இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
நரகத்திலே கிறிஸ்துமஸ் – 2016CHRISTMAS IN HELL – 2016 டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் டிசம்பர் 18, 2016 அன்று கர்த்தருடைய நாள் ஞாயிறு காலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி |
இந்தப் போதனையை நான் பிரசங்கம் செய்ய வேண்டியது அவசியமா என்று என்னையே நான் கேட்டுப் பார்த்தேன், “நரகத்திலே கிறிஸ்துமஸ்” என்ற போதனையை. சாத்தான் சொன்னான், “ஓ, வேண்டாம்! அது கிறிஸ்துமஸ்க்கு கொடுக்கக்கூடிய ஒரு நல்ல செய்தி அல்ல. அது மிகவும் குரூரமானது”. அவன் சொன்ன உடனே அதை நான் அறிந்திருந்தேன் நாம் அனைவரும் சிறைபடுத்தப்பட்டிருக்கும் பெலவீனமான சுவிசேஷத்தைக் கொடுக்க நான் சோதிக்கப்படுகிறேன் என்று எனக்குத் தெரியும். நாம் அந்த பெலவீனத்திற்கு ஏற்கனவே சாய்ந்து விட்டிருக்கிறோம் இது நமக்கு பிரசங்கிக்கப்பட வேண்டும். வேரோடு வெளியேற வேண்டும், அல்லது தேவன் விரும்புகிற வண்ணமாக போராளிகளாக நாம் இருக்க முடியாது. நமது நாட்களிலுள்ள பெலிஸ்திய சுவிசேஷகத்தை வெற்றி கொள்ள முடியாத மெலிந்துபோன பெலவீனம் ஆனவர்களாகக் காணப்படுவோம். கிறிஸ்துமஸ் நேரத்திலோ அல்லது மற்ற எந்த நேரத்திலோ நரகத்தைப்பற்றிப் பிரசங்கிக்காதபடி சாத்தான் நம்மைப் பயமுறுத்த நான் விடமாட்டேன். வருடம் முழுவதும் நரகம் இருக்கிறது. கிறிஸ்துமஸ் நேரத்திலே அதைப்பற்றி ஏன் பிரசங்கிக்கக்கூடாது? அதனால், நான் உங்களுக்கு ஒரு பழைய போதனையைக் கொடுக்கிறேன், “நரகத்திலே கிறிஸ்துமஸ்”. கடந்த முப்பத்திரண்டு வருடங்களில் அநேக முறைகள் இந்தப் போதனையைப் பிரசங்கித்திருக்கிறேன். இன்றுள்ள அநேக பெண்தன்மை கொண்ட சிறு பிரசங்கிகள் இதைப் பிரசங்கிக்க வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் நரகத்திலே கிறிஸ்துமஸ் பற்றிப் பிரசங்கிக்கவில்லையானால், கிறிஸ்துமஸின் அர்த்தம் என்ன? இழக்கப்பட்ட பாவிகளுக்கு நரக அக்கினி காத்திருக்கிறதை அறிவியாவிட்டால் கிறிஸ்துமஸ்க்கு அர்த்தமே இல்லை. கிறிஸ்துமஸ் மரம் மற்றும் அணைந்து எரியும் விளக்கு இவைகளை நமக்குக் கொடுக்க குழந்தை இயேசுவானவர் பெத்திலகேமிலே பிறக்கவில்லை. அவர் பெத்திலகேமிலே பிறந்தது சிலுவையிலே மரிக்க, பாவிகளை நரக அக்கினியிலிருந்து நித்தியத்திற்கும் இரட்சிப்படையும்படியாக மரிக்க. அவருடைய பரிசுத்த இரத்தத்தினாலே பாவிகள் தங்களுடைய பாவங்களிலிருந்து கழுவி சுத்திகரிக்கப்படும்படியாக! கிறிஸ்துமஸ்லிருந்து நரகத்தை எடுத்துவிட்டால் அது ஒன்றுமில்லை ஒரு புறஜாதி விடுமுறையைப் போலாகிவிடும். அதனால் இந்தக் காலையிலே நான் என்னுடைய பழைய போதனையைப் பிரசங்கிக்கிறேன், “நரகத்திலே கிறிஸ்துமஸ்”. நான் சீன சபையிலே பிரசங்கித்த கடைசி போதனை இதுவாகும், அவர்கள் டாக்டர் தீமோத்தேயு லின் அவர்களின் பெலவீனமான, சுவாரசியமற்ற, நழுவக்கூடிய நீண்ட உபதேசத்திலிருந்து திரும்ப ஆரம்பிப்பதற்கு முன்பாக பிரசங்கிக்கப்பட்டது ஞாயிறு காலையில் மட்டும் இன்று விழாக்கோலம். இந்தப் போதனையானது டாக்டர் லின் பொறுப்பில் விடப்பட்ட இரண்டு இளம் பிரசங்கிகளால் தள்ளிவிடப்பட்டது. 