து இருக்கிறேன்” (McGee, Thru the Bible; note on II Timothy 3:1). அடுத்த சில வசனங்கள் நாம் வாழும் காலத்தைத் தெளிவாக படம்பிடித்துக் காட்டுகின்றன. 2-7 வசனங்களைப் பாருங்கள். “எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப் பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களா யும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப் படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்த மில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர் களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகி களாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர் களாயும், தேவப்பிரியராயிராமல் சுக போகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்: இப்படிப்பட்ட வர்களை நீ விட்டுவிலகு. பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களா யிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப் பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக் கொள்ளுகிறார்கள்” (II தீமோத்தேயு 3:2-7). நமது சபையைவிட்டு திரு. ஆலிவாஸ்சோடு பிரிந்துபோன அந்த மக்களின் ஒரு பட்டியலைபோல இது ஒலிக்கிறது. நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம்! இப்பொழுது வசனம் 12 மற்றும் 13ஐ பாருங்கள். “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். பொல்லாத வர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர் களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன் மேலும் கேடுள்ளவர்களாவார்கள்”
மேலே பாருங்கள். இந்த வசனங்கள் ஒரு கடமை தவறும் உலகத்தை விவரிக்கின்றன, தேவனையும் வேதாகமத்தையும் புறக்கணிக்கும் உலகத்தை விவரிக்கின்றன, ஒரு பொல்லாத மற்றும் துக்ககரமான உலகத்தை அநேக மக்கள் மிருகத்தைபோல செயல்படும், “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய்” [கிறிஸ்தவ வாழ்க்கை] நடக்க மனதாயிருக்கிற யாவரும் ஏதோஒரு விதத்தில் துன்பப்படுவார்கள் என்ற ஒரு உலகத்தில், நல்ல கிறிஸ்தவர்கள் நிந்திக்கப்படும் ஒரு உலகத்தை விவரிக்கின்றன [வசனம் 3]. இவைகளை எல்லாம் இன்று நாம் பார்க்கிறோம். நிலைப்புத் தன்மை உள்ளவர்கள் “பால்உணர்வு புரட்சிக்கு” விரோதமாக நிற்பவர்களைப் பயமுறுத்துவதை இன்று நாம் பார்க்கிறோம். அநேக சபை உறுப்பினர்களை இது பயமுறுத்துகிறது. 200,000 தென் பாப்டிஸ்டுகள் சென்ற ஆண்டில் சபைகளைவிட்டு ஓடிவிட்டார்கள். இந்த ஆண்டிலும் தங்கள் ஜீவனுக்காக அதிகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் – இந்த பயத்தினால், “கொடிய” பயத்தினால், அபாயத்தினால், மற்றும் பிசாசின் காலத்தில் தங்கள் ஜீவனுக்காக அதிகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த முஸ்லிம்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். வெடிகுண்டுகள் போய்க்கொண்டு இருக்கின்றன. போதை மோசடிகள் வானாளாவ எட்டுகின்றன. சிலுவைகள் இடித்துத் தள்ளப்படுகின்றன. பிள்ளைகள் தங்கள் பள்ளியில் ஜெபிக்க