Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




நோவாவின் பேழையின் மூலமாக
விவரிக்கப்பட்ட சுவிசேஷம்

THE GOSPEL PICTURED BY THE ARK OF NOAH
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

ஜூன் 18, 2017 அன்று கர்த்தருடைய நாள் ஞாயிற்றுக்கிழமை
மாலை வேளையில் லாஸ்ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, June 18, 2017

“அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டை பண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற் போனோம்” (ஏசாயா 53:3).


நீ மாற்றபடாவிட்டால் இதைதான் செய்கிறாய். கிறிஸ்துவைவிட்டு உனது முகத்தை மறைத்துக் கொள்ளுகிறாய். நீ கிறிஸ்துவை அசட்டை பண்ணுகிறாய். நீ கிறிஸ்துவை உயர்வாக எண்ணவில்லை. இப்படிதான் நீ கிறிஸ்துவை நினைத்துக் கொண்டிருக்கிறாய். நான் அப்படியில்லை என்று நீ சொல்லலாம். நான் கிறிஸ்துவை அவ்விதமாக நினைக்கவில்லை என்று நீ சொல்லலாம். நான் இயேசுவை நேசிக்கிறேன் என்று நினைக்கலாம், ஆனால் நீ உன்னை ஏமாற்றி கொள்ளுகிறாய். தீர்க்கதரிசி எரேமியா சொன்னார், “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது” (எரேமியா 17:9). நீ இயேசுவை நேசிக்கிறாய் என்று சொல்லும்போது உன்னுடைய இருதயம் சரியாகயிருக்கிறது என்று நீ கணிக்கிறாய். உன்னுடைய இருதயம் உண்மையானது என்று நீ தீர்மானிக்கிறாய், ஆனால் அது தவறு. அது “எல்லாவற்றைப்பார்க்கிலும்” கேடுபாடுள்ளது. உன்னுடைய இருதயத்தைவிட மிகவும் மோசமானது வேறொன்றுமில்லை. அது முழுமையாக வஞ்சனை உள்ளது, மாயையானது மற்றும் நேர்மையற்றது. உனது இருதயம் “எல்லாவற்றையும்விட” நேர்மையற்றதாக இருக்கிறது. இருதயத்தைவிட அதிகமான நேர்மையற்றது வேறொன்றுமில்லை.

மற்றவர்களைவிட உனது இருதயம் அதிக நேர்மையற்றது அல்ல என்று ஒருவேளை உன்னை தேற்றிக்கொள்ளலாம். நீ நினைப்பது சரி. ஒரு வழியில் அது உண்மை. ஆனால் நீ உண்மையை யோசிக்கவில்லை ஏனென்றால் ஒவ்வொருவருடைய இருதயமும் மூலமான பாவத்தினால் தீட்டுப்பட்டுயிருக்கிறது என்ற உண்மையை நீ நினைக்கவில்லை. ஒரு நூற்றாண்டின் முக்கால் பகுதியில் நான் வேறொரு காரியத்தை கண்டேன். ஆனால் நான் மூலதார பாவத்துக்குத் திரும்பி வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டேன், நான் அறிந்த ஒவ்வொரு மனிதனும் “அவருக்குத் தமது முகத்தை மறைத்த” ஆதாமை போல முன்னதாக மாம்ச வடிவில் வந்த கிறிஸ்துவுக்கு ஏதேன் தோட்டத்தில் மறைத்ததைப்போல மறைத்துக் கொள்ளுவதற்குக் காரணத்தை விளக்க முடியவில்லை.

“அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டை பண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற் போனோம்” (ஏசாயா 53:3).

நீ இயேசுவுக்கு மதிப்புக்கொடுக்கவில்லை. இயேசு முக்கியமானவர் என்று நீ நினைக்கவில்லை.

இந்த வசனம் பொய் என்ற மாயையின் கீழ் நீ வாழ்கிறாய் – நீ மெய்யாகவே இயேசுவை நேசிப்பது, நீ அவரை உயர்வாக வைப்பது. உன்னுடைய இருதயம், மூலதாரமான மற்றும் தனிப்பட்ட பாவத்தால் விஷம் நிறைந்திருக்கிறது மற்றும் முறுக்கப்பட்டுயிருக்கிறது, உனக்குச் சொல்லுகிறது – உன்னுடைய இருதயத்தின் பரிணாமத்தை நீ சந்தேகிக்க வேண்டும்.

