இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
பிழைப்பதற்காக எழுப்புதல்REVIVAL FOR SURVIVAL டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் ஆகஸ்ட் 31, 2017 வியாழக்கிழமை மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி |
உங்கள் பாட்டுத் தாளில் 19ம் பாடலை தயவுசெய்து எழுந்து நின்று பாடவும், ‘சமுத்திரத்தை போன்ற பெரியஅளவு, அன்பு இங்கே இருக்கிறது.” சமுத்திரத்தை போன்ற பெரிய அளவு, அன்பு இங்கே இருக்கிறது, இந்த இரவில் இங்கே தேவன் பிரசன்னராக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஜெபிக்கவும் (அவர்கள் ஜெபித்தார்கள்). இப்பொழுது 22வது பாடலை பாடவும், “அந்தப் போர் முடிந்தது.” அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! இந்த இரவில் இங்கே இயேசு கிறிஸ்து மகிமைபட வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஜெபிக்கவும் (அவர்கள் ஜெபித்தார்கள்). இப்பொழுது 23வது பாடலை பாடவும், “மற்றும் அது இப்படியாக இருக்க முடியுமா?” இரட்சகரின் இரத்தத்தில் நான் ஒரு விருப்பமான ஆதாயத்தை நீங்கள் அமரலாம். நமது மூத்த டீக்கன் திரு. பென் கிரிபித் அவர்கள், நமக்காக பாடும்படி வருவார்கள். நாம் இங்கே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மகிமைபட மற்றும் துதிக்கப்பட வேண்டும் என்று இருக்கிறோம் – அவர் மட்டுமே துதிக்கப்பட வேண்டும்! இப்பொழுது உங்கள் வேதாகமத்தில் நீதிமொழிகள், 14ஆம் அதிகாரம், 14ஆம் வசனத்துக்கு திருப்பிக் கொள்ளுங்கள். அது ஸ்கோபீல்டு ஸ்டடி பைபிளில் 681ஆம் பக்கத்தில் இருக்கிறது. அந்த பாடத்தை நான் படிக்கும்போது தயவுசெய்து மறுபடியுமாக எழுந்து நிற்கவும். “பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலே... திருப்தியடைவான்” (நீதிமொழிகள் 14:14). உங்களை நீங்களே கேளுங்கள் – “நான் என்னுடைய சொந்த வழிகளிலே நிரப்பப்படடிருக்கிறேனா? எனது இருதயம் குளிர்ந்து போனதா? நான் தனிமையாக இருக்கும்போது ஜெபிக்க முயற்சி செய்கிறேன், ஆனால் தேவனுடைய பிரசன்னத்தை என்னால் உணரமுடியவில்லை.” இது உன்னுடையதா? நீ சுவிசேஷ பணிக்குப் போகும்போது இழக்கப்பட்ட ஆத்துமாவை தேட வேண்டும் என்ற வற்புறுத்தும் அக்கினி ஆசை உனது எலும்புகளில் இருக்கிறதா? அல்லது ஒரு காலத்தில் இருந்ததைவிட சுவிசேஷ பணிக்கு வாஞ்சை குறைவாக இருக்கிறதா? யாராவது சத்தமாக ஜெபிக்கும்பொழுது, உனது இருதயமும் உதடுகளும் ஒவ்வொரு வேண்டுதலுக்கும், “ஆமென்” என்று சொல்லுகிறதா? நீ முதலாவதாக ஜெபிக்க ஆரம்பிக்கும்பொழுது உன்னைப்போல மற்றவர்கள் நல்லவர்கள் அல்ல என்று நினைக்கிறாயா? அல்லது இப்படியாக நினைக்கிறாயா, “அவர்கள் விரைவில் விழுந்து போவார்களா”? ஒரு புதிய கிறிஸ்தவனிடம் குற்றங்களைக் கண்டுபிடிக்கிறாயா? நீ முதலாவது இரட்சிக்கபட்டபொழுது இருந்ததுபோல அவ்வளவு நல்லவர்களாக அவர்கள் இல்லை என்று நீ நினைக்கிறாயா? உனது குற்றத்தை பிரசங்கம் உணர்த்தும்பொழுது, இப்படியாக நீ நினைக்கிறாயா, “அவைகளை ஒருபோதும் நான் அறிக்கை செய்ய மாட்டேன். நான் ஒரு அறிக்கை செய்யும்படி நீங்கள் ஒருபோதும் என்னை