இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
கழுவு மற்றம் சுத்தமாக இரு! –
|
இது ஒரு எளிமையான கதை. ஆனால் இதில் ஒரு ஆழமான அர்த்தம் உள்ளது. நீ இதுவரையிலும் இரட்சிக்கப்படவில்லையானால் நீ இதற்குக் கவனமாக செவிகொடுக்க வேண்டியது அவசியமாகும். நீ இதன்மீது கிரியை செய்ய வேண்டியது அவசியமாகும். நீ மெய்யாக இரட்சிக்கபடுவதற்கான ஒரே வழியை இது உனக்கு காட்டுகிறது. இது ஒரு எளிமையான கதை. நீ இரட்சிக்கபடுவதற்கான ஒரே வழியை உனக்குக் காட்டுவதற்காக மற்றும் ஒரு உண்மையான கிறிஸ்தவனாக நீ மாறவேண்டும் என்று வேதாகமத்தில் இது கொடுக்கப்பட்டுள்ளது. நாகமான் ஒரு பெரிய மனிதனாக இருந்தான். அவன், சீரிய படைத் தலைவனாக, பொதுமுறை பணி முதல்வராக இருந்தான். அவன் மகா பராக்கிரமசாலியாக இருந்தான். அவன் தனது ராஜாவிடம் மிகவும் கனம் பெற்றவனாக இருந்தான், மற்றும் அவன் மிகவும் பெருமையுள்ள ஒரு மனிதனாக இருந்தான். ஆனால் அவன் குஷ்டரோகம் என்னும் கொடிய வியாதியினால் உயிரோடு அரிக்கப்பட்டவனாக இருந்தான். அவன் குஷ்டரோகத்தினால் செத்துக் கொண்டிருந்தான் மற்றும் அவன் அதை அறிந்திருந்தான். அவன் எல்லாவிதத்திலும் முயற்சி செய்தான், ஆனால் ஒன்றும் அவனுடைய குஷ்டரோகத்தை குணப்படுத்தவில்லை. எபிரெய நாட்டை சேர்ந்த ஒரு சிறு பெண் நாகமானுடைய வீட்டிலே வேலை செய்தாள். இஸ்ரவேல் நாட்டிலிருந்த ஒரு தீர்க்கதரிசியினால் அவனுடைய குஷ்டரோகத்தை குணமாக்க முடியும் என்று அவள் அவனிடம் சொன்னாள். அவன் எல்லாவிதத்திலும் முயற்சி செய்தான், ஆனால் ஒன்றும் அவனுடைய வியாதியை குணப்படுத்தவில்லை. இறுதியாக நாகமான் நினைத்தான், “இந்தத் தீர்க்கதரிசி ஒருவேளை என்னை குணமாக்க முடியும்.” அவன் குணமாக்கப்படுவதற்கு அது ஒரு கடைசி தருணம், அதனால் அவன் தேவனுடைய தீர்க்கதரிசியாகிய, எலிசாவை பார்க்க வந்தான். ஆனால் அந்த தீர்க்கதரிசி ஒரு உண்மையான தேவனுடைய மனிதர். அவர் தமது வீட்டிலிருந்து வெளியே வந்து நாகமானுக்காக ஜெபித்திருந்தால், அந்தத் தீர்க்கதரிசி அவனை குணமாக்கினார், என்று அந்த மனிதன் நினைத்திருப்பான். அந்த தீர்க்கதரிசி அல்ல, தேவனே அவனை குணமாக்கினார் என்று நாகமான் அறிந்து கொள்ளவேண்டும் என்று அந்தத் தீர்க்கதரிசி விரும்பினார். அதனால் நாகமான் தனது இரதத்திலே தீர்க்க தரிசியின் வீட்டுக் கதவருகே வந்தான். ஆனால் தீர்க்கதரிசி அவனிடம் பேசுவதற்கு வெளியே வரவில்லை. அதற்குப் பதிலாக அவர் நாகமானுக்கு ஒரு செய்தியை அனுப்பினார், “நீ போய், [அந்த] யோர்தானில் [நதியில்] ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய்” (II ராஜாக்கள் 5:10). அது நாகமானை மெய்யாகவே கோபப்படுத்தி விட்டது. “இந்த தீர்க்கதரிசி என்னை பார்க்க, ஏன் வெளியே வரவில்லை! எப்படியானலும், அவன் தன்னை யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறான்?” அவன் வெளியே வந்து