இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
எடுத்துக்கொள்ளப்படுதல்THE RAPTURE டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் மே 7, 2017 அன்று கர்த்தருடைய நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை “ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப் படுவோம்...” (I தெசலோனிக்கேயர் 4:16-17). |
இது வேதாகமத்திலுள்ள ஒரு அற்புதமான வாக்குத்தத்தமாகும்! இயேசு மறுபடியும் வரப்போகிறார்! இந்த வார்த்தைகளை கேட்கும்பொழுது ஒவ்வொரு கிறிஸ்தவனும் மகிழ்ச்சியினால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும், “இயேசு மறுபடியும் வரப்போகிறார்”! இந்த வேதவசனத்திற்கு தயவுசெய்து உங்கள் வேதாகமத்தை திருப்பிவைத்துக் கொள்ளுங்கள். இயேசு சிலுவையில் ஆணிகளால் அடிக்கப்பட்டு அநேக மணிநேரங்களாக தொங்கினார். அவர் கடைசியாக, “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக்கா 23:46). அதன்பிறகு அவர் மரித்தார். அவர்கள் அவருடைய மரித்த சரீரத்தை ஒரு கல்லறையில் வைத்தார்கள். அவர்கள் அதை முத்திரை இட்டு மற்றும் அவருடைய கல்லறையை காவல் காக்கும்படி ரோம போர்சேவகர்களுக்கு கட்டளை கொடுத்தார்கள். மூன்றாம் நாளில் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். ஆனால் அவர் தமது சீஷர்களுக்கு காட்சிகொடுத்தபொழுது, “அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்” (லூக்கா 24:37). அதன் பிறகு இயேசு அவர்களிடம் சொன்னார், “நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொன்னார்” (லூக்கா 24:39). அவர்களை எருசலேம் நகரத்தைவிட்டு ஒலிவமலைக்கு அவர் நடத்தினார். உலக முழுவதுக்கும் சுவிசேஷத்தை பரப்பும்படி அவர்களுக்குச் சொன்னார். “இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப் பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப் போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்” (அப்போஸ்தலர் 1:9-11). “பரலோகத்துக்குள்” எடுத்துக்கொள்ளப்பட்ட “இந்த இயேசுவானவர்” மறுபடியும் வருவார். அவர் மேலே சென்றார்! அவர் கீழே வருவார்! அவர் மறுபடியும் வரப்போகிறார்! அவர் மறுபடியும் வரப்போகிறார், அவர் மறுபடியும் வரப்போகிறார், வேதாகமம் நமக்கு இரண்டு பகுதிகளில், இரண்டு அம்சங்களில் அவர் வரப்போகிறார் என்று சொல்லுகிறது. அவரது மறுவருகையின் இரண்டாம் பாகத்தில் இந்த பூமியிலே அவர் தமது ஆயிரவருட அரசாட்சியை நிருவ அவர் ஒலிவ மலையின்மேல் இறங்கிவருவார். ஆனால் நமது பாடம் அவரது மறுவருகையின் முதலாம் பாகத்தைப்பற்றி பேசுகிறது. நமது பாடமாகிய I தெசலோனிக்கேயர் 4:16-17ஐ மறுபடியும் பாருங்கள். அந்த வேதபகுதியிலிருந்து இந்த சம்பவத்தைப்பற்றி மூன்று காரியங்களை கவனியுங்கள். I. முதலாவதாக, இந்த பூமிக்குமேலே ஆகாயத்தில் கர்த்தராகிய இயேசு தோன்றுவார். I தெசலோனிக்கேயர் 4:16ஐ கவனியுங்கள். “ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும்... வானத்திலிருந்து இறங்கிவருவார்...” (I தெசலோனிக்கேயர் 4:16). “கர்த்தர்தாமே” அந்த கிறிஸ்துவானவர் “வானத்திலிருந்து” வரப்போகிறார். அது பரிசுத்த ஆவியானவர் அல்ல. உண்மையில், அது ஒரு ஆவியே அல்ல. அது “வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்[பட்ட] இந்த இயேசுவானவர்” (அப்போஸ்தலர் 1:11). “அதே இயேசு” வானத்திலிருந்து வருவார். “ஏனெனில், கர்த்தர் தாமே... வானத்திலிருந்து இறங்கிவருவார்...” (I தெசலோனிக்கேயர் 4:16). அதன்பிறகு உயிர்த்தெழுந்த கிறிஸ்து சொன்னார், “நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொன்னார்” (லூக்கா 24:39). அவர் மறுபடியும் வரப்போகிறார், அவர் மறுபடியும் வரப்போகிறார், இந்த இயேசுவானவர், மனிதர்களால் தள்ளப்பட்டவர்; யோவான் 14:3ல் இயேசு சொன்னார், “நான் மறுபடியும் வருவேன்” (யோவான் 14:3). நமது பாடத்தில் அவர் பூமியில் வந்துவிடவில்லை என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அவர் இந்த பூமிக்கு வரப்போவது முற்றிலும் தனியான ஒரு சம்பவமாகும், அது பிற்பாடு நடக்கப்போகும் ஒரு சம்பவமாகும். ஆனால் நமது பாடத்தில் அவர் பூமியில் வந்துவிடவில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். 