இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
இரட்சிப்பா அல்லது அழிவா – எது?SALVATION OR DAMNATION – WHICH? டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் பிப்ரவரி 19, 2017 அன்று கர்த்தருடைய நாள் ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் |
ஓசியா தனது வாழ்நாளின் பெரும்பகுதி இஸ்ரவேலின் வடநாடுகளில் பிரசங்கிதான். ஓசியா “உடைந்த இருதயமுள்ள தீர்க்கதரிசி” என்று அழைக்கப்பட்டான். அவனது செய்தி தனது உண்மையற்ற மனைவியின்மேல் அவன் கொண்ட அன்பை அடிப்படையாக கொண்டது, அது உண்மையற்ற இஸ்ரவேலர் மீது தேவன் கொண்ட அன்பை போன்றதாகும். எப்ராயீம் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குள்ளே மிகப்பெரிய கோத்திரமாகும். அதனால் முழு இஸ்ரவேலுக்கும் சேர்த்து எப்பிராயீம் என்று பெயர் வந்தது. எழுப்புதலின் நம்பிக்கை அற்றுப்போன அளவிற்கு அவர்கள் விக்கிரகத்தால் சீரழிந்து போயிருந்தார்கள். நமது பாடத்தில் தேவன் ஓசியாவிடம் அவர்களுக்குப் பிரசங்கிப்பதை நிறுத்தும்படி சொன்னார் ஏன் என்றால் அவர் அவர்களை விட்டுவிட்டார். “எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு” (ஓசியா 4:17). சென்ற ஆண்டில் நாம் எழுப்புதலின் ஒரு “தொடுகையை” பெற்றோம். நம்முடைய சில கூட்டங்களில் தேவன் இறங்கி வந்தார் ஏறக்குறைய பத்துபேர் நம்பிக்கையோடு மாற்றப்பட்டார்கள்! ஆனால் பதிமூன்றுபேர் பொய்யான மாற்றம் அடைந்திருந்தார்கள். அவர்கள் இன்னும் இழக்கப்பட்டவர்களாக நரகத்திற்குப் போய்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டங்களில் தேவன் எங்களுக்குக் கற்றுக்கொடுத்த பிரதான காரியம் என்னவென்றால் தேவன் இறங்கிவரும்பொழுது பிசாசு கடுங்கோபம் கொள்ளுகிறான். தேவன் மற்றும் பிசாசு உண்மையாகவே இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அனுபவத்தில் அறிந்து கொண்டோம். குறைந்த பட்சம் மாற்றப்பட்டவர்கள் இந்தப் பாடத்தை கற்றுக் கொண்டிருந்திருக்கலாம். சென்ற நாற்பது ஆண்டுகளாக எழுப்புதலில் தேவனுடைய பிரசன்னத்தை நாங்கள் அனுபவித்து இருக்கவில்லை. நான் அடிக்கடி அதைப்பற்றி பிரசங்கித்தேன். ஆனால் அதை நான் செய்தபொழுது, ஓசியா இஸ்ரவேலருக்குப் பிரசங்கித்தபோது அவர்கள் கலகம் செய்ததுபோல நமது சபையின் அநேக உறுப்பினர்கள் அதைபற்றி கலகம் செய்தார்கள். மற்றும் அவர்களில் அநேகர் சபையில் இரண்டு பெரிய பிளவுகள் ஏற்பட்டபொழுது நமது சபையைவிட்டு போய்விட்டார்கள். ஒரு எழுப்புதல் ஒருபோதும் இருக்க முடியாது என்று அவர்களுக்குச் சாத்தான் சொன்னான். அவர்கள் வேதத்தைவிட பிசாசை அதிகமாக விசுவாசித்தார்கள். அவர்கள் ஒரு திரள் கூட்டமாக சபையைவிட்டு போனார்கள். அதை திரும்பிப்பார்த்த