Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




ஒரு போராடும் கிறிஸ்தவனாக இருக்க தைரியமாக இரு!

DARE TO BE A FIGHTING CHRISTIAN!
(Tamil)

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

டிசம்பர் 10, 2017 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, December 10, 2017


நான் ஒரு உலகப் பருவ ஏட்டில் ஒரு உற்சாகமான விபரத்தைச் சமீபத்தில் வாசித்தேன். அது அமெரிக்காவில் படிக்கும்பொழுது சுவிசேஷகர்களாக மாறின சீன மாணவர்களைப் பற்றியதாகும், அவர்கள் திரும்ப சீனாவுக்குப் போனபொழுது அவர்களில் அநேகர் தங்கள் தாய்ச்சபைகளில் பொறுந்த முடியாமல் போனார்கள். அவர்கள் சீனாவுக்குத் திரும்பி போனபொழுது அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளைப்பற்றி சுவிசேஷகியாக மாறிய ஒரு பெண் விபரமாக சொன்னாள். அவள் சொன்னாள், “நான் தாய்ச்சபை ஒன்றுக்கு விஜயம் செய்தேன். ஆனால் என்னுடைய அனுபவத்தை அவர்களோடு பகிர்ந்துகொள்ள மெய்யாகவே எனக்குக் கடினமாக இருந்தது. அவர்கள் என்னோடு தொடர்புள்ளவர்களாக இருக்கவில்லை. நான் மிகவும் மூழ்கிய மற்றும் தனித்துவிடப்பட்ட நிலையை உணர்ந்தேன்.” அவளது அனுபவம் ஒரு மாதிரியாகும் என்று அந்த விபரம் தெரிவித்தது. அமெரிக்காவில் படிக்கும்பொழுது சுவிசேஷகர்களாக மாறின அநேகர் தங்கள் தாய்ச்சபைகளில் காணப்பட்ட – குடும்பப் பாரம், வேலை நேரங்கள், மற்றும் சபைநாகரீக தனிம வித்தியாசம் போன்றவைகளுக்குப் பொருந்த ஆயத்தம் அற்றவர்களாக காணப்பட்டார்கள். “இரண்டு வருடங்களுக்குப் பிறகு சுவிசேஷகர்களாக மாறின மாணவர்களில் 80 சதவீதம்பேர் சபைகளுக்குப் போவதை விட்டுவிட்டார்கள்” (World Magazine, September 30, 2017, p. 48). “அவர்கள் சீன சபைகளுக்குள் கால்வைத்தபொழுது அவர்களுடைய எதிர்பார்ப்புகள் நசுக்கப்பட்டன – சில ஏர்கன்டிஷன் இல்லாமல் இருந்தன அல்லது சபை கட்டிடம் இல்லாமல் இருந்தன – அங்கே அவர்களுடைய தேவைகளை ஒருவரும் கவனிக்கவில்லை.”

அதே நேரத்தில் இந்தத் திரும்பிவந்த இளம் மக்கள் குற்றம் சொன்னார்கள் மற்றும் சபை தலைவர்களிடம் சவால்விட்டார்கள் என்பதை சீனாவிலிருந்த போதகர்கள் காணமுடிந்தது. தாங்கள் ஐக்கிய நாட்டில் கலந்து கொண்ட சபைகளைபோல தங்கள் சீன தாய்ச்சபைகளும் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.

எனக்கு இது மிகவும் உற்சாகமாக காணப்பட்டது ஏனென்றால் நமது சபையில் சீன தாய்ச்சபைகளைப்பற்றி நாம் மிகவும் உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தச் சீன கிறிஸ்தவர்கள் அநேக ஆண்டுகளாக கம்யூனிஸ்டுகளால் அதிகமாக உபத்திரவப்பட்டவர்கள். மேலும் அநேக சீன சபை வீடுகளின் மத்தியில் மெய்யான எழுப்புதல் உண்டானது. நமது அமெரிக்க சபை பிள்ளைகள் தீவிரமான மனமுள்ள மற்றும் எழுப்புதல் மனமுள்ள சீன சபை வீடுகளில் உள்ள பிள்ளைகளை நேசித்திருக்க வேண்டும் என்று நமக்குக் காணப்பட்டது! ஆனால் இல்லை, அமெரிக்க சுவிசேஷகர்கள் சீனசபைவீடுகளில் உள்ள ஆவிக்குரிய தீவிரமான பிள்ளைகளோடு “தொடர்புள்ளவர்களாக இருக்கமுடியவில்லை”! “இரண்டு வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க சுவிசேஷகர்களில் 80 சதவீதம் பேர் சபைகளுக்குப் போவதை விட்டுவிட்டார்கள்!”

ஏன்? ஏர்கன்டிஷன் இல்லை! ஏழை குழந்தை! அல்லது நல்ல சபை கட்டிடம் இல்லை! ஏழை, ஏழை குழந்தை! அங்கே அவர்களுடைய தேவைகளை ஒருவரும் கவனிக்கவில்லை! ஓ என்! ஓ என்னுடைய! ஏழை குழந்தைகள்! நமக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் – அந்த ஐக்கிய நாட்டிலிருந்த சுவிசேஷகர்களைப்போல! நாம் குற்றம் சொல்லுகிறோம்! நாம் சபை தலைவர்களிடம் சவால் விடுகிறோம் – அந்த அழிந்துபோன அமெரிக்க சுவிசேஷகர்களைப் போல! நாம் தீவிரமான ஜெபக்கூட்டங்களில் விருப்பம் கொள்ளுவதில்லை! அவர்களால் ஏன் அவ்வளவாக அதிகமாக –மற்றும் அவ்வளவு சத்தமாக ஜெபிக்க முடிந்தது! அவர்களால் ஏன் அவ்வளவு கடினமாக –மற்றும் அவ்வளவு சத்தமாக பிரசங்கிக்க முடிந்தது? அமெரிக்காவிலே அவர்கள் செய்வதுபோல இனிமையான சிறிய வேத ஆராட்சியை நமக்கு ஏன் கொடுக்க முடிவதில்லை?

