இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
இரத்தத்தோடு அல்லது இரத்தமில்லாமல்WITH OR WITHOUT BLOOD ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் ஜனவரி 21, 2018 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி “இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபிரெயர் 9:22). |
அதிகமான ஸ்பர்ஜன் அவர்களின் மூலமாக மாற்றப்பட்டவர்கள் உடனடியாக மாற்றப்பட்டவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் கிறிஸ்துவை மட்டும் நம்புவதற்கு மற்றும் சந்தோஷம் மற்றும் நிச்சயத்தை பெற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கு சில வாரங்கள் அல்லது மாதங்கள் வேதனை நிறைந்த உணர்த்துதல் மற்றும் துக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஸ்பர்ஜன் அவர்களின் பிரசங்கத்தின் மூலமாக மாற்றப்பட்ட இரண்டு இளம் பெண்களின் சாட்சிகள் இங்கே கொடுக்கப்படுகின்றன. மேரி எட்வர்டுஸ், திரு. ஸ்பர்ஜன் அவர்களின் பிரசங்கத்தைக் கேட்கும் வரையிலும் அவளுடைய இருதயம் கடினமாகவே இருந்தது. அவளுடைய பாவத்துக்குரிய தண்டனைக்காக அவள் மிகவும் பயந்தாள். அவள் சபைக்கு வந்து கொண்டிருந்தாள் ஆனால் அநேக மாதங்களாக மனக்கசப்போடு காணப்பட்டாள். அதன் பிறகு திருவாளர் ஸ்பர்ஜன் அவர்களின் இயேசுவின் அன்பை பற்றிய பிரசங்கத்தைக் கேட்டாள். அவள் இயேசுவை மற்றும் அவருடைய பலியின் இரத்தத்தை நம்பினாள், மற்றும் மகிழ்ந்து களிகூர்ந்தாள். அவள் இயேசுவை மட்டும் நம்பினாள், மற்றும் இரட்சிக்கப்பட்டாள். அவள் இன்னும் இயேசுவை மட்டும் நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறாள். மேரி ஜோன்ஸ், திருவாளர் ஸ்பர்ஜன் அவர்களின் பிரசங்கத்தைக் கேட்டு அறிந்து கொள்ள ஆர்வமுள்ளவளாக இவள் வந்தாள். அவள் பயத்தினால் சபையை விட்டுப்போனாள். அவள் சொன்னாள், “அவருடைய பிரசங்கத்தைக் கேட்க நான் ஒருபோதும் போனதில்லை. நான் மறுபடியும் ஒருபோதும் போகமாட்டேன் என்று தீர்மானம் செய்தேன். ஆனால் நான் தூரமாக இருந்தால் பரிதாபமாக உணர்ந்தேன். அவருடைய பிரசங்கத்தைக் கேட்க வந்ததால் நான் பரிதாபமாக இருந்தேன், மற்றும் நான் தூரமாக இருந்தால் பரிதாபமாக உணர்ந்தேன். இறுதியாக நான் கிறிஸ்துவை நம்பினேன் மற்றும் அவருக்குள் சமாதானத்தை மற்றும் ஆறுதலை கண்டு கொண்டேன். இயேசுவில் அல்லாமல் வேறொன்றிலும் சமாதானத்தைத் தேடுவதை நான் விட்டுவிடும் வரையிலும் நான் கிறிஸ்துவை காணமுடியவில்லை. நான் முதலில் மற்றெல்லாவற்றிலும் முயற்சி செய்தேன். ஆனால் கிறிஸ்துவை மற்றும் அவருடைய சகல இரட்சிப்பின் இரத்தத்தில் அல்லாமல் வேறொன்றும் எனக்குச் சமாதானம் கொடுக்கவில்லை.” நான் பிரசங்கம் செய்ய வருவதற்கு முன்பாக திருவாளர் கிரிபித் வந்து ஒரு கவியைப் பாடுவார் அது ஸ்பர்ஜன் சபையில் அநேக இளம் மக்கள் இயேசுவை நம்ப உதவியாக உபயோகித்த பாடலாகும். “இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபிரெயர் 9:22). மகத்தான ஸ்பர்ஜன் அவர்கள் “பிரசங்கிகளின் இளவரசன்” என்று அடிக்கடி அழைக்கப்பட்டார். மெய்யாகவே, சுவிசேஷத்தை பிரசங்கிப்பதில் அவரைவிட பெரிய பிரசங்கியார் இருந்ததில்லை. அவருடைய ஊழியம் முழுவதிலும் எப்பொழுதும் அவரது கருபொருள் இயேசு சிலுவையில் பலியானதின் மூலமாக பாவிகளுக்கு இரட்சிப்பு என்பதாகும். மற்றும் அந்தக் கருபொருள் பாவமன்னிப்புக்காக சிலுவையிலே சிந்தின, இரட்சகரின் இரத்தம் பற்றிய