இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
வேதாகம தீர்க்க தரிசனம் உங்களை செயல் நோக்கம் கொள்ள செய்வதாக!LET BIBLE PROPHECY MOTIVATE YOU! ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் மே 20, 2018 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி “ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரை யொருவர் தேற்றுங்கள்” (I தெசலோனிக்யேர் 4:18). |
அப்போஸ்தலனாகிய பவுல் “எடுத்துக்கொள்ளுதலை” பற்றி இந்த வார்த்தைகளில் நமக்கு விளக்கத்தைக் கொடுக்கிறார். அதன்பிறகு தமது பாடத்தைக் கொடுக்கிறார், “ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரை “தேற்றுங்கள்” என்ற வார்த்தைக்குக் கிரேக்க வார்த்தையில் “பாராகாலீயோ” என்பதாகும். அதன்பொருள் “ஆறுதல் படுத்துதல்” மற்றும் “உற்சாகப்படுத்துதல்” (NIV). இப்பொழுது இந்த முழு பகுதியும் 13-ஆம் வசனத்திலிருந்து 17ம் வசனம் வரைக்கும் ஆகும். இந்தப் பகுதி கிறிஸ்தவர்களின் “எடுக்கப்படுதலை” பற்றியவைகளை இந்தக் கடைசி காலத்தில் நமக்குத் தருகிறது. தெசலோனிகேயாவில் இருந்த கிறிஸ்தவர்கள் புறஜாதி ரோமர்கள் மற்றும் விசுவாசியாத யூதர்கள் மூலமாக அதிகமான உபத்தரவங்களின் வழியாக சென்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் மரித்துப் போனார்கள். அவர்கள் இரத்தச் சாட்சியாக மரித்தார்கள்! இதன்மூலமாக தெசலோனிக்கேயாவில் இருந்த மக்கள் வேதனைப்பட்டார்கள். அதனால் “எடுத்துக்கொள்ளுதலை” பற்றி அவர்களுக்குச் சொல்லி பவுல் அவர்களை உற்சாகப்படுத்தினார். டாக்டர் தாமஸ் ஹெல் நமக்கு “எடுத்துக்கொள்ளுதலை” பற்றி இந்த விளக்கத்தைத் தருகிறார்: “கிறிஸ்துவின் வருகையின்போது உயிரோடு இருப்பவர்கள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் மற்றும் பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்படுவார்கள். அந்த நேரத்தில் உயிரோடு இருப்பவர்கள் மரித்தவர்களோடு சேர்ந்துக்கொள்ளுவார்கள்... அதனால் ஒருவரை ஒருவர் இந்த வார்த்தைகளினால் தேற்றுங்கள்” (The Applied New Testament Commentary; note on I Thessalonians 4:17, 18). மற்றொரு நேரத்தில், நான் இந்த “எடுத்துக்கொள்ளுதலை” பற்றி விளக்கமாக சொல்லுகிறேன் மற்றும் பிரசங்கிப்பேன். இந்த இரவில் வேதாகம தீர்க்கதரிசனம் நம்மை ஆறுதல்படுத்தவும் மற்றும் உற்சாகப்படுத்தவும் இருக்கிறது என்பதைக் காட்டுவது என்னுடைய நோக்கமாகும். “ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரை I. முதலாவதாக கிறிஸ்துவின் வருகையின் அடையாளங்கள் நமக்கு உற்சாகத்தை கொடுக்கிறது. என்னுடைய இளமை பருவத்தில் இந்த உலகம் குழப்பமானதாக மாறினது. அது 1960களில் ஆகும். அப்பொழுது ஒரு அணுவை சார்ந்த இன அழிப்பு எப்பொழுதும் காணப்பட்டது. எந்த நொடியிலும் சோவியத் யூனியன் எங்கள் நகரங்களின் மீது