இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
தேவன் இரத்தத்தை பார்த்தபொழுதுWHEN GOD SEES THE BLOOD டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் ஆகஸ்ட் 27, 2017 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி “அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்” (யாத்திராகமம் 12:13). |
எபிரெய மக்கள் ஒரு பஞ்சத்தில் எகிப்துக்குக் கடந்து போனார்கள். முதலாவதாக பார்வோனின் கீழ் அரசாட்சியில், ஆளுனராக இருந்த யாக்கோபின் குமாரன் யோசேப்பினிமித்தமாக, அவர்கள் மரியாதையாக நடத்தப்பட்டார்கள். இஸ்ரவேல் மக்கள் வளர்ந்து பெருகினார்கள், ஆனால் யோசேப்பை அறியாத ஒரு புது பார்வோன் அங்கே எழுந்தான். எபிரெயர்கள் மிகவும் விரைவாக வளர்ந்து எண்ணிக்கையில் பெருகினபடியினால் அவர்கள் தேசத்தை கைபற்றிக் கொள்ளுவார்கள் என்று அவன் பயந்தான். அதனால் அவர்களை அடிமைகளாக்கினான். எபிரெயர்கள் ஜெபத்தில் தேவனிடம் அழுதார்கள், மற்றும் அவர்களை விடுதலையாக்க அவர் மோசேயை அனுப்பினார். ஆனால் பார்வோன் கொடூரமாக மற்றும் கடினமாக இருந்தான். அவன் தேவனுடைய மக்களை போகவிடவில்லை. அதனால் தேவன் ஒன்பதுவிதமான வாதைகளை எகிப்தின்மீது அனுப்பினார். அந்த வாதை வந்த ஒவ்வொரு முறையும், மோசே பார்வேனிடம் சென்று சொன்னார், “என் ஜனங்களை போகவிடு என்று, எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.” ஆனால் பார்வோன் ஒருபோதும் கவனிக்கவில்லை. அவனது இருதயம் கடினப்பட்டிருந்தது. இப்பொழுது தேவன் பத்தாவது வாதையை அனுப்ப வேண்டிய நேரம் வந்தது. “அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின் மேலும் வரப்பண்ணுவேன்; அதற்குப்பின் அவன் உங்களை இவ்விடத்திலிருந்து போகவிடுவான்…” (யாத்திராகமம் 11:1). மோசே மறுபடியுமாக பார்வோனின் நீதிமன்றத்துக்கு முன்பாக வந்து, சொன்னான், “கர்த்தர் நடு இராத்திரியிலே நான் எகிப்தின் மத்தியில் புறப்பட்டுப் போவேன். அப்பொழுது சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் ஏந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்திலிருக்கிற முதற்பேறனைத்தும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத் தும் சாகும் என்று உரைக்கிறார்… அந்த ராத்திரியிலே நான் எகிப்துதேசமெங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணு வேன்” (யாத்திராகமம் 11:4-5; 12:12). ஆனால் தேவன் தமது மக்கள் தண்டிக்கப்படுவதை விரும்பவில்லை. ஒவ்வொரு குடும்பமும் ஒரு ஆட்டை பிடித்துக் கொல்ல வேண்டும் என்று அவர் மோசேயிடம் சொன்னார். “அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து…” (யாத்திராகமம் 12:7). இப்பொழுது எழுந்து நின்று யாத்திராகமம் 12:12-13ஐ சத்தமாக படிக்கவும். “அந்த ராத்திரியிலே நான் எகிப்துதேசமெங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளை யெல்லாம் அதம்பண்ணி… நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர். நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்துதேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்” (யாத்திராகமம் 12:12-13). ஏறக்குறைய 1,500 வருடங்கள் யூதர்கள் பஸ்காவை அனுசரித்தார்கள். அவர்கள் ஆட்டுக்குட்டி மற்றும் புளிப்பில்லாத அப்பம் என்ற விசேஷித்த உணவை சாப்பிட்டார்கள், அந்தச் சமயங்களில் அவர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற நினைவாக இந்த வேதபாகத்தை வாசிப்பார்கள். இந்த “பஸ்கா” என்ற வார்த்தை நமது பாடத்தில் வருகிறது. “அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்” (யாத்திராகமம் 