அவரது பிரசங்கத்தின்போது எப்பொழுதும் வலியுறுத்தப்படுவதாகும். இவ்வாறாக ஸ்பர்ஜன் அவர்கள் நமது பாடத்தை அடிக்கடி பிரசங்கித்து மற்றும் குறிப்பிட்டு இருக்கிறார். “இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபிரெயர் 9:22). ஆனால் “மன்னிப்பு” என்ற வார்த்தை நவீன மக்கள் அநேகருக்கு அறியபடாத ஒரு வார்த்தையாகும். “மன்னிப்பு” என்ற வார்த்தையின் அர்த்தத்தை நன்றாக புரிந்து கொள்ள கிரேக்க பதத்தின் மொழிபெயர்பை நாம் பார்க்க வேண்டியது அவசியமாகும். ஸ்டார்ங் ஒத்த வாக்கிய அகராதி சொல்லுகிறது அதாவது அந்த கிரேக்க வார்த்தை “அப்பிசிஸ்” என்பதாகும். இதன்பொருள் “சுதந்திரம்”, “மன்னிப்பு,” “விடுதலை,” “சுயாதீனம்,” மற்றும் “பொறுத்தல்” என்பதாகும். நமது பாடம் இந்த வார்த்தைகளை சேர்ப்பதால் இன்னும் தெளிவாக காணப்படலாம், “இரத்தம் சிந்துதல் இல்லாமல் சுதந்திரம் இல்லை, மன்னிப்பு இல்லை, விடுதலை இல்லை, சுயாதீனம் இல்லை, பொறுத்தல் இல்லை.” ஸ்பர்ஜன் இரத்தத்தின் வார்த்தைகளை அடிக்கடி குறிப்பிட்டதில் ஆச்சரியமில்லை. ஒரு பிரபலமான போதனையில் ஸ்பர்ஜன் இதை சொன்னார், “சில பிரசங்கிகள் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தை பற்றி பிரசங்கிப்பது இல்லை, மற்றும் அவர்களை குறித்து ஒரு காரியத்தை உங்களுக்கு சொல்லுகிறேன்: ஒருபோதும் அவர்கள் பேசுவதைக் கேட்கப் போக வேண்டாம்! ஒருபோதும் அவர்களை கவனிக்க வேண்டாம்! இரத்தம் இல்லாத ஒரு ஊழியம் அதற்குள் ஜீவனில்லாததாகும், மற்றும் ஒரு மரித்த ஊழியமாகும் அது ஒருவருக்கும் நன்மை இல்லாததாகும்.” நம்முடைய பாடத்தின் மூலமாக இரத்தத்தின் முக்கியத்துவம் தெளிவாக்கப் படுகிறது. “இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபிரெயர் 9:22). I. முதலாவது, கிறிஸ்து இரத்தம் சிந்தவில்லையானால் உனக்கு என்ன நடக்கும் என்பதை கவனிப்போம். கிறிஸ்து இரத்தம் சிந்தவில்லையானால் உன்னுடைய பாவத்திலிருந்து உனக்குச் சுதந்திரம் இல்லை. கிறிஸ்து இரத்தம் சிந்தவில்லையானால் உன்னுடைய பாவத்துக்கு மன்னிப்பு இல்லை. கிறிஸ்து இரத்தம் சிந்தவில்லையானால் உன்னுடைய பாவங்களிலிருந்து உனக்கு விடுதலையில்லை. கிறிஸ்து இரத்தம் சிந்தவில்லையானால் உன்னுடைய பாவங்களிலிருந்து சுயாதீனமில்லை. கிறிஸ்து இரத்தம் சிந்தவில்லையானால் உன்னில் பொறுத்தல் இல்லை. உன்னுடைய மரணத்தில் நரக அக்கினி மட்டுமே உனக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஸ்காட்லாந்தில் கொம்புலாங்கு பெரிய எழுப்புதலில் நரகம் பிரசங்கிக்க பட்டது. “அந்தப் பிரசங்கிகள் கொம்புலாங்கில் எழுத்தின் படியான நரகத்தை, அதனுடைய எல்லாவிதமான வாதைகளோடும்கூட விசுவாசித்தார்கள். அவர்களும் தங்களை கேட்பவர்களுக்கு நரகத்தை பற்றி எச்சரிக்கை செய்யக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டார்கள். அவர்கள் அநேகரால் புரிந்துகொள்ளப்பட்டார்கள். ஒரு இருபத்தி ஒன்று வயதுள்ள மனிதன் நினைத்தான் ‘என்னிலிருந்து ஒரு தூரத்தில் நான் நரகத்தை பார்த்தேன், இழக்கப்பட்ட ஆத்துமாக்கள் ஒரு குழியில் எரிந்து கொண்டிருந்தார்கள், மற்றும் அந்தப் பிசாசுகள் அவர்கள் மத்தியில் சென்று கொண்டிருந்தன.’ ஒரு பதினைந்து வயது சிறுவன், அவன் மயங்கிப் போவதற்கு முன்பாக, சொன்னான், ‘நரகத்தின் அக்கினி பிழம்பு என்மீது வருவதை நான் பார்த்தேன்.’ ஒரு இளம் பெண் கந்தகத்தின் வாசனையால் கஷ்டப்பட்டு மூச்சுவிட்டுக்கொண்டு இருந்தாள், ‘அக்கினி கடலின் வாசனை மற்றும் கந்தகம் அந்த அடியில்லாத குழியில் இருந்தது.’” (The Cambuslang Revival, The Banner of Truth, 1971, p. 154). எப்படியிருந்தாலும், இந்த மனித அனுபவங்களை வைத்து, நரகத்தை பற்றின நம்பிக்கை எனக்குத் தெரியாது. வேதாகமத்தில் தேவன் இதை போதித்து இருப்பதால் நான் நரகத்தை நம்புகிறேன். வேதாகமத்தில் மற்ற எல்லாரையும்விட அதிகமாக இயேசு நரகத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார். அவருடைய நாட்களில் இருந்த அவிசுவாசிகளுக்கு அவர் சொன்னார், “நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?” (மத்தேயு 23:33). அவிசுவாசிகள் நரகத்துக்குப் போவார்கள் என்பதை பற்றி கிறிஸ்து எச்சரித்தார் “அவியாத அக்கினியுள்ள நரகத்திலே” (மாற்கு 9:43). கிறிஸ்து நரகத்திலே அழுத ஒரு பணக்காரனை பற்றி சொன்னார், “இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே” (லூக்கா 16:24). ஸ்பர்ஜன் சொன்னார், நரகத்திலே ஒரு மணி நேரம் செலவிடுவது எவ்வளவு பயங்கரமாக இருக்கும்! ஓ, உன்னை தேடிவந்த இரட்சகரை நீ எப்படி விட்டுவிட விரும்புவாய்! ஆனால் ஐயோ, ஒரு மணி நேரம் என்ற காரியம் நரகத்தில் இல்லை. ஒருதரம் இழக்கப்பட்டால், நீ என்றென்றுமாக இழக்கப்படுவாய்! மறுபடியும் ஸ்பர்ஜன் சொன்னார், நீ ஒரு தனி நூலிலே நரகத்தின் வாய்க்கு மேலாக தொங்கி கொண்டிருக்கிறாய்: அந்த நூல் அறுந்து கொண்டிருக்கிறது. மூச்சுவிடும் நேரம் மட்டுமே, ஒருதரம் உனது இருதயம் நிற்பது மட்டுமே, பிறகு நீ நித்திய உலகத்தில் இருப்பாய், தேவன் இல்லாமல், நம்பிக்கை இல்லாமல், மன்னிப்பு இல்லாமல் இருப்பாய். ஓ, நீ அதை சந்திக்க முடியுமா? நீ நரகத்தில் இருக்கும்பொழுது நீ உணர்ந்து கொள்ளுவாய், அது, மிகவும் காலதாமதமாகும். “இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபிரெயர் 9:22). கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தினால் உன்னுடைய பாவங்கள் கழுவப்படவில்லையானால் அது உனக்கு நடக்கும்! அதன்பிறகும் கூட, நியாயத்தீர்ப்பிலே உன்னுடைய பாவங்கள் உன்னை சந்திக்கும் மற்றும் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கும். உனது பாவங்கள் இரகசியமானவைகளாக இருந்தன என்று நீ நினைத்தாய். நீ ஒன்றை மறந்து விட்டாய் “ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்” (பிரசங்கி 12:14). இந்த இரவிலே இங்கிருக்கும் உங்களில் சிலர் தங்கள் பாவங்களை மறைத்து விடமுடியும் என்று நினைக்கலாம், அதைபற்றி ஒருவரும் அறியவில்லை என்று நினைக்கலாம். அவர்கள் அதை மறந்துவிட்டார்கள் “கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது” (நீதிமொழிகள் 15:3). மற்றும் அநேக மக்கள் பாவத்தினால் விஷமாக்கப்பட்டு அவர்கள் அதை தொடர்ந்து நினைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் இரகசிய பாவத்தால் உண்மையாகவே சரிரபிரகாரமாக வியாதியாக இருக்கிறார்கள். தாவீதைப்போல அவர்கள் உணர்கிறார்கள் “என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது” (சங்கீதம் 51:3). அநேகர் இருதய வியாதியில், மற்றும் பல நோய்கள், அறிக்கையிடப்படாத மற்றும் மன்னிக்கப்படாத பாவத்தின் வாதையிலிருந்து வருகின்றன என்று நான் நினைக்கிறேன். பெரிய பூரிட்டன் அறிவாளர் ஜான் ஓவன் சொன்னார், “நாம் விசுவாசத்தின் மூலமாக