இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
எழுப்புதல் விரும்புதல் அல்ல!REVIVAL IS NO OPTION! டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் அக்டோபர் 1, 2017 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் “ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்”
|
எபேசுவில் இருந்த சபை ஒரு பெரிய சபையாகும். அது ஒரு நல்ல சபையாக இருந்தது. அது பொய் போதனைகளை வெறுத்த ஒரு அஸ்திபாரமான சபையாகும் ஆனால் அதற்கு ஒரு குறை இருந்தது. அது சபை தன்மகிழ்வு பெற்றதாக இருந்தது. கட்டிடம் விலையுயர்ந்ததாக இருந்தது. மக்கள் செல்வந்தர்களாக மாறியிருந்தார்கள். அவர்களுக்கு ஏராளமான பணம் இருந்தது. அவர்களுக்குக் குறைவு ஒன்றுமில்லை. ஆனால் அவர்கள் பேரில் ஒரு குறை உண்டு என்று கிறிஸ்து சொன்னார். அவர்கள் ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டார்கள். அவர்களை அவர் மனந்திரும்பும்படி அழைக்கிறார். அவர்களை பின்னோக்கி சென்று ஆதியில் கடந்த வருடங்களில் அவர்கள் இழந்துபோயிருந்த அன்பையும் வைராக்கியத்தையும் கண்டு அதை பெற்றுக்கொண்டு திரும்ப வரும்படி அழைக்கிறார். அதை அவர்கள் மறுத்தால், வரப்போகும் நியாயத்தீர்ப்பைபற்றி அவர்களை எச்சரிக்கிறார். அந்தச் சபை ஒரு விளக்குத் தண்டைப்போல இருந்தது. அது இருளடைந்த ஒரு உலகத்துக்கு வெளிச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இருந்தாலும், அந்தச் சபை மனந்திரும்பாவிட்டால், கிறிஸ்து சொன்னார், “நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.” அதன்பிறகு கிறிஸ்து சொன்னார், “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” (வெளிப்படுத்தல் 2:7). ஆனால் அந்தச் சபை மனந்திருமபவில்லை மற்றும் அது தன்னை காத்துக்கொள்ள போதுமான அளவிற்கு எழுப்புதலை அனுபவிக்கவில்லை. ஒரு காலத்தில் மகத்தான சபையாக இருந்த இந்தச் சபை, முதலாம் நூற்றாண்டின் இறுதியில் டோமிடைன் என்ற சக்கரவர்த்தியின் கீழிருந்த ரோம போர் வீரர்களால் அழிக்கப்பட்டது. இன்னுமொரு சபை கட்டிடம் கட்டப்பட்டது ஆனால் அந்த முழுநகரமும் இறுதியாக முஸ்லீம்களால் அழிக்கப்பட்டது. நம்முடைய சபைக்கு அதை ஒப்பிட்டு நான் பேசவேண்டிய அவசியம் இருக்கிறதா? ஆதி நாட்களிலே, எபேசு சபையில் ஜீவனும் கிறிஸ்தவ அன்பும் நிறைந்து காணப்பட்டது. அது ஒரு எழுப்புதலடைந்த அன்புள்ள சபை. ஒரு காலத்தில் நமது சபை இருந்ததுபோல அதுவும் இருந்தது. நமக்குச் சபை பிளவு ஏற்பட்டது. ஆனால் அவர்கள் எப்பொழுதும் பிரதிஸ்டை மற்றும் ஒப்புக்கொடுத்தலிலிருந்து பிரிந்து போகிறவர்கள். போனவர்கள் எப்பொழுதும் போகிறவர்களாகவே இருப்பார்கள் ஏனென்றால் அவர்கள் தீவிரமான கிறிஸ்தவர்களாக இருக்க விரும்பாதவர்கள். கிறிஸ்துவின் அன்புக்குத் திரும்பும்படி அவர்களை நான் அழைக்க முயற்சித்த