இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்
|
இயேசு கலிலேயா கடலோரமாக நடந்து போனார். அவர் பேதுரு மற்றும் அவனுடைய சகோதரன் அந்திரேயாவைப் பார்த்தார். அவர்கள் மீனவர்களாக இருந்த படியினால், கடலில் வலைவீசிக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களிடம் சொன்னார், “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.” உடனே அவர்கள் வலைகளை விட்டு அவருக்குப் பின்சென்றார்கள். அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரர்களாகிய யாக்கோபையும் அவன் சகோதரன் யோவானையும் பார்த்தார். அவர்கள் மீன் பிடிப்பதற்குத் தங்கள் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களையும் அழைத்தார் உடனே அவர்கள் படகை விட்டு அவருக்குப் பின் சென்றார்கள். அவர்கள் இயேசு செய்தவைகளை பார்த்தபோது மிகவும் பிரமிப்பு அடைந்திருப்பார்கள். இயேசு பிரசங்கம் செய்துகொண்டும் மற்றும் மக்களுக்கு உண்டான சகல நோய்களையும் குணமாக்கினார். திரளான மக்கள் இயேசுவை பின்பற்றினார்கள். அவர் திரளான ஜனங்களைக் கண்டு, மலையின் மேல் ஏறினார். அவர் உட்கார்ந்தபொழுது அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள். அப்பொழுது அவர் அவர்களுக்கு உபதேசிக்க ஆரம்பித்தார். அவர்களுக்குப் பேரின்பத்தைக் கொடுத்தார். அவைகள் ஒரு உண்மையான கிறிஸ்தவனின் உள்ளான குணாதிசயங்களை விளக்குகின்றன மற்றும் எதிர்காலத்தில் ஆசீர்வாதங்களை வாக்கு பண்ணுகின்றன. பிறகு தமது சீஷர்களுக்குச் சொன்னார் அவர்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறார்கள் மற்றும் உலகத்துக்கு ஒளியாக இருக்கிறார்கள் என்று சொன்னார். இயேசு அவர்களுக்குச் சொன்னது இன்னும் மெய்யான எல்லா கிறிஸ்தவருக்கும் உண்மையாகவே இருக்கிறது. “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல்வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:13-16). I. முதலாவதாக, நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். இயேசு சொன்னார், “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்.” அந்த நாட்களில் உப்புப் பிரதானமாக பதப்படுத்துவதற்காக உபயோகப்படுத்தப்பட்டது. கறியில் உப்புப் போட்டு வைத்தால் மாதக்கணக்காக குளிர் பதனமில்லாமலே கெடாமலிருக்கும். உப்பு அதை அழுகாதபடி பாதுகாக்கும். ஆதாம் பாவம் செய்தபொழுது அவன் பாவத்தையும் அழுகுதலையும் உலகத்திற்குக் கொண்டு வந்தான். முதல் பாவியாகிய ஆதாமிலிருந்து, மனுக்குலம் முழுவதும் மரணத்தை சுதந்தரித்துக் கொண்டது. அந்த மரணத்திலிருந்து பாதுகாக்க கிறிஸ்துவைத் தவிர வேறொன்றாலும் முடியாது. அவர் சீஷர்களிடம் சொன்னார், மக்களை மரணத்திலிருந்தும் அழிவிலிருந்தும் பாதுகாக்கும்படி அவர்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறார்கள் என்று. அப்போஸ்தலனாகிய யாக்கோபு சொன்னார், “தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவான்…” (யாக்கோபு 5:20). உங்களுக்கு சுவிசேஷ வேலை மற்றும் ஜெபம் பிரயோஜனமற்றதாக