Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




ஜார்ஜ் ஒயிட் பீல்டு அவர்களின் “கிருபையின்
முறைமை”, நவீன ஆங்கிலத்தில் சுருக்கப்பட்டது
மற்றும் பயன்படுத்தப்பட்டது

“THE METHOD OF GRACE” BY GEORGE WHITEFIELD,
CONDENSED AND ADAPTED TO MODERN ENGLISH
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

ஜனவரி 8, 2017 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் திரு. ஜான் சாமுவேல் கேஹனால்
பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached by Mr. John Samuel Cagan at the Baptist Tabernacle of
Los Angeles Lord’s Day Evening, January 8, 2017

“சமாதானமில்லாதிருந்தும் சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்” (எரேமியா 6:14).


முன்னுரை: ஜார்ஜ் ஒயிட் பீல்டு அவர்கள் 1714ல் இங்கிலாந்தில் உள்ள, குளுசெஸ்டரில் பிறந்தார். அவர் ஒரு சத்திரத்துக்குச் சொந்தக்காரரின் மகன். இந்தச் சுற்றுச்சூழலில் அவருக்குச் சிறுவயதில் சிறிதளவு கிறிஸ்தவ பழக்கம் ஏற்பட்டது, ஆனால் அவருக்குப் பள்ளியில் வழக்கத்துக்கு மாறான திறமை இருந்தது. அவர் ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில் சேர்ந்தார் அங்கே அவர் ஜான் மற்றும் சார்லஸ் வெஸ்லியோடு நட்புகொண்டு அவர்களுடைய ஜெப மற்றும் வேத ஆராட்சி குழுவில் அங்கத்தினராக மாறினார்.

அவர் ஆக்ஸ்போர்டு பல்கலை கழக மாணவராக இருந்தபொழுது மாறுதலின் அனுபவத்தைப் பெற்றார். அதன்பிறகு குறுகிய காலத்தில் இங்கிலாந்து சபையில் நியமணம் பெற்றார். புது பிறப்பின் அத்தியவசிய தேவையைக் குறித்த அவருடைய பிரசங்கத்தின் விளைவாக சபைகள் தங்கள் கதவுகளை அவருக்கு மூடிக்கொண்டன, மனுஷீக போதகர்கள் புது பிறப்பின் அத்தியவசிய தேவையை குறித்த அவருடைய போதனைக்குப் பயப்பட்டதினால் தங்கள் பாதிரிகள் மீது கோபப்பட்டார்கள். இவ்வாறாக, அவர் சபைகளால் புறம்பே தள்ளப்பட்டார், திறந்த வெளிகளில் பேசினதால், அவர் பிரபலமானாவராக மாறினார்.

ஒயிட் பீல்டு அவர்கள் 1738ல் அமெரிக்காவுக்குப் பிரயாணமாக வந்தார் மற்றும் ஒரு அனாதை இல்லத்தை நிறுவினார். அதை தொடர்ந்து அமெரிக்க காலனிகளுக்குப் பிரயாணம் செய்து மற்றும் கிரேட் பிரிட்டன் பிரசங்கத்தை செய்து மற்றும் அனாதைகளுக்கு ஆதரவாக நிதிகளைத் திரட்டினார். அவர் ஸ்பெயின், ஹாலந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இங்லந்து, வேல்ஸ், மற்றும் ஸ்காட்லாந்து, முதலிய இடங்களில் பிரசங்கித்தார் மற்றும் அட்லாண்டிக்கை கடந்து பதிமூன்று பிரயாணங்கள் செய்து அமெரிக்காவுக்குப் பிரசங்கம் செய்யவந்தார்.

அவர் பென்ஜமின் பிராங்கிளின், யோனத்தான் எட்வர்டு மற்றும் ஜான் வெஸ்லிக்கு நெருங்கின நண்பரானார், மற்றும் அவர் செய்ததைபோல வெளியிடங்களில் வெஸ்லியை, பிரசங்கம் செய்ய தூண்டினவர் இவராகும். முப்பதாயிரம் மக்கள் கூடின கூட்டத்தில் ஒயிட் பீல்டு அவர்கள் பேசினார் என்று பென்ஜமின் பிராங்கிளின் ஒருதரம் கணக்கிட்டார். அவருடைய வெளிபிரசங்க கூட்டங்களில் அடிக்கடி 25,000க்கு அதிகமாக வருகை பதிவாகியிருந்தன. அவர் ஒருதரம், ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் 100,000க்கும் அதிமான மக்கள் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் பேசினார் – அது மைக்ராபோன் இல்லாத நாட்கள்! அந்தக் கூட்டத்தில் பத்தாயிரம் மக்கள் மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்கள்.

அநேக சரித்திர ஆசியர்களால் அவர் மிகப்பெரிய ஆங்கிலம் பேசும் சுவிசேஷகராக எல்லா நேரத்திலும் கருதப்பட்டார். ஒருவேளை பில்லிகிரஹாம் எலக்ட்ரானிக் மைக்ரோபோன் மூலமாக அதிகமான மக்களோடு பேசியிருந்தாலும், ஒயிட் பீல்டின் தாக்கம் கேள்விக்கு இடமில்லாமல் மகத்தானதாகும்.

