Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து வாருங்கள்!

COME OUT FROM AMONG THEM!
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

நவம்பர் 13, 2016 அன்று கர்த்தருடைய நாள் ஞாயிறு மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, November 13, 2016

“ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்” (II கொரிந்தியர் 6:17-18).


“நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து வாருங்கள்”. அதன் பொருள் என்னவென்றால் பாவத்தில் வாழ்பவர்களைவிட்டுப் பிரிந்து வாருங்கள் என்பதாகும். “பிரிவினை” என்பதன் பொருள் அதுதான், ‘‘நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து வாருங்கள்”. பிரிவினை என்பது வேதத்திலே மிகமுக்கியமான போதனைகளில் ஒன்றாகும். பிரிவினை என்பது மிகமுக்கியமானது ஏனென்றால் அது இல்லாமல் நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக மாறமுடியாது. பிரிவினை என்பது மிகமுக்கியமானது ஏனென்றால் அது இல்லாமல் நீங்கள் ஒரு வெற்றியுள்ள வாழ்க்கையை வாழமுடியாது. பிரிவினை என்பது இல்லாமல் நீங்கள் ஒரு ஜெயங்கொள்ளுகிற வாழ்க்கையை வாழமுடியாது. பிரிவினை என்றால் அவிசுவாசிகளோடு நட்பினால் கட்டப்படாமல் இருப்பதாகும். பிரிவினை என்றால் உலகத்தை நேசிக்காமல் இருப்பதாகும். வேதம் சொல்லுகிறது, “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் [பிதாவின்] அன்பில்லை” (I யோவான் 2:15). மறுபடியும் அது சொல்லுகிறது, “உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்” (யாக்கோபு 4:4). ஒருவர் என்னிடம் நான் கூறினதைத் தவறென்று கூறி, இதைச் சுட்டிக் காட்டினார், “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்” (யோவான் 13:35). ஆனால் இங்கு யாரை அவர் குறிப்பிடுகிறார்? இது அவிசுவாசிகளுக்கு அல்ல. ஒருவரில் ஒருவர் அன்புள்ளவர்களாயிருக்கும் சீஷர்களைப் பற்றி அவர் பேசுகிறார். ஷேக்ஸ்பியர் சொன்னார், “பிசாசு தன்னுடைய நோக்கத்திற்காக வேதத்தை மேற்கோள் காட்ட முடியும்”. நமது பாடம் இதைத் தெளிவாக்குகிறது,

“நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து, வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (II கொரிந்தியர் 6:17)

இழக்கப்பட்ட மக்களிடமிருந்து பிரிந்து வரவேண்டியது அவ்வளவு முக்கியமானது ஏன்?

