Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




இரத்தத்தின் மூலமாக நாம் சுத்திகரிக்கப்பட்டோம்!

BY HIS BLOOD WE ARE CLEANSED!
(Tamil)

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

ஜனவரி 28, 2018 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, January 28, 2018

“அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற் போனோம்” (ஏசாயா 53:3).

“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப் பட்டார்… அவருடைய தழும்புகளால் [காயங்களால்] குணமாகிறோம்” (ஏசாயா 53:5).


கடந்த ஞாயிறு இரவு கிறிஸ்துவின் இரத்தத்தின் அவசியத்தைப் பற்றிய ஒரு போதனையை நான் பிரசங்கித்தேன். (“இரத்தத்தோடு அல்லது இரத்தமில்லாமல்”). அந்தப் போதனையில் இரண்டு கருத்துக்கள் அடங்கி இருந்தன. முதலாவது, கிறிஸ்து இரத்தம் சிந்தப்படவில்லையென்றால் உனக்கு என்ன நடக்கும் என்பது. இரண்டாவது, கிறிஸ்து இரத்தம் சிந்தினால் உனக்கு என்ன நடக்கும் என்பது.

முதலாவது கருத்தின் இறுதியில் மட்டுமே நரகத்தைப்பற்றி சுருக்கமாக குறிப்பிட்டிருந்தேன். பிறகு அந்தக் கருத்தின் மீதிபகுதியில் பாவத்தைப் பற்றி செலவிட்டேன். அதில் நான் சொன்னேன் கிறிஸ்து இரத்தம் சிந்த வில்லையானால், “உன்னுடைய பாவத்திலிருந்து சுதந்திரம் இல்லை. கிறிஸ்து இரத்தம் சிந்தவில்லையானால் உன்னுடைய பாவத்துக்கு மன்னிப்பு இல்லை. கிறிஸ்து இரத்தம் சிந்தவில்லையானால் உன்னுடைய பாவங்களிலிருந்து விடுதலையில்லை. கிறிஸ்து இரத்தம் சிந்தவில்லையானால் உன்னுடைய பாவங்களிலிருந்து சுயாதீனமில்லை.” அதன்பிறகு இரண்டாவது கருத்துக்கு போனேன், “கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தை நீ பெற்று இருந்தால் உனக்கு என்ன நடக்கும்”. அந்த அற்புதமான வல்லமையுள்ள கிறிஸ்துவின் இரத்தத்தைப்பற்றி நான்கு முழுபக்கங்கள் செலவிட்டேன் “உன்னுடைய பாவத்தை அழிக்க,” “உன்னுடைய பாவத்தை மன்னிக்க,” “உன்னுடைய பாவத்திலிருந்து உன்னை விடுதலையாக்க,” “உன்னுடைய பாவத்திலிருந்து உனக்கு சுயாதீனத்தை அளிக்க,” “உன்னுடைய பாவத்திலிருந்து உன்னை விடுதலையாக்க,” மற்றும் “உன்னை பரலோகத்துக்கு எடுத்துச்செல்ல”. பரலோகத்தில் உள்ளவர்கள் பாடிக்கொண்டிருப்பார்கள் “கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டதை.” பென்னி குரோஸ்பேனுடைய அற்புதமான பாடலைக் குறிப்பிட்டேன், “ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் மூலமாக மீட்கப்பட்டேன்”. ஸ்பர்ஜன் இதை சொன்னார் என்று குறிப்பிட்டேன், “ஓர் இரத்தம் இல்லாத சுவிசேஷம்... பிசாசுடைய சுவிசேஷம்.” சார்லஸ் வெஸ்லி சொன்ன பாடலை குறிப்பிட்டேன், அது சொல்கிறது,

அவருடைய இரத்தம் பளப்பளப்பாக சுத்தம் செய்ய முடியும்,
அவருடைய இரத்தம் எனக்காக தயாராக இருந்தது.
(“O For a Thousand Tongues” by Charles Wesley, 1707-1788).

