Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




பாவ நிலங்களில் இருந்து
அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்!

BRING THEM IN FROM THE FIELDS OF SIN!
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

ஆகஸ்ட் 7, 2016 அன்று கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ்
ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, August 7, 2016

“நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா” (லூக்கா 14:23).


அநேக ஆண்டுகளாக ஆத்துமாக்களை எப்படி ஆதாயம் செய்வது என்று எனக்குத் தெரியாமல் இருந்தது. இழக்கப்பட்ட மக்களை இரட்சிப்பது மற்றும் எப்படி சபைக்குள் கொண்டு வருவது என்று எனக்குத் தெரியவில்லை. என்னால் முடிந்த வரையிலும் எல்லாவிதமான வழி முறைகளையும் முயற்சி செய்து பார்த்தேன். கைப்பிரதிகளை கொடுத்து பார்த்தேன். ஆனால் கைப்பிரதிகளைக் கொடுப்பதன் மூலமாக இழக்கப்பட்ட மக்களைச் சபைக்குள் கொண்டு வர முடியவில்லை. நான் தெருக்களில் பிரசங்கம் செய்து பார்த்தேன். ஆனால் அதன் மூலமாகவும் இழக்கப்பட்ட மக்களை சபைக்குள் கொண்டுவர முடியவில்லை. நான் மக்களுக்குத் தெருக்களிலும் அல்லது அவர்களுடைய வீடுகளுக்கு முன்பாகவும் சாட்சி கொடுத்து முயற்சி செய்து பார்த்தேன். அதுவும்கூட வேலை செய்யவில்லை. அவர்கள் இரட்சிப்புக்காக ஒரு ஜெபத்தை சொல்லுவார்கள். ஆனால் அவர்கள் சபைக்கு வரமாட்டார்கள். அவர்கள் ஜெபித்த பிறகு அவர்களுக்குப் பிறகே “தொடர்ந்து பின்பற்ற” முயற்சி செய்தேன். ஆனால் அந்த “தொடர்ந்து பின்பற்றுதலும்” அவர்களைச் சபைக்குள் கொண்டு வரவில்லை. நான் மிகவும் சோர்ந்து போனேன் மற்றும் தோல்வி அடைந்ததாக உணர்ந்தேன்.

இருந்தும் நான் விட்டுவிடவில்லை. இழக்கப்பட்ட மக்கள் மாற்றப்பட்டு சபைக்குள் கொண்டுவரப்பட ஒரு உறுதியான வழி கண்டிப்பாக இருக்குமென்று நான் அறிந்திருந்தேன். அதுதான் நமது பாடத்தில் நான் படித்தது. இதை நான் முன்பு வாசித்திருக்கிறேன், ஆனால் அது எனக்குத் திடீரென உதயமாயிற்று. அந்தப்பொழுதில் எங்களுடைய சுவிசேஷகமுறை பிறந்தது. ஆத்தும ஆதாயத்திலே இயேசுவின் வார்த்தைகள் எங்களுடைய வழிகாட்டியாக மாறினது.

“நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா” (லூக்கா 14:23).

மக்களிடம் சென்று ஒரு “பாவியின் ஜெபத்தை” செய்யச் சொல்லி – அதன் பிறகு அவர்களைச் சபைக்குள் கொண்டுவர முயற்சி செய்வதற்கு பதிலாக, நாங்கள் புதியதொரு காரியத்தைச் செய்தோம். அவர்கள் இரட்சிப்படைய முயற்சிப்பதற்கு முன்பாக அவர்களைச் சபைக்குக் கொண்டுவர நினைத்தோம். அது கிரியை செய்தது! இப்பொழுது இயேசு என்ன செய்யச் சொன்னாரோ அதையே நாங்கள் செய்து வந்தோம். என்னுடைய சுவிசேஷ போதனையின் மூலமாக அவர்கள் மாறுதல் அடைவதற்கு முன்பாக நாங்கள் “அவர்களை உள்ளே வரும்படி” வருந்திக் கூட்டிக்கொண்டு வருகிறோம்.