I. முதலாவது, பிரிவினை என்பது வேதத்திலே மிகமுக்கியமான போதனையாகக் கற்பிக்கப்படுவதால் அது முக்கியமானதாகும்.

லோத்தின் மனைவி சோதோம் பட்டிணத்திலிருந்த தனது பாவமுள்ள நண்பர்களைப் பிரியாததினால் தனது ஆத்துமாவை இழந்து போனாள். அந்த நகரத்தை அழிக்கப்போவதாக தேவன் லோத்திடம் சொல்லி இருந்தார். அந்த நகரத்திலிருந்த மக்கள் மிகவும் பாவம் செய்து உலகப்பிரகாரமானவர்களாக இருந்தபடியினால் அவர் அதை அழிக்க வேண்டியதாக இருந்தது. தேவன் லோத்திடம் சொன்னார், “நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார்” (ஆதியாகமம் 19:14). அவர்கள் சோதோமை விட்டுப் போயாகவேண்டும் என்று லோத்து தன்னுடைய மனைவியிடம் சொன்னான். அவன் அதைவிட்டுப் புறப்பட்டதும் அவள் தனது கணவனைப் பின்பற்ற ஆரம்பித்தாள். ஆனால் அவள் தனது பாவமுள்ள நண்பர்களை விட்டுவிட விரும்பவில்லை. அவள் தனது கணவனைத் தொடரத் தொடங்கினாள். “அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்” (ஆதியாகமம் 19:26). டாக்டர் சார்லஸ் சி. ரெய்ரி சொன்னார், “அவளுடைய இருதயம் இன்னும் சோதோமில் இருந்தது. அவள் தனது பாவமுள்ள நண்பர்களிடமிருந்து பிரிந்துவர விரும்பவில்லை. அவள் திரும்பிப்பார்த்துத் தனது இழக்கப்பட்ட நண்பர்களிடம் போக நினைத்தாள். அவள் அப்படியாகத் திரும்பிப்பார்த்து தனது இழக்கப்பட்ட நண்பர்களிடம் போக நினைத்தபோது ‘அவள் உப்புத்தூண் ஆனாள்’”. சோதோம்மீது தேவன் அனுப்பின அக்கினியும் கந்தகமும் அவளை மூடிக்கொண்டன. அவள் அக்கினியாலும் கந்தகத்தாலும் மூடப்பட்டாள். கந்தகக் கற்களைத் தேவன் அவளுடைய சரீரத்தின்மீது ஊற்றினார். அவள் உருக்கி ஊற்றப்பட்ட ஒரு தூணைப் போலானாள். அவள் உயிரோடு எரிக்கப்பட்டாள் ஏனென்றால் சோதோமில் இருந்த தனது பாவமுள்ள நண்பர்களிடமிருந்து பிரிந்துவர அவள் விரும்பவில்லை. அவள் தனது ஆத்துமாவை இழந்து நரகத்திற்குச் சென்றாள். இயேசு சொன்னார்,

“லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்” (லூக்கா 17:32).

நீ சபையை விட்டுவிட்டு உன்னுடைய பாவமுள்ள நண்பர்களிடம் திரும்பிப் போனால் உனக்கும் அப்படியே நடக்கும். தேவனுடைய நியாயத்தீர்ப்பின் அக்கினியினால் அழிக்கப்படுவாய்!

“லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.”

ஜான் பன்யன் என்பவர், நமது பாப்டிஸ்த்துவின் முற்பிதாவாகியவர், அவர் அதுபோன்ற ஒரு கதையைச் சொன்னார். ஒரு மனிதன் அழிவின் நகரத்தை விட்டுக் கடந்தான். அவன் திரும்பிப் பார்க்காமல் கிறிஸ்துவுக்குப் பின்னால் ஓடினான். இரட்சிக்கப்படாத அவனுடைய இரண்டு நண்பர்கள் அவனுக்குப் பின்னாக ஓடிவந்தார்கள். அவர்கள் அழிவின் நகரத்திற்குத் திரும்பி வரும்படி அவனிடம் சொன்னார்கள். ஆனால் அவன் அவர்களைக் கேட்கவில்லை. அழிந்துபோன நண்பர்களிடம் திரும்பி வரும்படி அவர்கள் அவனிடம் சொன்னார்கள். ஆனால் அவன் அதைச் செய்யவில்லை. அவன் தன்னுடைய இழக்கப்பட்ட நண்பர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு இரட்சிக்கப்பட்டான். (paraphrased from Pilgrim’s Progress by John Bunyan).

நீ சபைக்கு வர ஆரம்பித்து இரட்சிக்கப்பட விரும்பினால் அதே காரியம் உனக்கும் நடக்கும். உன்னுடைய இழக்கப்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உன்னைத் திரும்பக் கொண்டுபோக அவர்களால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் வழக்கமாகச் செய்வார்கள். உன்னை அவர்களோடு திரும்பப் பாவ வாழ்க்கைக்குக் கொண்டுபோக முயற்சிப்பார்கள். பன்யன் மக்களுடைய நண்பர்கள் சொன்னார்கள், “உன்னுடைய உலக நண்பர்கள் அனைவரையும் விட்டுவிடுவாயா?” “ஆமாம்,” என்று பன்யனுடைய மனிதன் சொன்னான், “ஆமாம், அவர்கள் அனைவரையும் விட்டுவிடுவேன், கிறிஸ்துவிடம் இரட்சிப்பை நான் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் அந்த வழி ஒன்றுதான் உண்டு”. லோத்தின் மனைவியின் காரியத்திலும் இது உண்மையாக இருந்தது. அவள் திரும்பிப் பார்த்து தனது இழக்கப்பட்ட நண்பர்களிடம் போக நினைக்கையில் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் அக்கினியினால் அவள் உயிரோடு எரிக்கப்பட்டாள். அதேபோல ஜான் பன்யனுடைய நாட்களிலும் உண்மையாக இருந்தது. இன்றும் அப்படியே உண்மையாக இருக்கிறது! நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு எப்பொழுதும் உள்ள ஒரே வழி என்னவென்றால் பாவமுள்ள நண்பர்களிடமிருந்து பிரிந்துவிடுவதுதான். நீங்கள் சபைக்கு வருவதை அவர்கள் நிறுத்த முயற்சி செய்யும்பொழுது பாவமுள்ள நண்பர்களை விட்டுவிடுங்கள். அவர்களை விட்டுவிட்டு இயேசுவிடம் வாருங்கள். ஓர் உண்மையான கிறிஸ்தவனாக மாறவேண்டுமானால் அந்த வழி ஒன்றுதான் உண்டு.

“ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்போது, [நான்] உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்” (II கொரிந்தியர் 6:17-18).

நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து வெளியே வருங்கள்! பிரிவினை தேவையாக இருக்கிறது. நீ இயேசுவின் மூலமாக பாவம் மற்றும் நரகத்திலிருந்து இரட்சிக்கப்படுவதற்கு விரும்பினால் பாவமுள்ள நண்பர்களை விட்டுவிட வேண்டும். நீ இயேசுவின் மூலமாகப் பாவத்திலிருந்து உண்மையாக இரட்சிக்கப்பட விரும்பினால் பாவமுள்ள உறவினர்கள் மற்றும் இழக்கப்பட்ட நண்பர்களை விட்டுவிட வேண்டும். வேதாகமம் சொல்லுகிறது,

“அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?” (II கொரிந்தியர் 6:14).

டாக்டர் ஜான் ஆர். ரைஸ் இந்த விமர்சனத்தைக் கொடுத்தார். அவர் சொன்னார்,

கிறிஸ்தவத்தின் பிரிவினை போதனை என்பது வேதாகமத்தின் போதனைகளில் ஒன்றாகும். இது தினமும், திரும்பத் திரும்ப, நித்தியமாக, யூதர்கள் மீது தேவன் அனுப்பும் கற்பனைகளில் ஒன்றாகும்… எபிரெய விவசாயி இணைகளை முடிச்சி போடும்போது, தன் இருதயத்திலே சொன்னான், “கலப்பு இணைகளை ஏர்பூட்டி உழவு செய்ய வேண்டாம் என்று தேவன் எனக்குக் கட்டளை இட்டிருக்கிறார். நான் ஒருவேளை இரண்டு மாடுகாளை அல்லது இரண்டு கழுதைகளைக் கொண்டு உழவு செய்யலாம்; ஆனால் அவைகளை என்னால் கலக்கக் கூடாது. அவைகளை என்னால் கலக்க முடியாது ஏனென்றால் தேவனுடைய மக்கள் அல்லாதவர்களோடு கலக்க வேண்டாம் என்று நினைவில் கொள்ளும்படி தேவன் விரும்புகிறார்” (Dr. John R. Rice, The Unequal Yoke, Sword of the Lord, 1946, pp. 4-5).

வேதாகமத்தின் ஒரு பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரைக்கும் அவிசுவாசிகளின் நட்பிலிருந்து பிரிந்து வரவேண்டும் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறது.

“அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?” (II கொரிந்தியர் 6:14).

II. இரண்டாவது, பிரிவினையானது உலகத்தின் ஐக்கியத்திலிருந்து உங்களைப் பிரித்தெடுத்து உள்ளூர் சபையின் ஐக்கியத்தில் சேர்க்கிறது.

இயேசு யோவான் 15:19ல் சொல்லுவதை கவனியுங்கள். இயேசு சொன்னார்,

“நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினா லும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது” (யோவான் 15:19).

இந்த வார்த்தைகளை நோக்குங்கள், “நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டேன்”. இந்த வார்த்தைகளைச் சத்தமாகச் சொல்லுங்கள், “நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டேன்”.