27 இளம்வாலிபர்கள் தங்கள் கண்களில் கண்ணீரோடு முன்னுக்கு வந்தபோதிலும் இந்தப் போதனையை நிந்தித்தார்கள். நம்பிக்கையாக மாறுதலடைந்த அநேகர்களோடு நான் இரண்டு மணி நேரம் ஆலோசனை கொடுத்தபோதிலும், அவர்கள் இந்தப் போதனையை நிந்தித்தார்கள். அந்த பிரசங்கிகள் அப்பொழுது தவறானவர்கள் இப்பொழுதும் தவறானவர்களே, அந்த சபை டாக்டர் லின் உருவாக்கின சபையல்ல. ஏனென்றால் அங்கே பிரசங்கித்த மனிதர்கள் கோழைகள், பயப்படும் சிறியவர்கள், ஆண்மையற்ற மனிதர்கள், வீரமற்றவர்கள், தங்கள் எலும்புகளில் அனலற்றவர்கள், தேவனிடத்திலிருந்து மெய்யான செய்தி இல்லாதவர்கள். கட்டணங்களைக் செலுத்தும் கிழவிகளைப் பிரியப்படுத்த அவர்கள் பிரசங்கிக்கிறார்கள். நரகத்திலிருந்து இளம் மக்களை நித்தியத்திற்கென்று இரட்சிக்கும்படியாக அவர்கள் பிரசங்கிப்பதில்லை. “நரகத்திலே கிறிஸ்துமஸ்” பற்றி நான் நினைப்பது இதுவரை நான் பிரசங்கித்த போதனைகளில் மிகச் சிறந்தவைகளில் ஒன்று என்பதாகும். அதனால் நான் நேராக இதை உங்களுக்குக் கொடுக்கப் போகிறேன்! எந்தப் பயமில்லாமல்! என்னுடைய பாடம் லூக்கா 16:25. இது ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமத்தில் 1099ஆம் பக்கத்தில் உள்ளது. எழுந்து நின்று லூக்கா 16:25ன் முதல் இரண்டு வார்த்தைகளைப் பாருங்கள். “மகனே, … நினைத்துக்கொள்” (லூக்கா 16:25). நீங்கள் அமரலாம். அந்த ஐசுவரியவான் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான். அவனுடைய ஆத்துமா உடனடியாக நரக அக்கினி ஜீவாலைக்குச் சென்றது, “பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து” (லூக்கா 16:23). அந்த ஐசுவரியவான் “தூரத்திலே” பரலோகத்திலிருக்கும் ஆபிரகாமைப் பார்த்தான். அவன் சிறு துளி தண்ணீருக்காக கெஞ்சினான் “நாவைக் [அவனுடைய] குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்: [அவன்] [இந்த] அக்கினிஜுவாலையில்; வேதனைப்படுகிறேனே” (லூக்கா 16:24). ஆபிரகாம் அவனிடம் சொன்னான், “மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்” (லூக்கா 16:25). கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதைச் சொன்னார். இழக்கப்பட்ட பாவிகள் நரகத்தைக் குறித்து எச்சரிப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதால் இதைக்கொடுத்தார். ஸ்பர்ஜன் எல்லா நேரத்திலும் ஒரு மிகப்பெரிய பாப்டிஸ்டு போதகராகும். ஸ்பர்ஜன் சொன்னார் மனிதன் மரணத்திற்குப் பிறகு பரசங்கிக்கப்படும் நரகத்தைப்பற்றிப் பயப்படுகிறான். வில்லியம் பூத் அவர்கள் இரட்சண்ய சேனையின் ஸ்தாபகர் ஆவார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெரியப் பிரசங்கியர்களான