இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
ஓர் இளம் சுவிசேஷகரை மாற்ற பயன்பட்ட
|
நான் ஒருபோதும் பிரசங்கிக்காத மிகமுக்கியமான போதனைகளை 2009 ஜூன் மாதம் கொடுத்தேன். தேவனால் உபயோகப்படுத்தப்பட்டு ஒரு வாலிபனின் மனதை மாற்றிய இந்த ஐந்து போதனைகளை நீங்கள் இந்தக் காலையில் பிரசங்கமாகக் கேட்டீர்கள். ஜான் சாமுவேல் கேஹன் மாற்றப்படுவதற்குச் சற்று முன்பாக அவர் கேட்ட ஐந்து போதனைகள் அவையாகும். நான் ஒருபோதும் பிரசங்கிக்காத மிகமுக்கியமான போதனைகளாக இந்த ஐந்து போதனைகள் மாற்றத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறபடியினால், ஜான் மிகவும் பெரிய ஒரு பிரசங்கியாக மாறுவார் என்று நான் நிச்சயத்திருந்தேன். மாறுதலுக்காகப் பிரசங்கிப்பது இந்த நாட்களில் அரிதாக இருக்கிறது. ஆனால் பாவிகளை மாற்ற பிரசங்கமானது மிகவும் பிரதானமானதாகத் தேவனால் கொடுக்கப்பட்ட வழிமுறை ஆகும். வேதம் சொல்லுகிறது, “பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?” (ரோமர் 10:14). பின்வரும் ஐந்து போதனைகளும் ஜான் கேஹன் இரட்சிக்கப்படுவதற்குச் சற்று முன்பாகக் கேட்ட போதனைகளாகும். இந்தச் செய்தியின் இறுதியில் அவருடைய முழுசாட்சியையும் நான் வாசிப்பேன். ஆனால் ஜான் மாற்றப்படுவதற்குச் சற்று முன்பாக அவர் கேட்ட அந்த ஐந்து போதனைகளின் கருத்துச் சுருக்கங்களை முதலாவதாக உங்களுக்குக் கொடுக்கிறேன். இந்த மாலையில் நான் கொடுக்க இருக்கும் செய்திக்கு அந்த ஐந்து போதனைகளின் கருத்துக்களே தலைப்புகளாக இருக்கிறது. I. முதலாவதாக, “இரட்சிப்பிற்கு அதிக தூரமாக இல்லாதவர்களை உற்சாகப் படுத்துதல்” (ஜூன் 7, 2009, ஞாயிற்றுக்கிழமை காலையில் பிரசங்கிக்கப்பட்டது). அந்தப் போதனையின் பாடமானது “நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல” (மாற்கு 12:34). இந்த மனிதனுடைய இருதயத்தில் நிச்சயமாகப் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்தார், கிறிஸ்துவை நிராகரிக்கும் மனிதனின் எதிர்ப்பை மற்றும் புறக்கணிப்பை உடைக்கத் தேவனுடைய ஆவியினால் மட்டுமே முடியும். மாற்றப்படாத மனிதன் தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்பவன் மற்றும் கிறிஸ்துவுக்கு விரோதியாவான். என்னிடம், “இயேசு ஏன் சிலுவையில் மரிக்க வேண்டியதாக இருந்தது?” என்று கேள்வி கேட்ட வேறொரு இளைஞனைப்பற்றி நான் பேசினேன். “கிறிஸ்து நம்முடைய பாவத்தின் தண்டனைக்கு உரிய கிரயத்தைச் செலுத்தும்படியாகச் சிலுவையிலே மரித்தார்” என்று நான் சொன்னதை அந்தச் சிறுவன் கேட்டான். அவன் வருடக்கணக்காக மறுபடியும் மறுபடியுமாக இதைக் கேட்டிருந்தும், அவன் ஒருபோதும் இதைத் தன்னுடைய இருண்ட மனதிலே ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த வார்த்தைகளை நீங்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும், “கிறிஸ்து நம்முடைய பாவத்தின் தண்டனைக்கு உரிய