யோவான் 17:6ல், மறுபடியுமாக இயேசு சொன்னார்,

“நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன்…”

இந்த இரண்டு வசனங்களிலும் “உலகம்” என்பதாக மொழிபெயர்க்கப் பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை இழக்கப்பட்ட மனித வர்க்கத்தைக் குறிக்கும். இயேசு சொன்னார்,

“நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டேன்” (யோவான் 15:19).

இதன் பொருள் பிரிவினை என்பதாகும். “உலகத்திலிருந்து” நாம் தெரிந்து கொள்ளப்பட்டோம்.

புதிய ஏற்பாட்டிலே “சபை” என்ற வார்த்தைக்கு “எக்கிலீசியா” என்பது கிரேக்க மொழி பெயர்ப்பாகும். இதன் பொருள் “வெளியே அழைக்கப்பட்டவர்கள்” என்பதாகும், “எக்” வெளியே, “காலியோ” அழை (Vine). அதனால், “சபை” என்ற வார்த்தைக்கு “வெளியே அழைக்கப்பட்டவர்கள்” என்பது பொருளாகும் (Scofield, note on Matthew 16:18).

அப்போஸ்தலர் 2:47ஐ கவனியுங்கள். இங்கே எருசலேமிலிருந்த உள்ளுர் சபைக்கு என்ன நடந்தது என்ற விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது சொல்கிறது,

“இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்” (அப்போஸ்தலர் 2:47).

இயேசு சொன்னார்,

“நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டேன்” (யோவான் 15:19).

நவீன ஆங்கிலத்தில் இது மிகத்தெளிவாக இருக்கிறது,

“[அழைக்கப்பட்டவர்களை] கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்” (அப்போஸ்தலர் 2:47)

இவ்வாறாக, நாம் உலகத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு சபையின் உள்ளே சேர்க்கப்படுகிறோம்.

“நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய்… என்று கர்த்தர் சொலலுகிறார்” (II கொரிந்தியர் 6:17).

வேதாகமதின்படியான பிரிவினை உலகத்தோடுள்ள ஐக்கியத்திலிருந்து உங்களை வெளியே கொண்டுவருகிறது. இந்தப் பிரிவினை உங்களை உள்ளூர் சபையின் ஐக்கியத்தில் சேர்க்கிறது. நீங்கள் உலகத்தைப் பின்னாகவிட்டு, சபையிலே முழுமையான புதிய ஒரு நட்பின் குழுவோடு இணைக்கப்படுகிறீர்கள்.

III. மூன்றாவதாக, பிரிவினை என்பது இருதயத்தின் காரியமாகும்.

தயவுசெய்து யாக்கோபு 4:4க்குத் திருப்பிக் கொள்ளுங்கள். அது ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமத்தில் 1309ஆம் பக்கத்தில் உள்ளது. நாம் எழுந்து நின்று அதைச் சத்தமாக வாசிப்போம்.

“விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்” (யாக்கோபு 4:4).

இது ஒரு தெளிவான வாக்கியமாகும்! “உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்”. நீங்கள் அமரலாம்.

இயேசுவானவர் இழக்கப்பட்ட மக்களிடம் அன்பாக இருந்தார். அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும்கூடச் சாப்பிட்டார். ஆனால் அவருடைய நெருங்கிய நண்பர்களானவர்கள் அவருடைய சீஷர்கள், மரியாள் மற்றும் மார்த்தாள், லாசரு என்பவர்கள். உண்மையான எல்லா கிறிஸ்தவர்களும் அவருடைய நண்பர்கள் – தம்மைப் பின்பற்றும்படியாக உங்களை அழைக்கிறார். உங்களுடைய நெருங்கிய நண்பர்கள் அனைவரும் உண்மையான கிறிஸ்தவர்கள் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்! உண்மையான கிறிஸ்தவர்கள் அல்லாத நண்பர்கள் அனைவரையும் விட்டுவிடுங்கள். அதைத்தான் வேதாகமம் நமக்குப் போதிக்கிறது!

“ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர் களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்” (II கொரிந்தியர் 6:17-18).

