இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
சிலுவையை பற்றிய உபதேசம்THE PREACHING OF THE CROSS ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் எழுதப்பட்டு “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது” (I கொரிந்தியர் 1:18). |
நமது போதகர், டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள், அறுபது வருடங்களாக பிரசங்கித்துக் கொண்டு இருக்கிறார். அவர் ஆயிரக்கணக்கான போதனைகளை பிரசங்கித்து இருக்கிறார். இப்பொழுது நான் பிரசங்கிக்க போகிற போதனையை அவரே எழுதினார். வார்த்தைக்கு வார்த்தை என்கிற, நமது வலைதளத்தில் நூற்றுக்கணக்கான அவருடைய போதனைகள் அநேகம் உள்ளன. அவைகள் 39 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. போதனைகள் அடங்கிய வீடியோக்கள் மற்றும் மூலப்பிரதிகள் உலகத்தின் 221 நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. அவருடைய போதனைகளை உலகமுழுவதிலும் உள்ள போதகர்கள் பிரசங்கம் செய்கிறார்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் ஒரு பிரதானமான போதகர்! இருந்தாலும், அவருக்கு எல்லா அனுபவங்கள் இருந்தும், என்ன பிரசங்கிப்பது என்று தீர்மானமாக கண்டுபிடிக்க அவருக்குக் கஷ்டமாக இருக்கிறது. “அது ஏன் அப்படி கஷ்டமாக இருக்கிறது?” என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம். அது ஏன் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நமது சபையில் ஞாயிறு காலையில் மெய்யான கிறிஸ்தவர்களாக இல்லாத அநேக மக்கள் இருப்பார்கள். அவர்களில் சிலர் புத்தமத பின்னணியிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம். மற்றவர்கள் கத்தோலிக்க அல்லது புதிய சுவிசேஷக பின்னணியிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம், பெயருக்காக மட்டுமே கிறிஸ்தவர்களாக இருக்கும், பெயர் கிறிஸ்தவர்களாக இருக்கலாம். சிலர் எந்த மதபின்னணியையும் சேராதவர்களாகவும் இருக்கலாம். மற்றவர்கள் நமது சொந்த சபையில் இரட்சிக்கப்படாமல், வேதத்தைப்பற்றி அதிகமாக அறிந்த மக்களாக இருப்பார்கள், ஆனால் புதுபிறப்பின் அனுபவத்தை ஒருபோதும் பெறாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரு காரியம் பொதுவாக உள்ளது. அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு உண்மையாக மாற்றபடாதவர்கள். ஞாயிறு காலையில் போதனை ஒரு மணி நேரம் அல்லது அதைவிட குறைவான நேரம் மட்டுமே இருக்கிறது. அந்தக் குறுகிய நேரத்தில், சொல்லப்படும் போதனையானது நீங்கள் மதத்தைப்பற்றி நினைத்திருக்கும் அனைத்துக் கருத்துக்களையும் மாற்றக்கூடியதாகவும், மற்றும் மெய்யான கிறிஸ்தவத்தை உண்மையாக காட்டப்படவும், ஏதோ ஒரு சத்தியத்தை அல்ல, ஆனால் அந்தச் சத்தியத்தை – சத்தியத்தை மட்டும் காட்டக்கூடியதாக இருக்க வேண்டும். உனது நினைவுகளின் வழிகள் முழுவதையும் மாற்றி போதனையோடு உன்னை ஒத்துபோக செய்ய வேண்டியது அவசியம், மற்றும் உனது பொய்யான யோசனைகளை விட்டுவிட உன்னை சம்மதிக்க