இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
ஒரு சுவிசேஷ போதனையை தயார் செய்வது எப்படி –
|
அப்போஸ்தலனாகிய பவுல் நீரோ மன்னனுடைய அட்டூழியத்தினால் கொல்லப்பட போவதற்கு சிறிது முன்பாக இந்த வார்த்தைகளை தீமோத்தேயுவுக்கு கொடுத்தார். தீமோத்தேயு பவுலின் சீஷனாக இருந்தார். ஊழியத்தின் வேலையில் அவருக்கு பவுல் பயிற்சி கொடுத்தார். தீமோத்தேயு எபேசு நகரத்தில் இருந்த சபையின்போதகராக மாறினார். ஒரு போதகராக இருக்க வேண்டியது தீமோத்தேயுவின் பிரதானமான வேலையாகும். தீமோத்தேயுவுக்கு “பிலிப்பென்னும் சுவிசேஷகன்” (அப்போஸ்தலர் 21:8)க்கு இருந்த அதே ஊழியம் இல்லாதிருந்தது. பிலிப்பு ஒரு இடத்திலிருந்து மறுஇடத்துக்கு சென்று கொண்டே இருந்தார். பிலிப்பு சமாரியாவுக்குச் சென்று அங்கே கிறிஸ்துவை பிரசங்கித்தார் (அப்போஸ்தலர் 8:5). அதன்பிறகு வனாந்திர மார்க்கமாக சென்று எத்தியோப்பியனாகிய ஒரு மந்திரியை கிறிஸ்துவிடம் நடத்தினார் (அப்போஸ்தலர் 8:26-39). பிறகு பிலிப்பு மற்ற நகரங்களில் பிரசங்கித்தார் (அப்போஸ்தலர் 8:40). பிலிப்பு ஒரு நடமாடும் சுவிசேஷகர். தீமோத்தேயு ஒரு ஸ்தல சபையின்போதகர். பவுல் “சுவிசேஷகனுடைய வேலையைச் செய்” என்று தீமோத்தேயுக்கு ஏன் சொன்னார்? ஏனென்றால் ஒவ்வொரு போதகரும் சுவிசேஷகனுடைய வேலையைச் செய்ய வேண்டுமென்று அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்! பவுல் தீமோத்தேயுக்கு சொன்னார் “உன் [அவருடைய] ஊழியத்தை நிறைவேற்று” (II தீமோத்தேயு 4:5). அவர் நிறைவேற்ற வேண்டிய ஊழியம் என்னவாக இருந்தது? சுவிசேஷகனுடைய வேலையை செய்தல்! ஒவ்வொரு போதகரும் சுவிசேஷகனுடைய வேலையைச் செய்ய வேண்டுமென்று அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். நீங்கள் அதை செய்யவில்லையானால், தேவன் உங்களுக்கு செய்யும்படி கட்டளையிட்ட வேலையை நீங்கள் செய்து கொண்டிருக்கவில்லை! ஒவ்வொரு போதகரும் தமது சபையில் பிரசங்கம் செய்கிறார்கள். அது அவருடைய அழைப்பு. மற்றும் ஒவ்வொரு போதகரும் தமது சபையில் சுவிசேஷ போதனைகளை பிரசங்கம் செய்ய வேண்டியது அவசியம் – அவைகள் அடிக்கடி பிரசங்கிக்க வேண்டும்! நீங்கள் ஒரு ஞாயிறு பள்ளி வகுப்பில் ஒரு வருடத்தில் ஒருசில நேரங்கள் சுவிசேஷத்தை சொல்லிவிட்டால், நீ ஒரு உண்மையுள்ள பிரசங்கி அல்ல. நீ செய்வது அனைத்தும் மக்களுக்கு போதிப்பது என்றால், நீ ஒரு உண்மையுள்ள பிரசங்கி அல்ல. உன்னுடைய ஊழியம் வெறும் வேதபோதனை அல்ல. நீ ஒரு சுவிசேஷகனுடைய வேலையைச் செய்ய வேண்டியது அவசியம். நீ சுவிசேஷ போதனைகளை பிரசங்கம் செய்ய வேண்டியது அவசியம், மற்றும் அதை ஒழுங்காக தொடர்ந்து செய்ய வேண்டும். ஒரு சுவிசேஷ போதனை என்றால் அது என்ன? ஒரு சுவிசேஷ போதனை என்பது கூட்டத்திலுள்ள இழக்கப்பட்ட மக்களை நேரடி இலக்காக வைப்பது, அவர்களில் சிலர் ஒவ்வொரு வாரமும் சபைக்கு வந்தாலும், எப்பொழுதும் ஒவ்வொரு கூட்டங்களிலும் அநேகர் இருப்பார்கள். சுவிசேஷ போதனை முழுவதும் பாவம் மற்றும் கிறிஸ்துவில் இரட்சிப்பு பற்றிய