இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
மூலாதாரமான பாவம் மற்றும் அதனுடைய குணமாகுதல் லூத்தர் அவர்கள் கொடுத்தது (புராட்டஸ்டன்டு மறுமலர்ச்சியின் 500வது ஆண்டு விழாவில் பிரசங்கிக்கப்பட்ட ஒரு போதனை) ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்கள் அக்டோபர் 29, 2017 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி “எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டுவரும். பொல்லாங் கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்” (மாற்கு 7:21-23). |
இயேசுவின் சீஷர்கள் சாப்பிடுவதற்கு முன்பாக கைகழுவாமல் சாப்பிட்டார்கள் அதனால் பரிசேயர்கள் அவரிடம் குற்றம் கண்டுபிடித்தார்கள். சீஷர்கள் தங்கள் சடங்காச்சாரத்தின்படி சாப்பிடுவதற்கு முன்பாக கைகழுவாமல் சாப்பிட்டதை அவர்கள் கண்டபொழுது, அவர்களை தீட்டுபட்டவர்கள் என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால் நாம் சாப்பிடுவது நம்மை தீட்டுப்படுத்த முடியாது என்று இயேசு சொன்னார். மக்களுடைய இருதயத்தில் இருப்பதினால் அவர்கள் தீட்டுப்படுகிறார்கள் என்று அவர் சொன்னார். “பொல்லாங்கானவை களாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்” (மாற்கு 7:23). “மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகள் வருகின்றன” (மாற்கு 7:21). நமது இருதயங்கள் பொல்லாதவைகள் என்று ஒரு முனையிலிருந்து மறுமுனை வரையிலும் வேதம் நமக்கு போதிக்கிறது. வேதம் சொல்லுகிறது, “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே… மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” (எரேமியா 17:9). வேதம் சொல்லுகிறது, “நாங்கள் எங்கள் யோசனைகளின்படியே நடந்து, அவரவர் தம்தம் பொல்லாத இருதயத்தினுடைய கடினத்தின்படியே செய்வோம்” (எரேமியா 18:12). வேதம் சொல்லுகிறது, “அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை” (சங்கீதம் 78:37). “தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான் (சங்கீதம் 14:1). டாக்டர் வாட்ஸ் அவர்கள், உங்களுடைய இருதயத்தைபற்றி தமது பாடல்கள் ஒன்றில் சொன்னார், “வெளிப்பிரகாரமான எந்தவடிவங்களும் [உன்னை] சுத்தமாக்க முடியாது; உன்னுடைய பொல்லாத இருதயத்தின் உள் ஆழத்திலே. அதைப்பற்றி வேதம் பேசுகிறது “அவிசுவாமுள்ள பொல்லாத இருதயம்” (எபிரெயர் 3:12). “வெளிப்பிரகாரமான எந்தவடிவங்களும் [எந்த ஒரு வெளிப்பிரகாரமான சடங்குகள் – ஒரு பாவியின் ஜெபத்தை சொல்லுவதைப்போல] [உன்னை] சுத்தமாக்க முடியாது; ஆழத்தின் உள்ளே குஷ்டரோகம் இருக்கிறது” – இல்லையா? இல்லையா? அதை நீ அறிந்து கொள்ள வேண்டும்! எந்த ஒரு தீர்மானங்கள் அல்லது ஜெபங்களும் உன்னை சுத்தமாக்க முடியாது. நீ கற்றுக்கொண்டது அல்லது உணர்வது ஒன்றும் உன்னை சுத்தமாக்க முடியாது! அதை நீ அறிந்து கொள்ள வேண்டும். “ஆழத்தின் உள்ளே (பாவத்தின்) குஷ்டரோகம் இருக்கிறது” அவிசுவாமுள்ள உன்னுடைய பொல்லாத இருதயம்! அதை