போதெல்லாம், இந்தக் குழுவினர் விட்டுப்போனார்கள். நான் பொய்யான போதனையைப் போதித்த காரணத்தால் அவர்கள் ஒருபோதும் போகவில்லை. எழுப்புதல் வேண்டுமென்று அவர்கள் விரும்பாத காரணத்தால் அவர்கள் எப்பொழுதும் போய்விட்டார்கள். அவர்கள் இயேசுவின் சீஷர்களாக இருக்க விரும்பவில்லை. ரிச்சார்ட் ஆலிவாஸ் மோசமான பிரிவினையை உண்டாக்கினார். அந்த பெரிய கட்டளை அப்போஸ்தலர்களுக்கு மட்டுமே, வேறொருவரும் ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய வேண்டியதில்லை என்று அவர் சொன்னார். அதுதான் அவருடைய முதலாவது குற்றச்சாட்டு. இயேசுவின் வார்த்தைகளை அவர் வெறுத்தார், “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்” (மத்தேயு 6:33). தேவனுடைய இராஜ்யத்தைவிட வெற்றியையும் பணத்தையும் தேடுங்கள் என்று அவர் மக்களுக்குச் சொன்னார். மக்களுடைய வாழ்க்கையில் ஆத்தும ஆதாயமும் ஜெபமும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து பிரசங்கித்தேன். முன்னூறு பேர் அவரை பின்பற்றி போனார்கள். 15 பேர் மட்டுமே விடப்பட்டார்கள். நமது மக்கள் கிறிஸ்துவை மையமாக வைத்தார்கள் அதனால் அவருடைய மக்களைவிட மிகவும் அதிகமாக வெற்றி அடைந்தார்கள்! மிகவும் அதிகம்! ஏறக்குறைய நமது மக்கள் அனைவரும் கல்லூரியில் பட்டம் பெற்றவர்கள். நமது சபையில் அதிகமான தனித்தன்மையுள்ள மக்கள் அனைவரும் சொந்தமான அல்லது கூட்டாக வீடுகளை உடையவர்களாக இருக்கிறார்கள். அவருடைய மக்கள் நான்கு பக்கமும் காற்றால் சிதரடிக்கப்பட்டார்கள். நமக்கு வெகுசில விவாகரத்துக்கள் இருந்தன. அவருடைய மக்கள் ஒருவருக்கொருவர் விவாகரத்துச் செய்ய பொறுத்திருக்கவில்லை! அதனால் யார் நல்ல நிலையில் வெளியே வந்தது? நிச்சயமாக, நாம் இந்தக் கட்டிடத்துக்குக் கட்டணம் கட்ட பாடுபட்டோம். ஆனால் அது நம்மை இயேசுவின் உறுதியான சீஷர்களாக மாற்றியது. அவருடைய சிறிய குழு சீக்கிரமாக புதிய சுவிசேஷகர்களாக மாறினார்கள். நாம் இயேசுவுக்காக சிறிதளவு பாடுபட்டோம் மேலும் ஆசீர்வதிக்கப்பட்டோம். அவர்கள் உலகப் பிரகாரமனவைகளுக்காக மற்றும் பணத்துக்காக ஓடினார்கள் மற்றும் பிசாசின் மூலமாக அழிக்கப்பட்டார்கள்! இயேசு சொன்னார், “தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது” (மத்தேயு 6:24). கர்த்தர் சரியானவராக இருந்தார் அவர்கள் தவறானவர்களாக இருந்தார்கள்! “இயேசுவை பின்பற்ற நான் தீர்மானம் செய்தேன்.” இதை எழுந்து நின்று பாடுங்கள்! இயேசுவை பின்பற்ற நான் தீர்மானம் செய்தேன்; ஆமென்! நீங்கள் அமரலாம். ஆனால் எபேசு சபைக்குச் சில பயங்கரமான காரியம் சம்பவித்தது. அவர்களுக்கு இயேசு சொன்னார், “ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு” (வெளிப்படுத்தல் 2:4). அவர்கள் தங்கள் ஆதி அன்பிலிருந்து “விழுந்தார்கள்” என்று அவர் சொல்லவில்லை. அவர்கள் தங்கள் ஆதி அன்பை “விட்டார்கள்” என்று