இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
கிறிஸ்து காட்டிக்கொடுக்கப்படுதல்
|
இயேசு கெத்சமெனேயில் மூன்றாவதுமுறை ஜெபித்த பிறகு, அவர் தூங்கும் சீஷர்களிடம் வந்து சொன்னார், “என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்து அதன் பிறகு, அந்த இருளிலே, ஒரு பெரும்திரளான கூட்டமாக 300 போர் சேவகர்களுக்கும் அதிகமானவர்கள் நெருங்கி வந்தார்கள், “…பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக்கொண்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும் அவ்விடத்திற்கு [வந்தான்]” (யோவான் 18:3). யூதாஸ் அவர்களை அங்கே கொண்டுவந்தான் ஏன் என்றால் “இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான்” (யோவான் 18:2). யூதாஸ் இயேசுவிடம் வந்து அவரை முத்தமிட்டான், அப்படியாக இயேசு யார் என்று அவன் போர்சேவகருக்கு காட்டிக்கொடுத்தான். அவன் கிறிஸ்துவை ஒரு முத்தத்தினால் காட்டிக்கொடுத்தான். இயேசு போர்சேவகர்களை கேட்டார், “யாரை தேடுகிறீர்கள்?” அவர்கள் சொன்னார்கள், “நசரேயனாகிய இயேசுவை தேடுகிறோம்.” இயேசு சொன்னார், “நான்தான் அவர்.” அவர் சொன்ன உடனே அவர்கள் நடுங்கினார்கள் “மற்றும் தரையிலே விழுந்தார்கள்.” அவர் குமாரனாகிய தேவன் என்பதன் வல்லமையை இது காட்டினது. அதன்பிறகு இயேசு சொன்னார், “நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள்” (யோவான் 18:8). அந்த சமயத்தில் பேதுரு எழுந்து, தனது பட்டயத்தை உருவி, செயல்பட ஆரம்பித்தான். இருளிலே தனது பட்டயம் தவறினதால், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் வலது காதை வெட்டினான். இயேசு “அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார்” (லூக்கா 22:51). அதன் பிறகு இயேசு பேதுருவிடம் சொன்னார். “அப்பொழுது, இயேசு அவனை நோக்கி உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக் கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?” (மத்தேயு 26:52-53). இந்த பாடத்திலிருந்து எளிமையான இரண்டு தலைப்புகளை நான் எடுத்திருக்கிறேன். I. முதலாவது, கிறிஸ்து தம்மை காப்பாற்ற ஆயிரக்கணக்கான தூதர்களை அழைத்திருக்க முடியும். ஒரு ரோமபடை பிரிவில் லேகியோன் 6,000 போர் சேவகர்கள் அடங்கி இருப்பார்கள். இயேசுவானவர் பிதாவாகிய தேவனை வேண்டிக்கொண்டால், பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்களை அந்த நேரத்தில் அனுப்பி இருப்பார். இந்த போர் சேவகர் கரங்களிருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ள அவர் விரும்பி இருந்தால், அவர் தேவனை நோக்கி கூப்பிட்டிருக்க முடியும், மற்றும் 72,000 தூதர்கள் வந்திருப்பார்கள். டாக்டர் ஜான் கில் குறிப்பிட்டார்கள் “ஒரு தேவதூதன், ஓர் இரவில், லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான், என்று II ராஜாக்கள் 19:35ல் உள்ளது. அதனால் கிறிஸ்து அப்போதிருந்த ஆபத்திலிருந்து தப்பிக்கொள்ள சாய்வுகாட்டவில்லை, அவர் பேதுருவின் பட்டயத்தின் அவசியமில்லாமல் நின்றார்” (Dr. John Gill, An Exposition of the New Testament, The Baptist Standard Bearer, 1989 reprint, volume I, p. 340). கிறிஸ்துவின் வார்த்தைகள் மற்றும் செயல்கள் காட்டுவது அவர் எல்லா சூழ்நிலையிலும் முழுகட்டுப்பாடோடு இருந்தார் என்று காட்டுகிறது. அவர் சொன்னபொழுது, “நான்தான் அவர்,” என்றதும் தேவனுடைய