கிறிஸ்துவை நேசிக்கும் உள்ளான நினைவுகள் உனக்கு இருக்கிறதா? இதை உன்னால் சொல்ல முடியுமா? கவனி மற்றும் நேர்மையாக உன்னால் சொல்லமுடியுமானால் சொல்லு (நேர்மையாகயிரு) – உன்னால் சொல்லமுடியுமா, “நான், இயேசுவை பற்றி கேள்விப்பட்டபொழுது மந்தமாக மற்றும் ஜீவனில்லாமல் இருந்த, சுவிசேஷம் இப்பொழுது உற்சாகயிருக்கிறது”? இதை நேர்மையாக சொல்லமுடியுமா? அப்படி இல்லையென்றால், எமி ஜெபலகா செய்தது போல இயேசுவை நீ உயர்வாக நினைக்கவில்லை என்று இது நிரூபிக்கிறது!

அல்லது நீ இப்படிச் சொல்ல முடியுமா: “நான் அவருடைய சத்துருவாக இருந்தபொழுது, இயேசு எனக்காக சிலுவையில் அறையப்பட்டார், நான் அவருக்கு என்னை ஒப்புக்கொடுக்கவில்லை. இந்த எண்ணம் என்னை உடைத்தது. கிறிஸ்து தமது ஜீவனை எனக்காக கொடுத்தார், அதனால் என்னுடைய எல்லாவற்றையும் நான் அவருக்கு கொடுக்கிறேன்... இயேசு என்னுடைய மீட்பர், என்னுடைய இளைபாறுதல், என்னுடைய இரட்சகர். கிறிஸ்துவுக்காக என்னால் அதிகமாக ஒருபோதும் செய்துவிடமுடியாது. இயேசுவுக்கு ஊழியம் செய்வது என்னுடைய மகிழ்ச்சி”? இந்த வார்த்தைகளை உன்னால் நேர்மையாக சொல்ல முடியுமா – ஜான் கேஹான் சொன்னதுபோல சொல்லமுடியுமா? நீ தயங்கினால், நீ உன்னை இயேசுவுக்கு மறைத்துக்கொண்டு இருக்கிறாய் என்பது பொருளாகும், நீ இயேசுவை பற்றி உயர்வாக நினைக்கவில்லை அல்லவா?

இயேசுவுக்காக உள்ள உன்னுடைய அன்பை சோதிக்க வேறொரு வழி உண்டு அது பாவ உணர்த்துதல். நீ இயேசுவை தள்ளிவிட்டதன் காரணமாக பாவ உணர்த்துதல் அடையாமல் இருக்கிறாய், நீ இயேசுவை ஒருபோதும் உயர்த்தமுடியாது! இயேசு சொன்னார்,

“அவர் (பரிசுத்த ஆவியானவர்) வந்து, பாவத்தைக் குறித்தும்… உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக் குறித்தும்” (யோவான் 16:8, 9).

நீ பாவத்தைக்குறித்து உணர்த்தப்படாத காரணத்தினால் இயேசுவை புறக்கணித்துயிருக்கிறாய், நீ “அவரை உயர்வாக எண்ணவில்லை” என்பது நிச்சயமாகும். டாக்டர் W. G. T. ஸெட்டு நமக்குச் சொன்னார், “ஒரு மனிதன் உணர்த்தப்படாவிட்டால் பரிசுத்த ஆவியானவர் அந்த மனிதனை சாதாரணமாக மறுபடியும் ஜெனிப்பிக்கப்பட முடியாது.” குற்ற உணர்வு அந்த மனிதனை கர்த்தரால் அதிலிருந்து விடுலையாக்க ஆயத்தப்படுத்துகிறது.

கீழே குறிப்பிட்டவைகள் இல்லாவிட்டால் கிறிஸ்துவின் மதிப்பு எவ்வளவு என்று உன்னால் பார்க்க முடியாது.

  விளையாட்டு விளையாடுவதன் மூலமாக.
    மரணபயம்.
      உன்னை விட்டுவிடுதல்.
        இவைகள் பாவத்தால் உணர்த்தப்படுவதாகும்.

ஒருவர் சொல்லலாம், “அவைகள் மிகவும் கடினமான ஆயத்தங்கள்”. ஆனால் அந்த ஆயத்தமானது உனக்குத் தேவையாகயிருக்கிறது!

