இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
தரிசிப்பது அல்லது விசுவாசிப்பது?SEEING OR BELIEVING? ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் பிப்ரவரி 4, 2018 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி “அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்பு கூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர் களாய்க் களிகூர்ந்து, உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்” (I பேதுரு 1:8, 9). |
இயேசுவை ஒருபோதும் பார்க்காத மக்களிடம் பேதுரு பேசினார். அவர் இந்தப் பூமியிலே இருந்தபொழுது அவர்கள் அவரை ஒருபோதும் பார்க்கவில்லை. இருந்தாலும் அவரால் அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள். இயேசு இந்தப் பூமியிலே இருந்தபொழுது அநேகர் அவரை பார்த்தார்கள். இருந்தாலும் அவர்கள் இரட்சிக்கப்படவில்லை. உன்னதமான ஸ்பர்ஜன் அவர்கள் சொன்னதை நிச்சயமாக நாம் சொல்ல முடியும் – “தரிசிப்பது என்பது விசுவாசிப்பது அல்ல, ஆனால் விசுவாசிப்பது என்பது தரிசிப்பதாகும்.” இது ஸ்பர்ஜன் அவர்களின் ஒரு போதனையின் தலைப்பாக இருந்தது. நமது பாடம் இதை அடிப்படையாகக் கொண்டதாகும். உங்களுக்காக நான் ஸ்பர்ஜன் அவர்களின் போதனையை எளிமைப்படுத்துவேன். I. முதலாவதாக, தரிசிப்பது என்பது விசுவாசிப்பது அல்ல. அதை அறிந்து கொள்ளுவதற்கு வேதாகமத்தைப்பற்றி அதிகமாக அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. நான்கு சுவிசேஷங்கள் மூலமாக மக்கள் இயேசுவை பார்த்தார்கள். அவர்கள் அவரை பார்த்தார்கள், ஆனாலும் அவர்கள் அவரில் விசுவாசிக்கவில்லை. யூதாஸ்காரியோத்து இயேசுவின் சீஷர்களில் ஒருவன். ஆனால் யூதாஸ் இயேசுவில் விசுவாசிக்கவில்லை. யூதாஸ் இயேசுவை மூன்று வருடங்கள் பின்பற்றினான். அவன் இயேசுவோடு வாழ்ந்தான். அவன் இயேசுவோடு சாப்பிட்டான். அவன் இயேசுவின் நாமத்தில் பிசாசுகளைத் துரத்தினான். அவன் இயேசுவைப்பற்றி பிரசங்கித்தான். அவன் இயேசுவை தனிப்பட்ட விதத்தில் நெருக்கமாக அறிந்திருந்தான். யூதாஸை இயேசு சினேகிதனே என்றும் அழைத்தார். ஆனால் யூதாஸ் இயேசுவில் விசுவாசிக்கவில்லை. அதனால்தான் அவன் முப்பது வெள்ளிக்காசுக்கு இயேசுவை காட்டிக்கொடுத்தான். அதனால்தான் அவன் வெளியே சென்று தற்கொலை செய்துகொண்டான், நரகத்துக்குச் சென்றான். மற்ற சீஷர்களும் அதிகம் நல்லவர்கள் அல்ல. அவர்களும்கூட இயேசுவை நம்பவில்லை. அவர் எருசலேமுக்குப்போய்ப் பாடுபட்டு மரிக்க போவதை அவர்களுக்குச் சொன்னார். “இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை… அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை” (லூக்கா 18:34). அவர்கள்மேல் அவர் ஊதி பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லும் வரையிலும் அவர்கள் இயேசுவை நம்பவில்லை (யோவான் 20:22). அந்த சீஷனாகிய தோமா