அந்தப் பாடலை நீங்கள் பாடும்படி செய்தேன். பிறது நீங்கள் பாடுவதை அறிந்தேன், “வல்லமை உண்டு, வல்லமை, அற்புதம் செய்யும் வல்லமை ஆட்டுக்குட்டியின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் உண்டு” (“by Lewis E. Jones, 1865-1936). உண்மையில் அந்தப் பாடலை நீங்கள் மூன்றுமுறை பாடும்படி செய்தேன்! பிறகு ஆக்டாவியஸ் வின்ஸ்சுலோ அவர்களின் போதனை சொன்னேன், அவர் 19ஆம் நூற்றாண்டின் பெரிய பிரசங்கியாக இருந்தவர், அவர் சொன்னார், “கிறிஸ்துவுக்கு முன்பாக நீ முழங்கால்படியிட்டு மற்றும் உன்னுடைய மனச்சாட்சி அதன்மூலமாக சுத்திகரித்துக்கொள், அந்த இரத்தம் மன்னிக்கிறது, மூடுகிறது, மற்றும் உன்னுடைய குற்றம் எல்லாவற்றையும் நீக்குகிறது.” பிறகு ஸ்பர்ஜன் ஒரு வாலிபனிடம் சொன்னதை குறிப்பிட்டேன், “இயேசுவிடம் மட்டும் வா. அவர் உன்னுடைய பாவங்களை தமது விலையேறப்பெற்ற இரத்தத்தினால் கழுவி நீக்கிவிடுவார்.” பிறகு பின்வரும் பாடலை குறிப்பிட்டேன் “நான் இருக்கிற வண்ணமாக” அது சொல்கிறது இயேசுவின் இரத்தம் “எனக்காக சிந்தப்பட்டது.” பிறகு அந்த போதனையை இப்படியாக முடித்தேன், “இயேசுவை நம்பு, இயேசுவிடம் வா, அவர் உன்னுடைய பாவங்களை தமது விலையேறப்பெற்ற இரத்தத்தினால் கழுவி நீக்கிவிடுவார்.” இதை என்னால் எவ்வளவு தெளிவுபடுத்த முடிந்தது என்று எனக்குத் தெரியாது!

ஞாயிறு காலை போதனையில், திருவாளர் ஜான் சாமுவேல் கேஹன் “கிறிஸ்துவின் அதிமுக்கியத்துவம்” பற்றிப் பிரசங்கித்தார். திருவாளர் கேஹன் அந்த போதனையை கொலோசெயர் 1:14ஐ குறிப்பிட்டு பின்னர் முடித்தார்,

“அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.”

அதன்பிறகு திருவாளர் கேஹன் சொன்னார், “அவருடைய இரத்தம் உன்னுடைய பாவத்துக்கு ஈடுசெய்யும். அவருடைய இரக்கத்துக்கு உன்னையே ஒப்புக்கொடுத்துவிடு. உன்னுடைய பாவங்களிலிருந்து அவருடைய இரத்தத்தினாலே அவர் ஒருவர் மட்டுமே உன்னை மீட்க முடியும். நீ இன்று இயேசுவை நம்ப வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன்.” திருவாளர் கிரிபித் அவர்கள் பாடின பிறகு திருவாளர் கேஹன் அவர்களுடைய போதனை கொடுக்கப்பட்டது “ஓ புனிதமான தலைவரே, இப்பொழுது காயப்பட்டீரே,” அது நமது பாவங்களுக்கான கிறிஸ்துவின் பலிக்காக துதித்தலாகும். ஓ, ஞாயிறு இரவு என்னுடைய போதனையை திருவாளர் கிரிபித் அவர்கள் பாடின பிறகு கொடுத்தேன், “அங்கே ஒரு ஊற்று உண்டு” என்று வில்லியம் காப்பர் அவர்கள் எழுதின பாடல் – அந்தப் பாடல் சொல்லுகிறது,

இரத்தத்தால் நிறைந்த ஒரு ஊற்று உண்டு,
   இம்மானுவேலின் நரம்புகளிலிருந்து இழுக்கப்பட்டது;
பாவிகள், அந்த வெள்ளத்தின் அடியில் விட்டுவிடலாம்,
   குற்றமுள்ள கறைகளை எல்லாம்.