17 ஆம் வசனத்தை கவனியுங்கள். எழுந்து நின்று அதை வாசியுங்கள். “பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோம்….” (I தெசலோனிக்கேயர் 4:17). நீங்கள் அமரலாம். “எடுத்துக்கொள்ளப்படும்” சமயத்தில் கிறிஸ்துவானவர் வானத்திலே வருவார். அதன்பிறகு அவர் பூமிக்கு வருவார். இவை இரண்டும் தனிதனியான சம்பவங்கள் என்பது வேதத்தை வாசிக்கும்பொழுது தெளிவாகிறது. கர்த்தராகிய இயேசு வானத்திலிருந்து இறங்கிவருவார், ஆனால் அவர் பூமிக்கு மேலாக அப்படியே, “வானத்தில்” நிற்பார். “எடுத்துக்கொள்ளப்படுதல்” என்ற வார்த்தைக்கு இடம் பெயர்தல் என்ற அர்த்தமாகும் – மகிழ்ச்சியோடு எடுத்துக்கொள்ளுதல்! ஆகாயத்திலே காற்று இல்லை, அதனால் அவர் அதன்பிறகு அங்கே நிற்பார் அவர் பூமியின் சுற்றுசூழலில் நுழைந்துவிட்டார். “பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோம்” (I தெசலோனிக்கேயர் 4:17). II. இரண்டாவதாக, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எழந்திருப்பார்கள். 16-வது வசனத்தில் பாடம் சொல்லுகிறது, “ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவர்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்…” (I தெசலோனிக்கேயர் 4:16). நீங்கள் அமரலாம். “கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.” டாக்டர் ஜெ. வெர்னாம் மெக்ஜி சென்னார், அவர் வானத்தில் இருந்து இறங்கி “ஒரு பெரிய சத்தத்தோடு” வருவர். அது கட்டளையின் சத்தம். அவர் லாசருவின் கல்லறை அருகில் இருந்தபோது உபயோகித்த அதே சத்தமாகும், “லாசருவே, வெளியே வா” (J. Vernon McGee, Th.D., Thru the Bible, Thomas Nelson Publishers, 1983, volume V, p. 398). லாசருவின் கல்லறையின் அருகில் வந்து அவர் சொன்னார், “இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள்” (யோவான் 11:39). ஆனால் அவர்கள் இயேசுவுக்கு கீழ்படிந்தார்கள். அவர்கள் கல்லறையின் கதவாக இருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். மற்றும் இயேசு, “லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான்” (யோவான்.11:43-44). அதுபோலவே சரியாக கிறிஸ்துவானவர் நம்மை எடுத்துக்கொள்ளும்போது செய்ய போகிறார். அவர் ஒரு கட்டளையின் சத்தமிடுவார், பிரதான தூதனுடைய சத்தம், ஒரு எக்காளத்தை போன்ற சத்தம் (மெக்ஜி, ஐபிட்). லாசருவின் கல்லறையில் அவர் சத்தமிட்டது போல, கிறிஸ்து சத்தமிடும்போது, “கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.” உண்மையான கிறிஸ்தவர்களின் மரித்த சரீரங்கள் வெளியில் வந்து கிறிஸ்துவை மத்திய ஆகாயத்தில் சந்திப்பார்கள். ஜான் கேஹன் சிறு பையனாக இருந்தபொழுது அவன் இரட்சிக்கப்படவில்லை என்று அறிந்திருந்தான் – ஆனால் அவனுடைய பெற்றோர் உண்மையான கிறிஸ்தவர்களாகயிருந்தார்கள். நான் எடுத்துக்கொள்ளுதலைப் பற்றி பிரசங்கித்தபொழுது அது அவனுக்கு இரவில் கவலையைக் கொடுத்தது. அவன் என்னிடம் சொன்னான் அவன் படுகையிலிருந்து எழுந்து அவனுடைய பெற்றோரிடம் படுக்கை அறைக்கு சென்று அவர்கள் அவனை வீட்டில் தனிமையாக விட்டுவிட்டு எடுத்துக்கொள்ளப்பட்டார்களோ என்று