காணப்படலாம். ஆனால் அது பிசாசு உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறான். ஒரு கிறிஸ்தவன் சுவிசேஷ வேலைக்காக வெளியே போய் பாவிகளை கிறிஸ்துவினிடம் கொண்டு வந்தால் அவன் இந்த உலகத்திலே மிகமுக்கியமானவன். நீ உலகத்துக்கு உப்பாக இருக்கிறாய்! இந்தப் பூமி முழுவதிலும் நீ மிகவும் முக்கியமான வேலையை செய்கிறாய்! நீ முக்கியமானவன் என்று நினைக்கவில்லையானால், ஒரு மனிதன் என்ன சொன்னான் என்று கவனி, “பயங்கரமான வெறுப்பு மற்றும் சலிப்போடு நான் சபைக்கு வந்தேன்... நான் பரிதவிக்கபடத்தக்கவன். என்னுடைய அநேக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் என்னை கீழே தள்ளிவிட்டார்கள். என்னை சுற்றியிருந்த உலகம் என்னை பிரிவதை செய்வதாக காணப்பட்டது. எதற்காக வாழவேண்டும் என்று ஒரு காரணமும் தெரியவில்லை. அங்கே அதிகமான ஊழலும் அழிவும் இருந்தபடியினால் எந்தக் காரியத்தையும் செய்யமுடியவில்லை. நான் சில நேரத்தில் ஒருபோதும் பிறந்திருக்க கூடாது என்று விரும்பினேன், அந்த நேரங்களில் தற்கொலை செய்ய யோசித்தேன். நான் குழம்பிபோய் இருந்தேன் மற்றும் தேவனை விசுவாசிக்கவில்லை.” அந்த இளம் மனிதனை யாரோ ஒருவர் நமது சபைக்கு சுவிசேஷத்தை கேட்க அழைத்து வந்தார்கள். அவன் அங்கே அழைத்து வரப்படவில்லையானால், அவன் ஒருபோதும் கிறிஸ்துவை அறிந்திருக்க முடியாது. உங்களில் யார் அவனை சபைக்கு அழைத்து வந்தீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு விளக்கம் தெரியவில்லை. ஆனால் உங்களில் ஒருவர் அவனை அழைத்து வந்தீர்கள். மற்றவர்கள் உங்கள் மத்தியில் நமது சபையில் அவன் தனது சொந்த வீட்டைப்போல உணரும்படி செய்தீர்கள். அந்த இளம் மனிதனின் ஜீவனை இரட்சிக்கும்படி தேவன் உங்களை உபயோகப்படுத்தினார். அவனுடைய ஆத்துமாவை மரணத்திலிருந்து விரக்தி மற்றும் நம்பிக்கையற்ற வாழ்க்கையிலிருந்து இரட்சிக்கும்படி, தேவன் உங்களை உபயோகப்படுத்தினார். அதனால்தான் இயேசு சொன்னார், “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்”! நீங்கள் இல்லாவிட்டால் அவன் இரட்சிக்கப்பட்டிருந்திருக்க முடியாது. ஆனால் இன்று சபைகள் அவனுக்கு உதவி செய்ய முடியாது. நமது சபைகள் பயங்கரமான குளிர்ந்த தன்மை மற்றும் விசுவாச துரோகத்திலும் இருக்கின்றன! டாக்டர் கார்ல் F. H. ஹென்றி (1913-2003) ஒரு பிரபலமாக அறியப்பட்ட இயற்பியலாளராகும். அவர் எழுதின கடைசி புத்தகங்களில் ஒன்று Twilight of a Great Civilization: The Drift Toward Neo-Paganism என்பதாகும். நம்முடைய அநேக சபைகளில் ஏதோ சில தவறுகள் இருக்கின்றன என்று அவர் சொன்னார். மேலும் அவர் சொன்னார், “நிர்வாகிக்கபட்ட கிறிஸ்தவத்தில் பெரும் ஏமாற்றம் உயருகிறது; இதை சபை வருகை பதிவு புள்ளிவிபரம் மூலமாக ஒருவர் பார்க்கமுடியும்... காட்டுமிராண்டித்தனம் துகள்கிளப்பி நலிவடைந்த நாகரீகம் முடமான சபையின் நிழலில் ஏற்கனவே பதுங்குகிறது [மறைவு]” (பக்கம் 17). அவர் சொன்னது சரி. எனக்கு எந்தச் சபையும் தெரியாது ஆனால் நமது லாஸ் ஏன்ஜல்ஸ் நகரின் சந்துகளிலும் வளாகங்களிலும் இழக்கப்பட்ட