குண்டுகளை இறக்க முடியும். வியட்நாம் போரானது மேலும் மேலும் தொடர்ந்து கொண்டேயிருந்தது. நான் அங்கே இருந்த காட்டில் வரைவுக்கு உட்பட்டு மற்றும் மரணத்திற்கு அனுப்பப்படுவேன் என்று நான் பயந்தேன். அந்த யுத்தமானது முடிவில்லாததாக மற்றும் அர்த்தமற்றதாக இருந்தது. நான் கல்லூரியில் இளநிலை பட்டபடிப்பை முடிக்க விரும்பினேன். அதே நேரத்தில் அங்கே கலவரம் இருந்தது. அந்தக் கலவரக்காரர்கள் சுதந்தரப் போராட்டத்தில் அங்கே சிக்காக்கோவின் அதிகமானவைகளை எரித்தார்கள். ஜான் எப். கென்னடி படுக்கொலை செய்யப்பட்டார். அப்படியே போபி கென்னடியும், டாக்டர் மார்டின் லூத்தர் கிங், மால்காம் X, மற்றும் ஜார்ஜ் வாலேஸ் போன்றவர்கள் படுகொலை செய்யப்பட முயற்சி செய்யப்பட்டார்கள். அதன்பிறகு போதை பொருள்களின், உட்ஸ்டாக், மற்றும் பீட்டிலில்ஸ், மற்றும் மேற்கத்திய மதங்கள், மற்றும் பிசாசுகள் மற்றும் சாத்தானின் பெரிய தாக்குதல் கலாசாரம் எழுந்தது. ஹிப்பிகள் சொல்லுவதை போல இருந்தது, “இது என்னுடைய மனதில் பறந்தது.” அது கலவரம் மற்றும் பயம் நிறைந்த ஒரு நேரமாக இருந்தது. அந்தக் கொடூரமான நேரங்களில், என் மனமும் இதயமும் கிறிஸ்து வரும் “அடையாளத்தினால்” சமாதானமானது. இரவு இருளாக இருந்தது, பாவத்திற்கு விரோதமாக போரிடுகிறோம், இந்தப் பாடலை என்னோடு எழுந்து நின்று பாடுங்கள்! அவர் மறுபடியும் வருகிறார், அவர் மறுபடியும் வருகிறார், நீங்கள் அமரலாம். நம்மை உற்சாகப்படுத்தும் “அடையாளங்கள்” சில இங்கே இருக்கின்றன! 1. இஸ்ரவேல் நாடு, 1948ல் நிர்மானிக்கப்பட்டது, யூத மக்கள் உலகளவில் இருந்து தங்களுக்குத் தேவனால் கொடுக்கப்பட்ட சுயதேசத்திற்குத் திரும்பி கொண்டிருந்தார்கள். இயேசு சொன்னார், “பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்” (லூக்கா 21:24). “இதோ, என் ஜனங்களே, நான்… உங்களை இஸ்ரவேல் தேசத்துக்குவரவும்பண்ணுவேன்” (எசேக்கியேல் 37:12). “அநேக நாட்களுக்குப் பிற்பாடு நீ விசாரிக்கப்படுவாய்; பட்டயத்துக்கு நீங்கலாகி, பற்பல ஜனங்களிலிருந்து சேர்த்துக்கொள்ளப்படும்” (எசேக்கியேல் 38:8). சில நாட்களுக்கு முன்பாக இஸ்ரவேலின் தலைநகர் எருசலேமாக இருக்கும் என்று ஜனாதிபதி டிரம்ப் பிரகடனம் செய்தார். நாம் இந்தக் கால கட்டத்தின் முடிவை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறோம் மற்றும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நெருங்கிவிட்டது என்பதற்கு யூதர்கள் இஸ்ரவேலுக்கு திரும்பி கொண்டிருப்பது ஒரு வலுவான அடையாளமாகும்! அல்லேலூயா! கிறிஸ்து மிகவும் சீக்கிரமாக மறுபடியுமாக வருகிறார்! அவர் மறுபடியும் வருகிறார், அவர் மறுபடியும் வருகிறார், 2. கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களுக்கு அதிகரித்து வரும் உபத்திரவம் ஒரு “அடையாளமாகும்”. “அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் [நாமத்தினிமித்தம்] நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்” (மத்தேயு 24:9). முகமதியர்களின் இலக்கு யூதர்களைக் கொல்ல வேண்டும் மற்றும் இஸ்ரவேலை அழிக்க வேண்டும் என்பதாகும். அமெரிக்காவில், ACLU என்பவர்கள் சபைகளை அமைதிப்படுத்தவும் மற்றும் கிறிஸ்தவத்தை பெலவீனப்படுத்தவும் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறார்கள். “மாற்றப்பட்ட” தியாலாஜியை சேர்ந்த மக்கள் தொகை பெருகி வருகிறது – அது சொல்லுகிறது வேதாகமத்தின் வாக்குத்தத்தங்கள் எல்லாம் கிறிஸ்தவர்களுக்காக – ஆனால் சாபங்கள் எல்லாம் யூதர்களுக்காக! இவ்வாறாக ஒருவிதமான மாறுபட்ட ஆன்டி செமிடிசத்தை நம்முடைய சீர்திருத்தப்பட்ட சபைகளில் அநேகர் தழுவி கொண்டிருக்கிறார்கள். தேவன் நமக்கு உதவி செய்வாராக! இந்தத் தீர்க்கதரிசனம் நம்மை உற்சாகப்படுத்துகிறது, ஏனென்றால் இது நம்முடைய கண்களுக்கு முன்பாகவே நிறைவேற்றப்பட்டு வருகிறது! தேவன் சர்வ வல்லவர்! “ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரை இதை பாடுங்கள்! அவர் மறுபடியும் வருகிறார், அவர் மறுபடியும் வருகிறார், நீங்கள் அமரலாம். 3. கடைசிக்கால விசுவாச துரோகம் உயர்ந்து வருதல். “[விசுவாச துரோகம் – நெருக்கடி நிலை] முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டா “அநேகங் கள்ளத்தீர்க்க தரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் [மிகுதியாவதினால்] அநேகருடைய அன்பு தணிந்துபோம்” (மத்தேயு 24:11, 12). இது கடைசி நாட்களில் தேவனற்ற சபைகளைக் குறிக்கும். கடைசிகால விசுவாச துரோகத்தின் ஆரம்பம் பிசாசுடையதாகும், “ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்” (I தீமோத்தேயு 4:1). இந்த விசுவாசத் துரோகம் வேதத்தைப் புறக்கணிக்கும் மாற்றப்படாத ஊழியர்களால் கடைசி நாட்களில் உண்டாகும். இந்த “புதிய தியாலஜி” மற்றும் அந்த “புதிய நீதிபோதனை” அந்த விசுவாசத் துரோகத்தின் உற்பத்தி பொருள்களாகும், சபைகளை அவைகள் அழித்தன, இழக்கப்பட்ட மக்களால் அவைகளை நிரப்பின. இது சார்லஸ் ஜி. பின்னியின் ஊழியத்தில் ஆரம்பித்தது மற்றும் வளர்ந்து இது இப்பொழுது பிரதான லைனில் உள்ள ஏறக்குறைய எல்லா சபைகளையும் கட்டுபடுத்துகிறது, மற்றும் அதிகமாக பாதுகாக்கப்பட்ட சபைகளையும்கூட பாதிக்கிறது. “இந்த விசுவாச துரோகம்” இறுதியாக “மகா பெரிய வேசியை” உண்டாக்குகிறது வெளிப்படுத்தல் 17ல் சொன்னது போல, “அது போப்பின் கீழான சமய பகைமை உடைய கிறிஸ்தவம் ஆகும்” (Scofield). 