நீ அறிந்திருக்கிறாய் – இல்லையா? நீ நேர்மையாக இருந்தால் இது உண்மை என்று அறிந்திருப்பாய். ஒரு வெளிப்படையான பாவத்தை நீ செய்வதற்கு முன்பாக எப்போதும் அதை நீ அறிந்திருப்பாய். நீ அதை துணிகரமாக செய்தாய். நீ என்ன செய்துகொண்டிருந்தாய் என்று சரியாக உனக்குத் தெரியும். அது தப்பு என்று உனக்குத் தெரிந்திருந்தும் நீ அதை ஏன் செய்தாய்? மாற்றப்படாத உன்னுடைய நிலையில் நீ இருளை விரும்பினாய். நீ அந்த பாவத்தை ஆனந்தமாக அனுபவித்தாய். நீ பாவம் செய்துகொண்டிருப்பதில் மகிழ்ச்சி அடைந்தாய். அதன் ருசியை நீ விரும்பினாய். அது தப்பு என்று உனக்குத் தெரிந்திருந்தும் நீ அதை விரும்பினாய்! உன்னுடைய பாவமுள்ள இருதயத்தை பற்றிய சத்தியத்தை நான் சொல்லுவதால் நீ என்னை வெறுக்கிறாய்! உன்னுடைய பாவமுள்ள இருதயத்தை பற்றிய சத்தியத்தை நீ வெறுக்கிறாய். அது உன்னை கண்டிக்கிறது சத்தியத்தை கேட்பது உன்னை பரிதாபகரமாக செய்கிறது! ஆழத்தின் உள்ளே குஷ்டரோகம் இருக்கிறது”! உனது இருதயம் திருக்குள்ளது மற்றும் தீட்டுப்பட்டு இருக்கிறது! எது சரி மற்றும் நல்லது என்பதைவிட நீ பாவத்தை ஆனந்தமாக அனுபவிக்கிறாய். அவிசுவாமுள்ள உன்னுடைய பொல்லாத இருதய ஆழத்தின் உள்ளே குஷ்டரோகம் இருக்கிறது! அதை நான் உயர்த்தவில்லை. டாக்டர் மார்டின் லியோடு-ஜோன்ஸ் அவர்களின் பொழிப்புரையை நான் வழங்கினேன், ஒரு மருத்துவராக உங்களைப் போன்றவர்களின் ஒரு பாவமுள்ள இருதயத்தைபற்றி அறிந்திருந்தார்! ஆமாம், அதை நீங்கள் முன்னதாக கேள்விப்பட்டீர்கள். நாகமானின் குஷ்டரோகம் சுத்திகரிக்கப்பட்ட என்னுடைய போதனையில் டாக்டர் மார்டின் லியோடு-ஜோன்ஸ் அவர்களின் பொழிப்புரையை நான் வழங்கினேன். இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக சொன்ன ஒரு இளம் மனிதன் அந்த போதனையை கேட்ட உடனே வெளியே விரைந்தான். அவன் டாக்டர் கேஹனிடம் இரட்சிக்கப்படுவதைப்பற்றி கேட்க வரவில்லை. அதற்குப் பதிலாக அவன் டாக்டர் மார்டின் லியோடு-ஜோன்ஸ் அவர்களின் போதனைகள் சிலவற்றை படித்து டாக்டர் அவர்கள் மெய்யாகவே அப்படி சொன்னாரா என்று பார்க்க ஓடினான்! ஆமாம், டாக்டர் லியோடு-ஜோன்ஸ் அவர்கள் அப்படி சொன்னார், “மனிதனுடைய அடிப்படை தொந்தரவுகள்” என்ற அவருடைய போதனையில் சொன்னார். டாக்டர் சொன்னார், “நாம் என்ன செய்கிறோம் என்று சரியாக அறிந்து, அதை துணிகரமாக செய்தோம். அது தப்பு என்று நமக்குத் தெரிந்திருந்தும் நாம் அதை ஏன் செய்தோம்?... நாம் நேர்மையாக இருந்து மற்றும் நம்மை நாமே பார்ப்போம். நமது சுபாவம் அப்படிப்பட்டது. அவர்கள் இருளை நேசிக்கிறார்கள், அவர்கள் ஒளியை வெறுக்கிறார்கள். அவர்கள் திருக்குள்ளவர்கள் மற்றும் தீட்டுப்பட்டவர்கள், அவர்கள் தப்பை சரியாக தெரிந்து கொள்ளுகிறார்கள் மற்றும் நன்மையைவிட தீமையை ஆனந்தமாக அனுபவிக்கிறார்கள்... நமக்கு எது சரியானது மற்றும் நல்லது என்று தெரியும் ஆனால் நாம் சரியானதை செய்ய தவறுகிறோம் ஏனென்றால் நமது சுபாவம் அப்படிப்பட்டது நாம் நன்மையை