முழு வேதாகமத்தின் பெரிய ஆய்வுபொருள் இயேசுவாகும். இயேசு இரண்டு சீஷர்களை சந்தித்தபொழுது, அவர்களிடம் நீளமாக பேசினார். லூக்கா 24:25-27க்கு திருப்பவும். அது ஸ்கோபீல்டு ஸ்டடி பைபிளில் 1112வது பக்கத்தில் உள்ளது. அதை நான் படிக்கும்பொழுது எழுந்து நிற்கவும்.

“அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லா வற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்” (லூக்கா 24:25-27).

இவைகள் எல்லாம் போதிக்க இயேசுவானவர் அநேக மணிநேரத்தை செலவு செய்தார். பழைய ஏற்பாடு நீளமானது, 984 பக்கங்கள் கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பின் பிரதியில் உள்ளன. இயேசு ஆதியாகமத்தின் 6வது, 7வது மற்றும் 8வது அதிகாரங்களுக்கு வந்தபொழுது, அவர் நோவாவின் பேழையை குறித்து விளக்கம் சொல்லியிருப்பார். அவர் நோவாவை பற்றி சொன்னபொழுது, அந்தப் பெரிய ஜலப்பிரளயம், மற்றும் அந்தப் பேழையை பற்றி சொல்லும்பொழுது, “தம்மை பற்றிய காரியங்களை” (லூக்கா 24:27) அவர்களுக்கு விளக்கிக்காட்டியிருப்பார். ஆதியாகமத்தின் இந்த அதிகாரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகள் அதை பற்றிய விளக்கத்தை சொல்லாமல் அவர் கடந்துபோயிருக்க முடியாது.

உண்மையில், ஆதியாகமத்தின் ஆறாவது, ஏழாவது, மற்றும் எட்டாவது அதிகாரங்கள் மெய்யாகவே மாதிரிகளும், உவமைகளும் மற்றும் கிறிஸ்துவை பற்றிய படங்களும் நிறைந்தவைகளாகும். ஆதியாகமத்தின் மனித ஆசிரியராகிய, மோசேயின் எழுத்துக்களை ஆரம்பிக்கும்பொழுது, விளக்கும்பொழுது “வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை” (லூக்கா 24:27), சந்தேகமில்லாமல் அந்த பேழையானது எப்படியாக தம்மை பற்றி சொல்லுகிறது என்பதை அவர்களிடம் சொல்லியிருப்பார்.

ஆமாம், முழு வேதாகமத்தின் பெரிய ஆய்வுபொருள் இயேசுவாகும், மற்றும் பேழையை பற்றி படிக்கும்பொழுது அவரை பற்றி நாம் அதிகமாக அறிந்துகொள்ள முடியும். சுவிசேஷத்தின் அநேக கருத்துகளை இயேசுவானவர் இங்கே தொட்டுயிருக்க வேண்டும் அவர் “எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்” (லூக்கா 24:27).

I. முதலாவதாக, கிறிஸ்து கவர்ச்சிக்க படாதவர்போன்ற படத்தை பேழையானது காட்டுகிறது.

நோவாவின் பேழை அழகானதாகயில்லை, என்று நான் சொன்னபொழுது, ஞாயிறு பள்ளி முட்டாள் ஆசிரியர்கள் வண்ணமடிக்கப்பட்ட பிரகாசமான ஒரு பேழையை காட்டுவார்கள். இல்லை! இல்லை! அந்தப் பேழையானது கரடு முரடான கருப்பான மரத்தால் செய்யப்பட்டதாகும். அது கருப்பான கீலினால், உள்ளும் புறமும் பூசப்பட்டது ஆகும். தேவன் சொன்னார்:

“நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாகக் கீல்பூசு” (ஆதியாகமம் 6:14).

அந்தப் பேழையானது தட்டையான அடிப்பாகத்தை கொண்ட ஒரு ஜெட் கறுப்புப் பெட்டியாகும். அது 500 அடி நீளமாகும். அதன் அகலம் 90 அடியாகும் மற்றும் 60 அடி உயரமாகும். அது பிரயாணம் செய்வதற்கு அல்ல, சாதாரணமாக தட்டையாக செய்யப்பட்டதாகும். அது ஒரு அசிங்கமான, உள்ளும் புறமும் இரு பக்கமும், கறுப்புப் பெட்டியாகும். அதில் எந்தவிதத்திலும் அழகானதாக இல்லை. இதுதான் இயேசு கிறிஸ்துவின் ஒரு படமாகும். கிறிஸ்துவை பற்றி வேதாகமம் சொல்லுகிறது:

“இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார் [மாட்சிமை]; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை, அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டை பண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்” (ஏசாயா 53:2-3).