நின்று “தன் கையினால் அந்த இடத்தைத் தடவி, இவ்விதமாய் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான் என்று அவனுக்குள் நினைத்திருந்தான்.” அந்த தீர்க்கதரிசி பென்னி ஹின்னை போல இருப்பார் என்று அவன் நினைத்தான். அவர் இதை ஒரு பெரிய நாடக காட்சியைபோல நடத்துவார், மற்றும் அவர் ஒரு பெரிய விசுவாச குணமளிப்பவர் என்று அந்த மனிதன் நினைக்கும்படியாக செய்வார். ஆனால் அந்த தீர்க்கதரிசி சகலகனத்தையும் தேவனுக்கு கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். அவர் எளிமையாக ஒரு செய்தியை நாகமானுக்கு அனுப்பினார், “நீ போய், [அந்த] யோர்தானில் [நதியில்] ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய்” (II ராஜாக்கள் 5:10). நாகமான் மிகவும் கோபப்பட்டான். அவன் சீற்றத்தோடு அங்கிருந்து புறப்பட்டான்! அதன்பிறகு நாகமானுடைய வேலைக்காரன் அவனிடம் சொன்னான், “அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால், அதை நீர் செய்வீர் அல்லவா? அவர் சொன்னதை ஏன் நீங்கள் செய்யக்கூடாது, ‘ஸ்நானம்பண்ணும் அப்பொழுது சுத்தமாவீர்’?” அதன்பிறகு நாகமான் நினைத்தான், “சரி, நான் அந்த தீர்க்கதரிசி சொன்னபடி செய்வேன்.” அவன் யோர்தான் நதிக்கு போனான் மற்றும் அந்த நதியிலே ஏழுதரம் மூழ்கினான், “அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்” (II ராஜாக்கள் 5:14). இந்த வேதவாக்கிய செய்தியை கொண்டு அநேக பெரிய போதனைகள் பிரசங்கிக்கப்பட்டது. ஸ்பர்ஜனை போன்ற, அந்த பெரிய பிரசங்கிகள், நாகமானின் குஷ்டரோகம் சுத்தமானது உனது பாவம் இயேசு சிலுவையிலே சிந்தின இரத்தத்தினால் சுத்தமாவதற்கு அடையாளமான ஒரு படமாக இருந்தது என்று சொன்னது சரியானதாகும். இந்த காலையிலே நாகமானுடைய கதையை கவனி நீ இரட்சிக்கப்படுவது எப்படி மற்றும் உனது பாவத்திலிருந்து நீ சுத்திகரிக்கப்படுவது எப்படி என்று அது உனக்கு காட்டும்! I. முதலாவது, அவனுக்கு குஷ்டரோகம் இருந்தது. “அவனோ குஷ்டரோகியாயிருந்தான்” (II ராஜாக்கள் 5:1). அப்படியே நீயும் இருக்கிறாய். நீ பாவ குஷ்டத்தினால் நிறைந்திருக்கிறாய்! முதல் பாவியாகிய, ஆதாமிடமிருந்து இந்த பாவகுஷ்டம் உனக்கு வந்தது. அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார், “ஒரே மனுஷனாலே [ஆதாம்] பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று” (ரோமர் 5:12). இந்த காலையிலே உங்களுக்கு ஒரு பெரிய அற்புதமான விளக்கம் கொடுக்கப்படுகிறது! டாக்டர் வாட்ஸ் உனது நிலைமையை ஒரு பாடலாக சித்தரிக்கிறார், கர்த்தாவே, நான் பயனற்றவன், பாவத்திலே கர்ப்பம் தரிக்கப்பட்டவன், பாவகுஷ்டம் உனக்குள் “ஆழமாக புதைந்திருக்கிறது”! இந்த காலையிலே இது உனக்கு விளக்கமாக சொல்லப்படுகிறது! “பாவகுஷ்டம் ஆழமாக புதைந்து இருக்கிறது” உனக்குள்! இயேசு சொன்னார், “மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும்...” (மாற்கு 