இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
காய்பா – கிறிஸ்துவின் மரணத்திற்குத்
|
இது கிறிஸ்துவின் ஊழியத்தின் முடிவில் சம்பவித்ததாகும். இயேசு லாசருவை உயிரோடு எழுப்பினபிறகு அவர் கிராமபுறமாக வருவதை தவிர்த்தார். அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக கடந்த வாரம் வரையிலும் அவர் எருசலேமுக்குத் திரும்பி வரவில்லை. லாசருவை மரணத்திலிருந்து எழுப்பினது மதத்தலைவர்களை உணர்த்தியிருக்கும் என்று ஒருவர் நினைக்கலாம், ஆனால் அது அப்படியல்ல. இயேசு அதற்கு முன்பாகவே சொன்னார், “அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று சொன்னான் என்றார்” (லூக்கா 16:31). மக்கள் அடிக்கடி அற்புதங்களை காண்பதின்மூலமாக உணர்த்தபடுவதில்லை. அவர்களுக்குத் தேவையான அற்புதம் தேவனுடைய ஆவியானவரின் கிரியை அவர்களுடைய, “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த” (எபேசியர் 2:1) ஆத்துமாக்களில். ஒரு மனிதன் அற்புதமாக பாவ உணர்வினால் உணர்த்தபடவில்லையானால், அவன் மாற்றப்பட போவதில்லை. “மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும்” (லூக்கா 16:31) அவன் மாற்றப்பட மாட்டான். தேவனுடைய ஆவியானவரின் கிரியை அவர்களுடைய ஆவிகளில் கிரியை செய்து, மனிதர்களை பாவ உணர்வடைய செய்கின்றன, மெய்யான மாறுதலில் ஏற்படும் அற்புதத்தை அனுபவபூர்வமாக அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அற்புதங்கள் மக்கள் தங்கள் இருதயங்களை தேவனுக்கு விரோதமாக கடினமடையவும் செய்ய முடியும். இப்பொழுது, இயேசு “அநேக அற்புதங்களை” செய்ததை பிரதான ஆசாரியர்களும் பரிசேயரும் கண்டபொழுது, அவர்கள் “ஒரு ஆலோசனை சங்கமாக,” ஒரு சனகரிப்சங்கமாக கூடிவந்தார்கள் (யோவான் 11:47). அந்த ஆலோசனை சங்கத்தில், ஒரு வித்தியாசமான காரியம் நடந்தது. பிரதான ஆசாரியனாகிய காய்பா கிறிஸ்துவை குறித்து ஒரு நுணுக்கமான தீர்க்கதரிசனத்தைக் கொடுத்தான். புதிய ஏற்பாட்டு வர்ணனை இந்தக் காட்சியை இப்படி விளக்குகிறது: காய்பா ஒரு “மோசடியாளர், ஒரு சந்தர்ப்பவாதி, அவன் நேர்மை அல்லது நீதியின் அர்த்தம் தெரியாதவன்… குற்றமற்ற இரத்தம்சிந்த தயங்காதவன். [அவன் உருவாக்கினதை செய்தான்] மக்களின் நன்மைக்குத் தேவையான ஒன்று இது என்று கண்டான். காய்பா இயேசுவின்மேல் பொறாமை கொண்டான். அவனுடைய சொந்த சுயநல தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள இயேசு கொலை செய்யப்பட வேண்டும் என்று விரும்பினான். இயேசுவை ஆக்கினைக்குள்ளாக தீர்க்க, அவன் புத்திசாலிதனமாக அவனுடைய சாதனங்களை உபயோகப்படுத்தி கணக்கிட்டான்… அவன் ஒரு மாய்மானகாரன், இந்த இறுதி சோதனையில்… அவன் உள்ளான பொலிவினால் நிரப்பப்பட்டபொழுது கிறிஸ்துவின் ஆக்கினை தனக்கு ஒரு சாதகமானதாக இருந்ததை கண்டான், அவன் துக்கத்தினால் மேற்கொள்ளப்பட்டவனைப் போல தனது ஆசாரிய அங்கியை கிழித்தான்! அவன்தான் காய்பா. மேலும் ஜோசபாஸை பாருங்கள், தொல்பொருட்கள், XVIII 4:3” (William Hendriksen, Th.D., New Testament Commentary, Baker Book House, 1981 edition, volume I, p. 163; note on John 11:49-50). இப்பொழுது அந்தப் பொல்லாத பிரதான ஆசாரியன் கொடுத்த