ஒயிட் பீல்டு அவர்கள் முதலாவது பெரிய எழுப்புதலின் தலைவராக விளங்கினார், இந்த நெருக்கமான எழுப்புதல் 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் அமெரிக்காவின் குணாதிசயத்தை ஒழுங்குபடுத்தியதாகும். அவர் பிரசங்கித்தபொழுது நமது நாட்டில் காலனிகள் எழுப்புதலில் கொழுந்துவிட்டு எரிந்தன. இந்த எழுப்புதலின் உச்சகட்டம் 1740ல் அவர் ஒரு ஆறு வாரகால பிரயாணமாக புது இங்கிலாந்து ஒயிட் பீல்டு வந்தபொழுது ஏற்பட்டதாகும். நாற்பத்தைந்து நாட்களில் அவர் நூற்று எழுபத்தைந்து போதனைகளை பத்தாயிரக்கணக்கான மக்களுக்கு இந்தப் பகுதிகளில் ஒரு ஆவிக்குரிய கூக்குரலை விட்டுச்சென்றார், அது அமெரிக்க கிறிஸ்தவத்தில், மிகவும் குறிப்பிடத்தக்க காலகட்டங்களில் ஒன்றாகும்.

அவருடைய மரண நேரத்தில் உலகத்தில் ஆங்கிலம் பேசும் அனைத்து மக்களின் பாராட்டையும் மற்றும் விமர்சனத்தையும் அவர் வெற்றி கொண்டார். அவர் பிரின்சிடன் பல்கலைகழகம், டார்ட்மௌத் கல்லூரி, மற்றும் பென்சில்வானியா பல்கலைகழகம் போன்றவைகள் ஏற்படுவதற்குக் கருவியாக இருந்தார். அவர் நியுபரிபோர்ட், மசாசுசெட்ஸில் பிரசங்கித்த குறுகிய காலத்திற்கு பிறகு, அமெரிக்க மறுமலர்ச்சிக்கு ஆறு வருடங்களுக்கு முன்பாக, 1770ல் மரித்தார். ஜார்ஜ் வாஷிங்டன் நமது தேசப்பிதா, ஆனால் ஜார்ஜ் ஒயிட் பீல்டு அதனுடைய தாத்தாவாகும்.

பின்வரும் போதனை நவீன ஆங்கிலத்தில் ஒயிட் பீல்டு அவர்களால் கொடுக்கப்பட்டதாகும். இது அவருடைய மெய்யான போதனை, ஆனால் நமது காலத்தில் அதிகமாக புரிந்து கொள்ளும் வகையில் நான் வார்த்தைகளை திருத்திஅமைத்திருக்கிறேன்.

“சமாதானமில்லாதிருந்தும் சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்” (எரேமியா 6:14).

போதனை: ஒரு தேசத்துக்குத் தேவனால் அனுப்பக்கூடிய மிகப்பெரிய ஆசீர்வாதம் நல்ல மற்றும் உண்மையுள்ள பிரசங்கிகளாகும். ஆனால் எந்த ஒரு தேசத்துக்கும் தேவன் அனுப்பக்கூடிய மிகப்பெரிய சாபம் பணத்தை சம்பாதிக்க மட்டுமே சபைகளை நடத்தக்கூடிய இழக்கப்பட்ட பிரசங்கிகளை சபைகளில் அனுமதிப்பதாகும். இருந்தாலும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் உண்மையில்லாத போதனைகளை கொடுக்கக்கூடிய பொய்ப் பிரசங்கிகள் இருந்தார்கள். அப்படியாக அநேக ஊழியர்கள் மக்களை ஏமாற்றத்தக்கதாக வேதத்தை திரித்துக்கூறி தீட்டுப்படுத்தினார்கள்.

அந்தவிதமாகவே எரேமியாவின் நாட்களிலும் இருந்தது. தேவனுக்கு உண்மையாக கீழ்ப்படிந்தவராக எரேமியா அவர்களுக்கு விரோதமாக பேசினார். அவர் தமது வாயைத்திறந்து அந்த மாம்சபிரகாரமான பிரசங்கிகளுக்கு விரோதமாக பேசினார். நீங்கள் அவருடைய புத்தகத்தை வாசித்தால், பொய்ப்பிரசங்கிகளுக்கு விரோதமாக எரேமியாவைப்போல அவ்வளவு கண்டிப்பாக ஒருவரும் ஒருபோதும் பேசினதில்லை என்று அறிந்து கொள்ளலாம். நமது பாடம் அமைந்துள்ள அதிகாரத்தில் அவர் மிகவும் உக்கிரகமாக பேசினார்.

“சமாதானமில்லாதிருந்தும் சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்” (எரேமியா 6:14).

அவர்கள் பணத்துக்காக மட்டுமே பிரசங்கிக்கிறார்கள் என்று எரேமியா சொன்னார். பதிமூன்றாம் வசனத்தில், எரேமியா சொன்னார்,

“அவர்களில், சிறியோர்முதல் பெரியோர்மட்டும், ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர்; இதுவுமல்லாமல் தீர்க்கதரிசிகள்முதல் ஆசாரியர்கள்மட்டும் ஒவ்வொருவரும் பொய்யர்” (எரேமியா 6:13).

அவர்கள் பொருளாசைக்காரர் மற்றும் பொய்யாக பிரசங்கிப்பவர்கள்.

நமது பாடத்தில், அவர்கள் பொய்யாக பிசங்கிக்கும் வழிகளில் ஒன்றைப்பற்றி எரேமியா காட்டுகிறார். இழக்கப்பட்ட ஆத்துமாக்களிடம் அவர்கள் செயல்படுத்தும் ஏமாற்று வழியை தீர்க்கதரிசி காட்டுகிறார்:

“சமாதானமில்லாதிருந்தும் சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்” (எரேமியா 6:14).

வரப்போகும் ஒரு யுத்தத்தைபற்றி எச்சரிக்க வேண்டும் என்று தேவன் எரேமியாவிடம் சொல்லி இருந்தார். அந்த யுத்தம் வரப்போகிறது – அவர்களுடைய வீடுகள் அழிக்கப்படும் என்று அவர்களிடம் அவர் சொல்லவேண்டும் என்று தேவன் விரும்பினார் (எரேமியா 6:11-12 ஐ பார்க்கவும்).