சத்தியத்தை அறிவிக்கிறது – அதனால் இழக்கப்பட்ட மக்கள் அதை கேட்டு இயேசுவை நம்புவார்கள் மற்றும் இரட்சிக்கப்படுவார்கள். ஒரு சுவிசேஷ போதனை என்பது அநேக வேதவசனங்களைக் கொண்டு விளக்கமாக அமைந்த ஒரு போதனை அல்ல. ஒன்று அல்லது இரண்டு வசனங்களை எடுத்துக்கொள்ளுங்கள் அதிலிருந்து பிரசங்கியுங்கள். சுவிசேஷ போதனைகள் அதிக பட்சமாக ஒன்று அல்லது இரண்டு வசனங்களை கொண்டு சத்தியத்தை இலக்காக வைப்பதாகும். அநேக வேதவசனங்களைக் கொண்டு விளக்குவது சுவிசேஷ போதனைகள் அல்ல. ஸ்பர்ஜனுடைய சுவிசேஷ போதனைகளை படியுங்கள். இன்று நாம் “விளக்கமான” போதனைகள் என்று அழைப்பதைபோல அவைகளில் ஒன்றும் இருக்காது. அப்போஸ்தலர் புத்தகத்தில் ஒவ்வொரு போதனையிலும் ஒரு சுவிசேஷ போதனை இருந்தது. அப்போஸ்தலர் புத்தகம் முழுவதிலும் ஒரே ஒரு “விளக்கமான” போதனை இருக்கிறது! நாம் சுவிசேஷ போதனைகளை பிரசங்கிக்கும்பொழுது அப்போஸ்தலர்கள் மற்றும் ஸ்பர்ஜனுடைய மாதிரியை பின்பற்ற வேண்டும்! வெகுசில போதகர்கள் மட்டுமே சுவிசேஷ போதனைகளை பிரசங்கிக்கிறார்கள். அநேகர் அவைகளை பிரசங்கிப்பதே இல்லை. அமெரிக்காவில் இன்று சுவிசேஷ போதனைகளை கேட்பது அபூர்வமாக இருக்கிறது. மற்ற நாடுகளிலும் அதிக வித்தியாசம் ஒன்றுமில்லை. போதகர்கள் தங்கள் மக்களுக்கு வேதத்தை போதிக்கிறார்கள் – அல்லது குணமாக்குதல்களை, செழுமையை, மற்றும் நல்லதாக உணர்வதை – கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அல்லாமல் மற்றவைகளை அவர்கள் போதிக்கிறார்கள்! அவர்கள் வேதத்துக்கு கீழ்படியவில்லை, வேதம் சொல்கிறது, “சுவிசேஷகனுடைய வேலையைச் செய்.” ஒருவேளை நீங்கள் சொல்லலாம், “ஆனால் நான் எப்படி ஒரு சுவிசேஷ போதனையை தயார் செய்ய முடியும்? நான் என்ன செய்ய வேண்டும்?” அதைபற்றிதான் இந்த செய்தி. எப்படி ஒரு சுவிசேஷ போதனையை பிரசங்கம் செய்வது என்று நான் உங்களுக்கு சொல்லப் போகிறேன். ஒரு சுவிசேஷ போதனை என்பது நற்செய்தியை மையமாககொண்ட போதனை. நற்செய்தி போதனை என்றால் என்ன? நற்செய்தியை பிரசிங்கிக்க வேண்டுமானால் நற்செய்தி என்றால் என்ன என்பதை நீ அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார், “நான் உங்களுக்கு… சுவிசேஷத்தை தெரியப்படுத்து கிறேன்… கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த் தெழுந்தார்” (I கொரிந்தியர் 15:1, 3, 4). மறுபடியுமாக, அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார், “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” (I தீமோத்தேயு 1:15). ஒரு சுவிசேஷ போதனையில் இரண்டு பகுதிகள் அடங்கி உள்ளன. முதலாவது, மனிதனுடைய பாவத்தின் பிரச்சனை; மற்றும் இரண்டாவது, மக்களை அவர்களுடைய பாவத்திலிருந்து இரட்சிக்க கிறிஸ்து என்ன செய்தார். I. முதலாவது, நீங்கள் மக்களுக்கு அவர்களுடைய பாவம் நிறைந்த இருதயத்தை பற்றி சொல்லக்கூடிய – நியாய பிரமாணத்தை பிரசங்கிக்க வேண்டும். ஒரு சுவிசேஷ போதனையின் முதல் பகுதியில், நியாய பிரமாணத்தை பிரசங்கிக்க வேண்டியது அவசியம். ஒருவர் இயேசுவை