12:13). நீங்கள் மூன்று வழிகளில் இந்தப் பாடத்தை சிந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முதலாவது, இரத்தத்தின் அர்த்தம். இரண்டாவது, இரத்தத்தின் வல்லமை. மற்றும், மூன்றாவதாக, இரத்தத்தை பயன்படுத்துவது. I. முதலாவது, இரத்தத்தின் அர்த்தம். “அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்” (யாத்திராகமம் 12:13). இன்று இந்த வார்த்தையில் நமக்கு ஏதாவது இருக்கிறதா? ஆமாம், அதில் அர்த்தம் நிறைந்திருக்கிறது, முதலாவது பஸ்காவில் சிந்தப்பட்ட இரத்தம் இயேசு சிந்தின இரத்தத்தை சுட்டிக்காட்டுகிறது – பஸ்காவின் நாளில். ஓ ஆமாம், பஸ்காவின் நாளில் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். “அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே போய் ஆயத்தம் பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்” (மாற்கு 14:12). அவர்கள் ஒரு மேல்அறைக்குச் சென்று அங்கே அப்பம் புசித்து, இந்த யாத்திராகமம் 12:13ஐ வாசித்தார்கள். “அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்” (யாத்திராகமம் 12:13). இயேசு அவர்களுக்கு முதலாவது புளிப்பில்லாத அப்பத்தை கொடுத்தார். “பின்பு, பாத்திரத்தையும் எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார்… அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக் கிறது” (மாற்கு 14:23-24). யாத்திராகமம் 12:13ல் நிலைக்கால்கள் மீது தெளிக்கப்பட்ட இரத்தமானது அடுத்த நாளில் அவர் சிலுவையில் சிந்தப்போகிற புதிய உடன்படிக்கையின் இரத்தத்திற்கு அடையாளமான ஒரு படமாக இருக்கிறது என்பதை, கிறிஸ்து அவர்களுக்குக் காட்டிக்கொண்டிருந்தார். “அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்” (யாத்திராகமம் 12:13). அது வேறு இரத்தத்தைபற்றி பேசவில்லை. அது பேசும் இரத்தம் “உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29). அழிவிலிருந்து பாவிகளை மீட்க பிராயசித்தம் செய்யப்பட்ட இரத்தத்திற்கு அடையாளமான ஒரு படமாக இருக்கிறது என்பதை நிலைக்கால்கள் மீது தெளிக்கப்பட்ட இரத்தம் காட்டுகிறது, மற்றும் அவர்களை சபையின் உள்ளே நடுகிறது “தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை” (அப்போஸ்தலர் 20:28). இந்த இரத்தத்திற்கு ஏன் இந்த வல்லமை என்று நீங்கள் கேட்கலாம். ஸ்பர்ஜன் சொன்னார், “கிறிஸ்து வெறும் மனிதனாக இருந்தால்... இரட்சிப்பதற்கு அவருடைய இரத்தத்தில் வல்லமை இருக்காது; ஆனால் கிறிஸ்து “தேவாதி தேவன்;” இயேசு சிந்தின இரத்தம் தேவனைப்போன்ற இரத்தம். அது மனிதனுடைய இரத்தம், அவர் நம்மைபோன்ற மனிதனாக இருந்தார்; ஆனால் தெய்வீகம் மனிதர்களோடு அப்படியாக ஜீவித்தது, அதிலிருந்து அந்த இரத்தம் வல்லமையை பெற்றுக்கொண்டது... நித்தியத்துக்கான முடிவில்லாத அதிசயமானது, தேவன் ஒரு மனிதனாகி மரிக்க வேண்டும். ஓ! கிறிஸ்து உலக சிருஷ்டிகர் என்றும், மற்றும் அவருடைய சர்வ வல்ல தோள்களில் இந்த பிரபஞ்சம் தொங்குகிறது என்றும் நாம் நினைக்கும்பொழுது, அவரது மரணம் நம்மை மீட்க, மற்றும் அவரது இரத்தம் நமது பாவங்களை கழுவ வல்லமையுள்ளது என்பதிலும் நாம் ஆச்சரியப்பட முடியாது... ஏனென்றால் அவர் தெய்வீகமானவர், “அவர் முலமாக தேவனிடம் வருபவர்களை முற்றுமுடிய இரட்சிக்க, அவரால் முடியும்.” நாம் தேவனுடைய கோபத்திலிருந்து மற்றும் கோபாக்கினையிலிருந்து தப்பிக்கொள்ள அவரது இரத்தம் நமக்குப் போதுமான இரத்தமாகும் (C. H. Spurgeon, “The Blood,” The New Park Street Pulpit, Pilgrim Publications, 1981 reprint, volume V, pp. 