7:21-23). இது உனது இருதயத்தின் ஒரு படமாகும், பொல்லாத சிந்தனைகள் நிறைந்தது. உனது இருதயம் முழுவதுமாக பாவ குஷ்டம் நிறைந்திருக்கிறது! வெளியில் உள்ள ஒன்றும் [உன்னை] சுத்தமாக்க முடியாது; அப்படி இல்லையா? அப்படி இல்லையா? அப்படிதான் இருக்கிறது என்று உனக்கு தெரியும்! மற்றும் “வெளியில் உள்ள ஒன்றும் [வெளியில் செய்யக்கூடிய ஒரு செயலும்] உன்னை சுத்தமாக்க முடியாது! எந்த ஒரு தீர்மானங்களோ அல்லது ஜெபங்களோ உன்னை சுத்தமாக்க முடியாது! உனது உணர்வோ அல்லது கல்வியோ உன்னை சுத்தமாக்க முடியாது! என்று உனக்கு தெரியும்! “குஷ்டம் [பாவம்] ஆழமாக புதைந்து கிடக்கிறது” உனது இருதயத்தில்! அது உனக்கு தெரியும் – இல்லையா? அது உண்மை என்று உனக்கு தெரியும். ஒரு வெளிப்படையான பாவத்தை செய்வதற்கு முன்பாகவே அது உனக்கு தெரியும். நீ வேண்டுமென்றே அதை செய்தாய்! நீ என்ன செய்து கொண்டிருந்தாய் என்று நீ சரியாக அறிந்திருந்தாய். நீ செய்தது தப்பு என்று நீ அறிந்திருந்ததை ஏன் செய்தாய்? உனது மாற்றப்படாத நிலையில் நீ இருளை நேசித்தாய். நீ பாவத்தில் மகிழ்ந்தாய். பாவம் செய்வதில் நீ சந்தோஷமாக இருந்தாய். அதன் ருசியை நீ நேசித்தாய். அது தப்பு என்று நீ அறிந்திருந்தும் அதை நேசித்தாய்! அதனால்தான் உனது பாவம்நிறைந்த இருதயத்தைபற்றிய சத்தியத்தை கேட்பதற்கு நீ வெறுக்கிறாய்! உனது பொல்லாத இருதயத்தைபற்றிய சத்தியத்தை நான் உனக்கு சொல்லுவதால் நீ என்னை வெறுக்கிறாய் – இல்லையா? சத்தியத்தை கேட்பது உன்னை கன்டிக்கிறது மற்றும் பரிதாபமாக உணரும்படி செய்கிறது! குஷ்டம் ஆழமாக புதைந்து கிடக்கிறது! உனது இருதயம் முறுக்கப்பட்டு மற்றும் வக்கிரமாக இருக்கிறது. நல்லது மற்றும் சரியானதைவிட நீ பாவத்தை ஆனந்தமாக அனுபவிக்கிறாய். உனது அவிசுவாசம் என்ற பொல்லாத இருதயத்தில் குஷ்டம் ஆழமாக புதைந்து கிடக்கிறது! நான் இதைச் சொல்லவில்லை. டாக்டர் மார்டீன் லியோடு-ஜோன்ஸ், உன்னை போன்ற பாவம் நிறைந்த இருதயத்தை பற்றி அறிந்த ஒரு மருத்துவ டாக்டர் அவருடைய பொழிப்புரை வழங்குகிறேன்! II. இரண்டாவது, சுத்தமாவது எப்படி என்று தீர்க்கதரிசி அவனிடம் சொன்னதை கேட்டு அவன் நிலைகுலைந்தான். தீர்க்கதரிசி அவனிடம் “போய் கழுவு” என்று சொன்னபொழுது அவன் கோபத்தோடு போனான். அவன் சொன்னான், “நான் நினைத்தேன் [அந்த தீர்க்கதரிசி எனக்காக ஜெபிப்பார் என்று].” “நான் நினைத்தேன்.” இரட்சிக்கப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று உனக்கு தெரியும் என நீ நினைக்கிறாய். “நான் நினைத்தேன்.” உன்னுடைய பொய்யான நினைவுகளை அகற்று! இரட்சிக்கப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று நீ நினைக்கும் நினைவுகளிலிருந்து வெளியே வா. உனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது! மூடி சொன்னார், நாகமானுக்கு வியாதி இருந்தது – பெருமை மற்றும் குஷ்டரோகம். குஷ்டரோகத்தை போலவே பெருமை சுத்திகரிக்கப்பட வேண்டியதாக இருந்தது. நாகமான் தனது பெருமையாகிய இரதத்திலிருந்து கீழே இறங்க வேண்டும்; அதன்பிறகு அவனுக்கு சொல்லப்பட்டபடி கழுவ வேண்டும். இந்த காலையில் உனக்கும் அதுதான் நடக்க வேண்டும் என்பது அவசியமாகும். நீ இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அதைதான் நீ செய்ய வேண்டும். “நீ நினைப்பதிலிருந்து” விட்டு வெளியேறு. பெருமையிலிருந்தும் இரட்சிக்கப்பட நீயாக வளர்த்துக் கொண்டிருக்கும் கற்பனைகளிலிருந்தும் வெளியேறு. உனக்கு சொல்லப்பட்டபடி நீ கழுவப்பட்டு சுத்தமாக வேண்டியது அவசியம். “நீ போய் கழுவு... நீ சுத்தமாவாய்.” இழக்கப்பட்ட பாவம் நிறைந்த ஒரு மனிதனாக இயேசுவிடம் வா. இயேசுவிடம் வா அவர் உன்னை சுத்திகரிக்க சிலுவையிலே சிந்தின இரத்தத்தின் மூலமாக உனது பாவம் நிறைந்த இருதயத்தை சுத்திகரிப்பார்! “அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” (I யோவான் 1:7). “கழுவு மற்றும் சுத்தமாக இரு!” அதைதான் தேவனே உனக்கு இப்பொழுது சொல்லுகிறார்! “கழுவு மற்றும் சுத்தமாக இரு!” ஆனால் உனது பெருமை ஜெயிக்கப்படும் வரையிலும் நீ சுத்தமாக முடியாது. உனது இருதயம் மாற்றப்பட வேண்டியது அவசியம். நீ மனஸ்தாபப்பட்டு மனம் திரும்பும் வரையிலும் நீ மன்னிக்கப்பட முடியாது. உனது இருதயம் மாற்றப்பட வேண்டியது அவசியம். உனது சுயநலத்தை நீ உணரும்படி செய்யப்பட வேண்டியது அவசியம். நீ இரட்சிக்கப்பட வேண்டும் என்று உணர விரும்புகிறாய். நீ இரட்சிக்கப்பட்ட நிச்சயம் வேண்டும் என்று விரும்புகிறாய். ஆனால் நீ இருக்கும் நிலையிலிருந்து மாற உனக்கு விருப்பம் இல்லை. நீ இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாய் அதனால் நீ தொடர்ந்து ஒரு சுயநல வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறாய். ஒரு முழுமையான இருதய மாற்றம் வேண்டும் என்று மாறுதல் நமக்கு சொல்லுகிறது. உனக்கு இருக்கும் சுபாவம் தவறானது. உனக்கு இருக்கும் இருதயம் தவறானது. உனது சுபாவம் ஆரம்பதிலிருந்தே அழுகிபோனது. உனக்குள் ஏற்படவேண்டிய மாறுதல் அவ்வளவு மூலாதாரமானதாக இருப்பதால் உனது சுயத்திற்கு நீ மரிக்க வேண்டும் மற்றும் முழுவதும் புதிதான ஒரு வாழ்க்கைக்கு மறுபடியும் பிறக்க வேண்டும், உனது சுயத்தை பிரியப்படுத்துவதைவிட தேவனை பிரியப்படுத்துவதை மையமாக கொண்ட ஒரு வாழ்க்கை உனக்கு வேண்டும். ஒரு சில பாவங்களைவிட்டுவிடுவது உனக்கு உதவி செய்யாது. வெறுமையாக சபைக்கு வருவது மற்றும் வெறுமனே ஒரு ஜெபத்தை சொல்லுவது உனக்கு உதவி செய்யாது. உனக்கு ஒரு புது சுபாவம், மற்றும் முற்றிலும் ஒருபுதிய வாழ்க்கையை பெற்றிருக்க வேண்டியது அவசியம். மாறுதல் அடைவதற்காக ஜான் கேஹனின் போராட்டத்தை கவனியுங்கள். “எனக்கிருந்த எல்லாவற்றிலும் நான் மிகவும் சோர்ந்து