செய்து, பாவ உணர்த்துதலுக்குள் கொண்டு வரவேண்டும், மற்றும் உனது வாழ்க்கை முழுவதையும் இயேசு கிறிஸ்துவிடம் திருப்ப வேண்டும். அது ஒரு பெரிய வகுத்தமைத்தல் பணியாகும்! அதை செய்ய ஒரே ஒரு மணி நேரம் மட்டுமே உண்டு! நான் பிரசங்கிக்க இருப்பது ஒரு எளிமையான சுவிசேஷ போதனையாக காணப்படலாம், ஆனால் அதற்குள் ஒரு பெரிய கருத்து மற்றும் ஜெபத்தின் பங்கு நிறைந்திருக்கிறது. நமது பாடம் ஒரு தனி வேதவசனமாகும். அதிலிருந்து நான் பிரசங்கிக்கும் சில வார்த்தைகள் உங்களுக்கு உதவி செய்யும்; நான் சொன்னதில் ஒரு சிறிதாகிலும் நீங்கள் வீட்டுக்குச் சென்ற பிறகு இன்றே நினைவில் கொள்ளுவீர்கள் என்று நான் ஜெபிக்கிறேன், அதாவது, மிக சிறிய கருத்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி சிந்திக்க செய்யும், மற்றும் உன்னுடைய நித்திய ஆத்துமாவின் இரட்சிப்புக்கு அவர் செய்ததை நினைக்க செய்யும். இங்கே, பிறகு, அந்தப் பாடம், I கொரிந்தியர் 1:18 ல் உள்ளது. நான் வாசிக்கும்பொழுது அதை கவனியுங்கள். “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் இந்தப் போதனை மூன்று பிரதானமான கருத்துகளை உடையதாகும்: (1) சிலுவையைப் பற்றிய உபதேசமாகும்; (2) கெட்டுப்போகிறவர்களுக்குச் சிலுவையின் உபதேசம் பைத்தியமாகயிருக்கிறது; மற்றும் (3) ஒரு உறுதியான சபையை கட்டுவதற்குச் சிலுவையின் உபதேசம் மட்டுமே போதுமானதல்ல. I. முதலாவதாக, சிலுவையை பற்றிய உபதேசமாகும். அப்போஸ்தலனாகிய பவுல் பின்வரும் வார்த்தைகளைக் குறித்து என்ன அர்த்தப்படுத்துகிறார், “சிலுவையைப் பற்றிய உபதேசம்”? இந்த வாக்கியமானது, “சிலுவையைப் பற்றிய உபதேசம்,” ஒரு பிரதானமான கருத்தாகும். அதன்பொருள் என்னவென்றால் இந்த வார்த்தைகளில் ஒரே ஒரு சத்தியம் அடங்கியுள்ளது என்பதாகும். அவை ஒரே ஒரு உண்மையான சுவிசேஷத்தை குறிப்பிடுகிறது. ஒரே ஒரு தேவன் இருப்பதைப் போல, ஒரே ஒரு சுவிசேஷம் இருக்கிறது. மற்றும் ஒரே ஒரு இரட்சகர் – இயேசு கிறிஸ்து இருக்கிறார். தற்காலத்து கழுமரம் “சிலுவையை பற்றிய உபதேசம்” குறித்து என்ன சொல்லுகிறது என்பதை நாம் நம்புவது இல்லை ஒருவேளை இது எனக்கு உண்மையாக இருக்கிறது ஆனால் உனக்கு இது இல்லாமல் இருக்கலாம். தற்காலத்துக் கழுமரத்தவர் சொல்லலாம், “அது உன்னுடைய சத்தியம். அது உனக்கு உண்மையாக இருக்கிறது. ஆனால் அது என்னுடைய சத்தியமல்ல.” அதை தற்கால கழுமரத்தவரின் இரட்டை பேச்சு என்று நான் சொல்லுவேன். வேதாகமம் சிலுவையைக் குறித்துப் பேசும்பொழுது, அது ஒரு குறிக்கோள் சத்தியமாக பேசுகிறது – உங்களில் ஒவ்வொருவரும் அதனால் இடைப்பட கூடிய ஒரு சத்தியமாக இருக்க வேண்டியது அவசியமாகும். நீ விசுவாசித்தாலும் விசுவாசிக்கவில்லையானாலும் இது உண்மையாக நிலைத்து இருக்க கூடிய ஒரு சத்தியமாகும். ஏனென்றால் இதைப் பற்றி வேதாகமத்தில் தேவன் பேசியிருக்கிறார், இதை நீ நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் இது உண்மையாக இருக்கிறது. அதாவது உன்னுடைய மனது இதன் முக்கியத்துவத்தை