தீர்க்கத்தரிசனத்தை மறுபடியுமாக கவனியுங்கள். பழைய ஏற்பாட்டில் இருந்த பிலேயாமை போல, இந்தப் பொல்லாத மனிதன் ஒரு உண்மையான தீர்க்கத்தரிசனத்தை கொடுத்தான். “அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது: ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான். இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும், அந்த ஜனங்களுக்காகமாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்” (யோவான் 11:49-52). ஆனால் அதன்பிறகு வேதம் சொல்லுகிறது, “அந்நாள் முதல் அவரைக் கொலைச் செய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள்” (யோவான் 11:53). ஒரு வாரத்திற்கு பிறகு, காய்பா ஆலயத்து காவலர்களில் சிலரை அனுப்பி இயேசு கெர்சமேனே தோட்டத்தில் ஜெபம் செய்து கொண்டிருந்தபொழுது அவரை கைது செய்யும்படி சொன்னான். அந்தக் காவலர்கள் காய்பாவிடம் அவரை அழைத்துச் சென்றனர், அவன் அவரிடம் சொன்னான், “நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்” (மத்தேயு 26:63). அதற்கு இயேசு உடன்பாடான பதிலை சொன்னபொழுது, “அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறதென்று கேட்டான். அதற்கு அவர்கள் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள். அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து: கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ்டியினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்” (மத்தேயு 26:65-68). பிரதான ஆசாரியனுக்கு மக்களை மரண ஆக்கினிக்குத் தீர்க்க அதிகாரம் இல்லை. அதனால் காய்பா இயேசுவை பொந்தியு பிலாத்துவினிடத்தில் – ரோம ஆளுநரிடம், இழுத்துச் சென்றான் மற்றும் ரோமர்களை அவரை சிலுவையில் அறையும்படி அழைத்தான். இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வரலாற்றுப் போதனையை தயார் செய்வது கடினமானதாகும், ஆனால் அந்த மனிதனுடைய வார்த்தைகள் மற்றும் செய்கைகளிலிருந்து இரண்டு பொதுவான முடிவுக்கு இழுத்து செல்லுவது நலமானதாகும், ஜோசப் காய்பா, பிரதான ஆசாரியன் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைத் திட்டமிட்டவன். I. முதலாவது, காய்பா மிகவும் மதவாதியாகும், மற்றும் கிறிஸ்துவின் பதிலிடுனான பலியை பற்றி ஆழமான சத்தியத்தை சொன்னான். காய்பா பழைய பிரதான ஆசாரியனாகிய அன்னாவுக்கு மருமகன் ஆகும். அவன் 18 வருஷங்களாக பிரதான ஆசாரியனாகிய இருந்தான், அந்தக் காலத்தில் இருந்தவர்களிலெல்லாரிலும் அவன் நீண்ட காலம் இருந்தவன். துர்ரதிர்ஷ்டவசமாக, அவன் எப்படிப்பட்ட மனிதன் என்று நாம் அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக, அநேக நேரங்களில், டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் இளமையாக இருந்தபொழுது, அவருக்குச் சொல்லப்பட்டது, “நீ அதை பிரசங்கிக்க முடியாது,” அல்லது “உன்னால் அப்படி பிரசங்கிக்க முடியாது.” வருடங்கள் சென்றபிறகு அந்த ஆலோசனை தவறானது என்று வெளியரங்கமாக மாறினது. அதை அவருக்குச் சொன்ன மனிதன் வேதத்தில் சொல்லப்பட்டபடி, சத்தியத்தை பார்க்கிலும் அவர்களது நிலைமையை குறித்து அதிக கரிசனையாக இருந்தார். தங்களுடைய