இருந்தாலும் இதைக்கேட்ட இழக்கப்பட்ட உங்களில் அநேகருக்குப் பாவத்தை சுத்திகரிக்கும் இயேசுவின் இரத்தத்தைக் குறித்த பாடல் மற்றும் பிரசங்கம் எந்த உணர்வையும் ஏற்படுத்தவில்லை! இல்லவே இல்லை! அந்த மாலை போதனைக்குப் பிறகு ஒரு பெண் என்னை காண வந்தாள். நான் சொன்னேன், “நீ முழங்கால்படியிட்டு இயேசுவை நம்பு”. அவள் என்னை கோபத்தோடு பார்த்துச் சொன்னாள், “இல்லை!” அதை என்னால் நம்ப முடியவில்லை! அவள் ஏன் என்னை பார்க்க வந்தாள்? என்னை பார்ப்பதன் மூலமாக அவள் இரட்சிக்கப்படுவாள் என்று நினைத்தாளா? நான் ஆச்சரியப்பட்டேன்! பிறகு ஒரு இளம் மனிதன் என்னை பார்க்க வந்தான். அவனுடைய கண்களில் கண்ணீர் இருந்தது, அதனால் அவன் பாவஉணர்வு அடைந்திருப்பான் என்று நான் நினைத்தேன். ஆனால், இல்லை. நான் அநேக போதனைகளில் அரிதாக குறிப்பிட்ட, நரகத்துக்குப் போவதைப்பற்றி மட்டுமே அவன் பயப்பட்டான்! அவன் நரகத்துக்குப் போவதைப்பற்றி பயப்பட்டான்! அவ்வளவுதான்! அவன் தன்னுடைய பாவத்தைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை. அவன் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை – ஒரு வார்த்தையும் சொல்லவில்லை – அவனுடைய பாவத்தை சுத்தம் செய்யும் இயேசுவின் இரத்தத்தைப் பற்றியும்! ஒரு வார்த்தையும் சொல்லவில்லை – அவன் இயேசுவின் இரத்த சுத்திகரிப்பின் வல்லமையைபற்றி நாள் முழுவதும் கேள்விப்பட்டிருந்தாலும் – ஞாயிறு காலையில் ஜான் கேஹனின் போதனை மற்றும் ஞாயிறு இரவில் என்னுடைய போதனையில் கேட்டாலும் ஒரே ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. அந்த பாடல்கள் எல்லாம் இயேசுவின் இரத்த சுத்திகரிப்பின் வல்லமையைபற்றியதாக இருந்தாலும் ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்லை. அவன் இயேசுவின் இரத்த சுத்திகரிப்பின் வல்லமையைபற்றி ஒரு வார்த்தையும் கேள்விப்படாததுபோல காணப்பட்டான் – நாள் முழுவதும் கேள்விப்பட்டாலும் ஒரே ஒரு வார்த்தைகூட அவன் நினைக்கவில்லை!

அந்தப் பெண் என்னை கோப முகத்தோடு ஏன் பார்க்க வந்தாள், பாவத்துக்காக இயேசு இரத்தம் சிந்தி பலியானதை ஒரு நிமிடம்கூட நினைக்காமல் அந்தப் பெண் என்னை கோபமுகத்தோடு ஏன் பார்க்க வந்தாள்? அவன் இயேசுவின் இரத்த சுத்திகரிப்பின் வல்லமைபற்றி ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்லையே – அந்த வாலிபன் ஏன் நரக பயத்தோடு வந்தான்? அதற்குப் பதில் நமது முதலாவது பாடத்தில் உள்ளது,

“அவர் அசட்டை பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்… அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற் போனோம்” (ஏசாயா 53:3).

எனது அன்பான நண்பர்களே, இழக்கப்பட்ட பாவிகளால் அவர் புறக்கணிக்கப்பட்டவரும் மற்றும் இயேசுவை ஒதுக்கி தள்ளுவதை நிறுத்த ஒரு அற்புதமான கிருபை அவசியமாக இருக்கிறது. அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் மூலமாக ஒரு இழக்கப்பட்ட பாவி இயேசுவைவிட்டு தம்முடைய முகத்தை மறைத்துக்கொள்ளாமல் நிறுத்த முடியும் – பாவத்தை சுத்திகரிக்கும் அவருடைய இரத்த பலியை உயர்வாக எண்ண வைக்க முடியும்.

இயேசு உன்னை இரட்சிக்க என்ன செய்தார் என்று நமது இரண்டாவது பாடம் உனக்கு சொல்லுகிறது, இப்பொழுது வரையிலும் நீ அவரை புறக்கணித்து மற்றும் இயேசுவின் இரட்சிப்பின் இரத்தத்தை ஒதுக்கி தள்ளினாலும். நீ அவரை புறக்கணித்து மற்றும் இயேசுவின் இரத்தத்தை ஒதுக்கி தள்ளினாலும்,

“நம்முடைய [உன்னுடைய] மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய [உன்னுடைய] அக்கிரமங்களி னிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்… அவருடைய தழும்புகளால் [காயங்களால்] குணமாகிறோம்” (ஏசாயா 53:5).