அதன்பிறகுகூட நம்பவில்லை! அவர்கள் இயேசுவோடு மூன்று ஆண்டுகள் வாழ்ந்தார்கள். ஆனால் அவர்கள் அவரில் விசுவாசம் கொள்ளவில்லை. ஏரோது ராஜா அவரைப் பார்த்தான், ஆனால் அவன் அவரில் விசுவாசம் கொள்ளவில்லை. பிலாத்து அவரைப் பார்த்தான் ஆனால் அவன் அவரில் விசுவாசம் கொள்ளவில்லை. அந்தப் பரிசேயர்கள் அவர் அற்புதங்கள் செய்ததை பார்த்தார்கள், ஆனால் அவர்கள் அவரில் விசுவாசம் கொள்ளவில்லை. சதுசேயர்கள் மற்றும் ஏரோதியர்கள் அவரிடம் பேசினார்கள், ஆனால் அவன் அவரில் விசுவாசம் கொள்ளவில்லை. பெரிய திரளான மக்கள் கூட்டம் அவரால் போஷிக்கப்பட்டார்கள், மற்றும் அவர் அற்புதங்கள் செய்ததை பார்த்தார்கள். இருந்தும் அவர்களில் அநேகர் அவரில் விசுவாசம் கொள்ளவில்லை. இயேசு இந்தப் பூமியிலே இருந்தபொழுது அவரை பார்த்தவரில் அநேகர் விசுவாசிக்கவில்லை! அநேகர் விசுவாசிக்கவில்லை! அது ஆச்சரியமான ஒரு உண்மை! அப்படி ஆச்சரியப்பட்டு இதைப்பற்றி அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார். யோவான் சொன்னார், “அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” (யோவான் 1:11). கையளவான மக்கள் மட்டுமே அவர் இந்த உலகத்திலே இருந்தபொழுது இயேசுவை பார்த்தவர்கள் அவரில் விசுவாசம் வைத்தார்கள். இந்த உண்மையிலிருந்து “தரிசிப்பது என்பது விசுவாசிப்பது அல்ல” என்று நாம் அறிந்திருக்கிறோம். இருந்தாலும் இந்த இரவிலே இங்கிருக்கும் உங்களில் சிலர் அவரை தரிசித்தால் விசுவாசிக்கலாம் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் இதை ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள், ஆனால் இது உண்மை. அதனால்தான் இயேசு உண்மை என்று “உணரும்படி” நிரூபிக்க சிலகாரியத்தை நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் ஒரு “உணர்வை” எதிர்பார்க்கிறீர்கள் அல்லது ஒரு வாக்குத்தத்தம் அடங்கிய வேதவசனத்தை எதிர்பார்க்கிறீர்கள். ஒரு உணர்வை உங்களால் புரிந்துகொள்ள முடியும். ஒரு வாக்குத்தத்தம் அடங்கிய வேதவசனத்தை பார்க்க முடியும். ஆனால் இயேசுவை உன்னால் பார்க்க முடியவில்லை. அவரில் நீ விசுவாசிக்காமல் இருப்பதற்கு அது ஒரு சாக்கு. அவரில் நீ நம்பாமல் இருப்பதற்கு அது உனக்கு ஒரு சாக்குப்போக்கு. அவரில் நீ விசுவாசிக்காமல் இருப்பதற்கு அது ஒரு சாக்கு. அவரில் நீ இரட்சிக்கபடாமல் இருப்பதற்கு அது ஒரு சாக்கு. ஆனால் நான் உனக்குச் சொல்லுவேன், “தரிசிப்பது விசுவாசிப்பது அல்ல”. ஏதோ சிலதை உணருவது விசுவாசிப்பது அல்ல. ஒரு வேதவசனத்தை திரும்ப திரும்ப சொல்லுவது விசுவாசிப்பது அல்ல. ஒரு அற்புதத்தை பார்ப்பது விசுவாசிப்பது அல்ல. நான் குறிப்பிட்ட எல்லா அவிசுவாசிகளும் வேதவசனத்தை அறிந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் அவரை பார்த்தார்கள். கிட்டதட்ட அவர்கள் அனைவரும் அவர் அற்புதம் செய்ததை பார்த்தவர்கள். இருந்தாலும் அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. அவரை