முடியாது என்று சொல்லப்படுகிறார்கள். நமது நாட்டிலும் இந்த உலகத்திலும் பயங்கரமான காரியங்கள் நடக்கப்போகின்றன என்று ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளுகிறார்கள் என்று காணப்படுகிறது. நீயும் நானும் இந்தக் கொடிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்தப் பிரிட்டிஷ் சுவிசேஷகர் லியோனார்டு ராவன்ஹில் சொன்னார் “இவைகள் கடைசி நாட்களாக இருக்கின்றன!” நான் அந்த வாக்கியத்தை எழுதின ஒரு சில நொடிகளுக்குப் பிறகு முஸ்லிம் பயங்கரவாதிகள் பாரிஸின் பல இடங்களைத் தாக்கினார்கள் என்று நான் கேள்விப்பட்டேன். அந்த முஸ்லிம்கள் குளிர் இரத்தத்தில் 120 மக்களுக்குமேலாக கொலை செய்தார்கள். 24 மணி நேரத்துக்கு முன்புதான் ஒபாமா சொன்னார், “ISIS அடக்கப்பட்டு விட்டது.” என்ன ஒரு தமாஸ்! ஜிம்மி காட்டரிலிருந்து அமெரிக்காவின் மிகவும் பெலவீனமான ஜனாதிபதி ஒபாமாவாக இருந்தார்! இவைகள் கொடிய காலங்கள். இவைகள் தேவதுரோகமான காலங்கள். நமது சபைகளில் இழக்கப்பட்ட மக்கள் நிறைந்திருக்கிறார்கள். அநேக போதகர்கள் சிலர் சபையைவிட்டு போய்விடுவார்கள் என்று மிகவும் பயந்து சுவிசேஷத்தைகூட பிரசங்கிப்பதில்லை – சில இழக்கப்பட்ட நபருக்குக் கோபம் வரும் என்று மிகவும் பயந்து சுவிசேஷத்தைகூட பிரசங்கிப்பதில்லை! உங்கள் கல்லூரிகளில் மயக்க மருந்து புகைக்கும் வேதாகமம் பொய்கள் நிறைந்தது என்று சொல்லும் விரிவுரையாளர்கள் நிறைந்து இருக்கிறார்கள். அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியும்! நான் சொல்லுவது சரிதான் என்று உனக்குத் தெரியும்! இதற்குப் பதில் என்ன? நாம் என்ன செய்ய வேண்டும்? அப்போஸ்தலன் இதற்குரிய பதிலை 14ஆம் வசனத்தில் தருகிறார், “நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறாய்” (II தீமோத்தேயு 3:14). “நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு.” என்ன நடந்தாலும் கவலைப்படாமல் தொடர்ந்து சபைக்கு வந்து கொண்டே இரு! “நீ கற்றுக்கொண்ட காரியங்களில் நிலைத்திரு.” டாக்டர் லீ ராபர்சன் (1909-2007) ஒரு பெரிய பாப்டிஸ்டு முற்பிதாவாக இருந்தார். அவர் கடைபிடித்த பொன்மொழி “செழித்தோங்க வேண்டிய மூன்று” – “நான் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக பிரசங்கித்துக்கொண்டுவந்த ஒரு பொன்மொழி!” – “ஆராதனையில் உண்மை – ஞாயிறு காலை, ஞாயிறு மாலை மற்றும் புதன் மாலையில் உண்மை” (Lee Roberson, D.D., “Three to Thrive Statement,” The Man in Cell No. 1, Sword of the Lord Publishers, 1993, back cover). அதிலே என்ன தவறு இருக்கிறது? அதிலே எந்தத் தவறும் இல்லை! அவிசுவாசிகளோடு ஒரு விருந்துக்குப் போவதற்குப் பதிலாக இங்கே சபையிலே இரு! லாஸ் வேகாஸ், அல்லது பொல்லாத நகரமான சன் பிரான்சிஸ்கோவுக்குப் போவதற்குப் பதிலாக, இங்கே சபையிலே இரு! ஒவ்வொரு ஞாயிறு காலை, ஞாயிறு இரவு, மற்றும் புதன் இரவில் இங்கே சபையிலே இரு! என்ன வந்தாலும் கவலைப்படாதே! தேவதுரோகம் கருமையாக வளர்ந்து வரும்பொழுது, “நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு.” அதற்கு ஆமென்! இப்பொழுது வசனம் 15ஐ பாருங்கள். “கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்”