அநேக மக்கள் சபைக்குள் வருவதில்லை. ஆனால் சிலர் வருகிறார்கள். அவர்களில் சிலர் என்னுடைய பிரசங்கத்தைக் கேட்டு இரட்சிப்படைகிறார்கள். ஆனால் அவர்கள் உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டு வரப்பட்டவர்கள், பிறகு சபையில் நண்பர்களை ஏற்படுத்திக் கொண்டவர்கள். சுவிசேஷத்தினால் மாறுதல் அடைவதற்கு முன்பாகவே அவர்கள் சபைக்குத் தவறாமல் வருகை தந்தவர்கள்.

நான் சொன்னதுபோல, சபைக்கு வரும்படி நாங்கள் அழைத்த ஒவ்வொருவரும் வரவில்லை. அநேக மக்கள் வரவில்லை என்று இயேசுவின் உவமை நமக்கு சொன்னது. 18ம் வசனம் சொல்லுகிறதாவது, “தாங்கள் வராததற்காக அவர்களெல்லாரும் காரணம் சொல்லத் தொடங்கினார்கள்”. அநேக மக்கள் வரவே இல்லை. எங்கள் சபைக்கு வரும்படி நாங்கள் “வருந்தி அழைத்தோம்”, ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே மெய்யாக வந்தார்கள். அவர்களை “உள்ளே வரும்படி” நாங்கள் அழைத்தோம். உள்ளே என்றால் எங்கே? அதாவது சபைக்கு உள்ளே, நிச்சயமாக! உவமையில் சொல்லப்பட்டபடி அவர்கள் எங்கெல்லாம் இருந்து “உள்ளே வந்தார்கள்”? ஆனால் ஒரு சில மக்கள் மட்டுமே மெய்யாகவே சபைக்கு வந்தார்கள். அவர்கள் சக்திவாய்ந்த சுவிசேஷ போதனைகளைக் கேட்க முடிந்தது. அவர்கள் மெய்யாகவே ஒரு “பெரிய விருந்தில்” எங்களோடு சாப்பிட்டார்கள் - 16ம் வசனத்தில் சொல்லப்பட்டபடி. அவர்கள் எங்களுடன் விருந்தை அனுபவித்தார்கள் - எங்கள் சபை அங்கத்தினர் ஒருவரின் பிறந்தநாள் விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற விருந்து அது. அந்த விருந்தில் அவர்கள் எங்களோடு அற்புதமானதொரு பொழுதை அனுபவித்தார்கள்! அதன்பிறகு அடுத்த வாரம் திரும்ப வரும்படி அவர்களை அழைத்தோம்.

வந்தவர்களில் அநேகர் திரும்பவும் வரவில்லை. ஆனால் சிலர் வந்தார்கள். அவர்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கித்தோம், திரும்பத் திரும்ப, ஒவ்வொரு கூட்டத்திலும். ஒரு காலத்திற்குப் பிறகு அவர்கள் சுவிஷேசத்தைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள். அதிக காலத்திற்குப் பிறகு சிலர் பாவக் குற்றஉணர்வு அடைந்தார்கள், சிலர் இயேசுவை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டார்கள். இந்த மாலை வேளையில் அப்படியாக இங்குள்ள உங்களில் எத்தனை பேர் எங்கள் சபைக்குள் வந்தீர்கள்? நீங்கள் இன்னும் மனம் மாறாவிட்டாலும், உங்களில் எத்தனை பேர் அவ்விதமாக எங்கள் சபைக்குள் வந்தீர்கள்? எழுந்து நில்லுங்கள். (அவர்கள் நின்றார்கள்). நீங்கள் பாருங்கள்? எங்கள் சபைக்குள் அநேக மக்கள் அந்த விதமாக வந்தவர்களே ஆகும்! நாங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்படிந்தபடியினால் நீங்கள் எங்கள் சபைக்கு வந்தீர்கள். அவர் சொன்னார்,

“நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா” (லூக்கா 14:23).

“அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்” - இந்தப் பாடலை என்னோடே கூட சேர்ந்து பாடுங்கள்!

அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
   அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
பாவ நிலத்திலிருந்து அவர்களை
   உள்ளே கொண்டு வாருங்கள்;
அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
   அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
அலைந்து திரியும் அவர்களை
   இயேசுவிடம் கொண்டு வாருங்கள்.
(“Bring Them In,” Alexcenah Thomas, 19th century)

நாங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷ முறையைப் பின் பற்றினபொழுது, நாங்கள் மற்ற காரியங்களையும் தொடர்ந்து கற்றுக் கொண்டோம். யாரைக் கொண்டு வருவது என்று தேர்ந்தெடுக்க நாங்கள் கற்று கொண்டோம். முதலாவது நாங்கள் ஒவ்வொருவரையும் கொண்டு வந்தோம். ஆனால் எங்கள் சபையானது நகரத்தின் உள்ளே உள்ளது. லாஸ்ஏஞ்சலஸின் மையத்தில் உள்ள கீழ் நகரத்தில் நாங்கள் இருக்கிறோம். இங்கே இருக்கும் அநேக மக்கள் எதிர்பார்த்த அளவில் நல்லவர்களாக இல்லை. சிலர் போதையில் இருந்தார்கள். அவர்களுக்கு எங்களால் அதிகமாக உதவி செய்ய முடியவில்லை. சிலர் தங்கள் வழிகளில் பழைமையைக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் எங்களால் உதவி செய்ய முடியவில்லை. இயேசுவின் நாட்களில் “ஊனரையும், சப்பாணியையும், குருடரையும்” உள்ளே கொண்டு வரும்படி அவர் சொன்னார் (வசனம் 21). ஆனால் இயேசுவின் நாட்களில் இருந்த அந்த மக்கள் இன்றுள்ள மக்களைவிட மிகவும் நாகரீகமாகவும் தீவிரமாகவும் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களை நீங்கள் சபைக்குள் கொண்டுவர முடியும் அவர்கள் வெறிச் செயல்களைச் செய்யவும் மாட்டார்கள். ஆனால் இன்று அநேக மக்கள் கொடியவர்களாக மற்றும் ஒழுங்கற்றவர்களாக சபைக்குள் வருகிறார்கள். அதனால் தான் இயேசு தாமே தேர்ந்தெடுக்கப் பட்டவர்களைப் பற்றிச் சொன்னார். இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொன்னார்,

“நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும் சமரியா; பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்” (மத்தேயு10:5, 6).

அதன்பிறகு, அவர் இன்னும் தேர்வு செய்வதில் கவணமாக இருக்கச் சொன்னார். குறிப்பிட்ட மக்களுக்கோ, அல்லது நகரம் முழுவதுமாகவோ தொடர்ந்து சுவிசேஷம் சொல்லும்படி இயேசு சொல்லவில்லை. அவர் சொன்னார்,

“எவனாகிலும்; உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும் போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப்; புறப்படும்போது, உங்கள் கால்களில்; படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்பு; நாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு10:14,15).

கிறிஸ்து தேர்ந்தெடுப்பவராக இருக்கிறார் நாமும் அப்படியே இருக்க வேண்டும். யாரோ ஒருவர் சொன்னார், “நீங்கள் எல்லாரையும் வெற்றி கொள்ள விரும்பினால் உங்களால் ஒருவரையும் வெற்றி கொள்ள முடியாது”. எங்களுடைய முறைமையின்படி நாங்கள் சுவிஷேச ஊழியம் செய்ததில் எங்களுக்குக் கிடைத்தவர்களில் 16 முதல் 24 வயதில் உள்ள கல்லூரி இளைஞர்களே சிறந்தவர்களாகும். அந்த வயதினர்களால் எங்களுடைய சபை அதிகமாக கட்டப்பட்டது. மற்றவர்களைவிட சீன இளைஞர்களான கல்லூரி மாணவர்கள் மிகவும் எளிதாக வெற்றி கொள்ளப்பட்டார்கள் என்று நாங்கள் கண்டோம். இருந்தாலும் மற்றவர்களில் சிலரும் கிடைத்தார்கள். எங்கள் சபையில் 20 குழுக்களைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். ஆனால் எங்கள் சபையின் ஐக்கியம் கல்லூரி மாணவர்களைச் சார்ந்ததாக இருக்கிறது (அல்லது இருந்தது) என்பது உண்மை. அவர்கள் வெறும் கல்லூரி மாணவர்கள் மட்டும் அல்ல. ஆனால் அவர்கள் கடினமான போதைப் பொருள்களை முழுவதுமாக நிராகரித்த இளைஞர்கள். அவர்களை எங்கள் “குறியிலக்குக் குழு” என்று அழைத்தோம். எங்களுடைய சுவிஷேச ஊழியத்தை அவர்கள் பக்கமாகத் திருப்பினோம். அவர்களில் 50 இளம் வாலிப மக்களைக் கடந்த சில வருடங்களில் எங்கள் சபைக்குள் சேர்த்தோம்.

“நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா” (லூக்கா 14:23).

அந்தப் பாடலை மறுபடியுமாகப் பாடவும்!

அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
   அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
பாவ நிலத்திலிருந்து அவர்களை
   உள்ளே கொண்டு வாருங்கள்;
அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
   அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
அலைந்து திரியும் அவர்களை
   இயேசுவிடம் கொண்டு வாருங்கள்.

இன்று மக்களை வெற்றி கொள்ளுவது மிகவும் கடினமாகும் என்று சுவிஷேசகர்கள் சொல்லுவதை நான் கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் கடினமாகிக் கொண்டே வருகிறது என்று அவர்கள் சொல்லுகிறார்கள். நாம் கடைசி நாட்களில் வாழுகிறோம் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். உலகத்திலிருந்து ஆத்துமாக்களை வெற்றி கொள்ளுவது அது மிகவும் கடினமாக்குகிறது. கல்லூரி வளாகங்களில் அல்லது சாலை வழிகளில் மக்களைச் சந்தித்த போது ஒருவரும் தங்களுடைய தொலைபேசி எண்களை அந்நியர்களிடம் கொடுக்க மறுக்கிறார்கள் என்று மற்றவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் அவர்களுடைய கருத்துக்கள் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. எங்களைப் போல அவர்கள் இதைச் சோதித்ததில்லை. எங்களது அனுபவத்தின்படி, எங்களுக்குத் தெரியவருவது, அநேக இளைஞர்கள் மெய்யாகவே தங்களுடைய பெயர்கள் மற்றும் அலைபேசி எண்களைத் தங்களிடம் நட்பாக உள்ளவர்களிடம் கல்லூரி வளாகங்களிலே கொடுக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு வாரமும் இதைச் செய்கிறார்கள். ஒருவேளை இருபது வருடங்களுக்கு முன்பாக அதை அவர்கள் செய்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை, அங்கே தான் பிரசங்கிகளின் யோசனை செயல்படுவதில்லை. முக புத்தகம் மற்றும் சேட்டிங் மேலும் எல்லாவிதமான காரியங்களைக் கொண்ட ஒரு புதிய சகாப்தத்தில் நாம் இருக்கிறோம் என்று அவர்கள் உணராதிருக்கிறார்கள். “ஆயிரக்கணக்கான” இளைஞர்கள் மெய்யாகவே நட்பாக உள்ள அந்நியர்களிடம் இன்று தங்கள் அலைபேசி எண்களைக் கொடுக்கிறார்கள். நம்முடைய சபை மூலமாக ஒவ்வொரு வாரமும் நூற்றுக் கணக்கானவர்கள் அதைச் செய்கிறார்கள். ஆனால் நீங்கள் கல்லூரி இளைஞர்கள் பக்கமாக உங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டும், ஏனென்றால் வயதானவர்கள் தங்கள் எண்களைத் தரமாட்டார்கள். ஒவ்வொரு சுவிசேஷ முறையும் மிகவும் கடினமாக இருக்கிறது, ஒன்றும் செயல்படுவது இல்லை என்று பிரசங்கிகள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைப்பது தவறு. இயேசு சொன்னார்,

“இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்” (யோவான் 4:35).