கட்டாயப்படுத்த வேண்டாம்”? ஒரு புதிய நபருக்குக் கவனம் செலுத்தப்படும்போது நீ மகிழ்சியாக இருக்கிறாயா? அல்லது நான் முதலாவது இரட்சிக்கபட்டபொழுது இருந்ததுபோல அவ்வளவு நல்லவராக இவர்கள் இல்லை என்று நினைக்கிறாயா? நீ முதலாவது இரட்சிக்கபட்டபொழுது ஒரு நல்ல கிறிஸ்தவராக இருந்ததுபோல இருக்கிறாயா? அல்லது உனது இருதயம் குளிர்ந்துபோய் வெறுமையாக இருக்கிறதா? “பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலே... திருப்தியடைவான்” (நீதிமொழிகள் 14:14). நீ முதலாவது இரட்சிக்கபட்டபொழுது இருந்ததுபோல கர்த்தருக்காக எதை வேண்டுமானாலும் செய்வாய். அப்பொழுது, நீ சொன்னாய், “நான் இயேசுவுக்கு ஊழியம் செய்வதை நேசிக்கிறேன். என்னால் அவருக்கு ஒன்றும் அதிகமாக செய்துவிட ஒருபோதும் முடியாது.” அதேபோல இப்பொழுது உன்னால் சொல்ல முடிகிறதா? அல்லது நீ ஒரு பின்வாங்கின கிறிஸ்தவனாக இருக்கிறாயா? நான் இளம் மக்களிடம் மட்டுமே பேசவில்லை. நான் “39இல்” உள்ளவர்களிடமும் பேசுகிறேன் – நான் முதியவர்களிடமும் அதே சமயத்தில் இளம் மக்களிடமும் பேசிக்கொண்டிருக்கிறேன். நான் இழக்கப்பட்ட இளம் மக்களிடம் பேசிக் கொண்டிருக்கவில்லை. நீண்ட காலத்துக்கு முன்பாக இரட்சிக்கப்பட்ட உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்களுடைய ஆதி அன்பை இழந்துவிட்டீர்களா? நீ முதலாவது இரட்சிக்கபட்டபொழுது இருந்ததுபோல கிறிஸ்துவுகக்காக அன்பு நிறைந்தவராக இருக்கிறாயா? எபேசுவில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு இயேசு சொன்னார், “ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக” (வெளிப்படுத்தல் 2:4, 5). நான் ஏறக்குறைய 60 வருடங்களாக ஒரு பிரசங்கியாக இருந்து வருகிறேன். அந்த 6 பத்தாண்டுகளில் எனது இருதயம் சில நேரங்களில் பின்வாங்கி போனதாக மாறினது. பின்வாங்கி போன நிலைமையிலிருந்து நான் எப்படி வெளியே வரமுடியும்? இது இப்படியாக நடந்தது. முதலாவதாக எனது இருதயம் எனது சொந்த வழிகளில் நிறைந்திருப்பதைப்பற்றி நான் விழிப்புள்ளவனாக மாறினேன். எனக்காக நான் வருத்தப்பட்டேன். நான் துக்கமாக உணர்ந்தேன். காரியங்கள் எவ்வளவாக கடினமாக இருந்தது என்பதைப்பற்றி குறைசொன்னேன். இரண்டாவதாக, இயேசுவுக்காக நான் கொண்டிருந்த ஆதி அன்பை விட்டுவிட்டேன் என்பதை உணர ஆரம்பித்தேன். மூன்றாவதாக, நான் எவ்வளவு தூரமாக விழுந்து போனேன் என்பதை நினைத்தேன். எனக்கும் இயேசுவுக்கும் இடையில் வந்த பாவங்களால் நான் உணர்த்தப்பட்டேன். பிறகு சிலுவையில் என் பாவங்களுக்காக, கிரயம் செலுத்தி மரித்த இயேசுவை நினைத்தேன். நான் மனந்திரும்பி அவரை புதிதாக நம்பினேன். இது ஒரு இரண்டாவது மாறுதலை போலவே இருக்கிறது. “என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும்.” இதை பாடுங்கள். என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், இரட்கரே, நான் ஜெபிக்கிறேன், எனக்கு நானே செய்யாத எந்தக் காரியத்தையும் நீங்கள் செய்ய வேண்டுமென்று நான் உங்களை கேட்க மாட்டேன். ஜான் கேஹனை பிரசங்கம் செய்ய ஒப்புகொடுக்கும்படி நான் ஆலோசனை கொடுத்தேன். இறுதியாக அவர் ஒத்துக்கொண்டார். பிறகு