இந்த அமெரிக்காவிலே பயிற்சிபெற்ற சீன சுவிசேஷகர்களில் என்ன தவறு இருக்கிறது? அந்த உலக ஏடு சொல்லுகிறது அந்தச் சீனாவுக்கு திரும்பின அமெரிக்க சுவிசேஷகர்களில் என்ன தவறினால் – 10ல் 8 பேர் தெளிவாக சுவிசேஷத்தை கொடுக்க முடியவில்லை! அந்த 10ல் 8 பேர் தெளிவாக சுவிசேஷத்தை கொடுக்க அறியவில்லை! அமெரிக்க சுவிசேஷக சபைகளில் அவர்கள் மாற்றப் படவில்லை! அதுதான் அந்தச் சீனாவுக்கு திரும்பின அமெரிக்க சுவிசேஷகர்களின் தவறுக்குப் பிரதானமான காரணம். அந்த 10ல் 8 பேர் உண்மையான கிறிஸ்தவர்கள் அல்ல! அவர்கள் சீன சபைவீடுகளின் உண்மையான கிறிஸ்தவர்களை விரும்பவில்லை என்பதில் ஆச்சரியமில்லை! இரண்டாவதாக, அவர்களுக்குத் தேவனோடு தனிப்பட்ட உறவு இல்லை, மற்றசபை உறுப்பினர்களிடம் மட்டுமே அவர்களுக்கு உறவு இருந்தது. நீ சபைக்குச் செல்வது நட்பை நாடினதாக மட்டுமே இருக்குமானால், நீ நீண்டகாலம் நீடிக்கமாட்டாய்! நீ இயேசுகிறிஸ்துவோடு உண்மையான உறவு கொள்ளாவிட்டால், விரைவாகவோ அல்லது தாமதமாகவோ சபையைவிட்டு போய்விடுவாய்! மூன்றாவதாக, அவர்கள் சபையில் கர்த்தருக்கு ஊழியம் செய்ய கற்பிக்கப்படவில்லை. மற்ற மக்களுக்கு ஒருபோதும் ஊழியம் செய்யாமல் மற்றும் அவர்களை கிறிஸ்துவுக்காக ஜெயிக்க அவர்கள் விரும்பினார்கள்!

இவையெல்லாம் நமக்குக் காட்டுவது என்னவென்றால், அமெரிக்க சுவிசேஷகர்கள் இளம் மக்களை உண்மையாக மாற்றப்பட மற்றும் கிறிஸ்துவுக்காக நேசத்தோடு வேலை செய்விக்க முயற்சித்தபோது, மோசமான தோல்வி ஏறக்குறைய முழுமையான தோல்வி அடைந்தார்கள். இதை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம், இல்லையா? அமெரிக்க சுவிசேஷகர்கள் சொல்கிறார்கள், “நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும், சொல்லுகிறபடியால்... இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்” (வெளிப்படுத்தல் 3:17, 16). இந்தப் பெருமையான, அமெரிக்கராக்கப்பட்ட இளைஞர்களுக்கு கிறிஸ்து சொல்கிறார், “உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்!” (எழுத்தின்படி). இது நம்மை தானியேல் புத்தகத்தில் உள்ள நான்கு நன்பர்களிடம் கொண்டு செல்லுகிறது. தானியேல், சாத்ராக், மேஷாக், மற்றும் அபேத்நெகோ என்பவர்கள் வீட்டிலிருந்து 1,500 மைல்கள் தூரத்தில் இருந்தார்கள். இந்த இளம் வாலிபர்கள் இளம் வயதில் உள்ளவர்கள்தான், வீட்டைவிட்டு வெகுதூரமாக, ஒரு புறஜாதியான பாபிலோன் நகரத்தில் இருந்தார்கள். அவர்கள் அந்தச் சீனாவுக்குத் திரும்பின பெலவீனமான அமெரிக்க சுவிசேஷகர்களைபோல இருந்தார்களா?

இந்த நான்கு இளம் வாலிபர்களும் எபிரெய இளம் வாலிபர்கள் மட்டுமல்ல ஆனால் சிறை கைதிகளாக அங்கே கொண்டு செல்லப்பட்டவர்கள். தயவுசெய்து தானியேல் 1:3க்கு திருப்பிக்கொள்ளுங்கள். அது ஸ்கோபீல்டு வேதாகமத்தில் 898ம் பக்கத்தில் உள்ளது. அந்த வசனத்தை நான் வாசிக்கும்போது தயவுசெய்து எழுந்து நிற்கவும்.

“அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும்... சில வாலிபரை [இன்னும் அநேகர் இருந்தனர்] கொண்டுவரவும்... ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கற்பித்தான்” (தானியேல் 1:3, 4).

இப்பொழுது 6ம் வசனத்தைப் பாருங்கள்,

“அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள்” (தானியேல் 1:6).