கிரகித்துக் கொள்ள முடியாவிட்டாலும், இது ஒரு குறிக்கோளான சத்தியமாகும். அடுத்தபடியாக, “சிலுவையைப் பற்றிய உபதேசம்” என்பது, வேதாகமத்தில் காணப்படுவது மட்டுமல்ல, ஆனால் இது சரித்திரப் பூர்வமான உண்மையாகும் – உன்னுடைய பாவத்துக்காக இயேசு கிறிஸ்து ஆழமாக பாடுபட்டார் என்ற உண்மை, கெத்செமெனே தோட்டத்தில் உன்னுடைய பாவங்கள் அவருடைய சொந்த சரீரத்தின் மீது வைக்கப்பட்டபொழுது, மிகப்பெரிய வேதனை மற்றும் வலியை அவர் கடந்து வந்தார். பிலாத்துவின் நீதிமன்றத்தில் அவர் அரை மரணம் அடையும் அளவுக்கு அடிக்கப்பட்டபொழுது அவர் கொடுமையான சித்திரவதைகுள்ளாக சென்றார். அதன்பிறகு கல்வாரி மலைக்கு அவர் இழுத்துச் செல்லப்பட்டார், அங்கே அவர்கள் அவருடைய கைகளிலும் கால்களிலும் ஆணிகளால் சிலுவையின்மீது அடிக்கப்பட்டார், அங்கே அந்தச் சிலுவையை உயர்த்தினார்கள், மற்றும் அவரை உயர்த்தி அங்கேயே தொங்கவிட்டார்கள், உன்னுடைய பாவத்துக்குரிய தண்டனை கிரயத்தைச் செலுத்த இரத்தம் சிந்தி மரிக்க செய்தார்கள், அதனால் நீ இரட்சிப்பு அடையும்படியாக, உனது பாவங்கள் மன்னிக்கப்பட்டது மட்டுமல்ல, அவருடைய மரணத்தின் மூலமாக நீதிமானாக்கப்படும்படியாக, அதாவது, அவர்மேல் வைக்கும் ஒரு எளிமையான விசுவாச கிரியையின் மூலமாக பாவம் இல்லாததாக எண்ணப்படுகிறாய். “சிலுவையைப் பற்றிய உபதேசம்” என்கிற உபதேசம் காண்பிக்கிறது யாரையென்றால் “பாவத்துக்கு மரித்தவர்களாக இருந்த உங்களை” (கொலோசெயர் 2:13), மற்றும் அது உனக்கு பதிலாக உன்னுடைய ஸ்தானத்தில் கிறிஸ்து மரித்ததாகும், உன்னுடைய பாவங்களுக்குரிய தண்டனை கிரயத்தை பதில் ஆளாக அவர் செலுத்தி, உன்னுடைய பாவங்களை நிவர்த்தி செய்தார், மற்றும் கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததின் மூலமாக உனக்குப் புதிய ஜீவனை தருகிறார். “சிலுவையைப் பற்றிய உபதேசம்” என்பது நீ நற்கிரியைகளினால் இரட்சிப்பை சம்பாதித்தது அல்ல அல்லது தற்செயலாக சபைக்கு வருவதினால் அல்ல என்று காட்டுகிறது. இல்லை! இல்லை! சிலுவையைப் பற்றிய உபதேசம் எந்த நற்கிரியையும் நீ செய்து பெற்றுக்கொள்ள முடியாத இரட்சிப்பாகும் என்று காட்டுகிறது. “சிலுவையைப் பற்றிய உபதேசமானது” முன்னோர்களின் “நற்கிரியைகள்” என்று அழைக்கப்படும் அனைத்தையும் புறம்பாக்குகிறது – இயேசுவானவர் சிலுவையிலே உன்னுடைய பாவத்துக்குரிய முழு பிராயசித்த பலியாக மாறி செய்த கிரியையின் மூலமாகவே இரட்சிப்பு என்பதை காட்டுகிறது – ஒரு மனிதன், கிறிஸ்து (தேவ மனிதன்) உன்னுடைய பாவங்களுக்குக் கிரயத்தை செலுத்த மரித்தது, நீ செய்த எந்தவிதமான நற்கிரியைகளையும், அல்லது “தீர்மானங்களையும்” சேர்த்துக்கொள்ளவில்லை. நீ சில நற்கிரியைகளை செய்திருக்கிறாய் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இந்த நற்கிரியைகள் உன்னை இரட்சிக்க முடியாது என்பதை எளிமையாக நான் சொல்லுகிறேன்! ஒரே பேரான தேவ குமாரன், திரித்துவத்தின் இரண்டாவது நபர், உன்னுடைய பாவங்களைத் தன்மேல் எடுத்துக்கொண்டவர் மற்றும் சிலுவையிலே