அவர் என்னைவிட சிறந்த பிரசங்கியார் என்று நான் கண்டு கொண்டேன். நான் வயதாகி எனது பெலனை இழந்திருக்கும்பொழுது, அவர் வாலிபத்தின் பெலத்தை பெற்றிருக்கிறார். நான் ஜான்மீது மிகவும் பொறாமை கொண்டேன். ஒரு இரவு நான் அதை அவரிடம் அறிக்கை செய்யும் வரையிலும் அது என்னை மிகவும் வேதனை செய்தது. பிறகு நான் அதை உங்களிடம் அறிக்கை இடுகிறேன். பிறகு நான் குணமாக்கப்பட்டேன் எனது மகிழ்ச்சி எனக்குத் திரும்ப கிடைத்தது. நான் செய்ததை நீங்கள் செய்யுங்கள் என்று இந்த இரவிலே உங்களை கேட்டுக் கொள்ளுகிறேன். உங்களுக்கு நான் இனிமேலும் பிரசங்கம் செய்ய நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று நான் பயப்படும் அளவிற்கு இருதயத்தில் நான் மெய்யாகவே மிகவும் பின்வாங்கி போனேன். பிறகு தேவன் நமது சபையிலே எழுப்புதலின் ஒரு தொடுகையை அனுப்பினார் மற்றும் நான் மனந்திரும்பி இயேசுவிடம் அவரது விலையேறப்பெற்ற இரத்தத்தின் சுத்திகாப்புக்காக மறுபடியுமாக திரும்ப சென்றேன். ஒரு 76 வயதான முதியவர், 60 வருடங்களாக பிரசங்கியாக இருந்தவர், மனந்திரும்ப வேண்டிய தேவை என்ன இருக்கிறது என்று வித்தியாசமாக காணப்படுகிறதா? இல்லை, இது வித்தியாசமல்ல. புதுப்பிக்கப்படுவதற்கும் உனது இருதயம் எழுப்புதல் அடைவதற்கும் இந்த ஒரே வழிதான் உண்டு. “மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக” (வெளிப்படுத்தல் 2:5). மறுபடியும் மறுபடியுமாக மனந்திரும்பு. இயேசுவிடம் திரும்பி வந்து அவருடைய இரத்தத்தினால் மறுபடியும் மறுபடியுமாக சுத்தம் செய்து கொள்! பெரிய மறுமலர்ச்சியாளர் லூத்தர் சொன்னார், “நமது முழுவாழ்க்கையும் நிலையான அல்லது இடைவிடாத மனந்திரும்புதலில்தான் இருக்கிறது.” லூத்தர் நிலையாக மனந்திரும்பி இயேசுவிடம் திரும்ப சுத்திகரிப்புக்கு வரவேண்டியிருந்தது. அப்படியே நீங்களும் நானும் வரவேண்டியது அவசியமாகும். யாக்கோபு 5:16 எழுப்புதலுக்கு ஒரு விண்ணப்பமாக இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். அது சொல்லுகிறது, “நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்…” கவனியுங்கள் “குற்றங்கள்” என்ற வார்த்தையை கவனியுங்கள். அதன் கிரேக்க வார்த்தை “பாரப்டோமா” என்பதாகும். டாக்டர் ஸ்டாங் சொல்லுகிறார் அந்த வார்த்தையின் பிரதான அர்த்தம் “ஒரு வீழ்ச்சி; [ஒரு] தப்பு அல்லது குற்றம், மற்றும் மற்ற பாவங்களாகும்.” நம்மை அறிக்கை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது பெரிய பாவங்கள் மட்டுமல்ல, இங்கே நம்முடைய “ஒரு வீழ்ச்சி,” நம்முடைய “தப்பு அல்லது குற்றங்கள்.” யாராவது ஒருவர் மீது கோபம், நமது மன்னிக்க முடியாதன்மை, நமது பொறாமைகள், நமது அன்பு தாழ்ச்சி, மற்றும் தேவனுக்கும் நமக்கும் இடையில் வரும் மற்ற குற்றங்களை அறிக்கையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறோம். தேவனிடத்தில் மட்டுமே நமது குற்றங்களை அறிக்கையிட்டால் மட்டுமே அடிக்கடி நமது இருதயம் குணமாக்கப்படுகிறது. கெய் பெரிங்கின் முகம் அன்பினாலும் கரிசனையினாலும் பிரகாசிப்பதை நான் கவனித்தேன். அதற்கு முன்பாக அவருக்கு