இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
உதவியற்றவர்களுக்கு இரட்சிப்புSALVATION FOR THE HELPLESS டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் ஜூன் 3, 2017 அன்று கர்த்தருடைய நாள் சனிக்கிழமை மாலை |
நாம் அனைவரும் எழுந்து நின்று, உங்கள் வேதாகமத்தை மாற்கு சுவிசேஷத்திற்குத் திருப்பிக் கொள்ளவும். இது மாற்கு 9:26-27, “அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போலக் கிடந்தான். இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார், உடனே அவன் எழுந்திருந்தான்” (மாற்கு 9:26-27). இயேசு இந்தப் பையனை பிசாசின் வல்லமையிலிருந்து இரட்சித்தார். இந்தக் கதை ஒரு நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. ஓர் இழக்கப்பட்ட மற்றும் உதவியற்ற ஆத்துமாவை இயேசு எப்படி இரட்சிக்க முடியும் என்பதை இன்று நமக்குக் காட்டுவதற்காக இது நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான்கு சுவிசேஷங்களான, மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் சுவிசேஷங்களில், இதுபோன்ற அநேக கதைகள் உள்ளன. அவை உதவியற்ற ஆத்துமா எப்படி இரட்சிக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது. இந்தக் கதைகள் இரட்சிப்பின் வித்தியாசமான பக்கங்களை நமக்கு சொல்லுகின்றன. அவைகளை படிப்பதன் மூலமாக அநேக காரியங்களை நாம் கற்றுக்கொள்ள முடியும். இந்தப் பையன் பிசாசு பிடித்தவன். அவனை ஊமையாக மற்றும் செவிடாக மாற்றக்கூடிய பிசாசு அவனைப் பிடித்திருந்தது. அவனால் பேசவும் மற்றும் கேட்கவும் முடியாது. இதுவே இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக ஒவ்வொருவருடைய நிலைமையாகும். இதுவே இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக தேவன் என்ன சொல்லுகிறார் என்று கேட்கமுடியாமல் இருந்தாய். அதைப்பற்றி பேசவும் முடியாமல் இருந்தாய். ஆனால் கிறிஸ்து அந்தப் பிசாசை வெளியே துரத்தினார். கிறிஸ்து பிசாசைவிட வல்லமையுள்ளவர். அதனால்தான் கிறிஸ்து உன்னை இரட்சிக்க முடியும்! அவர் அந்தப் பையனை இரட்சித்தார் மற்றும் அவர் உன்னையும் இரட்சிக்க முடியும்! அவர்கள் எவ்வளவு உதவியற்றவர்களாக இருந்தாலும் பரவாயில்லை, கிறிஸ்துவினால் யாரைவேண்டுமானாலும் இரட்சிக்க முடியும்! கிறிஸ்து உன்னை பிசாசிடமிருந்து விடுதலையாக்க முடியும்! இந்தக் கதையிலிருந்து இரட்சிப்பைப்பற்றி மூன்று பெரிய சத்தியங்களை நீங்கள் கற்றுக்கொள்ள முடியும். I. முதலாவதாக, நீ மரித்தவரில் ஒருவராக இருக்கிறாய். பாடம் சொல்லுகிறது, “அவன்செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத் தக்கதாகச் செத்தவன்போலக் கிடந்தான்” (மாற்கு 9:26). இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக ஒவ்வொருவருடைய நிலைமை படமும் இதுதான். மனித குலம் முழுவதுமாக ஆவிக்குரிய பிரகாரமாக மரித்ததாக இருக்கிறது என்று வேதாகமம் சொல்லுகிறது. நீ ஆவிக்குரிய பிரகாரமாக மரித்தவராக இருக்கிறாய்! வேதாகமம் சொல்லுகிறது, “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது...” (ரோமர் 5:12). நமது முதலாவது பெற்றோர் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தார்கள் –அவர்கள் ஆவிக்குரிய பிரகாரமாக மரித்தவர்களானார்கள். ஆதாம் ஆவிக்குரிய பிரகாரமான மரணத்தினால், தேவனிடத்திலிருந்து துண்டிக்கப்பட்டான். அந்த ஆவிக்குரிய பிரகாரமான