இளம் மக்கள் அடைவதை பார்க்கிறேன். இப்பொழுது சதரன் பாப்டிஸ்ட் ஒவ்வொரு வருடமும் பெரும்பாலும் கால் மில்லியன் உறுப்பினர்களை இழக்கிறது. மற்ற பிரிவுகளிலும் ஒன்றும் சிறப்பாக இல்லை. முதலாவது அவர்கள் ஜெபக்கூட்டத்தை மூடுகிறார்கள். பிறகு ஞாயிறு மாலை கூட்டத்தை மூடுகிறார்கள். பிறகு ஞாயிறு காலை கூட்டங்கள் குறைய ஆரம்பிக்கிறது. இயேசு சொன்னார், “உப்பானது [சாரமற்றுப்] போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது” (மத்தேயு 5:13 KJV, NASV). டாக்டர் ஹென்றி சொன்னதுபோல சபைகள் “முடமாக்கப்பட்டன”. அவர்களால் இளம் மக்களை இன்று மாற்ற முடியவில்லை. அது உண்மை ஏன்? ஏனென்றால் உப்பு அதனுடைய சாரத்தை இழந்து விட்டது! வார்த்தைக்கு வார்த்தை வேதபோதனை மரித்த சபையை குணமாக்காது! மென்மையான போதனை ஜீவனை உற்பத்தி செய்யாது. வலுவான சுவிசேஷ போதனை மட்டுமே அதை செய்ய முடியும். நமக்கு “உப்புள்ள” போதனை அவசியம், பாவம் மற்றும் நரகத்தைப் பற்றிய பிரசங்கம், கிறிஸ்துவின் இரத்தத்தைப் பற்றிய பிரசங்கம், ஆத்தும ஆதாயம் பற்றிய பிரசங்கம் நமக்கு தேவையாக இருக்கிறது. சூடான வெள்ளை ஆத்தும ஆதாயம் மட்டுமே ஒரு சபைக்குள்ளே “உப்பை” வைக்க முடியும். பலமான ஜெபக்கூட்டம் மட்டுமே ஒரு சபைக்குள்ளே “உப்பை” வைக்க முடியும். டாக்டர் ஜான் R. ரைஸ் அவர்கள் சொன்னது சரி அவர் சொன்னபொழுது, “அனைவரும் வெளியே சென்று பிரயாசப்படும் விளையாட்டு மட்டுமே புதிய ஏற்பாட்டு ஆத்தும ஆதாயத்திற்குப் பொறுத்தமானது” (Why Our Churches Do Not Win Souls, p. 149). நமது சபை மரிக்கக்கூடாது என்று நாம் விரும்பினால் நாம் தொடர்ந்து வேலை செய்யவும் மற்றும் ஜெபிக்கவும் வேண்டும், மற்றும் சாதகமான சகலவற்றையும் செய்து இழக்கப்பட்ட இளைய மக்களை சுவிசேஷத்தை கேட்கும்படி கொண்டுவர வேண்டும்! இயேசு சொன்னார், “நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா” (லூக்கா 14:23). ஆத்தும ஆதாயத்தை நமது வாழ்க்கையில் முதலாவதாக கணக்கில் எடுக்க வேண்டியது அவசியம் அல்லது நமது சபை அதனுடைய பதப்படுத்தும் “உப்பை” இழந்து போகும். நாம் அதை செய்ய தவறினால், நம்முடைய சபை “வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது” (மத்தேயு 5:13). நமது சபை மரித்துப்போக விடவேண்டாம்! வெளியேபோய்ப் பாவிகளை கொண்டுவந்து இயேசுவைப்பற்றி கேட்கவும் மற்றும் அவரால் இரட்சிக்கப்படவும் செய்யுங்கள்! II. இரண்டாவதாக, நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். இயேசு சொன்னார், “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது” (மத்தேயு 5:14). டாக்டர் லியோடு-ஜோன்ஸ் சொன்னார், “அந்தத் தகவலின் வலிமை இதுதான்: ‘நீங்கள், நீங்கள் மட்டுமே, உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்,’ – ‘நீங்கள்’ என்பது வலுவானது மற்றும் அந்தக் கருத்தை கடத்துகிறது... சில காரியங்கள் சட்டப்பூர்வமானவை. முதலாவது உலகம் இருளான நிலையில் இருக்கிறது” (Sermon on the Mount, p. 139). இன்று இரவில் இந்த உலகம் பயங்கரமான இருளான நிலையில் இருக்கிறது. இயேசு சொல்லுகிறார் மெய்யான கிறிஸ்தவர்கள் மட்டுமே எப்படி அந்த இருளிலிருந்து தப்பிக் கொள்ள முடியும் என்று மற்றவர்களுக்குக் காட்ட முடியும். இந்த உலகத்தில் வெளிச்சமே இல்லை. நம்முடைய சபையை போன்ற உண்மையான கிறிஸ்தவர்களிடமிருந்து மட்டுமே ஒளி வருகிறது. இயேசு தமது சிறுகுழுவாகிய சீஷர்களைப் பார்த்தார். அவர் அவர்களிடம் சொன்னார், “நீங்கள், நீங்கள் மட்டுமே, உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்.” அதற்கு இங்கே சில உதாரணங்கள். உங்களில் ஒருவரால் சபைக்குக் கொண்டுவரப்பட்ட அந்த இளம் மனிதன் சொன்னான், “எதற்காக வாழவேண்டும் என்று ஒரு காரணமும் தெரியவில்லை… நான் சில நேரத்தில் ஒருபோதும் பிறந்திருக்க கூடாது என்று விரும்பினேன், அந்த நேரங்களில் தற்கொலை செய்ய யோசித்தேன்... டாக்டர் ஹைமர்ஸ் தேவன் என்னை நேசித்தாரா என்று கேட்டார். சீக்கிரமாக நான் சொன்னேன் ‘ஆமாம்.’ ஆனால் டாக்டர் ஹைமர்ஸ் மறுபடியுமாக ஒறுமுறை என்னிடம் கேட்டார்… சீக்கிரமாக நான் சொன்னேன் ‘இல்லை,’ மற்றும் என்னுடைய கண்களில் கண்ணீர் வந்தது... அதன் பிறகு டாக்டர் ஹைமர்ஸ் மறுபடியுமாக என்னிடம் நான் இயேசுவை நம்பி இருக்கிறேனா என்று கேட்டார், ஆனால் என்னால் முடியவில்லை, என் பாவத்தை விட்டுவிட நான் பயப்பட்டேன். தொடர்ந்து வந்த வாரத்தில் என்னுடைய பாவத்தைப்பற்றி ஒரு தீவிரமான வழியில் நான் விழிப்படைந்தேன். என்னுடைய ஓய்வு அறையை சாத்திகொண்டு, என் பாவத்தை நினைத்து அழுதேன். எனது பள்ளியில் அல்லது வேலையில் இருந்த பொழுதும் எனது பாவம் என்னை விடவில்லை. ஞாயிற்றுக்கிழமை நான் உள்ளே வந்தேன் மற்றும் நான் எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்காக விட்டுவிட தயாராக இருந்தேன். நான் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களை போய்ப் பார்த்தேன் மற்றும் இயேசுவை நம்பினேன். நான் எளிமையான விசுவாசத்தினால் மட்டுமே இயேசுவை நம்பினேன். அந்த நாளில் நான் நம்பமுடியாத சந்தோஷத்தால் நிறைந்தேன் மற்றும் இரவிலே என்னால் தூங்க முடிந்தது. என்னுடைய முரட்டாட்டத்திலும் ஒரு சிலுவையில் அறையப்பட்ட அன்புள்ள இரட்சகரால் நான் இரக்கம் காட்டப் பட்டேன், மற்றும் இதை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.” இப்பொழுது ஒரு சுத்தமாக வாழ்ந்த இளம் சீனப்பெண்ணின் வார்த்தையை கவனியுங்கள். அவள் சொன்னாள், “நான் சபைக்குள் நடந்தேன் என்னுடைய இருதயம் பாரமாக இருந்தது. நான் ஒரு பாவியாக இருந்தேன் என்று தேவன் என்னை உணர்த்தி விழிப்படைய செய்தார். என்னை சுற்றி எல்லாரும் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தார்கள், ஆனால் என்னுடைய குற்றமுள்ள மனசாட்சியை என்னால் அடக்க முடியவில்லை. என்னுடைய இருதயம் அசுத்தமாக, கலகமுள்ளதாக, மற்றும் தேவனுக்கு விரோதமாக இருந்ததை இனிமேலும் கண்டு கொள்ளாமல் இருக்க என்னால் முடியவில்லை. நான் நல்லவள் மற்றும் சரியாக இருக்கிறேன் என்று என்னுடைய இருதயம் இனிமேலும் என்னை