கசப்பு, கோபப்பார்வை இருந்தது. என்ன நடந்தது என்று அவரை நான் கேட்டேன். அவர் என்னிடம் சொன்னார், “திருமதி ஷர்லே லீ மீது எப்படியாக பரிசுத்த ஆவி கிரியை செய்வதை பார்த்தேன். அவளுக்கு இருந்த சமாதானம் மற்றும் சந்தோஷம் எனக்கும் வேண்டும் என்று விரும்பினேன். போதகராகிய உம்மீது கோபமாக இருந்ததை, தேவனிடத்தில் அறிக்கையிட்டேன். பிறகு எனது சொந்த கோபம் போய்விட்டது மற்றும் எனக்குச் சமாதானமும் மற்றவர்களுக்காக கரிசனையும் பெற்றுக்கொண்டேன்.” அற்புதம்! இதை அவர் சொல்ல கேட்டபொழுது எனக்குப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது! நான் அவரை நேசிப்பதாக சொன்னேன். அறிக்கை என்பது முற்றிலுமாக இதுதான். அது மற்றவர்களை மன்னிப்பது மற்றும் தேவனிடத்திலிருந்து புதிய சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பெற்றுக்கொள்ளுவது! எழுப்புதல் அதைதான் செய்கிறது – தேவனிடத்தில் உனது பாவத்தை அறிக்கையிட்டால் உனக்குப் புதிய சமாதானமும் சந்தோஷமும் கிடைக்கும். ஆனால் தேவன் நம்மத்தியில் அசைவாடிக் கொண்டிருக்கும்பொழுது, நீ நேரடியாக உனது குற்றத்தை ஒரு சகோதரன் அல்லது சகோதரியிடம் அறிக்கையிட வேண்டியது அவசியமாகும். உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட வேண்டியது அவசியமாகும். யாக்கோபு 5:16ஐ எழுத்தளவில் இப்படியாக மொழிபெயர்க்கலாம் “‘உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிடுவதை ஒரு அனுபவமாக வைத்துக்கொள்ளுங்கள், மற்றும் ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்பதையும் ஒரு அனுபவமாக வைத்துக்கொள்ளுங்கள்.’ இதன்பொருள் வியாதி வருவதற்கு முன்பாக நீ அறிக்கையிடு காத்திருக்க வேண்டாம் என்பதாகும்” (R. C. H. Lenski). சீனாவில் தங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிடுவதை ஒரு அனுபவமாக வைத்துக்கொண்டிருகிறார்கள் மற்றும் ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்பதையும் ஒரு அனுபவமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் சீனாவில் நிலையான எழுப்புதலை அவர்கள் பெறுகிறார்கள். ஜெபிப்பதற்கு வரவேண்டும் என்று மற்ற இரண்டுமுறை செய்ததுபோல, அழைப்பு கொடுப்பதாக நான் ஒரு சகோதரனிடத்தில் சொன்னேன். அவரிடம் நான் கேட்டேன், “யாராவது வருவார்கள் என்று நினைக்கறீர்களா?” அவர் சிறிது நேரம் யோசித்துப் பிறகு, அவர் சொன்னார், “இல்லை. ஒருவரும் வரமாட்டார்.” நீ ஏன் வரமுடியாது என்று நான் அவரிடம் கேட்டேன். எனக்கு எழுப்புதல் வேண்டும் அதனால் அதிக மக்கள் நமது சபைக்கு வருவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று அவர் சொன்னார். ஆனால் அது காரணம் அல்ல. உங்களையே கேளுங்கள், அதிகமான மக்கள் வந்தால் என்ன நன்மை? அவர்கள் வந்தால் நாம் அவர்களுக்கு எப்படி உதவிசெய்ய முடியும்? நாம் அவர்களுக்கு நட்பு, மகிழ்ச்சி, மற்றும் ஆழமான ஐக்கியம் கொடுக்கிறோம். ஆனால் அது உனக்குள் இருக்கிறதா? உனக்கு இருக்கிறதா? அல்லது உனக்கு அன்பில்லாத கடமைக்கு மதம் மட்டும் இருக்கிறதா? நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு மற்றும் கரிசனையாக