கிரயத்தைச் செலுத்தும்படியாகச் சிலுவையிலே மரித்தார்”. நீங்கள் கிறிஸ்துவிடம் வராமல் உங்களைத் தடுப்பது எது? மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள் என்று பயப்படுகறீர்களா? அவர்கள் என்ன சொன்னாலும் மறந்துவிடுங்கள். நீ நரகத்திலே இருக்கும்பொழுது அவர்களுடைய வார்த்தைகள் ஒரு பொருட்டே அல்ல. உன்னுடைய பாவத்திலிருந்து திரும்பி கிறிஸ்துவிடம் வா. நரகத்திலிருந்து தப்ப வேறு எந்த வழியுமில்லை. II. இரண்டாவதாக, “நவீன கால்வினிஸம் மற்றும் உண்மையான மாற்றம்” (ஜூன் 7, 2009, ஞாயிற்றுக்கிழமை மாலையில் பிரசங்கிக்கப்பட்டது). அந்தப் போதனையின் பாடம், “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (II கொரிந்தியர் 5:17). நான் கால்வினிஸ கொள்கைக்கு எதிராகப் பேசவில்லை. அதற்குப் பதிலாக நம்பிக்கையின் போதனை உன்னை இரட்சிக்காது என்று கூறினேன். மெய்யான போதனையில் நம்பிக்கை வைப்பதும் உன்னை இரட்சிக்காது. ஓர் உண்மையான போதனையில் ஓய்ந்திருப்பதும் உன்னை ஒரு போதும் இரட்சிக்க முடியாது என்று நான் சொன்னேன். உன்னுடைய பாவங்கள் உனக்கு உணர்த்தப்பட வேண்டியது அவசியம். உன்னுடைய பாவத்தை நீ அறிக்கை செய்ய வேண்டும். நீ இயேசுவிடம் வரவேண்டும் அல்லது நீ நரகத்திற்குப் போவாய். உன்னுடைய பாவத்தினால் நீ வியாதியாக இருக்கும்போது – அதன்பிறகு, அதன்பிறகு மட்டுமே – உன்னை இரட்சிக்கும்படியான கிறிஸ்துவின் தேவையை நீ பார்ப்பாய். உன்னுடைய பொல்லாத இருதயத்தைக் கிறிஸ்து மாற்றவேண்டும் என்ற ஆவல் உனக்கு இல்லையானால், உன்னை ஒருபோதும் மாற்றப்பட முடியாது. உன்னுடைய இருதயத்தின் பாவத் தன்மைக்காக நீ வெட்கப்படமாட்டாயா? அது உன்னைத் தொந்தரவு செய்யவில்லையா? நீ எப்போதாவது மாற்றப்பட வேண்டுமென்று நம்பினால் அப்படி நிச்சயம் நடக்கும். உன்னுடைய பாவ இருதயத்தினால் வியாதிபட்டிருக்கும்போது மட்டுமே இயேசுவின் சுத்திகரிக்கும் இரத்தம் உனக்கு முக்கியமானதாக இருக்கும். ஸ்பர்ஜன் சொன்னார், “வாழ்க்கை முழுவதையும் பாதிக்கத்தக்க மெய்யாக மாற்றப்பட்ட இருதயம் இருக்க வேண்டியது அவசியம்”. ஓர் இழக்கப்பட்ட பாவி தனது பாவங்களால் உணர்த்தப்பட்டு அவைகளை அவன் வெறுக்கும்போது மெய்யான மாறுதல்கள் உண்டாகின்றன. அந்தப் போதனையில் நான் ஸ்பர்ஜனுடைய போதனையிலிருந்து ஒரு பத்தியைக் குறிப்பிட்டேன், “மாறுதல் அவசியம்தானா?” ஸ்பர்ஜன் சொன்னார், உண்மையான எல்லா மாறுதல்களிலும் அவசியமான நான்குவித ஒப்பந்தம் தேவையாக இருக்கிறது: செய்த பாவத்திற்கு மனவருந்தும் அறிக்கை அவசியமாகும், பிறகு அதன் மன்னிப்புக்காக இயேசுவை நோக்கிப் பார்த்தல், அதன் பிறகு இருதயத்தில் நிச்சயமாக ஏற்படும் ஓர் உண்மையான மாறுதல், அதன் பிறகு வாழ்க்கை முழுவதையும் மாற்றத்தக்க பாதிப்பு, இந்த அவசியமான நான்கு கருத்துக்கள் காணப்படவில்லையானால் அங்கே உண்மையான மாற்றமில்லை (C. H. Spurgeon, “Is Conversion Necessary?”, Metropolitan Tabernacle