மேலே பாருங்கள். டாக்டர் மெக்ஜீ சொன்னார், தேவதுரோகமான ஒரு உலகத்துக்கு எதிரான ஒரே மாற்றுமருந்து தேவனுடைய வார்த்தை [வேதாகமம்] ஆகும். தேவனுடைய பிள்ளையின் ஒரே வாய்ப்பு மற்றும் புகலிடம் தேவனுடைய வார்த்தை ஆகும். நீ வேதாகமத்தை ஒவ்வொரு நாளும் படிக்கவில்லையானால், இன்றய தேவதுரோகத்தில் நீ குழப்பம் அடைவாய் மற்றும் கலங்கிவிடுவாய். இப்பொழுது வசனம் 15ஐ பாருங்கள், “கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்”
டாக்டர் மெக்ஜீ சொன்னார், வேத வசனங்கள் இரட்சிக்கப்படுவதற்கான [வழி] வகையை நமக்குக் கொடுப்பது மட்டுமல்ல... ஆனால் இப்பொழுதுள்ள பொல்லாத உலகத்திலிருந்து நம்மை காப்பாற்றுகிறது... தொடர்ச்சியான வேதவாசிப்பு மட்டுமே இதற்குத் தேவனுடைய பதிலாக [பிரதியுத்திரமாக] இருக்க முடியும் என்பது என்னுடைய வாதமாகும். இதை செய்யக்கூடியது வேத வசனங்களா நாம் ஏன் வேதத்தை வாசிக்க வேண்டும், மற்றும் அதற்குக் கீழ்ப்படிய வேண்டும்? அது ஏனென்றால் வேதாகமம் மற்ற புத்தகங்களைப்போல அல்ல. 16ஆம் வசனத்தை கவனியுங்கள், “வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட் டாக்டர் W. A. கிரிஸ்வெல் (1909-2002) அவர்கள் வேதாகமத்தில் ஒரு பெரிய வல்லுனராகும். அவர் சொன்னார், பவுல் சொன்னதற்கு மிகதெளிவான அர்த்தத்தை கொடுக்க வேண்டுமானால் இதை கீழ்உள்ளபடி மொழிபெயர்க்க வேண்டும். “வேதவாக்கியங்களெல்லாம், தேவன் ஊதி அருளப்பட்டிருக்கிறது இந்தக் காரணத்தினால், அது எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாக்க பிரயோஜனமுள்ளது… வேதத்தின் மூலத்தில் இப்படியாக உள்ளது: இவை தேவனால் ஊதி அருளப்பட்டது (கிரேக்கில், தியோபினஸ்டாஸ்), அதாவது, வேதவசனங்கள் தேவனிடமிருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டவைகளாகும். வேதவசனங்களின் போதனைகள் வேதாகமத்தின்படி அருளப்பட்டவைகளா II பேதுரு 1:21 சொல்லுகிறது “தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.” “ஏவப்பட்டார்கள்” என்பதன் கிரேக்க வார்த்தை பியாரோ என்பதாகும். அதன் பொருள் “அதோடு எடுத்துச் செல்லுதல்” என்பதாகும். வேதாகமம் தவறில்லாததது ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் “எடுத்து, அல்லது அதோடு சுமந்து வந்தார்” பேசின மற்றும் எழுதின ஆசிரியர்களை வேதாகமத்தை எழுத பயன்படுத்தினார். பரிசுத்த ஆவியானவர் மனித எழுத்தர்களுக்குத் தவறில்லாமல் வார்த்தைகளைப் பதிவு செய்யும்படி பயன்படுத்தினார். இவ்வாறாக, எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகளின் வேதாகமம் தேவன் மனிதனுக்குக் கொடுத்த தேவனுடைய வார்த்தையாகும். டாக்டர் ஹென்றி எம். மோரிஸ் சொன்னார், “‘வேதவாக்கியங்கள் எல்லாம்,’ ஒவ்வொரு தனிப்பட்ட ‘வேதவாக்கியமும்’ இதில் அடங்கும்... கருத்துக்கள் மட்டுமல்ல ஆனால் உண்மையான