இடிமுழக்கம் போன்ற ஒரு செய்தியை எரேமியா கொடுத்தார். அது அநேகரை பயமுறுத்தி மனந்திரும்புதலின் ஸ்தானத்துக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால் மாம்சபிரகாரமான தீர்க்கதரிசிகள் மற்றும் ஆசாரியர்கள் சுற்றித்திரிந்து மக்களுக்குப் பொய்யான ஆறுதலை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். எரேமியா ஒரு காட்டுத்தனமான மதவைராக்கியம் உள்ளவர் என்று அவர்கள் சொன்னார்கள். அங்கே யுத்தமே வராது என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் மக்களிடம் சமாதானம் இருக்கும் என்று சொன்னார்கள், எரேமியா சமாதானம் இருக்காது என்று சொன்னபொழுது.

“சமாதானமில்லாதிருந்தும் சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்” (எரேமியா 6:14).

இந்தப் பாடத்தின் வார்த்தைகள் பிரதானமாக வெளிப்பிரகாரமான சமாதானத்தை குறிக்கிறது. ஆனால் அவர்களுக்கு ஆத்துமா என்ற ஒன்று இருக்கிறது. மக்கள் மறுபடியும் பிறவாமல் இருந்தும், அவர்கள் போதுமான அளவு நன்றாக இருக்கிறார்கள் என்று மக்களிடம் சொல்லும் பொய்ப் பிரசங்கிகளைபோல அவர்களும் இருந்திருப்பார்கள் என்றும் நான் விசுவாசிக்கிறேன். மாற்றப்படாத மக்கள் இந்தவிதமான பிரசங்கத்தை நேசிப்பார்கள். மனித இருதயம் மிகவும் பொல்லாதது மற்றும் கேடுள்ளதாகும். மனித இருதயம் எவ்வளவு துரோகமுள்ளது என்று தேவன் அறிந்திருக்கிறார்.

உங்களில் அநேகர் உண்மையாக சமாதானம் இல்லாதபோது, தேவனோடு உங்களுக்கு சமாதானம் இருக்கிறது என்று சொல்லுகிறீர்கள்! உங்களில் அநேகர் உண்மையாக கிறிஸ்தவர்களாக இல்லாதபோது, நீங்கள் கிறிஸ்தவர்கள் என்று நினைக்கிறீர்கள். பிசாசு உங்களுக்குப் பொய்யான சமாதானத்தை கொடுக்கிறவனாக இருக்கிறான். இந்த “சமாதானத்தை” தேவன் உங்களுக்குக் கொடுக்கவில்லை. அது மனித புத்திக்கு எட்டாத சமாதானம் அல்ல. நீங்கள் பெற்றிருப்பது பொய்யான ஒரு சமாதானமாகும்.

தேவனோடு உங்களுக்கு மெய்யான சமாதானம் இருக்கிறதா அல்லது இல்லையா என்று அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒவ்வொருவரும் சாமாதானத்தை விரும்புகிறார்கள். சமாதானம் ஒரு பெரிய ஆசீர்வாதம். அதனால் நீங்கள் தேவனோடு மெய்யான சமாதானம் எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்ல வேண்டியது அவசியமாகும். உங்கள் இரத்தத்திற்கு நான் நீங்கலாகி இருக்கவேண்டியது அவசியமாகும். தேவனுடைய முழுஆலோசனையையும் நான் உங்களுக்கு அறிவிக்க வேண்டியது அவசியமாகும். பாடத்தின் வார்த்தைகளிலிருந்து, உங்களுக்கு என்ன நடந்தது என்று நான் காண்பிக்க முயற்ச்சி செய்கிறேன், தேவனோடு உங்களுக்கு மெய்யான சமாதானம் இருக்க வேண்டுமானால் உங்களுக்குள் மாற்றப்படவேண்டியது என்ன என்று நான் சொல்ல வேண்டியது அவசியமாகும்.

I. முதலாவதாக, தேவனோடு உங்களுக்கு மெய்யான சமாதானம் பெற்றுக்கொள்ள வேண்டியதற்கு முன்பாக, நீங்கள் தேவனுடைய பிரமாணத்துக்கு விரோதமாக செய்த, மெய்யான பாவங்களை பார்க்க, உணர, அதற்காக துக்கித்து அழ வேண்டியது அவசியமாகும்.

வேதாகமம் சொல்லுகிறது, “பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்” (எசேக்கியேல் 18:4). தேவனுடைய பிரமாணத்தில் எழுதப்பட்ட எல்லாகாரியங்களையும் தொடர்ந்து செய்யாத ஒவ்வொரு மனிதனும் சபிக்கப்பட்டவன்.

நீ ஏதோ சில காரியங்களை மட்டும் செய்தால் போதாது, ஆனால் நீ எல்லா காரியங்களையும் செய்யவேண்டும் இல்லையானல் நீ சபிக்கப்பட்டவன்:

“நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே” (கலாத்தியர் 3:10).

தேவனுடைய எந்தப் பிரமாணத்தையும், சிந்தனை, அல்லது வார்த்தை, அல்லது செயலால், உடைப்பதானது, உன்னை தேவனுடைய பிரமாணத்தின்படி நித்திய தண்டனைக்குப் பாத்திரராக்குகிறது. மற்றும் ஒரு தீய நினைவு, ஒரு தீய வார்த்தை, ஒரு தீய செயல் உன்னில் இருக்குமானால் அது உன்னை நித்திய ஆக்கினைக்கு பாத்திரராக்குகிறது, நீ நரகத்துக்கு எப்படி தப்பித்துக்கொள்ளுவாய்? நீ உண்மையான சமாதானத்தை உனது இருதயத்தில் எப்பொழுதும் பெற்றுக்கொள்வதற்கு முன்பாக, தேவனுடைய பிரமாணத்துக்கு விரோதமாக பாவங்கள் செய்வது எவ்வளவு பயங்கரமான காரியம் என்பதை நீ பார்க்க வேண்டியது அவசியமாகும்.