கடந்த ஞாயிறு இரவிலே நான் பிரசங்கிப்பதற்கு முன்பாக ஸ்பர்ஜன் சபையில் கலந்து கொண்ட இரண்டு இளம் பெண்களின் சாட்சிகளை நான் வாசித்தேன். முதலாவது பெண்ணைப்பற்றி இப்படியாக சொல்லப்பட்டது,

திருவாளர் ஸ்பர்ஜன் அவர்களின் பிரசங்கத்தை கேட்கும் வரையிலும் அவளுடைய இருதயம் கடினமாகவே இருந்தது. அவளுடைய பாவத்துக்குரிய தண்டனைக்காக அவள் மிகவும் பயந்தாள். அவள் சபைக்கு வந்து கொண்டிருந்தாள் ஆனால் அநேக மாதங்களாக மன கசப்போடு காணப்பட்டாள். அதன் பிறகு திருவாளர் ஸ்பர்ஜன் அவர்களின் இயேசுவின் அன்பைபற்றிய பிரசங்கத்தை கேட்டாள் [பிறகு] அவள் இயேசுவை மற்றும் அவருடைய பலியின் இரத்தத்தை நம்பினாள், மற்றும் மகிழ்ந்து களிகூர்ந்தாள். அவள் இயேசுவை மட்டும் நம்பினாள், மற்றும் இரட்சிக்கப்பட்டாள்.

இரண்டாவது பெண்ணைப்பற்றி இப்படியாக சொல்லப்பட்டது,

திருவாளர் ஸ்பர்ஜன் அவர்களின் பிரசங்கத்தை கேட்க இவள் அறிந்து கொள்ள ஆர்வமுள்ளவளாக வந்தாள். அவள் பயத்தினால் சபையை விட்டுப்போனாள். அவள் சொன்னாள், “அவருடைய பிரசங்கத்தை கேட்க நான் ஒருபோதும் போனதில்லை. நான் மறுபடியும் ஒருபோதும் போகமாட்டேன் என்று தீர்மானம் செய்தேன். ஆனால் நான் தூரமாக இருந்தால் பரிதாபமாக உணர்ந்தேன். அவருடைய பிரசங்கத்தை கேட்க வந்ததால் நான் பரிதாபமாக இருந்தேன், மற்றும் நான் தூரமாக இருந்தால் பரிதாபமாக உணர்ந்தேன். இறுதியாக நான் கிறிஸ்துவை நம்பினேன் மற்றும் அவருக்குள் சமாதானத்தை மற்றும் ஆறுதலை கண்டு கொண்டேன். இயேசுவில் அல்லாமல் வேறொன்றிலும் சமாதானத்தை தேடுவதை நான் விட்டுவிடும் வரையிலும் நான் கிறிஸ்துவை காணமுடியவில்லை. நான் முதலில் மற்றெல்லாவற்றிலும் முயற்சி செய்தேன். ஆனால் கிறிஸ்துவை மற்றும் அவருடைய சகல இரட்சிப்பின் இரத்தத்தை கண்டு கொள்ளும் வரையிலும் வேறொன்றும் எனக்கு சமாதானம் கொடுக்கவில்லை.”

மீட்கப்பட்டேன்! இந்த பாடலை என்னோடு சேர்ந்து பாடுங்கள்!

மீட்கப்பட்டேன், மீட்கப்பட்டேன்,
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் மீட்கப்பட்டேன்;
மீட்கப்பட்டேன், மீட்கப்பட்டேன்,
அவருடைய பிள்ளை நான் என்றென்றுமாக அவருடைய பிள்ளை.
(“மீட்கப்பட்டேன்” ப்பென்னி ஜே. குரோஸ்பே 1820-1915).

இதை மறுபடியும் பாடுங்கள்!

மீட்கப்பட்டேன், மீட்கப்பட்டேன்,
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் மீட்கப்பட்டேன்;
மீட்கப்பட்டேன், மீட்கப்பட்டேன்,
அவருடைய பிள்ளை நான் என்றென்றுமாக அவருடைய பிள்ளை.

நம்மை மீட்ட இயேசுவின் இரத்தம் சாதாரண இரத்தம் அல்ல. அப்போஸ்தலர் 20:28ல் கிறிஸ்துவின் இரத்தம் எவ்வளவு மகத்துவமானது என்பதை நாம் கற்றுக்கொண்டோம். பவுல் எபேசு சபையின் மூப்பர்களுக்குச் சொன்னார்,

தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு கண்காணிகளாகயிருங்கள்.”