ஏமாற்ற முடியாது. நான் சரியில்லை மற்றும் என்னில் எந்த நன்மையுமில்லை. நான் போதனையை கவனித்தபொழுது, போதகர் என்னையே குறித்து பேசுவதாக உணர்ந்தேன். எனது மரணத்தை பற்றி அவர் பேசும்போது பெரிய விசனத்தில் ஆழ்ந்தேன். நான் நேராக நரகத்திற்குப் போவதாக உணர்ந்தேன். நான் நரகத்திற்குப் போக தகுதியானவள். நான் ஒரு பாவி. நான் மக்களிடம் எனது பாவத்தை மறைத்தாலும், தேவனிடம் என்னால் மறைக்க முடியவில்லை. தேவன் அவைகளை எல்லாம் பார்த்தார்... நான் முழுவதும் நம்பிக்கையற்றவளாக உணர்ந்தேன். பிறகு, போதனை முடியும் தருணத்தில், நான் சுவிசேஷத்தை முதல்முறையாக கவனித்தேன். என்னுடைய பாவங்களுக்குக் கிரயத்தை செலுத்த, என்னுடைய ஸ்தானத்தில் கிறிஸ்து சிலுவையிலே மரித்தார். ஒரு பாவகுற்றவாளியான என்மீது, அவருடைய அன்பு இவ்வளவு பெரிதாக இருந்த படியினால் அவர் சிலுவையிலே எனக்காக மரித்தார். அவருடைய இரத்தம் பாவிகளுக்காக சிந்தப்பட்டது. அவருடைய இரத்தம் எனக்காக சிந்தப்பட்டது! இயேசு எனக்குத் தீவிரமாக தேவைப்பட்டார்! எனது சுயத்தில் நன்மையை பார்ப்பதற்குப் பதிலாக, நான் முதல் முறையாக இயேசுவை நோக்கிப் பார்த்தேன். அந்த நொடிபொழுதிலே இயேசு என்னை இரட்சித்தார், மற்றும் தமது இரத்தத்தால் என்னுடைய பாவங்களை கழுவினார். நான் இயேசுவை நம்பினேன் இயேசு என்னை இரட்சித்தார். என்னுடைய நன்மைகள் எல்லாம் பரிதாபமான என்னைப்போன்ற பாவியை இரட்சிக்க முடியாது, கிறிஸ்து மட்டுமே என்னை இரட்சித்தார்! பாவத்தால் என்னை பூட்டியிருந்த சங்கிலியை கிறிஸ்து உடைத்துப் போட்டார். கிறிஸ்து தமது இரத்தத்தால் என்னை உடுத்தினார். அவர் தமது நீதியினால் என்னை உடுத்தினார். என்னுடைய நம்பிக்கை மற்றும் நிச்சயம் கிறிஸ்துவில் மட்டுமே உண்டு. நான் ஒரு பாவியாக இருந்தேன், இயேசு கிறிஸ்து என்னை இரட்சித்தார்!” இப்பொழுது இங்கே இன்னுமொரு வாலிப பெண். அவள் இந்த உலகத்தின் பார்வைக்கு ஒரு “நல்ல” பெண்ணாக இருந்து வந்தாள். அவள் வாழ்நாள் எல்லாம் சபைக்கு வந்தாள் ஆனால் இன்னும் அவள் இழக்கப்பட்டவளாக இருந்தாள். இருந்தாலும் அவளுடைய இருதயத்தில் தேவனோடு கோபமாக இருந்தாள். அவளை கவனியுங்கள். “கூட்டம் நடந்து கொண்டிருந்தபொழுது நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். மற்ற ஒவ்வொருவரும் கைகளை ஆட்டும்போது என்னால் புன்னுருவல்கூட செய்ய முடியவில்லை. பாவத்தினால் தோல்வி மற்றும் வெறுப்பூட்டுதல் உணர்வு வளர்ந்தது. அதன்பிறகு ஜான் கேஹன் ‘தேவன் சரியானவர், நீதான் தவறானவன்’ என்று பிரசங்கித்தார். ஒவ்வொரு கருத்தும் உள்ளே இழுத்தது மற்றும் எனது பாவத்தின் நினைவு நோய்பிடித்ததாக தீவிரப்படுத்தியது. ஜான் பிரசங்கம் செய்தபொழுது, தேவனே என்னோடு பேசுவதாக உணர்ந்தேன். ஜான் பிரசங்கத்தை முடிக்கும் தருவாயில் நான் மன உளச்சலுக்குள்ளானேன். பிறகு டாக்டர் ஹைமர்ஸ் மேடைக்கு வந்தார் மற்றும் விபச்சாரத்தில் கையும்மெய்யுமாக பிடிக்கப்பட்ட ஸ்திரியை இயேசு மன்னித்ததை பற்றி பேசினார். அந்த கதையை நான் முன்பே கேட்டிருந்தாலும், அந்த காலையில் அது