ஏன் நம்ப வேண்டும்? காரணம் என்ன? இயேசு ஏன் சிலுவையில் மரித்தார்? மக்கள் சிறந்த வாழ்க்கை வாழமுடியும் அல்லது மகிழ்ச்சியாக இருக்க முடியும், அல்லது நட்பும் காதலும் கண்டு கொள்ளமுடியும், அதற்காக இயேசு அப்படி மரித்தார் என்று அநேக போதனைகள் மக்களுக்கு சொல்லப்படுகிறது. ஆனால் அதற்காக இயேசு சிலுவையிலே மரிக்கவில்லை! இயேசுவை நம்பினால் பரலோகத்துக்கு போகலாம் என்று சில போதனைகள் மக்களுக்கு சொல்லப்படுகிறது. ஆனால் பரலோகத்துக்கு போக இயேசு ஏன் அவர்களுக்கு தேவைப்படுகிறார் என்று அது சொல்லாவிட்டால் அது ஒரு சுவிசேஷ செய்தி அல்ல. வேதம் சொல்லுகிறது, “கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார்.” வேதம் சொல்லுகிறது, “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்.” மக்கள் தாங்கள் பாவிகள் என்று உணராவிட்டால், அவர்கள் ஏன் கிறிஸ்துவினிடம் வரவேண்டும்? அவர்கள் வரவேண்டியதில்லை! அவர்கள் ஒரு ஜெபத்தை ஜெபிக்கலாம். அவர்கள் தங்கள் கைகளை உயர்த்தலாம். அவர்கள் ஒரு போதனையின் முடிவில் முன்னுக்கு நடந்து வரலாம். ஆனால் அவர்கள் இரட்சிக்கப்பட முடியாது! ஏன்? ஏனென்றால் அவர்கள் இரட்சிக்கப்பட ஒன்றுமில்லை! மக்கள் பாவிகள் என்று அவர்களுக்கு நீ எப்படி காட்ட முடியும்? அவர்களுக்கு தேவனுடைய பிரமாணங்களை போதிப்பதன் மூலமாக காட்டலாம். வேதம் சொல்லுகிறது, “நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது” (கலாத்தியர் 3:24). நியாயப்பிரமாணமானது மக்கள் பாவிகள் என்று அவர்களுக்கு காட்டுகிறது. தங்கள் இருதயத்தின் பாவத்தினால் உணர்த்தப்பட்ட பிறகு, ஒருவேளை அவர்கள் கிறிஸ்துவிடம் வரலாம். அநேக போதகர்கள் பிரமாணத்தை போதிக்க பயப்படுகிறார்கள். மக்கள் கோபப்படுவார்கள் என்று பயப்படுகிறார்கள். ஐயன் எச். முர்ரே சொன்னார் இது “சுவிசேஷ ஊழியத்தில் பிரதானமான பிரச்சனை.” இந்தப் புத்தகத்தில், அவருடைய பழைய சுவிசேஷ ஊழியம் (Banner of Truth, 2005; பக்கம் 3ல் இருந்து 37 வரை வாசிக்கவும்), சுவிசேஷ ஊழியத்தில் பிரதானமான காரணத்தை முர்ரே சரியாக நமக்குச் சொல்லுகிறார் இழக்கப்பட்டவர்கள் இடறல் அடைவார்கள் என்ற பயம் அதனால் இன்று ஊழியம் இவ்வளவு பலனற்றதாக இருக்கிறது. நீ என்ன வேண்டுமானாலும் செய், தனிப்பட்ட பாவங்களுக்கு விரோதமாக பிரசங்கிக்காதே. “இதை செய். அதை செய்யாதே.” இது மக்களுடைய மெய்யான அல்லது குறிப்பிட்ட, பாவங்களைபற்றி பேசுகிறது. ஆனால் பாவம் அதிக ஆழமாக போகிறது. அவர்கள் உள்ளே பாவிகள். அவர்களுக்கு ஆதாமிடமிருந்து சுதந்தரித்துக்கொண்ட, பாவம் நிறைந்த இருதயம் இருக்கிறது. அதனால்தான் தாவீது சொன்னார், “நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்” (சங்கீதம் 51:5). அதனால்தான் வேதம் சொல்லுகிறது, “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது” (எரேமியா 17:9). வேதம் சொல்லுகிறது, “மாம்சசிந்தை [மாறாத மனம்] தேவனுக்கு விரோதமான பகை” (ரோமர் 8:7). அதனால்தான் மக்கள் செய்யும் கெட்ட காhpயங்களை அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதிலிருந்து வருகிறது. கிறிஸ்து சொன்னார், “மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்… பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்படும்” (மாற்கு 7:21, 23). மக்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைவிட அதிக ஆழமானது. ஒருவேளை யாராவது நல்லவனாக இருக்க முயற்சி செய்தாலும், ஒரு செம்மறி ஆடு வெள்ளாடாக தன்னைத்தானே மாற்ற முடியாததுபோல, அவன் தன்னுடைய இருதயத்தை ஒருபோதும் மாற்ற முடியாது. மக்களை கற்பித்து கிறிஸ்தவர்களாக்க முடியாது. இந்த போதனையிலே நான் விளக்கினதுபோல, அவர்களுக்கு பிரசங்கிக்கப்பட வேண்டும். தேவன் மனித செயல்பாடுகளை கண்டிப்பதுபோல மனித இருதயத்தையும் கண்டிக்கிறார். வேதம் சொல்லுகிறது, “யாவரும் பாவத்திற்குட்பட்டவர்கள்” (ரோமர் 3:9). மாறுதல் அடைவதற்கு முன்பாக ஒவ்வொருவரும் பாவத்தின் வல்லமை மற்றும் தண்டனைக்கு கீழாக இருக்கிறார்கள். நீங்கள் நியாயப்பிரமாணத்தை பிரசங்கிக்க வேண்டியது அவசியமாகும் அதனால் மக்கள் தங்கள் இருதயம் பாவம் நிறைந்தது என்று உணர மற்றும் பார்க்க முடியும். இப்பொழுது, மக்கள் தங்களை ஏதோ ஒரு வழியில் பாவமுள்ளவர்கள் என்று ஒத்துக்கொள்ளுகிறார்கள். தன்னை பரிபூரணமானவன் என்று உரிமை கோரிய ஒருவரையும் ஒருபோதும் நான் சந்தித்ததில்லை. ஒரு மனிதன் ஒரு பிரசங்கியிடம் சொன்னான், “நான் நானாக [ஒரு பாவி] என்று வைத்துக் கொள்ளலாம், ஆனால் நான் ஒரு மோசமான பாவி என்று அழைக்கப்படும் அளவுக்கு பாவியல்ல. நான், ஒரு நல்லவன் என்றும், நான் நினைக்கவில்லை. நான் அறிந்த வரையில் எப்பொழுதும் சிறந்ததை செய்ய முயற்சி செய்கிறேன்.” அந்த மனிதன் இரட்சிக்கபடுவதற்கு தயாராக இல்லை! அவன் இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக, தான் ஒரு “கெட்ட” பாவி என்று பார்க்க வேண்டியது அவசியம். அதனால்தான் அவர்களுடைய பாவம் நிறைந்த உள்ளங்களுக்கு பிரசங்கிக்க வேண்டியது அவசியம். தேவனுடைய நியாயப்பிரமாணம் இல்லாமல், மக்கள் கிறிஸ்துவின் சுவிசேஷம் ஏன் தேவை என்பதை பார்க்கமாட்டார்கள். அதனால்தான் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவதற்கு முன்பாக நீங்கள் நியாயப்பிரமாணத்தை பிரசங்கிக்க வேண்டியது அவசியமாகும். வேதம் சொல்லுகிறது, “நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது” (கலாத்தியர் 3:24). ஒரு பள்ளி ஆசிரியரைப்போல, நியாயப்பிரமாணம் மக்களுக்கு கிறிஸ்து ஏன் அவர்களுக்கு வேண்டும் என்று காட்டுகிறது. முதலில் நியாயப்பிரமாணம். அதன்பிறகு சுவிசேஷம். லூத்தர் சொன்னது மிகவும் சரியானது. சுவிசேஷ போதனையை எப்படி பிரசங்கிப்பது என்று நீ கற்றுக்கொள்ள விரும்பினால் அவர் சொன்னதை நீ கவனமாக படிக்க வேண்டும். லூத்தர் சொன்னார், இது அவசியம், நீ மாறுதலடைந்தால், நீ [கஷ்டப்]படுத்தப்படுவாய், அதாவது, உனக்கு ஒரு எச்சரிப்பின் சத்தம் கேட்கும் மற்றும் மனசாட்சியில் தொந்தரவு படுத்தப்படுவாய். பிறகு, இதற்கு