டாக்டர் கேஹான் அவர்கள் அவர்களில் ஒருவரும் மாற்றப்பட்டவர்கள் அல்ல என்று விசுவாசிக்கிறார்கள். அதனால் நான் எழுப்புதலைப்பற்றி பிரசங்கித்தபொழுது அவர்களால் ஜெபிக்க முடியவில்லை. அவர்களால் செய்ய முடிந்தெல்லாம் கலகம் செய்ததுதான். “எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு” (ஓசியா 4:17). இப்பொழுது நம்மிடம் உண்மையான நம்பிக்கைமிக்க உறுதியான கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் அதனால் கர்த்தருக்கு நன்றி. கடந்த வருடத்தில் நாம் அந்த எழுப்புதலை பெற்றிராவிட்டால் இன்னுமொரு சபைபிளவு ஏற்பட்டிருக்கும். அநேகர் சபையை விட்டு போயிருப்பார்கள். 1980-1981ல் ஏற்பட்ட சபை பிளவில் நடந்ததுபோல அநேகர் சபையைவிட்டு போயிருப்பார்கள். 1990ல் ஓலிவாஸ் சபை பிளவில் அவர்கள் செய்ததுபோல, அவர்கள் சபையை கிழித்திருப்பார்கள். ஆனால் சென்ற ஆண்டு ஆறுபேர் மட்டுமே போனார்கள். அவர்கள் போனபொழுது ஒருபோதும் திரும்ப வரவில்லை. நாற்பத்திரண்டு ஆண்டுகள் ஆகிறது ஒருநபர்கூட திரும்ப வரவில்லை. அவர்கள் தங்கள் கம்யூட்டர்களில் நமது போதனைகளை கவனிக்கிறார்கள், ஆனால் அவர்கள் ஒருபோதும் திரும்பவந்து இரட்சிக்கப்படமாட்டார்கள். ஒருபோதும்! நாற்பத்திரண்டு ஆண்டுகளில் ஒரு நபர்கூட திரும்ப வரவில்லை! அது மிகவும் குறிப்பிடத்தக்கது ஏனென்றால் நாங்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் கிறிஸ்துவின் மூலம் கிடைக்கும் இரட்சிப்பை பிரசங்கிக்கிறோம். அவர்களில் ஒருவரும் திரும்பி வந்து இயேசுவை நம்பவில்லை ஏன்? “எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு” – அதனால் தான்! நான்தான் காரணம் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். நான் அவர்கள் பாவத்திற்கு விரோதமாக பிரசங்கிக்கிறேன், அதற்காக அவர்கள் ஓசியாவை வெறுத்ததைப்போல என்னை வெறுக்கிறார்கள்! நானும் டாக்டர் கேஹானும் ஒரு இளம்பெண்ணின் “சாட்சியை” கவனித்துக் கொண்டிருந்தோம். அவள் பொய்யான சாட்சியை உடையவளாக இருந்தாள் என்று நான் அவளிடம் சொன்னபொழுது அவள் சொன்னாள், “திறந்த கதவுபோல, என்று சொல்லுகிறீர்களா.” நாங்கள் அதை “திறந்த கதவு” என்று சொன்னபொழுது அந்த பிள்ளை ஒருபோதும் நமது சபையில் இல்லை. அவளுடைய பெற்றோர் அவளுக்கு முன்பாக எங்களைப்பற்றி தீதான காரியங்களை பேசினார்கள் என்று உடனே நான் அறிந்திருந்தேன். ஒருசில மாதங்கள் கடந்தபிறகு அவளுடைய தகப்பனார் என்னிடம் மற்ற இளம் பிள்ளைகளுக்கு முன்பாக கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல சீறிக்கொண்டு வந்தார். நான் போலீஸை அழைக்கப்போகிறேன் என்று சொன்னபிறகுதான் அவர் அந்த கட்டிடத்தை விட்டுபோனார். இந்த கட்டிடத்திற்கு கட்டணம் செலுத்தின “அந்த 