இவர்கள் இருவரும் இருபதாம் நூற்றாண்டில் நரகத்தைப்பற்றிய பிரசங்கம் இருக்காது என்று முன்னதாகச் சொன்னார்கள். அவைகள் சரியானவை – இன்று அது இன்னும் மோசமாக இருக்கிறது! பூத் அவர்களின் கருத்து இருபதாம் நூற்றாண்டைப்பற்றி என்னவென்று அவரிடம் கேட்கப்பட்டது. அப்பொழுது அவர் சொன்னார், “நரகமில்லாத பரலோகம்” (The War Cry, January 1901, p. 7). பூத் முன்னதாகச் சொன்னது உண்மையாகி இருக்கிறது. இன்று நரகத்தைப்பற்றிய பிரசங்கம் கிட்டதட்ட கேட்க முடியாததாக இருக்கிறது. ஆனால் அது அப்படி இருக்கக்கூடாது. டாக்டர் ஜே. ஐ பேக்கர் ஒரு புகழ்பெற்ற வேதவல்லுனர். அவர் சொன்னார், கிறிஸ்தவ சுவிசேஷகர்கள் நரகத்தைப்பற்றி [பேச] வேண்டியது அவசியம்: அது அவர்களுடைய வேலையின் ஒரு பாகமாகும்… இயேசு மற்றும் அப்போஸ்தலர்களைப் பொறுத்த வரையிலும், சரீர மரணத்திற்குப் பிறகு தனிபட்ட வாழ்க்கை தொடர்கிறது, கிறிஸ்து இல்லாதவர்களுடைய வாழ்க்கை வரப்போகும் உலகத்தில் எவ்வளவளவுக்கு மோசமாக பயங்கரமாக இருக்க முடியுமோ அவ்வளவிற்கு மோசமாக இருக்கப் போகிறது, ஒவ்வொருவரும் அப்படியாகச் சொல்லப்பட வேண்டிய அவசியமிருக்கிறது (J. I. Packer, Ph.D., foreword to Whatever Happened to Hell? by John Blanchard, D.D., Evangelical Press, 2005 edition, p. 9). நான் ஒரு வயதானவர். நான் நீண்ட காலம் இங்கே இருக்கமாட்டேன். எனது மரணத்திற்குப் பிறகு பிரசங்கிக்கிறவர்கள் நரகத்தைப்பற்றிப் பிரசங்கிக்கப் பயப்படலாம். இனிமையான வார்த்தைகளை நீங்கள் அவர்களுக்குப் போதிப்பதன் மூலமாகப் பாவிகள் இரட்சிக்கப்பட முடியும் என்று அவர்கள் விசுவாசிக்கலாம். இந்தப் பழைய பிரசங்கியாகிய நான் இன்னும் இங்கே இருக்கும்போதே நீங்கள் நன்றாகக் கவனிக்கிறீர்கள்! எனக்கு இருக்கும் ஒரே குணம் என்னவென்றால் அதாவது டாக்டர் பேக்கர் தீர்மானித்தது “கிறிஸ்தவ சுவிசேஷகர்கள்” மட்டும் நரகத்தைப்பற்றிப் பிரசங்கிக்கிறார்கள். ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார் போதகர்களும்கூட இதைச் செய்ய வேண்டியது அவசியம், “சுவிசேஷகனுடைய வேலையைச் செய்” (II தீமோத்தேயு 4:5). போதகர்களும்கூட “நரகத்தைப்பற்றிப் [பேசவேண்டியது] அவசியம், அது அவர்களுடைய வேலையின் ஒருபகுதி ஆகும்” (பேக்கர், ஐபிட்). என்னைப் பின்பற்றும் இளம் வாலிபர்கள் நான் ஐம்பது வருடங்களுக்கு மேலாக செய்ததை நான் மரித்த பிறகும் பாவம், நரகம் மற்றும் நியாயத்தீர்ப்பைப் பற்றிப் பிரசங்கிப்பார்கள் என்று நான் நம்புகிறேன் மற்றும் ஜெபிக்கிறேன்! இயேசு நம்முடைய மாதிரியாக இருக்கிறார், “நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்” (I பேதுரு 2:21). இயேசு அடிக்கடி நரகத்தைப்பற்றி பிரசங்கித்தார், அவரே நம்முடைய உதாரணம். கிறிஸ்துவுக்கு உண்மையாக இருக்கும்படியாக, ஒவ்வொரு