Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




ஜெபிப்பது எப்படி மற்றும் ஒரு ஜெபக்கூட்டத்தை நடத்துவது எப்படி

(டாக்டர் தீமோத்தேயு லின் அவர்களின் போதனை, 1911-2009)
HOW TO PRAY AND HOW TO CONDUCT A PRAYER MEETING
(THE TEACHINGS OF DR. TIMOTHY LIN, 1911-2009)
(Tamil)

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் எழுதப்பட்டு
திரு. ஜான் சாமுவேல் கேஹனால் அக்டோபர் 15, 2017
கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள
பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon written by Dr. R. L. Hymers, Jr.
and preached by Mr. John Samuel Cagan
at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, October 15, 2017

“ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்” (லூக்கா 18:8).


டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீண்ட நாட்களாக போதகராக இருந்த, டாக்டர் தீமோத்தேயு லின் (1911-2009) அவர்கள், வேதத்தை மிகப்பெரிய அளவில் புரிந்து கொண்டவராக இருந்தார். அவர் எபிரெய மற்றும் காக்னேட் மொழியிலும் Ph.D பட்டம் பெற்றவராக இருந்தார். 1950ல், பாப்ஜோன்ஸ் பல்கலை கழகத்தில் பட்டப்படிப்பு பள்ளியில், அவர் முறையான இறையியல் ஆய்வு, வேதாகம இறையியல் ஆய்வு, எபிரேய பழைய ஏற்பாடு, அராமிக் வேதாகமம், முதல் தரமான இலக்கிய நயம் வாய்ந்த அராபிக், மற்றும் பெஸ்சிடா சிரியாக் போன்றவைகளையும் போதித்தார். அதன்பிறகு சீன சுவிசேஷ செமினரியின் தலைவராக இருந்தார், டாக்டர் ஜேம்ஸ் ஹட்சன் டய்லர் III அவர்களுக்குப் பின் வந்தவராகும். மேலும் அவர் த நியு அமெரிக்கன் ஸ்டேன்டர்டு பைபுளின் (NASB) மொழிபெயர்பாளர்களில் ஒருவராகவும் இருந்தார். டாக்டர் தீமோத்தேயு லின் டாக்டர் ஆர். எல். ஹைமர்ஸ், ஜூனியர் அவர்களுக்கு இருபத்தி நான்கு ஆண்டுகளாக போதகராக இருந்தவர். டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் கேள்விக்கு இடமில்லாமல் சொன்னார்கள், அவர் அறிந்தவர்களிலிலேயே டாக்டர் லின் அவர்கள் மிகவும் ஆற்றல் வாய்ந்த போதகர். அவருடைய சபையின் உறுப்பினராக இவர் இருந்தபொழுது அநேக நூற்றுக்கணக்கான மக்களை இரட்சித்துச் சபைக்குக் கொண்டு வந்த ஒரு எழுப்புதலை தேவன் அனுப்பினதை டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் கண்டார்கள்.

“ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்” (லூக்கா 18:8).

இந்த வசனத்தை அதிகமான விமர்சகர்கள் சரியாக நடவடிக்கை மேற்கொள்வதில்லை. உதாரணமாக, ஒரு பிரபலமான விமர்சனம் சொல்லுகிறது, “இந்த பூமி முழுவதிலுமுள்ள பொதுவான நிலைமை அவிசுவாசமாக இருக்கும்.” ஆனால் இந்த பகுதியில் இயேசு பேசிக்கொண்டிருப்பது இது அல்ல. அவர் கடைசி நாட்களில் நடக்க போகும் பொதுவான கடமை தவறுதலைப்பற்றி பேசவில்லை, அவர் வரும்போது உண்மையான கிறிஸ்தவர்கள் இருப்பார்களா என்பதைப்பற்றியும் அவர் கேட்கவில்லை. உண்மையில், இயேசு பேதுருவிடம் இதற்கு எதிர்மறையானதை சொன்னார்,

“இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” (மத்தேயு 16:18).

மத்தேயு 16:18 நமக்குக் காட்டுகிறது, அந்த பெரிய கடமை தவறுதல் எவ்வளவு ஆழமானதாக மற்றும் பயங்கரமானதாக மாறினாலும் பரவாயில்லை, கிறிஸ்து திரும்ப வரும்பொழுது இரட்சிப்பின் நம்பிக்கையோடு இன்னும் அநேக கிறிஸ்தவர்கள் இருப்பார்கள். அநேக உண்மையான கிறிஸ்தவர்கள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள், விசேஷமாக சீனாவில் மற்றும் மூன்றாம் உலகத்தின் மற்ற பகுதிகளில், இன்று உண்மையான எழுப்புதல் காணப்படுகிறது.

“ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்து வுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (I தெசலோனிக்கேயர் 4:16-17).

மகா உபத்திரவ காலத்திலும்கூட ஒரு பெரிய திரள் கூட்டமான மக்கள் இரட்சிக்கப்படுவார்கள்.

“சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்களிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக் கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்” (வெளிப்படுத்தல் 7:9).

இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவ ருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்” (வெளிப்படுத்தல் 7:14).

இவ்வாறாக, இயேசு வரும்போது இரட்சிப்பின் நம்பிக்கை இருக்காது என்பதைப்பற்றி அவர் பேசவில்லை, அவர் சொன்னபொழுது,

“ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்” (லூக்கா 18:8).

I. முதலாவது, விடாபிடியாக செய்யும் ஜெபத்தின் முக்கியத்துவம்.

அதிகமான விமர்சனங்கள் தவறாக இருக்கிறது, ஆனால் டாக்டர் லின் அவர்கள் நமது பாடத்துக்குச் சரியான பொருள் விளக்கத்தை கொடுத்தார். டாக்டர் லின் சொன்னார்,

“நம்பிக்கை” என்ற வார்த்தை வேதாகமத்தில் அதிகமாக உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. அதனுடைய சரியான பொருளை விளக்க வேண்டுமானால் அதன் சந்தர்பத்தை கவனமாக பரிசித்த பிறகுதான் சாத்தியமாகும். இந்த பாடத்துக்கு முன்பாக சொல்லப்பட்ட உவமை, நாம் சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும் என்பதைபற்றி காட்டுவதாகும் [லூக்கா 18:1-8அ], அந்த பாடத்தை தொடர்ந்து ஒரு பரிசேயன் மற்றும் ஒரு ஆயக்காரனின் ஜெபங்களை பற்றிய உவமை வருகிறது [லூக்கா 18:9-14]. இவ்வாறாக, இந்த “நம்பிக்கை” என்ற வார்த்தை இங்கே உபயோகப்பட்டது [லூக்கா 18:8] ஜெபத்தின்மீது உள்ள நம்பிக்கையை என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் நம்முடைய கர்த்தரின் புலம்பலாவது அவரது இரண்டாம் வருகையின் சமயத்தில் அவருடைய சபை ஜெபத்தின்மீது உள்ள நம்பிக்கையை இழந்து விடும் என்பதாகும் (Timothy Lin, Ph.D., The Secret of Church Growth, First Chinese Baptist Church of Los Angeles, 1992, pp. 94-95).

டாக்டர் லின் சொன்னது லூக்கா 18:1-8ல் உள்ள உவமையின் கருத்து கிறிஸ்தவர்கள் சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும் என்பதாகும். கடைசி காலங்களில் கிறிஸ்தவர்களிடம் இடைவிடாத ஜெபத்தின்மீது நம்பிக்கை இருக்காது என்பதை எட்டாம் வசனம் காட்டுகிறது, அந்த நாட்களில நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் நாம் இந்த பாடத்தை இப்படியாக விமர்சிக்க முடியும்,

“ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே [இடைவிடாத ஜெபத்தில் உள்ள] விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்” (லூக்கா 18:1, 8).

டாக்டர் லின் தொடர்ந்து சொன்னது,

இன்று மெய்யாகவே அநேக சபைகளில் ஜெபக்கூட்டங்கள் பாலைவனமாக போனது [வாரத்தின் மத்தியில் வேத ஆராய்ச்சியாக மாறிவிட்டது, அல்லது ஒரு இருவரின் அடையாள ஜெபமாக மட்டுமே இருக்கிறது]. அப்படிப்பட்ட துக்கமான நிலையை என்கவுன்டர் செய்யும்பொழுது, அநேக எண்ணிக்கையான சபைகள் இந்த முக்கியமான எச்சரிப்பை முழுவதுமாக கண்டுகொள்ளாமல் மற்றும் தங்களுக்கு விருப்பமானபடி செய்ய, [அடிக்கடி] தங்கள் ஜெபக்கூட்டங்களை முற்றிலும் வேண்டாம் என்று விட்டுவிடுகிறார்கள். இது மெய்யாகவே கர்த்தருடைய இரண்டாம் வருகை சமீபமாக இருக்கிறது என்பதின் [ஒரு] அடையாளமாகும்! இந்த நாட்களில், அநேகர் [சபை உருப்பினர்கள்] தங்கள் கர்த்தரைவிட தொலைகாட்சியை தொழுது கொள்ளுகிறார்கள்... இது மெய்யாகவே துக்கமானது!... கடைசிகால சபைகள் ஜெபக்கூட்டங்களைப்பற்றி காட்சி பொருள்களாக... அதிகமாக கவர்ச்சியற்றதாக ஜெபக் கூட்டங்களில் [விருப்பம் இழந்து] இருக்கிறது (Timothy Lin, Ph.D., ibid., p. 95).