போனேன். எனது பாவம் என்னை உணர்த்தினபோதும் நான் இயேசு இல்லாதவனாக இருந்தேன். நான் இரட்சிக்கப்பட முயற்சி செய்து கொண்டிருந்தேன். நான் இயேசுவை நம்ப முயற்சி செய்து கொண்டிருந்தேன் மற்றும் என்னால் முடியவில்லை. அப்படியே ஒரு கிறிஸ்தவனாகமாற [தீர்மானிக்க] என்னால் முடியவில்லை. அது என்னை அவ்வளவு உதவி அற்றவனாக உணர செய்தது. எனது பாவம் என்னை கீழே நரகத்துக்கு இழுத்துக்கொண்டு இருந்தது இருந்தாலும் என்னால் எனது பிடிவாதம் எனது கண்ணீரை கட்டாயமாக வெளியே கொண்டு வந்ததை உணர முடிந்தது. நான் இந்த போராட்டத்தில் சிக்கிக்கொண்டேன்.” அதுபோல எதையாவது இந்த காலையிலே நீங்கள் உணருகிறீர்களா? அப்படியானால், நீங்கள் ஏன் அப்படி இருக்கிறீர்கள்? அது ஏனென்றால் உனது இருதயத்தில் மாறுதல் அடையாமல் நீ இரட்சிக்கப்பட விரும்புகின்றாய். உனது இருதயத்தில் மாறுதல் அடையாமல் நீ ஒரு கிறிஸ்தவனாக உன்னை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்புகின்றாய். ஆனால் அது சாத்தியமானதல்ல! நீ மறுபடியும் பிறக்க வேண்டும். உன் ஜீவனையும்விட தேவனை அதிகமாக நேசிக்கும் ஒரு புதிய இருதயத்தை நீ பெற்றிருக்க வேண்டும். நீ மனந்திரும்ப வேண்டும். உன்னை நீ வெறுக்க வேண்டும்! உனது பெருமையை நீ விட வேண்டும் இல்லையானல் நீ உனது பாவத்திலே மரிப்பாய். உனது இருதயம் பாவ குஷ்டத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஜேக் நாஹன் சொன்னார், “உன்னை நீ வெறுக்கும்படி தேவன் செய்யவேண்டும்.” வெளியில் உள்ள ஒன்றும் [உன்னை] சுத்தமாக்க முடியாது; மூடி சொன்னது சரி, நாகமானுக்கு வியாதி இருந்தது – பெருமை மற்றும் குஷ்டரோகம். குஷ்டரோகத்தை போலவே பெருமை சுத்திகரிக்கப்பட வேண்டியதாக இருந்தது. நாகமான் தனது பெருமையாகிய இரதத்திலிருந்து கீழே இறங்க வேண்டும்; அதன்பிறகு அவனுக்கு சொல்லப்பட்டபடி கழுவ வேண்டும். ஜான் கேஹன் சொன்னார், “என்னால் அதற்குமேலும் தாங்கிக்கொண்டிருக்க முடியவில்லை. நான் இயேசுவை உடையவனாக இருக்க வேண்டியதாகயிருந்தது. அந்த நேரத்திலே நான் கிறிஸ்துவை எதிர்ப்பதை நிறுத்தினேன். நான் செய்ய வேண்டியதெல்லாம் அவரை நம்ப வேண்டும் என்பது எனக்கு மிகவும் தெளிவானது; நான் முடிந்துவிட்டபொழுது கிறிஸ்து மட்டுமே இருந்தார் என்பதை என்னால் [நினைவு] கூர முடிந்தது... நான் எனது பாவத்திலிருந்து திரும்பினேன், மற்றும் இயேசுவை மட்டுமே நோக்கி பார்த்தேன்! இயேசு [எனது இருதயத்தின் பாவத்தை வெளியே] எடுத்துப்போட்டார் அதற்கு பதிலாக எனக்கு அன்பை கொடுத்தார்... இயேசு என்னுடைய பாவங்களையெல்லாம் கழுவினார். அவர் எனக்கு ஒரு புதிய ஜீவனை கொடுத்தார்.” நீ இயேசுவை நம்பும் சமயத்தில், தேவனுடைய குமாரனாகிய, “இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி [உன்னை] சுத்திகரிக்கும்” (I யோவான் 1:7). சகல பாவம்! எல்லா பாவமும் – உன்னுடைய