ஜலப்பிரலயம் வருவதற்கு முன்பாக, அந்தப் பேழை இருந்ததை பார்த்த மக்களின் நிலைமையும், மிக சரியாக இதே போலவே இருந்தது அல்லவா? அதற்கு அழகுமில்லை அல்லது மகத்துவமும் இல்லை. அவர்கள் அதை விரும்பவில்லை. இயேசுவை போலவே, அது அசட்டை பண்ணப்பட்டு புறகணிக்கப்பட்டது. இயேசுவுக்குத் தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டவர்களைபோல, அவர்கள் அந்தப் பேழைக்குத் தங்கள் முகத்தை மறைத்துக்கொண்டார்கள். அந்தப் பேழை அசட்டை பண்ணப்பட்டது அது உயர்வாக எண்ணப்படவில்லை. கிறிஸ்துவுக்குள் வரமறுக்கும் மக்களைபோல, அவர்களும் அதனால் தான் அவர்கள் பேழைக்குள் பிரவேசிக்க மறுத்தார்கள்.

“இந்த அசிங்கமான கருப்பான பேழை, எப்படி இரட்சிக்க முடியும்?” என்று அவர்கள் சொல்லியிருக்கலாம். அதே காரணத்திற்காகவே இன்றும் அநேக மக்கள் கிறிஸ்துவிடத்தில் வந்து இரட்சிக்கப்படாமல் மறுக்கிறார்கள். அவர்கள் நினைக்கிறார்கள், “நம்முடைய அனு தின வாழ்க்கையின், சுகப்போகங்கள் மற்றும் மகிழ்ச்சிகளை, இந்த அசிங்கமான கருப்பான பேழைக்காக, நாம் ஏன் விட வேண்டும்?” மத்தேயு இருபத்தி நான்கு, முப்பத்தி ஏழு வசனத்தை தொடர்ந்து நமக்கு சொல்லுகிறது:

“நோவாவின் [நோவா] காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா [நோவா] பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்” (மத்தேயு 24:37-39).

அவர்கள் பெரிய விருந்துகளில் புசிப்பதையும் குடிப்பதையும் நிறுத்த விரும்பவில்லை என்பதை இது காட்டுகிறது. அவர்கள் ஆடம்பரமான மற்றும் பெரிய நீண்ட விவாகங்களில் கலந்துகொள்ளுவதை அதிகமான ஒருவித போதையாக அந்த நாட்களில் இருந்தது. ஏன், அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் தங்கள் விருந்துகளை, அவர்களது “கேளிக்கைகள்” நடனங்கள் மற்றும் குடி – வேடிக்கயை – அந்தப் பழைய கருப்பான பேழைக்குள் ஒரு “கேளிக்கைகளும்” இல்லாத அந்த இடத்துக்குப் போக, அவர்கள் விரும்பவில்லை.

ஆனால் அவர்கள் நினைத்து தவறு. அவர்கள் இந்த உலகத்தில் மட்டுமே “பரியாசம்” மற்றும் மகிழ்ச்சி உண்டு என்று ஜலப்பிரளயம் பேழைக்கு வரும்வரையிலும் அனுபவித்தார்கள். நோவாவும் அவன் வீட்டாரும் ஒரு பெரிய ஐக்கியமாக அந்த விலங்குகளை போஷிப்பதிலும் மற்றும் பேழைக்குள் கொண்டு செல்லுவதிலுமாக தண்ணீர் பூமியை மூடிக்கொள்ளும் வரையிலுமாக அவர்கள் இணைந்து வேலை செய்தார்கள்.

அந்தப் பயங்கரமான ஜலப்பிரளயம் ஏற்பட்ட காலத்தில் பேழை ஒன்றுதான் அந்த உலகம் முழுவதற்கும் சபையாக இருந்தது. நோவா மற்றும் அவனுடைய குடும்பத்தார் ஏழு பேர் மட்டுமே அந்த சமயத்தில் பூமியில் சபையாக இருந்தார்கள், அவர்கள் அற்புதமான ஐக்கியமுள்ளவர்களாக இருந்தார்கள், அன்பான ஆராதனை, மற்றும் அந்த பேழைக்குள் தெய்வீக ஆனந்தமாக அனுபவித்தார்கள்.