4% மட்டுமே டீன்எஜில் உள்ளவர்கள் முதிர்வயது அடைவதற்குள் சுவிசேஷகத்தால் கிறிஸ்தவர்கள் ஆகிறார்கள் என்று தற்காலப் போக்குகள் காட்டுகின்றன – அதன்பொருள் 34% சுவிசேஷகர்கள் 4% ஆக அடுத்த சில வருடங்களில் சரிந்து போகும் என்பதாகும். “நாம் ஒரு கேடான முடிவை எதிர் நோக்கி போய் கொண்டிருக்கிறோம்” (Dr. Jack W. Hayford, August 16, 2006). பாருங்கள் “அந்தப் பெரிய சுவிசேஷ பின்னடைவு” எழுதியவர் ஜான் எஸ். டிக்கர்சன். “அமெரிக்க சபையை நசுக்கி கொண்டிருக்கும் ஆறு துணை கூறுகள்.” அதுதான் டக்கர்சன் புத்தகத்தின் துணை தலைப்பு ஆகும். இன்று 88 சதவீதம் டீன்ஏஜர்கள் கிறிஸ்துவ குடும்பங்களில் இருந்து எழுந்தவர்கள் உயர்நிலை பள்ளியிலிருந்து பட்டப்படிப்புக்கு மாறின பிறகு கிறிஸ்தவர்களாக தொடர்வது இல்லை. விரைவில் நமது நாடு அவர்களால் ஆளப்பட போகிறது – மற்றும் அது ஒரு முழுமையான புறஜாதி அமெரிக்காவாக இருக்க போகிறது! II. இரண்டாவது, அந்தச் செயல்பாடு. நமக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள பயங்கரமான சூழ்நிலையைப் பற்றி ஒரு சில சுவிசேஷகர்கள் பேசி கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதை பற்றி என்ன செய்ய வேண்டுமென்று அவர்களுக்கு தெரியவில்லை. அனுபவ பூர்வமாக செயல் வடிவில் ஒன்றும் செய்ய முடியாது என்று நான் உணர்த்தபட்டேன். நம்முடைய நாகரீகம் வெளியே விழுந்து போகும். நமது இளம் மக்கள் காட்டுமிராண்டிகளாக மாறுவார்கள். கற்பனை செய்ய முடியாத பயங்கரங்கள் நமக்கு முன்பாக இருக்கிறது. நாம் ஒரு சிறிய சிறுபான்மையாக வாழ நம்மை நாமே ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம், நாடோடி இன குழுவினரால் எல்லா பக்கங்களிலிருந்தும் ஒவ்வொரு சிறு துண்டும் புறஜாதியாரால் காட்டுமிராடித்தனமாக ஆதி கிறிஸ்தவர்களை தாக்கிய புறஜாதி ரோமர்களை போல தாக்கப்படுவோம். தயவுசெய்து I தெசலோனிக்கேயர் முதலாம் ஆதிகாரம் ஐந்தாம் வசனத்திற்கு திருப்பி கொள்ளுங்கள். “எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திர காலம் குறுகினதாக இருக்கிறது. நீ முட்டாளாக சுற்றிக் கொண்டிருக்க கூடாது மற்றும் கிறிஸ்தவத்தோடு “விளையாட” கூடாது. இளம் மக்களே, ஒரு வேத ஆராய்ச்சியாக மட்டுமே வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதேயுங்கள். ஒரு மெய்யான மாறுதலை அடைய பாருங்கள். ஒரு மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழப்பாருங்கள்! இப்பொழுது 9ம் வசனத்தை பாருங்கள், “ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென் பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ் செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களைவிட்டுத் தேவனிடத் திற்கு மனந்திரும்பினதையும்” (I தெசலோனிக்கேயர் 1:9). உங்கள் வாழ்க்கையில் விக்கிரகங்களிலிருந்து தேவனிடம் திரும்புங்கள். உன்னுடைய ஜீவியத்தின் ஒவ்வொரு இழையிலும் தேவனுக்கு ஊழியம் செய்யுங்கள். காலம் குறுகினதாக இருக்கிறது. அந்திகிறிஸ்து வந்து கொண்டிருக்கிறான். ஒரு கிறிஸ்தவனாக உனது ஜீவன் இதற்கு விலைகிரயமாக இருக்கலாம்! உன்னுடைய விக்கிரகங்களிலிருந்து இப்பொழுதே திரும்பு! ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்! வசனம் 10ஐ பார். “அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிற வருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே” (I தெசலோனிக்கேயர் 1:10). பரலோகத்திலிருந்து தேவ குமாரன் வரும்வரை காத்திரு – இயேசு, வருவதற்காக காத்திரு அவர் தேவனுடைய வரபோகும் கோபாக்கினையிலிருந்து நம்மை விடுவிப்பவர் ஆகும். “கிறிஸ்துவுக்காக வாதிக்கப்பட்டவர்கள்” என்ற போதகர் உம்ராண்டு அவர்களின் புத்தகத்தை படி. கிறிஸ்துவுக்காக பாடுபட எதிர்பார்த்திருக்கும் ஒரு நபரை போல வாழ். இழக்கப்பட்ட உலகத்திலிருந்து வெளியே வா. ஆம், இழக்கப்பட்ட நண்பர்களை சபைக்கு வரவேற்று கொண்டு வா. அவர்கள் வரவில்லையானால், ஒரு சூடான கல்லாக அவர்களை கீழே போட்டுவிடு. நமது சபையில் உள்ள இரட்சிக்கப்பட்ட இளைஞர்களை உன்னுடைய நண்பர்களாக ஆக்கி கொள். கூட்டங்கூடி ஜெபியுங்கள். சுவிசேஷ ஊழியத்திற்குப் போகும்பொழுது பெயர்களை உள்ளே கொண்டு வாருங்கள். தேவனுக்காக ஜீவியுங்கள்! கிறிஸ்துவுக்காக ஜீவியுங்கள்! இந்த சபைக்காக ஜீவியுங்கள்! காலம் குறுக்கினதாக இருக்கிறது. நியாயத்தீர்ப்பு வந்து கொண்டிருக்கிறது! “உன்னுடைய தேவனை சந்திக்க ஆயத்தப்படு.” இப்பொழுதே இதை செய், அதிக கால தாமதம் ஆவதற்கு முன்பாக செய்! சார்லஸ் ஸ்டட் சொன்னது சரி – ஒரோயொரு வாழ்க்கை, உன்னை நீயே கிறிஸ்துவுக்குக் கொடு – எதையும் பின்னே வைக்காதே. இயேசு உன்னை நேசிக்கிறார்! இயேசு உன்னை நேசிக்கிறார்! இயேசு உன்னை நேசிக்கிறார்! உங்கள் பாட்டு சீட்டில் 5வது பாடலுக்குத் திருப்பி கொள்ளுங்கள். எழுந்து நின்று அதை பாடுங்கள்! அதை பாடுங்கள்! அதை பாடுங்கள்! இயேசுவின் நாமம் ஒரு விசுவாசியின் காதில் நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: “Christ Returneth” (H. L. Turner, 1878). |
முக்கிய குறிப்புகள் வேதாகம தீர்க்க தரிசனம் உங்களை செயல் நோக்கம் கொள்ள செய்வதாக! LET BIBLE PROPHECY MOTIVATE YOU! ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் “ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்” (I தெசலோனிக்கேயர் 4:18). I. முதலாவதாக, கிறிஸ்துவின் வருகையின் அடையாளங்கள் நமக்கு உற்சாகத்தை கொடுக்கிறது. 1. இஸ்ரவேல் நாடு, 1948ல் நிர்மானிக்கப்பட்டது, யூத மக்கள் உலகளவில் இருந்து தங்களுக்குத் தேவனால் கொடுக்கப்பட்ட சுயதேசத்திற்குத் திரும்பி கொண்டிருந்தார்கள், லூக்கா 21:24; எசேக்கியேல் 37:12; 38:8. 2. கிறிஸ்தவர்கள் மற்றும் யூர்களுக்கு அதிகரித்து வரும் உபத்திரவம் ஒரு “அடையாளமாகும்”, மத்தேயு 24:9.
3. கடைசிக்கால விசுவாச துரோகம் உயர்ந்து வருதல், II. இரண்டாவது, அந்தச் செயல்பாடு, I தெசலோனிக்கேயர் 1:5, 9, 10. |