ஆணியடிக்கப்பட்டபொழுது அதன் கிரயத்தைச் செலுத்தின, இயேசுவின் மரணத்தின் மூலமாக இரட்சிப்பு வருகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் இதை சொல்லும்பொழுது எல்லாவற்றையும் தெளிவாக்குகிறார், “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். [காட்டுகிறார்] இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப் பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே” (ரோமர் 5:8-9). நீ இன்னும் ஒரு பாவியாக இருக்கும்பொழுது தேவன் உன்னை நேசித்தார். நீ இன்னும் ஒரு பாவியாக இருக்கும்பொழுது கிறிஸ்து உனது பாவத் தண்டனை கிரயத்தை செலுத்தும்படியாக மரித்தார். மற்றும் நீ ஒரு பாவியாக இருந்தபோதிலும், நீ அவருடைய இரத்தத்தின் மூலமாக நீதிமானாக்கப்பட முடியும். கர்த்தராகிய இயேசுவே, நான் இதற்காக உம்மை கெஞ்சிக் கேட்கிறேன், உம்முடைய வரவேற்பு சத்தத்தை நான் கேட்கிறேன், அதுதான் சிலுவையின் உபதேசம்! “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது” (I கொரிந்தியர் 1:18). ஆனால் நம்முடைய பாடத்தில் இன்னும் ஒரு கருத்து இருக்கிறது. II. இரண்டாவதாக, சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது. தயவுசெய்து இந்த வார்த்தைகளை கவனியுங்கள், “சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது.” மறுபடியுமாக நமது பாடத்தை கவனியுங்கள் “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது…” (I கொரிந்தியர் 1:18). “பைத்தியம்” என்ற வார்த்தையின் அர்த்தம் “முட்டாள்தனமான பேச்சு,” “புத்தியீனம்” என்பதாகும். கிறிஸ்துவின் மரணத்தினால் மட்டுமே உன்னுடைய பாவத்திலிருந்து நீ இரட்சிக்கப்பட முடியும் என்று சொல்லப்பட்டதைக் கேட்பது மட்டுமே மாற்றப்படாத மனதுக்கு “முட்டாள்தனமான பேச்சு” ஆகும். அழிந்துப்போகிறவர்களுக்குத் தங்கள் பாவங்களுக்காக கிரயத்தை செலுத்தும் கிறிஸ்துவின் மரணத்தைத் பிரசங்கிப்பது எந்த மதிப்பும் இல்லாததாகும். அவர்கள் இதை முட்டாள்தனமாக எண்ணுவதற்குக் காரணம் அவர்களால் அதில் இருக்கும் மதிப்பைப் பார்க்க முடியாததினால் ஆகும். அங்கே தான் பரிசுத்த ஆவியானவர் வருகிறார். இயேசு சொன்னார், “அவர் வந்து, பாவத்தைக்குறித்தும்… உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்” (யோவான் 16:8). ஒரு நபரை பரிசுத்த ஆவியானவர், அவனது பாவத்தைக் குறித்து உணர்த்த வேண்டியது அவசியமாகும், அல்லது அவனால் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மதிப்பை காண முடியாது. ஒரு நபர் தன்னுடைய பாவத்தை குறித்துப் பரிசுத்த ஆவியினால் உணர்த்தப்படுவதற்கு முன்பாக, அவன் சிலுவையைக் குறித்து உபதேசத்தைப் பற்றி பைத்தியமாக நினைத்துக்கொண்டிருப்பான். “பைத்தியம்” என்ற வார்த்தையின் கிரேக்க மொழிப்பெயர்ப்பின் வேர் வார்த்தை “மோரோஸ்,” அது நமது தமிழ் வார்த்தையாக “கயவன்” என்று வருகிறது. சிலுவையைப் பற்றிய உபதேசம் ஒரு கயவனுக்கு, ஒரு துப்புக்கெட்ட நபருக்கு, தனது