இருப்பதில்லை, இல்லையா? உங்களுக்குள் ஆழமான ஐக்கியம் இல்லை, அல்லவா? உங்களுக்குள் மகிழ்ச்சி இல்லை, அல்லவா? உங்களுக்குள் ஆழமான ஐக்கயம் இல்லை, அல்லவா? உனது இருதயத்தில் புதிய மக்களுக்காக ஆழமான அன்பில்லை, அல்லவா? நேர்மையாக இரு, இயேசுவுக்காக ஆழமான அன்பு இதுவரையிலும் உனக்கு இல்லை, இருக்கிறதா? நமக்கு இவைகள் இல்லாமல் இருக்கும்பொழுது மற்றவர்களுக்கு இவைகளை எப்படி கொடுக்க முடியும்? உனது குற்றங்கள் மற்றும் பாவங்களை நீ அறிக்கையிட வேண்டும் என்று நான் உன்னை கேட்டபொழுது நீ நினைக்கிறாய், “அப்படி செய்தால் அது எனக்கு மனகலக்கமாக இருக்கும்.” நீ ஏற்கனவே வேலை செய்து கொண்டிருக்கிறாய் – ஏராளமான வேலைகள்! உனக்கு அதிகமான வேலை தேவையில்லை. அதிகமான அன்பு தேவை! கிறிஸ்துவுக்காக அதிகமான அன்பு தேவை! ஒருவருக்கொருவர் அதிகமான அன்பு இருந்தால் மட்டுமே அவருக்காக அதிகமான அன்பு நமக்கு இருக்கும்! என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், எனது ஆசைகளை மற்ற இரவிலே நான் ஏழை சிம்சோனைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். சிம்சோனுக்காக நான்கு முழு அதிகாரங்கள் பரிசுத்த வேதாகமத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன. அவன் எபிரெயர் 11:32ல் ஒரு இரட்சிக்கப்பட்ட மனிதர்களின் பட்டியலில் இருக்கிறான். அவன் எப்பொழுது இரட்சிக்கப்பட்டான்? அவன் மரணத்துக்குச் சில நிமிடங்களுக்கு முன்னர் கடைசியாக தேவனிடம் உதவிக்காக அழுதபோது இரட்சிக்கப்பட்டான் அதுவரையிலும் இல்லை என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் இயேசு அவனை ஒரு பரிசுத்தவானாக அழைக்கிறார், “தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்” (நியாயாதிபதிகள் 13:5). “கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்” (நியாயாதிபதிகள் 13:25). ஆனால் சிம்சோன் தன் முழு இருதயத்தோடும் தேவனை நேசிக்க தவறிப்போனான். அவனுடைய குறுகிய காலவாழ்க்கை முழுவதும் உன்னைப்போலவே இருந்தது. தனது கிறிஸ்தவ வாழ்க்கையை தன் சொந்த பலத்தில், வாழமுடியும் என்று நினைத்தான். ஆனால் அவனால் முடியவில்லை. உன்னையும் என்னையும் போல, அவன் மறுபடியும் மறுபடியுமாக தோல்வி அடைந்தான். கடைசியாக சாத்தானின் வல்லமை அவனை எடுத்துக்கொண்டது மற்றும் அவன் கண்களைக் குருடாக்கினது, “சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்” (நியாயாதிபதிகள் 16:21). ஓ, சகோதர சகோதரிகளே, உங்களில் சிலர் ஏழை சிம்சோனைப்போல இல்லையா? நீங்கள் இயேசுவினால் அழைக்கப்பட்டீர்கள். கடந்த காலத்திலே இயேசுவுக்காக பெரிய காரியங்களை செய்ய பரிசுத்த ஆவியினால் நடத்தப்பட்டீர்கள். ஆனால் மெதுவாக கசப்பு மற்றும் துக்கமாக மாறிவிட்டீர்கள். இப்பொழுது நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை. இப்பொழுது சபைக்காக உண்மையான அன்பு உங்களுக்கு இல்லை. நீங்கள் குருடாக்கப்பட்ட கண்களோடு சபைக்கு வருகிறீர்கள். உங்கள் மதம் அதிக உழைப்பு, மகிழ்ச்சியற்ற கடினமான வேலைகள் நிறைந்ததாக காணப்படுகிறது. அடிமைத்தன, அதிக உழைப்பு! அவ்வளவுதான்! ஒரு அடிமையைப்போல நீ சபைக்கு வருகிறாய். அது வெறுமையான அதிக உழைப்புதான். இனிமேலும் உனக்கு இங்கே அன்பாக இருக்க முடியவில்லை. நீ “சிறைவீட்டில் மாவறைத்துக் கொண்டிருக்கிறாய்”ஏழை சிம்சோனைப்போல. அவனைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைத்தார்கள் என்று எனக்கு தெரியாது, ஆனால் நான் அவனைப்பற்றி படித்தபொழுது மனங்கசந்து அழுது கண்ணீர் விட்டேன் “சிறைவீட்டில் மாவறைத்துக் கொண்டு” – வெண்கல விலங்குகள் மற்றும் சங்கிலிகளால் கட்டப்பட்டு, எந்திரத்தைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு, தானியங்களை மாவாக, ஒரு மணிக்குப் பிறகு அடுத்த மணி என்று அறைத்துக்கொண்டிருந்தான். உனது மதத்திலும்கூட அதேகாரியம்தான் என்று எனக்குத் தெரியும், உனக்காக சில நேரங்களில் எனது இருதயம் அழுகிறது. உனக்கு அன்பு இல்லை. உனக்கு மகிழ்ச்சி இல்லை. உனக்கு நம்பிக்கை இல்லை. நீ சிறைவீட்டில் ஒரு அடிமையைபோல மாவறைத்துக் கொண்டே இருக்கிறாய். ஆமாம்! உங்களில் சிலருக்கு இந்தச் சபை ஒரு சிறை வீடாக, கூட்டங்கள் மூலமாக மாவரைக்கும் இடமாக இருக்கிறது, ஒரு அடிமையைப்போல சுவிசேஷ வேலை செய்வதாக இருக்கிறது. அதை நீ அப்படியாக வெறுக்கிறாய்! ஆனால் எப்படி தப்பிக்கொள்வது என்று உனக்குத் தெரியவில்லை! நீ ஆவியின் சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிறாய், மாவறைத்து, மாவறைத்து, எந்த நம்பிக்கையும் இல்லாமல் மாவறைத்துக் கொண்டே இருக்கிறாய். சில நேரங்களில் இதைவிட்டு போகலாமா என்று நீ நினைக்கிறாய். உங்களில் சிலர் அப்படி செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் உன்னால் அப்படி விட்டுப்போக முடியாது. உனக்கிருக்கும் நண்பர்கள் இங்கு மட்டுமே இருக்கிறார்கள். உனக்கிருக்கும் உறவினர்கள் இங்கு மட்டுமே இருக்கிறார்கள்! இந்த இடைவிடாத மாவறைவிலிருந்து, வெறுப்பான கடினமான வேலைகளிலிருந்து மற்றும் சிறை வீட்டைப்போன்று உனக்குக் காணப்படும் சபை வேலைகளில் இருந்து நீ எப்படி தப்பித்துக் கொள்ளுவாய்? நான் உனக்கு உதவி செய்ய விரும்புகிறேன்! நான் செய்வேன் என்று தேவன் அறிவார்! தப்பிசெல்ல ஒரே ஒரு வழிதான் உண்டு. பிரசங்கியாரே, அது உனக்கு எப்படி தெரியும்? ஏனென்றால் இப்பொழுது நீ இருக்கிற அதே இடத்தில் நான் இருந்திருக்கிறேன்! ஒரு சபையிலே நான் விலங்கிடப்பட்டு, மாவறைத்து, மாவறைத்து, அதை வெறுத்தாலும் – விட்டுப்போக வழிகாணாமல் இருந்தேன்! தப்பிச்செல்ல ஒரேவழி இயேசுவே! உனது குற்றங்களை அறிக்கை செய்! ஏன் முடியாது? உன்னைக்கட்டி இருக்கும் சங்கிலி உனது குற்றங்களே! அவைகளிலிருந்து விடுவித்துக்கொள்! மனந்திரும்பு மற்றும் இரத்தத்தினால் சுத்திகரித்துக்கொள், இயேசு மட்டுமே உனது சங்கிலிகளை தளர்த்து மறுபடியுமாக உன்னை விடுவிக்க முடியும். “நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்…” (யாக்கோபு 5:16). உங்களுடைய பயங்கள், உங்களுடைய சந்தேகங்கள், உங்களுடைய பாவங்கள், உங்களுடைய கோபங்கள், உங்களுடைய கசப்புகள், உங்களுடைய பொறாமைகள் அனைத்தையும் அறிக்கை இடுங்கள். “நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்…” (யாக்கோபு 