கிறிஸ்துவின் இரத்தத்தின் செயல் விளைவையும் மற்றும் சுத்திகரிக்கும் சக்தியையும் பெற்றுக்கொள்ளுகிறோம்.” அதையல்லாமல் நீ ஒருபோதும் மெய்யான சமாதானத்தை பெற்றுக்கொள்ள முடியாது, காரணம் “இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபிரெயர் 9:22). அதன் பிறகு இருதயத்தின் பாவங்கள் இருக்கின்றன. உனது இருதயத்தின் பாவங்களை ஒருவரும் பார்க்கவில்லை என்று நீ நினைக்கலாம். ஆனால் நீ நினைப்பது தவறு. வேதாகமம் சொல்லுகிறது, “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது... கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும்...” (எரேமியா 17:9, 10). உன்னுடைய இருதயத்தின் பாவங்களை ஒருவரும் அறியாமல் இருக்கலாம், ஆனால் தேவன் உன்னுடைய இருதயத்தை ஆராய்கிறவர், அங்கே மறைக்கப்பட்டுள்ள பாவங்களை தேவன் நியாயந்தீர்ப்பார், ஏனென்றால் “இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபிரெயர் 9:22). உன்னுடைய பாவத்திலிருந்து சுதந்திரம் இல்லை. உன்னுடைய பாவத்திலிருந்து விடுதலையில்லை. உன்னுடைய பாவத்திலிருந்து சுயாதீனமில்லை. உன்னுடைய பாவத்துக்கு மன்னிப்பு இல்லை. அதிலிருந்து ஒருபோதும் சுதந்திரம் இல்லை. அதிலிருந்து ஒருபோதும் விடுதலை இல்லை. அதிலிருந்து ஒருபோதும் சுயாதீனம் இல்லை. அதிலிருந்து ஒருபோதும் மன்னிப்பு இல்லை. எவ்வளவு பெரிய இடர்பாட்டு நிலையில் நீ இருக்கிறாய்! “இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபிரெயர் 9:22). ஆனால் கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம் வேதாகமத்தில் இன்னும் அதிகமாக இருக்கிறது. II. இரண்டாவதாக, கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தை நீ பெற்றிருந்தால் உனக்கு என்ன நடக்கும் என்பதை கவனிப்போம். கிறிஸ்துவின் இரத்தம் நமது பாடத்தில் முறையை மாற்றுகிறது. கிறிஸ்துவின் இரத்தத்தினால் உன்னுடைய பாவங்கள் என்றென்றுமாக அழிக்கப்படுகிறது! கிறிஸ்துவின் இரத்தத்தினால் உன்னுடைய பாவத்துக்கு மன்னிப்பு உண்டு. கிறிஸ்துவின் இரத்தத்தினால் உன்னுடைய பாவங்களிலிருந்து விடுதலை உண்டு. கிறிஸ்துவின் இரத்தத்தினால் உனக்கு சுதந்திரம் உண்டு. கிறிஸ்துவின் இரத்தத்தினால் உனக்குப் பாவ பரிகாரம் உண்டு. கிறிஸ்துவின் இரத்துத்தினால் உனக்குப் பரலோக மகிமை காத்திருக்கிறது! வெளிப்படுத்தல் புத்தகத்தில் பரலோகத்தின் ஒரு காட்சி நமக்குத் தரப்படுகிறது அங்கே இயேசுவுக்கு கிறிஸ்தவர்கள் பாடல் பாடிக்கொண்டிருக்கிறார்கள், “தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டீர்” (வெளிப்படுத்தல் 5:9). இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பட்ட நாம் அனைவரும் அவருடைய இரத்தத்தினால் உண்டான இரட்சிப்பைப்பற்றி நித்தியக்காலம் முழுவதும் பாடிக்கொண்டு இருப்போம்! பென்னி குரோஸ்பே தன்னுடைய அற்புதமான பாடலில் இவ்விதமாக அமைக்கிறார், மீட்கப்பட்டேன், இதை அறிவிக்க எவ்வளவாக ஆசைப்படுகிறேன்! இந்தப் பாடலை என்னோடு சேர்ந்து பாடுங்கள்! மீட்கப்பட்டேன், மீட்கப்பட்டேன், நம்மை மீட்ட இரத்தம் சாதாரண இரத்தம் அல்ல. அப்போஸ்தலர் 20:28ல் கிறிஸ்துவின் இரத்தம் எவ்வளவு மகத்துவமானது என்பதை நாம் கற்றுக்கொண்டோம். இதன் விளக்கத்தை நான் புதிய சர்வதேச மொழிபெயர்ப்பிலிருந்து தெளிவாக தருகிறேன்: “தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குக் கண்காணிகளாக” (அப்போஸ்தலர் 20:28). நாம் “தேவனுடைய இரத்தத்தினால்” விலைக்கிரயமாக கொள்ளப்பட்டோம் என்பதை