நீங்கள் அமரலாம். அங்கே இன்னும் அநேக இளம் மனிதர்கள் சிறைகளாக அவர்களோடு கொண்டுவரப்பட்டார்கள் என்று இந்த வசனம் நமக்குக் காட்டுகிறது. ஆனால் இந்த இளம் மக்கள் மிகவும் சிறந்தவர்கள். அவர்கள் மூன்று வருடங்கள் பயிற்சி கொடுத்து ஞானிகளாக மாற்றப்பட்டு மற்றும் பாபிலோன் இராஜாவாகிய, நெபுகாத்நேச்சாருக்கு ஆலோசகர்களாக இருக்கப்போகிறார்கள். அவர்களில் தானியேல் ஒருவனாயிருந்தான் மற்றும் மற்ற மூவர் சாத்ராக், மேஷாக், மற்றும் அபேத்நெகோ என்பவர்கள். அவர்கள் அனைவரும் புத்திசாலியான இளம் மனிதர்கள், அவர்கள் ஞானமுள்ளவர்களாக இருந்தார்கள், அறிவியல், மற்றும் மொழிகளில் ஞான முன்னோடிகளாக இருந்தார்கள்.

ஆனால் இந்த நான்கு பையன்களிடத்திலும் சில வித்தியாசங்கள் இருந்தன. அவர்கள் இராஜாவின் போஜனத்தை புசிக்கவும் அல்லது அவருடைய திராட்சரசத்தை பானம்பண்ணவும் விரும்பவில்லை. அவர்கள் புசிப்பதிலும் குடிப்பதிலும் மோசேயின் பிரமாணத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் சிரைச்சேதம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தப் புறஜாதி நீதிமன்றத்தில் ஒரு வித்தியாசமான நிலையில் அவர்கள் நின்றார்கள். 8ம் வசனத்தைப் பாருங்கள். அது சொல்லுகிறது, “தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் [உணவு] அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டான்.” மற்ற மூவரும் அதே காரியத்தைச் செய்தார்கள். தேவனுக்காக ஒரு வித்தியாசமான நிலையில் அவர்கள் நின்றார்கள். பாருங்கள், ராஜாவின் ஊழியக்காரர்கள் அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கவில்லை. தேவன்தாமே அவர்கள் தமக்காக நிற்கும்படியும் அவருக்காக வெட்கப்படாமல் இருக்கும்படியும் அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தார். நீ ஒவ்வொரு தரம் சாப்பிடும்போதும் உன் தலையை வணங்கி தேவனுக்கு நன்றி செலுத்துகிறாயா? கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களோடு இருக்கும் பொழுதும் நீ அப்படி செய்கிறாயா? ஒரு கூட்டமாக ஒரு உணவு விடுதியில் இருக்கும் பொழுதும் நீ அப்படி செய்கிறாயா? நீ கிறிஸ்மஸ் சமயத்தில், ஒரு சபையின் பெருவிருந்தில் இருந்தாயா? அல்லது நீ கிறிஸ்மஸ் சமயத்தில் சபையைவிட்டு ஒரு பாவமான இடத்தில் இருக்க போனாயா? புது வருட சமயத்தில் எங்களோடு சபையில் இருப்பாயா? அல்லது ஒரு புறஜாதி விருந்தில் இருப்பாயா? அந்தப் பையன்கள் செய்ததைபோல ஒரு நிலையில் நிற்க நம்பிக்கையும் தைரியமும் தேவையாக இருக்கிறது! நான் இந்த பாட்டில் ஒரு வார்த்தையை மாற்றி இருக்கிறேன்.

தானியேலை போல இருக்க தைரியம் வேண்டும்,
   தனிமையாக நிற்க தைரியம் வேண்டும்!
ஒரு நோக்கத்தை உறுதியாக பிடிக்க தைரியம் வேண்டும்!
   அதை வெளியில் தெரியப்படுத்த தைரியம் வேண்டும்!

இதை எழுந்து நின்று பாடுங்கள்!

தானியேலை போல இருக்க தைரியம் வேண்டும்,
   தனிமையாக நிற்க தைரியம் வேண்டும்!
ஒரு நோக்கத்தை உறுதியாக பிடிக்க தைரியம் வேண்டும்!
   அதை வெளியில் தெரியப்படுத்த தைரியம் வேண்டும்!

நீங்கள் அமரலாம்.

அந்த நான்கு பையன்களும் அமெரிக்க சுவிசேஷகர்களைப்போல மென்மையான மற்றும் ஒத்துபோகக்கூடிய நல்ல சபைகளை சீனாவில் இருக்க வேண்டும் என்று விரும்பிய சீன பிள்ளைகளைபோல இல்லை. இல்லை! இல்லை! அந்தப் பையன்கள் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தேவனுக்குக் கீழ்ப்படிதலை சரியாக காத்துக்கொண்டார்கள்! அப்படிப்பட்ட பிள்ளைகளைத் தேவன் கனப்படுத்துகிறார்! அவர் அவர்களைக் கனப்படுத்தினார் அந்தப் பையன்களைபோல நீயும் தீவிரமாக இருந்தால் உன்னையும் அவர் கனப்படுத்துவார்!