இருதயத்தின் பாவம், அல்லது நீ செய்த பாவங்கள் – எல்லா பாவமும் இயேசு இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட வேண்டியது அவசியமாகும் – மற்றும் தேவ குமாரனாகிய, இயேசுவின் இரத்தத்தினால் மட்டுமே. அவர் உன்னை சுத்திகரிக்க தமது இரத்தத்தை சிலுவையிலே சிந்தினார். அவர் ஏன் அதை செய்தார்? ஏனென்றால் அவர் உன்னை நேசிக்கிறார். அவர் உன்னை தம்முடைய இரத்தத்தினால் சுத்தம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்! எனது பாவத்தை கழுவகூடியது என்ன? நீ பாவத்திலே போதுமான அளவு தூரம் போய்விட்டாய். நீ ஜான் கேஹனை போல இரட்சிக்கப்பட முடியும் என்று விரும்புகிறாய். நீ அவரை போல இருக்க ஆசைப்படுகிறாய். ஆனால் அது முடியாது என்று நீ நினைத்தாய். நீ மிகவும் புதிரானவன் என்று நினைத்தாய். நீ மிகவும் பாவம் நிறைந்தவன் என்று நினைத்தாய். நீ நம்பிக்கை இல்லாதவன் என்று நினைத்தாய். ஆனால் நீ நினைத்தது தவறு! இயேசு உன்னை நேசிக்கிறார். நீ ஒருபோதும் அறிந்த எல்லாரையும்விட அவர் உன்னை அதிகமாக நேசிக்கிறார். உன்னுடைய இருதயத்தின் பாவங்களை அவர்கள் அறிந்தால் அவர்கள் உன்னை நேசிக்கமாட்டார்கள். ஆனால் எப்படியானாலும் இயேசு உன்னை நேசிக்கிறார். இயேசு சொல்லுகிறார், “என்னிடத்தில் வா – மற்றும் என்னுடைய இரத்தத்தினால் கழுவப்படு.” இயேசு சொல்லுகிறார், “கழுவப்படு மற்றும் சுத்தமாக இரு.” அவர் உன்னிடம் கேட்பதெல்லாம் உன்னுடைய பெருமையிலிருந்து திரும்பு மற்றும் அவரை நம்பு. பிறகு ஒருநாள் நீ பரலோகத்திலே பாடுவாய், “[என்னிடத்தில்] அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே [என்னுடைய] பாவங்களற [என்னைக்] கழுவினார்,” (வெளிப்படுத்தல் 1:6) “கழுவப்படு மற்றும் சுத்தமாக இரு.” திரு. கிரிப்பித் அவர்களே, வந்து பாடுங்கள் “ஆம், நான் அறிவேன்”. நீங்கள் சுத்தமாக வேண்டுமென்று விரும்பினால் தயவுசெய்து இந்த முதல் இரண்டு இருக்கைகளில் அமர்ந்து இருக்கவும் மற்றும் இயேசுவை நம்புவதை பற்றி நாங்கள் உங்களிடம் பேசுவோம். டாக்டர் சான், தயவுசெய்து வந்து அவர்களுக்காக ஜெபிக்கவும், அதன்பிறகு நாம் ஐக்கிய அறையில் சாப்பிடபோகும் உணவுக்காக நன்றி செலுத்தவும். ஆமென். நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: |
முக்கிய குறிப்புகள் கழுவு மற்றம் சுத்தமாக இரு! – WASH AND BE CLEAN! – THE TYPOLOGY OF CONVERSION டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் “நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு, அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய்”
(II இராஜாக்கள் 5:14)
I. முதலாவது, அவனுக்கு குஷ்டரோகம் இருந்தது, II இராஜாக்கள் 5:1;
II. இரண்டாவது, சுத்தமாவது எப்படி என்று தீர்க்கதரிசி அவனிடம் சொன்னதை கேட்டு அவன் நிலைகுலைந்தான், 1யோவான் 1:7; வெளிப்படுத்தல் 1:5. |