இங்கே தெளிவாக பார்க்கிறோம். மாம்சமாக வந்த தேவன் கிறிஸ்துவாகும், “தேவன் அவரே மெய்யாக தேவன்” – தேவன் மனித மாம்சத்தில் இருந்தார். அதனால் அந்த இரத்தம் அழைக்கப்படுவது பரிபூரணமாக சரியானதாகும், “தேவனுடைய இரத்தம்”. அந்தக் காரணத்தினால்தான் மகத்தான ஸ்பர்ஜன் சொன்னார், “ஒரு இரத்தம் இல்லாத சுவிசேஷம்... பிசாசுடைய சுவிசேஷமாகும்.” “கல்வாரியில் செலுத்தப்பட்ட இரத்த பலி ஒன்றுதான் பாவிகளினுடைய ஒரே நம்பிக்கை.” நவீன பிரசங்கிகளை விட்டு விலகி ஜாக்கிரதையாக இருங்கள் அவர்கள் சொல்லுவது “இரத்தம்” என்பது மற்றொரு வார்த்தையில் இயேசுவின் மரணம் மட்டுமே – ஜாக்கிரதை! ஒரு இரத்தம் இல்லாத சுவிசேஷம் பிசாசுடைய சுவிசேஷமாகும்! மறுபடிமாக, மகத்தான ஸ்பர்ஜன் இதை சொன்னார், “சில பாவங்கள் நம்மால் பேச முடியாததாக இருக்கலாம், ஆனால் இயேசுவின் இரத்தத்தினால் கழுவி சுத்தம் செய்ய முடியாத எந்தப் பாவங்களும் இல்லை.” சார்லஸ் வெஸ்லி இதை நன்றாக சொன்னார், அவர் நீக்கப்பட்ட பாவத்தின் வல்லமையை உடைக்கிறார், இதை பாடுங்கள்! அவர் நீக்கப்பட்ட பாவத்தின் வல்லமையை உடைக்கிறார், “மீட்கப்பட்டேன், இதை அறிவிக்க எவ்வளவாக ஆசைப்படுகிறேன்!” இதை பாடுங்கள்! மீட்கப்பட்டேன், இதை அறிவிக்க எவ்வளவாக ஆசைப்படுகிறேன்! “இரத்தத்தில் வல்லமை உண்டு”! அதை பாடுங்கள்! வல்லமை உண்டு, வல்லமை, அற்புதம் செய்யும் வல்லமை இதை மறுபடியுமாக பாடுங்கள்! வல்லமை உண்டு, வல்லமை, அற்புதம் செய்யும் வல்லமை நான் சென் பிரான்ஸிஸ்கோவின் வடக்கு செமினெரியில் இருந்தபொழுது நான் அநேக வேத ஆராய்ச்சிகளில் ஹிப்பிகளோடு சேர்ந்து கலந்து கொண்டேன். அது 1970ன் இயேசுவின் இயக்கத்தில் இருந்தது. அந்த இளம் மக்களில் அநேகர் LSD போன்ற மனதை மயக்கும் போதை பொருள்களை போட்டுக்கொண்டார்கள். அவர்களில் சிலர் அந்தப் பாவத்தினால் பிசாசு பிடித்தவர்களாக மாறினார்கள். அவர்கள் மிருகங்கள் – காடனிக் பிசாசினால் பிடிக்கப்பட்டவர்கள் போல இருந்தார்கள். ஒரு ஹிப்பி இளம் பெண்ணிடமிருந்து பிசாசை துரத்தும்படியாக சில சகோதரர்கள் முயற்சி செய்ததை பார்த்தது எனது நினைவில் இருக்கிறது. அவர்கள் அந்தப் பிசாசை வெளியே வரும்படி கட்டளை கொடுத்தார்கள், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. அதன்பிறகு ஒரு சகோதரன் பாட ஆரம்பித்தார், வல்லமை உண்டு, வல்லமை, அற்புதம் செய்யும் வல்லமை அந்தப் பெண் தன்னுடைய நுரையீரல்களின் உச்சத்திலிருந்து கத்தினாள். அவர் மறுபடியுமாக அதை பாடினார், வல்லமை உண்டு, வல்லமை, அற்புதம் செய்யும் வல்லமை அவள் மறுபடியுமாக கத்தினாள் அதன்பிறகு பிசாசுகள் அவள் வாயிலிருந்து வெளியே வந்தன, இயேசு இந்த உலகத்தில் இருந்தபொழுது செய்தது போலவே அவர்கள் செய்தார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தப் பெண் விடுதலையாக்கப்பட்டாள்! அவள் தரையின்மீது உட்கார்ந்து ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தாள். அதன்பிறகு நீண்ட காலமாக நான் அவளை அறிந்திருந்தேன். அவள் நல்லவளாக மாறினாள், உறுதியான கிறிஸ்தவளாக இருந்தாள். சீன பாப்டிஸ்டு சபையில் என்னுடைய போதகர் டாக்டர் லின் அவர்களிடம் நான் அவளை பற்றி சொன்னேன். அவர் சொன்னார், “ஆமாம், பாப். ஒரு பாப்டிஸ்டு பிரசங்கி பிசாசுகளை கிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமையினால் ஓட்டவில்லையானால் அவருடைய பிரசங்கத்தை கேட்க சீனாவில் ஒருவரும் வர