மரணம் மனித குலம் முழுவதுமாக ஒவ்வொருவருக்கும் கடத்தப்பட்டது. அதனால்தான் அநேக மதங்கள் உண்டாகி இருக்கின்றன. ஆவிக்குரிய பிரகாரமான மரணத்தினாலும் மற்றும் இருளினாலும், மனித குலம் அநேக மதங்கள் உண்டாக்கிவிட்டது. ஆனால் மனித குலம் மெய்யான மற்றும் ஜீவனுள்ள தேவனை கண்டுகொள்ளவில்லை. அத்தேனில் இருந்த மக்கள் குழுவிடம் அப்போஸ்தலனாகிய பவுல் பேசும்பொழுது, அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார், “நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக் குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன். நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்” (அப்போஸ்தலர் 17:23). அவர்களுக்கு அநேக விக்கிரகங்களும் மற்றும் அநேக தெய்வங்களும் இருந்தன. ஆனால் அவர்களுக்கு மெய்யான தேவன் அறியப்படவில்லை. அவர்கள் அவரை இப்படியாக அழைத்தார்கள், “அறியப்படாத தேவன்”. இன்று இரவிலே தேவன் உனக்கு அறியப்படாதவராக இருக்கிறார். அவர் உனக்கு “அறியப்படாத தேவன்”. தேவன் உனக்கு உண்மையானவராக காணப்படவில்லை. நீ தேவனுடைய காரியங்களில் மரித்தவனாக இருக்கிறாய். ஆவிக்குரிய பிரகாரமாக மரித்தவனாக இருக்கிறாய். நீ இந்தக் கதையில் வரும் பையனைப்போல இருக்கிறாய். “அவன்செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத் தக்கதாகச் செத்தவன்போலக் கிடந்தான்” (மாற்கு 9:26). வேதாமம் சொல்லுகிறது, “உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களா யிருந்த உங்களையும்” (கொலோசெயர் 2:13). வேதாகமம் சொல்லுகிறது நீங்கள் “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாக இருந்தீர்கள்” (எபேசியர் 2:1). ஊதாரித்தனமான குமாரனுடைய தகப்பன் சொன்னான், “எனது குமாரன் மரித்தான்” (லூக்கா 15:24). ஊதாரித்தனமான குமாரனுடைய சகோதரனிடம் அவன் சொன்னான், “உனது சகோதரன் மரித்தான்” (லூக்கா 15:32). இந்த இரவில் இங்குள்ள இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒருகாலத்தில் அப்படியே இருந்தோம். நாம் அனைவரும் பாவங்களிலும் மரித்தவர்களாக இருந்தோம். தேவன் நமக்கு அறியப்படாதவராக காணப்பட்டார். நாம் தேவனைப்பற்றி விழிப்பற்றவர்களாக இருந்தோம். வேதாகமம் ஒரு தேவதை கதையைபோல நமக்குக் காணப்பட்டது, ஏனென்றால் நாம் ஆவிக்குரிய மரித்தவர்களாக இருந்தோம். “அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதய கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து” (எபேசியர் 4:18). இங்குள்ள ஒவ்வொருவரும் ஒருகாலத்தில் இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக அப்படியே இருந்தோம்! மற்றும் நீங்கள் இயேசுவினால் இரட்சிக்கப்பட வேண்டும். ஆவிக்குரிய மணத்திலிருந்து நீங்கள் இயேசுவினால் இரட்சிக்கப்பட முடியும். II. இரண்டாவதாக, நீங்கள் இயேசுவின் “கரத்தினால் தூக்கப்பட்டீர்கள்.” நமது பாடம் சொல்லுகிறது, “அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போலக் கிடந்தான். இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார், உடனே அவன் எழுந்திருந்தான்” (மாற்கு 9:26-27). அது அற்புதமான ஒரு வார்த்தை! “இயேசு அவன் கையைப்பிடித்து தூக்கினார்”! அது உயிர்ப்பிக்கப்படுதலின் ஓர் உதாரணமாகும். இது ஓர் அற்புதமான கிருபையின் படக்காட்சியாகும். இது நம்முடைய இரட்சிப்பின் கதையாகும். இது