உனது இருதயத்தை சோதித்துப்பார். உன்னை நான் கேட்க வேண்டும் – எந்த நேரத்திலாவது உனது பாவ நினைவுகள் உனக்கு வேதனையை கொடுத்தது உண்டா? எந்த நேரத்திலாவது உனது பாவத்தின் பாரம் உன்னால் தாங்கமுடியாததாக இருந்தது உண்டா? எந்த நேரத்திலாவது தேவனுடைய பிரமாணத்துக்கு விரோதமாக, உன்னுடைய உண்மையான அக்கிரமத்தின் காரணமாக அவருடைய கோபம் சரியாக உன்மேல் விழுந்தது உண்டா? எந்த நேரத்திலாவது உனது பாவத்திற்காக நீ உள்ளாக மனஸ்தாபப்பட்டது உண்டா? நீ எப்போதாவது நீ சொன்னது உண்டா, “என்னுடைய பாவங்கள் என்னால் தாங்கக்கூடாத பாரமாக இருக்கிறது?” இப்படிப் போன்ற ஏதாவது காரிய அனுபவம் உனக்கு ஏற்பட்டது உண்டா? அப்படி இல்லையானல், உன்னை ஒரு கிறிஸ்தவனாக அழைத்துக் கொள்ளாதே! உனக்குச் சமாதானம் இருப்பதாக நீ சொல்லலாம், ஆனால் உனக்கு மெய்யான சமாதானம் இல்லை. கர்த்தர் தாமே உன்னை எழுப்புவாராக! கர்த்தர் தாமே உன்னை மாற்றுவாராக!

II. இரண்டாவதாக, தேவனோடு உங்களுக்குச் சமாதானம் பெற்றுக்கொள்ள வேண்டியதற்கு முன்பாக, உணர்த்துதல் ஆழமாக போகவேண்டியது அவசியம்; உன்னுடைய சொந்தமான பாவசுபாவத்துக்கு, உனது ஆத்துமாவின் முழுமையான சீரழிவு உணர்த்தபட வேண்டியது அவசியமாகும்.

உன்னுடைய உண்மையான பாவங்களைக் குறித்து உணர்த்தபட வேண்டியது அவசியமாகும். அவைகளுக்காக நீ பயந்து நடுங்க வேண்டியது அவசியமாகும். ஆனால் உணர்த்துதலானது அதைவிட அதிக ஆழமாக போக வேண்டியது அவசியமாகும். நீ தேவனுடைய உண்மையான பிரமாணத்தை உடைத்துவிட்டாய் என்று உணர்த்தபட வேண்டியது அவசியமாகும். அதற்கும் அதிகமாக, உன்னுடைய சொந்த மூலாதார பாவங்களுக்காக நீ உணர்த்தபட வேண்டியது அவசியமாகும், உனது இருதயத்தில் உடன்பிறந்தது உணர்த்தபட வேண்டியது அவசியமாகும், அதனால் நீ நரகத்துக்கு அனுப்பப்படுவாய்.

தங்களை புத்திசாலிகள் என்று நினைக்கும் அநேக மக்கள் ஜென்ம பாவங்கள் என்பதாக ஒரு காரியம் இல்லை என்று நினைக்கிறார்கள். அவர்கள் ஆதாமின் பாவங்களைச் சுதந்தரித்திருக்கிற காரணத்தால் அவர்களை நரகத்துக்கு அனுப்பினால் தேவன் அநீதியுள்ளவர் என்று நினைக்கிறார்கள். நாங்கள் பாவத்தில் பிறக்கவில்லை என்று அவர்கள் சொல்லுகிறார்கள். நீ மறுபடியும் பிறக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் சொல்லுகிறார்கள். இருந்தாலும் உன்னை சுற்றிலும் இருக்கும் உலகத்தை பார். அது தேவன் மனிதனுக்கு வாக்களித்த பரதீசைபோல இருக்கிறதா? இல்லை! இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு காரியமும் ஒழுங்கில்லாமல் இருக்கிறது! அதற்குக் காரணம் இந்த மனித வர்க்கத்தில் ஏதோ சில காரியம் தவறாக இருக்கிறது. அதுவே இந்த உலகத்தை அழித்த மூலாதார பாவமாகும்.

இதை நீ எவ்வளவு பலமாக மறுதலித்தாலும் பரவாயில்லை, நீ உயிர்பிக்கப்படும்போது, உன்னுடைய சீரழிந்த இருதயத்திலிருந்து மூலாதார பாவத்தினால் விஷமாக்கப்பட்ட இருதயம் – உனது வாழ்க்கையில் வரும் அந்தப் பாவத்தை நீ பார்ப்பாய்.

மாற்றப்படாத நபர் முதலாவது உயிர்பிக்கப்படும்போது, அவன் ஆச்சரியப்பட ஆரம்பிக்கிறான், “நான் எப்படி இவ்வளவு மோசமானவனாக மாறினேன்?” அவனுடைய சுபாவத்தில் எந்த நல்ல காரியமும் இல்லை என்று தேவனுடைய ஆவியானவர் அவனுக்குக் காட்டுகிறார். அதன்பிறகு அவன் முற்றிலுமாக பாவம்நிறைந்தவனாக இருப்பதை பார்க்கிறான். இறுதியாக அவனை தண்டிப்பது தேவனுக்குச் சரியானது என்று அந்த நபர் பார்க்கிறான். அவன் தனது இயற்கை சுபாவத்தில் தானே மிகவும் விஷமுள்ளவன் மற்றும் கலகமுள்ளவன் என்றும் அவன் தனது வாழ்நாள் முழுவதிலும் வெளிப்படையாக ஒரே பாவத்தை செய்திருந்தாலும், அவனை தண்டிப்பது தேவனுக்குச் சரியானது என்றும் பார்க்கிறான்.