நேசிக்க மாட்டோம்... இது உன்னுடைய சுபாவம் அது தவறானது, உனது இருதயம், உனது தனித்தன்மை மற்றும் உனக்குள் உள்ளது... நமது பாவங்கள் நேர்மறையானவை, துணிகரமானவை மற்றும் முழுசித்தத்தோடு!” இவைகள் அவருடைய சரியான வார்த்தைகள் – அதற்கு நான் விளக்கமாக பொழிப்புரை கொடுத்தேன்! (see Dr. Martyn Lloyd-Jones, Evangelistic Sermons at Aberavon, Banner of Truth, 2010, pp. 65-77). “வெளிப்பிரகாரமான எந்தவடிவங்களும் [உன்னை] சுத்தமாக்க முடியாது; என்னுடைய இந்த டாக்டர் மார்டின் லியோடு-ஜோன்ஸ் அவர்களின் பொழிப்புரையை இந்த சபையில் உள்ள இரட்சிக்கப்பட்ட மக்கள் ஒத்துக்கொள்ளுவார்கள். ஆனால் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதைப்போல நடிக்க விரும்பிய அந்த இளம் மனிதன் இந்த ஆடிட்டோரியத்தை விட்டு ஓடினான். அடுத்த வாரம் டாக்டர் மார்டின் லியோடு-ஜோன்ஸ் அவர்கள் அவனுடைய சொந்த பொல்லாத இருதயத்தைப்பற்றி மெய்யாகவே அப்படி சொன்னாரா என்று பார்க்க முயற்சி செய்தான். அவன் ஏன் அப்படி செய்தான்? ஏனென்றால் அவன், அவனுக்குள், அந்த பொல்லாத அவிசுவாசமுள்ள இருதயம் இருந்தது! அதனால்தான்! இளம் மனிதனே, “வெளிப்பிரகாரமான எந்தவடிவங்களும் உன்னை சுத்தமாக்க முடியாது; ஆழத்தின் உள்ளே குஷ்டரோகம் இருக்கிறது.” எனது மகனே, நீ இதை விட்டு ஓடிவிட முடியாது. உனது பாவம் மற்றும் கலகம் உள்ள இருதயத்தைப்பற்றி நான் சொன்னவைகளை டாக்டர் மார்டின் லியோடு-ஜோன்ஸ் அவர்கள் விசுவாசித்தார்கள்! இந்த மாலையிலே நான் உனக்கு சொல்லுகிறேன், தேவனிடம் உனது இருதயம் “திருக்குள்ளது மற்றும் தீட்டுப்பட்டது” என்று டாக்டர் மார்டின் லியோடு-ஜோன்ஸ் அவர்கள் சொன்னதுபோல நீயாக ஒத்துக்கொள்ளாவிட்டால் நீ ஒருபோதும் இரட்சிக்கப்பட முடியாது. இயேசுவே இதைப்பற்றி சொன்னார், “பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்படுட்டு… மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகள் வருகின்றன” உன்னுடைய பொல்லாத அவிசுவாசமுள்ள இருதயம்! (மாற்கு 7:21, 23). உன்னுடைய “இருதயம் மிகவும் பொல்லாதது” எரேமியா 17:9ன் படியாக. உன்னுடைய பெற்றோரை நீ குற்றப்படுத்த முடியாது. அவர்கள் எவ்வளவு தீயவர்களாக இருந்தாலும் பரவாயில்லை அவர்கள் என்னுடைய பெற்றோரைப்போல அவ்வளவு தீயவர்களாக இருந்திருக்க முடியாது. இல்லை, உன்னுடைய பெற்றோரை நீ குற்றப்படுத்த முடியாது, அவர்கள் எவ்வளவு தீயவர்களாக இருந்தாலும் பரவாயில்லை! உன்னை மட்டுமே நீ குற்றப்படுத்த முடியும். டாக்டர் அவர்கள் உன்னுடைய இருதயத்தைபற்றி சொன்னதை நான் விளக்கமாக சொல்ல நீ கேட்டாய். டாக்டர் அவர்கள் உன்னுடைய தப்பு என்று சொன்னதை நீ கேட்டாய், அது உன்னுடையது மட்டுமே, உன்னுடைய பொல்லாத, அவிசுவாசமுள்ள திருக்குள்ளதும் மற்றும் தீட்டுப்பட்டதுமான அவிசுவாசமான இருதயம். நீ மற்றும் நீ மட்டுமே இயேசு கிறிஸ்துவை புறக்கணித்தாய். நீ மற்றும் நீ மட்டுமே செய்த பாவமான காரியங்களை தெரிந்து கொண்டாய். வேறுயாரும் அதை