எதிர்வரும் உதவியற்றவரின் இரட்சிப்பாகும். “அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே, மற்றவர்களைப்போலக் கோபாக்கினை யின் பிள்ளைகளாயிருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களா யிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற் காக, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார். கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாத படிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல” (எபேசியர் 2:2-9). இது கிருபையின் மூலம் கிடைத்த இரட்சிப்பாகும்! இது கிறிஸ்துவின் மூலம் கிடைத்த இரட்சிப்பாகும்! இதுவே பரலோகத்துக்கு செல்லும் வழியாகும்! மற்றும் இது ஒன்றே வழியாகும்! “அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போலக் கிடந்தான். இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார்…” (மாற்கு 9:26-27). இயேசுவிடம் வருவதற்கு முன்பாக, நீ ஒரு கவனிக்கப்படாத மற்றும் உயிர்பிக்கப்படாத நிலையில் இருந்தால். உன்னுடைய ஆத்துமாவுக்கு என்ன நடக்கிறது என்று உன்னால் கவனிக்க முடியாதபடி இருந்தாய். மாற்கு ஒன்பதாம் அதிகாரத்தில் இருந்த பையனை போல இருந்தாய். “அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன்” (மாற்கு.9:17). இந்தவிதமாகவே நானும் இருந்தேன். அடுத்த வீட்டில் இருந்த மக்கள் என்னை பாப்டிஸ்டு சபைக்குக் கொண்டு சென்றார்கள். அவர்கள் என்னை சபைக்கு அழைத்துச் சென்றார்கள், அந்தத் தகப்பன் தனது மகனை அழைத்துச் சென்றது போல சென்றார்கள். எனக்குத் தேவனை பற்றி ஒன்றும் தெரியாது, கிறிஸ்துவை பற்றியும் ஒன்றுமே தெரியாது, வேதாகமத்தை பற்றியும் எதுவுமே தெரியாது. நான் ஒருபோதும் வேதத்தை வாசித்ததே இல்லை. என்னால் மத்தேயு சுவிசேஷத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. நான் ஆதியாகமத்திலிருந்து புரட்டி கொண்டே இருந்தேன், அதை தேடினேன். நான் மத்தேயுவை கண்டுபிடித்த சமயத்தில் போதனை முடிவடையும் நேரம் வந்துவிட்டது! ஆனால் அவர்கள் என்னை சபைக்குக் கொண்டுவந்தார்கள். கிறிஸ்தவர்கள் உனக்குச் சாட்சி சொல்லும்படி தேவன் உபயோகப்படுத்தினார், உன்னை கிறிஸ்துவிடம் கொண்டுவந்தார், அந்தத் தகப்பன் தன்னுடைய மகனை கொண்டு வந்ததுபோல உன்னையும் கொண்டு வந்தார். பிறகு நீ உயிர்ப்பிக்கப்படுதலின் அனுபவத்தை ஆரம்பித்தாய். அது மிகவும் விரைவாக ஆரம்பிக்க முடியும், அல்லது அதிக நேரம் எடுக்கவும் முடியும். மக்கள் வித்தியாசமானவர்கள். ஆனால் உயிர்ப்பிக்கப்படுதல் ஒரு பயங்கரமான காரியமாகும். பவுல் தரையிலே தள்ளப்பட்டார். பெந்தேகொஸ்தே நாளில் மக்கள் தங்கள் இருதயங்களில் குத்தப்பட்டார்கள். சிலுவையில் இருந்த கள்ளன் தனது குற்றத்தைப் பார்த்தான். இது ஒரு பயங்கரமான காரியம். ஜான் கேஹான் சொன்னார், “நான் மரிப்பது போல் உணர்ந்தேன். என்னால் சிரிக்க முடியவில்லை. எனக்குச் சமாதானம் இல்லை. நான் தூங்க முடியாமல் மிகவும் வாதிக்கப்பட்டேன். அதை என்னால் அப்படியே எடுத்து கொள்ள முடியவில்லை.” பரிசுத்த ஆவியானவர் அவருடைய பாவத்தை உணர்த்திகொண்டு இருந்தார். ஏமி ஜெபலாக்கா சொன்னாள், “பரிசுத்த ஆவியானவர் என்னுடைய பாவத்தை உணர்த்தினார். நான் மிகவும் வெட்கப்பட்டேன் மற்றும் கேவலமாக நினைத்தேன். தேவன் என்னுடைய பாவங்களைப் பார்த்தார் என்று அறிந்து கொண்டேன். நான் சுத்தமான கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒரு குஷ்டரோகியைபோல