இதை நீ எப்போதாவது அனுபவித்தது உண்டா? எப்போதாவது நீ உணர்ந்தது உண்டா – உன்னை தண்டிப்பது தேவனுக்குச் சரியானது மற்றும் அது தேவனுக்கு நீதியானது என்று? உனது சுபாவத்தின்படி நீ ஒரு கோபாக்கினையின் பிள்ளையாக இருக்கிறாய் என்பதை நீ எப்போதாவது உணர்ந்தது உண்டா? (எபேசியர் 2:3).

நீ எப்போதாவது மெய்யாகவே மறுபடியும் பிறந்திருந்தால், நீ இதை உணர்ந்திருக்கலாம். மற்றும் நீ ஒருபோதும் உன்னுடைய மூலாதார பாவத்தை உணராவிட்டால், உன்னை ஒரு கிறிஸ்தவன் என்று அழைத்துக்கொள்ளாதே! மூலாதார பாவம் ஒரு மெய்யான மாற்றத்துக்கு மிகப்பெரிய பாரமாகும். மெய்யாகவே மறுபடியம் பிறந்த மனிதன் மூலாதார பாவத்தினால் மற்றும் விஷமாக்கப்பட்ட சுபாவத்தினால் துக்கப்பட்டிருப்பான். ஒரு மெய்யான மாற்றம்பெற்ற நபர் இப்படியாக அழுவான், “ஓ, நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று; யார் என்னை விடுதலையாக்குவார்?” (குறிப்பு ரோமர் 7:24). ஒரு உயிர்பிக்கப்பட்ட மனிதனை அதிகமாக பாதிப்பது இதுதான் – அவனது பாவமுள்ள உள்ளான இருதயம். இந்த உள்ளான பாவம் நிறைந்த சுபாவத்தைபற்றி நீ ஒருபோதும் விழிப்பாக இல்லாவிட்டால், உனது இருதயத்தில் மெய்யான சமாதானம் பெற்றுக்கொள்வதற்கு வேறு ஒருவழியுமில்லை.

III. மூன்றாவதாக, தேவனோடு மெய்யான சமாதானம் பெற்றுக்கொள்ள வேண்டியதற்கு முன்பாக, நீ உனது வாழ்க்கையின் பாவங்களால் உபாதிக்கப்படுவது மட்டுமல்ல, மற்றும் உன்னுடைய சுபாவத்தின் பாவங்களாலும், ஆனால் அதேபோல உன்னுடைய மிகசிறந்த தீர்மானங்களால், ஒப்புவித்தல்களால், போன்ற “கிறிஸ்தவ வாழ்க்கை” என்று பெயருக்காக அழைக்கப்படும் பாவங்களாலும் உபாதிக்கப்படுவாய்.

எனது நண்பரே, உனது மதத்திலே தேவன் உன்னை அங்கிகரித்தார் என்பதற்கு ஆதாரம் என்ன இருக்கிறது? உனது சுபாவத்தின்படி நீதிமானக்கப்படாமல் மற்றும் மாற்றப்படாமல் இருக்கிறாய். நீ நரகத்தில் தள்ளப்படுவதற்கு உனது வெளிப்பிரகாரமான பாவங்களுக்காக பத்து முறை தண்டிக்கப்படலாம். உனது மத நம்பிக்கை உனக்கு என்ன நல்ல சித்தத்தை வைத்திருக்கிறது? நீ மாற்றப்படாமல் எந்த நன்மையான காரியத்தையும் செய்ய முடியாது.

“மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்க மாட்டார்கள்” (ரோமர் 8:8).

ஒரு மாற்றப்படாத நபர் தேவனுடைய மகிமைக்காக எதையாவது செய்ய முடியும் என்பது முடியாத காரியமாகும்.

நாம் மாற்றப்பட்ட பிறகும்கூட, இன்னும் ஒரு பகுதி மட்டுமே நாம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறோம். உள்ளே வாசம் பண்ணும் பாவம் நமக்குள் தொடர்கிறது. நம்முடைய ஒவ்வொருவருடைய கடமைகளிலும் ஊழலின் கலப்பு இன்னும் காணப்படுகிறது. அதனால், நாம் மாற்றப்பட்ட பிறகு, இயேசுகிறிஸ்து நம்முடைய “நற்கிரியைகளின்படி” நம்மை ஏற்றுக்கொண்டிருந்தால், நமது வேலைகள் நம்மை தகர்த்துவிடும். சில பாவம் உள்ளே இருக்க, சில சுயநலம், சோம்பேறிதனம், நீதியில் குறைவுப்படுதல் ஏதாவது இல்லாமல் நம்மால் ஜெபிக்க கூட முடியாது. நீ என்ன நினைப்பாய் என்று எனக்குத் தெரியாது, ஆனால் என்னால் பாவம்செய்யாமல் ஜெபிக்க முடியாது. பாவம்செய்யாமல் என்னால் உனக்கு பிரசங்கிக்க முடியாது. பாவமில்லாமல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. என்னுடைய மனந்திரும்புதல் மறுபடியுமாக மனஸ்தாப்பட வேண்டிய தேவை இருக்கிறது, மற்றும் என்னுடைய கண்ணீர்கள் எனது மீட்பர், இயேசுகிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் கழுவப்பட வேண்டும்!