நீ செய்யும்படி சொல்லவில்லை. நீ இருளை விரும்பினபடியினால் அதை செய்தாய். நீ பாவம் செய்வதில் மகிழ்ந்தாய். நீ பாவத்தில் சந்தோஷப்பட்டாய். அதன் ருசியை நீ நேசித்தாய்! அது தப்பு என்று உனக்கு நன்றாக தெரிந்திருந்தும் நீ அதை நேசித்தாய். ஆத்துமாவை பழிப்புக்கு ஆளாக்குகிற பாவ குஷ்டம் உனது அவிசுவாசமான பொல்லாத இருதயத்தின் ஆழத்தில் கிடக்கிறது! உனது பாவம் நிறைந்த இருதயத்தைப்பற்றிய சத்தியத்தை நான் சொல்லுகிறேன் அதனால்தான் நீ என்னை வெறுக்கிறாய் – இல்லையா? “வெளிப்பிரகாரமான எந்தவடிவங்களும் உன்னை சுத்தமாக்க முடியாது; ஆழத்தின் உள்ளே குஷ்டரோகம் இருக்கிறது” – உனது பாவம் நிறைந்த இருதயத்தின் ஆழத்தில் இருக்கிறது! உனது சுற்றுப்புற சூழ்நிலையையும் நீ குற்றம் சொல்ல முடியாது. மகாஜலபிரளயத்துக்கு பிறகு அந்த உலகத்தின் முன் வெள்ளத்தில் அந்த பொல்லாத சுற்றுப்புற சூழ்நிலை போய்விட்டது. தேவன் நோவாவிடம் சொன்னார், “நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்” (ஆதியாகமம் 6:13). அந்த பெருவெள்ளத்துக்கு முன்பு இருந்த எல்லா பொல்லாத மக்களும் அழிந்து விட்டார்கள். இருந்தாலும், வெள்ளத்துக்குப் பிறகு உடனே, தேவன் சொன்னார், “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது” (ஆதியாகமம் 8:21). லூத்தர் சொன்னார், “அந்தப் பேழையில் இருந்தவர்களை தவிர ஒருவரும் அந்த வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்படவில்லை. இருந்தாலும் தேவன் அவர்களைப்பற்றி மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் பொல்லாததாயிருக்கிறது என்று சொல்லுகிறார்” (லூத்தர் அவர்களின் ஆதியாகமம் 8:21ஐ பற்றிய விமர்சனம்). மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொண்டதால் உனக்கு பொல்லாத இருதயம் வரவில்லை. நீ கர்ப்பத்தில் கர்ப்பம் தரிக்கப்பட்ட அந்த நொடியிலிருந்து உனது இருதயம் பொல்லாததாக இருக்கிறது. லூத்தர் சொன்னார் ஒரு பாவ இருதயம் “இளம் வருடங்களிளேயே, குழந்தைகள், கரு கர்ப்பத்தில் இருக்கும், பொழுது இருந்தே உருவாகி ஜீவிக்கிறது, இதை சங்கீதம் 51:5 காட்டுகிறது... [பாவ இருதயம்] பெற்றுக்கொள்ளப்பட்டது அல்ல [கற்றதும் அல்ல]; தொடக்க நிலையிலுள்ள கருவின் குறுக்கு விட்டம் அது.” அது சரியான நேரத்தில் பழிதீர்க்க வெளிவர தயாராக இருக்கிறது! “வெளிப்பிரகாரமான எந்தவடிவங்களும் உன்னை சுத்தமாக்க முடியாது; ஆழத்தின் உள்ளே குஷ்டரோகம் இருக்கிறது.” ஒரு பொல்லாத இருதயம் முதல் பாவியாகிய ஆதாமிலிருந்து, உனக்குக் கடத்தப்பட்டது. நாம் அனைவரும் அவருடைய சந்ததி. லூத்தர் சொன்னார், “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது, அதுதான் மனிதரின் காரணமாக இருக்கிறது... [உன்னுடைய] காரணமும் அதுவே. [உன் இருதயத்தின் நினைவுகள்] எப்பொழுதும் [தேவனுடைய] சட்டத்துக்கு எதிராக இருக்கிறது, எப்பொழுதும் பாவத்துக்கு கீழாக, எப்பொழுதும் [தேவனுடைய] கோபத்துக்கு கீழாக, மற்றும் இந்த பெரிய