ஆனால் இன்று நம்முடைய ஸ்தல சபையை பார்க்கும் மாற்றப்படாத மக்களுக்கு அப்படியாக தெரிகிறது அல்லவா? அநேக இழக்கப்பட்ட பெற்றோர்கள் சொல்கிறார்கள், “அந்த சபைக்கு இந்த இளம் மக்கள் ஏன் போக விரும்புகிறார்கள்? அவர்களை கவர்ச்சிப்பது என்ன? அவர்களுக்கு குடி, போதை பொருட்கள், அல்லது அந்த சபையில் பெரிய விருந்துகள் இல்லையே. அந்தச் சபையில் தவறான பாலுறவு அவர்களுக்கு இல்லையே. ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் அங்கே இருக்க விரும்புகிறார்கள். அந்த அசிங்கமான, பழைய சபை கட்டிடத்தின் வழியாக எப்பொழுதும் போவதற்கு, எனது மகன் அல்லது மகளுக்கு அங்கே என்ன இருக்கிறது?”

நல்லது, உங்களுடைய விசுவாசமில்லாத குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு இவ்வாறாக நீங்கள் பதில் சொல்லுங்கள்: “இந்தச் சபை எங்களுடைய பேழை. அது எங்களை எரிந்துகொண்டு இருக்கும், தனிமையான வாழ்க்கையிலிருந்து எங்களை இரட்சிக்கிறது. நாங்கள் இந்த ஸ்தல பாப்டிஸ்டு சபையில் வாழுகிறோம். நாங்கள் அதிகமாக சுத்தமாக இருக்கிறோம், இங்கே சபையில் எங்களுக்கு நாங்கள் ஒருபோதும் கனவு காணாத அளவு நல்ல கேளிக்கை இருக்கிறது! ஏன் தனிமையாக தவிக்க வேண்டும்? வீட்டுக்கு வாருங்கள் – சபைக்கு! இந்த அசிங்கமான, ஒரளவுக்கு வசதியில்லாத பழைய சபை கட்டிடத்தில், எங்களுக்குக் குளிரும் தனிமையுமான உலகத்தில் அடைக்கலம் கிடைத்திருக்கிறது. இங்கே வந்து மகிழ்ச்சி மற்றும் நட்பு, பாதுகாப்பை ஜீவனுள்ள தேவனுடைய வீடாகிய இந்த ஸ்தல சபையில் நாங்கள் பெற்றுக்கொண்டதை போல, நீங்களும் பெற்றுக்கொள்ள வரமாட்டீர்களா? இந்தப் பேழைக்கு, இந்தச் சபைக்குத் தயவுசெய்து தொடர்ந்து வாருங்கள், நாங்கள் கண்டுகொண்ட அதே சமாதானம் மற்றும் பேரானந்தத்தை நீங்களும் பெற்றுக் கொள்ளலாம்.”

ஆமாம், அந்தப் பேழை அசிங்கமான, கருப்பான மற்றும் பழைய காரியம்தான், ஆனால் அது மகிழ்ச்சியின் இடம், நட்பு மற்றும் அன்பு நிறைந்த இடம். வீட்டிற்கு வாங்க! எங்களோடு இந்தப் பழைய அசட்டை பண்ணப்பட்ட ஸ்தல சபையாகிய பேழைக்கு வாங்க. நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள், மற்றும் எங்களோடு ஒரு மகிழ்சியான வாழ்க்கையை அனுபவிப்பீர்கள்!

II. இரண்டாவதாக, அந்த பேழை கிறிஸ்துவின் இரத்தத்தை படமாக காட்டுகிறது.

தயவுசெய்து, ஆதியாகமம் ஆறாம் அதிகாரம், வசனம் பதினான்குக்கு உங்கள் வேதாகமத்தை திருப்பிக் கொள்ளுங்கள். தேவன் நோவாவிடம் சொன்னார்:

“நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாகக் கீல்பூசு” (ஆதியாகமம் 6:14).

வேதவியாக்கியானர் H. C. லியுபோல்டு இந்த வசனத்தை இவ்வாறாக மொழிபெயர்த்தார், “அதை கீலினால் உள்ளும் புறம்புமாக பூசவேண்டும்” (Exposition of Genesis, Baker, 1976, volume 1, p. 269).