பிறகு நிலைமை சிருஷ்டிக்கப்படும், உன்னுடைய எந்த ஒரு சொந்த கிரியையினாலும் இல்லாத ஆனால் தேவனுடைய கிரியையினாலே உண்டான ஆறுதலை நீ பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். பயப்படுத்தப்பட்ட பாவிகளுக்கு இரக்கத்தை அறிவிக்கும்படியாக அவர் தமது குமாரனாகிய இயேசுவை இந்த உலகத்துக்கு அனுப்பினார். இதுவே மாறுதலின் வழியாகும். மற்ற எல்லாவழிகளும் பொய்யான வழிகளாகும். (Martin Luther, Th.D., What Luther Says, Concordia Publishing House, 1994 reprint, Number 1014, page 343). நான் சொன்னேன், “நீங்கள் நியாயப்பிரமாணத்தை பிரசங்கிக்க வேண்டியது அவசியமாகும் அதனால் மக்கள் தங்கள் இருதயம் பாவம்நிறைந்தது என்று உணர மற்றும் பார்க்க முடியும்.” நான் சொல்லவில்லை, “நீங்கள் நரகத்தை பற்றி பிரசங்கிக்க வேண்டியது அவசியம்”. ஆமாம், கிறிஸ்து நரகத்தை பற்றி பேசினார். நரகம் மெய்யாக இருக்கிறது. ஆனால் நீங்கள் நரகத்தைபற்றி பேசும்பொழுது ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியமாகும். நரகத்துக்கு பயந்து கொண்டு இருப்பதால் ஒருமனிதனும் இரட்சிபடைய முடியாது. ஒருவேளை நல்ல மக்களாக இருக்க அவர்கள் முயற்சி செய்யலாம். ஒருவேளை அவர்கள் மிகவும் அதிக மதவாதிகளாக மாறலாம். ஆனால் நரகத்துக்கு பயந்து கொண்டு இருப்பது ஒருமனிதனையும் ஒருபோதும் இரட்சிக்காது. கிறிஸ்து நமது பவங்களுக்காக மரித்தார். நரகம் பாவத்தின் விளைவாக மட்டுமே வந்தது. அந்த உண்மையான பிரச்சனை பாவம் தான், நரகம் அல்ல. நரகத்தை பற்றிய முழு போதனையும் மக்களை மாறுதலடைய செய்யாது என்பதை நாங்கள் கண்டோம். ஒரு சுவிசேஷ போதனையின் முதல் பகுதியில் அவர்களுடைய பாவத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் – ஏதோ தனிபட்ட பாவத்தை அல்ல, ஆனால் அவர்களுடைய இருதயத்தின் பாவத்தை வெளிப்படுத்த வேண்டும். அவர்களுடைய பாவத்தை எடுத்துக் காட்டும்படியாக, நீங்கள் அவர்களுடைய பாவம் நிறைந்த, கலகமுள்ள இருதயங்களுக்கு விரோதமாக பிரசங்கிக்க வேண்டும். ஆனால் நீங்கள் அங்கேயே நிறுத்திவிடக் கூடாது. நியாயப்பிரமாணம் ஒருவரையும் இரட்சிக்காது. நியாயப்பிரமாணம் மக்களுடைய இருதயங்களின் பாவத்தை எடுத்துக்காட்டும். வேதம் சொல்லுகிறது, “பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை” (ரோமர் 3:20). வேதம் சொல்லுகிறது மக்களை இரட்சிக்க “நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை” (ரோமர் 8:3). கிறிஸ்து மட்டுமே பாவியினுடைய இருதயத்தை மாற்ற முடியும். கிறிஸ்துவின் இரத்தம் மட்டுமே பாவத்தை கழுவ முடியும். அது என்னை இரண்டாவது இடத்துக்கு கொண்டு வருகிறது. II. இரண்டாவது, நீங்கள் நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டியது அவசியம் – அது மக்களை பாவத்திலிருந்து இரட்சிக்க கிறிஸ்து என்ன செய்தார் என்று சொல்லுகிறது. இரண்டாவது பகுதியில் சுவிசேஷ போதனையாக, நீங்கள் நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டியது அவசியம். நற்செய்தி