என்னை அடித்ததுபோல அதற்கு முன் ஒருபோதும் இல்லை. கிறிஸ்துவன் அன்பு என்னை அப்படியே ஊதி தள்ளியது. நான் இயேசுவிடம் வரவேண்டும் என்ற பலமான உணர்வினால் உந்தப்பட்டேன். டாக்டர் ஹைமர்ஸ் என்னை தம்மோடு பேசவரும்படி அழைத்தார். எனது மனதில் நினைவுகளின் சுழற்சி மற்றும் பயம் ஏற்பட்டது. டாக்டர் ஹைமர்ஸ் தம்மை காட்டி அவரை நம்புகிறேனா என்று கேட்டார், அதற்கு நான், ‘ஆம்’ என்று சொன்னேன். ஒருவர் இயேசுவை நம்பினால் அதேபோலதான் என்றார். ‘இயேசுவை நம்பு’ என்று சொன்ன போதெல்லாம் நான் அதை எப்பொழுதும் வெறுப்பேன். ‘அப்படியென்றால் உலகத்தில் என்ன அர்த்தம்?’ நான் நினைப்பேன். ‘இதை நான் எப்படிச் செய்யவேண்டும்?’ இருந்தாலும் டாக்டர் ஹைமர்ஸ் அதை விளக்கினார், ஒருவர் இயேசுவை நம்பினால் அவரை நம்புவதைபோலதான் என்றார், அது அர்த்தப்படுத்தினது. அந்த நொடிகளில் இயேசு என்னை நேசித்தார் என்று எளிதில் அறிந்து கொண்டேன். நான் முழுங்கால் படியிட்டபொழுது, இயேசு என்னை நேசித்தார் என்றே என்னால் நினைக்க முடிந்தது. அவர் என் பாவங்களை மன்னிக்கிறார். நான் அவரை மிகவும் அதிகமாக விரும்பினேன். டாக்டர் ஹைமர்ஸ் அவர்கள் என் தலைமீது கை வைத்து அழுது எனக்காக ஜெபித்தார். இயேசுவை நான் நம்ப வேண்டும் என்று விரும்புகிறார் என்று என்னிடம் சொன்னார். ஒரு சிறிய விசுவாசம் அவர்மேல் இருந்தால் போதும். அதைதான் இயேசு கேட்கிறார். அதன்பிறகு, சிறிது நேரத்திற்குள், நான் இயேசுவை நம்பினேன். அவர் என்னை இரட்சிக்க வேண்டும் என்று நான் அவரை நம்பவில்லை. நான் இயேசுவை நம்பினேன் – எனது போதகர், டாக்டர் ஹைமர்ஸ் அவர்களை நம்புவதைப் போலவே. இயேசுவை நம்புவதற்கு என் இருதயத்தின் ஆழத்தை ஆராய்வதற்கு முன்பாக, ஒரு அனுபவம் அதை தொடர்ந்தது. இயேசுவை மட்டும் நம்புவதற்கு, எந்த ஒரு உணர்வும் இல்லாமல் நான் மறுத்தேன். அதன் பிறகு, நான் தோற்றுப்போனேன், நான் எப்பொழுதும் விரக்தியிலும் சுய பரிதாபத்திலும் அழுவேன். ஒரு பொய்யான மாறுதல் அடைதலை பற்றியும் நான் பயப்படுவேன். முழுவதும் விட்டேத்தியான ஆபத்துக்கு நான் பயந்தேன். இருந்தாலும், கவனமான யோசனைக்குப் பிறகு, இந்த உலகம் எனக்கு ஒன்றும் கொடுக்காது என்று உணர்ந்து கொண்டேன். அன்பு இல்லை. நோக்கமில்லை. மற்றும் நம்பிக்கை இல்லை. இப்பொழுது நான் இயேசுவை நம்புகிறேன். அவரே என் நம்பிக்கை. இயேசு விரும்புவதெல்லாம் அவரை நம்ப வேண்டும் என்பதுதான் என்று எனது மனதில் உதித்தது. அவரை நம்ப வேண்டும் என்று அவர் விரும்பினார், அவரை மட்டுமே. அதன்பிறகு அவர் எல்லாவற்றையும் செய்தார். மெய்யாகவே என்னுடைய சாட்சி மிகவும் எளிமையானதாகும். நான் இயேசுவை நம்பினேன் அவர் என்னை இரட்சித்தார்.” அந்த ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்காக வெற்றிகொள்ள அநேக மக்கள் தேவையாக இருந்தது. போனர்களில் ஒருவர் அவர்களை அழைத்தார். டாக்டர் சென் அவர்களை அழைத்துவர கார் ஏற்பாடு செய்தார். சபைக்கு வெளியிலே ஆரோன் யான்சின் வார்த்தைகள், உலகத்திலிருந்து வெளியே... இந்த உலகம் கொடுப்பது வெறுமை