டாக்டர் லியுபோல்டு இந்த வசனத்தைபற்றி தொடர்ந்து சொல்லும்போது பேழையின் அறைகளையும் கீல் பூசி மூடினான் என்று சொல்லுகிறார்.

“அரைகளுக்கு” (குன்னிம்) உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை “கூடுகளுக்கும்” பொறுந்துவதாகும். அவ்வாறாகவே, அப்படிப்பட்ட அறைகள் வித்தியாசமான மிருகங்களின் தேவைகளுக்கு ஏற்றவிதத்தில் அமைக்கப்பட்டவைகள்… இது ஒரு கப்பல் அல்ல ஆனால் ஒரு பெரிய தட்டையான பெட்டி ஒரு கப்பலைபோல பொறுத்தமான அளவுகளை கொண்டதாகும். இது பிரயாணம் போகதக்க அல்லது யாத்திரை செய்யவும் பயன்படுத்த அல்ல. அது மிதப்பதற்கு செய்யப்பட்டது. அது தண்ணீர் உட்புகாதபடிக்கு உள்ளும் புறமும் “கீல்” பூசப்பட்டதாகும் (kopher) (ibid., p. 270).

டாக்டர் லியுபோல்டு அந்த வார்த்தையை தொடர்ந்து விளக்குகிறார் “kaphar” என்ற வார்த்தையிலிருந்து “kopher” என்ற வார்த்தை எடுக்கப்பட்டது (ibid.).

“Kaphar” என்ற வார்த்தையின் எபிரேய மொழிபெயர்ப்பு வேதாகமத்தில் “பாவநிவாரணம்” என்ற அர்த்தத்தில் மொழிபெயர்க்க பட்டுள்ளது. “Kaphar”ன் வினை சொல் வடிவில் “பாவநிவாரணம்” என்று பழைய ஏற்பாட்டில் எழுபது தரம் மொழிபெயர்க்க பட்டுள்ளது.

லேவியராகமம் 17:11 இந்த வார்த்தையின் அர்த்தத்தை நமக்கு தருகிறது.

“மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே” (லேவியராகமம் 17:11).

இரண்டு முறையும் இந்த “பாவநிவர்த்தி” என்ற வார்த்தையின் மொழிப்பெயர்ப்பு “kaphar” என்ற வார்த்தையிலிருந்து மொழிப்பெயர்க்கப்பட்டதாகும், அதன்பொருள் “மூடுதல்” என்பதாகும். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நமது பாவங்களை “மூடுகிறது”. புதிய ஏற்பாட்டில் நமக்குத் தெளிவாக சொல்லப்பட்டியிருக்கிறது:

“எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்” (ரோமர் 4:7).

நியாயதீர்ப்பின் ஜலப்பிரவாகத்துக்கு தப்பி பாதுகாக்க அந்த பேழையில் கீல்பூசப்பட்டு மூடப்பட்டது. நீ கிறிஸ்துவுக்குள் வரும்பொழுது, கிறிஸ்துவின் இரத்தத்தால் மூடப்படுகிறாய், தேவனுடைய நியாயதீர்ப்பு உன்னை பாதிக்காது. தேவன் நோவாவிடம் சொன்னார், “பேழைக்குள்… பிரவேசியுங்கள்” (ஆதியாகமம் 7:1). நோவா உள்ளே வந்தபொழுது, அவன் கீல்பூசப்பட்டு மூடப்பட்ட சுவர்களுக்குள் இருந்தான். கீலானாது கிறிஸ்துவின் இரத்தத்துக்கு அடையாளமாகும். நீ கிறிஸ்துவிடம் வரும்பொழுது, நீ எழுத்தின் படியாக கிறிஸ்துவின் இரத்தத்தினால் சூழப்படுகிறாய், மற்றும் உன்னுடைய “பாவங்கள் மூடப்படுகிறது” (ரோமர்4:7)!

“இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (I யோவான் 1:7).

அதனால்தான் இயேசு சிலுவையில் மரித்தார் – அதனால் அவருடைய இரத்தம் உன்னுடைய அக்கிரமங்கள் மற்றும் பாவங்களை கழுவும் மற்றும் மூடும்.

“எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்” (ரோமர் 4:7).