இருதயத்தில் பரிசுத்த ஆவியின் மூலமாக, உணர்த்தப்படும் வரையிலும், அவன் ஒரு இழக்கப்பட்ட பாவியாக இருக்கிறான். அதனால் தான் ஒரு உண்மையாக கிறிஸ்தவர்களாக இருக்க உன்னால் “கற்றுக்கொள்ள” முடியவில்லை. மனித ஞானத்தை கற்றுக்கொள்ளுவதன் மூலமாக இரட்சிப்பு வருவதில்லை. இருபத்தி ஒன்றாம் வசனத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் இதை தெளிவாக்குகிறார், அவர் சொல்லும்பொழுது, “உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக் இரட்சிப்பானது எந்தவிதமான மனித ஞானத்தையும் அறிவதன் மூலமாக நமக்கு வருவதில்லை. நீ ஒரு நம்பிக்கை இல்லாத பாவி என்பதை காட்டும்படியாக, ஒரு வெளிச்சம் உனக்குத் தேவையாக இருக்கிறது. அது நடக்கும் வரையிலும், உன்னுடைய பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டுமானால் கிறிஸ்து சிலுவையிலே மரிக்க வேண்டும் என்பதை கேட்பதற்கு உனக்கு ஒரு கயவனுடைய பேச்சாக அது இருக்கும். உன்னுடைய பிரச்சனை பாவம் என்பதை நீ உள்ளாக உணரும் வரையிலும், கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நீ ஒருபோதும் முக்கியமானதாக காணமாட்டாய். வேதாகமம் சொல்லுகிறது, “கிறிஸ்துவானவர்… நமது பாவங்களுக்காக மரித்தார்” (I கொரிந்தியர் 15:3). அவர் நம்முடைய பாவங்களுக்காக கிரயத்தை செலுத்த, நமது ஸ்தானத்தில் மரித்தார். வேதாகமம் சொல்லுகிறது, “இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (I யோவான் 1:7). ஆனால் பாவத்தின் சாபத்திலிருந்து இரட்சிக்கப்பட வேறு வழி இல்லை என்று காணும்படி உனது கண்களைத் தேவனுடைய ஆவியினால் திறக்கப்படாவிட்டால், அது ஒரு சிறப்பாக உற்சாகமான கோட்பாடாக மட்டுமே உனக்குக் காணப்படும், மற்றவர்களுக்கு ஒரு முட்டாள்தனமான பேச்சாக இருக்கும். உன்னுடைய பாவம் நிறைந்த நிலைமையினால் நீ உணர்த்தப்படும்பொழுது மட்டுமே உன்னால் பின்வருமாறு உன்னுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து பாட முடியும், என்னிடம் எந்த நன்மையும் இல்லை ஆனால் சிலுவையின் உபதேசம் மட்டுமே ஒரு உறுதியான சபையை நமக்குக் கொடுக்க முடியாது. அது என்னை கடைசி கருத்துக்குக் கொண்டு வருகிறது. III. முன்றாவதாக, சிலுவையின் உபதேசம் மட்டுமே ஒரு உறுதியான சபையை நமக்கு கொடுக்க முடியாது. நீ இரட்சிக்கப்படுவதற்குச் சிலுவையின் உபதேசம் அவசியமாக இருக்கிறது. உனது பாவத்திலிருந்து நீ இரட்சிக்கப்பட சிலுவையிலே கிறிஸ்து தமது இரத்தத்தைச் சிந்தினார் மற்றும் மரித்தார். ஆனால் சிலுவையின் உபதேசம் மட்டுமே ஒரு உறுதியான சபையை நமக்குக் கொடுக்க முடியாது. அதனால்தான் கிறிஸ்து சபைகளுக்குப் போதகர்களைக் கொடுத்தார். வேதாகமம் சொல்லுகிறது கிறிஸ்து “சில... போதகர்களை ஏற்படுத்தினார்” (எபேசியர் 4:11). “போதகர்” என்ற வார்த்தையின் கிரேக்க மொழிப்பெயர்ப்பு போய்மென் என்பதாகும். அதனுடைய பொருள் “மேய்ப்பர்” என்பதாகும். ஒரு போதகர், ஒரு மேய்ப்பராக இருக்க, ஸ்தல சபைக்குச் சில மனிதர்களுக்கு இயேசு