மற்றும் குளுமை மட்டுமே. போதனை கையெழுத்துப் பிரதிகளை, டாக்டர் கேஹான் டைப் செய்தார், மற்றும் நமது போதனைகளை கவனிக்கும் வகையில் வீடியோவில் தயார் செய்தது, திரு. ஆலிவாசீ. அங்கே ஜான் கேஹனின் ஆலோசனைகள் இருந்தன. அவர்களுக்கு நீங்கள் நட்பை நல்கினீர்கள். இறுதியாக என்னுடைய போதனைகள், மற்றும் ஜான் கேஹனின் போதனைகள், மற்றும் நோவா சாங்கின் போதனைகள். ஒரு உள் போராட்டத்திற்குப் பிறகு சில நேரங்களில் வாரங்கள் கழிந்தன, நானே அவர்களை கேட்டேன், “நீ இயேசுவை நம்புகிறாயா?” பிறகு அவர்கள் இயேசுவை நம்பினார்கள். அது எளிமையாக தொனிக்கிறது மற்றும் அது எளிமையானதாக இருக்கிறது. அவைகளை இயேசுவிடம் நடத்த அநேகர் தேவனால் உபயோகப்படுத்தப்பட்டார்கள். இந்த இருளான உலகத்தில் நாம் அனைவரும் “ஒளியாக” இருந்து அவர்கள் இயேசுவை கண்டு கொள்ள உதவி செய்தோம். டாக்டர் லியோடு-ஜோன்ஸ் சொன்னதுபோல, “நீங்கள், நீங்கள் மட்டுமே, உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்.” ஒரு பழைய பாடல் இவ்வாறாக இருக்கிறது, இந்த உலகம் முழுவதும் பாவ இருளினால் இழக்கப்பட்டது; என் தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே, அன்பான சகோதர சகோதரிகளே, கிறிஸ்தவர்களாக நாம் செய்ய வேண்டிய அற்புதமான வேலை இருக்கிறது. நாம் இந்தப் பூமிக்கு உப்பாக இருக்கிறோம். நாம், நாம் மட்டுமே, உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறோம்! இருளான மற்றும் பயம் நிறைந்த இந்த உலகத்தில் கிறிஸ்துவின் ஒளியை பரதிபலிப்போம்! ஆத்துமாக்களை இரட்சிக்க உழைப்பதை ஒருபோதும் நிருத்தி விடவேண்டாம். வேண்டாம், எப்போதும் வேண்டாம், ஆத்துமாக்களை ஆதாயம் செய்யும் காரியத்தில் ஒருபோதும் சோர்ந்து போகவேண்டாம். இயேசு உன்னோடு இருக்கிறார். அவர் உன்னை எல்லா கஷ்டங்கள் மற்றும் பாடுகளிலின் ஊடாக கொண்டுவருவார். இப்பொழுது, இன்னும் இழக்கப்பட்டவர்களாக இருக்கும் உங்களுக்கு இயேசு உங்களையும் இரட்சிப்பார் என்று சொல்லும் பெரிய சிலாக்கியம் எனக்கு உண்டு. நீங்கள் ஒன்றும் அதிகமாக செய்ய வேண்டியதில்லை ஆனால் இயேசு கிறிஸ்துவை நம்பினால் போதும், உன்னுடைய ஸ்தானத்திலே சிலுவையிலே மரித்த மனிதன், மற்றும் உன்னை எல்லா பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்க தமது விலையேறப்பெற்ற இரத்தத்தை சிலுவையிலே சிந்தினார். இவைகளை எல்லாம் சொல்லும் ஒரு பாட்டு உண்டு, அவரை மட்டும் நம்பு, அவரை மட்டும் நம்பு, நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: |
முக்கிய குறிப்புகள் நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள் YOU ARE THE SALT OF THE EARTH டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல்வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:13-16). I. முதலாவதாக, நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள், யாக்கோபு 5:20; மத்தேயு 5:13; லூக்கா 14:23. II. இரண்டாவதாக, நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள், மத்தேயு 5:1 |