எழுத்துகள், எழுதப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் அடங்கும். இவ்வாறாக இந்த வார்த்தைகள் தேவனுடையவைகள் [தேவனால் ஏவப்பட்டு அருளப்பட்டவைகள்]... உண்மையான போதனைகள் முழுநிறைவான சொல்வடிவில் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்டவைகளாகும்” (Henry M. Morris, Ph.D., The Defender’s Study Bible, note on II Timothy 3:16). “முழுநிறைவான” என்றால் “சகலமும்” என்பதாகும். “சொல்வடிவில்” என்றால் “வார்த்தைகள்” என்பதாகும். “ஏவப்பட்டது” என்றால் “தேவன் அருளினது” என்பதாகும். வேதவாக்கியங்களெல்லாம் தேவன் ஊதி அருளப்பட்டிருக்கிறது. அதுதான் முழுநிறைவான சொல்வடிவில் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்டவைகளாகும், சரியானதாக ஏற்றுக்கொள்ளப் பட்ட கிறிஸ்தவத்தின் போதனையாகும் (டாக்டர். ஆர். எல் . ஹைமர்ஸ் ஜூனியர்). எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகளின் முழுவேதாகமமானது “தியோபோனஸ்டஸ்” – “தேவன் ஊதினது” – தேவனிடமிருந்து ஏவப்பட்டு அருளப்பட்டது. பரிசுத்த ஆவியானவரால் தங்கள் “மனதில் ஏவப்பட்டபடி” தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகளில் எழுதினார்கள். ஏவப்பட்டவைகள் மற்ற எந்த மொழிபெயர்ப்புகளுக்கும் நீட்டிக்கப்படவில்லை, KJV உட்பட, ஆனால் எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகளில் தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் எழுதினார்கள். முற்கால சுருள்வடிவ சுவடிகளை மிகவும் சிறந்த வகையில் சவக்கடல் எபிரெய வேதாகமத்தை பாதுகாத்து வைத்திருந்தது. கிரேக்கில் டெஸ்டஸ்ரிசிப்டஸ் மிகவும் நம்பத்தக்க மூலாதாரமான மரபுவழி அமைப்பாகும். நீங்கள் கிங் ஜேம்ஸ் வேதாகமத்தைத் திறக்கும் பொழுது மிகவும் நம்பத்தக்க மூலாதாரமான மரபுவழியான தேவனால் ஏவப்பட்டு எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகளில் எழுதப்பட்ட வேதாகமத்தை வாசிக்கிறீர்கள். இந்தக் காரியம் ஏன் முக்கியமானது? டாக்டர் பி. பி. மெக்கின்னி பாய்லார் பல்கலை கழகத்தின் ஒரு தென் பாப்டிஸ்டு பள்ளியின், இசை துறையின் தலைவராக இருந்தார். ஏற்கனவே, 1920ல், பாய்லார் மற்றும் தென் பாப்டிஸ்டு பள்ளிகளின் லிபரல் ஆசிரியர்கள் வேதாகமத்தில் தவறுகள் இருப்பதாக போதித்தனர். அதனால்தான் டாக்டர் மெக்கின்னி இந்தப் பாடலை அவர் எழுதினார் “வேதாகமம் உண்மை என்று நான் அறிந்திருக்கிறேன்”. டாக்டர் மெக்கின்னி அவர்கள் டாக்டர் ஜான் ஆர். ரைஸ்சின் ஒரு நண்பராகும், மற்றும் அவர் வேதவசனங்களின் தவறில்லாமையை விசுவாசித்தார். அதனால்தான் டாக்டர் மெக்கின்னியின் பாடல் சொல்லுகிறது, வேதாகமம் தேவனிடமிருந்து அனுப்பப்பட்டது என்று நான் அறிந்திருக்கிறேன், என்னுடைய நீண்டகால போதகரான, டாக்டர் தீமோத்தேயு லின், அவர்களிடம் நான் வேதாகமத்தைக் கற்றுக்கொண்டேன், அவர் ஒரு ஆழமான வேதவல்லுனர் மற்றும் போப் ஜோன்ஸ் பல்கலை கழகத்தின் பட்டபடிப்புத் துறைக்குக் கற்பித்தவர். அதன்பிறகு அவர் டாய்பெய், டாய்வானில் சீன சுவிசேஷ செமினரிக்கு தலைவராக