Pulpit, Pilgrim Publications, 1971, vol. xx, p. 398). III. மூன்றாவதாக, “ஜெபம் மற்றும் உபவாசத்தினால் மட்டுமே” (ஜூன் 14, 2009, ஞாயிற்றுக்கிழமை காலையில் பிரசங்கிக்கப்பட்டது). அந்தப் பாடம், “அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்” (மாற்கு 9:29). “மற்றும் உபவாசம்” என்ற வார்த்தைகள் புதிய வேதாகம மொழிபெயர்ப்பில் நீக்கப்பட்டுவிட்டன என்று நான் சொன்னேன், ஏனென்றால் இரண்டு பழைய கையெழுத்துப் பிரதிகளிலிருந்து மாறுபட்ட கருத்துள்ளவர்களால் பிரதியெடுக்கும்போது, அந்த இரண்டு வார்த்தைகள் விடப்பட்டன, இவ்வாறாக நவீன வேதாகம மொழிபெயர்ப்பை உபயோகப்படுத்தும் சபைகள் பெலவீனப்படுத்தப்பட்டன. இருந்தாலும் பெரும்பான்மையானவர்கள் பயன் படுத்தும் பழைய கையெழுத்துப் பிரதிகளில் “ஜெபத்தினாலும் உபவாசத்தினாலும்” என்ற வார்த்தைகள் இருக்கின்றன. சீன வேதாகமத்தில் அந்த வார்த்தைகள் இருக்கின்றன. அதுவே அவர்களுக்குள் தொடர்ந்து எழுப்புதல் காணப்படுவதற்கு ஒரு காரணமாக அமைகிறது, மேற்கத்திய நாடுகளிலோ, தங்கள் நவீன மொழிபெயர்ப்போடு உண்மையான, பழைய எழுப்புதலின் மெய்யான அனுபவம், அரிதாக இருக்கிறது. ஆனால் நமது சபைகளில் அநேக வாலிபர்கள் மாற்றப்படுவதற்காக நாம் ஜெபம் மற்றும் உபவாசத்திற்கு நேரங்களை ஒதுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகும். அவர்கள் தங்கள் பாவங்களை உணர்ந்திட, மனந்திரும்ப, சிலுவையிலறையப்பட்டு உயிர்த்தெழுந்த இரட்சகரைச் சந்தித்து அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் கழுவப்பட, நாம் உபவாசித்து ஜெபிக்க வேண்டியது அவசியமாகும். அந்தப் போதனையானது, “பஞ்சைவிட வெண்மையாக” என்ற பாடலோடு முடிந்தது. அது சொல்லுகிறது, “கர்த்தராகிய இயேசுவே, நான் பொறுமையாகக் காத்திருப்பதை நீர் பார்க்கிறீர், இப்பொழுது வாரும், எனக்குள் ஒரு புதிய இருதயத்தைச் சிருஷ்டியும்”. ஆனால் நமது சபையில் கிறிஸ்தவர்கள் உபவாசித்து ஜெபித்துக் கொண்டிருந்தபொழுது, ஜான் கேஹன் உபவாசம் இருப்பதில் ஆத்திரம் அடைந்தார். அது அவருக்கு கோபத்தை உண்டாக்கிற்று – அவர் விரைவில் மாற்றப்பட இருந்தார் ஏனென்றால் அவருடைய இரட்சிப்பிற்காக அவருடைய பெற்றோர் உபவாசித்து ஜெபித்துக்கொண்டு இருந்தார்கள்! IV. நான்காவதாக, “மனச்சாட்சி மற்றும் மாறுதல்” (ஜூன் 14, 2009, ஞாயிற்றுக்கிழமை மாலையில் பிரசங்கிக்கப்பட்டது). அந்தப் பாடம், “அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறது” (ரோமர் 2:15). நமது செயல்களையும் எண்ணங்களையும் திட்டங்களையும், ஏற்றுக்கொள்ள அல்லது நிராகரிக்க, நாம் தவறு செய்தோம் என்று நமக்குச் சொல்வதற்காக, அதற்காக நாம் பாடுபடத் தகுதியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று உணர்த்த, நமக்கு நாமே நீதியான தீர்ப்பைச் சொல்லிக்கொள்ள மனச்சாட்சி ஓர் உள் சக்தியாகச் செயல்படுகிறது. ஆதாம் பாவம் செய்தான் அவனுடைய மனச்சாட்சி