என்பது எப்படி நல்லவர்களாக மாறுவது என்று கற்றுகொடுப்பது அல்ல. நற்செய்தி என்பது ஒரு சபையைபற்றி, அல்லது பரலோகத்தைபற்றிய செய்தி அல்ல. நற்செய்தி என்பது “கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்தார்” (I கொரிந்தியர் 15:3). நற்செய்தி என்பது “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” (I தீமோத்தேயு 1:15). நற்செய்தி என்பது ஏதோ சட்டங்களை உண்டாக்குவது அல்ல. நற்செய்தி என்பது பாவியை தேவன் அவ்வளவாக நேசித்தபடியினால் கிறிஸ்து அவனுக்காக மரிக்க வந்தார் என்பதை காட்டுகிறது. நற்செய்தி என்பது நியாயப்பிரமாணத்திலிருந்து உண்டானது அல்ல. அது சுத்தமான அன்பு மற்றும் கிருபையாக இருக்கிறது. லூத்தர் சொன்னதுபோல, நற்செய்தி... நாம் என்ன செய்ய வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும் என்பதை போதிப்பதில்லை. அது எந்த ஒரு வேண்டுதலையும் வைப்பது அல்ல ஆனால் அது நியாயப்பிரமாணத்தின் அனுகுமுறைக்கு எதிர்மறையானது, நேரெதிராக செயல்படுகிறது, மற்றும் சொல்லுகிறது, ‘தேவன் உனக்காக இதைதான்செய்தார்; அவர் தமது குமாரனை உனக்காக மாம்சமாக்கினார், அவா உனக்காக அவரை மரணமடையும்படி விட்டு விட்டார்’ ...நற்செய்தி போதிக்கிறது... தேவனால் நமக்கு கொடுக்கப்பட்டது என்ன, மற்றும் இல்லாதது... நாம் தேவனுக்கு செய்ய மற்றும் கொடுக்க என்ன இருக்கிறது (“கிறிஸ்தவர்கள் மோசேயை எப்படி உன்னிப்பாக நோக்க வேண்டும்,” 1525). சுவிசேஷம் ஒரு பாவிக்கு ஒரு புதிய இருதயத்தை கொடுக்க, கிறிஸ்து சிலுவையிலே மற்றும் வெறுமையான கல்லறையிலே செய்த காரியத்தால் பாவமன்னிப்பு! இயேசுவை நம்பும் நபர் “இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படு கிறார்கள்; கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக (பாவத்துக்கு ஒரு விலைக்கிரயமாக) அவரையே ஏற்படுத்தினார்” (ரோமர் 3:24, 26) வேதாகமம் சொல்லுகிறது, “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது [அன்பை] விளங்கப்பண்ணுகிறார். இப்படி [நாம்] அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்” (ரோமர் 5:8, 9). கிறிஸ்து பாவியின் ஸ்தானத்தில் அவனுடைய பாவதுக்குரிய தண்டனை கிரயத்தை கொடுப்பதற்காக மரித்தார். ஏசாயா சொன்னதுபோல, “கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் [கிறிஸ்து] விழப்பண்ணினார்” (ஏசாயா 53:6). இயேசு கிறிஸ்துவின் மூலமாக இலவசமான பாவமன்னிப்பின் கிருபை சுவிசேஷமாக இருக்கிறது. நீங்கள் சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்போது, கணக்காக கிறிஸ்துவின் மரணத்தை பிரசங்கிக்க வேண்டாம். கிறிஸ்துவின் உயிர்தெழுதலை பிரசங்கிக்க வேண்டும்! இது சுவிசேஷத்தின் பகுதி கிறிஸ்துவானவர் “வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்” (I கொரிந்தியர் 15:4). கிறிஸ்துவின் உயிர்தெழுதல் முக்கியமானது. வேதாகமம் சொல்லுகிறது, “கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்” (I கொரிந்தியர் 