பார்த்தான். அது ஒரு நல்ல பயம். நீ பின்னால் விடப்பட்டு விடுவாய் என்று பயப்படுவது நல்லது. இயேசுவை இப்பொழுது நம்பு மற்றும் அந்த பயம் போய்விடும்! வேதாகமம் சொல்லுகிறது, “மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடே கூட எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பூண்டுகளின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; மரித்தோரைப் பூமி புறப்படப் பண்ணும்” (ஏசாயா 26:19) யோபுவின் புத்தகம் பழைய ஏற்பாட்டில் மிகவும் பழைமைவாய்ந்த புத்தகமாகும். அது மோசே ஆதியாகமத்தை எழுதுவதற்கு முன்பாகவே எழுதப்பட்டதாகும். யோபு இந்த எடுக்கப்படுதலைப்பற்றி பேசினார். “இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும். இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் (எனது இருதயம்) எனக்குள் சோர்ந்து போகிறது” (யோபு 19:26-27). இந்த எடுக்கப்படுதல் அப்போஸ்தலனாகிய பவுல் மூலமாக முன்னதாக சொல்லப்பட்டது. அவர் சொன்னார், “கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப் படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்…” (I கொரிந்தியர்.15:51-52). நமது பாடம் சொல்லுகிறது, “கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்” (I தெசலோனிக்கேயர் 4:16). இப்பொழுது, நீங்கள் எப்படியாக நீண்ட நாளுக்கு முன்பாக மரித்த, உண்மையான விசுவாசிகளுடைய சரீரங்கள் 3520 வருடங்களுக்கு முன்பாக யோபுவின் காரியத்தில், எழுப்பப்பட முடியும். இது எப்படி நடக்க முடியும்? I கொரிந்தியர் 15:51ல் அப்போஸ்தனாகிய பவுல் இதை “ஒரு இரகசியம்” என்று அழைக்கிறார், ஒரு “மஸ்டரியான்” என்பது மூல கிரேக்க வார்த்தையாகும், இதை நம்முடைய மனித மனங்களினால் முழுவதும் புரிந்துகொள்ள முடியாததாகும். இதை வெளிபடையாக சொல்ல வேண்டுமானால், இது ஒரு அற்புதம். நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்கள், இல்லையா? நல்லது, வேதாகமத்தில் ஒரு முனையிலிருந்து மற்ற பக்கம் வரைக்கும் தேவன் அற்புதங்களை செய்தார். இது தேவனுடைய மிக பெரிய அற்புதங்களில் ஒன்றாகும், “கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்” (I தெசலோனிக்கேயர் 4:16). அதனுடைய எல்லா உண்மையையும் நாம் புரிந்துக்கொள்ள முடியாது, ஆனால் எப்படியானாலும் இது உண்மை. “கிறிஸ்துவுக்குள் [மரித்த கிறிஸ்தவர்கள்] மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்” (I தெசலோனிக்கேயர் 4:16). III. மூன்றாவதாக, உயிரோடு இருக்கும் கிறிஸ்தவர்கள் அவர்களோடு கூட எடுக்கப்படுவார்கள். வசனம் 17ஐ பார்க்கவும். “பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோம்….” (I தெசலோனிக்கேயர் 4:17). அந்த நேரத்தில் பூமியின் மேல் உயிரோடு இருக்கும் உண்மையான கிறிஸ்தவர்கள் மரித்த கிறிஸ்தவர்களோடு “ஆகாயத்திலே கர்த்தரை சந்திப்பார்கள்” பிறகு “எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.” முதலாவதாக, மரித்த கிறிஸ்தவர்கள் “எடுத்துக்கொள்ளப்படுவார்கள்,” அதன்பிறகு, இரண்டாவதாக, உயிரோடிருக்கும் உண்மையான கிறிஸ்தவர்கள் கர்த்தரை சந்திக்கும்படியாக, “எடுத்துக்கொள்ளப் படுவார்கள்.” இவைககள் எல்லாம் நடக்கப்போகின்றன என்று வேதாகமம் நமக்கு சொல்லுகிறது “ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே” (I கொரிந்தியர் 15:51) இவைகள் எல்லாம் நீ கண் இமைக்கும் நேரத்துக்குள்ளாக விரைவில் நடைபெற போகின்றன! மரித்த கிறிஸ்தவர்கள் அதன்பிறகு உயிரோடு உள்ள கிறிஸ்தவர்களோடு சேர்ந்து, “ஆகாயத்தில் கர்த்தரை சந்திக்க… இணைந்து எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.” என்ன ஒரு அதிசயமான வாக்குத்தத்தம் இந்த