அவர் சொன்னார். “ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு” (வெளிப்படுத்தல் 2:4). டாக்டர் ஜான் எப். வால்வேர்டு காரணத்தைக் கொடுத்தார். அவர் சொன்னார், “எபேசுவில் இருந்த சபையில் இப்பொழுது அதன் இரண்டாம் தலைமுறை கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்.” நான் இன்னும் அதிகமாக சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறதா? “அந்த சபையில் இப்பொழுது அதன் இரண்டாம் தலைமுறையினர் இருக்கிறார்கள்.” அது எல்லாவற்றையும் சொல்லுகிறது! அதன்பிறகு டாக்டர் வால்வேர்டு சொன்னார், “தேவனுடைய அன்பினால் நற்குணங்களினால் நிறப்பப்பட்டிருந்த முதல் தலைமுறை இல்லை” (John F. Walvoord, Th.D., The Revelation of Jesus Christ, Moody Press, 1973, p. 56). வாலிப மக்களே, நீங்களே சபையின் இரண்டாம் தலைமுறை! இந்த சபை கட்டிடத்தை காப்பாற்றிய “அந்த 39” பேர்கள் நீங்கள் அல்ல. அவர்கள் தான் முதலாம் தலைமுறை, நீங்கள் அல்ல! டாக்டர் சென் சொன்னார் எப்படியாக, “அந்த 39,” முதலாம் தலைமுறையினர் கிறிஸ்துவை நேசித்தார்கள் மற்றும் ஊழியம் செய்தார்கள் என்று. அவர் நமது சபைக்கு ஒரு இளம் வாலிபராக வந்தார். அவர் சொன்னார், நான் கிறிஸ்துவை நம்பினபொழுது எனது வாழ்க்கை என்றென்றுமாக மாற்றப்பட்டது, எனது பாவம் அவருடைய இரத்தத்தினால் கழுவப்பட்டது, மற்றும் சபை என்னுடைய இரண்டாவது வீடாக இருந்தது! கிறிஸ்துவுக்காக வேலைசெய்ய எனது வாழ்க்கையை உடனடியாக அற்பணித்தேன். டாக்டர் ஹைமர்ஸ் கிறிஸ்துவின் சீஷனாக இருப்பதைப்பற்றி, [கிறிஸ்துவை] சபையை முதலாவதாக வைப்பதைப்பற்றி, உனக்காக மரிப்பதைப்பற்றி, மற்றும் ஆத்தும ஆதாயத்தைபற்றி தொடர்ந்து பிரசங்கித்தார். அவர் விரோதமாக பிரசங்கித்தார் “பெயர்கிறிஸ்தவத்துக்கு மாறாக” – ஒரு சட்ட ஒழுங்கற்ற “கிறிஸ்தவனுக்கு” விரோதமாக அவர் பிரசங்கித்தார். அவர் பிரசங்கித்தது உண்மை என்று நான் அறிந்திருந்தேன். அது எனக்காகவே!... நாங்கள் ஒன்றாக சேர்ந்து ஜெபித்தோம் பாடினோம். இந்த நேரங்களைப்பற்றி எனக்குப் பெரிய அளவில் நினைவிருக்கிறது. ஒரு வாரத்தில் அநேக தடவைகள் நாங்கள் சுவிசேஷ ஊழியம் செய்தோம். ஆடிடோரியம் முழுவதுமாக நாங்கள் நிரப்பினோம். நான் கொண்டு வந்தவர்கள் ஜுடி கேஹன், மெலிசா சான்டர்ஸ், மற்றும் வின்னி யாங், பிறகு அவர் என் மனைவி ஆனார். UCLA காம்பஸிலிருந்து சுவிசேஷ ஊழியத்தின் மூலமாக அவர்களை கொண்டுவர தேவன் எனக்கு உதவி செய்தார்... திருமதி ஹைமர்ஸ் [ஒரு டீன்ஏஜ் பெண்ணாக இருந்தபொழுது] சபை ஊழியத்துக்கு தனது வாழ்க்கையை அற்பணித்தார் மற்றும் ஒன்றையும் பின்வைக்கவில்லை. அவள் முதலாவது நமது சபைக்கு வந்தபொழுது நாங்கள் இருவரும் இளம் மக்களாக இருந்தோம் அவளை நான் அறிந்திருந்தேன். அப்பொழுது அவள் இருந்ததுபோல, தொடர்ந்து பெரிய அன்பினால் கிறிஸ்துவை நேசித்தாள் மற்றும் இழக்கப்பட்ட ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதில் செயல்பட்டாள்... உயர் நிலைப் பள்ளியிலிருந்து பட்டப்படிப்பிற்குப் போவதற்கு முன்பே, நமது சபையில் இரண்டு மனிதர்கள் செய்யும் வேலையை அவள் தொடர்ந்து செய்தாள்... இப்பொழுது அவள் சீன மற்றும் ஆசிய இளம் பெண்களோடு வேலை செய்கிறாள்... நான் அறிந்த வரையிலும் அவள் அதிக பயனுள்ள சிலுவை நாகாரீக மிஷனரியாகும் (எல்லா உயர்வு தாழ்வுகளுக்கும் எதிரிடையாக). இல்லியானா சுகவீனமாக இருந்தாள், ஆனால் அவள் ஒருபோதும் ஜெப கூட்டங்களை தவறவிட்டதில்லை அல்லது இழக்கப்பட்ட மக்களை சுவிசேஷத்தை கேட்பதற்குக் கொண்டுவர – புதன் கிழமை மற்றும் வியாழக்கிழமை இரவுகளில் போன் செய்வதையும் விட்டதில்லை. இன்னொரு மகத்தான பெண் திருமதி சாலாஷார் ஆகும். அவள் ஒரு அன்னை தெரசாவை போன்ற ஊக்க மருந்து! அவள் ஒரு பாப்டிஸ்டு செயின்ட் ஆகும்! இளம் மக்களே, இரண்டாம் தலைமுறையினால் எபேசுவில் செய்யப்பட்டதுபோல நமது சபையைக் கீழே விட்டுவிட வேண்டாம்! நீங்களே இந்தச் சபையின் எதிர்காலம் ஆவீர்கள்! நீங்கள் ஆதியிலே இயேசுவுக்காக கொண்டிருந்த அன்பை தயவு செய்து – விட்டுவிட வேண்டாம்! இப்பொழுது, பிறகு, வெளிப்படுத்தல் 2:3ஐ பாருங்கள். அது ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமத்தில் 1332ம் பக்கத்தில் உள்ளது. “நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக் இதை ஒரு நவீன மொழிபெயர்ப்பில் இவ்விதமாக இருக்கிறது, “நீ சகித்துக்கொண்டிருக்கிறாய் மற்றும் என்னுடைய நாமத்துக்காக கஷ்டங்களில் பொறுமையாக இருக்கிறாய், மற்றும் சோர்ந்துபோகவில்லை” (NIV). அவர்கள் கடந்த காலத்தில் எப்படியிருந்தார்கள் என்று இது விவரிப்பதைக் கவனியுங்கள் – நீங்கள் தாங்கிக்கொண்டீர்கள். நீங்கள் கஷ்டங்களை பொறுமையாக சகித்தீர்கள், நீங்கள் இளைப்படையவில்லை. அவர்கள் கடந்த காலத்தில் சென்ற ஒரு வழியின் விளக்கம் இதுவாகும். டாக்டர் வால்வேர்டு சொன்னார், “சபையில் இப்பொழுது அதன் இரண்டாம் தலைமுறை கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்... தேவனுடைய அன்பினால் நற்குணங்களினால் நிரப்பப்பட்டிருந்த முதல் தலைமுறை இல்லை. இதயம் குளிர்ந்துபோனது... ஆவிக்குரிய அக்கரையற்ற நிலைமை [விறுவிறுப்பு இல்லாமை] ஒரு அபாயகரமான முன்னோடி அது பிறகு [சபையின்] கிறிஸ்தவ சாட்சியின் முக்கியத்துவத்துடன் அனைத்தையும் அழித்துவிட்டது. இவ்வாறாக அது எப்பொழுதும் சபையின் வறலாற்றில் இருக்கிறது: முதலாவதாக ஒரு ஆவிக்குரிய அன்பு குளிர்ந்து போவது, பிறகு தேவனுடைய அன்புக்குப் பதிலாக உலக காரியங்களின்மீது ஒரு அன்பு... இது விசுவாசத்தைவிட்டு வழுவி போவதையும் பயனுள்ள சாட்சி இழப்பையும் தொடந்து வரும்” (Walvoord, ibid.). நமது சபையில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது என்று