39” பேர்களில் இவரும் ஒருவர். அவர் ஒரு கிறிஸ்தவனைப்போல பாசாங்கு செய்து, தனது கலகத்தை அநேக ஆண்டுகள் வைத்திருந்தார். ஆனால் அவருடைய ஒரு பிள்ளையை பிசாசு பிடித்தபொழுது அது என்னுடைய தவறு என்று எனக்கு விரோதமாக திரும்பினார். சில வாரங்களுக்கு முன்பாக என் மனைவி அவரை பார்த்தாள். அவருக்கு நீண்ட தாடி இருந்தது. அவர் ஒரு ஹிப்பியாக மாறுவதற்கு நீண்டகாலமாகாது. ஸ்பர்ஜன் சொன்னார், “தாழ்மையில்லாதவர்களாகவே உள்ளே வந்தார்கள், தாழ்மையில்லாதவர்களாகவே தங்கியிருந்தார்கள், மற்றும் தாழ்மையில்லாதவர்களாகவே சபையைவிட்டு போய்விட்டார்கள்.” நீ நீண்ட நாட்களாக மாற்றப்பட்டவனைப்போல நடிக்க முடியும். நீ பொய்யாக மாற்றமடைந்திருந்தால் விரைவாகவோ அல்லது தாமதமாகவோ பிசாசு உன்னை பிடித்துக் கொள்வான்! அதன்பிறகு தேவனால் இப்படி சொல்லப்படும், “எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு” (ஓசியா 4:17). நீ பாவத்தோடு இணைந்திருப்பதை மற்றும் கிறிஸ்துவை நம்பாதிருப்பதை தேவன் பார்க்கிறார், அதனால் அவர் உன்னை போகவிடுகிறார். அவர் உன்னை “கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்” (ரோமர் 1:28). தேவன் உன்னை விட்டுவிடும்பொழுது, நீ ஒருபோதும் இரட்சிக்கப்பட முடியாது. நீ உன்னுடைய வாழ்க்கையை நடத்துவாய் மற்றும் ஒருபோதும் இரட்சிக்கப்படமாட்டாய். நித்தியகாலமாக இழக்கப்பட்டாய். நித்தியகாலமாக. நித்தியகாலமாக. நித்தியகாலம் முழுவதுமாக இழக்கப்பட்டாய். தீர்க்கதரிசியாகிய ஓசியா சொன்னார், “அவர்கள் கர்த்தரைத்தேடுவார்கள்… அவரைக் காணமாட்டார்கள், அவர் அவர்களை விட்டு விலகினார்” (ஓசியா 5:6). அவர்கள் மறுபடியுமாக சென்ற வருடம் அதை செய்ய முயற்சி செய்தார்கள். ஆறுபேர் நன்மைக்காக சபையைவிட்டுப் போய்விட்டார்கள். ஒரு இளம் வாலிபன் என்னுடைய அலுவலகத்திற்கு வந்தான், அவன் என்னை விரள் நீட்டி சொன்னான், “உன்னால் இந்தச் சபைக்குத் தீங்கு, டாக்டர் ஹைமர்ஸ்.” அந்த வார்த்தைகள் என்னுடைய பாவத்தை அறிக்கையிட செய்தது என்பதை, அவன் ஒருபோதும் அறியவில்லை. அவன் கலகத்திலே அந்த வார்த்தைகளை சொன்னான். ஆனால் என்னை நான் சோதித்துப்பார்க்க தேவன் அவைகளை உபயோகப்படுத்தினார். மற்றும் நான் உதவி பெற்றேன். பிறகு நான்கு பையன்கள் என்னுடைய வீட்டுக்கு வந்து என்னோடு ஜெபிக்க ஆரம்பித்தார்கள். ஆரோன், ஜேக், ஜான் மற்றும் நோவா என்னோடு ஒவ்வொரு வாரமும் ஜெபித்தார்கள் – மற்றும் என்னுடைய நண்பர்களாக மாறினார்கள். ஓசியாவைபோல, என்னைப்போல ஒரு வயதான பிரசங்கியாக இருப்பது எவ்வளவு தனிமை என்பதை ஒருவரும் அறியமாட்டார்கள்! நான் தோற்றுப்போவேன் என்று உணர்ந்த பொழுது – அந்தப் பையன்கள் என்னோடு ஜெபிக்க வந்தார்கள். இப்பொழுது அவர்கள் என்னுடைய நண்பர்களாக