இப்பொழுது இந்தப் பையன்களுக்கு மற்றொரு சோதனை கொடுக்கப்படுகிறது. அவர்கள் முதலாவது சோதனையைத் தீட்டுப்பட்ட ஆகாரத்தைப் புசிக்காமல் இருந்ததின் மூலமாக ஜெயித்தார்கள். அதனால் இப்பொழுது அவர்களுக்கு மற்றொரு சோதனையை தேவன் கொடுக்கிறார் – அது ஜெபத்தின் சோதனை. ராஜா ஒரு கனவு கண்டார் மற்றும் அவர் அதன் அர்த்தத்தை அறிய விரும்பினார். ஆனால் அந்தக் கனவு என்ன என்று அவர் ஞானிகளிடம் சொல்லவில்லை. அவர்கள் அந்தக் கனவின் அர்த்தத்தை விளக்குவதற்கு முன்னதாக அந்த கனவை அவர்கள் சொல்ல வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டார். அவர்களால் சொல்ல முடியாவிட்டால் அவர்கள் துண்டித்துப் போடப்படுவார்கள். ராஜா சொன்னார், “சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்குத் தெரிவியுங்கள்” (2:6). அந்த ஞானிகள் ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை என்று சொன்னார்கள். இது ராஜாவைக் கோபப்படுத்தியது மற்றும் பாபிலோனில் இருந்த சகல ஞானிகளும் அழிக்கப்பட வேண்டும் என்று அவன் கட்டளையிட்டான். அந்தக் கட்டளையை அமுல்படுத்த மற்ற ஞானிகளோடு தானியேல் மற்றும் அவனுடைய நண்பர்களையும் கொலைசெய்ய தேடினார்கள். தானியேல் ராஜாவிடம் சென்று தமக்குப் பதில் சொல்ல சிறிது தவணை கொடுக்கும்படி வேண்டிக்கொண்டான். தானியேல் என்ன செய்தான்? அவன் தனது, மூன்று நண்பர்களான சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நெகோவை கண்டுபிடித்தான். அந்த நான்கு மனிதர்களும் ஒரு ஜெபக்கூட்டம் நடத்தினார்கள். இது எனக்கு ஜான், ஜேக், நோவா மற்றும் ஆரோன் நான்கு வாலிபர்களும் என்னோடு சேர்ந்து ஜெபிப்பதை நினைவுபடுத்துகிறது. அவர்கள் பரலோகத்தின் தேவனிடம் இரக்கம் கிடைப்பதற்காக வேண்டினார்கள். அவர்கள் ராஜாவின் கனவின் இரகசியத்தை தங்களுக்கு சொல்லும்படி ஜெபித்தார்கள். தானியேல் 2:19ஐ பாருங்கள், “பின்பு இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது. அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரித்தான்”. தானியேல் 2:23ஐ பாருங்கள். தானியேல் சொன்னார், “என் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டதை இப்பொழுது எனக்கு அறிவித்து, ராஜாவின் காரியத்தை எங்களுக்குத் தெரிவித்தபடியினால், உம்மைத் துதித்துப் புகழுகிறேன்.” மேலே பாருங்கள். ராஜா சொன்னார், “நான் கண்ட சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கக்கூடுமா?” அதற்குத் தானியேல் சொன்னான், “ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும் கூடாது. ‘மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்’… நீர் கண்ட கனவு இதுதான் அதனுடைய அர்த்தம் இதுதான்.” பிறகு தானியேலும் அவனுடைய மூன்று நண்பர்களும் ராஜாவுக்கு அவனுடைய கனவின் அர்த்தத்தை வெளிப்படுத்தினார்கள். இப்பொழுது வசனம் 47ஐ பாருங்கள், “ராஜா தானியேலை நோக்கி நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால், மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்குத் தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார்.” இப்பொழுது மேலே பாருங்கள். பிறகு ராஜா தானியேலை ஒரு பெரிய மனிதனாக்கினான், மற்றும் அவனைப் பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின்மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான். அவன் சாத்ராக்கையும், மேஷாக்கையும் மற்றும் ஆபேத்நேகோவையும் பாபிலோன் மகாணத்துக் காரியங்களை விசாரிக்கும்படியான, உயர்ந்த பதவிகள் கொடுக்கப்பட்டன. தானியேலோவென்றால் ராஜாவின் கொலுமண்டபத்தில் பாபிலோன் தேசம் முழுவதுக்கும் பிரதம மந்திரியாக இருந்தான்!

இப்பொழுது இந்தப் பையன்கள் முதலாவது சோதனையைத் தீட்டுப்பட்ட ராஜாவின் ஆகாரத்தைப் புசிக்காமல் திராட்ச ரசத்தை குடிக்காமல் இருந்ததின் மூலமாக ஜெயித்தார்கள் அது அவர்களுக்கு தெம்பை கொடுத்தது. அவர்கள் தேவனை முதலாவதாக வைத்து இந்த பறக்கும் வண்ண பரிட்சையை ஜெயித்தார்கள்!

இப்பொழுது இந்தப் பையன்கள் இரண்டாவது சோதனையை ஜெயித்தார்கள். அவர்கள் ஒன்றுகூடி தேவனிடம் இரக்கம் கிடைப்பதற்காக வேண்டி அவர்கள் ராஜாவின் கனவின் இரகசியத்தைத் தங்களுக்குச் சொல்லும்படி ஜெபித்தார்கள். அவர்கள் ஜெபத்தில் தேவனை சார்ந்துகொண்டபடியினால் இந்தப் பறக்கும் வண்ண இரண்டாவது பரீட்சையை ஜெயித்தார்கள்!