வல்லமையினாலே போர்சேவர்கள் பின்னிட்டு விழுந்தார்கள். பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனாகிய மல்கூஸ் என்பவனுடைய காதை பேதுரு வெட்டினபொழுது, கிறிஸ்து கிருபையாக, அந்த காயத்தை தொட்டு அவனை குணமாக்கினார். மற்றும் கிறிஸ்து பேதுருவிடம் அமைதியாக சொல்லுகிறார் அவர் ஜெபித்திருந்தால் தேவன் ஆயிரக்கணக்கான வல்லமையான தூதர்களின் சக்தியினால் காப்பாற்றி இருப்பார். ஆனால் அவர் காப்பாற்றப்படுவதற்காக ஜெபிக்கவில்லை. இயேசுவின் கரங்களை அவர் ஜெபித்த தோட்டத்திலே கட்டினார்கள், II. இரண்டாவது, கிறிஸ்து சித்தத்தோடு சிலுவைவைக்கு சென்றார். கிறிஸ்து அந்த தோட்டத்திலே எதிர்பாராத விதமாக திடீரென்று கைது செய்யப்பட்டார் என்று நாம் ஒருபோதும் நினைக்கக்கூடாது. அந்த இரவிலே அவர் கைது செய்யப்படுவதற்கு நீண்டகாலத்துக்கு முன்பாகவே என்ன நடக்க போகிறது என்று அவருக்கு தெரியும். பல நாட்களுக்கு முன்னர் அவர் சீஷர்களை எருசலேமுக்கு எடுத்துச் சென்றார், அவருக்கு என்ன நடக்கப்போகிறது என்று அவர்களுக்கு சொன்னார். அந்த நேரத்தில் இயேசுவானவர் கைது செயய்யப்படுவதற்கு முன்னதாக சொன்னவைகளை, லூக்கா பதிவுசெய்திருக்கிறார், “இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும். எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார். அவரை வாரினால் அடித்து, கொலைசெய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார்” லூக்கா 18:31-33). அவர்கள் எருசலேமுக்கு போகும்பொழுது அவருக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் சரியாக அறிந்திருந்தார். ஆனால் எப்படியானாலும் அவர் சென்றார். அவர் பாடுபடவும் சிலுவையில் அறையப்படவும் நோக்கத்தோடு, சுயாதீனமாக மற்றும் சித்தத்தோடு சென்றார். இந்த வேளை மற்றும் இந்த நோக்கத்திற்காகவே அவர் வந்தார் என்று, இரண்டுமுறை இயேசு சொன்னார். அவர் தமது சீஷர்களிடம் சொன்னார், “இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.” (யோவான் 12:27). மறுபடியுமாக, அவர் ரோமதேசாதிபதியாகிய, பொந்தி பிலாத்துவுக்கு முன்பாக நின்றபொழுது, அவர் சொன்னார், “சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்” (யோவான் 18:37). கிறிஸ்து விருப்பத்தோடு அந்த போர்சேவகருடன் சிலுவைக்கு சென்றார் ஏன் என்றால் அந்த நோக்கத்துக்காகவே அவர் பிறந்தார் – மனிதனுடைய பாவத்தின் தண்டனை கிரயத்தை கொடுக்கவே அவர் சிலுவையிலே மரித்தார். அங்கே அவர் கைது செய்யப்பட்டது விபத்து அல்லது தவறு அல்ல. அது வரப்போகிறது என்று அவர் வாழ்நாள் முழுவதும் அறிந்திருந்தார். “இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்” (யோவான் 12:27). “சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன்” (யோவான் 18:37). கிறிஸ்து விருப்பத்தோடு அந்த போர்சேவகருடன், வாரினால் அடிக்கப்படவும் மற்றும் சிலுவையில் அறையப்படவும், அவருடைய வாழ்க்கையில் தேவனுடைய திட்டத்துக்கு கீழ்ப்படிந்தவராக சென்றார். கிறிஸ்து “தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலிப்பியர் 2:7-8). “அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி” (எபிரெயர் 5:8-9). கெத்சமெனே தோட்டத்திலே அந்த போர்சேவகர்கள் அவரை கைது செய்தபொழுது, அவர் எந்த எதிர்ப்பும் இல்லாமல் மற்றும் அமைதியாக, தமது பிதாவாகிய தேவனுடைய திட்டத்துக்கு