நமது சிறந்த உறுதி, நமது சிறந்த கடமைகள், நமது சிறந்த மதம், நமது சிறந்த தீர்மானங்கள், அனைத்தும் அநேக பாவங்களை உடையதாக இருக்கிறது. நமது மத கடமைகள் பாவங்கள் நிறைந்தது. உனது இருதயத்தில் சமாதானத்தை பெற்றுக்கொள்ளுவதற்கு முன்பாக உனது மூலதார பாவத்தினால் மற்றும் உனது வெளிப்படையான பாவங்களால் நீ வியாதிப்பட்டது மட்டுமல்ல், ஆனால் உனது சொந்த நீதியினால், கடமைகளினால் மற்றும் மத காரியங்களினால் நீ வியாதிப்பட்டிருக்க வேண்டும். உன்னுடைய சுய நீதியிலிருந்து நீ வெளியே கொண்டுவரப்படுவதற்கு முன்பாக ஒரு ஆழமான உணர்த்துதல் இருந்திருக்க வேண்டியது அவசியம். இதை நீ ஒருபோதும் உணர்ந்திராவிட்டால் உனது சொந்தமாக உனக்கு ஒரு நீதியும் இல்லை, நீ இயேசுகிறிஸ்துவினால் இரட்சிக்கப்பட முடியாது. நீ இன்னும் மாற்றப்படவில்லை.

யாராவது ஒருவர் சொல்லலாம், “நல்லது, நான் இதையெல்லாம் விசுவாசிக்கிறேன்.” ஆனால் “விசுவாசிப்பதற்கும்” மற்றும் “உணர்வதற்கும்” இடையில் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. நீ கிறிஸ்து இல்லாதிருந்ததை எப்போதாவது உணர்ந்து இருக்கிறாயா? உன்னிடத்தில் சொந்தமாக எந்த நன்மையையும் இல்லை அதனால் நீ கிறிஸ்து தேவை என்பதை எப்போதாவது உணர்ந்து இருக்கிறாயா? மற்றும் இப்பொழுது உன்னால், “கர்த்தாவே, என்னால் செய்ய முடிந்த சிறந்த மத வேலைகளுக்காக நீர் என்னை குற்றம் கூறமுடியும்.” இப்படியாக உன்னை நீயே வெளியே கொண்டுவராவிட்டால், தேவனோடு உனக்கு மெய்யான சமாதானம் இருக்க முடியாது.

IV. நான்காவதாக, தேவனோடு நீ சமாதானத்தை பெற்றுக்கொள்ளுவதற்கு முன்பாக, இன்னும் ஒன்று குறிப்பிட்ட பாவம் உன்னை மிகவும் அதிகமாக தொந்தரவு படுத்தும். மற்றும் நான் இன்னும் அதற்கு பயப்படுகிறேன் உங்களில் சிலர் இதை நினைக்கலாம். இதுவே உலகத்தில் மிகவும் குற்றப்படுத்தும் பாவமாகும், இருந்தாலும் இதை ஒரு பாவம் என்று உலகம் நினைக்காது. நீ கேட்கிறாய், “அந்த பாவம் என்ன?” அந்த பாவத்தை உங்களில் அநேகர் நினைப்பதில்லை நீ குற்றவாளியாக இருக்கிறாய் என்று – அதுதான் அவிசுவாசம் என்ற பாவமாகும்.

நீ சமாதானத்தை பெற்றுக்கொள்ளுவதற்கு முன்பாக, உனது இருதயத்தில் அவிசுவாசத்தினால் உபாதிக்க பட்டுயிருக்க வேண்டும், அதாவது நீ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் மெய்யாகவே விசுவாசிக்கவில்லை.

நான் உன்னுடைய சொந்த இருதயத்தை கேட்கிறேன். பிசாசின்மீதே அல்லாமல் உனது விசுவாசம் இயேசு கிறிஸ்துவின் மேல் இனிமேலும் இல்லை என்று நான் பயப்படுகிறேன். உன்னைவிட அதிகமாக பிசாசு வேதத்தை விசுவாசிக்கிறது என்று நான் நினைக்கிறேன். அவன் இயேசுகிறிஸ்துவின் தெய்வீகத்தை விசுவாசிக்கிறான். அவன் விசுவாசிக்கிறான் மற்றும் நடுங்குகிறான். கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளும் உங்களைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக அவன் நடுங்குகிறான்.

நீ வேதத்தை விசுவாசிக்கும் காரணத்தால், அல்லது நீ ஆலயத்திற்குப் போகும் காரணத்தால் நீ விசுவாசிக்கிறாய் என்று நினைகிறாய். கிறிஸ்துவின் மீது உண்மையான நம்பிக்கை இல்லாமல் இவை எல்லாவற்றையும் நீ செய்ய முடியும். கிறிஸ்துவைப் போன்ற ஒருவர் இருந்தார் என்று வெறுமையாக விசுவாசிப்பது உனக்கு எந்த நன்மையும் செய்யாது, சீஷரை போல அல்லது மகா அலெக்சாண்டரைபோல ஒரு மனிதர் இருந்தார் என்று விசுவாசிப்பதில் எந்தக் காரியமும் இல்லை. வேதாகமம் தேவனுடைய வார்த்தை. நாங்கள் அதற்காக நன்றி செலுத்துகிறோம். ஆனால் நீ அதை நம்பலாம், மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இன்னும் நீ விசுவாசிக்காமல் இருக்கலாம்.

எவ்வளவு காலமாக நீ இயேசுகிறிஸ்துவில் விசுவாசமாய் இருக்கிறாய் என்று நான் கேட்டால், உங்களில் அநேகர் எப்பொழுதுமே அவரில் நீங்கள் விசுவாசிப்பதாக சொல்லலாம். நீ இயேசுகிறிஸ்துவை இன்னும் ஒருபோதும் விசுவாசிக்கவில்லை என்பதற்கு இதைவிட நீ எனக்கு ஒரு பெரிய நிருபணத்தை கொடுக்க முடியாது. கிறிஸ்துவை மெய்யாக நம்பினவர்களுக்கு அவர்கள் அவரை நம்பாத ஒரு காலம் இருக்கும்.