அநேகதரம் பார்த்திருந்தாலும், அவரை ஒருபோதும் விசுவாசிக்காத காரணத்தினால் அவர்களில் அநேகர் மரித்து நரகத்துக்குச் சென்றார்கள்! ஏசாயா தீர்க்கதரிசி இயேசுவைபற்றி பேசினார். ஏசாயா சொன்னார், “அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்” (ஏசாயா 53:3). பர்னான் அவர்களுடைய குறிப்பு சொல்லுகிறது, அவர் அசட்டைபண்ணப்பட்டார்... மீட்பர் பரிசேயர்கள், சதுசேயர்கள், மற்றும் ரோமர்கள் மூலமாக ஏளனத்துக்கும் ஆக்கினைக்கும் இலக்கானார். பூமியிலே அவருடைய வாழ்க்கை அப்படி இருந்தது, அவருடைய மரணத்திலும் அப்படியே இருந்தது; அதிலிருந்து, அவருடைய பெயர் மற்றும் அவரை அளவுகடந்த ஆக்கினைக்கு இலக்காக்கி இருந்தார்கள். மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவர்... மீட்பரின் சிகிச்சையில், பரிசேயர்கள் மனித முழுவரலாற்றிலேயே அர்த்தம் நிறைந்த மூன்று வார்த்தைகளை குறிப்பிட்டார்கள். அந்தப் பெயர் “மனுஷரால் [மூலமாக] புறக்கணிக்கப்பட்டவர்” எல்லா துக்கமான மற்றும் சோகமான வரலாற்றில் குறிக்கப்படும்; யூதர்களால் புறக்கணிக்கப்பட்டார்; செல்வந்தர்களால் புறக்கணிக்கப் பட்டார், பெரிய மனிதர்களால் மற்றும் கல்விமான்களால் புறக்கணிக்கப்பட்டார்; எல்லாநிலையிலும் இருந்த ஏராளமான மக்களால் புறக்கணிக்கப்பட்டார், வயதினர், மற்றும் வகுப்பினரால் புறக்கணிக்கப்பட்டார். தி புல்பிட் கமன்ட்ரி சொல்லுகிறது, அவர் அசட்டை பண்ணப்பட்டிருந்தார். மக்கள் அவரது போதனைக்குக் காட்டிய சிறிய கவனத்தின் ஒரு பகுதியாக அவர்களது புறக்கணிப்புக் காட்டப்பட்டது, அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக இரவும் பகலும் அவர்களது சிகிச்சையினால் ஒரு பகுதி காட்டப்பட்டது. மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவர், மக்களால் கைவிடவும்பட்டார்... நமது கர்த்தருக்கு “சிறுமந்தையை” தவிர எந்த நேரமும் இல்லை. அவர்களிலும்கூட, “அநேகர் அவரோடு நடக்காமல் பின்வாங்கி போனார்கள்.” சிலர் இரவிலே மட்டும் அவரிடம் வந்தார்கள். சகல “அதிகாரிகளும்” மற்றும் பெரிய மனிதர்களும் அவரை விட்டு தூரமாக இருந்தார்கள். இறுதியாக அவருடைய அப்போஸ்தலர் களும் “அவரை விட்டு ஓடிவிட்டார்கள்.” இயேசு இந்தப் பூமியில் இருந்தபொழுது அவரை பார்த்த அனைவரும் கிட்டதட்ட அவரை அசட்டை பண்ணினார்கள் மற்றும் அவரை புறக்கணித்தார்கள். நீ அவர்களைவிட வித்தியாசமாக இருக்க முடியுமா? நீ மாற்றப்படவில்லையானால், நீ சரியாக அவர்களைபோலவே இருக்கிறாய்! நீ அவரை அசட்டை பண்ணுகிறாய் மற்றும் அவரை புறக்கணிக்கிறாய். அவரை விட்டு உன்னுடைய முகத்தை மறைத்துக்கொள்ளுகிறாய். நீ சரியாக இந்த பூமியில் இருந்தபொழுது இயேசுவை புறக்கணித்த அவரை பார்த்த அவர்களைபோலவே இருக்கிறாய்! அவரை அவர்கள் பார்த்தார்கள். அவருடைய சத்தத்தை