கல்லூரிகள், சந்துவழிகள், தெருக்கள் எங்கும் வாலிப மக்கள் நிறைந்திருக்கிறார்கள். ஆனால் நாம் அவர்கள் பின்னாலே போக வேண்டும். வாஞ்சையோடும் தீர்மானத்தோடும் அவர்கள் பின்னே நாம் போக வேண்டும். நகரம் அவர்களால் நிறைந்திருக்கிறது. எப்பொழுதும் அறுவடை ஏராளமாகவே இருக்கிறது. ஒவ்வொரு பருவத்திலும் புதிய கல்லூரி மாணவர்களின் வருகை வளர்ந்து கொண்டே இருக்கிறது. இயேசு சொன்னார்,

“அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம் ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்” (மத்தேயு 9:37, 38).

அதை மறுபடியுமாக பாடுங்கள்!

அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
   அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
பாவ நிலத்திலிருந்து அவர்களை
   உள்ளே கொண்டு வாருங்கள்;
அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
   அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
அலைந்து திரியும் அவர்களை
   இயேசுவிடம் கொண்டு வாருங்கள்.

இது எளிதான ஒரு வேலை அல்ல. மக்கள் சுவிஷேச ஊழியத்திற்குச் சென்று ஒரு சில பெயர்களையும் மற்றும் தொலைபேசி எண்களையும் கொண்டு வந்ததைக் கண்டபொழுது நான் அதிர்ச்சியடைந்தேன். ஒருசிலர் பெயர்களையோ மற்றும் தொலைபேசி எண்களையோ சுவிசேஷ ஊழியத்தில் ஒன்றும் கொண்டு வரவில்லை. இது என்னை இரவுகளில் பாதித்தது. உண்மை என்னவென்றால் விளைநிலங்கள் வாலிப மக்களால் நிறைந்திருக்கிறது. “தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி” தேவனிடம் வேண்டிக்கொள்ள வேண்டுமென்று இயேசு சொன்னார். உங்களில் சிலர் சுவிஷேச ஊழியத்திற்கு போகிறீர்கள், ஆனால் அநேக பெயர்களைக் கொண்டு வருவதில்லை. நீங்கள் அநேக பெயர்களை கொண்டு வருவதில்லை ஏனென்றால் நீங்கள் பெயர்களை கொண்டு வர “உழைப்பதில்லை”. நூற்றுக்கணக்கான இழக்கப்பட்ட இளைய மக்கள் இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அவர்களுடைய பெயர்களைக் கொண்டுவர “உழைப்பதில்லை”! “உழைப்பாளிகள்” என்ற பதம் “வேலையாட்கள்” என்று மொழிப்பெயர்க்கப்பட வேண்டும்.

நீங்கள் சுவிஷேச ஊழியத்துக்குப் போகும்போது அதற்காக வேலை செய்ய வேண்டும்! நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் இல்லையானால் உங்களுக்குப் பெயர்கள் கிடைக்காது. நீங்கள் கடினமாக உழைத்து ஆத்துமாக்களை வெற்றி கொண்டு அநேக பெயர்களையும் தொலைபேசி எண்களையும் கொண்டுவர வேண்டும். அடுத்த வாரம் நீங்கள் அப்படி வேலை செய்வீர்கள் என்று நான் ஜெபம் செய்கிறேன்! சோம்பலாக இருக்க வேண்டாம்! கவனத்தைச் சிதரவிட வேண்டாம்! சும்மா நின்று கொண்டு காத்திருந்து நேரத்தைக் கடத்த வேண்டாம்! அவர்களுடைய பெயர்களைக் கொண்டுவர நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்!

“நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா” (லூக்கா 14:23).

அதைப் பாடுங்கள்!

அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
   அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
பாவ நிலத்திலிருந்து அவர்களை
   உள்ளே கொண்டு வாருங்கள்;
அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
   அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
அலைந்து திரியும் அவர்களை
   இயேசுவிடம் கொண்டு வாருங்கள்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை காலையில் நோவா சாங் ஒரு அருமையான போதனையைப் பிரசங்கித்தார். அது அவருடைய இரண்டாவது போதனை மட்டுமே. ஆனால் அது சக்தி வாய்ந்தது! நோவா சாங் சொன்னார்,

இளைய மக்கள் இன்று சந்திக்கும் பிரச்சனைகளில் பெரிய பிரச்சனை தனிமையை உணர்வதாகும். அது உண்மை என்று நான் அறிந்திருக்கிறேன்! நீ ஒரு கூட்டத்தில் இருக்கலாம். ஆனால் நீ அந்த மக்களைத் தனிப்பட்ட வகையில் மெய்யாக அறியவில்லை. நீ டேட்டிங் போகலாம், ஆனால் அது நீடித்து இருக்காது என்று உனக்குத் தெரியும். நீ காதலில் விழலாம். ஆனால் அது சீக்கிரத்தில் முடிந்து போகும். நீ ஒரு சந்து வழியாக நடந்து போகலாம், ஆனால் உன்னை ஒருவரும் அறிய மாட்டார்கள் அல்லது உனக்காகக் கவலைப்பட மாட்டார்கள். நீ முகப் புத்தகம், அல்லது சேட்டிங் செய்யலாம் - ஆனால் உன்னோடு தொடர்பு உள்ளவர்கள் உன்னைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளுவாய். அவர்கள் வெறும் இணையதள நண்பர்கள் - மெய்யான நண்பர்கள் அல்ல. இதற்குப் பதில் என்ன? இதற்குப் பதில் இங்கே “புதிய” பாப்திஸ்து கூடாரத்தில் இருக்கிறது! (Noah Song, “God Hates Loneliness!”).

ஆமாம், நோவா சரியாகச் சொன்னார்! பிள்ளைகள் இன்று தனிமையாக இருக்கிறார்கள். சிலர் மட்டும் அல்ல. எல்லாருமே தனிமையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் நேராகச் செல்லுங்கள். புன்முருவலோடு “ஹாலோ” என்று சொல்லுங்கள். பயப்பட வேண்டாம்! ஜான் கேஹான் என்னிடம் சொன்னார், “நம்முடைய சபையின் விழாவிற்கு அவர்களை அழைப்பதன் மூலம் நாம் அவர்களுக்கு நன்மை செய்கிறோம்”. அவர் சொன்னது சரியே! நாம் அவர்களுக்குப் பெரிய நன்மை செய்கிறோம் ஏனென்றால் அவர்களுக்கு என்ன தேவையோ அதை நாம் கொடுக்கிறோம். அவர்களுடைய தனிமை உணர்வை குணமாக்கத் தேவையானது என்ன. அவர்கள் நல்ல வாழ்க்கை வாழ தேவையானது என்ன. இயேசு கிறிஸ்து மூலமாகத் தேவனோடு சமாதானமாக இருக்கக் கண்டுகொள்ள வேண்டியது அவர்களுக்கு அவசியம்! நீங்கள் அவர்களோடு ஒரு விற்பனையாளரைப் போலப் பேசவில்லை, விற்பனையாளர் அவர்களிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ள முயற்சி செய்வார். இல்லை! இல்லை! நீங்கள் ஒரு விற்பனையாளரே இல்லை! நீங்கள் ஒரு சுவிசேஷகர், அவர்களிடமிருந்து எதையும் எடுத்துக் கொள்ளப் போவதில்லை! அவர்களிடம் சூழ்ச்சி செய்யப் போவதில்லை! அவர்களுக்குத் தேவையில்லாத எதையாவது விற்கப் போவதில்லை! நீங்கள் அவர்களுக்கு சிலவற்றைக் கொடுக்கப் போகிறீர்கள். அவர்களுக்கு அத்தியாவசியமாகத் தேவையானதைக் கொடுக்கப் போகிறீர்கள்! நமது சபையில் நடக்கும் விழாவிற்கு அவர்களைக் கொண்டுவர இருக்கிறீர்கள். அவர்கள் நல்ல நண்பர்களைக் கண்டுபிடிக்கக் கொண்டுவர இருக்கிறீர்கள். இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவர்கள் கேட்கும்படியாக அவர்களை வீட்டில் இருந்து சபைக்குக் கொண்டுவர இருக்கிறீர்கள் - அவருடைய நித்திய அன்பு மற்றும் இலவசமான இரட்சிப்பின் பரிசை அவர்கள் பெற்றுக் கொள்ளப் போகிறார்கள்!

“நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா” (லூக்கா 14:23).

அதைப் பாடுங்கள்!

அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
   அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
பாவ நிலத்திலிருந்து அவர்களை
   உள்ளே கொண்டு வாருங்கள்;
அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
   அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
அலைந்து திரியும் அவர்களை
   இயேசுவிடம் கொண்டு வாருங்கள்.

நீ சுவிஷேச ஊழியத்துக்குப் போகும்பொழுது பயப்பட வேண்டாம்! அவர்களுக்குத் தேவையானதை நாம் கொடுக்கப் போகிறோம். அவர்களுக்கு அது அத்தியாவசியமான தேவையானதாகும்! நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்கிறீர்கள். நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய இருக்கிறீர்கள். அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கப் போகிறீர்கள். அவர்களுடைய பெயர்களைக் கொண்டு வருவதால் அவர்களை நாம் உள்ளே கொண்டு வருகிறோம். அதனால் அவர்களுக்கு அன்பு மற்றும் அவர்கள் இதுவரையிலும் அறியாத நட்பைக் கொடுக்கப் போகிறேம் - தேவனுடைய அன்பு, பிதா மற்றும் குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் ஆச்சரிமான அன்பு - அந்த நட்பு, அந்த அரவணைப்பு, அந்த ஐக்கியம் மற்றும் “புதிய” பாப்திஸ்து கூடாரத்தின் மகிழ்ச்சியைக் கொடுக்கப் போகிறோம்!

அறுவடைக்கு நிலங்கள் ஆயத்தமாக இருக்கிறது! இப்பொழுது நீங்கள் அடுத்த வாரம் தனிப்பட்ட சுவிஷேச ஊழியம் செய்து பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களைக் கொண்டு வாருங்கள்! புதன்கிழமை இரவு சுவிஷேச ஊழியத்திற்கு எங்களோடு வாருங்கள்! வியாழக்கிழமை இரவு சுவிஷேச ஊழியத்திற்கு எங்களோடு வாருங்கள்! மறுபடியும் சனிக்கிழமை இரவு எங்களோடு வாருங்கள்! ஆமாம் - ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மறுபடியும் வாருங்கள்! ஒன்று இரண்டு மட்டும் அல்ல, கை நிறையப் பெயர்களைக் கொண்டு வாருங்கள். கை நிறையப் பெயர்களைக் கொண்டு வாருங்கள்! உங்களால் செய்ய முடியும்! பயப்பட வேண்டாம். அந்த இளைய மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவையானது உங்களிடம் இருக்கிறது! போய்ச் செய்யுங்கள்! போய்ச் செய்யுங்கள்! போய்ச் செய்யுங்கள்!

“நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா” (லூக்கா 14:23).

தயவுசெய்து எழுந்து நின்று பாடல் எண் 8ஐ பாடவும். அது ‘அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்”. அதைப் பாடுங்கள், உங்கள் கையில் உள்ள பாட்டுத் தாளில் பாடல் எண் 8. அதைப் பாடுங்கள், மற்றும் அடுத்த வாரம் அனைவரும் அதைச் செய்யுங்கள்!

கேளுங்கள்! மேய்ப்பனுடைய சத்தத்தை நான் கேட்கிறேன்,
   வனாந்தரமான மற்றும் கவர்ச்சியற்ற இருளிலே கேட்கிறேன்,
மேய்ப்பனின் மந்தையைவிட்டுத் தூரமாகப்போன
   ஆட்டை அழைக்கும் சத்தத்தைக் கேட்கிறேன்.
அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
   அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
பாவ நிலத்திலிருந்து அவர்களை
   உள்ளே கொண்டு வாருங்கள்;
அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
   அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
அலைந்து திரியும் அவர்களை
   இயேசுவிடம் கொண்டு வாருங்கள்.