நான் இதை பற்றி அதிகமாக பேச வேண்டியது அவசியம், ஏனென்றால் இது ஒரு அதிகமாக ஏமாற்றக்கூடிய மாயை ஆகும். இதன் மூலமாக அநேகர் தொலைந்து போனார்கள் – தாங்கள் ஏற்கனவே விசுவாசித்தாக நினைத்துக் கொண்டு. ஒரு மனிதனால் இது சொல்லப்பட்டது அதாவது அவர் தன்னுடைய எல்லா பாவங்களையும் பத்துக் கட்டளைகளுக்குக் கீழாக பட்டியலிட்டார், அதன்பிறகு ஒரு போதகரிடம் வந்தார் மற்றும் அவரால் சமாதானத்தை ஏன் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று கேட்டார். அந்த ஊழியர் அந்தப் பட்டியலைப் பார்த்தார் மற்றும் சொன்னார், “வெளியே! உன்னுடைய பட்டியலில் அவிசுவாசம் என்னும் பாவத்தின் ஒரு வார்த்தையை நான் பார்க்க முடியவில்லை.” இது தேவனுடைய ஆவியானவரின் வேலையாகும் உன்னுடைய அவிசுவாசமாகிய பாவத்தை குறித்து உன்னை உணர்த்துவது – அதாவது உனக்கு நம்பிக்கை இல்லை. பரிசுத்த ஆவியை பற்றி இயேசு கிறிஸ்து சொன்னார்:

“பாவத்தைக்குறித்தும்... உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னை விசுவாசியாத படியினாலே பாவத்தைக்குறித்தும்” (யோவான் 16:8-9).

இப்பொழுது, என்னுடைய அன்பான நண்பரே, உனக்கு இயேசுவின் மீது உண்மையான விசுவாசம் இல்லை என்று எப்போதாவது தேவன் காட்டியது உண்டா? உன்னுடைய அவிசுவாசமான இருதய கடினத்திற்காக நீ எப்போதாவது துக்கித்து வருத்தப்பட்டது உண்டா? எப்போதாவது நீ இப்படியாக ஜெபித்தது உண்டா, “கர்த்தாவே, கிறிஸ்துவில் விசுவாசமாய் இருக்க எனக்கு உதவி செய்யும்?” தேவன் உன்னை கிறிஸ்துவிடம் வர இயலாமைக்காக உணர்த்தியது உண்டா, மற்றும் கிறிஸ்துவில் விசுவாசம் கொள்ள உன்னை அழ செய்தது உண்டா? இல்லையென்றால், உன்னுடைய இருதயத்தில் சமாதானத்தை நீ பெற்றுக்கொள்ள முடியாது. கர்த்தர் தாமே உன்னை உயிர்ப்பிப்பாராக, இயேசுவில் விசுவாசம் வைத்து உண்மையான சமாதானத்தை தருவாராக, நீ மரிப்பதற்கு முன்பாக மற்றும் அதற்கு மேல் தருணம் இல்லை.

V. ஐந்தாவதாக, தேவனோடு நீ சமாதானத்தை பெற்றுக்கொள்ளுவதற்கு முன்பாக, நீ முழுவதுமாக கிறிஸ்துவின் நீதியில் விசுவாசம் வைக்க வேண்டியது அவசியமாகும்.

நீ உன்னுடைய உண்மையான மற்றும் மூலதாரமான பாவத்தினால் உணர்த்தப்படுவது மட்டுமல்ல, உன்னுடைய சொந்த நீதியின் பாவங்கள், மற்றும் அவிசுவாசத்தின் பாவத்தாலும் உணர்த்தப்பட வேண்டியது அவசியமாகும், ஆனால் நீ கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பரிபூரணமான நீதியைப் பெற்றுக்கொள்ள விசுவாசம் கொள்ள வேண்டியது அவசியமாகும். நீ கிறிஸ்துவின் நீதியை தரித்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு உனக்குச் சமாதானம் கிடைக்கும். இயேசு சொன்னார்:

“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28).

இந்த வசனம் வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிற அனைவரையும் உற்சாகப்படுத்துகிறது, ஆனால் மற்ற ஒருவருக்கும் இல்லை. இருந்தாலும் இயேசு கிறிஸ்துவை நம்பி அவரிடம் வருபவருக்கு மட்டுமே இளைப்பாறுதலின் வாக்குத்தத்தம் கொடுக்கப்படுகிறது. தேவனோடு சமாதானத்தை எப்பொழுதும் பெற்றுக்கொள்வதற்கு முன்பாக நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தின் மூலமாக நீ நீதிமான் ஆக்கப்படவேண்டியது அவசியமாகும். நீ கிறிஸ்துவையே உடையவராக இருக்க வேண்டும், அதனால் அவருடைய நீதி உன்னுடைய நீதியாக இருக்கும்.

என்னுடைய அன்பான நண்பர்களே, நீங்கள் எப்போதாவது கிறிஸ்துவை கல்யாணம் செய்து கொண்டீர்களா? இயேசு கிறிஸ்து எப்போதாவது தம்மை உனக்குக் கொடுத்தாரா? நீ ஜீவனுள்ள விசுவாசத்தோடு எப்போதாவது கிறிஸ்துவிடம் வந்தாயா? கிறிஸ்துவாகிய தேவன் உன்னிடம் வந்து சமாதானம் பேசும்படி நான் ஜெபிக்கிறேன். நீ மறுபடியும் பிறந்து இந்தக் காரியங்களை அனுபவிக்க வேண்டியது அவசியமாகும்.