இவ்வாறாக கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக ஜெபமற்ற தன்மை ஒரு அடையாளமாக இருக்கும் என்பதை லூக்கா 18:8 தெரிவிக்கிறது, இது நாம் வாழும் காலத்தில் ஒரு அடையாளமாக இருக்கிறது, ஜெபமற்ற தன்மையின் அடையாளம், முழுவதும இரட்சிப்பின் நம்பிக்கை இல்லாததல்ல. சபைகளில் ஜெபமற்ற தன்மை நமது கர்த்தரின் இரண்டாம் வருகையின் முன்னதாக, நாம் கடைசி காலத்தில் வாழுகிறோம் என்ற அடையாளங்களில் ஒன்றாகும்.

“ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே [இடைவிடாத ஜெபத்தில் உள்ள] விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்” (லூக்கா 18: 8).

II. இரண்டாவது, ஜெபக்கூட்டங்களின் முக்கியத்துவம்.

டாக்டர் லின் மேலும் தனிப்பட்ட ஜெபம் மட்டுமே ஜெபக்கூட்டங்களில் ஜெபிக்கும் குழுஜெபத்தை போன்ற, அவ்வளவு அதிகாரம் மற்றும் வல்லமை உள்ளது அல்ல என்பதை குறிப்பிட்டார். அவர் சொன்னார்,

நீ தனியாக ஜெபிக்கிறாயோ அல்லது குழுவோடு சேர்ந்து ஜெபிக்கிறாயோ என்ற வித்தியாசமில்லை என்று மக்கள் அடிக்கடி சொல்லுகிறார்கள், நீ வீட்டிலே தனிமையாக ஜெபித்தாலும் அல்லது சபையாக சகோதர சகோதரிகளோடு சேர்ந்து ஜெபித்தாலும் அது காரியமல்ல என்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு தகவல் சோம்பலான சுய ஆறுதல் அளிக்கும் வெறுமையாகும், அல்லது ஜெபத்தின் வல்லமையைபற்றி அறியாத ஒருவரின் எளிதில் நம்பவைக்கும் விளக்கமாகும்! இந்த ஜெபத்தின் நோக்கை பற்றி நமது கர்த்தர் என்ன சொல்லுகிறார் பாருங்கள்:

“அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் [ஆலயத்திலே] தாங்கள் வேண்டிக்கொள்ளப் போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத் தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்” (மத்தேயு 18:19-20).

     இந்த தெய்வீக அதிகாரத்தை பயன்படுத்துதல் தனி ஒருவரின் பிரயாசங்களினால் ஒருபோதும் அடைய முடியாது என்று நமது கர்த்தர் வலியுறுத்தி நினைவு படுத்தியிருக்கிறார், ஆனால் குழுவாக முழுசபையும் சேர்ந்த செயலாக்கத்தின் [மூலமாக] மட்டுமே சாத்தியமாகும். வேறுவிதமாக சொன்னனால், முழுசபையும்... ஒருமனப்பட்டு [ஜெபிக்கும்] பொழுது மட்டுமே... அப்படிப்பட்ட தெய்வீக அதிகாரம் வல்லமையோடு [கிடைக்கும்].
     எப்படியானாலும், கடைசிகால சபை, இந்த சத்தியத்தின் மெய்தத்துவத்தை பார்க்க முடியாது, தேவனுடைய வல்லமையை [பெற்றுக்கொள்ளும்] சீரான நடைமுறையை நினைக்கவும் மாட்டார்கள். இது எவ்வளவு பெரிய ஒரு நஷ்டம்! பரலோகத்திலிருந்து கிடைக்கும் தெய்வீக அதிகாரம் [சபைக்கு] உண்டு, ஆனால் அதை நிர்வாகம் செய்கிற அறிவினால் அல்ல, இருந்தாலும் அவள் சாத்தானுடைய கிரியைகளை கட்ட, மடங்கடிக்கப்பட்டவர்களை விடுவிக்க, மற்றும் தேவனுடைய பிரசன்னத்தின் மெய்தத்துவத்தை அனுபவிக்க விரும்புகிறாள். ஐயோ, அது செய்ய முடியாது! (Timothy Lin, Ph.D., ibid., pp. 92-93).

அதனால், டாக்டர் லின் அவர்கள் நம்பிக்கை ஜெபத்தின் முழுமையான முக்கியத்துவத்தை, மற்றும் சபை ஜெபக்கூட்டங்களின் முழுமையான முக்கியத்துவத்தை கற்பித்தார்.

III. மூன்றாவது, “ஒருமனப்பட்டவர்களாக” ஜெபிப்பதன் முக்கியத்துவம்.

தயவுசெய்து அப்போஸ்தலர் 1:14க்கு திருப்பி, அதை சத்தமாக வாசியுங்கள்.

“அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரிகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங் கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்” (அப்போஸ்தலர் 1:14).

“இவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்...”. டாக்டர் லின் சொன்னார்,

“ஒருமனப்பட்டு” என்ற வார்த்தையை சீன வேதாகமத்தில் “அதே இருதயத்தோடும் மற்றும் அதே மனதோடும்” என்று மொழி பெயர்கிறது. அதனால், ஜெபக்கூட்டத்தில் தேவனுடைய பிரசன்னம் வேண்டுமானால், ஜெபத்தின் மெய்தத்துவம் மற்றும் முக்கியத்துவத்தை பங்குபெறும் அனைவரும் புரிந்து கொள்வது மட்டுமல்ல, ஆனால் அவர்கள் எல்லோரும் வாஞ்சையோடு [ஜெபக் கூட்டங்களுக்கு] வரவேண்டும்... விண்ணப்பங்கள், ஜெபங்கள், மற்றும் பரிந்துபேசுதல்கள் மற்றும் ஸ்தோத்திரங்களை ஒருமனதோடு தேவனுக்கு செலுத்த வேண்டும். அதன்பிறகு ஜெபக்கூட்டங்கள் வெற்றி நிறைந்ததாக இருக்கும் மற்றும் மற்ற ஊழியங்களும் வெற்றிநிறைந்ததாக இருக்கும். (Timothy Lin, Ph.D., ibid., pp. 93-94).

“ஒரு மனப்பட்டவர்களாக ஜெபிப்பதற்கு” ஒரு சகோதரன் ஜெபிக்கும்பொழுது நாம் அனைவரும் “ஆமென்” என்று சொல்ல வேண்டியது அவசியம். நாம் அனைவரும் “ஆமென்” என்று சொல்லும்போது நாம் “ஒருமனதோடு” ஜெபிக்கிறோம்.

டாக்டர் லின் அவர்கள் நம்பிக்கை ஜெபத்தின் முக்கியத்துவத்தை, சபை ஜெபக்கூட்டங்களின் முக்கியத்துவத்தை, மற்றும் ஒருமனப்பாட்டின் முக்கியத்துவத்தை, “ஒரு மனப்பட்டவர்களாக ஜெபிப்பதற்கு” கற்பித்தார் என்பதை கேட்டீர்கள். இருந்தாலும் இன்று இரவு இங்கே இருக்கும் உங்களில் சிலர் நமது எந்த ஜெபக்கூட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை. உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை இவ்வளவு சோர்வுற்ற நிலையில் இருப்பதில் ஆச்சரியமில்லை! இன்று இரவு இங்கே இருக்கும் உங்களில் யாராவது, “போதகரே, இப்பொழுதிருந்து நமது ஜெபக்கூட்டங்களில் ஒன்றிலாவது கலந்துகொள்ளுவேன்”? தயவுசெய்து உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள். அப்படி செய்வீர்களானால், தயவுசெய்து கையை உயர்த்துங்கள். அந்த வாக்கை காத்துக்கொள்ள தேவன் அவர்களுக்கு உதவி செய்யும்படி ஒவ்வொருவரும் தயவுசெய்து ஜெபியுங்கள்! (எல்லாரும் ஜெபித்தல்).