கீழ்ப்படிந்தவராக சென்றார். “அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” (ஏசாயா 53:7). அவருடைய விலையேறப்பெற்ற சிரசின்மீது கிறிஸ்து விருப்பத்தோடு சிலுவையில் மிகுந்த வேதனையோடு அறையப்பட, தேவனுக்கு கீழ்படிந்தவராக சென்றார். “அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போல” (ஏசாயா 53:7). அந்த இரவிலே கிறிஸ்துவானவர் “அடிக்கப்படும்படி கொண்டுபோகப் படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போல” அந்த போர்சேவகர்களோடு போகாமல் இருந்திருந்தால் நமக்கு என்ன நடந்திருக்கும் சிந்தித்துப்பாருங்கள். அவர் அந்த அபரிமிதமான தூதர் கூட்டத்தை அழைத்து, மற்றும் சிலுவையிலிருந்து தப்பி சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும்? உனக்கும் எனக்கும் என்ன நடந்திருக்கும்? முதலாவது, நமது பாவங்களுக்கு பதிலாக சிலுவையிலே கிரயத்தை செலுத்த ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள். நமக்கு மாற்றாக ஒருவருமில்லை, பாவத்துக்காக நமது ஸ்தானத்திலே மரிக்க ஒருவருமில்லை. அது நம்மை மெய்யாகவே ஒரு பயங்கரமான நிலைமையிலே விட்டிருக்கும். நமது பாவத்தின் கிரயத்துக்காக நாம் இருளான நரகத்தின் பிடியிலே நித்தியமெல்லாம் இருந்திருப்போம். இரண்டாவதாக, கிறிஸ்துவானவர் அந்த போர்சேவகர்களோடு போகாமல் இருந்திருந்தால் “அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போல,” நமக்கும் பரிசுத்த மற்றும் நீதியான தேவனுக்கும் இடையில் மத்தியஸ்தராக ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள். நமக்காக ஒருவரும் தேவனோடு பரிந்துபேசாத நிலையில் தேவனுடைய கடைசி நியாயத்தீர்ப்பை நாம் சந்திக்க வேண்டியதாக இருந்திருக்கும், “தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. ஏல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே” (I தீமோத்தேயு 2:5-6). கிறிஸ்துவானவர் அந்த போர்சேவகர்கள் கைது செய்தபொழுது அவர்களோடு போகாமல் இருந்திருந்தால், நமக்கு மத்தியஸ்தராக ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள். இது இரண்டு பிரிவினருக்கு இடையில் ஒரு பிரச்சனையை தீர்க்க ஒருவர் ஊடாக இருப்பதை குறிக்கிறது. தேவனுக்கும் ஒரு பாவிக்கும் இடையில் மத்தியஸ்தராக இருந்து சமாதானத்தை திரும்ப கொடுக்க இயேசு கிறிஸ்து ஒருவரால்தான் முடியும். குமாரனாகிய தேவன் ஒருவர் மட்டுமே பிதாவாகிய தேவனோடு பாவம் நிறைந்த மனிதனை ஒன்றாக கொண்டுவர முடியும். கிறிஸ்துவானவர் அந்த போர்சேவகர்கள் சிலுவையில் அறைந்தபொழுது அவர்களோடு போகாமல் இருந்திருந்தால், நம்மை சமாதானமாக பரிசுத்த தேவனோடு உறவாக இருக்க ஒருவரும் கொண்டு வந்திருந்திருக்க மாட்டார்கள். மூன்றாவதாக, கிறிஸ்துவானவர் அந்த போர்சேவகர்களோடு போகாமல் இருந்திருந்தால் “அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போல” நமக்கு நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க முடிந்திருக்காது. மிகச்சிறந்ததாக அறியப்பட்ட வேதவசனம் சொல்லுகிறது, “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16). கிறிஸ்துவானவர் அந்த போர்சேவகர்கள் அவரை கைது செய்தபொழுது அவர்களோடு போகாமல் இருந்திருந்தால், நமக்கு யோவான் 3:16 உண்மையாக இருந்திருக்காது, மற்றும் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளும்படியான நம்பிக்கைக்கு