இது மிகவும் முக்கியமாக இருந்தபடியினால் நான் நேரம் எடுத்து உங்களுக்கு விளக்கி காட்டினேன். ஒரு கிறிஸ்தவனாக பெரிய வல்லமைக்குள் குதித்துவிடலாம் என்று நாம் சில நேரங்களில் நினைக்க முடியும். ஆனால் தேவனோடு நீ பெரிய வல்லமைக்குள் “குதித்துவிட” முடியாது. நீ அதில் வளருகிறாய். நீ இரட்சிக்கப்படு அதன்பிறகு நீ வளரு! இயேசு சொன்னார்,

“கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான். கொஞ்சத்திலே அநீதி யுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்” (லூக்கா 16:10).

நீ கிறிஸ்மஸ் சமயம் மற்றும் புதுவருட சமயம் போன்ற சிறிய காரியங்களில் நம்பிக்கையாக இருந்தால், அதன்பிறகு, நீ பெரிய காரியங்களில் நம்பிக்கையாக இருப்பாய்!

இந்தப் பையன்கள் புசிப்பதில் நம்பிக்கையாக இருந்தார்கள். அவர்கள் அந்த சோதனையை ஜெயித்தார்கள். அவர்கள் ஜெபத்திலும் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் அந்த சோதனையையும் ஜெயித்தார்கள்.

அதன் பிறகு அவர்களுக்கு ஒரு பெரிய பரிட்சை வந்தது. அவர்கள் அந்த ராஜாவின் பொற்சிலையைத் தாழவிழுந்து வணங்கினார்களா, அல்லது அவர்கள் தாழவிழுந்து வணங்காவிட்டால் உயிரோடு எரிக்கப்படும் அந்த அக்கினிக்குப் பயந்தார்களா? அவர்கள் அந்த சிறிய சோதனையை ஜெயித்தார்கள். அதனால் அவர்களால் தைரியமாக சொன்னார்கள்,

“நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் எரிகிற அக்கினிச்சூளைக் கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்” (தானியேல் 3:17).

அவர்கள் அந்த சிறிய சோதனைகளை ஜெயித்து பெரிய சோதனையாகிய எரிகிற அக்கினிச்சூளைக்குத் தேவன் தப்புவிப்பார் என்று கற்றுக்கொண்டார்கள்!

மேலும் தீவிரமான ஜெபத்தின் மூலமாக அவர்கள் ராஜாவினால் கொல்லப்படாமல் காப்பாற்றப்பட்டார்கள். அதன்பிறகு, தானியேலை கெர்சிக்கிற சிங்கங்களின் கெபியிலே போட பயமுறுத்தப்பட்டபோது, தேவன் ஒரு தூதனை அனுப்பி சிங்கங்களின் வாய்களைக் கட்டினார், தானியேல் பத்திரமாக காக்கப்பட்டான்! இயேசு எரிகிற அக்கினிச்சூளைக்குள் இருந்தார் மற்றும் அவர்களை இரட்சித்தார். அந்தத் தூதன் இயேசுவே. தானியேலைக் கெர்சிக்கிற சிங்கங்களின் கெபியிலே போட்டபோது இயேசு சிங்கங்களின் கெபியிலே இருந்தார். பிசாசுக்கு விரோதமாக நிற்க அவனுக்கு விசுவாசம் இருந்தது. வேதம் சொல்லுகிறது, “உன் தேவனை சந்திக்க ஆயத்தப்படு.” உன்னால் ஆயத்தப்பட முடியாவிட்டால், நீ பிசாசுக்கு இடங்கொடுப்பாய் மற்றும் கர்த்தரை மறுதலிப்பாய்!

நீ நிற்க தக்கதாக மற்றும் கணக்கில் எடுத்துக்கொள்ள தக்கதாக இப்பொழுதே நீ பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். தானியேல் அப்படியே செய்தார். நீ அக்கினிக்குத் தப்பிக்கொள்ள நம்பியிருந்தால், நீயும் அப்படியே செய்ய வேண்டும்!

அதனால்தான் நீ இப்பொழுதே பயிற்சி எடுத்துக்கொள்ள ஆரம்பிக்க வேண்டியது அவசியமாகும்! பிறகு அல்ல, ஆனால் இப்பாழுதே! நீ விசுவாசத்தில் ஒரு பெரிய வீரனாக உடனடியாக மாறிவிட முடியாது! இல்லை! அதற்குப் பயிற்சி வேண்டும்! டாக்டர் சென் எனது மனைவியாகிய, திருமதி ஹைமர்ஸ்யைபற்றி சொன்னதை கவனியுங்கள். டாக்டர் சென் சொன்னார், “திருமதி ஹைமர்ஸ் ஒரே இரவில் பெரிய கிறிஸ்தவளாக மாறிவிடவில்லை. அவள் அநேக ஆண்டுகள் கர்த்தருக்கு உண்மையாக பணி செய்ததன் மூலமாக முதிர்ச்சியை அடைந்தாள். ஒரு இளம் பெண்ணாக அவள் எந்தப் பலனையும் எதிர்பாராமல் தனது வாழ்க்கையை சபையின் ஊழியத்துக்கு ஒப்புக்கொடுத்தாள். இதன் காரணமாக தேவன் அவளை வல்லமையாக உபயோகித்தார்.” அவள் 16 வயது இருக்கும்போது சபைக்காக தன்னால் முடிந்தவரையிலும் சிறப்பாக செயல்பட ஆரம்பித்தாள். அநேக ஆண்டுகளுக்குப் இப்பொழுது, பல வருடங்கள் கழித்து, அவள் ஒரு விசுவாச வீரங்கணையாக இருக்கிறாள். இப்பொழுது உனக்கிருக்கும் சிறிய வேலையில், நீ தீவிரமாக மற்றும் உண்மையாக இல்லாவிட்டால், நீ உடனடியாக ஒரு பெரிய ஆத்தும ஆதாயம் செய்பவனாக மற்றும் ஒரு பெரிய ஜெபவீரனாக எதிர்காலத்தில் மாறமுடியாது.