இருக்கும்படியாக சென்றார், தொடர்ந்து டாக்டர் ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர் IIIன் தலைவரானார், அவரை அநேகமுறை நான் சந்தித்தேன். என்னுடைய மற்றொரு ஆசிரியராக இருந்தவர் டாக்டர் ஜே. வெர்னான் மெக்ஜீ, அவரை ஒவ்வொரு நாளும் பத்து வருடங்களாக வானொலியில் கேட்டு வருகிறேன். வேதாகமம் எழுத்தின்படி உண்மை என்று நான் இந்தப் பெரிய வல்லுனர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். அதனால், நான் இளநிலை பட்டபடிப்புக்கு, கால் ஸ்டேட்டுக்கு, லாஸ் ஏன்ஜல்ஸ்சுக்கு போனபொழுது, அங்கே கற்பித்த வேதத்தை புறக்கணித்த லிபரல்களால் நான் குழப்பம் அடையவில்லை. அவர்கள் தவறாக இருந்தார்கள் என்றும், வேதாகமம் உண்மை என்றும் நான் அறிந்திருந்தேன். அதன்பிறகு நான் சான்பிரான்சிஸ்கோ அருகில் உள்ள கோல்டன் கேட் பாப்டிஸ்ட் தியோலெஜிகல் செமினரியில் முதுநிலை பட்டம்பெற்றேன். நடைமுறையில் அங்கே இருந்த ஒவ்வொரு விரியுரையாளரும் வேதத்தை புறக்கணித்த லிபரல்கள். அங்கே இருந்ததை நான் வெறுத்தேன். அது குளிர்ந்துபோன மற்றும் ஜீவனற்ற மற்றும் மரித்ததாக இருந்தது. எனக்குக் கற்பித்த விரியுரையாளர்கள் “அக்கிரமங்களி னாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாக” (எபேசியர் 2:1) – விரியுரையாளர்கள் அவர்களுடைய “புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதய கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு [அந்நியராயிருந்து],” (எபேசியர் 4:18). அவர்கள் சொன்ன பொய்களை நான் மனப்பாடம் செய்தேன் மற்றும் நான் எழுதின பரிட்சைகளில் அவர்கள் விரும்பின பதிலை நான் கொடுத்தேன். ஆனால் அந்த லிபரல்கள் கற்பித்த குப்பையான ஒரு வார்த்தையையும் நான் விசுவாசிக்கவில்லை. சங்கீதம் 119ன் மூன்று வசனங்கள் அந்தக் கொடுமையான தேவதுரோக செமினரியில் மூன்று வருடங்களைக் கடந்து செல்ல உதவி செய்தது, “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம். நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர் களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்”
அந்தப் பிசாசின் எலிவளையை போன்ற லிபரலிஸ படிப்பின் முடிவு சமயத்தில், நான் ஏறக்குறைய ஒரு செத்த மனிதனாக உணர்ந்தேன். தொடர்ந்து செல்லும்படி செய்த ஒரே காரியம் வேதாகமம். அநேக குளிர்ந்துபோன மற்றும் தனிமையான இரவிலே வேதத்தில் 119ஆம் சங்கீதத்தை திறந்து – எனது மார்பின்மீது வைத்துக்கொண்டு நான் தூங்கினேன். டாக்டர் மெக்ஜீ அவர்களை நான் முழுமையாக ஒத்துக்கொள்ளுகிறேன் அவர் சொன்னபொழுது, “தேவதுரோகமான ஒரு உலகத்துக்கு எதிரான ஒரே மாற்றுமருந்து தேவனுடைய வார்த்தை ஆகும். தேவனுடைய பிள்ளையின் ஒரேவாய்ப்பு மற்றும் புகலிடம் தேவனுடைய வார்த்தை ஆகும்... அது நமது தேவையை சந்திப்பதற்குப் போதுமானது... வேதவசனங்கள் எல்லாம் தேவனால் அருளப்பட்டிருக்கிறது – அது தேவன் ஊதினது. தேவன் விரும்புவதை இது சொன்னது, அவர் சொல்ல விரும்பின எல்லாவற்றையும் இதில் சொல்லி இருக்கிறது. இந்தக் காரணத்தால் இது மனித