வரத்தைக் கொடுத்திருக்கிறார். மற்றும் போதகர் சபையின் ஒரு வெகுமதியாகும். சபையில் உள்ள மக்கள் ஆடுகள், மந்தை ஆகும். சபையின் போதகர் அந்த மேய்ப்பராகும். அவர் ஆடுகளில் மீது கவனம் கொள்ளுகிறார். அவர் ஆடுகளைப் பாதுகாக்கிறார். அவைகள் அலையாதபடி தூரம் போகாதபடி பாதுகாக்கிறார். ஒரு மேய்ப்பர் அதை தான் செய்கிறார். “போதகர்” என்பதன் மற்றொரு கிரேக்க வார்த்தை எப்பிஸ்கோபோஸ் என்பதாகும். அதன்பொருள் “மேற்பார்வையாளர்” என்பதாகும். அது கிங் ஜேம்ஸ் வேதாகமத்தில் “பிஷப்” என்று மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. வேதாகமம் சொல்லுகிறது, “கண்காணிப்பை [எப்பிஸ்கோபோஸ், மேற்பார்வையாளர், போதகர்] விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை” (I தீமோத்தேயு 3:1). ஒரு போதகர் சபையைக் கண்காணிப்புச் செய்கிறார். அவர் அதை கவனித்துக் கொள்ளுகிறார். எழுத்தளவில் அவர் அதை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் சபையின்மீது கவனம் செலுத்துகிறார். அவர் சபைக்காக நினைவுகூர்ந்து மற்றும் ஜெபிக்கிறார். சபை எப்படி இருக்கிறது என்று அவர் பார்க்கிறார். என்ன பிரச்சனை இருக்கிறது என்று அவர் பார்க்கிறார். மற்றவர்கள் பார்க்க கூடாத வகையில் போதகர் சபையைக் கண்காணிகிறார். என்ன செய்ய வேண்டுமென்று தேவனுடைய வழிநடத்துதலின்படி, அவர் பார்க்கிறார். போதகர் சபையில் உள்ள மக்களை – மேற்பார்வை – கண்காணிப்புச் செய்கிறார். அவர்கள் எப்படியாக காரியங்களை செய்கிறார்கள் என்று அவர் பார்க்கிறார். அவர்களுடைய போராட்டங்கள் மற்றும் அவர்களது பிரச்சனைகளை அவர் பார்க்கிறார். தேவனுடைய வழிநடத்துதலோடு, அவர்கள் தங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் வெற்றி பெற அவர் உதவி செய்கிறார். வரம் பெற்ற ஒரு போதகர் இல்லாவிட்டால், அந்த சபை வெற்றிபெற முடியாது. அது எல்லாவிதமான செயல்பாடுகளையும் பெற்றுக்கொள்ள முடியும். நாம் கூட்டங்கள் நடத்த முடியும். நாம் ஞாயிற்றுக்கிழமைகளில் பார்வையாளர்களைக் கொண்டுவர முடியும். உங்களுக்கு நாங்கள் ஒரு பாட்டுச் சீட்டை மற்றும் ஒரு பத்திரிகை கொடுக்க முடியும். நாங்கள் உங்களுக்கு ஒரு உணவு கொடுக்க முடியும். நமக்கு நல்ல பிரசங்கம் இருக்கும் – சிலுவையைப் பற்றிய உபதேசம் – மற்றும் நாங்கள் செய்கிறோம். ஆனால் சிலுவையின் உபதேசம் மட்டுமே ஒரு உறுதியான சபையை நமக்குக் கொடுக்க முடியாது. எப்படியிருந்தாலும் தேவன் சபைக்குப் போதகர்களை ஏன் கொடுத்தார்? ஆவிக்குரிய வரங்களின் பட்டியலில் போதகர் வரம் ஏன் சேர்க்கப்பட்டுள்ளது? உபதேசம் மட்டுமே ஒரு உறுதியான சபையை ஏற்படுத்துமானால், நமது கர்த்தர் “சில, சுவிசேஷகர்களை” மட்டும் கொடுத்திருக்கலாமே மற்றும் போதகர்களே இல்லாது இருக்கலாம் அல்லவா? சிலுவையின் உபதேசம் மட்டுமே ஒரு உறுதியான சபையை நமக்குக் கொடுக்க முடியாது என்று கிறிஸ்து அறிந்திருந்தார். சபைக்கு ஒரு போதகர் அவசியமாக இருக்கிறது, மற்றும் அதனால்தான் அவர் “சிலரை போதகர்களாக... கொடுத்தார்.” உபதேசம் நல்லதாக