தானியேலுக்கும் மற்றும் அவருடைய மூன்று நண்பர்களுக்கு குறுக்கு வழிகள் இருக்கவில்லை – உனக்கும் குறுக்கு வழிகள் இல்லை. தீவிரமாக மற்றும் வைராக்கியத்தோடு கிறிஸ்துவில் பிரவேசிக்க இப்பொழுதே ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே நீ சோம்பலாக இருந்தால், பிறகு நீ ஒருபோதும் ஒரு பெரிய கிறிஸ்தவனாக மாறமுடியாது. உனது முழுபலத்தோடும் கிறிஸ்துவில் பிரவேசிக்க இப்பொழுதே ஆரம்பிக்க வேண்டும். யாரோ சொன்னார்கள், “நல்ல ஆரம்பம் பாதி செய்யப்பட்டதை போன்றது.” திருமதி ஹைமர்ஸ் முதலாவதாக சுவிசேஷத்தை நான் பிரசங்கித்ததை கேட்ட உடனே பாவத்திலிருந்து திரும்பி இயேசுவை நம்பினாள். அப்படியே டாக்டர் ஜூடித் கேஹன் செய்தார். அப்படியே டாக்டர் கிரைட்டன் சென் செய்தார். அப்படியே திருமதி மெலிசா சாண்டர்ஸ் செய்தார். அப்படியே திருவாளர் பென் கிரிப்பித் செய்தார். அவர்கள் இப்பொழுது உறுதியான கிறிஸ்தவர்களாக இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை! ஒரு பெண் என்னை பார்த்து அவர்கள் இவ்வளவு விரைவாக இரட்சிக்கப்பட்டார்களா என்று பெரிய ஆச்சரியத்தோடு கேட்டாள். அவளே அநேக ஆண்டுகளாக இழக்கப்பட்டவளாக இங்கே இருக்கிறாள். “அவர்கள் இவ்வளவு விரைவாக எப்படி இரட்சிக்கப்பட்டிருக்க முடியும்?” என்று அவள் கேட்டாள். அவர்கள் தீவிரமாக இருந்தார்கள் மற்றும் நீ தீவிரமாக இல்லை. அப்படிதான்! நீ ஆரம்பத்தில் கஷ்டப்படாமல் தேவனுடைய ராஜ்ஜியத்தல் பிரவேசிக்க நினைத்து உன்னை சுற்றியுள்ளவர்களை முட்டாளாக்கினால், நீ உறுதியற்ற புதிய சுவிசேஷகனாக இருப்பாய், வலுவற்ற, பெலவீனமான, புதிய சுவிசேஷக சபைகளால் அழிக்கப்பட்ட அந்த சீன பிள்ளைகளைபோல நீ எப்பொழுதும் பெலவீனமான இருப்பாய். வேதாகமம் சொல்லுகிறது, “நீயும் இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாயத் தீங்கநுபவி” (II தீமோத்தேயு 2:3). தானியேலைப்போல இருக்க தைரியமாக இரு! இதை பாடு!

தானியேலை போல இருக்க தைரியம் வேண்டும்,
   தனிமையாக நிற்க தைரியம் வேண்டும்!
ஒரு நோக்கத்தை உறுதியாக பிடிக்க தைரியம் வேண்டும்!
   அதை வெளியில் தெரியப்படுத்த தைரியம் வேண்டும்!

நான் போராட வேண்டியது அவசியமாகும்,
நான் ஆளுகை செய்யவேண்டுமானால்;
   எனது தைரியத்தை வர்த்திக்க செய்யும், கர்த்தாவே!
பாடுகளையும், வேதனைகளையும் சகித்துக்கொள்வேன்,
   நான் உமது வசனத்தின் மூலமாக வரும் ஆதரவினால்.
(“Am I a Soldier of the Cross?” by Dr. Isaac Watts, 1674-1748).

“விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்!” (I தீமோத்தேயு 6:12).