இருதயத்தின் தேவைகளை எல்லாம் இது சந்திக்கிறது” (McGee, ibid.; notes on II Timothy 3:14-17). இந்த ஆசீர்வதிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தைகளை நீங்கள் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீதிமொழிகள் 3:5-7க்கு திருப்பிக் கொள்ளுங்கள். இது ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமத்தில் 673ஆம் பக்கத்தில் உள்ளது. “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத் தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளி லெல்லாம் அவரை நினைத்துக்கொள்: அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு” (நீதிமொழிகள் 3:5-7). நீங்கள் இந்த வசனங்களை மனப்பாடம் செய்ய வேண்டும். அவைகளை உங்களுக்குள்ளேயே திரும்பத்திரும்ப சொல்லுங்கள். “உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்” (சங்கீதம் 119:130). நீங்கள் மனப்பாடம் செய்ய வேண்டியதாக நான் சொல்லும் அடுத்த பகுதி சங்கீதம் 119:97-99 ஆகும். இது ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமத்தில் 660ஆம் பக்கத்தில் உள்ளது. இதை நாம் எழுந்து நின்று சத்தமாக படிப்போம். “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம். நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர் நீங்கள் அமரலாம். தேவன்தாமே கொடுத்த இந்த வார்த்தைகள், உங்கள் படிப்பில், அவிசுவாசிகளான விரிவுரையாளர்களின் போதனைகளினால் தூரமாக போய்விடாதபடி எவ்வளவாக நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன். உங்கள் கல்லூரிகளில் பட்டம்பெற நீங்கள் படிக்கப்போகும் தேவனை மறுதலிக்கும் புத்தகங்களிலிருந்து இந்த வார்த்தைகள் உங்களை பாதுகாக்கும். தேவதுரோகமும் பாவமும் நிறைந்த இந்தப் பொல்லாத நாட்களில், ஒவ்வொரு நாளும் நீங்கள் வேதத்தை வாசிக்க வேண்டும் என்று நான் ஜெபிப்பேன். நீங்கள் அதை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். நாம் அனைவரும் வாழ்க்கையில் கடந்துவரும் உங்கள் தனிமையில் மற்றும் இருதய வேதனையின் நேரத்தில் இது உங்களுடைய மிகவும் அன்பான நண்பனாக மாறும். எனது வழிகாட்டியான ஆபிரகாம் லிங்கன் சொன்னார், “தேவன் மனிதனுக்குக் கொடுத்த மிகசிறந்த வெகுமதி வேதாகமம் ஆகும். இந்தப் புத்தகத்தின் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு நம்பிக்கையிலே சமநிலையாக இருக்க முடியும், மற்றும் நீ ஒரு சிறந்த மனிதனாக வாழவும் மற்றும் மரிக்கவும் முடியும்.” நீங்கள் மனப்பாடம் செய்ய வேண்டிய அடுத்த பகுதி இங்கே இருக்கிறது. எபிரேயர் 13:17க்கு திருப்பிக்கொள்ளுங்கள். இது ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமத்தில் 1304ஆம் பக்கத்தில் உள்ளது. இதை நாம் எழுந்து நின்று சத்தமாக படிப்போம். “உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர் களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமா யிருக்கமாட்டாதே” (எபிரெயர் 13:17). நீங்கள் அமரலாம். “உங்களை நடத்துகிறவர்கள்“ சபையின் போதகர்கள் ஆகும். அப்போஸ்தலர் 20:28ல் போதகர்களுக்கும் தலைவர்களுக்கும் அப்போஸ்தல னாகிய பவுல் சொன்னார், “தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்.” சபையின் போதகர்கள் மற்றும் தலைவர்கள் உங்களை மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை நடத்துவதைப்போல வழி நடத்துவதற்காக கொடுக்கப்பட்டு இருக்கிறார்கள். போதகர்கள் பரிபூரணமானவர்கள் அல்ல. ஆனால் நான் கண்டுகொண்டது, என்னுடைய போதகர் பரிபூரணமானவராக இல்லாவிட்டாலும், அவர் தேவனை நேசித்து அவருக்கு ஊழியம் செய்யும் ஒரு மனிதனாக இருந்தார். நான் அவருக்கு விரோதமாக கலகம் செய்து இருந்தால் இன்று நான் ஒரு போதகனாக இருக்க முடியாது. மற்றும் நீங்கள் மனப்பாடம் செய்ய வேண்டிய அடுத்த பகுதி இங்கே இருக்கிறது. எபிரெயர் 10:24, 25க்கு திருப்பிக்கொள்ளுங்கள். இது ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமத்தில் 1300ஆம் பக்கத்தில் உள்ளது. இதை நாம் எழுந்து நின்று சத்தமாக படிப்போம். “மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து: சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக் கடவோம்: நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்” (எபிரெயர் 10:24, 25). நீங்கள் அமரலாம். ஆவிக்குரிய ஒரு நல்ல இடத்திலே உங்களைத் தக்கவைத்துக்கொள்ள இது மிகப்பெரிய வழியாகும். நீங்கள் நம்பும் ஒரு சில மக்களோடு சிறிய குழுவாக சேர்ந்து ஜெபிக்க வேண்டியது மிகசிறந்த வழிகளில் ஒன்றாகும். நமது சபையின் ஒருசில மக்களோடு நான் நிலையான தொடர்புள்ளவனாக இருக்கிறேன். டாக்டர் கேஹன் மற்றும் எனது ஜெபகுழுவில் உள்ள அந்த இளம் மக்கள் இல்லாதிருந்தால், அநேக நேரங்களில் நான் கைவிடப்பட்டிருப்பேன். “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்”
மற்றும் இன்னும் ஒரு காரியம் இருக்கிறது. வேதாகமம் சொல்லுவதைப்போல செய்யுங்கள் நீங்கள் மாறுதல் அடைவீர்கள். வேதாகமம் சொல்லுகிறது, “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்“ (அப்போஸ்தலர் 16:31). நீ இயேசுவானவரை விசுவாசிக்கும்பொழுது, உனது முழுஇருதயத்தோடும் நீ அவரை நம்பும்பொழுது, நீ இரட்சிக்கப்படுவாய். உன்னுடைய பாவங்களுக்குரிய கிரயத்தைச் செலுத்தும்படியாக, உன்னுடைய ஸ்தானத்தில், ஒரு சிலுவையிலே ஆணியடிக்கப்பட்டு, அவர் மரித்தார். அவருடைய சரீரத்தின் ஐந்து காயங்களிலிருந்து அவருடைய இரத்தம் வழிந்தது. உன்னுடைய எல்லா பாவங்களையும் சுத்திகரிக்க அந்த இரத்தம் சிந்தப்பட்டது. வா மற்றும் இயேசுவை நம்பு, மற்றும் எல்லா நித்தியத்துக்குமாக நீ இரட்சிக்கப்படுவாய். வேதாகமம் அப்படி சொல்லுகிறது – இந்த வேதாகமம் பொய்ச் சொல்ல முடியாது, இது ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தை! நான் அறிந்தவரையிலும் நீரே உண்மையான நண்பர், விலையேறப்பெற்ற, மாறாத இரட்சகர் இயேசு இந்தப் பரிசுத்த புத்தகத்தின் பக்கங்களில் நமக்கு வெளிப்படுத்தப்பட்டார்! ஆமென்! நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: |