தீட்டுப்பட்டது, அதனால் அவனுடைய பாவத்திற்காக அவன் அநேக சாக்குப்போக்குச் செய்தான். இந்த அழிவு மனுவர்க்கத்தினுடைய மனச்சாட்சியில் ஊடுருவினது என்பதற்கு நிரூபணமாக அவர்களுடைய முதல் மகனாகிய காயின் தனது சகோதரனைக் கொலை செய்தான் ஆனால் உணராதவனாக இருந்தான் மற்றும் தனது பாவத்திற்குச் சாக்குச் சொன்னான். எவ்வளவுக்கு அதிகமாக ஒருவன் பாவம் செய்கிறானோ அவ்வளவுக்கு அதிகமாக அவனுடைய மனச்சாட்சி தீட்டுப்பட்டு அழிவுக்குள்ளாகிறது. அதிகமதிகமாகப் பாவம் செய்வதால் மக்கள் தங்கள் மனச்சாட்சியைச் சிதைக்கிறார்கள், “மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே” (I தீமோத்தேயு 4:1). நமது சபையின் வாலிப மக்களிடம் பின்வரும் செயல்கள் தங்களது மனச்சாட்சியை எரித்துவிடுகிறது என்று நான் சொன்னேன் அதாவது அவர்கள் தங்கள் தாயாரிடம் பொய் சொல்வது, பள்ளியில் ஏமாற்றுவது, பொருள்களைத் திருடுவது, இன்னும் பெரிய பாவங்கள் மனச்சாட்சியை எரித்துவிடுகிறது – அவைகளை நான் சபையில் சொல்லமுடியாது. அவைகள் என்னவென்று உனக்குத் தெரியும். இப்பொழுது அவைகளுக்காகக் குற்றமுள்ள மனதோடு உணர உன்னால் முடியாது – ஏன் என்றால் நீ மேலும் மேலும் பாவம் செய்தாய், தேவனைப் பரிகாசம் செய்து திரும்பத் திரும்ப பாவம் செய்தபடியினால் உன் மனச்சாட்சியை அழித்தாய். உனக்கு உதவி செய்ய நான் என்ன செய்ய முடியும்? அடையாளம் காண முடியாதபடி உனது மனச்சாட்சியை நீ தான் எரித்துப் போட்டாய். நான் உனக்காகப் பரிதாபப்பட மட்டுமே முடியும் – எதிர்காலமில்லாமல் நம்பிக்கையில்லாமல் அழிக்கப்பட்ட ஜந்துவைப் போல ஆனாய். நான் உனக்காகப் பரிதாபப்பட மட்டுமே முடியும். உனக்கு உதவி செய்ய என்னால் முடியாது, ஏன் என்றால் நீ ஏற்கனவே அழிக்கப்பட்டு ஆக்கினை தீர்ப்புக்கு ஆளானாய். இயேசு சொன்னார், “விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று” (யோவான் 3:18). நீ அங்கே ஏற்கனவே இருக்கிறபடியினால் நிச்சயமாக நரகத்திற்குப் போவாய். நான் சொல்வது அல்லது செய்வது எதுவும் உனக்கு உதவிடாது. தேவன் மட்டுமே உன்னுடைய பாவத்தை உனக்கு உணர்த்த முடியும். அவர் உனக்குச் சில பாவங்களைக் குறித்த உணர்த்துதலை முன்பாகவே கொடுத்திருந்தால், மறுபடியுமாக அவர் உன்னை உணர்த்துவார் என்று உத்தரவாதமில்லை. ஒருமுறை பாவ உணர்வின் அனுபவத்தை அடைந்தவர்கள் அடிக்கடி தேவனுடைய ஆவியினாலே ஒருபோதும் சந்திக்கப்படுவதில்லை. நீ செய்த பரிகாசம் மற்றும் மதியீனமான காரியங்களுக்காக, நீ ஒரு தருணம் உணர்த்தப்படுவதற்கும் பாத்திரனல்ல. உன்னுடைய பாவ உணர்வை நீ இழந்தால், உனக்கு அதைத் திரும்பவும் தேவன் ஒருபோதும் கொடுக்கமாட்டார். ஒரு பிச்சைக்காரனைப்போல தேவனுக்கு முன்பாக வா! சர்வவல்ல தேவன் உனக்கு எதற்கும் கடன்பட்டவரல்ல என்று அறிந்து, அவருக்கு முன்பாக தாழ்மையோடு குனிந்து பணிந்துகொள். உன்னுடைய இருதயத்தில் கடந்த எல்லா வருடங்களிலும் அவருடைய