சோம்பலான புதிய சுவிசேஷகர்கள் ஒருபோதும் நல்ல சபை உறுப்பினர்களை உண்டாக்கமாட்டார்கள்! தங்கள் பெலவீனமான புதிய சுவிசேஷகம் தவறு என்று அவர்கள் நம்பமாட்டார்கள்! அதனால்தான் புதிய சுவிசேஷகர்கள் இரட்சிக்கப்படுவது அரிதாகும். அவர்கள் முதல்முறையாக சுவிசேஷத்தைக் கேட்கும்போது ஒருபோதும் இரட்சிக்கப்பட மாட்டார்கள். அவர்களுடைய மதம் தவறு என்று அவர்களை உணர்த்த அவர்களோடு நீ வருடக்கணக்காக போராட வேண்டும். அதனால் தான் அவர்கள் ஒருபோதும் நல்ல சபை உறுப்பினர்களை உண்டாக்கமாட்டார்கள்! ஒருபோதும்! ஒருபோதும்! ஒருபோதும்! நீ உனது வழியில் கிறிஸ்துவுக்காக போராடாமல் மிகவும் சோம்பலாக இருந்தால், உன்னால் ஒருபோதும் உனது கிறிஸ்தவ வாழ்க்கையில் பிரயோஜனமாக போராட முடியாது! நான் கிரியையின் மூலமாக இரட்சிப்பைப்பற்றி பேசுகிறேனா? இல்லை, நான் அதை பேசவில்லை. நான் கிருபையின் மூலமாக இரட்சிப்பைப்பற்றி பேசுகிறேன், உனது வழியில் சந்தேகம் மற்றும் பயத்துக்காக போராட உன்னை இழுக்கும் கிருபை, உனது வழியில் கிறிஸ்துவுக்காக போராட விசுவாசத்தைப் பற்றி பேசுகிறேன், அதன்பிறகு நல்ல கிறிஸ்தவ சபைக்காக தொடர்ந்து போராடுவதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். டாக்டர் ஆர். ஏ. டோரே என்பவர் பின்வரும் தலைப்பில் ஒரு போதனையைச் செய்தார் – “போராடும் கிறிஸ்தவர்கள், தேவை!” ஆரம்பத்திலிருந்து ஒன்றாக இரு! நீ ஒரு கிறிஸ்தவனாவதற்கு சோம்பலாக இருந்தால் – உனது வாழ்க்கை முழுவதற்கும் சோம்பலாக இருப்பாய்! “போராடும்கிறிஸ்தவர்கள் தேவை!” அப்படிப்பட்ட ஒரு வகையை மட்டுமே நாங்கள் பாப்டிஸ்டு டெபர்னேக்கலில் பெற்றிருக்கிறோம். உனக்குச் சோம்பேறி கிறிஸ்தவம் வேண்டுமானால், வேறுசபைக்குப் போ! ஏராளமான பலவீனமான புதிய சுவிசேஷக சபைகள் உள்ளன! வேறு ஒரு சபைக்குப் போ! வேறு ஒரு சபைக்குப் போ! வேறு ஒரு சபைக்குப் போ! வெளியே போ மற்றும் வேறு ஒரு சபைக்குப் போ!

ஆனால் பொறுத்திரு! நான் அப்படி போகச் சொல்லவில்லை. அப்படி நீ போகவேண்டுமென்று மெய்யாகவே நான் விரும்பவில்லை. நீ தரித்திருந்து இரட்சிக்கப்பட வேண்டுமென்று நான் விரும்புகிறேன்! இப்பொழுது மிகவும் கவனமாக கேள். நீ இதுவரை இரட்சிக்கப்படவில்லையானால் இது உனக்கு மிகவும் முக்கியமான போதனையாகும். நான் உனக்கு இப்பொழுது சொல்லுவதை கவனி. நீ இதற்கு முன்பாக ஒருபோதும் கவனிக்கவில்லை என்றால் இப்பொழுது கவனமாகக் கேள்!

அந்த ராஜா எரிகிற அக்கினி சூளையிலே, அந்த மூன்றுபேரையும் போடுவித்தான். அவர்கள் எல்லா நம்பிக்கையையும் கடந்தவர்கள். அப்படிபப்பட்ட வழியை நீ இப்பொழுது உணரவில்லையா? நீ ஒரு நம்பிக்கை அற்ற நிலைமையில் இருக்கிறாய். உன்னை நீயே இரட்சித்துக்கொள்ள முடியாது. உண்மையில், இரட்சிக்கப்பட முடியும் என்ற எல்லா நம்பிக்கையையும் நீ இழந்துவிட்டாய். “நான் டாக்டர் சென் அல்லது திருவாளர் கிரிபித் அல்லது ஜூடி கேஹன் அல்லது திருமதி ஹைமர்ஸ் போல இருக்க முடியாது.” நீ ஒரு நம்பிக்கை அற்ற நிலைமையில் இருக்கிறாய். நீ எரிநரகத்துக்குப் போகிறாய் என்று உனக்கு தெரியும் மற்றும் உன்னை நீயே இரட்சிக்க உன்னால் எதுவும் செய்ய முடியாது! ஆனால், பொறுத்திரு! அந்த ராஜா எரிகிர அக்கினி சூளைக்குள் பார்த்தபொழுது அவன் மூன்று பையன்களை மட்டும் பார்க்கவில்லை. அவன் சூளையிலே நான்கு பேரை பார்த்தான், “இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை. நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது” (தானியேல் 3:25). ஸ்பர்ஜன் சொன்னது சரிதான். அந்த அக்கினியிலிருந்த நாலாவது நபராக இருந்தது இயேசு – மாம்சத்தில் வந்த தேவ குமாரன். அந்த அக்கினியிலே நாலாவது நபராக இயேசு அவர்களோடு இருந்தார். அந்த அக்கினியிலிருந்து அந்தப் பையன்களை இரட்சிக்க இயேசு அவர்களோடு இருந்தார்! வேதாகமம் சொல்கிறது “அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யவில்லை” அவர்களை எரிப்பதற்கு (தானியேல் 3:27). இயேசு அவர்களோடு இருந்தார் அந்த அக்கினியிலிருந்து மற்றும் நரகத்திலிருந்து அவர்களை இரட்சித்தார்.