நான் உணர்த்தப்பட்டேன். நமது சபையின் முதலாம் தலைமுறையினர் இருந்ததைபோல இல்லாமல் இரண்டாம் தலைமுறையினர் அதிகமான குளிர்ந்தநிலை மற்றும் விறுவிறுப்பு இல்லாத தன்மையில் இருக்கிறார்கள். டாக்டர் சென், திருவாளர் கிரிபித், டாக்டர் ஜூடி கேஹன், திருமதி ஹைமர்ஸ் – போன்ற உண்மையானவர்கள் 1970ல் நமது சபைக்குள் வந்தவர்கள் – அவர்கள் உயிரோடிருக்கிறார்கள், வைராக்கியத்தினால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள், அன்பினாலும் ஆழமான ஐக்கியத்தினாலும் நிரப்பப்பட்டு இருக்கிறார்கள் – மற்றும் கிறிஸ்துவுக்கு உறுதியாக ஒப்புக்கொடுத்து இருக்கிறார்கள். வேறுவிதமாக சொன்னால், எபேசு சபையில் முதலாம் தலைமுறை கிறிஸ்தவர்கள் இவர்களைபோல ஏராளமானவர்கள் இருந்தார்கள். ஆனால் இந்த அனல் மற்றும் வைராக்கியமானது அதிகமான சபை பிள்ளைகளுக்கு – இரண்டாம் தலைமுறையில் வளர்ந்து வருபவர்களுக்கு கடத்தப்படவில்லை. இந்த இரண்டாம் தலைமுறையினர் தங்கள் வாழ்நாள் முழுவதும் இங்கு இருந்தார்கள். அவர்கள் இயக்கங்கள் ஊடாக கடந்தார்கள். அவர்கள் ஜெபகூட்டங்களுக்கு வந்தார்கள், அவர்கள் ஜெபிக்கவுமில்லை அல்லது வாஞ்சையில்லாத காய்ந்துபோன ஜெபத்தை செய்தார்கள். “அநேகருடைய வாழ்க்கையில் தேவனுடைய அன்பினால் நற்குணங்களினால் நிரப்பப்பட்டிருந்த முதல் தலைமுறை இல்லை.” ஜான் கேஹன் மட்டுமே முதல் தலைமுறையைபோல நின்றார். அது ஏனென்றால் அவரது மாற்றமானது பழைய தலைமுறையினர் பெற்றிருந்த அன்பு மற்றும் வைராக்கியமுள்ள வாழ்க்கை மாற்றப்பட்ட ஒரு மாற்றமாகும். அவர் ஒரு ஓட்டப்பந்தய வீரராக மற்றும் ஒரு இயற்கையான தலைவராக இல்லாதிருந்தால், அவரும் மற்றசபை குளிந்துபோன பிள்ளைகளைபோல மழுங்கிபோயிருப்பார். அவர் வயதினரில் சிலர் சபையை விட்டுவிட்டார்கள். மற்றவர்கள் குளிர்ந்துபோய் நன்மையில் நம்பிக்கையற்றவர்களாக இருக்கிறார்கள். அதில் இன்னும் சிலர் அப்படியே இருக்கிறார்கள். தன்னுடைய சந்ததி ஏன் இவ்வளவு குளிர்ந்துபோய் உலக பிரகாரமாக இருக்கிறார்கள் என்று, ஜானும்கூட ஆச்சரியப்பட்டு சில நேரங்களில் குழப்பம் அடைகிறார். இந்தச் சந்தர்பத்தில் நமக்கு எழுப்புதல் இருக்க வேண்டியது அவசியம் என்று நான் உணர ஆரம்பிக்கிறேன். கிறிஸ்துவோடு ஒரு உண்மையான வல்லமைமிக்க மாறுதலின் அனுபவம் இல்லையானால் இந்த இரண்டாம் தலைமுறையினர் நமது சபையில் ஜீவன் அன்பு மற்றும் வல்லமையாக இருக்க முடியாது. ஆனால் இரண்டாம் தலைமுறையினரில் அநேகர் கலகமுள்ளவர்களாக இருப்பார்கள் அல்லது சபையை விட்டு போவார்கள், அல்லது குளிர்ந்துபோன நிலையில் மழுங்கிபோயிருப்பார்கள். சிலர் கிறிஸ்துவை மறுப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் அப்படி தங்கியிருந்தாலும் மாறுதல் அடைய மறுப்பார்கள். அவர்களில் சிலர் தங்களுடைய மாறுதல் உண்மையானது இல்லை என்று நினைக்க ஆரம்பித்தார்கள். மற்றவர்கள் கிறிஸ்து