வேலைகளில் கரிசனையாகயிருந்து ஒருவரையும் கவிழ்த்து விடாதபடி இருப்பவரை, ஒரு பிரசங்கியார் மகிழ்ச்சி படுத்த முடியாது. காய்பா அப்படிப்பட்ட மனிதன். இயேசு “அநேக அற்புதங்களை” செய்தார் என்று அறிந்திருந்தான் (யோவான்.11:47), ஆனால் அவன் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப இயேசுவை நிறுத்த மட்டுமே விருப்பமாக இருந்தான். அவன் நினைத்தான், “இவரை இப்படியே விட்டுவிட்டால் நாம் சிலவற்றை இழந்துவிடுவோம்.” இயேசு சொன்னார் சொன்னபடியே செய்தார் மற்றும் அவர் அன்பினால் மற்றும் தேவனுக்குக் கீழ்படிந்ததினால் செய்தார். காய்பா சொன்னான் மற்றும் அவன் சொன்னப்படி தேவனைப் பற்றிய எந்த ஒரு சிந்தையும் இல்லாமல் செய்தான். அவனை போல இன்றும் நமது சபைகளில் அநேகர் இருக்கிறார்கள். அவன் மிகவும் மதவாதி. அதை உணர்ந்து கொள்ளாமல், அவன் கிறிஸ்துவின் பாவ பரிகார பலியை குறித்தும் பேசினான் அவன் சொன்னபொழுது, “ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலம்” (யோவான் 11:50). இவ்வாறாக, அவன் பாவிகளுக்குப் பதிலாக கிறிஸ்துவின் மரணம் இருக்கும் என்ற ஆழமான சத்தியத்தைச் சொன்னான், ஏசாயாவின் வார்த்தைகளை எதிரொலித்தான், “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப் பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:5). ஆனால் ஜாக்கிரதையாகயிரு! நீ அந்த வார்த்தைகளால் எந்த நன்மையும் பெற்றுக்கொள்ளாமல் அந்த வார்த்தைகளை மட்டும் அறிந்து கொள்ள முடியும்! காய்பாவின் நிலைமையும் அதுதான். அவன் சரியான வார்த்தையை அறிந்திருந்தான், ஆனால் அவைகளால் அவனுடைய வாழ்க்கையில் சுத்தமாக எந்தப் பயனும் அடையாமல் இருந்தான். அதே பிரதான ஆசாரியன் தான் இயேசு மரித்தோரிலிருந்து உயர்தெழுந்ததை குறித்துப் பேதுரு பேசினபொழுது அவனை பயமுறுத்தினவன். ஆனால் அவன் ஜனங்களுக்குப் பயந்த படியினால், பேதுருவை பயமுறுத்தி மற்றும் அவனை போகவிட்டான் (அப்போஸ்தலர் 4:21). மறுபடியுமாக, பிரதான ஆசாரியனாகிய காய்பா அப்போஸ்தலர்களை சிறையில் போட்டான் (அப்போஸ்தலர் 5:17-18). ஆனால் தேவன் ஒரு தூதனை அனுப்பி சிறை கதவை திறந்து அவர்களை விடுதலையாக்கினார். பிறகு காய்பா அதிகாரிகளை அனுப்பி பேதுருவை கொண்டு வந்து சனகரிப் சங்கத்துக்கு முன்பாக “ஜனங்கள் கல்லெறிவார்கள் என்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல்” (அப்போஸ்தலர் 5:26). அநேக மக்கள் அப்போஸ்தலர்களுக்குச் செவிக்கொடுத்தபடியினால் அவர்களுக்கு அவன் தீமைசெய்தால் காய்பா அவர்கள் தன்னை சாகும்படி கல்லெறிவார்கள் என்று பயந்தான்! சனகாரிப் சங்கத்தின் மனிதர்களின் ஒருவன், கமாலியேல் என்பவன், காய்பாவுக்கும் மற்றவர்களுக்கும் சொன்னான் “இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள் இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் அழிந்துபோம்: தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர் செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்” (அப்போஸ்தலர் 5:38-39). கமாலியேலோடு காய்பாவும் மற்றவர்களும் ஒத்துக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் தேவனைப்பற்றி அக்கறை உள்ளவர்களாக இருந்தார்களா? இல்லை! அவர்கள் அப்போஸ்தலர்களை அடித்து மற்றும் “இயேசுவின் நாமத்தைக் குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள்” (அப். 