கேட்டார்கள். இருந்தாலும் அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. தரிசித்தல் விசுவாசிப்பது அல்ல! II. இரண்டாவதாக, விசுவாசிப்பது தரிசிப்பதாகும்! “அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்பு கூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர் களாய்க் களிகூர்ந்து, உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்” (I பேதுரு 1:8, 9). நமது பாடத்தில் பேதுரு பேசின மக்கள் இயேசுவை ஒருபோதும் காணவில்லை. இருந்தாலும் அவர்கள் அவரை நம்பினார்கள் மற்றும் அவரால் இரட்சிக்கப்பட்டார்கள்! இயேசுவை ஒருபோதும் காணாதிருந்தாலும், அவரது வார்த்தைகளை ஒருபோதும் கேளாதிருந்தும், அவர்கள் அவரை ஏன் நம்பினார்கள்? பெரிய மறுமலர்ச்சியாளராகிய கால்வின் அவர்கள் இதற்கு பதில் அளிக்கிறார். கால்வின் சொன்னார், “ஒரு மனிதனும் ஒருபோதும் முடியாது... தன்னுடைய சொந்த புரிந்து கொள்ளுதலினால் புரிந்து கொள்ள முடியாது கர்த்தர் [அவனை] திருத்துகிறார் மற்றும் தமது ஆவியினால் அவனை புதிதாக உருவாக்குகிறார்.” அதே பரிசுத்த ஆவியானவர் உனக்கு நம்பிக்கையை கொடுக்க முடியும். இப்பொழுது – உன்னுடைய கண்களினால் இயேசுவை காண முடியாவிட்டாலும். இப்பொழுது அதே பரிசுத்த ஆவியானவர் உனக்கு நம்பிக்கையை கொடுக்க முடியும் – அவரது மாம்ச தொடுகையை நீ உணரமுடியாவிட்டாலும். இயேசுவோடு தொடர்பு கொள்ள முதலாவது காரியம் அன்பு ஆகும். நமது பாடம் சொல்லுகிறது, “அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்பு கூருகிறீர்கள்.” “நீங்கள் அவரைக் காணாமலிருந்தாலும், அவரிடத்தில் அன்பு கூருகிறீர்கள்.” இயேசுவின் அன்பு நமக்கு அநேக வழிகளில் வருகிறது. நான் சபைக்குப் போக ஆரம்பித்தபொழுது எனது உறவினர்கள் என்னை கேலிபரியாசம் செய்தார்கள். அவர்கள் இயேசுவையும் ஏளனம் செய்தார்கள். அவர்கள் சொன்னார்கள், “அவர் உனக்கு என்ன செய்தார்? நீ அவரை எப்படி விசுவாசிக்க முடியும்?” ஆனால் அவர்கள் எவ்வளவுக்கு அதிகமாக இயேசுவை ஏளனம் செய்தார்களோ, அவ்வளவுக்கு அதிகமாக நான் அவரை நேசித்தேன். அங்கே என்னுடைய சபையிலும் கெட்ட பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் அவருடைய ஒரு கன்னியான தாயாரைப்பற்றி அசுத்தமான நகைச்சுவைகளை சொன்னார்கள். அவர் ஒரு வேசிமகன் என்று சொன்னார்கள். அவரைப்பற்றி அவர்கள் சிரித்தார்கள். ஆனால் அவர்கள் எவ்வளவுக்கு அதிகமாக இயேசுவை ஏளனம் செய்தார்களோ, அவ்வளவுக்கு அதிகமாக நான் அவரை நேசித்தேன். நான் இயேசுவை ஈஸ்டர் நேரத்தில் நினைக்கும்பொழுது அதிகமாக நான் அவரை நேசித்தேன். அவர் சிலுவையிலே பாடுபட்டதற்காக நான் அவரை நேசித்தேன். அவர் கைகளிலும் பாதங்களிலும் ஆணிகள் அடிக்கப்பட்ட அந்த நினைவை நான் வெறுத்தேன். அவர்கள் ஏன் அப்படி அவருக்குச் செய்தார்கள் என்பதை நான் அறியவில்லை. ஆனால் நான் அவருக்காக மிகுந்த துக்கமும் வருத்தமும் அடைந்தேன். நான் தனிமையான