உணர்ந்தேன்.” ஜாக் நாகன் சொன்னார், “நான் என்னுடைய மிக மோசமான பாவத்தை தெளிவாக நினைவு கூர்ந்தேன் – நான் ஒரு பயங்கரமான பாவி.” “அவனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள் அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான்” (மாற்கு 9:20). லேவிஸ் தீவில் ஏற்பட்ட எழுப்புதலின் சமயத்தில் இந்தவிதமான உயிர்ப்பிக்கப்படுதல் முதலாவது பெரிய அளவில் ஏற்பட்டது அப்பொழுது இதே போல நடந்தது. அநேகர் பாவத்தினால் உணர்த்தப்பட்டவர்களாக அழுதார்கள் மற்றும் தரையில் விழுந்தார்கள். அது மறுபடியுமாக ஒருநாள் அமெரிக்காவிலும் நடக்ககூடும். அது ஒரு “சிரிப்பு எழுப்புதல்” அல்ல! மாற்கு ஒன்பதாம் அதிகாரத்தில் அந்தப் பையன் சிரித்துக் கொண்டு இருக்கவில்லை! மெய்யான எழுப்புதல் சிரிப்பை உண்டாக்காது, அது பாவ உணர்த்துதலை ஏற்படுத்தும்!!! பெரிய எழுப்புதலில் மக்கள் சிலநேரங்களில் தங்கள் பாவ உணர்த்துதலினால் கதறி கீழே விழுவார்கள். இது அடிக்கடி சீனா மற்றும் இந்தியாவில் இப்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கிறது – அவர்கள் அனுபவிக்கும் எழுப்புதலில் இது நடைபெறுகிறது. உயிர்ப்பிக்கப்பட்ட ஒவ்வொருவரும் பாவ உணர்வு அடைவார்கள். பரிசுத்த ஆவியானவர் உன்னுடைய பாவத்தை வெளிப்படுத்துவார். “அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னை விசுவாசியாதபடி யினாலே பாவத்தைக்குறித்தும்” (யோவான் 16:8-9). நீ ஏதாவது பாவத்தினால் உணர்த்தப்பட்டாயா? உன்னுடைய பாவத்துக்காக மனம் வருந்துகிறாயா? உன்னுடைய பாவங்களுக்காக உனது மனச்சாட்சி உன்னை வாதிக்கிறதா? நீ இயேசுவினால் மன்னிக்கப்பட வேண்டுமென்று உணருகிறாயா? அதிகமான உணர்த்துதலுக்காக காத்திருக்க வேண்டாம்! உணர்த்துதல் உன்னை இரட்சிக்க முடியாது! எவ்வளவு அதிகமான உணர்த்துதலும் உன்னை இரட்சிக்க முடியாது! உடனடியாக தேவ குமாரனிடம் வா! இப்பொழுதே வா! பாவ உணர்த்துதல் உன்னை இயேசுவிடம் நடத்த வேண்டும். உன்னுடைய உணர்த்துதலில் இருந்து இயேசு ஒருவர் மட்டுமே உனக்கு விடுதலை கொடுக்க முடியும்! வருத்தப்பட்டு, பாரம் சுமக்கிறவர்களே, வாருங்கள், இப்பொழுது இயேசுவிடம் வாருங்கள் மற்றும் அவரை நம்புங்கள், ஒருவேளை போதுமான அளவு நீங்கள் உணர்த்தப்படாதது இருந்தாலும் பரவாயில்லை – அவர் உன்னை இரட்சிப்பார்! “நீங்கள் சரியாகும் வரைக்கும் காத்திருந்தால், நீங்கள் ஒருபோதும் வரவேமாட்டீர்கள்.” இப்பொழுதே வாருங்கள்! இயேசுவை நம்புங்கள், அவர் தேவ குமாரன்! அவர் உன்னை இரட்சிப்பார்! உன்னுடைய பாவங்களுக்குரிய கிரயத்தை கொடுக்க கிறிஸ்து சிலுவையிலே மரித்தார். அவருடைய இரத்தம் உன்னுடைய பாவங்களை கழுவ முடியும். கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்தெழுந்தார். கிறிஸ்து தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் – பரலோகத்தில். கிறிஸ்துவிடம் வா! கிறிஸ்துவிடம் வா! கிறிஸ்துவிடம் வா! கிறிஸ்துவை நம்பு! கிறிஸ்துவை நம்பு! கிறிஸ்துவை நம்பு மற்றும் நீ இரட்சிக்கப்படுவாய்! III. மூன்றாவதாக, நீ கிறிஸ்துவோடு விவாதிக்க உயர்த்தப்பட்டிருக்கிறாய். “இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார் உடனே அவன் எழுந்திருந்தான்” (மாற்கு 9:27). நீ இயேசுவிடம் எப்படி வருவது என்று யோசிக்க வேண்டிய அவசியமில்லை – எப்படி இந்தப் பையன் தூக்கப்படுவான் என்று அறியவேண்டிய அவசியம் அவனுக்கு