27-28). “அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்” (யாத்திராகமம் 12:13). நிலைக்கால்கள் மீது தெளிக்கப்பட்ட இரத்தமானது, தேவமனிதனாகிய கிறிஸ்து இயேசுவின் இரத்தத்திற்கு அடையாளமான ஒரு படமாக இருக்கிறது. “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே” (I கொரிந்தியர் 5:7). அதுதான் அந்த இரத்தத்தின் அர்த்தமாகும்! II. இரண்டாவது, இரத்தத்தின் வல்லமை. “அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்” (யாத்திராகமம் 12:13). “உங்களைக் கடந்துபோவேன்.” உங்களுக்கு எந்த நியாயத்தீர்ப்பும் வராது. உங்கள்மீது எந்த சாபமும் விழாது – உங்களிடம் அந்த இரத்தம் இருந்தால். “கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணுகிறதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை உங்கள் வீடுகளில் உங்களை அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்படியை விலகிக் கடந்துபோவார்” (யாத்திராகமம் 12:23). அந்த இரத்தம் இருக்கும் ஆண் அல்லது பெண்மீது தேவனுடைய எந்த நியாயத்தீர்ப்பும் விழமுடியாது. “ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்து கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்...” (யாத்திராகமம் 12:22). நிலையின் மேற்சட்டத்தில் இருந்த இரத்தம் – மேல் சட்டம். வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும், இருந்த இரத்தம். கீழே கிண்ணியில் இருந்த இரத்தம். மேலே இருந்தது. கீழே இருந்தது. இரு பக்கங்களிலும் இருந்தது. அது கிறிஸ்துவின் சிலுவையைக் காட்டியது! பாருங்கள், அவரது தலை, அவரது கைகள், அவரது பாதங்களில் இருந்து, “அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர் களே” (I பேதுரு 1:18-19). மார்டீன் லூத்தர் கேட்கிறார், இப்போது என்ன, நாம் மீட்கப்படுவதற்கு பொக்கிஷம் எங்கே இருக்கிறது? அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியும் பொன்னும் அல்ல, ஆனால் தேவகுமாரனாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம். இந்த பொக்கிஷம் மிகவும் விலை உயர்ந்தது மற்றும் அதை மனித அறிவாலும் அல்லது காரணங்களாலும் கிரகிக்க முடியாத உன்னதமானது, இந்தக் கபடில்லாத ஒரே ஒருதுளி இரத்தம் உலக முழுவதின் பாவத்துக்கும் போதுமானதற்கும் அதிகமானதாகும். இருந்தாலும் பிதாவானவர் தமது கிருபையை அதிக ஐசுவரியமாக நம்மீது ஊற்றவேண்டும் என்று விரும்பினார் மற்றும் நமது மீட்பின் கிரயம் அதிகமாக இருந்தபடியினால் தமது குமாரனாகிய, கிறிஸ்துவை தமது இரத்தம் முழுவதையும் நமக்காக சிந்தும்படி இவ்வளவாக அனுமதித்தார், மற்றும் அந்த முழுஐசுவரியத்தையும் இவ்வாறாக நம்மீது பொழிந்தருளினார் (Luther, Exposition of I Peter 1:18-19). கிறிஸ்துவின் அந்த இரத்தம் வியர்வையில் பெருந்துளிகளாய் கெத்செமனேயில் தரையிலே விழுந்தன. அவர் பிலாத்தின் முற்றத்தில் வாரினால் அடிக்கப்பட்டபோது அவரது இரத்தம் இமைப்பொழுதில் அந்த கன்னியில் வழிந்தோடியது. முட்கிரீடம் அவரது நெற்றியைத் துளைத்தது மற்றும் அவரது இரத்தம் கண்களில் வழிந்தது. ஆணிகளால் துளைக்கப்பட்ட கைகள் மற்றும் பாதங்களிலிருந்து, இரத்தம் சிலுவையிலிருந்து தடையின்றி ஓடியது. அதன்பிறகு, சேவகன் அவரது விலாவிலே குத்தினான், “உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது” (யோவான் 19:34). “[தேவன்] தமது குமாரனாகிய, கிறிஸ்துவை, தமது இரத்தம் முழுவதையும் நமக்காக சிந்தும்படி இவ்வளவாக அனுமதித்தார் மற்றும் அந்த முழுஐசுவரியத்தையும் இவ்வாறாக நம்மீது பொழிந்தருளினார்” (Luther, ibid.). மற்றும் “அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (I யோவான் 1:7). இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கும்! எல்லா பாவமும்! அவருடைய இத்தம் சுத்திகரிக்க முடியாத ஒரு பெரிய பாவமும் இல்லை! இரத்தம் சுத்திகரிக்க முடியாத ஒரு பாவமும் இல்லை. அது மகதலேனா மரியாளின் ஏழு பிசாசுகளை துரத்த முடியும். அது பிசாசு பிடித்திருந்தவனின் பைத்தியத்தை விடுவிக்க முடியும். அது சொல்லிமுடியாத குஷ்டத்தை குணமாக்க முடியும். அதனால் குணமாக்க முடியாத எந்த ஒரு ஆவிக்குரிய வியாதியும் இல்லை. அதற்கு எதுவும் மிகப்பெரிதானது இல்லை, அது எவ்வளவு அருவருப்பானதாக அல்லது இழிவானதாக இருந்தாலும் பரவாயில்லை, கிறிஸ்துவின் இரத்தம் எல்லாவற்றுக்கும் போதுமானது. “அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்” (யாத்திராகமம் 12:13). அது இரத்தத்தின் வல்லமையை காட்டுகிறது! III. மூன்றாவதாக, இரத்தத்தை பயன்படுத்துவது. அந்த ஆடு குரல்வளையை நெருக்கி கொல்லப்பட்டாலோ அல்லது விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டாலோ, அதை கொன்றவன் வீட்டாரோடு முதற்பேரை சங்கரிப்பவனாலே நியாயத்தீர்ப்பை அடைவான். அந்த ஆடு கொல்லப்பட்டு மற்றும் அதன் உடலை வாசல் நிலையில் கட்டி வைத்தால், அதை கொன்றவன் நியாயத்தீர்ப்பை அடைவான். இரத்தம் இல்லை என்று சொல்பவர்கள் இந்தக் குறிப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஆட்டுக்குட்டியின் மரணம் மட்டுமல்ல, ஆனால் ஆட்டுக்குட்டியின் இரத்தம் இந்த வித்தியாசத்தை உண்டாக்குகிறது. உண்மை, ஆட்டுக்குட்டி கொல்லப்பட வேண்டும், மற்றும் தேவன் சொன்னார், “அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்” (யாத்திராகமம் 12:13). கிண்ணத்திலே பிடித்த இரத்தம் நியாயத்தீர்ப்பிலிருந்து நம்மை தப்புவிக்காது. அது பயன்படுத்தப்பட வேண்டும். ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்துக் “கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து… வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்” (யாத்திராகமம் 12:22). அந்த இரத்தம் பயன்படுத்தப்படவேண்டியது அவசியம் இல்லையானால் அது பிரயோஜனம் இல்லை. ஓ, பாவியே, கிறிஸ்துவின் இரத்தத்தை எடுத்துக்கொள்! இயேசுவின் இரத்தத்தில் உனது பாவங்களைக் கழுவிக்கொள்! “கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார் (ரோமர் 3:26). இது NASV மொழிபெயர்ப்பில் வித்தியாசமாக இருக்கிறது இது தவறு, ஒரு எழுத்தின்படியான மொழிபெயர்ப்பு என்று அழைக்கப்படுகிறது! மற்றும் NIV மொழிபெயர்ப்பில் இது சரியாக உள்ளது, “இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தின் மூலமாக.” நான் முன்னும் பின்னுமாக செல்லுவதை வெறுக்கிறேன். அதனால்தான் நான் பழைய உண்மையுள்ள KJVயோடு ஒட்டிக்கொண்டிருக்கிறேன், அது இலக்கியபூர்வமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது மற்றும் நம்பிக்கைக்குரியது. “இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தின் மூலமாக.” விசுவாசத்தின் இலக்கு கிறிஸ்து இயேசுவின் இரத்தம். அப்படிதான் நீ தொடர்பு வைத்துக் கொள்ளவேண்டும். அப்படிதான் இரத்தம் உனக்குப் பயன்படுத்தப்படுகிறது – “இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தின் மூலமாக.” “ஓ இல்லை,” சில புதிய சுவிசேஷகர்கள் சொல்லலாம், “இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தின் மூலமாக நீ இரட்சிக்கப்படவில்லை!” நல்லது, அது இல்லாமல் நீ எப்படி இரட்சிக்கப்பட முடியும் என்று நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்! “நல்லது, ஒரு