ஆல்பர்ட் பர்னாஸ் இந்தக் குறிப்பைக் கொடுத்தார், வேதாகமத்தின் அடிப்படையில் இந்த வார்த்தைகள் அமைந்துள்ளன. அவர் சொன்னார்,

         யார் [கிறிஸ்தவர்களாக வேண்டுமென்று விரும்புகிறார்களோ] அவர்கள் தங்களை உலகத்திலிருந்து பிரித்துக் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட பிரிவினை இல்லாத இடத்தில் [கிறிஸ்துவம்] நிலைத்திருக்க முடியாது, தங்கள் [அவிசுவாசிகளான] கூட்டுறவுகளை விட்டுவிட மனதில்லாதவர்கள்… தேவனுடைய மக்களைத் தங்கள் நண்பர்களாக்கி மகிழ்ச்சியைக் கண்டுகொள்ள விரும்பாதவர்கள் [மெய்யான கிறிஸ்தவர்களாக மாறமுடியாது]… தேவனுடைய நண்பர்கள் மற்றும் பாவத்தின் நண்பர்கள் இவர்களுக்கு இடையில் கோடு போடப்பட வேண்டியது அவசியமாகும்... அயலகத்தார் மற்றும் பிரஜைகளாக அவர்களோடு கலந்திருக்க மறுக்காமல் இருக்கும்பொழுது... நம்முடைய தெரிந்து கொள்ளப்பட்ட நண்பர்கள் மற்றும் அன்பான நட்பு என்பது தேவனுடைய மக்களோடு இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், தேவனுடைய நண்பர்கள் நம்முடைய நண்பர்களாக இருக்க வேண்டும்; நம்முடைய மகிழ்சி அவர்களோடு இருக்க வேண்டும், நாம் [கிறிஸ்துவின்] நண்பர்களைத் தெரிந்துகொண்டு இச்சையின் நண்பர்களை, ஆசை, பாவத்தை விட்டுவிட்டதை உலகம் பார்க்க வேண்டும் (Albert Barnes, Notes on the New Testament, II Corinthians, Baker Book House, 1985 reprint, p. 162).

அவர்கள் விரும்புவதை நாம் விரும்புவதில்லை என்பதை உலகம் பார்க்க வேண்டியது அவசியம்!

பர்னாஸ் நமக்குச் சொன்னார், “நாம் உலகத்திலிருந்து பிரித்துக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்… நம்முடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் சந்தோஷம் என்பது தேவனுடைய மக்களோடு இருக்க வேண்டும்” (ibid.).

இரட்சிப்பைத் தேடும் ஒரு மனிதனைப் பின்னுக்கு இழுக்க முயற்சி செய்பவர்களுக்கு ஜான் பன்யன் இதைச் சொன்னார். அவர் சொன்னார்,

“நீ அழிவின் நகரத்தில் வாழ்கிறாய்… மரித்தவர்கள் அனைவரும் சவக்குழிக்குக் கீழாக அக்கினியும் கந்தகமும் எரிகிற இடத்திற்குள் மூழ்கிப் போவார்கள். நீ உணர்த்தப் பட்டவனாக, என்னோடு கிறிஸ்துவிடம் வா.” “என்ன!” என்று ஆச்ரியத்தோடு [பின்னால் தொடர்ந்து வந்தவன்] கேட்டான். “எங்களுடைய அனைத்து நண்பர்களையும் வசதிகளையும் பின்னால் தள்ளிவிட வேண்டுமா?” “ஆமாம்,” என்றான் [கிறிஸ்துவைத் தேடுபவன்], நீ [விட்டுவிடும்] அனைத்தும் தகுதியானவையல்ல... அவற்றை நான் தேடுவதோடு ஒப்பிட்டுப்பார்த்தால்… ஏனென்றால் நான் கிறிஸ்துவைத் தேடுகிறேன் – பாவத்தை அல்ல” (John Bunyan, Pilgrim’s Progress in Today’s English, retold by James H. Thomas, Moody Press, 1964, pp. 13-14).