15:17). கிறிஸ்து மரித்து தமது கல்லறையிலே இருக்கவில்லை. அவர் பாவிகளுக்கு புதிய இருதயத்தை கொடுக்க மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் (பார்க்கவும் எசேக்கியேல் 11:19; 36:26, 27). கணக்காக கிறிஸ்துவின் மரணத்தை மட்டும் பிரசங்கிக்க வேண்டாம். கிறிஸ்துவின் இரத்தத்தை பிரசங்கிக்க வேண்டும்! மக்கள் எப்படி இரட்சிக்கப்படுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் “இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே” (ரோமர் 3:26). வேதாகமம் சொல்லுகிறது, “நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப் பட்டிருக்கிறோம்” (ரோமர் 5:9). மற்றும் வேதாகமம் சொல்லுகிறது, “இரத்தஞ்சிந்துதலில்லாமல் [மன்னிப்பு] உண்டாகாது” (எபிரெயர் 9:22). டாக்டர் ஜான் மெக் ஆர்த்தர் சொல்லுகிறார் இரட்சிப்புக்கு கிறிஸ்துவின் இரத்தம் அவசியமில்லை மற்றும் இன்று கிறிஸ்துவின் இரத்தம் இல்லை என்று, இப்பொழுது அவரை அநேக பிரசங்கிகள் பின்பற்றுகிறார்கள் இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் உண்மையுள்ள நல்ல போதகர்கள் கிறிஸ்துவின் இரத்தத்தை பிரசங்கிக்கிறார்கள்! டாக்டர் மார்டின் லியோடு-ஜோன்ஸ் சரியாக சொன்னார், “எழுப்புதலின் காலங்களில்... [சபை] இரத்தத்தைபற்றி மேன்மை பாராட்டும்... மகா பரிசுத்த ஸ்தலத்தில் [இடம்] நாம் தைரியமாக பிரவேசிக்க ஒரே ஒரு வழிதான் உண்டு, அது இயேசுவின் இரத்தத்தின் மூலமாக மட்டுமே ஆகும்” (எழுப்புதல், கிராஸ் வே புக்ஸ், 1992 பதிப்பு, ப. 48). இரத்தத்தை பிரசங்கி! இரத்தத்தை பிரசங்கி! “இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (I யோவான் 1:7). சுவிசேஷம் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய இலவசமான ஈவாக இருக்கிறது. பாவி தன்னைத்தானே நல்லவனாக்கிக்கொள்ள முடியாது. பாவி செய்யவேண்டிய ஒரே ஒரு காரியம் உண்டு. அவன் இயேசுவை நம்ப வேண்டியது அவசியம். இயேசுவை பற்றிய ஒரு உண்மையை விசுவாசிப்பது மட்டுமே அவனை இரட்சிக்காது. அவன் இயேசுவையே நம்ப வேண்டியது அவசியமாகும். அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியன் சிறைசாலைகாரனிடம் சொன்னார், “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை [கிரேக்கில் எப்பி-மீது, வில்] விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (அப்போஸ்தலர் 16:31). ஒரு பாவி இயேசுவை நம்பினால், அவன் இரட்சிக்கப்படுவான். மற்றும் பாவிகள் அனைவரும் இயேசுவை நம்ப வேண்டியது அவசியம். இயேசு எல்லாவற்றையும் செய்கிறார். அவர் பாவிக்கு புதுபிறப்பின்போது ஒரு புதிய இருதயத்தை கொடுக்கிறார் (எபேசியர் 2:5; யோவான் 3:6, 7) மற்றும் அவர் தம்முடைய இரத்தத்தினாலே பாவியை எல்லா பாவத்திலிருந்தும் கழுவுகிறார் (எபிரேயர் 9:14; வெளிப்படுத்தல் 1:5ஆ; 5:9ஆ). “அவரை மட்டும் நம்ப வேண்டும், அவரை மட்டும் நம்ப வேண்டும், அவரை மட்டும் இப்பொழுதே நம்ப வேண்டும். அவர் உன்னை இரட்சிப்பார், அவர் உன்னை