என்னுடைய அன்பான நண்பனே, இயேசு உன்னையும் இரட்சிப்பார். அவர் உன்மீது மன உருக்கம் உள்ளவராக இருக்கிறார். அவர் உன்னை நேசிக்கிறார். உனது விசுவாசம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை, இயேசு சர்வ வல்லமையுள்ளவர். இயேசு உன் பக்கம் இருக்கிறார்! வேதாகமம் அப்படி சொல்லுகிறது! வேதாகமம் சொல்லுகிறது, “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” (I தீமோத்தேயு 1:15).

நீ எவ்வளவு நம்பிக்கையற்றவனாக இப்பொழுது உணர்ந்தாலும் எனக்குக் கவலையில்லை. உண்மையில், எவ்வளவுக்கு அதிகமாக நம்பிக்கையற்றவனாக உணர்ந்தாலும் அது நல்லது! ஏன்? ஏனென்றால் இயேசு எல்லாவற்றையும் இரட்சிக்க நீ அனுமதிக்க ஆயத்தமாக இருக்கிறாய் என்று அர்த்தம். உன்னை நீயே இரட்சித்துக்கொள்ள முடியாது. முடியாது என்று உனக்குத் தெரியும். நீ போதுமான அளவு நல்லவனாக மற்றும் பலமுள்ளவனாக இருக்க முடியாது என்று உனக்குத் தெரியும். நல்லது! உனது சூளையிலே நான்காவது நபராக இருக்க இயேசுவை அனுமதி. அவர் உன்னை இரட்சிக்கட்டும்.

நீ சொல்லுகிறாய், “எனக்குப் போதுமான அளவு நம்பிக்கையில்லை.” எனக்குத் தெரியும். எப்படியானாலும் இயேசு உன்னை இரட்சிப்பார். நான் இரட்சிப்பின் எல்லா நம்பிக்கையையும் இழந்தபொழுது இயேசு என்னை இரட்சித்தார். என்னுடைய பயம் மற்றும் சந்தேகம் என்னும் சூளையில் அவர் வந்து என்னை இரட்சித்தார். இயேசு உன்னை இரட்சிக்க சிலுவையிலே மரித்தார். இயேசு உன்னை இரட்சிக்க மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். இந்த இரவிலே இயேசு இங்கே இருக்கிறார். உன்னுடைய பயம் மற்றும் சந்தேகம் என்னும் சூளையில் அவர் வந்து உன்னை இரட்சிப்பார். அவர் உனக்குச் சமாதானத்தையும் நம்பிக்கையையும் கொடுப்பார். இதை நீ நம்பமாட்டாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் அவர் உனக்காக இங்கே இருக்கிறார் அவரிடம் வந்து சேர். உன்னை நீயே பார்த்துக்கொண்டிருக்காதே. அவரைப் பார். ஒரு சிறிய விசுவாசத்தோடு, அவரை நம்பு. அது அதிகமெடுத்துக்கொள்ளாது! ஒரு சிறிய நம்பிக்கை மட்டுமே. இந்த சூளையில் அவர் உன்னோடு இருக்கிறார். ஒரு சிறிய விசுவாசத்தோடு அவரை நம்பு எல்லாம் நன்மையாகும். நீ அதைகூட நம்பாமலிருக்கலாம். என்னை யாவது நம்பு. அவர் உன்னை இரட்சிப்பார் என்று எனக்குத் தெரியும். எனது விசுவாசம் உனக்கு உதவி செய்யட்டும். நான் உனக்கு உதவி செய்ய விசுவாசத்தோடு இயேசுவை நம்பு எல்லாம் நன்மையாகும். “இயேசு என்னை இரட்சிப்பார் என்று டாக்டர் ஹைமர்ஸ் விசுவாசிக்கிறார், அதனால் நான் போதகரை நம்புவேன் மற்றும் இயேசுவையும் நம்புவேன்!” “அவரை மட்டும் நம்பு, அவரை மட்டும் நம்பு, அவரை மட்டும் இப்பொழுதே நம்பு. அவர் உன்னை இரட்சிப்பார், அவர் உன்னை இரட்சிப்பார், அவர் உன்னை இப்பொழுதே இரட்சிப்பார்.” “ஆனால்,” நீ சொல்லுகிறாய், “அவர் என்னை இதற்குமுன் இரட்சக்கவில்லையே.” அதுபோல தோன்றும், ஆனால் அவர் உன்னை இப்பொழுதே இரட்சிப்பார்.

வரட்டும், பாவத்தால் நெருக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்துமாவும்,
கர்த்தரிடத்தில் இரக்கம் உண்டு,
அவருடைய வார்த்தையை நம்புவதன் மூலமாக அவர்
நிச்சயமாக உனக்கு இளைப்பாறுதல் கொடுப்பார்.
அவரை மட்டும் நம்பு, அவரை மட்டும் நம்பு,
அவரை மட்டும் இப்பொழுதே நம்பு,
அவர் உன்னை இரட்சிப்பார், அவர் உன்னை இரட்சிப்பார்,
அவர் உன்னை இப்பொழுதே இரட்சிப்பார்.
(“Only Trust Him” by John H. Stockton, 1813-1877).

உன்னுடைய பெலவீனமான புதிய சுவிசேஷக மதத்திலிருந்து திரும்பு. அதிலிருந்து இப்பொழுதே திரும்பு! இயேசுவை நம்பு மற்றும் அவர் சிலுவையிலே உனக்காக சிந்தின இரத்தத்தின் மூலமாக – பாவத்திலிருந்து இரட்சிக்கப்படு!

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“Dare to Be Like Daniel” (by Philip P. Bliss, 1838-1876; altered by Dr. Hymers).