போதகரும் சிலநேரங்களில் நரகத்தைப்பற்றிப் பிரசங்கிக்க வேண்டும், தெளிவாக மற்றும் குறிப்பாக, கிறிஸ்து பிரசங்கித்ததுபோல “ஐசுவரியவான் மற்றும் லாசரு” பற்றி பிரசங்கித்தது போல. ஐசுவரியவான் மரித்து நேராக அக்கினி சுவாலையில் வேதனைப்படுகிற நரகத்திற்குப் போனான் என்று கிறிஸ்து சொன்னார். அந்த மனிதன் ஆபிரகாமிடம் சிறு துளி தண்ணீர் கேட்டான். ஆபிரகாம் சொன்னார், ‘‘மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்” (லூக்கா 16:25). இந்தப் பாடத்திலிருந்து இரண்டு வார்த்தைகளை மட்டும் நான் எடுத்துக் கொள்ளுகிறேன், “மகனே, … நினைத்துக்கொள்” (லூக்கா 16:25). இது கிறிஸ்துமஸ் நேரமாகும். நமது சபை அழகாக அலங்கரிக்கப் பட்டிருக்கிறது. நாம் மிகப்பழைய கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தோம். இன்று இரவு அற்புதமான கிறிஸ்துமஸ் விருந்தை அனுபவிக்கப் போகிறோம். நாம் கிறிஸ்துமஸ் விருந்தை இந்த சபையிலே, அடுத்த சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு, அனுபவிக்கப் போகிறோம். ஆனால் கிறிஸ்துவின் பிறப்பைப்பற்றி அழகான அர்த்தப்பூர்வமான கொண்டாட்டத்தின் மத்தியில், நாம் நரகத்தைப்பற்றி மறந்துவிடாமல் இருப்போமாக. பாவத்தின் பலன் நரகமாகும். நீ அந்தப் பயங்கரமான அக்கினி சுவாலைக்குப் போகமல், சிலுவையிலே மரித்து உன்னை இரட்சிக்க இயேசு பிறந்தார். அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார், “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” (I தீமோத்தேயு1:15). தேவதூதன் யோசேப்பிடம் சொன்னான், “அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (மத்தேயு 1:21). பிறகு கிறிஸ்துமஸ் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன என்பது எல்லாவிதத்திலும் சரியாக இருக்கிறது அல்லவா? இயேசு பரலோகத்திலிருந்து வந்த மெய்யான கிறிஸ்துமஸ் செய்தி இதுவல்லவா? உன்னைப் போன்ற பாவிகள் நரகத்திற்கு போகமல் இருக்க, பாவத்திற்குரிய கிரயத்தைச் செலுத்த, சிலுவையிலே மரித்து உன்னை இரட்சிக்க இயேசு வந்தார் இல்லையா? ஆனால் நீ கிறிஸ்துமஸ்க்கு முன்னதாக மரித்தால் என்ன? இந்தக் காலையிலே இங்கு இருப்பவர்களில் ஒருவர் இன்னும் சில நாட்களில் மரிக்கலாம். அது உனக்கு நடக்குமானால், நீ உன்னுடைய முதல் கிறிஸ்துமஸ்ஸை டிசம்பர் 25 அன்று நரகத்தில் கழிப்பாய். அந்த மனிதனுக்கு சொல்லப்பட்டதுபோல, உனக்கும் அப்படியே சொல்லப்படும், “மகனே, … நினைத்துக்கொள்” (லூக்கா 16:25). நீ உன்னுடைய பாவத்திலே தொடர்ந்து போனால், ஒருவேளை இந்தக் கிறிஸ்துமஸ் இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஒரு நாளிலே, நீ நினைப்பதற்கு முன்னதாக, நீ உன்னுடைய முதல் கிறிஸ்துமஸ்ஸை வேதனையுள்ள அக்கினியில் கழிப்பாய். நீ உன்னுடைய முதல் கிறிஸ்துமஸ்ஸை நரகத்தில் கழிக்கும்போது என்ன நினைப்பாய்? I. முதலாவது, நீ புறக்கணித்த போதனையை