5:16). திருமதி லீ இதை செய்தார்கள்! மற்றும் இயேசு அவளை குணமாக்கினார். கெய் பாங்க் இதை செய்தார், மற்றும் இயேசு அவனை குணமாக்கினார். இப்பொழுதே ஒரு நம்பிக்கையின் ஒளிக்கதிர் இருக்கிறது. நீ நினைக்கலாம், “இது உண்மையாக இருக்க முடியுமா?” ஆமாம்! இது உண்மை! ஒவ்வொருவரும், தயவுசெய்து ஜெபியுங்கள் யாராவது தங்கள் குற்றங்களை அறிக்கையிட்டு இயேசுவினால் குணமாக்கப்படும்படியாக ஜெபியுங்கள் (அவர்கள் ஜெபித்தார்கள்). “கிறிஸ்து சொன்னார், ‘துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்’ (மத்தேயு 5:4) அது தங்கள் பின்வாங்கின நிலைமையை நினைத்து துயரப்படுவதாகும். எழுப்புதலுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் ஒரு கிறிஸ்தவனுக்குப் பாவம் எப்பொழுதுமே ஒரு பிரச்சனையாக இருக்கும், மற்றும் உலகம் பார்க்க முடியாத காரியங்களை எப்பொழுதும் எழுப்புதல் அசௌகரியமற்றபடி சலக்கிரனை செய்கிறது. எப்பொழுதும் எழுப்புதல் இருளான இடங்களில் வெளிச்சத்தை வீசுகிறது... எழுப்புதலுக்காக ஆயத்தப்படுவதற்கு, எவன் ராபர்ட் அவர்களுக்கு நினைவு படுத்துவார் மக்கள் ஆயத்தப்படவில்லையானால் [பரிசுத்த] ஆவி வராது: ‘நாம் எல்லாவிதமான [சபை] தவறான உணர்வுகளிலிருந்து விடுதலையாக வேண்டும் – எல்லாவிதமான கபடு, பொறாமை, தற்பெருமை, மற்றும் தவறான புரிந்துகொள்ளுதல்களிலிருந்தும். [ஜெபிக்க வேண்டாம்] எல்லாவிதமான இடறல்களும் மன்னிக்கப்படும் வரையிலும்: ஆனால் உன்னால் மன்னிக்கமுடியாது என்று நீ உணர்ந்தால், தூலிலே வளைந்து கொடுத்து, ஒரு மன்னிப்பின் ஆவியை வேண்டிக்கொள்ளுங்கள். அதன்பிறகு நீங்கள் விடுதலையாவீர்கள்’” ...சுத்தமான கிறிஸ்தவன் மட்டுமே தேவனுக்கு அருகில் வாழ முடியும் (Brian H. Edwards, Revival, Evangelical Press, 2004, p. 113)… “ஒவ்வொரு மனிதனும் மற்றவரை மறந்து விடுகிறார். ஒவ்வொருவனும் தேவனோடுகூட முகமுகமாக வருகிறான் [தங்கள் பாவங்களை அறிக்கையிடும்பொழுது]... [இது] பதிவான எல்லா எழுப்புதல்களிலும் மாதிரியாக இருக்கிறது. அசௌகரியமான மற்றும் பாவ உணர்த்துதலினால் தாழ்த்தப்பட்ட ஆழமான காரியங்கள் இல்லாமல், எந்த எழுப்புதலும் இல்லை” (ibid., p. 116)… “கிறிஸ்தவர்கள் பாவத்தை உணராமல் அல்லது அதற்கு பயப்படாமல் இருக்கும் காரணத்தால் இன்று நாம் ஒரு பரிசுத்தமற்ற சபையை நாம் பெற்றிருக்கிறோம்… எழுப்புதலுக்காக ஏக்கமுள்ளவர்கள் தங்கள் இருதயங்களை ஒரு பரிசுத்த தேவனுக்கு முன்பாக பரிட்சித்துப் பார்க்க ஆரம்பிக்க வேண்டும். நமது பாவங்களை நாம் மூடி மற்றும் அவைகளை இப்பொழுது அறிக்கையிடாமல் இருப்போமானால் [நாம் எழுப்புதலை பெற்றுக்கொள்ள முடியாது]... ஒரு பரிசுத்தமுள்ள தேவன் கிறிஸ்தவனை சிறிய பாவங்களுக்கும் விழிப்பாக இருக்கும்படி செய்கிறார்... பரிசுத்தமுள்ள தேவனுடைய பிரசன்னத்தில் இருப்பதாக அறிந்தவர்கள் எப்பொழுதும் தங்கள் தனிப்பட்ட பாவத்துக்கு விழிப்பாக இருப்பார்கள்... இந்த ஆழமான உணர்த்துதலின் வேலை எப்பொழுதும் சுதந்தரத்திற்கும் புதிதாக கண்ட மன்னிப்பின் மகிழ்சி அனுபவத்துக்கும் நடத்தும். ‘மார்பிலே அடித்துக்கொள்ளுதல்’ அதை தொடர்ந்து