மாட்டார்கள்!” கிறிஸ்துவின் இரத்தத்தின் அற்புதமான வல்லமையினால் பிசாசுகளை துரத்தினதை ஒரு நாடக காட்சியை போல நான் பார்த்திருக்கிறேன் அதை நான் நிச்சயமாக அறிந்திருக்கிறேன்! ஸ்பர்ஜன் அவர்களே இதில் மகிழ்ச்சியடைந்தார்கள் என்று நான் நிச்சயத்திருக்கிறேன்! இயேசுவின் இரத்தம் LSD என்கிற, ஹெராயின், அல்லது சாத்தானால் இளம் மக்களை அழிக்க பயன்படுத்தப்படும் மற்ற எந்தப் போதை பொருளைவிட வல்லமை உள்ளது! இயேசுவின் இரத்தம் உன்னுடைய இருதயத்தின் அல்லது வாழ்க்கையின் எந்த பாவமாக இருந்தாலும் அதை சுத்தகரிக்க முடியும்! நான் “The Free Grace Broadcaster”ன் ஒரு பிரதியை பார்த்துக் கொண்டிருந்தேன். அது கடந்த கால பிரசங்கியர்களின் அநேக பெரிய போதனைகள் கால அளவில் மறுமலர்ச்சி செய்யப்பட்ட ஒன்றாகும் – ஜான் கில், ஜே. சி. ரையில், ஆக்டாவியஸ் வின்ஸ்சுலோ, மற்றும் ஸ்பர்ஜன் போன்றவர்களின் போதனைகள். நான் பார்த்துக்கொண்டிருந்த பிரதியில் அந்த மனிதர்களின் போதனைகளில் மீட்பில், ஈடு செய்வதில், கிறிஸ்துவின் இரத்த பலியின் வல்லமையை கண்டேன். அந்த பெரிய பிரபலமான பிரசங்கிகளில் ஒருவர் இதை சொன்னார், கிறிஸ்துவின் இரத்தத்தில் விலையேறப்பெற்ற மிக முக்கியமான சாதனம் இருக்கிறது. அது தொடப்படாத தமணிகளில் ஓடுகிறது, பாவ நச்சுவினால் கறைப்படுத்தப்படாத... பரிசுத்தமில்லாத, பாவம் நிறைந்த மனிதருக்காக ஒரு பாவமில்லாத பிராயசித்த பலியை ஒரு பரிசுத்தமான இரட்சகர் செலுத்தினார். அதனால் அவருடைய இரத்தத்தின் விலையேறப்பெற்ற தன்மை விளங்குகிறது. மற்றும் இப்பொழுது நாம் இந்த சுத்திகரிப்பை, இந்தப் பாவ மன்னிப்பை, இதுவரையிலும் மாற்றப்படாதவருக்காக உபயோகப்படுத்துவோம். ஒரு முகமதியர் ஒருபோதும் தனது பாவங்களிலிருந்து மன்னிப்பை பெறமாட்டார். அவர் அப்படி சொல்லவில்லை, அவர்கள் மன்னிக்கப்படுவது எப்படி என்று ஒருபோதும் அவனுக்குக் குரான் சொல்லவில்லை. போதுமான அளவுக்கு நல்லவனாக இருக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் ஒரு மனிதனை சந்தியுங்கள். அவன் சொல்லுகிறான், “என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.” ஒரு நாஸ்திகவாதி அல்லது காணாப்பொருளை அறியமுடியாது என்று சொல்லுபவரை சந்தியுங்கள். அவர்கள் தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று ஒருபோதும் அறியமாட்டார்கள். இந்த மாலையில் ஒரு இழக்கப்பட்ட மனிதன், அல்லது மனுஷி, அல்லது இளம் வாலிபர் இங்கே இருக்கிறார்களா? இழக்கப்பட்ட மனிதனே! நீ இழக்கப்பட்டாய் என்று உணருகிறாயா? அப்படி உணர்ந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பாவங்களிலிருந்து மன்னிப்பு, சுத்திகரிப்பு இருக்கிறது – இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக இருக்கிறது. ஓ பாவியே, பார்! உனக்காக இயேசு கெத்சமேனே தோட்டத்தில் இரத்த வேர்வை சிந்தினதை நீ பார்க்க முடிகிறதா? இயேசு சிலுவையில் தொங்குவதை உன்னால் பார்க்க முடிகிறதா? அவர் உனக்காக அங்கே ஆணிகளால் அடிக்கப்பட்டார். ஓ, இந்த மாலையிலே உனக்காக நான் சிலுவையிலே அறையப்பட முடியுமானால், நீங்கள் என்ன செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும்: நீங்கள் கீழேவிழுந்து என் பாதத்தை முத்தமிடுவீர்கள், நான் உனக்காக மரித்தேன் என்ற காரணத்துக்காக கதறி அழுவீர்கள். ஆனால், இழக்கப்பட்ட பாவியே, இயேசு உனக்காக மரித்தார் – உனக்காக! அவர் உனக்காக இரத்தம் சிந்தினபடியினால், நீ அவரிடம் வந்தால் மற்றும் அவரை நம்பினால் நீ இழக்கப்பட்டுபோக முடியாது. அப்படியானால், நீ, பாவியா? நீ கிறிஸ்துவை முழுமையாக நம்பாத காரணத்தினால் ஒரு பாவியென்று நீ உணர்த்தப்பட்டாயா? உனக்கு பிரசங்கிக்க எனக்கு அதிகாரம் உண்டு. இயேசுவை நம்பு மற்றும் நீ இழக்கப்படமாட்டாய்! இயேசு உனக்காக அதாவது மரித்தத்தற்காக அல்ல, இயேசுகிறிஸ்து அவரையே நம்பு. ஆனால் இயேசுகிறிஸ்து அவரையே நம்பு. நீ ஒரு பாவி இல்லையென்று சொல்லுகிறாயா? மன்னிக்கப்பட வேண்டிய பாவங்கள் உனக்கு எதுவும் இல்லையென்று சொல்லுகிறாயா? அப்படியானால் உனக்கு பிரசங்கிக்க என்னிடம் எந்த கிறிஸ்துவும் இல்லை. அவர் நல்ல மக்களை இரட்சிக்க வரவில்லை; பாவம் நிறைந்தவர்களை இரட்சிக்க அவர் வந்தார். நீ பாவத்தால் நிறைந்திருக்கிறாயா? உனது பாவங்களை உணருகிறாயா? நீ இழக்கப்பட்டவரா? அது உனக்கு தெரியுமா? நீ பாவமுள்ளவரா? நீ அதை ஒத்துக் கொள்ளுகிறாயா? பாவியே! இந்த மாலையிலே இயேசு இங்கே இருந்தால், அவர் தம்முடைய இரத்தம் சிந்தும் கரங்களை உன்னிடம் நீட்டி, மற்றும் சொல்லுவார், “பாவியே, நான் உனக்காக மரித்தேன். நீ என்னை நம்புவாயா?” அவர் ஆள் தத்துவமாக இங்கே இல்லை, ஆனால் இதை உனக்கு சொல்லுவதற்காக என்னை அனுப்பினார். நீ அவரை விசுவாசிப்பாயா? “ஓ!” ஆனால் நீ சொல்லுகிறாய், “நான் ஒரு கெட்ட பாவி!” “ஓ!” இயேசு சொல்லுகிறார், “அந்தக் காரணத்திற்காகதான் நான் உனக்காக மரித்தேன், ஏனென்றால் நீ ஒரு பாவியாக இருக்கிறாய்.” “ஆனால்,” நீ சொல்லுகிறாய், “நான் காரியங்களை செய்து இருக்கிறேன் மற்றும் காரியங்களை நினைத்தேன் அதற்காக வெட்கப்படுகிறேன்.” இயேசு சொல்லுகிறார், “அவை எல்லாம் மன்னிக்கப்பட்டது, அவை எல்லாம் என்னுடைய கைகளிலும் கால்களிலும் மற்றும் விலாவிலும் இருந்து ஓடும் இரத்தத்தினால் கழுவப்பட்டது. என்னில் மட்டும் நம்பிக்கையாக இரு; அதைதான் நான் கேட்கிறேன்.” இயேசுகிறிஸ்து அவரையே நம்பு. ஆனால் யாரோ ஒருவர் சொல்லுகிறார், “எனக்கு இரட்சகர் வேண்டுமென்று விருப்பமில்லை.” அதன்பிறகு இந்த வார்த்தைகளை தவிர நான் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை – “கோபாக்கினை வருகிறது! கோபாக்கினை வருகிறது!” உனக்கு நியாயத் தீர்ப்பு வருகிறது! ஆனால் நீ குற்றவாளியென்று உணருகிறாயா? நீ உன்னுடைய பாவத்தை வெறுக்கிறாயா, மற்றும் அவைகளிலிருந்து திரும்பி கிறிஸ்துவிடம் வருகிறாயா? அதன்பிறகு கிறிஸ்து உனக்காக மரித்தார் என்று நான் சொல்ல முடியும். கிறிஸ்துவில் விசுவாசமாக இரு! அவரை நம்பு! இயேசுகிறிஸ்து அவரையே நம்பு. ஸ்பர்ஜன் ஒரு குறிப்பிட்ட நகரத்துக்குப் பிரசங்கம் செய்ய சென்றுக்கொண்டிருந்தபொழுது ஒரு இளம் மனிதர் ஸ்பர்ஜனுக்கு ஒரு கடிதம் எழுதினான். அவன் சொன்னான், “ஐயா, நீங்கள் வரும்பொழுது, தயவுசெய்து என்னுடைய காரியத்துக்கு பொருத்தமான ஒரு போதனையை பிரசங்கம் செய்யுங்கள். இந்த பூமியிலேயே மிக மிக பொல்லாதவர்கள் என்று நாம் நினைக்க வேண்டும் என்று நான் கேள்விப்பட்டேன், இல்லையானால் நாம் இரட்சிக்கப்பட முடியாது. நான் பொல்லாதவன் என்று நான் நினைக்க முயற்சி செய்தேன், ஆனால் என்னால் முடியவில்லை. நான் இரட்சிக்கப்பட வேண்டுமென்று விரும்பினேன், ஆனால் போதுமான அளவுக்கு நான் எப்படி மனஸ்தாபப்பட வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.” ஸ்பர்ஜன் சொன்னார், “நான் அவனை பார்க்க முடிந்தால் அங்கே