இருக்கிறார்கள்! தேவன் அவர்களை என்னிடத்திற்கு அனுப்பினார் –மற்றும் அவர்கள் என்னை தங்கள் ஜெபங்களின் மூலமாக மற்றும் தங்கள் நட்பின் மூலமாக என்னை காப்பாற்றினார்கள். சென்ற ஆண்டு “ஒரு நரகத்தின் வருடம்” என்று ஜான் கேஹன் சொன்னார். அவர் சொன்னது சரிதான். பிசாசு கெர்ச்சித்தான். சபை அதிர்ந்தது, என் மனைவி வியாதிபட்டாள், என்னால் தூங்க முடியவில்லை, ஒரு பூகம்பம் வந்ததுபோல சபை முன்னும் பின்னுமாக ஆட்டம் கண்டது. பிறகு தேவன் வானத்திலிருந்து இறங்கி வந்தார். நாம் ஜெபித்தோம், “தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும், அக்கினி தண்ணீரைப் பொங்கப் பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்கு முன்பாக உருகும்படிசெய்யும்” (ஏசாயா 64:2). தேவன் இறங்கி நம்மிடம் வந்தார், 42 வருடங்களில் நாம் முதல் எழுப்புதலை பெற்றோம்! நான் அவரை துதிப்பேன்! நான் அவரை துதிப்பேன்! இதை என்னோடு எழுந்து நின்று பாடுங்கள்! நான் அவரை துதிப்பேன்! நான் அவரை துதிப்பேன்! நான் இந்த போதனையை எழுதிக் கொண்டிருந்தபோது புலோரிடாவிலிருந்து ஒருவர் “கிறிஸ்துவின் இரத்தம் மற்றும் எழுப்புதல்” என்ற ஜான் கேஹனின் போதனையினால் மகிழ்விக்கப்பட்டவராக என்னை அழைத்தார். அவர் சொல்லிக்கொண்டே இருந்தார், “நன்றி, போதகரே. உங்களுக்கு நன்றி. அந்த அற்புதமான பையன்! அவனுடைய போதனை என்னை ஆசீர்வதித்தது!” இப்பொழுது இந்தக் காலையில் நோவா சாங் சீனா மற்றும் இந்தோனேசியாவில் பிரசங்கம் முடித்துத் திரும்பி வந்தார்! இந்த இரண்டு இளம் மனிதர்கள் நம்மோடிருந்து கிறிஸ்துவின் ஆராயமுடியாத ஐசுவரியத்தை பிரசங்கிப்பது என்ன ஒரு ஆசீர்வாதம்! இப்பொழுது, இந்தக் காலையில் மறுபடியுமாக இயேசுவின் சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன். மறுபடியுமாக இயேசுவைபற்றி உங்களுக்குச் சொல்லுகிறேன், உன்னுடைய பாவத்தைக் கழுவ அவர் சிலுவையிலே சிந்தின இரதத்தைப்பற்றி சொல்லுகிறேன். டாக்டர் மார்டின் லியோடு-ஜோன்ஸ் சொன்னார், “இரத்தத்தை பற்றிய தியாலஜியை பரிகாசம் செய்து தங்களை புத்திமான்கள் என்று நினைக்கிற கிறிஸ்தவப் பிரசங்கிகள் இருக்கிறார்கள். அவர்கள் இகழ்ச்சியினால் அதை நிராகரிக்கிறார்கள்... அதனால்தான் சபையானது [இன்று] இருக்கிற நிலைமையிலே இருக்கிறது. ஆனால் எழுப்புதலின் காலத்தில், அவள் சிலுவையிலே மகிமைபட்டாள், மற்றும் இரத்தத்திலே மேன்மை பாராட்டினாள்... கிறிஸ்தவ சுவிசேஷத்தின் நரம்பு, அதன் மையம், இருதயம், இதுதான், ‘கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்’ (ரோமர் 3:26). ‘இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது’ (எபேசியர் 1:7)... [நான் உங்களுக்குள் எந்த நம்பிக்கையையும் பார்க்கவில்லை] ‘இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையே’ (I கொரிந்தியர் 2:2)… மனிதர்கள் மற்றும் மனுஷிகள் கிறிஸ்து சிலுவையில் சிந்தின இரத்தத்தை மறுதலிக்கும்பொழுது [புறக்கணிப்பதால்] நான் உங்களுக்குள் எந்த எழுப்புதலுக்குரிய நம்பிக்கையையும் பார்க்கவில்லை” (Revival, Crossway Books, 1994 edition, pp. 48, 49). நீ இந்த இரத்தத்தால் கழுவப்பட்டாயா, ஆமாம், இயேசுவின் இரத்தம் கிருபாதாரப் பலியாக மற்றும் தேவனுடைய கோபத்தை கிரகித்துக் கொள்ளுவதாக இருக்கிறது. ஆமாம், இயேசுவின் இரத்தம் உனக்குத் தேவனோடு சமாதானத்தைக் கொடுக்கிறது. ஆமாம், இயேசுவின் இரத்தம் உனக்கு வெற்றிகொள்ளும் வல்லமையை கொடுக்கிறது, “அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது” (கொலோசெயர் 1:14). இப்பொழுது நமது சபையில், இயேசுவின் இரத்தத்தின் மேல் உள்ள விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்ட இரண்டுபேருடைய வார்த்தைகளை கவனியுங்கள். ஒரு இஸ்பேனிக் ஸ்திரி வேறொரு பாப்டிஸ்த்து சபைக்குப் போனாள். நேரடியாக அவளிடம் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ள விரும்புகிறாளா என்று கேட்டார்களாம். அவள் சொன்னாள், “ஆமாம்.” அவர்கள் இயேசுவைப்பற்றி, மற்றும் அவளது பாவத்திற்காக அவரது தியாகபலியாகிய இரத்தத்தைபற்றிறும் அவளிடம் சொல்லவில்லை. அவள் இன்னும் இரட்சிக்கப்படாதவளாக இருந்தாலும் அவளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்கள். அவள் சொன்னாள், “நான் எனக்காக வாழும் வாழ்க்கையை எப்பொழுதும்போல தொடர்ந்தேன்.” பிறகு அவளுடைய மகள் நமது சபைக்கு அவளை கொண்டுவந்தாள். அவள் சொன்னாள் “[நாம்] அவளிடம் எல்லா கூட்டங்களுக்கும் வரும்படி அவளை கேட்டுக்கொள்ளுவோம் என்று நினைத்ததாக, மற்றும் நான் அப்படிவர விரும்பவில்லை ஏனென்றால் அது என்னுடைய நேரத்தை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளும். நான் சுயநலமானவள், தேவன் என்னுடைய ஏராளமான நேரத்தை எடுத்துக் கொள்வார் என்று நினைத்தேன். ஆனால் தேவன்... எனது இருதயத்தில் நான் எனக்காகவே வாழ்கிறேன் என்று காட்டஆரம்பித்தார்... தேவன் தம்முடைய பெரிய இரக்கத்தினால் நான் இயேசுவை தள்ளிவிட்டபடியால், நான் மரித்த பிறகு நியாயம் தீர்க்கபடுவேன் என்றும் மற்றும் என்னுடைய பாவங்களையும் காட்ட ஆரம்பித்தார். அது என்னை கவலைபடவைத்தது மற்றும் எனக்கு பயம் ஏற்பட்டது”... [டாக்டர் A. W. டோசர் சொன்னார், “தேவனுடைய பயத்தை ஒருவர் அறிந்து கொள்ளாவிட்டால் தேவனுடைய கிருபையை அவர் அறிந்து கொள்ள முடியாது.”]