பரிதாபகரமான நிலைமையிலிருந்து தனது சொந்த சக்தியினால் தானே தன்னை விடுவித்துக் கொள்ளக்கூடாததாக இருக்கிறது.” வேதாகமம் சொல்லுகிறது, – நீங்கள் அனைவரும் “சுபாவத்தினாலே… கோபாக்கினை யின் பிள்ளைகளாயிருந்தோம்” (எபேசியர் 2:3). – நீங்கள் அனைவரும் “பாவத்திற்குட்பட்டவர்கள்” (ரோமர் 3:9). – நீங்கள் அனைவரும் “அக்கிரமங்களில் மரித்தவர்கள்” (எபேசியர் 2:5). ஏன்? ஏனென்றால் – “இப்படியாக, ஒரே மனுஷனாலே [ஆதாம்] பாவம்… உலகத்திலே பிரவேசித்தது” (ரோமர் 5:12). – ஆதனால்தான் “அந்தப்படியே நீதிமான் ஒருவனாகிலும் இல்லை… எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை” (ரோமர் 3:10, 12). – “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது” (ஆதியாகமம் 8:21). “வெளிப்பிரகாரமான எந்தவடிவங்களும் உன்னை சுத்தமாக்க முடியாது; [உன்னுடைய] ஆழத்தின் உள்ளே [பாவத்தின்] குஷ்டரோகம் இருக்கிறது.” நாம் கத்தோலிக்க சபையின் பொய் போதனைக்கு விரோதமாக போராடிய மார்டின் லூத்தர் அவர்களின், நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறோம், ஆரம்பத்தில் அவர் தொன்னூற்று ஐந்து கருத்தாய்வுகளை ஜெர்மனியில், விட்டன்பர்க்கில் இருந்த தமது சபையின் கதவில் 500 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தச் செவ்வாய்க்கிழமையில், ஆணியடித்து வைத்திருந்தார். அந்த “மூலாதார பாவம்” உன்னுடைய இருதயமானது புரோட்டஸ்டன்ட் மற்றும் பாப்டிஸ்ட் மறுமலர்ச்சியின் மையத்தில் இருக்கிறது. உனக்கு ஒரு பொல்லாத இருதயம் இருக்கிறது என்று வேதாகமம் போதிக்கிறது – மற்றும் உன்னால் அதை மாற்ற முடியாது! “வெளிப்பிரகாரமான எந்தவடிவங்களும் உன்னை சுத்தமாக்க முடியாது; ஆழத்தின் உள்ளே குஷ்டரோகம் இருக்கிறது.” “கற்பனை” என்பது எபிரேய மொழியிலிருந்து வந்த ஒரு வார்த்தையாகும், அதன்பொருள் உனது மனம் அவிசுவாசமுள்ள உனது இருதயம். “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் [எண்ணங்கள்] அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது” (ஆதியாகமம் 8:21). இந்தச் சபையில் இன்று இரவு மறுரூபமாக்கப்படாமல் இருக்கும் – ஒவ்வொருவருடைய மூலதார பாவத்தின் மெய்யான போதனை இதுவாகும்! உங்கள் ஒவ்வொருக்கும் உரியதாகும்! லூத்தர் சொன்னார், “நாம் அந்த மனிதவர்க்கத்தை சார்ந்தவர்கள், தேவனுடைய கிருபை மற்றும் பரிசுத்த ஆவி இல்லாமல், நம்மால் பாவத்தை தவிர வேறொன்றும் செய்ய முடியாது, மற்றும் முடிவில்லாமல் பாவம், ஒரு அக்கிரமத்தின் மேல் மற்றது... [மற்றும்] அவன் தேவனுக்கு விரோதியாக இருக்கிறான், தன்னுடைய பொல்லாத இருதயத்தின் கற்பனைகளுக்குக் கீழ்படியும்பொழுது... நீ நீதிமானாகயிருப்பது போல நடிக்கும்பொழுது.” வெளிப்பிரகாரமான எந்தவடிவங்களும் உன்னை சுத்தமாக்க முடியாது; ஆழத்தின் உள்ளே குஷ்டரோகம் இருக்கிறது! லூத்தர் சரியானவர் என்று அறிந்துக்கொள்ளும்படியாக நமது சபையில் போதுமான அளவு இதை பற்றி நாம் பார்த்தோம் அல்லவா? ஒருவர் பின் ஒருவராக