நான் இப்பொழுது வேறு உலகத்தின், உள்ளான கிறிஸ்துவத்தின், கணப்படாத உண்மைகளை ஒருபாவியின் இருதயத்தில் தேவனுடைய வேலையைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். உனக்கு மிக முக்கியமான காரியங்களைப்பற்றி நான் இப்பொழுது உன்னிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். இதைப்பற்றி நீ மிகவும் கரிசனையாக இருக்க வேண்டும். உனது ஆத்துமா இதில் அக்கரை கொண்டுள்ளது. உனது நித்திய இரட்சிப்பு இதை சார்ந்து உள்ளது.

கிறிஸ்து இல்லாமல் நீ சமாதானத்தை உணரலாம். பிசாசு உன்னை தூங்க செய்கிறான் மற்றும் உனக்குப் பொய்யான பாதுகாப்பைக் கொடுத்திருக்கிறான். உன்னை நரகத்துக்கு அனுப்பும் வரைக்கும் உன்னை தூங்கவைக்க முயற்சி செய்வான். அங்கே நீ விழிப்படைவாய், ஆனால் அது ஒரு பயங்கரமான விழிப்பாக இருக்கும் நீ அக்கினி சுவாலையில் இருப்பாய் அங்கே இரட்சிக்கப்படுவது மிகவும் காலதாமதமாகி இருக்கும். நரகத்திலே உன் நாவை குளிரப்பண்ணும்படி ஒரு துளி தண்ணீருக்காக நித்தியமெல்லாம் கூப்பிடுவாய், மற்றும் உனக்குத் தண்ணீர் கிடைக்காது.

கிறிஸ்துவில் இளைப்பாறுதல் கிடைக்கும் வரைக்கும் உன்னுடைய ஆத்துமாவுக்கு இளைபாறுதல் இல்லாமல் போகலாம்! இழக்கப்பட்ட பாவியை இரட்சகரிடம் கொண்டு வருவது என்னுடைய நோக்கமாகும். ஓ அந்தத் தேவன் உன்னை கிறிஸ்துவிடம் கொண்டுவருவாராக. பாவம் நிறைந்திருப்பதை பரிசுத்த ஆவியானவர் உணர்த்துவாராக, மற்றும் உனது பொல்லாத வழிகளிலிருந்து இயேசு கிறிஸ்துவிடம் உன்னை திருப்புவாராக. ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர் திரு. நோவா சாங்.
போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“O Lord, How Vile Am I” (by John Newton, 1725-1807).


முக்கிய குறிப்புகள்

ஜார்ஜ் ஒயிட் பீல்டு அவர்களின் “கிருபையின் முறைமை”, நவீன ஆங்கிலத்தில் சுருக்கப்பட்டது
மற்றும் பயன்படுத்தப்பட்டது

“THE METHOD OF GRACE” BY GEORGE WHITEFIELD,
CONDENSED AND ADAPTED TO MODERN ENGLISH

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் எழுதின ஒரு போதனை மற்றும் திரு. ஜான் சாமுவேல் கேஹன் அவர்களால் பிரசங்கிக்கப்பட்டது.
A sermon written by Dr. R. L. Hymers, Jr.
and preached by Mr. John Samuel Cagan

“சமாதானமில்லாதிருந்தும் சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்” (எரேமியா 6:14).

(எரேமியா 6 :13)

I.    முதலாவதாக, தேவனோடு உங்களுக்கு மெய்யான சமாதானம் பெற்றுக்கொள்ள வேண்டியதற்கு முன்பாக, நீங்கள் தேவனுடைய பிரமாணத்துக்கு விரோதமாக செய்த, மெய்யான பாவங்களை பார்க்க, உணர, அதற்காக அழ மற்றும் துக்கிக்க வேண்டியது அவசியமாகும், எசேக்கியல் 18:4; கலாத்தியர் 3:10.

II.   இரண்டாவதாக, தேவனோடு உங்களுக்கு மெய்யான சமாதானம் பெற்றுக்கொள்ள வேண்டியதற்கு முன்பாக, உணர்த்துதல் ஆழமாக போகவேண்டியது அவசியம்; உன்னுடைய சொந்தமான பாவசுபாவத்துக்கு, உனது ஆத்துமாவின் முழுமையான சீரழிவு உணர்த்தப்பட வேண்டியது அவசியமாகும், எபேசியர் 2:3; ரோமர் 7:24.

III.  மூன்றாவதாக, தேவனோடு மெய்யான சமாதானம் பெற்றுக்கொள்ள வேண்டியதற்கு முன்பாக, நீ உனது வாழ்க்கையின் பாவங்களால் உபாதிக்கப்படுவது மட்டுமல்ல, மற்றும் உன்னுடைய சுபாவத்தின் பாவங்களாலும், ஆனால் அதேபோல உன்னுடைய மிகசிறந்த தீர்மானங்களால், ஒப்புவித்தல்களால், போன்ற “கிறிஸ்தவ வாழ்க்கை” என்று பெயருக்காக அழைக்கப்படும் பாவங்களாலும் உபாதிக்கப்படுவாய், ரோமர் 8:8.

IV. நான்காவதாக, தேவனோடு நீ சமாதானத்தை பெற்றுக்கொள்ளுவதற்கு முன்பாக, இன்னும் ஒன்று குறிப்பிட்ட பாவம் உன்னை மிகவும் அதிகமாக தொந்தரவு படுத்தும் அதுதான் இயேசுவை விசுவாசிக்காத அவிசுவாசம் என்ற பாவமாகும், யோவான் 16:8,9.

V.  ஐந்தாவதாக, தேவனோடு நீ சமாதானத்தை பெற்றுக்கொள்ளுவதற்கு முன்பாக, நீ முழுவதுமாக கிறிஸ்துவின் நீதியில் விசுவாசம் வைக்க வேண்டியது அவசியமாகும், மத்தேயு 11:28.