நீங்கள் உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு கிறிஸ்துவிடம் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள். உலக நட்பு மற்றும் வசதியைப் பார்ப்பதை நிருத்தாமல் இருப்பவன் கிறிஸ்துவிடம் வரமுடியாது. ஒரே நேரத்தில் இரண்டு திசைகளில் பார்க்க உங்களால் முடியாது! “இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்” (யாக்கோபு 1:8). “இருமனமுள்ளவன்” கிறிஸ்துவிடம் வரமாட்டான்!

“ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய்… நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன்…” (II கொரிந்தியர் 6:17-18).

நீங்கள் உலகத்தை நம்புவதை நிறுத்திவிட்டு அதற்குப் பதிலாக தம்மை நம்ப வேண்டும் என்று கிறிஸ்துவானவர் விரும்புகிறார். ஒரு பழைய பாடல் இப்படியாக இருக்கிறது,

“உன் இருதயத்தை எனக்குத்தா,”
   மனிதனுடைய இரட்சகர் சொல்லுகிறார்,
இரக்கத்தோடு அழைத்துக் கொண்டிருக்கிறார்
   மறுபடியும் மறுபடியுமாக;
அதிக அபரிமிதமான கிருபை
   எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது,
உனக்காக நான் மரிக்கவில்லையா?
   உன் இருதயத்தை எனக்குத்தா.

“உன் இருதயத்தை எனக்குத்தா,
   உன் இருதயத்தை எனக்குத்தா,”
அந்த மெல்லிய குரலைக் கேள்,
   நீ எங்கே இருந்தாலும்;
இந்த இருளான உலகத்திலிருந்து
   அவர் உன்னை இழுத்து எடுப்பார்,
மென்மையாகப் பேசுகிறார்,
   “உன் இருதயத்தை எனக்குத்தா.”
(“Give Me Thy Heart” by Eliza E. Hewitt, 1851-1920).

ஜான் கேஹன் வாலிப வயதாக இருந்தபொழுது சில கெட்ட சபைப் பிள்ளைகளோடு தொடர்பு உடையவராக இருந்தார். அவர்கள் சபைக்கு வந்த பிள்ளைகள் ஆனால் நான் பிரசங்கம் செய்ததைக் கேட்டுச் சிரித்தார்கள். அவர்கள் அசுத்தமான நகைச்சுவைகளைச் சொன்னார்கள். அவர்கள் பாலியல் பற்றியும் மாறிஜூனா போன்ற போதைப்பொருள்களைப் பற்றியும் பேசிக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் தவறானவர்களாக இருப்பதை ஜான் கேஹன் பார்க்க ஆரம்பித்தார். பாவத்தைக்குரித்து அவருடைய இருதயத்தில் உணர்த்தப்பட்டார். அவருடைய பாவம் அவரை நரகத்திற்கு இழுப்பதை உணர்ந்தார். இறுதியாக ஜான் அந்தக் கெட்டப் பிள்ளைகளிடமிருந்து திரும்பிவிட்டார். அவர் முழுமையாக அவர்களை விட்டுக் கிறிஸ்துவிடம் தனது இருதயத்தைக் கொடுத்துவிட்டார். அவர் நம்முடைய சபைக்குள் இருந்த நல்ல கிறிஸ்தவ வாலிபப் பிள்ளைகளிடம் நட்புக் கொண்டார். அவர் விரைவாகவே மாற்றப்பட்டார். என்னுடைய செய்திகளைக் கேட்டுச் சிரித்துக்கொண்டிருந்த அந்தக் கெட்டப் பிள்ளைகள் எல்லாரும் நமது சபையிலிருந்து போய்விட்டார்கள். ஆனால் ஜான் கேஹன் கிறிஸ்துவை விசுவாசித்ததால் இரட்சிக்கப்பட்டார். அவர் இரட்சிக்கப்பட்டது மட்டுமல்ல –இப்பொழுது அவர் வேதாகமக் கல்லூரிக்குச் சென்று படித்துப் போதகராகப் போகிறார். ஜான் பேசும்பொழுது அவருடைய இருதயம் பாவத்தை வெறுப்பதையும் இயேசுவை நேசிப்பதையும் நீங்கள் உணரமுடியும். அவர் அந்தக் கெட்டப் பிள்ளைகளைவிட்டுத் தமது இருதயத்தையும் வாழ்க்கையையும் கிறிஸ்து ஒருவருக்கே கொடுத்தார். இப்பொழுது ஜான் கேஹன் என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்று சொல்வதில் நான் பெருமையடைகிறேன். சென்ற வெள்ளிக்கிழமை அன்று ஜான் மற்றும் ஜூலி சிவிலே வெளியே சென்று விருந்து உண்டு ஒரு நாடகத்தைக் கண்டுகளித்து என் பிள்ளையுடைய பிறந்த நாளைக் கொண்டாடினார்கள். கெட்டப் பிள்ளைகளைவிட்டபிறகு, தேவன் ஜானுக்குப் புதிய நண்பர்க் குழுவைக் கொடுத்தார். ஆரோன் யான்சி, ஜேக் நெகான், நோவா சாங், மற்றும் இந்தப் பழைய பிரசங்கியார் போன்ற நண்பர்கள். நாங்கள் அனைவரும் ஜான் கேஹனை எங்கள் நண்பராக அழைப்பதில் பெருமைப் படுகிறோம் ஏனென்றால் இப்பொழுது அவர் கிறிஸ்துவுடைய நண்பர் –இனிமேலும் அவர் பொல்லாத “சபைப் பிள்ளைகளின்” நண்பர் அல்ல. அவர் கிறிஸ்துவிடம் வந்தார். அவர் எங்களிடம் வந்தார். சில நாட்களில் அவர் இந்தச் சபையின் போதகராகப் போகிறார் என்பதில் எங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி. அந்தக் கெட்டச் சபைப் பிள்ளைகள் நரக அக்கினியில் நித்தியக் காலமாக வெந்து கொண்டிருக்கும்போது அவர் இங்கே போதனை செய்துகொண்டிருப்பார்.