நினைப்பாய். நீ உனது மனதை எப்படித் திருப்பக் கற்றுக்கொண்டாய் என்பதை நினைப்பாய். போதனைகளைவிட்டு நீ எப்படி திருப்பக் கற்றுக்கொண்டாய் என்பதை நினைப்பாய். அப்படிச் செய்வதைப் பழக்கமாகக் கொண்டதை நினைப்பாய். முதலாவது அந்தப் போதனைகள் உன்னைத் தொந்தரவு செய்தன. அவைகள் நித்திய காரியங்களை நினைக்கச் செய்தன. ஆனால், காலம் கடந்தபொழுது, உன்னுடைய இருதயத்திலிருந்து போதனைகளை “எடுத்துப் போட” பிசாசுக்கு எளிதானது (மத்தேயு 13: 19 ஐ பார்க்கவும்). இயேசு சொன்னார், “அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்” (லூக்கா 8:12). முதலாவதாகச் சாத்தான் அதைச் செய்வதற்குக் கடினமாக இருந்தது. ஆனால் மாதங்கள் கடந்தபொழுது அது பழக்கமாகி, இனிமேல் கவலைப்பட ஒன்றுமில்லை என்ற சாத்தானின் தந்திரத்தினால் போதனை நேரத்தில் தூங்க ஆரம்பித்து அது மரணநித்திரையாக ஒவ்வொரு போதனையின் சமயத்திலும் தூங்கினாய். இறுதியாக உன்னுடைய மனசாட்சி சூடுபட்டதாக, உன்னுடைய இறுதயம் அவ்வளவாக கெட்டுப்போனது, கிறிஸ்து சொன்னதுபோல, “என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால்” (யோவான் 8:43). நீங்கள் கேட்பதில் அவ்வளவாக மந்தமாகி விடுவீர்கள், தேவனுடைய வார்த்தைக்குச் செவிடாக, இந்த வார்த்தை உனக்குச் சொல்லப்படும்படியாக, “தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்” (ரோமர் 1:28). “மகனே, … நினைத்துக்கொள்” (லூக்கா 16:25). மகளே, நினைத்துக்கொள்! நரகத்திலே நீ அநேக போதனைகளை நினைப்பாய். நீ உன்னுடைய முதல் கிறிஸ்துமஸ்ஸை வேதனையுள்ள அக்கினியில் கழிக்கும்போது இந்தப் போதனையை நினைப்பாய் என்பதில் சந்தேகமில்லை! நரகத்திலே நீ தள்ளிவிட்ட அநேக போதனைகளை நினைப்பாய். இவ்வாறாக நீ அழுவாய், “ஓ தேவனே, அந்த வயதான பிரசங்கியாரை நான் ஏன் கவனிக்காமல் போனேன்? ஓ தேவனே, இப்பொழுது இது மிகவும் காலதாமதமாகிவிட்டதே! நித்தியா நித்திய காலமாக – இது மிகவும் காலதாமதமாகிவிட்டதே. நான் நரகத்தில் வெந்துகொண்டிருக்கிறேன். ஏன், ஐயோ ஏன், அந்த வயதான பிரசங்கியார் என்னை எச்சரித்தபொழுது நான் கவனிக்காமல் போனேன்?” II. இரண்டாவது, நீ புறக்கணித்த தேவனுடைய ஆவியை நினைப்பாய். நீ உன்னுடைய முதல் கிறிஸ்துமஸ்ஸை வேதனையுள்ள அக்கினியில் கழிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் உன்னை உணர்த்தின பாவங்களை மற்றும் நேரங்களை நினைப்பாய். இயேசு சொன்னார், “அவர் வந்து, பாவத்தைக்குறித்தும்… உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்” (யோவான் 16:8). நீ உன்னுடைய முதல் கிறிஸ்துமஸை நரகத்தில் கழிக்கும்போது, தேவனுடைய ஆவியானவர் உன்னுடைய இருதயத்தை இளக்கினதை நினைப்பாய். அவரது பரிசுத்த ஆவியானவர் உன்னைப் பயப்படுத்தினதை நினைப்பாய். உன் கண்களிலிருந்து எப்படிக் கண்ணீர் வந்தது என்பதை நினைப்பாய். அவருடைய உணர்த்துதலின் வேலையை நீ எப்படியாக எதிர்த்தாய், பரிசுத்த ஆவி உன்னைவிட்டு போகும்வரையிலும் கிறிஸ்துவை எப்படி எதிர்த்தாய் என்பதையும் நினைப்பாய், தேவன் உன்னைப்பற்றிச் சொன்னது, “[அவன்] விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு” (ஓசியா 4:17). டாக்டர் ஜான் ஆர். ரைஸ் இப்படியாக எழுதி இருக்கிறார், அப்பொழுது நியாயத்தீர்ப்பைச் சந்திப்பது எவ்வளவு துக்கமானது, “மகனே, … நினைத்துக்கொள்” (லூக்கா 16:25). உன்னுடைய முதல் கிறிஸ்துமஸ் நரகத்தில் செலவிடும்போது எப்படித் தேவனுடைய தண்டனையை நிராகரித்தாய் என்பதை நினைத்துப் பார்ப்பாய், நீ எப்படி “ஆவிபோகும் வரையிலும் தாமதித்தாய் விரயம் செய்தாய்” (Rice, ibid.). “மகனே, … நினைத்துக்கொள்” (லூக்கா 16:25). மகளே, நினைத்துக்கொள்! திரைசீலை இறக்கப்பட்டபிறகு, விளக்கு அணைக்கப்பட்டபிறகு, உன்னுடைய ஆத்துமா அக்கினியில் வேகும் – மகனே, நினைத்துக்கொள்! மகளே, நினைத்துக்கொள்! நீ புறக்கணித்த போதனையை நினைப்பாய். நீ புறக்கணித்த தேவனுடைய ஆவியை நினைப்பாய். III. மூன்றாவது, நீ அவமதித்த இரட்சகரை நினைப்பாய். இல்லை, நீ கிறிஸ்துவை மதிக்கிறாய் என்று என்னிடம் சொல்ல வேண்டாம்! அதைப்பற்றிப் பொய்சொல்ல வேண்டாம்! அவரிடம் உனக்கு மறியாதையில்லை! ஒன்றுமே இல்லை! நீ கிறிஸ்துவை அசட்டைபண்ணினாய் மற்றும் புறக்கணித்தாய் என்று வேதம் சொல்லுகிறது. வேதம் சொல்லுகிறது, “அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்” (ஏசாயா 53:3). நீ கிறிஸ்துவை மதித்திருந்தால் அவரைத் தேடுவாய். கிறிஸ்துவின் மீது உனக்கு மரியாதை இருந்தால் அவருடன் “உட்பிரவேசிக்கப் [உன் முழுபலத்தோடு] பிரயாசப்படுங்கள்” (லூக்கா 13:24). நீ என்ன பிரயாசப்பட்டாய்? லுத்தரைப் போல மணிக்கணக்காக ஜெபித்தாயா? பனியனைப் போலக் கடும் வேதனையின் ஊடாகப் போனாயா? ஒயிட்பீல்டு போல வாரக்கணக்காக உபவாசம் இருந்தாயா? வெஸ்லியைப் போலத் துரத்தப்பட்டாயா? ஸ்பர்ஜனைப் போல கிறிஸ்துவைக் காண பனிப்புயலில் பரிதபித்தாயா? நீ பிரயாசமே படவில்லை என்று நான் சொல்லுவேன்! ஒரு நாள், நீ நரகத்தில் இருக்கப்போகும் அந்த நாளில், நீ அவ்வளவாக சோம்பேறியாக இருந்ததை நீ கிறிஸ்துவைக் காண ஒருபோதும் பிரயாசப்படவில்லை என்பதை நினைப்பாய்! “மகனே, … நினைத்துக்கொள்” (லூக்கா 16:25). மகளே, நினைத்துக்கொள்! நீ அதை நரகத்தில் நினைப்பாய்! நீ இயேசுகிறிஸ்துவுக்காக குறைந்த அளவு மதிப்பு வைத்திருந்ததை அவரை ஊக்கமாகத் தேடாமல் இருந்ததை நீ நினைப்பாய். இயேசு சொன்னார், “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்” (எரேமியா 29:13). மகனே, நினைத்துக்கொள்! மகளே, நினைத்துக்கொள்! நீ இயேசுவை எப்படி அவமதித்தாய் என்று, நித்திய அக்கினியில் நினைப்பாய், அவருடைய இரட்சிப்பின் பரிசை எப்படி புறக்கணித்தாய். நான் இப்படிப் பிரசங்கிப்பதை நீ எப்படி வெறுத்தாய். இந்த அழகான