எந்தவிதத்திலும் இடமில்லை. நான்காவதாக, கிறிஸ்துவானவர் அந்த போர்சேவகர்களோடு போகாமல் இருந்திருந்தால், “அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போல,” அடுத்த நாளில் அவர் அவர் சிலுவையிலே சிந்தின இரத்தம் உனக்கு கிடைத்திருக்காது – உனது பாவத்திலிருந்து உன்னை சுத்திகரிக்க முடியாது. அவர் தேவனுக்கு கீழ்ப்படியாமல், சிலுவையிலிருந்து தப்பியிருந்தால், உனது பாவங்களை கழுவி சுத்திகரிக்க உனக்கு சிலுவையில் அறையப் பட்டதினால் சிந்திய இரத்தம் இல்லை. ஆனால் அந்த இரவிலே கிறிஸ்து அவர்களோடு போனார், உனது பாவங்களுக்காக சிலுவையிலே அறையப்படுவதற்காகவே. இப்பொழுது அப்போஸ்தலனாகிய பவுல் தைரியமாக சொல்ல முடிந்தது, “கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்” (ரோமர் 3:26). இம்மானுவேலின் தமணியிலிருந்து இழுக்கப்பட்ட நீ வந்து இயேசுவை நம்புவாயா? அவர் உனது பாவங்களுக்கு உரிய கிரயத்தை செலுத்துவார். அவர் உன்னுடைய மத்தியஸ்தராக மாறுவார், தேவனோடு செல்வாக்கை கொடுப்பார். நீ நித்திய ஜீவன் உடையவராக இருப்பாய். தேவனுடைய பதிவேட்டிலிருந்து உனது பாவங்களெல்லாம் அழிக்கப்படும், கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே கழுவி நித்தியமாக நீக்கப்படும். இயேசுவானவர் பிதாவாகிய தேவனுக்கு கீழ்ப்படிந்து அந்த போர்சேவகர்களோடு போனார் அந்த இரவிலே தோட்டத்தில் அவரை கைது செய்தார்கள். கிறிஸ்துவானவர் அந்த போர்சேவகர்களோடு போகாமல் இருந்திருந்தால் அவருடைய தாழ்மை, அவருடைய பாடுகள், மற்றும் அந்த சிலுவை, போன்ற ஒரு விலையேறப்பெற்ற காரியத்தையும் என்னால் உங்களுக்கு கொடுக்க முடியாது. கூக்குரலிடும் மக்களுக்காக அவர் ஒப்புகொடுத்தார், நான் உன்னை கேட்கிறேன், உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டியை நீ நம்புவாயா? இவ்வளவு காலமாக நீ அவரை எதிர்த்தாய். அநேகதரம் இரட்சகருக்கு விரோதமாக உனது இருதயத்தை கடினப்படுத்தினாய். இந்த இரவிலே, நீ அவருக்கு உன்னை ஒப்புகொடுப்பாயா? ஓ, அவரை பரிகாசம் செய்த அந்த கொடூரமான போர்சேவகர்களைபோல இருக்கவேண்டாம்! அவரை புறக்கணித்து தள்ளின பிரதான ஆசாரியர்களைப்போல இருக்க வேண்டாம், அவரது முகத்தில் துப்பின மற்றும் அவரை நம்ப மறுத்த அந்த பரிசேயர்களைப்போல இருக்க வேண்டாம்! இனிமேல் அப்படி இருக்க வேண்டாம் என்று உன்னை கெஞ்சுகிறேன்! நீண்டகாலமாக நீ அவர்களைப்போல இருந்தாய், போதுமான நீண்டகாலத்துக்கும் மேலாக! எளிமையான விசுவாசத்தில் உன் இருதயததை இயேசுவிடம் கொடு. நீ இயேசுவை நம்புவாயா, “உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29). நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: |
முக்கிய குறிப்புகள் கிறிஸ்து காட்டிக்கொடுக்கப்படுதல் THE BETRAYAL AND ARREST OF CHRIST ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் “நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?” (மத்தேயு 26:53). (மத்தேயு 26:46; யோவான் 18:3, 2, 8; லூக்கா 22:51) I. முதலாவதாக, கிறிஸ்து தம்மை காப்பாற்ற ஆயிரக்கணக்கான தூதர்களை அழைத்திருக்க முடியும், II ராஜாக்கள் 19:35. II. இரண்டாவதாக, கிறிஸ்து சித்தத்தோடு சிலுவைவைக்கு சென்றார், லூக்கா 18:31-33; யோவான் 12:27; 18:37; பிலிப்பியர் 2:7-8; எபிரெயர் 5:8-9; ஏசாயா 53:7; I தீமோத்தேயு 2:5-6; யோவான் 3:16; ரோமர் 3:26; யோவான் 1:29. |