இரட்சிப்பின் சந்தோஷம் வெடிக்கும்” (ibid., p. 120). அந்தக் கூட்டங்களில் பதினேழு இளம் மக்கள் நம்பிக்கையோடு மாற்றப்பட்டதை நாம் கண்டோம். அந்த கூட்டங்களில் நாம் எழுப்புதலின் ஒரு தொடுகையை அனுபவித்தோம். மிக குறைந்த அளவில் அந்த இளம் மக்கள் உயிர்பிக்கப்பட்டார்கள். அவர்கள் உயிர்பிக்கப்பட்டதை மற்றும் நம்பிக்கையோடு இரட்சிக்கப்பட்டதை ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் நான் அவர்களுடைய பெயர்களை அறிவித்த பொழுது, நமது கூட்டத்தில் ஒருவரும் மகிழ்ச்சி அடையவில்லை. நீங்கள் ஏன் மகிழ்ச்சி அடையவில்லை? சீனாவிலே மகிழ்ச்சியினால் அழுதிருப்பார்கள்! இங்கே ஏன் இல்லை? பதினேழு இளம் மக்கள் நம்பிக்கையோடு இரட்சிக்கப்பட்டார்கள் ஆனால் மகிழ்ச்சிக் கண்ணீர் இல்லை, நம் மத்தியில் மகிழ்ச்சியே இல்லை. ஏன்? ஏன் என்றால் “பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலே… திருப்தியடைவான்” (நீதிமொழிகள் 14:14). “உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்க மாட்டீரோ?” (சங்கீதம் 85:6). நமது குற்றங்களை கண்ணீரோடு நாம் அறிக்கையிடாவிட்டால் நாம் கண்ணீரோடு ஆனந்திக்க முடியாது! சீனாவிலே அது நடந்து கொண்டிருக்கிறது. நமது சபையில் ஏன் நடக்கக்கூடாது? உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட, மற்றும் ஒருவருக்கொருவர் ஜெபிக்க, நீங்கள் குணமாக்கப்பட பயப்படுகிறீர்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயம் உங்களை அறிக்கை செய்யவிடாமல் தடுக்கிறது. ஏசாயா சொன்னார், “சாகப்போகிற மனுஷனுக்கு… பயப்படுகிறதற்கு… உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்? (ஏசாயா 51:12). “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்து கொள்ளும்: என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், பாவமில்லாமலும் நீ இதற்கு முன்னர் வரவில்லை. வரவேண்டும் என்று அறிந்திருந்தாய், ஆனால் நீ பயப்பட்டாய். திருமதி சென் அவர்கள் பயங்கரமாக பின்வாங்கி இருப்பதாக போனில் என்னிடம் சொன்னார்கள். பிறகு ஞாயிறு காலையில் நான் அவர்களை பார்த்தேன் – மற்றும் திருமதி சென் அவர்கள் என்னை பார்த்தார்கள். அவர்கள் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று என்னால் காணமுடிந்தது. நான் அவர்கள் கையை பிடித்து சொன்னேன், “வா.” அவர்கள் வந்தார்கள். அவர்கள் வருவதற்கு பயந்து கொண்டு இருந்தார்கள். என்ன இருந்தாலும், அவர்கள் டாக்டர் சென் அவர்களின் மனைவி! அவர்கள் தனது குற்றத்தை அறிக்கை செய்தால் மக்கள் என்ன நினைப்பார்கள்? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை மறந்துவிடுங்கள்! நாம் எழுந்து நின்று பாடும்பொழுது, இங்கே வந்து முழங்கால்படியிட்டு உங்கள் குற்றங்களை அறிக்கையிடுங்கள். தேவன் உங்களை உணர்த்தினால், அதன்பிறகு சிலுவையில் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தம் உங்களை சுத்தம் செய்து புதிதாக்கும். என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், பாவமில்லாமலும் நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: |