உண்மையானவரா என்று நிரூபிக்க சில உள்ளான மாறுதல்களை எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் உண்மையான மாறுதலை அடையும் வரையிலும் அல்லது சபையைவிட்டு ஒவ்வொருவராக போகும்வரையிலும் நாம் அவர்களை எதிர்கொண்டோம். கடைசியாக, அவர்களில் அதிகமானவர்கள் மாறுதல் அடைந்தார்கள் – அவர்கள் முதலாம் தலைமுறையினரை போல மாறுவதற்கு ஒரு பெரிய போராட்டம் இருந்தது. அதை செய்யும்படியாக அவர்கள் “எங்கே இருந்து விழுந்தார்கள் என்பதை நினைவுகூற வேண்டும்.” அவர்கள் ஜான் கேஹனைப் போல உணர்வடைந்து “அந்த முப்பத்தொன்பது பேர்” தங்கள் பெற்றோர் மற்றும் பழைய தலைமுறையினரை ஒப்பிடும்போது – தங்கள் விசுவாசம் செத்தது என்று உணர வேண்டும். இரண்டாவதாக, “அவர்கள் மனந்திரும்பு ஆதியில் செய்த கிரியைகளைச் செய்ய வேண்டியது அவசியம்.” தங்கள் மனதை மற்றும் இருதயத்தை மாற்றவேண்டியது அவசியம். அவர்கள் பின்னுக்கு திரும்பி சென்று மெய்யான மாறுதலை அடைய வேண்டியது அவசியம் (ஆதியில் செய்த கிரியைகள்). அவர்களில் சிலர் அப்படி செய்தார்கள் – ஏமி மற்றும் ஆயாக்கோ போன்றவர்கள், பிலிப்பு மற்றும் தீமோத்தேயு போன்றவர்கள், வெஸ்லி மற்றும் நோவா போன்றவர்கள் – மேலும் மற்ற சிலர் அதற்காக தேவனுக்கு நன்றி. அதன்பிறகு தேவன் தேவன் நமது மத்தியில் எழுப்புதலை அனுப்ப ஆரம்பித்தார்! தேவனுக்கு நன்றி, அவர் இறுதியாக தமது ஆவியை அனுப்ப நம்மை நம்ப முடிந்து. கடந்த சில மாதங்களில் 20 புதிய மக்கள் உள்ளே வந்தார்கள் மற்றும் இரட்சிக்கப்பட்டார்கள். இந்த இளம் மக்களை விசுவாசத்தில் நிலைபடுத்த இந்தக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டி இருந்தது! இப்பொழுது ஜான் கேஹன் சொன்னார் “எழுப்புதல் அடுத்த தடுமாற்றத்தின் துண்டு.” நமது சபை மறுபடியும் மறுபடியுமாக எழுப்புதலை தழுவிக்கொள்ள வேண்டியது அவசியமாகும் அல்லது நமது சபையின் மூலாதாரமான உறுப்பினர்களைப்போல வைராக்கியமுள்ள மாறுதல்களை நாம் பெறமுடியாது. எபேசு சபையாருக்கு அது தேவைப்பட்டது – மற்றும் அது இன்று நமது சபைக்குத் தேவைப்படுகிறது. இதை நான் இப்படியாக அழைக்கிறேன் “பிழைப்பதற்காக எழுப்புதல்!” சகோதர சகோதரிகளே, நமது பாவங்களை நாம் மறுபடியும் மறுபடியுமாக அறிக்கையிட்டு தேவனுடைய அதிகமான பிரசன்னம் அலை அலையாக நமது மத்தியில் இறங்கிவரவேண்டும் என்று ஜெபிக்க வேண்டியது அவசியமாகும். அதை செய்யுங்கள்! அதை செய்யுங்கள்! அதை செய்யுங்கள்! நீங்கள் எழுந்து நின்று பாடல் எண் 15ஐ பாடவும், “நான் அவருக்காக ஜீவிப்பேன்.” எனது வாழ்க்கையை, எனது அன்பை உமக்கு கொடுக்கிறேன், இப்பொழுது 19வது எண் பாடலை பாடவும், “அன்பு இங்கே.” சமுத்திரத்தை போன்ற, வெள்ளமாக புரண்டோடும், டாக்டர் சென், தயவுசெய்து ஜெபித்து கிருபையில் எம்மை நடத்தவும். நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: |