இரட்சிப்பார், அவர் உன்னை இப்பொழுதே இரட்சிப்பார்” (“அவரை மட்டும் நம்ப வேண்டும்” ஜான் எச். ஸ்டாக்டன், 1813-1877). உங்கள் போதனையின் கடைசியில், பாவிகளை இயேசுவை நம்பும்படி அழைப்புக் கொடுங்கள். நீங்கள் அவர்களோடு தனிமையாக பேசக்கூடிய ஒரு அறைக்கு வரும்படி சொல்லுங்கள். அவர்கள் வந்து உங்களோடு பேசினால் வேலை முடிந்துவிடவில்லை. “முன்னுக்கு வருவது” என்பது இயேசுவை நம்புவதை போல் அல்ல. “கையை உயர்த்துவது” அல்லது ஒரு “பாவியின் ஜெபத்தை” சொல்லுவது என்பது இயேசுவை நம்புவதை போல் அல்ல. இயேசுவை நம்புவதை என்பது இயேசுவை நம்புவதைதான் – வேறு ஒன்றும் இல்லை. அதனால்தான் உங்கள் போதனையின் கடைசியில் உங்கள் அழைப்புக்குப் பதில் கொடுத்தவர்களோடு நீங்கள் தனிமையாக பேசவேண்டும். அது ஏனென்றால் நீங்கள் அவர்களை நன்றாக கவனித்து செவிகொடுக்க வேண்டும். அப்படி கவனிப்பதால் அவர்கள் விசுவாசிக்கும் பொய்யான யோசனைகளை நீங்கள் அறிந்து கொள்ளலாம், அதனால் நீங்கள் அவர்களை திருத்த முடியும். ஒவ்வொருவரோடும் தனித்தனியாக பேசுங்கள் மற்றும் உங்களால் முடிந்த மட்டும் சிறந்தவகையில் கிறிஸ்துவிடம் அவர்களை நடத்துங்கள். ஆனால் அது மற்றொரு செய்தியின் பொருளாகும். நீங்கள் இருதயத்தின் பாவங்களைபற்றி மற்றும் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கிடைக்கும் பாவமன்னிப்பைப்பற்றி பிரசங்கம் செய்யும்பொழுது தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. டாக்டர் ஆர். எல். ஹைமர்ஸ் அவர்களால் எழுதப்பட்ட ஒரு சுவிசேஷ போதனையை படிக்க வேண்டுமானால் இங்கே கிளிக் செய்யவும். டாக்டர் ஆர்.எல். ஹைமர்ஸ் அவர்கள் அறுபது ஆண்டுகளாக சுவிசேஷ போதனை செய்து வருகிறார்கள். அவருடைய சுவிசேஷ போதனைகளை படிப்பதன் மூலமாக நீங்கள் ஏராளமானவைகளை கற்றுக்கொள்ள முடியும், “கழுவு மற்றம் சுத்தமாக இரு! – ஒரு மாதிரி படிவமான மாறுதல்” தலைப்பை கிளிக் செய்து படியுங்கள். இது எப்படி நியாயப்பிரமாணத்தை போதிப்பது மற்றும் ஒரு சுவிசேஷ போதனையை கொடுப்பது எப்படி என்று உங்களுக்கு காட்டும். நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் |
முக்கிய குறிப்புகள் ஒரு சுவிசேஷ போதனையை தயார் செய்வது எப்படி – HOW TO PREPARE AN EVANGELISTIC SERMON – டாக்டர் சி.எல். கேஹன் மற்றும் “சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று” (அப்போஸ்தலர் 21:8; 8:5, 26-39, 40; I கொரிந்தியர் 15:1, 3, 4;
I. முதலாவது, நீங்கள் மக்களுக்கு அவர்களுடைய பாவம் நிறைந்த இருதயத்தை பற்றி சொல்லக்கூடிய – நியாய பிரமாணத்தை பிரசங்கிக்க வேண்டும், கலாத்தியர் 3:24; சங்கீதம் 51:5;
II. இரண்டாவது, நீங்கள் நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டியது அவசியம் – அது மக்களை பாவத்திலிருந்து இரட்சிக்க கிறிஸ்து என்ன செய்தார் என்று சொல்லுகிறது, I கொரிந்தியர் 15:3; I தீமோத்தேயு 1:15; ரோமர் 3:24, 25; 5:8, 9; ஏசாயா 53:6; I கொரிந்தியர் 15:4, 17; எசேக்கியேல் 11:19; 36:26, 27;
|