முகத்தில் துப்பினாய். அதை நினைத்துப்பார்! உன்னுடைய குணாதிசயத்தினால் நீ கிறிஸ்துவின் முகத்தில் துப்பினாய். இப்பொழுது கிறிஸ்து உன்னிடம் ஒன்றும் கடன்பட்டவரல்ல. அவர் உனக்குக் கொடுக்கவேண்டியது கோபமும், தண்டனையும் எரிநரகமும் தான். இப்போதுதான் நீ நினைத்துக் கொண்டிருக்கறாய், “அது உண்மைதான் – தேவன் எனக்கு ஒன்றும் கடன்பட்டவரல்ல என்னை நரகத்தில் தள்ள நான் பாத்திரனாக இருக்கிறேன். நான் வேறொன்றுக்கும் தகுதியானவன் இல்லை”. அப்படி நீ உணர்வாயானால், அந்தப் பெண் இயேசுவினிடத்தில் வந்து அவருடைய பாதங்களை முத்தமிட்டதுபோல நீ அவரிடம் வா என்று உன்னை நான் துரிதப்படுத்துகிறேன். ஒரு பரிதாபமான புழுவைப்போல நீ வா. அழுகையோடும் புலம்பலோடும் அவரிடம் வா, ஜான் பன்யன் செய்ததுபோல; ஒயிட்பீல்டு செய்ததுபோல – இரக்கத்திற்காக அழுதிடு கதறிடு. ஒருவேளை அவர் உனக்கு இரக்கம் காட்டுவார். ஆனால் நான் “ஒரு வேளை” என்று மட்டும் சொல்லுகிறேன் – ஏன் என்றால் நீ இரட்சிக்கப்படவேண்டிய நேரம் ஏற்கனவே கடந்து போயிருக்கலாம். நீ ஏற்கனவே செய்த பாவத்தால் கிருபையின் நாளை என்றென்றுமாகத் தள்ளிவிட்டிருக்கலாம். அழுகையோடு கிறிஸ்துவிடம் வா – உன்னுடைய விஷயத்தில் அவர் தருணம் கொடுக்க வேண்டும் என்ற நிச்சயமில்லாமல் இருந்தாலும் – ஒருவேளை அவர் உனக்கு இன்னுமொரு தருணத்தைக் கொடுக்கலாம். மேடைக்கு முன்பாக இந்த இடத்திற்கு இறங்கி வா. முழங்கால்படியிட்டு இரக்கத்திற்காக அழு. கிறிஸ்து உன் அழுகையைக் கேட்டுத் தமது பரிசுத்த இரத்தத்தினால் உன்னைக் கழுவ இன்னுமொரு தருணத்தைக் கொடுக்கலாம். அவருடைய இரத்தம் மட்டுமே “ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக் கிரியைகளறச் சுத்திகரிக்கும்” (எபிரேயர் 9:14). V. ஐந்தாவது, “உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கு” (ஜூன் 21, 2009, ஜான் கேஹன் மாற்றப்பட்ட அன்று காலையில் நான் இதைப் பிரசங்கித்தேன்). அந்த பாடம், “கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது உயிரடைவீர்கள்” (எசேக்கியேல் 37:5). இந்தப் போதனையின் மூலமாக ஜான் மாற்றப்பட்டார் என்று நான் நினைக்கவில்லை. அவர் மெய்யாகவே அதைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று நான் நினைக்கவில்லை. முதல் நான்கு போதனைகளே அவரை மாற்றப் பயன்படுத்தப்பட்டன என்று நான் நினைக்கிறேன். நான் ஜானின் சாட்சியை வாசிக்கும்போது நீங்கள் பார்ப்பீர்கள் –அவர் என்னை அவமதித்தார். உண்மையாகவே, ஜான் என்னை வெறுத்தார். நான் இந்தப் போதனையைப் பிரசங்கித்தபோது அவர் சொன்னார், “அதைத் தள்ளிவிட தைரியமாக முயற்சி செய்தேன், கவனிக்காமல்... போதனை முடியும் வரையில் நொடிகளை எண்ணிக் கொண்டிருந்தேன், ஆனால் போதகர் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டே இருந்தார்”. அதனால்தான் தமது சாட்சியில் அவர் அன்று அந்தக் காலையில் நான் சொன்ன ஒன்றையும் அவர் குறிப்பிடவில்லை. ஒரு