இல்லாதிருந்ததுபோல. “இயேசு அவன் கையைப்பிடித்து, தூக்கினார் உடனே அவன் எழுந்திருந்தான்.” நீ கிறிஸ்துவிடம் வரவிரும்பினால், அந்தப் பையனை தூக்கின அதே வல்லமையினால் நீ கிறிஸ்துவிடம் கொண்டுவரப்படுவாய். இயேசு அப்படி சொல்லி இருக்கிறார்! இயேசு சொன்னார், “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோவான் 6:37). சிலர் சொல்லலாம், “இயேசுவிடம் என்னை கொடுத்தார் என்று எனக்கு நிச்சயமில்லை.” அது முட்டாளான ஒரு யோசனை. அதை தேவனே அறிந்திருக்கிற காரணத்தால், உன்னால் அதை அறிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட வேத மனக்கோட்டையினால் உன்னுடைய நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்காதே. மற்றவர்கள் வேதத்தைப்பற்றி வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும்போது, நீ கிறிஸ்துவிடம் வா! அவர்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பார்கள் நீ இரட்சிக்கப்படுவாய்! இயேசு சொன்னார், “என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோவான் 6:37). கிறிஸ்து உன்னை தள்ளிவிட மாட்டார். கிறிஸ்து உன்னை மரிக்க மற்றும் நரகத்துக்குப்போகவிட மாட்டார். கிறிஸ்து உன்னுடைய பாவங்களை மன்னித்து உன்னை இரட்சிப்பார், இந்தக் கதையில் அந்தப் பையனை இரட்சித்ததுபோல உன்னை இரட்சிப்பார். நான் உன்னை கெஞ்சுகிறேன். நான் உன்னை வருந்திக்கேட்கிறேன். நான் உன்னை அறிவுறுத்துகிறேன். நான் உன்னை இறைஞ்சுகிறேன். நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். உன்னுடைய நித்திய ஆத்துமாவுக்காக, கிறிஸ்துவிடம் வா! நீ சமாதானமாக இருக்க வேறுவழி இல்லை! இயேசு ஒருவர் மட்டுமே உனக்குச் சமாதானத்தை கொடுக்க முடியும் மற்றும் உன்னுடைய பாவத்தை மன்னிக்க முடியும்! நோவா சாங் சொன்னார், “நான் கிறிஸ்து இல்லாமல் ஒரு நம்பிக்கையற்ற பாவியாக இருந்தேன், குருடனாக மற்றும் நிர்வாணியாக இருந்தேன். அவர் என்னை முதலில் அன்பு கூர்ந்தபடி யினால் நானும் அவரிடத்தில் அன்புகூருகிறேன்... எனக்காக இயசு சிலுவையிலே இரத்தம் சிந்தினார், என்மேல்கொண்ட அன்பினால் மற்றும் என்னுடைய பாவகிரயங்களை அவர் செலுத்தினார், நான் எப்பொழுதும் இதை நினைவுகூருவேன். அவர் கெட்டுப் போன பாவத்தில் இருந்து என்னை இரட்சித்தார்.” என்னுடைய அடிமைத்தனம், துக்கம் மற்றும் இருளிலிருந்து, இயேசு கிறிஸ்து மூலமாக இரட்சிக்கப்படுவதை பற்றி நாங்கள் உங்களிடம் பேச விரும்புகிறோம். ஒருசில நிமிடங்கள், நீங்கள் முன்னே வந்து முன் இரண்டு இருக்கை வரிசைகளில் அமரும்படி கேட்டுக்கொள்கிறோம். ஆமென். நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் பிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர் திரு. நோவா சாங்: மாற்கு 9:17-27. |
முக்கிய குறிப்புகள் உதவியற்றவர்களுக்கு இரட்சிப்பு SALVATION FOR THE HELPLESS டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் “அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போலக் கிடந்தான். இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார், உடனே அவன் எழுந்திருந்தான்” (மாற்கு 9:26-27).
I. முதலாவதாக, நீ மரித்தவரில் ஒருவராக இருக்கிறாய், மாற்கு 9:26;
II. இரண்டாவதாக, நீங்கள் இயேசுவின் “கரத்தினால் தூக்கப்பட்டீர்கள்”,
III. மூன்றாவதாக, நீ கிறிஸ்துவோடு விவாதிக்க உயர்த்தப்பட்டிருக் கிறாய்,
|