ஒரு பையனாக இருந்தேன். என்னை மகிழ்ச்சியாக மற்றும் பாதுகாப்பாக வைக்க எனது பெற்றோர் என்னோடு இருக்கவில்லை. இயேசு தனிமையாக இருந்ததை நினைத்து – ஒரு நண்பனும் அவருக்கு ஆறுதல் கொடுக்கவில்லை – நான் அவரை நேசித்தேன். நான் நினைத்தேன், “உம்மை ஒருவரும் நேசிக்கவில்லையானாலும், இயேசுவே, நான் உம்மை நேசிப்பேன்!” அவன் எனக்காக கொண்ட அன்புதான் என்னுடைய ஆத்துமாவை வெற்றி கொண்டது. நான் இரட்சிக்கப்பட்ட நாளில் அவர்கள் சார்லஸ் வெஸ்லியின் பாடலை பாடினார்கள். ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் இருந்த வார்த்தைகள் எனது இருதயத்தை உடைத்தன. “அற்புதமான அன்பு, அது எப்படி இருக்க முடியும், நீங்கள், என் தேவனே, எனக்காக மரித்தது.” “அற்புதமான அன்பு, அது எப்படி இருக்க முடியும், நீங்கள், என் தேவனே, எனக்காக மரித்தது.” இயேசு மாம்சத்தில் வந்த தேவனாக இருந்தார். அவர்கள் என் தேவனை கரடுமுரடான சிலுவை கட்டையில் ஆணி அடித்தார்கள். “அற்புதமான அன்பு.” அது எனது இருதயத்தை உடைத்தது. நான் அவரை நம்பினேன். அவர் எனக்காக கொண்ட அன்பின் மூலமாக – மற்றும் நான் அவர்மீது கொண்ட அன்பின் மூலமாக நான் அவரோடு தொடர்புள்ளவனானேன். ஜான் கேஹன் அவர்களை இங்கே எந்த மனிதனும் ஒரு பெண் தன்மை கொண்டவர் என்று அழைப்பார் என நான் நினைக்கவில்லை. ஜானை அவருடைய குணாதிசயத்தின் பெலத்துக்காக நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள். ஜான் தன்னுடைய ஆள்தத்துவத்தின் ஒவ்வொரு அணுவிலும் கிறிஸ்துவை எதிர்த்தான். விசாரிப்பு அறையிலே நான் அவனிடம் ஒன்றும் சொல்லவில்லை அவனை நகர்த்தினேன். அவன் சொன்னான், “நான் இயேசுவை விட்டுவிட்ட எனது நினைவு அதாவது நான் எப்பொழுதும் விட்டுவிடுவேனோ என்று என்னை மிகவும் கலக்கமடைய செய்தது. இயேசு எனக்காக தமது ஜீவனையே கொடுத்தார். நான் இயேசுவுக்கு சத்துருவாக இருக்கும்பொழுதே அவர் எனக்காக சிலுவையில் அறையப்பட சென்றார், மற்றும் நான் அவருக்கு என்னை ஒப்புகொடுக்கவில்லை. அந்த எண்ணம் என்னை உடைத்தது. இனிமேலும் என்னால் தாங்கிக்கொண்டு இருக்க முடியவில்லை. நான் இயேசுவை உடையவனாக இருக்க வேண்டும். அந்த நொடியிலே என்னை அவரிடம் ஒப்புக்கொடுத்தேன் மற்றும் விசுவாசத்தின் மூலமாக இயேசுவிடம் வந்தேன்... எனக்கு எந்த உணர்ச்சியும் தேவைப்படவில்லை. நான் கிறிஸ்துவை பெற்றுக்கொண்டேன்!... கடைமட்ட பாவியான என்னை மன்னிக்க இயேசு எவ்வளவாக என்னை நேசித்து இருக்க வேண்டும். கிறிஸ்து எனக்காக தமது ஜீவனையே கொடுத்தார் அதனால் நான் அவருக்கு என்னை முழுவதுமாக ஒப்புகொடுக்கிறேன்... இயேசு எனது வெறுப்பு மற்றும் கோபத்தை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக அன்பை எனக்கு கொடுத்தார்.” மகத்துவமான ஸ்பர்ஜன் ஒருபோதும் ஜான் கேஹனை சந்திக்கவில்லை. ஆனால் அவர் ஜானை அறிந்தவரைபோல எழுதினார். ஸ்பர்ஜன் சொன்னார், “வெறும் பார்ப்பது அல்ல – அது எப்பொழுதும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் – அது இயேசுவைபற்றி நினைத்து கொண்டு இருத்தல், புரிந்து கொள்ளுதல், அதனால் பாதிக்கப்படுதல், தொடர்பின் மெய்யான கருத்தாகும். அதனால், கிறிஸ்துவுக்காக அன்பு ஒரு மெய்யான அர்த்தமுள்ள ஐக்கியமாக மாறுகிறது, ஒரு உறுதியாக கட்டும் பிணைப்பைவிட மேலாக இருக்கிறது... அன்பு இரட்சகரின் இருதயத்துக்கு மெய்யாக செய்கிறது... இவ்வாறாக கிறிஸ்துவுக்கும் உனது ஆத்துமாவுக்கும் உள்ள தொடர்பு நீ உணர்வதையும் தொடுவதையும்விட அதிக மெய்யாக அன்பு மாற்றுகிறது.” “நீ அவரை பார்க்கவில்லையானாலும், நீ அவரை நேசிக்கிறாய்.” ஆனால் பாடம் நமக்கு இயேசுவோடு உள்ள தொடர்பில் மற்றொரு கருத்தை தருகிறது – “அவரைத், தரிசியாமலிருந்தும், அவரிடத்தில் விசுவாசம் வைத்திருக்கிறீர்கள்.” “இருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்திருக்கிறீர்கள்.” இங்கே மறுபடியுமாக நீங்கள் இயேசுவை தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைக்கமுடியும் என்ற உண்மையை நினைவுபடுத்தப்படுகிறோம். “அவரை நீங்கள் காணாமலிருந்தும், விசுவாசம் வைத்து, சந்தோஷமுள்ளவர்களாய் களிகூர்ந்து…” இருந்தும் விசுவாசம் வைத்தல்! இருந்தும் விசுவாசம் வைத்தல்! இயேசுவை ஒருபோதும் அறியாத மக்களுக்கு பேதுரு எழுதினார். அவர்கள் இயேசுவை ஒருபோதும் உணராதவர்கள். அவர்கள் இயேசுவின் சத்தத்தை ஒருபோதும் கேட்காதவர்கள். ஆனால் அவரை அவர்கள் அறிந்திருந்தார்கள்! “அவரை நீங்கள் காணாமலிருந்தும், விசுவாசம் வைத்து, களிகூருகிறீர்கள்.” “அவரை நீங்கள் காண முடியாவிட்டாலும், விசுவாசம் வைத்து இருக்கிறீர்கள்.” ஹெலன் கில்லர் முழுவதுமாக பார்வையற்றவராக முழுமையாகக் காது கேளாதவராகப் பிறந்தாள். அன்னி சுலிவான் என்ற ஒரு பெண் ஹெலன் கில்லருக்கு எப்படி பேசவேண்டும் என்று கற்றுக்கொடுத்தாள். அது ஒரு ஆச்சரியமான கதை. நான் சிறு பையனாக இருந்தபொழுது ஹெலன் கில்லர் வானொலியில் ஒரு பிரசங்கம் கொடுத்ததை கேட்டேன். ஹெலன் கில்லர் முழுவதுமாக குருடாக மற்றும் முழுமையாக செவிடாக பிறந்தாலும், ஹெலன் கில்லர் இயேசுவை விசுவாசித்தாள்! நீயும் அவரை பார்க்காவிட்டாலும் அல்லது அவரை கேட்காவிட்டாலும் – நீ அவரை விசுவாசிக்க முடியும்! இயேசுவை விசுவாசிப்பது அவரோடு தொடர்புக்குள் உன்னை கொண்டு வருகிறது. இயேசுவோடு தொடர்பாக இருப்பதற்கு அன்பு மற்றும் நம்பிக்கை இரண்டும் இணைப்பு முனைகளாகும். அன்பு மற்றும் நம்பிக்கை இரண்டும் நம்மை இரட்சகரோடு இணைக்கிறது. “அவரை நீங்கள் காணாமலிருந்தும், அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது, அவரைத் தரிசியாமலிருந்தும், அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய் களிகூருகிறீர்கள்.” “அவரை நீங்கள் காணமுடியா விட்டாலும், விசுவாசம் வைத்து களிகூருகிறீர்கள்!” நமது சபையில் இசை பெட்டி