வார்த்தைகூட இல்லை. ஜான் சொன்னார், “அழைப்பு கொடுக்கப்பட்டபோதுகூட நான் அதை எதிர்த்தேன்”. பிறகு அவர் சொன்னார், “போதகர் என்னிடம் ஆலோசனை சொன்னார், கிறிஸ்துவிடம் வரவேண்டும் என்றார், ஆனால் என்னால் முடியவில்லை”. அது முக்கியமானது. அது முக்கியமானது ஏன் என்றால் அப்படியாகவே உங்களில் சிலர் இப்பொழுது உணர்கிறீர்கள். நீங்கள் என்னை அவமதிக்கிறீர்கள். நீங்கள் என்னை விரும்பவில்லை. நீங்கள் என்னைக் கவனிக்க விருப்பமில்லாமல் இருக்கிறீர்கள். ஆனால் அந்த நாள் காலையில் ஜானுக்கு வேறு ஏதோ நடந்தது. நான் தொலைப்பேசிப் புத்தகத்திலிருந்து சில பக்கங்களை வாசித்திருக்க வேண்டும் பிறகு அவர் மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நான் ஏன் அதைச் சொல்லுகிறேன்? ஏன் என்றால் முன்பு கேட்ட அந்த நான்கு போதனைகள் அவருடைய கடினமான இருதயத்தில் ஊடுருவியிருக்க வேண்டும், குறிப்பாக மனச்சாட்சி பற்றிய போதனை. பாருங்கள், தேவன் தாமே அந்தப் போதனையை உபயோகித்தார் மற்ற மூன்று போதனைகள் அவருடைய பாவத்தைப் பற்றி நினைக்க வைத்தன. பிறகு தன்னுடைய போராட்டம் உண்மையாகவே எனக்கு விரோதமானதாக இல்லை என்று அவர் உணர்ந்தார். அவர் உண்மையாகத் தேவனுக்கு விரோதமாகப் போராடிக் கொண்டிருக்கிறார் என்று உணர்ந்தார். இப்பொழுது அவருடைய சாட்சியைக் கவனியுங்கள் அதில் ஜானுடைய மாற்றத்தில் நான் செய்தது மிகவும் குறைவானது என்று பார்பீர்கள். தேவனே முதலாவது நான்கு போதனைகளை அவருடைய நினைவிற்குக் கொண்டுவந்து அவரைப் பாவ உணர்வடையும்படி செய்தார். தேவனே என்னுடைய மென்மையான வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தப் பதினைந்து வயதுச் சிறுவனைப் பாவ உணர்வுக்குக் கீழாகக் கொண்டு வந்தார். அதன்பிறகு தேவனே “இவ்வளவு பலமாக கிறிஸ்துவிடம் [இழுத்தார்]”. அது என்னாலே அல்லவே அல்ல. “பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?” என்பது உண்மை. ஆனால் பிரசங்கியின் போதனைகளைத் தேவன் பயன்படுத்திப் பாவிகளை மாற்றுகிறார். தீர்க்கதரிசியாகிய யோனா சொன்னபடி, “இரட்சிப்பு கர்த்தருடையது [அவரிடமிருந்து]” (யோனா 2:9). இப்பொழுது ஜான் சாமுவேல் கேஹனுடைய முழுசாட்சியை நான் வாசிக்கும்போது அதைப்பற்றி யோசியுங்கள். என்னுடைய சாட்சி கிறிஸ்து செய்த மகத்தான காரியங்களோடு ஒப்பிடும்பொழுது என்னுடைய மாறுதலின் தருணத்தைத் தெளிவான வார்த்தைகளில் விவரிக்க நினைத்தால் அவை மிகவும் சிறியதாகக் காணப்படுகிறது. என்னுடைய மாறுதலுக்கு முன்னதாக நான் முழுவதும் கோபமும் வெறுப்புள்ளவனாகவும் இருந்தேன். என்னுடைய பாவங்களில் நான் பெருமை கொண்டு மக்களுக்கு வேதனை உண்டாக்குவதில் மகிழ்ச்சி அடைந்தேன், மற்றும் தேவனை வெறுத்தவர்களோடு நான் தொடர்பு கொண்டிருந்தேன்; பாவம் எனக்கு ஒரு வருத்தத்திற்குரிய “தவறாக” எனக்குத் தெரியவில்லை. இவ்விதமாக நான் வேண்டுமென்றே நானாக என் வழியை ஏற்படுத்திக் கொண்டேன். மிக விரைவாக