இதிலே கிங் ஜேம்ஸ் வேதாகம மொழிபெயர்ப்புத் தவறு என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் புதிய சர்வதேச வேதாகம மொழிபெயர்ப்பை கவனியுங்கள்,

தேவன், தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்த்துக் கண்காணிப்புச் செய்யுங்கள்.”

ஒருவேளை நீ இதுவரையிலும் உணர்த்தப்படாமல் இருக்கலாம். அதனால் உனக்கு நான் புதிய அமெரிக்கன் ஸ்டேன்டடு மொழிபெயர்ப்பை தருகிறேன்,

தேவன், தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்த்துக் கண்காணிப்புச் செய்யுங்கள்.”

உன்னை பாவத்திலிருந்து சுத்திகரித்த, இயேசுவினுடைய இரத்தம், சாதாரண இரத்தம் அல்ல என்பதை இங்கே தெளிவாக பார்க்கிறோம். நாம் “தேவனுடைய இரத்தத்தினால்” பாவத்திலிருந்து மீட்கப்பட்டோம். இயேசு கிறிஸ்து திரித்துவத்தின் இரண்டாவது நபராகும் – குமாரனாகிய தேவன். தேவன் மாம்சமானார். தேவன் மனித மாம்சத்திலே வந்தார். அதனால் அந்த இரத்தம் “தேவனுடைய இரத்தம்” என்று அழைக்கப்படுவது பரிபூரணமாக சரியானதாகும். அந்த காரணத்தினால்தான் மகத்தான ஸ்பர்ஜன் சொன்னார், “இயேசுவின் இரத்தத்தினால் கழுவி சுத்தம் செய்ய முடியாத எந்த பாவங்களும் இல்லை.” சார்லஸ் வெஸ்லி இதை நன்றாக சொன்னார்,

அவர் நீக்கப்பட்ட பாவத்தின் வல்லமையை உடைக்கிறார்,
   அவர் சிறை கைதியை சுதந்தரமாக விடுவிக்கிறார்;
அவருடைய இரத்தம் பளப்பளப்பாக சுத்தம் செய்ய முடியும்,
   அவருடைய இரத்தம் எனக்காக தயாராக இருந்தது.
(“O For a Thousand Tongues to Sing” by Charles Wesley, 1707-1788;
to the tune of “O Set Ye Open Unto Me”).

இதை பாடுங்கள்!

அவர் நீக்கப்பட்ட பாவத்தின் வல்லமையை உடைக்கிறார்,
   அவர் சிறை கைதியை சுதந்தரமாக விடுவிக்கிறார்;
அவருடைய இரத்தம் பளப்பளப்பாக சுத்தம் செய்ய முடியும்,
   அவருடைய இரத்தம் எனக்காக தயாராக இருந்தது.

உனக்குப் பாவம் இல்லை என்று நீ நினைக்கிறாயா? சார்லஸ் வெஸ்லி இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக இருந்ததுபோல அவ்வளவு சுத்தமாக நீ இருக்கிறாய் என்று நான் சந்தேகப்படுகிறேன். அவர் ஒரு வாரத்தில் அநேக உணவு வேளையில் உபவாசமாக இருந்தார். நீயும் அப்படியா? அவர் மணிக்கணக்காக முடிவில்லாமல் ஜெபித்தார். நீயும் அப்படியா? அவர் அமெரிக்க இந்தியர்களுக்கு அருட்பணியாளராகவும் சென்றார். நீயும் அப்படியா போனாயா? அவர் தனது இருதயத்தில் ஒரு பாவி என்று ஒத்துக்கொள்ளவில்லை. ஸ்பர்ஜன் சபையில் கலந்து கொண்ட இளம் பெண் சொன்னதுபோல,

நான் முதலில் மற்றெல்லாவற்றிலும் முயற்சி செய்தேன். இயேசுவில் அல்லாமல் வேறொன்றிலும் சமாதானத்தை தேடுவதை நான் விட்டுவிடும் வரையிலும் நான் கிறிஸ்துவை காணமுடியவில்லை. நான் முதலில் மற்றெல்லாவற்றிலும் முயற்சி செய்தேன். ஆனால் [இயேசுவை நம்பும்] வரையிலும் அவருடைய சகல இரட்சிப்பின் இரத்தத்தை கண்டு கொள்ளும் வரையிலும் வேறொன்றும் எனக்குச் சமாதானம் கொடுக்கவில்லை.