வாலிபர்கள் உன் பாவங்களுக்காக மனந்திரும்பி கிறிஸ்துவிடம் வா என்று கட்டளையிடுவதற்குப் பதிலாக இனிமையான வேத வசனத்தை உன்னை அவர்கள் பக்கமாகக் கவர்ந்து இழுக்கும்படியாக கொடுத்தால் நீ எப்படியாக விரும்புவாய்! ஆமாம், எனக்குத் தெரியும், நான் மரித்தால் உங்களில் சிலருக்கு மகிழ்சியாக இருக்கும். ஆனால் நான் உங்களை எச்சரிக்க இங்கே இல்லாவிட்டாலும், நீங்கள் நரகத்திற்குப் போவீர்கள். டாக்டர் ஜான் ஆர். ரைஸ் சொல்வதை கவனியுங்கள், மரியாதை தெரியாமல் காத்திருந்தாய், நீங்கள் அழைப்பை ஏற்று முன்னுக்கு வந்தால், நரகத்தைப்பற்றி ஒரு வார்த்தையும் உங்களிடம் சொல்ல விரும்பமாட்டேன். நான் பேச விரும்புவது உங்கள் பாவங்களைப் பற்றியும், இயேசுவைப் பற்றியும் மட்டுமே. இயேசு ஒருவர் மட்டுமே உன்னுடைய பாவங்களை மன்னிக்க முடியும். இயேசு ஒருவர் மட்டுமே தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் உன்னுடைய பாவங்களைக் கழுவி நீக்க முடியும். இயேசுவிடம் வந்தடைந்து உன்னுடைய சகல பாவங்களிலிருந்தும் அவரால் இரட்சிக்கப்படு. நீ முன்னுக்கு வரும்பொழுது இயேசுவைப்பற்றி நினைக்காமல் இருப்பது எவ்வளவு கொடிய காரியம். என்னுடைய போதனையில் தேவனுடைய வல்லமையைப்பற்றிக் குறிப்பிட்டால், நீங்கள் வல்லமையைப்பற்றிப் பேசுகிறீர்கள். என்னுடைய போதனையில் தேர்தல்பற்றிக் குறிப்பிட்டால், நீங்கள் தேர்தலைப்பற்றிப் பேசுகிறீர்கள். என்னுடைய போதனையில் சாத்தானைப்பற்றிக் குறிப்பிட்டால், நீங்கள் சாத்தானைப்பற்றிப் பேசுகிறீர்கள். என்னுடைய போதனையில் பாவத்தின் மூலத்தைப்பற்றியும் அல்லது பயனளிக்கும் அழைப்பைப்பற்றியும் குறிப்பிட்டால், நீங்கள் அப்படிப்பட்டவைகளைப்பற்றிப் பேசுகிறீர்கள். என்னுடைய போதனையில் நரகத்தைப்பற்றிப் பேசினால், நீங்களும் அதைப்பற்றித்தான் பேசவேண்டும்! என்னுடைய போதனை எப்பொழுதும் இயேசுவைப்பற்றி இருந்தாலும், நீங்கள் இயேசு கிறிஸ்துவைப்பற்றிப் பேசுவதை எங்களால் கேட்க முடியவில்லை. நீங்கள் இயேசுவைப்பற்றி நினைப்பதை எங்களால் பெறமுடியவில்லை. நீ கிறிஸ்துவை அசட்டைபண்ணினாய் புறக்கணித்தாய் (ஏசாயா 53:3). இருந்தாலும் பாவத்திலிருந்து உன்னை இரட்சிக்க வேறு ஒருவராலும் முடியாது. ஜோசப் ஹார்ட் (1712-1768) என்பவர் சொன்னார், “உதவியற்ற பாவிகளுக்கு நன்மை செய்ய, இயேசுவையல்லாமல் ஒருவரும் இல்லை, இயேசுவையல்லாமல் ஒருவரும் இல்லை” (“Come, Ye Sinners”). கெத்சமெனே தோட்டத்தில் உன்னுடைய பாவங்கள் இயேசுவின்மேல் வைக்கப்பட்டன. அந்த தோட்டத்திலே உன்னுடைய பாவபாரத்தால் அவர் நசுக்கப்பட்டார், அவருடைய சரீரத்தில் இரத்தத்தின் பெருந்துளிகளாய் வேர்வையில் வெளிவந்தன. அவர்கள் அவரைக் கைது செய்து அவருடைய முகத்தில் அடித்தார்கள். அவருடைய தாடைமயிரைப் பிடுங்கினார்கள். பிலாத்து அவருடைய தோலும் சதையும்விட்டு விலாஎலும்பு வெளியில்வர முதுகில் சாட்டையால் அடிக்கச் செய்தான். அவர்கள் ஒரு