நான் போய் பிரசங்கிக்கும்பொழுது, நான் அவனிடத்தில் சொல்லுவேன், இந்த உலகத்திலேயே மிக மிக பொல்லாத நபர் என்று உன்னை நீயே நினைத்துக்கொள்ளத் தேவையில்லை தேவன் அதை எதிர்பார்க்கவில்லை, ஏனென்றால் அதிகமான மக்கள் உன்னைவிட பொல்லாதவர்கள் இருக்கிறார்கள். சில மக்கள் மற்றவர்கள் பாவம் நிறைந்தவர்களாக இருப்பது போல இல்லை. தேவன் எதிர்பார்ப்பது இதுதான்: ஒரு நபர் சொல்லுகிறார், ‘மற்றவர்கள் செய்வதைவிட அதிகமாக என்னை பற்றி நான் அறிந்திருக்கிறேன். அவர்களை பற்றி எனக்கு அதிகமாக தெரியாது. ஆனால் எனக்குள்ளே நான் பார்ப்பது என்னவென்றால், விஷேசமாக என்னுடைய இருதயத்தை பற்றி, என்னைவிட மோசமானவர்கள் அநேக மக்கள் இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். நான் செய்வதைவிட அதிகமான காரியங்களை அவர்கள் செய்யலாம், ஆனால் நான் அதிகமான போதனைகளை கேட்டு இருக்கிறேன், அதிகமான எச்சரிப்புகள், மற்றும் அதனால் நான் அவர்களைவிட அதிகமான குற்றமுள்ளவனாக இருக்கிறேன்.’ நீ கிறிஸ்துவினிடம் மட்டும் வர வேண்டுமென்று நான் விரும்புகிறேன், மற்றும் சொல்லுங்கள், ‘கர்த்தாவே, நான் பாவம் செய்திருக்கிறேன்.’ உன்னுடைய காரியம் நீ அவரிடம் வந்து சொல்ல வேண்டும், ‘கர்த்தராகிய இயேசுவே, ஒரு பாவியாகிய, என்மீது கிருபையாகயிரும்.’ அவ்வளவுதான். நீ இழக்கப்பட்டவனாக உனக்குள் உணருகிறாயா? பிறகு மறுபடியுமாக நான் சொல்லுகிறேன், ‘இயேசுவிடம் வா. அவர் தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் உன்னுடைய பாவங்களை கழுவி நீக்குவார்.’” “இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபிரெயர் 9:22). இந்தப் போதனையை முடிப்பதற்காக நான் சொல்லுவேன் இந்த இடத்திலே ஒரு இழக்கப்பட்ட பாவி இல்லை, தான் இழக்கப்பட்டவர் என்று அவருக்கு தெரியும், அவருடைய பாவங்கள் எல்லாம் மன்னிக்க முடியாமல் இருக்கிறது மற்றும் “இந்த நம்பிக்கையில் மற்றும் தேவனுடைய மகிமையில் மகிழ்ந்து கொண்டிருக்கிறாய்”. இந்த இரவிலே நரகத்தின் கருப்பை போல உன் பாவம் இருந்தாலும், பரலோகத்தை போல அவ்வளவு வெண்மையாக நீ இருக்க முடியும். ஒரு பாவி இயேசுவின் மேல் நம்பிக்கை வைக்கும் அந்த நொடியிலே இயேசுவின் இரத்தத்தினால் அவன் இரட்சிக்கப்பட்டான். உன்னுடைய இருதயத்திலும் மற்றும் வாழ்க்கையிலும் இந்த வசனம் உண்மையாக மாறுவதாக: எந்த வேண்டுதலும் இல்லாமல், நான் இருக்கிற வண்ணமாகவே முதலாவது இரண்டு வரிசைகளுக்கு இங்கே வாருங்கள். உங்கள் பாவங்களை தேவனிடம் அறிக்கை செய்யுங்கள். பிறகு இயேசுவை நம்புங்கள், இயேசுவிடம் வாருங்கள், இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தின் மூலமாக உங்கள் பாவங்களிலிருந்து கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: |
முக்கிய குறிப்புகள் இரத்தத்தோடு அல்லது இரத்தமில்லாமல் WITH OR WITHOUT BLOOD டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் “இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபிரெயர் 9:22). I. முதலாவது, கிறிஸ்து இரத்தம் சிந்தவில்லையானால் உனக்கு என்ன நடக்கும் என்பதை கவனிப்போம், மத்தேயு 23:33; மாற்கு 9:43; லூக்கா 16:24; பிரசங்கி 12:14; நீதிமொழிகள் 15:3; சங்கீதம் 51:3; எரேமியா 17:9, 10. II. இரண்டாவதாக, கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தை நீ பெற்று இருந்தால் உனக்கு என்ன நடக்கும் என்பதை கவனிப்போம், வெளிப்படுத்தல் 5:9; அப்போஸ்தலர் 20:28. |