நீங்கள் பாவ நண்பர்களை விட்டுவிட்டு வருவீர்களா? தேவக்குமாரனாகிய, இயேசுவை விசுவாசிப்பீர்களா? அவரிடம் வந்து, அவருடைய இரத்தத்தினால் உங்களுடைய பாவங்களைக் கழுவிச் சுத்தம் செய்து கொள்வீர்களா? ஜான் கேஹன் மற்றும் அவருடைய தந்தை, மற்றும் நானும் சேர்ந்து இங்கே பிரசங்க மேடைக்கு முன்பாக அதைப்பற்றி உங்களோடு பேச விரும்புகிறோம். நீங்கள் வாருங்கள், திரு. கிரிஃபீத் அவர்கள், “உன் இருதயத்தை எனக்குத்தா” என்ற பாடலைப் பாடுவார். அவர் அதைப் பாடும்பொழுது, நீங்கள் வாருங்கள்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.


(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்திற்கு முன்னால் திரு. நோவா சாங் வாசித்த வேத பகுதி: II கொரிந்தியர் 6:14-18.
பிரசங்கத்திற்கு முன்னதாகப் பாடப்பட்ட தனிப்பாடலைப் பாடியவர் திரு. பென்ஜமின் கின்கேய்டு கிரிஃபீத்:
“Give Me Thy Heart” (by Eliza E. Hewitt, 1851-1920).

முக்கிய குறிப்புகள்

நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து வாருங்கள்!

COME OUT FROM AMONG THEM!

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

“ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்” (II கொரிந்தியர் 6:17-18).

(I யோவான் 2:15; யாக்கோபு 4:4; யோவான் 13:35)

I.      முதலாவது, பிரிவினை என்பது வேதத்திலே மிகமுக்கியமான போதனையாகக் கற்பிக்கப்படுவதால் அது முக்கியமானதாகும், ஆதியாகமம் 19:14, 26; லூக்கா 17:32; II கொரிந்தியர் 6:14.

II.    இரண்டாவது, பிரிவினையானது உலகத்தின் ஐக்கியத்திலிருந்து உங்களைப் பிரித்தெடுத்து உள்ளூர் சபையின் ஐக்கியத்தில் சேர்க்கிறது, யோவான் 15:19; யோவான் 17:6; அப்போஸ்தலர் 2:47.

III.  மூன்றாவதாக, பிரிவினை என்பது இருதயத்தின் காரியமாகும்,
யாக்கோபு 4:4; 1:8.