இதை நீ செய்யமாட்டாயா? நீ மற்றெல்லாவற்றிலும் முயற்சி செய்திருக்கலாம். ஆனால் அது உனக்குச் சமாதானம் கொடுக்கவில்லை – இல்லையா? இல்லையா? ஆமாம் கொடுக்கவில்லை! உனக்கு ஒருபோதும் சமாதானம் இருக்காது. ஒருபோதும் சமாதானம் இருக்காது! ஒருபோதும் சமாதானம் இருக்காது! நீ எல்லாவற்றையும் நிறுத்தி இயேசுவை மற்றும் அவருடைய சகல இரட்சிப்பின் இரத்தத்தை ஏற்றுக்கொள்ளும் வரையிலும் வேறொன்றும் ஒருபோதும் உனக்கு சமாதானம் கொடுக்காது!

மற்ற இளம் பெண்ணுக்கு இப்படி சொல்லப்பட்டது,

அவள் சபைக்கு வந்து கொண்டிருந்தாள் ஆனால் அநேக மாதங்களாக மன கசப்போடு காணப்பட்டாள். அதன் பிறகு திருவாளர் ஸ்பர்ஜன் அவர்களின் இயேசுவின் அன்பை பற்றிய பிரசங்கத்தை கேட்டாள் [இறுதியாக] அவள் இயேசுவை மற்றும் அவருடைய பலியின் இரத்தத்தை நம்பினாள், மற்றும் மகிழ்ந்து களிகூர்ந்தாள். அவள் இயேசுவை மட்டும் நம்பினாள், மற்றும் இரட்சிக்கப்பட்டாள்.

இயேசுவில் அல்லாமல் வேறொன்றிலும் சமாதானத்தை தேடுவதை நான் விட்டுவிடும் வரையிலும் நான் கிறிஸ்துவை காணமுடியவில்லை. நான் முதலில் மற்றெல்லாவற்றிலும் முயற்சி செய்தேன். ஆனால் (இயேசுவை நம்பும்) மற்றும் அவருடைய சகல இரட்சிப்பின் இரத்தத்தை கண்டு கொள்ளும் வரையிலும்; வேறொன்றும் எனக்கு சமாதானம் கொடுக்கவில்லை.

வேதாகமம் சொல்லுகிறது,

“அவருடைய இரத்தத்தினாலே, பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.”

அதன்பிறகு திருவாளர் ஜான் சாமுவேல் கேஹன் சொன்னார், “அவருடைய இரத்தம் உன்னுடைய பாவத்துக்கு ஈடுசெய்யும். அவருடைய இரக்கத்துக்கு உன்னையே ஒப்புகொடுத்துவிடு. உன்னுடைய பாவங்களிலிருந்து அவருடைய இரத்தத்தினாலே அவர் ஒருவர் மட்டுமே உன்னை மீட்க முடியும். நீ இன்று இயேசுவை நம்ப வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன்.”

“அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்... அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்... நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்… அவருடைய தழும்புகளால் [காயங்களால்] குணமாகிறோம்” (ஏசாயா 53:3, 5).

“இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபிரேயர் 9:22). ஆனால் கர்த்தருக்கு நன்றி “அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (I யோவான் 1:7). ஓ, இந்த இரவிலே, சார்லோடீ எலியாட் (1789-1871) அவர்களின் வார்த்தை உன்னுடைய வார்த்தையாக மாறுவதாக. அவள் சொன்னாள்,

நான் இருக்கிற வண்ணமாக, எந்த வேண்டுதலுமில்லாமல்
   ஆனால் உமது இரத்தம் எனக்காக சிந்தப்பட்டது;
நீர் என்னை விலைக்கு கொண்டீர் நான் வருகிறேன்,
   ஓ தேவாட்டுக்குட்டியே, நான் வருகிறேன்! நான் வருகிறேன்!