வாசிக்கும், எமி ஜெபலஹாவை கவனியுங்கள். அவள் ஒரு பாராட்டுக்குரிய பெண். அவள் சொல்லுவதை நீங்கள் நம்பலாம். நான் இயேசுவை நம்பி இருக்க மாட்டேன். “இயேசு” ஒரு வெறும் வார்த்தையாக, ஒரு போதனையாக, அல்லது நான் அறிந்தவர்களில் மிகவும் தூரமானவராக இருந்தார். கிறிஸ்துவுக்காக முயற்சிப்பதற்குப் பதிலாக, நான் ஒரு உணர்வுக்காக அல்லது ஒருவித அனுபவத்துக்காக பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒருநாள் இரவின் கடைசியிலே இயேசு எனக்காக மரித்தார் என்று உடனடியாக நான் உணர்ந்தேன். இந்த இரவிலே [அவரைபற்றி] கெத்சமெனே தோட்டத்தில் இருப்பதாக, என்னுடைய பாவத்தின் பாரத்தால் வேதனையோடு மற்றும் இரத்த வியர்வையோடு இருப்பதாக நினைத்தேன். சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை [எனது மனதிலே] நான் பார்த்தேன். அவரது இரத்த பலியை [நினைத்தேன்] மற்றும் அவரை நான் புறக்கணித்ததால் அவர் உருவ குத்தப்பட்டார். இருந்தாலும் நான் இன்னும் அவரை நம்பவில்லை. என்னுடைய நிச்சயத்து உணர்வின் தேவைக்காக நான் இன்னும் தொங்கிக்கொண்டிருந்தேன். அன்பான நன்பர்களே, நான் கிறிஸ்துவை அறிந்து கொள்ளும் வரையிலும் “சந்தோஷத்தின்” அர்த்தத்தை நான் ஒருபோதும் அறியாதிருந்தேன். நான் அநேக கஷ்டங்களையும் சோதனைகளையும் கடந்து வந்தேன். நான் நம்பி இருந்த மக்களால் ஏமாற்றம் அடைந்தேன். நான் தனிமையாக இருந்தேன் மற்றும் நான் பெரிய துக்கத்தை அனுபவித்தேன். நான் இரவில், ஒவ்வொரு இரவிலும் மணிக்கணக்காக நடந்தேன். ஒரு மனித நண்பனும் இல்லாத தனிமையாக “நான் கொடூரமான மற்றும் மென்மையான துக்கத்தை” உணர்ந்தேன். இரவில் அறிமுகமான ஒருவனாக நான் இருந்தேன். ஆனால் ஒருபோதும் மற்றும் எப்பொழுதும் இயேசு என்னை இந்த துக்கத்தின் நேரத்தில் கொண்டு வந்தார். என்னை ஏற்றுக்கொள்ளுவார் ஒருவரும் இல்லை என்று நான் உணர்ந்தபோது, இயேசு எப்போதும் ஏற்றுக்கொண்டார். “உமது காயத்திலிருந்து கொடுக்கப்பட்ட/ அந்த நீராவியை விசுவாசத்தினாலே எப்போதும் நான் பார்த்தேன்,/ மீட்கும் அன்பு எனது முக்கிய மைய பொருளாக இருந்தது/ நான் மரிக்கும் வரையிலும் அப்படியே இருக்கும்./ நான் மரிக்கும் வரையிலும் அப்படியே இருக்கும்,/ நான் மரிக்கும் வரையிலும் அப்படியே இருக்கும்,/ மீட்கும் அன்பு எனது முக்கிய மையபொருளாக இருந்தது,/ நான் மரிக்கும் வரையிலும் அப்படியே இருக்கும்.” நீ இன்னும் இழக்கப்பட்டு இருப்பாயானால் இந்த இனிமையான பாடலை ஜாக்கிரதையாக கவனி. ஓராயிரம் வழிகளில் நான் வீணாக முயற்சி செய்தேன் நீ ஒருவேளை சொல்லலாம், “நான் உணர்த்தப்படவில்லை. நீங்கள் அன்பு மற்றும் விசுவாசத்தைப் பற்றி பேசுகிறீர்கள்.” நீ சொல்லலாம், “எனக்கு கிறிஸ்துவுக்காக அன்பு இல்லை.” “நான் அவரில் விசுவாசம் வைக்கவில்லை. உமது வாதங்கள் என்னை உணர்த்தவில்லை.” அப்படியானால் நான் உன்னை எச்சரிக்கை செய்ய வேண்டியது அவசியம். நீ அன்பு மற்றும் விசுவாசத்தைப் பற்றிய இனிமையான வார்த்தைகளை கேட்ககூடாத ஒரு நாள் வரப்போகிறது. உனது காதுகள் குளிர்ந்து மற்றும் மரித்துப்போகும். சமாதானமான வார்த்தைகள் மற்றும் உனக்கு மன்னிப்பு அங்கே இருக்காது. நித்தியமான இருளின் நரகத்தினால் விழுங்கப்படுவாய். இப்பொழுது என்னை கவனி! தேவன் கோபத்தோடு நியாயத்தீர்ப்பிலே உன்னோடு பேசுவதற்கு முன்பாக என்னை கவனி. தேவன் உன்னிடம் சொல்லுவார், “நான் உன்னை கூப்பிட்டேன் நீ மறுத்துவிட்டாய்.” நான் உனக்கு சொல்வதெல்லாம், நீ கிறிஸ்துவை விசுவாசிப்பாயா? அதை இப்போதே செய்வாயா? இன்று இரவே செய்வாயா? இதற்கு மேல் என்னால் எதுவும் செய்யமுடியாது. நான் உன்னை இயேசுவை விசுவாசிக்க வைக்க முடியாது. நான் அதைக் கர்த்தரிடம் விட்டுவிட வேண்டும். அவருடைய சக்தியால், கர்த்தர் அதிக இதயங்களை இயேசுவை விசுவாசிக்க வைத்திருக்கிறார். கர்த்தர் இயேசுவை விசுவாசிக்க வைத்த அநேக மக்கள் மத்தியில் நீ அமர்ந்திருக்கிறாய். இயேசுவை விசுவாசிக்க கர்த்தர் அவர்களைத் தேர்வு செய்தார். அவர் உன்னை தேர்வு செய்யவில்லை என்றால், என்னால் ஒன்னும் செய்ய இயலாது. கர்த்தர் உன்னை இரட்சிக்க தேர்வு செய்யவில்லை என்றால், என்னால் ஒன்னும் செய்ய இயலாது. தேர்வு செய்யப்பட்டவர்களில் நீ இல்லை என்றால் என்னால் எதுவும் செய்ய இயலாது. கர்த்தர் இன்றிரவு உன் இதயத்தோடு பேசினால், இயேசுவைப் பெற்றுக்கொள். இயேசுவைப் பெற்றுக்கொள். உனக்கு இயேசு தேவைப்படுகிறார், வந்து அவர் மீது விசுவாசம் செலுத்து. கர்த்தரின் பரிசுத்த ஆவி உன் இதயத்தில் செலுத்தவில்லை என்றால் நான் சொன்னவை எதுவும் நன்மை செலுத்தாது. நம் பிரசங்கத்தில் அநேகரிடத்தில் பேதுரு பேசினதுபோல் நீயும் இயேசுவை விசுவாசிக்க நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் கர்த்தரிடம் ஜெபிக்கிறோம் அவர் ஜான் கேஹன், மற்றும் யெமி ஜபாலஹா உன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு செய்தது போல் உனக்கும் செய்ய வேண்டும். கர்த்தர் இன்று இரவு உன்னைத் தேர்வு செய்யட்டும். நீ இயேசுவிடம் வா, இயேசுவை விசுவாசி, அவருடைய பரிகார இரத்தத்தினால் இரட்சிக்கப்படு. ஆமென். நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: |
முக்கிய குறிப்புகள் தரிசிப்பது அல்லது விசுவாசிப்பது? SEEING OR BELIEVING? டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் “அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்பு கூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர் களாய்க் களிகூர்ந்து, உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்” (I பேதுரு 1:8, 9).
I. முதலாவதாக, தரிசிப்பது என்பது விசுவாசிப்பது அல்ல, II. இரண்டாவதாக, விசுவாசிப்பது தரிசிப்பதாகும்! சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு 2:10, II கொரிந்தியர் 9:15. |