சிலுவையில் அவருடைய கைகளையும் கால்களையும் ஆணிகளால் தைத்தார்கள். ஒரு போர் சேவகன் அவருடைய விலாவிலே ஈட்டியால் குத்தினான், “உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது” (யோவான் 19:34). இயேசு எல்லாவிதமான கொடுமை வலி மற்றும் வேதனைகளைக் கடந்து வந்து, உன்னுடைய பாவத்திற்கான தண்டனைக் கிரயத்தை செலுத்தினார், உனது பாவங்களைத் தமது பரிசுத்த இரத்தத்தினால் சுத்திகரித்தார்! வேதம் சொல்லுகிறது, “கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து” (I கொரிந்தியர் 15:3). ஓ, உன்னுடைய பாவங்களை நினைத்துப்பார்! ஓ, இயேசுவை நினைத்துப்பார், பாடுபட்டு, உன் பாவங்களிலிருந்து உன்னை இரட்சிக்கப் இரத்தம் சிந்தி மரித்தார். இயேசுவை நினைத்துப்பார், அவர் மட்டுமே உன்னை மன்னித்து உனது சகல பாவத்திலிருந்தும் உன்னைச் சுத்திகரிக்க முடியும்! உனது பாவத்தை நினைத்துப்பார்! இயேசுவை நினைத்துப்பார், அவர் ஒருவர் மட்டுமே உன்னை இரட்சிக்க முடியும்! இயேசுவிடம் வருவாய். அவரிடம் இப்பொழுதே வருவாய். “உதவியற்ற பாவிகளுக்கு நன்மை செய்ய, இயேசுவையல்லாமல் ஒருவரும் இல்லை, இயேசுவையல்லாமல் ஒருவரும் இல்லை; உதவியற்ற பாவிகளுக்கு நன்மை செய்ய, இயேசுவையல்லாமல் ஒருவரும் இல்லை, இயேசுவையல்லாமல் ஒருவரும் இல்லை”. என் வைராக்கியம் ஓய்வு இடைவேளையை அறியாது, “உதவியற்ற பாவிகளுக்கு நன்மை செய்ய, இயேசுவையல்லாமல் ஒருவரும் இல்லை, இயேசுவையல்லாமல் ஒருவரும் இல்லை”. எளிமையான விசுவாசத்தோடு அவரிடம் வாருங்கள்! ஒரு நூற்றுக்கதிபதி சிலுவையினடியிலிருந்து அவனுடைய பாவங்களுக்காக இயேசு மரிப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவன் தனது முழங்காலில் இருந்து இயேசுவை நம்பினான். அவரைக் கொன்ற அந்த மனிதன் இயேசுவினால் அந்த நேரத்திலே இரட்சிக்கப்பட்டான்! இயேசுவைக் கொன்ற அந்த மனிதன் சொன்னான், “மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன்” (மாற்கு 15:39). இந்த மனிதன் கிறிஸ்தவனாக மாறினான் என்று பாரம்பரியமாகச் சொல்லப்படுகிறது. அந்த மனிதன் செய்ததுபோல நீ வந்து இயேசுவை நம்புவாயா? இயேசு உன்னை நேசிக்கிறார் அவர் உன்னை இரட்சிப்பார். நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் போதனைக்கு முன்பாக வேதம் வாசித்தது திரு. ஆபேல் புருடோமி: லூக்கா 16:19-25. |
முக்கிய குறிப்புகள் நரகத்திலே கிறிஸ்துமஸ் - 2016 CHRISTMAS IN HELL – 2016 டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால் “மகனே, … நினைத்துக்கொள்” (லூக்கா 16:25). (லூக்கா 16:23, 24, 25; II தீமோத்தேயு 4:5; I பேதுரு 1:21;
I. முதலாவது, நீ புறக்கணித்த போதனையை நினைப்பாய், மத்தேயு 13:19;
II. இரண்டாவது, நீ புறக்கணித்த தேவனுடைய ஆவியை நினைப்பாய்,
III. மூன்றாவது, நீ அவமதித்த இரட்சகரை நினைப்பாய், ஏசாயா 53:3;
|