. அவள் பாவத்தினால் உணர்த்தப்பட்டு விசாரணை அறைக்குப் போனாள். டாக்டர் கேஹன் அவளிடம் இயேசு எங்கே இருக்கிறார் என்று கேட்டார். அவர் தன்னுடைய இருதயத்தில் இருப்பதாக சொன்னாள். டாக்டர் கேஹன் அவளிடம் இயேசு பரலோகத்தில் பிதாவினுடைய வலதுபாரிசத்தில் இருப்பதாக சொன்னார். அவள் சொன்னாள், “அப்படியானால் நான் என்னுடைய அசுத்தமான எல்லா பாவங்களையும் அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் சுத்திகரிக்க அவரிடம் வந்தேன். இரத்தம் எனக்காக சிந்தப்பட்டது... இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் இரட்சிக்கபடும்படியாக இயேசு தமது இரத்தத்தை சிந்தினார்... இயேசு என்னுடைய எல்லா பாவங்களுக்கும் கிரயத்தை தமது தெய்வீக இரத்தத்தில் செலுத்திவிட்டார்... இன்று நான் சுவிசேஷ ஊழியத்தை செய்ய மகிழ்ச்சியாக இருக்கிறேன்... இளம் மக்களை கொண்டுவர [சபைக்கு] அதன் மூலமாக நமது போதகரை கவனிக்க செய்ய. அவர் [டாக்டர் ஹைமர்ஸ்] இளம் மக்களிடம் இயேசுவின் இரத்தத்தைப்பற்றி பேசும்போது நான் மகிழ்ச்சியாக உணருகிறேன்... ஆத்துமாக்கள் மீது அதிகமான கரிசனை கொண்டுள்ள மற்றும் இயேசுவை அவர்களிடம் பேச [ஒரு] போதகர் எனக்கு இருக்கிறார்… நான் இரட்சிக்கபடும்படியாக இயேசு தமது விலையேறப்பெற்ற இரத்தத்தை சிலுவையிலே சிந்தினார்... என்னுடைய அழகான இரட்சகர் இயேசு!” ஒரு சீன கல்லூரி மாணவி சொன்னாள், “நான் சபைக்குள்ளே நடந்தேன் என்னுடைய இருதயம் பாரமாக இருந்தது. நான் ஒரு பாவி என்று உணரும்படி தேவன் என்னை விழிப்படைய செய்தார்... என்னை சுற்றிலும் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருந்தாலும்... நான் சரியாக இருப்பதாக மற்றும் நல்லவள் என்று என்னை ஏமாற்றிக்கொள்ள [என்னால்] முடியவில்லை. நான் சரியில்லை மற்றும் என்னில் எந்த நன்மையும் இல்லை. நான் போதனையை கேட்க [டாக்டர் ஹைமர்ஸ் பிரசங்கம் செய்தார்] உட்கார்ந்தேன் சமயத்தில் போதகர் நேரடியாக எனக்கே பேசுவதாக உணர்ந்தேன்... நான் மக்களிடம் என்னுடைய பாவத்தை மறைத்துவிடலாம் என்று நினைத்திருந்தாலும், அவைகளை தேவனிடம் என்னால் மறைக்க முடியவில்லை... ஆதாம் தேவனிடம் மறைந்து கொள்ள முயற்ச்சி செய்ததைபோல, நான் உணர்ந்தேன்... பிறகு, போதனை முடியும் தருவாயில் இருக்கும்போது, நான் முதல்முறையாக இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை கேட்டேன் [அவள் நமது சபைக்கு அநேக தடவைகள் வந்திருந்தாலும் இதற்கு முன்பாக அவள் கவனிக்கவில்லை!]. கிறிஸ்து எனக்காக, என்னுடைய ஸ்தானத்தில், சிலுவையிலே மரித்தார் என்னுடைய பாவங்களுக்கு கிரயம் செலுத்த... அவருடைய இரத்தம் பாவிகளுக்காக சிந்தப்பட்டது. அவருடைய இரத்தம் எனக்காக சிந்தப்பட்டது! கிறிஸ்து எனக்கு அவசியமாக தேவைபட்டார். எனக்குள் நன்மையை தேடுவதற்குப் பதிலாக, கர்த்தருடைய கிருபையினாலே என்னுடைய கண்கள் என்னைவிட்டு அகன்றன. நான் முதல்முறையாக கிறிஸ்துவை நோக்கி பார்த்த நொடியிலே, அவர் என்னை இரட்சித்தார்! நான் அவருக்கு இதுவரை செய்ததுபோல, கிறிஸ்து என்னைவிட்டு திரும்பிக் கொள்ளவில்லை, ஆனால் அவர் என்னை ஏற்றுக்கொண்டார், அவருடைய இரத்தத்தால் என்னை கழுவினார்… அவருடைய இரத்தம் என்னை மூடினது மற்றும் என்னுடைய எல்லாபாவங்களையும் கழுவினது. அவருடைய இரத்தத்தினால் என்னை உடுத்தினார். அவருடைய நீதியினால் என்னை உடுத்தினார். அவருடைய இரத்தம் என்னுடைய கறையான இருதயத்தை கழுவி அதை புதியதாக்கினது... என்னுடைய நம்பிக்கையும் நிச்சயமும் கிறிஸ்துவில் மட்டுமே. ஜான் நியுட்டன் அர்த்தப்படுத்தினதை இப்பொழுது புரிந்து கொண்டேன் [அவர் சொன்னபொழுது] ‘அற்புதமான கிருபை! அந்த சத்தம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது, அது என்னைப்போன்ற பரிதவிக்கபட தக்கவனையும் இரட்சித்தது! ஒரு காலத்தில் நான் இழக்கப்பட்டேன், ஆனால் இப்பொழுது கண்டுபிடிக்கப் பட்டேன்; குருடனாயிருந்தேன், ஆனால் இப்பொழுது பார்க்கிறேன்.’... நான் ஒரு பாவியாக இருந்தேன், மற்றும் இயேசுகிறிஸ்து என்னை இரட்சித்தார்… அவருடைய இரத்தத்தால் என்னை கழுவி என்னை ஏற்றுக்கொண்டார்.” நான் இயேசுவின் சிலுவை, மற்றும் இயேசுவின் இரத்தம்பற்றி பேசுவதால் மக்கள் சோர்ந்துபோக மாட்டார்களா? இல்லை, அவர்கள் சோர்ந்துபோக மாட்டார்கள்! இழக்கப்பட்டவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் போதகர்கள் இருக்கும் வரையிலும் – அர்லிட்டா போதகர், லிடியா எஸ்ட்ராடா இயேசுவை நம்பினதை நிச்சயப்படுத்தாமல், அவளுக்கு ஞானஸ்நானம் கொடுத்த கலிபோர்னியா போதகர். எப்படி நிச்சயப்படுத்துவது என்று அவருக்குத் தெரியுமா? அது எனக்குச் சந்தேகமாக இருக்கிறது! இந்த பூமியிலே அப்படிப்பட்ட பொய்த் தீர்க்கதரிசிகளுக்கு விலக்குங்கள்! என்னைப் பொறுத்தவரையிலும், இயேசுவின் இரத்தம்பற்றி பேசுவதில் இந்த ஏழை திக்கும் நாவு கல்லறையிலே அமைதியாகும் வரைக்கும் பிரசங்கிப்பேன், பிறகு ஒரு உன்னதமான, உமது இரட்சிப்பின் வல்லமையை நான் பாடுவேன் என்ற இனிய பாடலை பாடுவேன். இரத்தால் நிறைந்த ஒரு ஊற்று உண்டு, அது இரட்சகரின் இரத்தநாளத்திலிருந்து ஒழுகுகிறது; மற்றும் பாவியின் எல்லா குற்றக்கறைகளின்அடைப்பை நீக்கி அவிழ்த்து விடுகிறது! குற்றக்கறைகளின் அடைப்பை எல்லாம் நீக்கி அவிழ்த்து விடுகிறது, “அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது” (கொலோசெயர் 1:14). இரட்சிக்கப்படுவதைப்பற்றி நீங்கள் எங்களோடு பேச விரும்பினால், நீங்கள் தயவுசெய்து கீழே இறங்கி முன்னே வாருங்கள், அதனால் நாங்கள் உங்களோடு அதைப்பற்றி பேசமுடியும். நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் போதனைக்கு முன்பாக தனிப்பாடல் பாடியவர் திரு. ஆரோன் யான்சி. |