வந்து கிறிஸ்துவை நம்புவதாக நடித்த – அதன்பிறகு சபையைவிட்டு வெளியே சென்று பாவ வாழ்க்கையில் மூழ்கி போனார்கள் இல்லையா? அநேக மக்கள் சிலக்காலம் மட்டும் கிறிஸ்தவர்களாக நடித்து, அதன்பிறகு தேவனுடைய கசப்பான விரோதிகளாக மாறினதை நாம் பார்த்தோம் அல்லவா? ஒலிவாஸ் மற்றும் அவருடைய மக்கள் அதை செய்தார்கள் அல்லவா? அவர்கள் நமது சபையை அழிக்க முயற்சி செய்தபொழுது, லூத்தர் சொன்னது சரியாக இருக்கிறது அல்லவா, “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது” (ஆதியாகமம் 8:21). நமது சபை பின்னியைவிட்டு திரும்பி மற்றும் லூத்தர், மறுமலர்ச்சியாளர்கள், மற்றும் அந்த பழைய பாப்டிஸ்டுகளிடம் திரும்பினது ஏன்? பின்னியினுடைய மிகவும் பிரபலமான போதனை, “பாவிகள் தங்கள் சொந்த இருதயத்தை மாற்றிக்கொள்ள கட்டுப்பட்டவர்கள்”. அதை நீங்கள் எப்படி செய்ய முடியும்? எப்படி? எப்படி? உங்களுடைய சொந்த இருதயத்தை உங்களால் எப்படி மாற்ற முடியும்? உங்களால் முடியாது! பின்னி ஒரு முழுமையான பாலிஜின் மதப்பற்று உள்ளவர். லூத்தர் மற்றும் மறுமலர்ச்சியாளர்கள் கற்பித்த மனிதனுடைய பொல்லாத இருதயம், மற்றும் மூலதார பாவம் போன்றவற்றுக்கு எதிரிடையாக போராடினவர் பின்னி. உன்னுடைய சொந்த இருதயத்தை உன்னால் மாற்ற முடியாது! பின்னி ஒரு பிசாசுபிடித்த மதவெறியன் என்று நான் உணர்த்தப்பட்டேன். அவனை விசுவாசிக்க வேண்டாம்! அதற்கு பதிலாக உன்னுடைய சொந்த இருதயத்தை பார்; அங்கே பாவம் மற்றும் தேவனுக்கு விரோதமான கலகத்தை தவிர வேறொன்றையும் உன்னால் பார்க்க முடியாது! “வெளிப்பிரகாரமான எந்தவடிவங்களும் உன்னை சுத்தமாக்க முடியாது; ஆழத்தின் உள்ளே குஷ்டரோகம் இருக்கிறது.” கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மட்டுமே உன்னுடைய இருதயத்தை சுத்தகரிக்க மற்றும் அதை மாற்ற முடியும். உன்னுடைய பாவங்களுக்குரிய தண்டனை கிரயத்தை செலுத்த சிலுவையில் இயேசு மரித்தார். உன்னுடைய சகல பாவங்களையும் சுத்தகரிக்கும்படியாக சிலுவையில் இயேசு இரத்தம் சிந்தினார். உனக்கு ஒரு புதிய இருதயத்தை கொடுக்க இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார்! நீ இயேசுவை நம்பும்பொழுது அவர் உனக்கு “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிடுவேன்” (எசேக்கியேல் 36:26). கர்த்தராகிய இயேசுவே, நான் இதற்காக தாழ்மையாக கெஞ்சி கேட்பேன், மனிதனுடைய இருதயத்தின் மூலாதார பாவத்தைப்பற்றி லூத்தர் அவர்களின் ஆழ்ந்த வேதாந்தத்தை நான் பேசினேன். இதை எல்லாவற்றையும் நீ புரிந்துக்கொள்ள முடியாமல் போனாலும், இன்று இரவில், நீ இயேசுவை நம்பு என்று நான் உன்னை வேண்டுகிறேன். அவர் உன்னுடைய பாவத்தை மன்னிப்பார். அவர் உன்னுடைய பாவத்தை சுத்திகரிப்பார். அவர் உனக்கு புதிய இருதயம் மற்றும் புது ஆவியை கொடுப்பார். “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (அப்போஸ்தலர் 16:31). நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: |