5:40). “தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்” (அப்போஸ்தலர் 5:42). இவ்வாறாக, காய்பா – பெலவீனப்படுத்தபட்டவன், சுவிசேஷத்தை பிரசங்கிப்பதை மற்றும் கிறிஸ்தவம் பரவுவதை நிறுத்த முடியாதவன். அவனுடைய பாவங்களுக்கு மனந்திரும்புவதை பற்றி மற்றும் தேவனைப்பற்றி அவனுடைய மனதில் ஒருபோதும் நுழைந்ததில்லை. அவன் அரசியலை கையாண்டவனாக சரியாக போனான் – மதத்தில் நிறைந்தவனாக, எந்த ஒரு தேவபயமுமற்றவனாக –பிலாத்தின் வாரிசு விட்டலஸினால் பின்னர் சில வருடங்களில் ஆராரிய ஊழியத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டான், அதன் பிறகு கி.பி. 36ல் ஜோசப்பின்படி (Antiquities, XVIII:4, 2). அவன் பதவி இறக்கப்பட்டபிறகு என்ன ஆனான் என்று அறியப்படவில்லை. ஒரு சுண்ணாம்பு கல் நெஞ்சு (பெட்டகத்தில்) மரித்தோர் எலும்பு வைக்கும் இடத்தில் 1991ல் எருசலேமில் காய்பா என்ற பெயர் பொறிக்கப்பட்டது கண்டெடுக்கப்பட்டது – அது அவனுடைய சரியான பெட்டியாக இருக்கலாம் என்று தொல்பொருள் ஆராட்சியாளர்களால் விசுவாசிக்கப்படுகிறது (Archaeological Study Bible, Zondervan, 2005, p. 1609; note on Matthew 26:3). அவன் “கபடற்ற கைதி [இயேசுவின்] நீதித்துறை மரணத்துக்கு ஆழ்ந்த பொறுப்பாளியாகும்” என்று மட்டுமே நினைவுகூரப்பட்டான் (John D. Davis, D.D., Davis Dictionary of the Bible, Baker Book House,1978 edition, p. 114). II. இரண்டாவதாக, காய்பா, காயீனைப்போல, ஒருபோதும் மனதிரும்பவில்லை –மற்றும் ஒருபோதும் இரட்சிக்கப்படவில்லை. காய்பாவுக்கும் காயீனுக்கும் ஒரு மெய்யான இணை காணப்படுகிறது. ஆபேல் செய்ததுபோல, ஒரு இரத்தப்பலியை கொண்டுவர வேண்டும் என்று காயீன் அறிந்திருந்தான். ஆனால் காயீன் மனந்திரும்பவில்லை, அதற்கு பதிலாக, “காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்” (ஆதியாகமம் 4:8). காயீன் மற்றும் காய்பா போன்ற மனிதர்களுக்கும் புதிய ஏற்பாட்டில் ஒரு தொடர்பு இருக்கிறது. அப்போஸ்தலனாகிய யோவான் சொன்னார், “பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந் தானே. என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள்” (I யோவான் 3:12-13). காய்பா, காயீனைப்போல, சாத்தானால் தாக்கம் பெற்றவன், “அந்த பொல்லாதது.” காயீனைப்போல, காய்பா “உலகத்தால்” உண்டானவன். அவன் சாத்தானை கவனிப்பதை ஒருபோதும் நிறுத்தவில்லை. அவன் “உலகத்தை” ஒருபோதும்விட்டு தேவனுக்கு ஊழியம் செய்யவில்லை. உருட்டும் சவக்கடலில் உருவான, யூதர்களின் கோம்ரம் சமுதாயத்தின் சாரம்சம், காய்பாவுக்கு மிகவும் சிக்கலாக இருந்தது, அவனை “பொல்லாத ஆசாரியன்” என்று அவர்கள் அழைத்தார்கள் (Archaeological Study Bible, ibid.) மதவாதிகளாக இருந்து ஆனால் இழக்கப்பட்டவர்களாக இருப்பவர்களுக்குக் காய்பா மற்றும் காயீன் ஒரு பயங்கரமான எச்சரிப்பை கொடுக்கிறார்கள். காய்பா மற்றும் காயீன் இருவரும் இரத்தப் பலியைபற்றி அறிந்திருந்தார்கள். காய்பா மற்றும் காயீன் இருவரும் தேவனிடம் நேரடியாக