இருந்தாலும், ஒரு போதகர் இல்லாவிட்டால், சபை தோற்றுப்போகும். அதன் வளர்ச்சி பெலவீனமாக இருக்கும். அது கஷ்டங்களுக்குள் அகப்பட்டுக் கொள்ளும். இறுதியாக அது மரித்துப் போகும். ஒரு போதகர் இல்லாவிட்டால், சபையில் உள்ள மக்கள் பின்வாங்கி போவார்கள். அவர்கள் குளிர்ந்த நிலைமைக்கு வருவார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் பெரிய தவறுகள் செய்ய முடியும். அவர்கள் சிக்கல்களில் சிக்கி கொள்ளுவார்கள். ஏன்? முதலாவதாக, ஒரு பிசாசு இருக்கிறான். வேதாகமம் சொல்லுகிறது அவன் “கெர்ச்சிக்கிற சிங்கம்போல் [ஒரு பீறுகிற சிங்கம் போல] எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” (I பேதுரு 5:8). யார் விழுங்கப்படுவார்? அந்த ஆடு விழுங்கப்படும்! பிசாசைப்பற்றி நீ நினைக்க அவன் விரும்புவதில்லை. அவன் உன்மேல் குதித்து உன்னை விழுங்க விரும்புகிறான் – இதை செய்தவன் பிசாசு என்று நீ உணர்ந்து கொள்ள முடியாது! நீ நினைத்தாலும் அல்லது நினைக்காவிட்டாலும் – பிசாசு மற்றும் அவனுடைய பிசாசுகள் இருக்கிறார்கள். இரண்டாவதாக, எல்லா மக்களும் பாவிகளாக இருக்கிற காரணத்தினால். ஏனென்றால் ஆதாம் தேவனுக்குக் கீழ்படியாமல் போனான், அதனால் நாம் அனைவரும் ஒரு பாவச் சுபாவத்தோடு பிறந்திருக்கிறோம். வேதாகமம் சொல்லுகிறது, “ஒரே மனுஷனுடைய [ஆதாம்] கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டார்கள்” (ரோமர் 5:19). ஒவ்வொருவரும் – கிறிஸ்தவர்களும்கூட – அந்தப் பாவச் சுபாவத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். பாவம் செய்வது நமக்கு இயற்கையாகும். நாம் தவறாக போவது இயற்கையாகும். மற்பியின் விதி சொல்லுகிறது, “ஏதாவது தவறாக போக முடியுமானால், அது அப்படியே போக முடியும்.” காரியங்கள் இயற்கையாக நல்லபடியாக நடப்பதில்லை. அவைகள் தவறாக போக முடியும், போதுமான அளவு எளிதாக, அவைகள் தாழ்வாக போக முடியும். மற்றும் அவை நடக்கும். மக்கள் தாங்களாகவே இயற்கையாக உறுதியான கிறிஸ்தவர்களாக மாறிவிட முடியாது. அவர்கள் பின்வாங்கி போக முடியும். அவர்கள் குளிர்ந்து போக முடியும். அவர்கள் தவறுகளைச் செய்ய முடியும். அது நடக்கும். அது நடப்பதற்காக நீ கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியதில்லை. அது தானாகவே நடக்கும். சபைகள் தாங்களாகவே இயற்கையாக உறுதியானவர்களாக மாறிவிட முடியாது. அவைகள் பெலவீனம் அடைய முடியும். அவைகள் கஷ்டத்தில்விழ முடியும். அது போதுமான அளவு சுலபமானது. அது நடப்பதற்கு நீ ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. அது எல்லாம் தானாகவே நடக்கும்! மற்றும் அது நடக்கிறது. அதனால்தான் ஒரு சபைக்கு ஒரு போதகர் தேவையாக இருக்கிறது. கிறிஸ்து “சிலரை போதகராக... ஏற்படுத்தினார்.” அவர் செய்தார் தேவனுக்கு நன்றி! டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் நமது சபையின் போதகராகும். அவர் அறுபது வருடங்களாக அந்த ஊழியத்திலே இருக்கிறார். நூற்றுக்கணக்கான மக்களை