பதினைந்து வயதில், ஜான் சாமுவேல் கேஹன் சொன்னார்,

நான் எந்தவிதமான சமாதானத்தையும் காணமுடிய வில்லை... எனது நினைவுகளால் வாதிக்கபட்டதை நான் நிறுத்த முடியவில்லை... நான் போராடி சோர்ந்து போனேன், நான் எல்லாவிதத்திலும் முயற்சி செய்தேன் சோர்ந்து போனேன்... நான் இரட்சிக்கப்படுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன். நான் கிறிஸ்துவை நம்புவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன் ஆனால் என்னால் முடியவில்லை. என்னால் அப்படியே கிறிஸ்துவிடம் வரமுடியவில்லை. நான் ஒரு கிறிஸ்தவனாக தீர்மானம் செய்ய முடியவில்லை, அது எனக்கு மிகவும் நம்பிக்கையற்றதாக உணரசெய்தது... இயேசு எனக்காக தமது ஜீவனை கொடுத்தார். இயேசு எனக்காக சிலுவையில் அறையப்பட சென்றார்... இந்த எண்ணம் என்னை உடைத்தது. நான் எல்லாவற்றையும் போகவிட வேண்டும்... நான் இயேசுவை உடையவனாக இருக்க வேண்டும். அந்த நொடியிலே நான் அவருக்கு ஒப்புக்கொடுத்தேன் மற்றும் விசுவாசத்தினாலே நான் அவரிடம் வந்தேன்... என் இருதயத்தோடு, எளிமையாக கிறிஸ்துவில் இளைப்பாறினேன் அவர் என்னை இரட்சித்தார்! அவருடைய இரத்தத்தினாலே என்னுடைய பாவங்களை கழுவினார்! எனக்கு ஒரு உணர்ச்சி தேவையில்லை. கிறிஸ்து எனக்கு இருந்தார்! இருந்தாலும் கிறிஸ்துவை நம்புவதில் எனது ஆத்துமாவிலிருந்து என் பாவங்கள் உயர்த்தப்பட்டதை உணர்ந்தேன். என் பாவத்திலிருந்து நான் திரும்பினேன், மற்றும் இயேசுவை மட்டும் பார்த்தேன்! இயேசு என்னை இரட்சித்தார்... என் நம்பிக்கை இயேசுவில் இருந்தது, அவர் என்னை மாற்றினார்... அவர் எனக்கு ஜீவனும் சமாதானமும் கொடுத்தார்... கிறிஸ்து எனக்குள் வந்தார், அதனால் நான் அவரை விடமாட்டேன்... அவர் தமது இரத்தத்தினால் என்னுடைய பாவங்களை கழுவினார்.

நான் இருக்கிற வண்ணமாக, எந்த வேண்டுதலுமில்லாமல்
   ஆனால் உமது இரத்தம் எனக்காக சிந்தப்பட்டது;
நீர் என்னை விலைக்கு கொண்டீர் நான் வருகிறேன்,
   ஓ தேவாட்டுக்குட்டியே, நான் வருகிறேன்! நான் வருகிறேன்!

நான் இருக்கிற வண்ணமாக, மற்றும் காத்திருக்காமல்
   என் ஆத்துமாவில் ஒழிவற்ற ஒரு மாசுமில்லாமல்,
ஒவ்வொரு கறையையும் உமது இரத்தம் கழுவ முடியும்,
   ஓ தேவாட்டுக்குட்டியே, நான் வருகிறேன்! நான் வருகிறேன்!

நான் இருக்கிற வண்ணமாக, நீர் என்னை ஏற்றுக்கொள்ளுவீர்,
   வரவேற்று, மன்னித்து, சுத்திகரித்து, விடுவிப்பீர்,
ஏன்என்றால் உமது வாக்குத்தத்தை நான் விசுவாசிக்கிறேன்,
   ஓ தேவாட்டுக்குட்டியே, நான் வருகிறேன்! நான் வருகிறேன்!

ஒவ்வொரு கறையையும் உமது இரத்தம் கழுவ முடியும்,
   ஓ தேவாட்டுக்குட்டியே, நான் வருகிறேன்! நான் வருகிறேன்!

நீ இயேசுவிடம் வந்து மற்றும் அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே உன்னுடைய பாவங்களெல்லாம் சுத்திகரித்து கொள்ளுவாயா? நீ இயேசுவிடம் வந்தால் நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க காத்திருக்கிறோம். மற்றவர்கள் இரவு உணவுக்கு மேல்மாடிக்குச் செல்லும்பொழுது, நீங்கள் தயவுசெய்து வந்து முதல் இரண்டு வரிசை இருக்கைகளில் அமரவும். ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“Saved by the Blood of the Crucified One” (by S. J. Henderson, 1902).