III. மூன்றாவதாக, அந்தப் பேழையானது உயிர்தெழுதலின் படமாக உள்ளது.

பேழையானது உயிர்தெழுதலின் ஒரு மாதிரியாகிய உள்ளது. அந்தப் பேழை அராராத் மலையின் மேல் நின்ற நாளில் கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்தெழுந்தார்.

இப்பொழுது நான் இன்னும் சில காரியத்தை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஆதியாகமம், எட்டாம் அதிகாரம், பதினெட்டாம் வசனத்தை கவனியுங்கள்:

“அப்பொழுது நோவாவும், அவன் குமாரரும், அவன் குமாரரின் மனைவிகளும் புறப்பட்டு வந்தார்கள்” (ஆதியாகமம் 8:18).

இந்தப் படமானது இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்தெழுந்ததை குறிப்பிடுகிறது:

“ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது. காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள். தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்” (மத்தேயு 28:1-6).

நோவா பேழையிலிருந்து வெளியே வந்ததுபோல, கிறிஸ்துவும் ஈஸ்டர் அன்று காலையில் கல்லறையிலிருந்து வெளியே வந்தார். அது சொல்லுகிறது, “அப்பொழுது நோவாவும், அவன் குமாரரும், அவன் குமாரரின் மனைவிகளும் புறப்பட்டு வந்தார்கள்”. இந்தப் படங்கள் கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவை ஆகாயத்தில் சந்திக்க போவதை காட்டுகிறது (I தெசலோனிக்கேயர் 4:16-17). நோவா பேழையிலிருந்து வெளியே வந்தது கிறிஸ்து கல்லறையிலிருந்து வந்ததற்கு ஒப்பாகும். அதன்பிறகு அவனுடைய குடும்பத்தார் பேழையிலிருந்து வெளியே வந்தது கிறிஸ்தவர்கள் எடுக்கப்படுதலுக்குச் சமமாக காட்டப்பட்டது.

இவைகளெல்லாம் அடையாளங்களாக மற்றும் ஒப்புவமைகளாக சொல்லப்பட்டவைகளாகும். டாக்டர் ஜான் வார்விக் மான்ட்கோமெரி சொன்னார்:

நோவாவின் விடுதலை செயலானது – (பேழையின்) மூலமாக தண்ணீரில் தேவனுடைய கிருபையினால் மட்டுமே – இவை அனைத்தும் ஆரம்பகால சபையை சீராக இரட்சிப்பின் முன்மாதிரியான அடையாளங்களாக புதிய உடன்படிக்கையில் நடத்தியது. அந்தப் பேழையே சபைக்கு ஒரு அடையாளமாக உருவானதாகும் (பாவம் நிறைந்த உலகில் கிருபையை தேடுகிறவர்கள் மட்டுமே வெள்ளத்தில் மூழ்காதபடி காக்கப்பட முடியும்); சபையின் கட்டுமான நுணுக்கம் மறைவில்லாமல் முத்திரையாக காட்டப்பட்டுள்ளன (எ.கா., “nave” என்பது லத்தின்னிலிருந்து எடுக்கப்பட்டது “navis,” “கப்பல்”). ஆரம்பக்கால கிறிஸ்தவர்களில் [வரைபடங்கள்] – உதாரணமாக தாழ்வாரம் – பேழையானது அடக்கம் பண்ணும் இடம் அல்லது சவப்பெட்டிக்கு அடையாளமாக உபயோகப்படுத்தப்பட்டது, நோவாவை வெள்ளத்தின் பெருக்காகிய மரணத்தினிலிருந்து அவர் விடுதலையாக்கினதை போல, தேவன் விசுவாசிகளை கடைசி நாளில் எழுப்புவார் (John Warwick Montgomery, Ph.D., The Quest for Noah’s Ark, Bethany, 1972, p. 284).

இரண்டாம் நூற்றாண்டின் முதல் பாதியில், ஜெஸ்டின் மார்டயர் சொன்னார்:

நீதிமானாகிய நோவா தம்முடைய மற்ற மக்களோடு ஜலப்பிரளயத்தில், அவனுடைய மனைவி, அவர்களுடைய மூன்று மகன்கள் மற்றும் அவர்களுடைய மகன்களின் மனைவிகள், மொத்தம் எட்டுபேர் அந்த நாளின் அடையாளளமானார்கள், எட்டு என்ற எண் முதலில் வல்லமையை குறிக்கும், அது கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தாகும். இப்பொழுது கிறிஸ்து, “எல்லா சிருஷ்டிக்கும் முந்தினவராக,” ஒரு புதிய உணர்வில் வேறொரு தலைமுறையின் தலைவராக மாறினார், அவர்களை தண்ணீரின் மூலமாக புதிய பிறப்பின் அனுபவத்தில் கொண்டு வந்தார், நோவா மரத்தாலான பேழையில் தன்னுடைய குடும்பத்தோடு, தண்ணீரில் மிதந்ததை போல, விசுவாசம் மற்றும் மரத்தாலான சிலுவையின் இரகசியத்தை உள்ளடக்கி உள்ளது (Justin Martyr, Dialogue with Trypho, cxxxvii, 1-2).

நோவாவின் பேழையில் படமாக காட்டப்பட்டவைகளை, சுவிசேஷம் முழுவதிலுமாக ஆரம்பகால கிறிஸ்தவர்கள் கடைபிடித்தார்கள். (1) அது ஒரு அசிங்கமான பேழை, கண்ணுக்கு அல்லது மனதுக்கு அழகானது அல்ல. அதனால், கிறிஸ்து மனிதர்களுக்கு, சுவிசேஷம் அவர்களுக்கு முட்டாள் தனமாக காணப்படுகிறது. (2) பேழையானது கனமான கீலினால், உள்ளும் புறமும் மூடப்பட்டது. அது மாற்றப்பட்டவர்களை கிறிஸ்துவின் இரத்தம், தேவன் அவர்களுடைய பாவங்களை பார்க்க முடியாதபடி மூடிக்கொள்ளும் படத்துக்கு அடையாளமாகும். (3) பேழை அராராத் மலையில் தங்கினது, நோவா உயிரோடு அதிலிருந்து வெளியே வந்தார். அது கிறிஸ்து, கல்லறையிலிருந்து ஈஸ்டர் காலையில், மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த படமாகும்.

இன்னும் ஒரு காரியம். பேழையானது மலை உச்சியில் தங்கினது. இது மூன்றாம் வானத்தில், தேவனுடைய நகரத்தில், சீயோன் மலையின் மேல் நிற்கும் படகாட்சியாகும். இப்பொழுது கிறிஸ்து பரலோகத்தில், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார். நீ கிறிஸ்துவிடம் வா அப்பொழுது இரட்சிக்கப்படுவாய். நீ கிறிஸ்துவிடம் வா மற்றும் உன்னுடைய பாவங்கள் அவருடைய இரத்தமாகிய “கீலினால்” மூடப்படும். நீ கிறிஸ்துவிடம் வா, நீ பரலோகத்துக்கு போக முடியும். நோவாவும் அவனுடைய குடும்பமும் ஜலப்பிரளயத்துக்கு தப்பிக்கொண்டதுபோல, நீயும் நரகத்திலிருந்து தப்பிக்கொள்ளுவாய். நோவா பேழைக்குள் வந்ததுபோல, நீயும் கிறிஸ்துவுக்குள் வரவேண்டியது அவசியமாகும்!

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர் திரு. நோவா சாங்: மத்தேயு 28:1-6.
போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“Saved by the Blood” (by S. J. Henderson, 19th century).


முக்கிய குறிப்புகள்

நோவாவின் பேழையின் மூலமாக
விவரிக்கப்பட்ட சுவிசேஷம்

THE GOSPEL PICTURED BY NOAH’S ARK

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

“அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டை பண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற் போனோம்” (ஏசாயா 53:3).

(எரேமியா 17:9; யோவான் 16:8, 9; லூக்கா 24:24-27)

I.   முதலாவதாக, கிறிஸ்து கவர்ச்சிக்க படாதவர் போன்ற படத்தை பேழையானது காட்டுகிறது, ஆதியாகமம் 6:14; ஏசாயா 53:2-3; மத்தேயு 24:37-39.

II.  இரண்டாவதாக, அந்த பேழை கிறிஸ்துவின் இரத்தத்தை படமாக காட்டுகிறது, ஆதியாகமம் 6:14; லேவியராகமம் 17:11; ரோமர் 4:7; ஆதியாகமம் 7:1; I யோவான் 1:7.

III. மூன்றாவதாக, அந்த பேழையானது உயிர்த்தெழுதலின் படமாக உள்ளது, ஆதியாகமம் 8:18; மத்தேயு 28:1-6; I தெசலோனிக்கேயர் 4:16-17.