என்னைச் சுற்றியுள்ள உலகம் என்னை நொறுக்கும்படியாகத் தேவன் நான் எதிர்பாராத பல வழிகளில் கிரியை செய்ய ஆரம்பித்தார். நான் மாற்றமடைவதற்கு முன்னதான வாரங்களில் நான் மரிப்பதைப்போல உணர்ந்தேன்: என்னால் தூங்க முடியவில்லை, என்னால் புன்முருவல் செய்ய முடியவில்லை, என்னால் எந்தவிதத்திலும் சமாதானத்தைக் காணமுடியவில்லை. நான் என் போதகரையும் தந்தையையும் மதித்ததில்லை அதனிமித்தம் என்னுடைய சபையில் சுவிசேஷ கூட்டங்களை நடத்தியவர்களையும் நான் பரிகாசம் செய்தது தெளிவாக என் நினைவில் இருக்கிறது. நீயும் ஜான் கேஹானை போல இழக்கப்பட்ட ஒரு பாவியாக இருக்கிறாய். என்னுடைய போதனையின் முடிவிலே நான் ஜானிடத்திலே அவர் இரட்சிக்கப்பட்டபோது சொன்னது போல உனக்கும் என்னால் சொல்ல முடியும், “நீ ஒரு பாவி. நீ இழக்கப்பட்டிருக்கிறாய். இயேசு ஒருவர் தவிர வேறொருவராலும் உன்னை இரட்சிக்க முடியாது. உன்னுடைய பாவத்திற்குரிய கிரயத்தைச் செலுத்துவதற்காகவே அவர் மரித்தார் – தமது இரத்தத்தினால் அவை அனைத்தையும் கழுவினார். நாம் பாடும் பொழுது, உங்கள் இருக்கையைவிட்டு எழுந்து இங்கே வாருங்கள்! ‘நான் இழக்கப் பட்டேன்! ஓ, இயேசுவே, நீர் சிலுவையிலே சிந்தின இரத்தத்தினால் என்னுடைய பாவங்களைக் கழுவியருளும்!’ “சிலுவையின் அருகே” என்ற பாடலின் முதல் சரணத்தை நாம் பாடும்பொழுது இறங்கி இங்கே வாருங்கள்”. ஜான் கேஹன் இரட்சிக்கப்பட்டபொழுது நாங்கள் பாடின அழைப்பின் பாடல் இது. உங்களில் அநேகர் இதை அறிந்திருக்கிறீர்கள். இதைப் பாடுங்கள். அவர்கள் பாடும்பொழுது, பலிபீடத்தின் அருகில் வந்து இயேசுவை விசுவாசியுங்கள். இயேசுவே, என்னை சிலுவையினருகே வைத்துக்கொள்ளும், நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் பிரசங்கத்திற்கு முன்னால் திரு. ஆரோன் யான்சி வாசித்த வேத பகுதி: ரோமர் 10:9-14. |
முக்கிய குறிப்புகள் ஓர் இளம் சுவிசேஷகரை மாற்ற பயன்பட்ட FIVE SERMONS USED IN THE CONVERSION டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால் “பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக்கேள்விப்படுவார்கள்?” I. முதலாவதாக, “இரட்சிப்பிற்கு அதிக தூரமாக இல்லாதவர்களை உற்சாகப் படுத்துதல்” (ஜூன் 7, 2009, ஞாயிற்றுக்கிழமை காலையில் பிரசங்கிக்கப்பட்டது). மாற்கு 12:34.
II. இரண்டாவதாக, “நவீன கால்வினிஸம் மற்றும் உண்மையான மாற்றம்”
III. மூன்றாவதாக, “ஜெபம் மற்றும் உபவாசத்தினால் மட்டும்” (ஜூன் 14, 2009, ஞாயிற்றுக்கிழமை காலையில் பிரசங்கிக்கப்பட்டது). மாற்கு 9:29.
IV. நான்காவதாக, “மனச்சாட்சி மற்றும் மாறுதல்” (ஜூன் 14, 2009, ஞாயிற்றுக்கிழமை மாலையில் பிரசங்கிக்கப்பட்டது). ரோமர் 2:15; V. ஐந்தாவது, “உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கு” (ஜூன் 21, 2009, ஜான் கேஹன் மாற்றப்பட்ட அன்று காலையில் நான் இதைப் பிரசங்கித்தேன்). எசேக்கியேல் 37:5; யோனா 2:9. |