நீ இன்னும் மாற்றப்படவில்லையானால், சனிக்கிழமை மாலை ஜெபக்கூட்டத்திலாவது ஆஜராகும்படி நான் உன்னை உறுதியாக வருந்தி கேட்கிறேன். தயவுசெய்து உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள். யார் சொல்வீர்கள், “ஆம், போதகரே, இப்பொழுதிருந்து ஒவ்வொரு சனிக்கிழமை இரவு ஜெபக்கூட்டத்திலும் கலந்துகொள்ளுவேன்”? அப்படி சொல்வீர்களானால் தயவுசெய்து கையை உயர்த்துங்கள். அந்த வாக்கை காத்துக்கொள்ள தேவன் அவர்களுக்கு உதவி செய்யும்படி ஒவ்வொருவரும் தயவுசெய்து ஜெபியுங்கள்! (எல்லாரும் ஜெபித்தல்).

கிறிஸ்து உன்னுடைய பாவத்துக்கு உரிய கிரயத்தை செலுத்த சிலுவையிலே மரித்தார். உன்னுடைய பாவங்களைக் கழுவி நீக்க அவர் தமது இரத்தத்தை சிந்தினார். உனது பாவங்களுக்குப் பிராயசித்தம்செய்ய, அவர் கொடுமையான வேதனைகள் ஊடாக கடந்தார், சிலுவையில் ஆணிகள் அரையப்பட்டார். அவர் மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார். அவர் தேவனுடைய வலது பக்கத்தில் ஜீவனோடு இருக்கிறார். கிறிஸ்துவினிடம் வா உனது பாவங்களிலிருந்து நீ இரட்சிக்கப்படுவாய்.

இந்த இரவில் உங்களில் யாராவது இரட்சிக்கப்படாமல் இருந்தால் மற்றும் நாங்கள் உங்கள் மாறுதலுக்காக ஜெபிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்கள் கண்களை மறுபடியும் மூடிக்கொள்ளுங்கள். தயவுசெய்து கையை உயர்த்துங்கள் அதனால் நாங்கள் உங்கள் மாறுதலுக்காக ஜெபிக்க முடியும். அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி கிறிஸ்துவிடம்வர, அவருடைய இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட தேவன் அவர்களுக்கு உதவி செய்யும்படி ஒவ்வொருவரும் தயவுசெய்து ஜெபியுங்கள்!

டாக்டர் சான் அவர்களே, இன்று இரவிலே யாராவது சிலர் இட்சிக்கப்படும்படி நம்மை ஜெபத்தில் நடத்துங்கள். ஒரு உண்மையான கிறிஸ்தவராக மாறுவதைப்பற்றி நீங்கள் எங்களோடு பேசவிரும்பினால், தயவுசெய்து டாக்டர் கேஹன், ஜான் கேஹன் மற்றும் நோவா சாங் அவர்களை பின்தொடர்ந்து இப்பொழுது ஆடிடோரியத்துக்குப் பின்னால் தயவுசெய்து செல்லவும். அவர்கள் உங்களை அமைதியான ஒரு இடத்துக்கு உங்கள் மாறுதலைப்பற்றி நாங்கள் உங்களோடு பேச மற்றும் ஜெபிக்க அழைத்துச் செல்லுவார்கள்.

விக்கிபீடியாவில் டாக்டர் லின் அவர்களின் வாழ்க்கை வறலாற்றைப்பற்றி படிக்க இங்கே கிலிக் செய்யவும்

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“‘Tis the Blessed Hour of Prayer” (by Fanny J. Crosby, 1820-1915).


முக்கிய குறிப்புகள்

ஜெபிப்பது எப்படி மற்றும் ஒரு ஜெபக்கூட்டத்தை நடத்துவது எப்படி

(டாக்டர் தீமோத்தேயு லின் அவர்களின் போதனை, 1911-2009)
HOW TO PRAY AND HOW TO CONDUCT A PRAYER MEETING
(THE TEACHINGS OF DR. TIMOTHY LIN, 1911-2009)

ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் எழுதப்பட்டு
திரு. ஜான் சாமுவேல் கேஹனால் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon written by Dr. R. L. Hymers, Jr.
and preached by Mr. John Samuel Cagan

“ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்” (லூக்கா 18:8).

(மத்தேயு 16: 18; I தெசலோனிக்கேயர் 4: 16-17; வெளிப்படுத்தல் 7:9, 14)

I.   முதலாவது, விடாபிடியாக செய்யும் ஜெபத்தின் முக்கியத்துவம்,
லூக்கா 18:8.

II.  இரண்டாவது, ஜெபக்கூட்டங்களின் முக்கியத்துவம்,
மத்தேயு 18:19-20.

III. மூன்றாவது, “ஒருமனப்பட்டவர்களாக” ஜெபிப்பதன் முக்கியத்துவம்,
அப்போஸ்தலர் 1:14.