வேதத்தில் இருக்கிறது! ஒரு கிறிஸ்தவனுக்கு என்ன ஒரு அற்புதமான நம்பிக்கை இருக்கிறது! ஓ, சந்தோஷம்! ஓ, மகிழ்ச்சி! நாம் மரிக்காமல் போக போகிறோமா, டாக்டர் மெக்ஜி சொன்னார், “எடுத்துக்கொள்ளுதல்” என்ற வார்த்தை “ஹர்பஸோ” என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகும், அதன் பொருள் “அவரசமாக கிரகித்தல், பறித்துக்கொள், தூக்கு, அல்லது உயர்த்து” (ibid., p. 399). பிறகு டாக்டர் ஜெ. வேர்னான் மெக்ஜி சொன்னார், இது எவ்வளவு ஒரு மகிமையான, அற்புதமான ஆறுதல்! [கிறிஸ்தவர்களின்] மரித்த சரீரங்கள் உயர்த்தப்பட போகின்றன. மரித்த கிறிஸ்தவர்கள் எடுத்துக் கொள்ளப்படுவார்கள் அதன்பிறகு, கிறிஸ்தவர்கள் கர்த்தரை சந்திக்கும்படியாக ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். அதனால் நாம் எப்பொழுதும் கர்த்தரோடு இருப்போம். உண்மையில், அவரோடுகூட திரும்ப இந்த பூமிக்கு வந்து அவர் தமது இராஜ்யத்தை ஏற்படுத்தும்போது அவரோடுகூட அரசாளப்போகிறோம் (ibid.). கிறிஸ்து ஆகாயத்திலே வந்து நம்மை பரலோகத்தில் ஏற்றுக்கொள்ளும்போது ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவனுக்கும் ஒரு அற்புதமான எதிர்காலம் காத்திருக்கிறது! அந்தச் சம்பவத்துக்கு நீ தயாராக இருக்கிறாயா? நீ ஆயத்தமாக இருக்கிறாயா? இப்பொழுது இரட்சிக்கப்பட்டவர்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டு ஆகாயத்திலே அப்பொழுது கர்த்தரை சந்திப்பார்கள். நீ இரட்சிக்கப்பட்டு இருக்கிறாயா? உன்னுடைய பாவங்களுக்கு கிரயத்தை செலுத்த இயேசு சிலுவையிலே மரித்தார். அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார் மற்றும் உன்னை சுத்திகரிக்க, உனது சகல பாவங்களையும் கழுவ, அவருடைய இரத்தத்தை பரலோகத்திற்கு எடுத்துச்சென்றார். ஆனால் நீ கிறிஸ்துவுக்கு உன்னை ஒப்புகொடுக்க வேண்டும், மற்றும் அவரை மட்டுமே நம்ப வேண்டும். நீ கிறிஸ்துவை எளிமையான விசுவாசத்தோடு நம்பினால், அவர் உன்னை சுத்திகரிக்க, உனதுசகல பாவங்களையும் அவருடைய சொந்த இரத்தத்தினால் கழுவுவார், நீ இரட்சிக்கப் படுவாய், தயாராக இருக்கிறாயா “பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோம்” (I தெசலோனிக்கேயர் 4:17). அதன் பிறகு நீயும் எங்களோடு பாடமுடியும், ஓ, சந்தோஷம்! ஓ, மகிழ்ச்சி! நாம் மரிக்காமல் போக போகிறோமா, அடுத்தவார இறுதியில் மறுபடியுமாக சுவிசேஷத்தை கேட்க, இந்த சபைக்கு திரும்பவர நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். இயேசு உன்னை நேசிக்கிறார்! அவரை நம்ப வேண்டும் நம்பினால் அவர் உன்னை சுத்திகரித்து உனதுசகல பாவங்களையும் அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினால் கழுவுவார்! ஆமென்! நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் பிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர் திரு. நோவா சாங்: I கொரிந்தியர் 15:51-54. |
முக்கிய குறிப்புகள் எடுத்துக்கொள்ளப்படுதல் THE RAPTURE டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் “ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப் படுவோம்...” (I தெசலோனிக்கேயர் 4:16-17). (லூக்கா 24:37, 39; அப்போஸ்தலர் 1:9-11)
I. முதலாவதாக, இந்த பூமிக்குமேலே ஆகாயத்தில் கர்த்தராகிய இயேசு தோன்றுவார், I தெசலோனிக்கேயர் 4:16அ; அப்போஸ்தலர் 1:11;
II. இரண்டாவதாக, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எழந்திருப்பார்கள், I தெசலோனிக்கேயர் 4:16ஆ; யோவான் 11:39, 43-44; ஏசாயா 26:19;
III. மூன்றாவதாக, உயிரோடு இருக்கும் கிறிஸ்தவர்கள் அவர்களோடு கூட எடுக்கப்படுவார்கள், I தெசலோனிக்கேயர் 4:17; I கொரிந்தியர் 15:52. |