பேசினார்கள். குமாரனாகிய தேவன் காய்பாவினிடம் நேரடியாக பேசினார் – அவர் காயீனோடு பேசியதுபோல (ஆதியாகமம் 4:6-7). காய்பா மற்றும் காயீன் இருவரும், அவர்களுடைய மனசாட்சியில் பேசின தேவனுடைய சத்தத்திடம் போராடினார்கள், மற்றும் தங்கள் சுயத்தை மையமாகக்கொண்ட வாழ்க்கைகளில் தொடர்ந்து சென்று மூழ்கினார்கள். காய்பா மற்றும் காயீன் இருவரும் இறுதி நியாயத்தீர்ப்பில் கிறிஸ்துவுக்கு முன்பாக நிற்பார்கள், மற்றும் அவர் அவர்களுக்குச் சொல்லுவார், “அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” (மத்தேயு 7: 23). பிறகு அவர்கள் “புறம்பான இருளிலே போடப்படுவார்கள் அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” (மத்தேயு 8:12). இந்தக் காலையிலே நான் உங்களை எச்சரிக்கிறேன் – நீங்கள் தேவனைப்பற்றி நினைக்க நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் உங்கள் பாவத்தைப்பற்றி நினைக்க நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் “சரியான வார்த்தைகளை” வெறுமையாக சொல்லாதபடி நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பாவத்தை அங்கிகரித்து கொள்ளும்படி நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்! “நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்; உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது” (யாக்கோபு 4:9). நீங்கள் ஒரு மெய்யான மாறுதலை அனுபவிப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள் – கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் முகமுகமாக வந்து உங்களுடைய “தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி (வெளிப்படுத்தல் 1:6). காத்திருக்க வேண்டாம்! இயேசுவிடம்வர மறுக்க வேண்டாம்! தேவன் உன்னை தனக்கென ஒரு மனதிற்கு திருப்பி, மற்றும் உன்னை விட்டுவிடும்வரை தாமதிக்க வேண்டாம்! நான் இரட்சகரை நீண்டகாலம் புறக்கணித்தேன். நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களே, தயவுசெய்து வந்து இந்த பணியை முடிக்கவும். |
முக்கிய குறிப்புகள் காய்பா – கிறிஸ்துவின் மரணத்திற்குத் திட்டமிட்ட அந்த மனிதன்! CAIAPHAS – THE MAN WHO டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் எழுதப்பட்டு “அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது; ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான். இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும், அந்த ஜனங்களுக்காகமாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான். அந்நாள் முதல் அவரைக் கொலைச் செய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள்” (யோவான் 11:49-53). (லூக்கா 16:31; எபேசியர் 2:1; யோவான் 11:47-48, 49-52, 53; I. முதலாவது, காய்பா மிகவும் மதவாதியாகும், மற்றும் கிறிஸ்துவின் பதிலிடுனான பலியை பற்றி ஆழமான சத்தியத்தை சொன்னான், யோவான் 11:47, 50; ஏசாயா 53:5; அப்போஸ்தலர் 4:21; 5:17-18, 26, 38-39, 40, 42.
II. இரண்டாவதாக, காய்பா, காயீனைப்போல, ஒருபோதும் மனந்திரும்பவில்லை – மற்றும் ஒருபோதும் இரட்சிக்கப்படவில்லை, ஆதியாகமம் 4:8;
|