கிறிஸ்துவிடம் கொண்டுவர தேவன் அவரை உபயோகப்படுத்திக்கொண்டார். அவர் அநேக ஆண்டுகளாக மக்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். அவர் மக்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளார். அவர் அவர்களுக்கு உதவி செய்துக்கொண்டு வந்தார். டாக்டர் ஹைமர்ஸ் இரண்டு சபைகளை ஸ்தாபித்து இருக்கிறார். அவர் நமது சபையை சோதனை மற்றும் பாடுகளில் காப்பாற்றினார். அவர் நமது சபையை பயங்கரமான பிளவிலிருந்து பாதுகாத்தார். நமது சபையைக் கட்ட, நம்மை கவனித்துக்கொள்ள, நம்மை பாதுகாப்பாக, பத்திரமாக வைக்க தேவன் அவரை உபயோகப்படுத்தினார். டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் ஒரு போதகர் மட்டுமல்ல. அவர் ஒரு முனைப்பான போதகர்! நம்முடைய போதகர், டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்! உன்னை பற்றி என்ன? நீ அந்தப் போதகர் அல்ல. ஆனால் நீ அவருக்கு உதவிசெய்ய முடியும். ஏதாவது காரியம் தவறாக இருப்பதை நீ பார்க்கும்பொழுது அவரிடம் அதை நீ சொல்ல முடியும். நம்முடைய சபையில் தலைவர்கள் மற்றும் உதவிக்காரர்களுக்கு இது உண்மையாக இருக்கிறது. போதகருக்கு உதவிசெய்ய நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். காரியங்கள் அப்படியே போக விட்டுவிட வேண்டாம். போதகருக்குத் தெரியும் என்று நினைக்க வேண்டாம். நீ எந்தக் காரியத்தையாவது தவறாக போவதை பார்த்தால் அல்லது கேள்விப்பட்டால், அதை போதகரிடம் சொல்லு. உங்களில் சிலர் கிறிஸ்தவர்களாகவே இல்லை. நீங்கள் இயேசுவை நம்பவில்லை. உன்னுடைய பாவங்கள் அவருடைய இரத்தத்தினால் கழுவப்படவில்லை. உன்னை பற்றி என்ன? நீ கிறிஸ்துவினால் இரட்சிக்கப்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது. உன்னுடைய பாவத்துக்குக் கிரயத்தை செலுத்த அவர் சிலுவையிலே மரித்தார். உனது பாவங்களைக் கழுவி நீக்க அவருடைய இரத்தத்தை சிந்தினார். உனக்கு ஜீவனை கொடுக்க அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார். இயேசுவை விசுவாசிப்பதைப் பற்றி எங்களிடம் பேச விரும்பினால், மற்றவர்கள் மதிய உணவுக்காக மேல் அறைகளுக்குச் செல்லும்பொழுது நீ வந்து முதல் இரண்டு வரிசையில் உள்ள இருக்கைகளில் அமரவும். ஆமென். நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: “Saved by the Blood of the Crucified One” (S. J. Henderson, 1902). |
முக்கிய குறிப்புகள் சிலுவையை பற்றிய உபதேசம்THE PREACHING OF THE CROSS ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் எழுதப்பட்டு “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது” (I கொரிந்தியர் 1:18).
I. முதலாவதாக, சிலுவையை பற்றிய உபதேசமாகும்,
II. இரண்டாவதாக, சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்
களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, I கொரிந்தியர் 1:18ஆ;
III. முன்றாவதாக, சிலுவையின் உபதேசம் மட்டுமே ஒரு உறுதியான சபையை நமக்கு கொடுக்க முடியாது, எபேசியர் 4:11; I
|