மனிதன் இரத்தத்தில் நிலைத்திருந்தால், அழிந்து விடுவானா.” ஒருபோதுமில்லை! அது அப்படி இருக்க முடியாது! கிறிஸ்துவின் இரத்தத்தில் நிலைத்திருக்கும்பொழுது தேவன் உன்னை அப்படி அழியவிட்டால் அவர்தாமே உண்மையில்லாதவராக காணப்படுவார்! “இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது” (மத்தேயு 26:28). இரத்தம் பயன்படுத்தப்பட்டதை அநேகர் உணராமல் இருக்கிறார்கள். ஆனால் அதைப்பற்றிக் கவலையில்லை, நமது பாடத்தில் நீ இரத்தத்தை பார்க்க வேண்டும் என்று சொல்லப்படவில்லை. ஓ இல்லை! அது சொல்லுகிறது, “அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்து போவேன்” (யாத்திராகமம் 12:13). தேவன் அந்த இரத்தத்தைப் பார்க்ககூடியவர். உனது சகல பாவங்களையும் நீக்கும் இரத்தத்தைப் பார்க்கக்கூடியவர் மற்றும் உணரகூடியவர் தேவன் மட்டுமே. அது இப்படியாகச் சொல்லவில்லை “அந்த இரத்தத்தை நீ கண்டு.” கிறிஸ்துவின் இரத்தம் சுத்திகரிப்பதைபற்றி நீ எல்லாவற்றையும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அது சொல்லவில்லை. அது சொல்லுகிறது, “நான் அதை கண்டு.” உனது விசுவாசம் ஒருவேளை மிகவும் பெரியதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீ இயேசுவிடம் வந்து அவருடைய இரத்தத்தை நம்பினால், தேவன் அதை பார்ப்பார். கணக்கெடுப்பவர் அவர் ஒருவர் மட்டுமே. மற்றும் “அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்” (யாத்திராகமம் 12:13). எபிரெயர்கள் அந்த இரத்தத்தைப் பார்க்க முடியவில்லை. அவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு உள்ளே இருந்தார்கள். வீட்டின் வெளியே இருந்த கதவின் மேற்சட்டத்திலும் நிலைக்கால்களிலும் என்ன இருந்தது என்று அவர்கள் பார்க்க முடியவில்லை. ஆனால் தேவன் அங்கே இருந்த இரத்தத்தைப் பார்த்தார். ஒரு பாவியின் இரட்சிப்பைச் சார்ந்த நிலைக்கு அது ஒரே நிபந்தனைதான் – நீ அதை பார்ப்பதல்ல, இரத்தம் பயன்படுத்தப்பட்டதை தேவன் பார்க்க வேண்டும். அதன்பிறகு தேவனிடம் வந்து ஜெபத்தில் சொல்லு, “கர்த்தாவே, கிறிஸ்துவின் இரத்தத்தின் நிமித்தமாக என்னை இரட்சியும். என்னால் பார்க்க வேண்டியபடி அதை பார்க்க முடியவில்லை, ஆனால் கர்த்தாவே, நீர் அதை பார்க்கிறீர், மற்றும் நீர் சொல்லி இருக்கிறீர், “அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்” (யாத்திராகமம் 12:13). “கர்த்தாவே, நீர் இரத்தத்தைப் பாரும். நான் அதன் இரட்சிப்பின் வல்லமையில் நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்பதை நீர் பாரும். கிறிஸ்துவின் இரத்தத்தின் நிமித்தமாக மட்டுமே என்னை மன்னியும் மற்றும் என்னை சுத்திகரியும்.” உனது இருதயம் உணர்ந்த ஜெபம் மற்றும் வாஞ்சையினால் கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் சீக்கிரமாக சுத்தமாக கழுவுப்படு! நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் போதனைக்கு முன்பாக வாசிக்கப்பட்ட வேத பாகம் : மாற்கு 14:12-25. |
முக்கிய குறிப்புகள் தேவன் இரத்தத்தை பார்த்தபொழுது WHEN GOD SEES THE BLOOD டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் “அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்” (யாத்திராகமம் 12:13). (யாத்திராகமம் 11:1, 4-5; 12:12, 7) I. முதலாவது, இரத்தத்தின் அர்த்தம், மாற்கு 14:12, 23-24; யோவான் 1:29; அப்போஸ்தலர் 20:28; I கொரிந்தியர் 5:7.
II. இரண்டாவது, இரத்தத்தின் வல்லமை, யாத்திராகமம் 12:23, 22; III. மூன்றாவதாக, இரத்தத்தை பயன்படுத்துவது, ரோமர் 3:24-25; மத்தேயு 26:28. |