அலைந்து திரிபவர்களைக் கண்டுபிடித்து,    மேய்ப்பனைப் போல உதவி செய்ய யார் போவார்கள்? இழந்து போனவர்களை மந்தையில் சேர்த்து பட்டியில் அடைத்து,
   குளிரிலிருந்து காப்பாற்றி குணமாக்க யார் உண்டு?
அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
   அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
பாவ நிலத்திலிருந்து அவர்களை
   உள்ளே கொண்டு வாருங்கள்;
அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
   அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
அலைந்து திரியும் அவர்களை
   இயேசுவிடம் கொண்டு வாருங்கள்.

வனாந்தரத்திலிருந்து கேட்கும் சத்தத்தை,
   மலைகளின் கொடுமுடியிலும் கொடுமையான இடங்களிலும்;
கேளுங்கள்! எஜமான் உங்களோடு பேசுகிறார்,
   “போங்கள் எனது ஆடுகள் எங்கு இருந்தாலும் கொண்டு வாருங்கள்.”
அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
   அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
பாவ நிலத்திலிருந்து அவர்களை
   உள்ளே கொண்டு வாருங்கள்;
அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
   அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
அலைந்து திரியும் அவர்களை
   இயேசுவிடம் கொண்டு வாருங்கள்.
(“Bring Them In,” Alexcenah Thomas, 19th century).

அதிகமான பெயர்களைக் கொண்டு வரும்படி இந்தப் போதனை உங்களை எழுப்புதல் அடையச் செய்கிறதா? இந்த இரவிலே அந்தத் தேவையை நீங்கள் பார்க்கிறீர்களா? நீங்கள் சொல்வீர்களா, “ஆமாம், டாக்டர் ஹைமர்ஸ் அவர்களே, நான் அதிகமாக செய்வேன், அடுத்த வாரத்தில்” என்று. இது உங்களுடைய ஆவலாக இருக்குமானால், உங்கள் இருக்கையை விட்டு எழுந்து முன்னுக்கு வாருங்கள். நேராக முடிந்தவரையில், மேடையை நோக்கி அருகில் வாருங்கள்! நீங்கள் வரும்பொழுது “அவர்களைக் கொண்டு வாருங்கள்” என்று எமி இசை வாசிப்பார். (அவர்கள் வருகிறார்கள்).

ஜான் சாமுவேல் கேஹன், அடுத்த வாரம் அதிகமான பெயர்களை ஒவ்வொருவரும் கொண்டுவர உதவி செய்யும்படியாகத் தேவனிடத்தில் தயவுசெய்து ஜெபிக்கவும். (ஜான் கேஹன் ஜெபிக்கிறார்). இப்பொழுது நோவா சாங் ஜெபிக்கவும் (அவர் ஜெபிக்கிறார்). எமி இந்தப் பாடலை வாசிக்கும்பொழுது, அதைப் பாடிக் கொண்டு உங்கள் இருக்கைக்குத் திரும்பிச் செல்லவும்.

அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
   அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
பாவ நிலத்திலிருந்து அவர்களை
   உள்ளே கொண்டு வாருங்கள்;
அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
   அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்,
அலைந்து திரியும் அவர்களை
   இயேசுவிடம் கொண்டு வாருங்கள்.

நீங்கள் அமரலாம். இழக்கப்பட்ட ஆத்துமாக்களை இரட்சிப்பது இயேசு கிறிஸ்துவின் பிரதானமான வேலையாகும். இயேசு சொன்னார் தாம் வந்ததன் காரணம் “இழந்து போனதை தேடவும் இரட்சிக்கவுமே வந்தேன்” (லூக்கா19:10).

நீங்கள் இதுவரையில் இரட்சிக்கப்படவில்லையானால், இயேசு உங்களை இரட்சிக்க முடியும் என்று சொல்ல நான் இங்கே இருக்கிறேன். உங்களுடைய வாழ்க்கையில் பாவத்திலிருந்து திரும்பி “முகமுகமாக” இயேசு கிறிஸ்துவிடம் வாருங்கள் - நோவா சாங் செய்தது போல. இயேசு பாடுபட்டு சிலுவையிலே மரித்தார். உங்களுடைய பாவங்களுக்குரிய கிரயத்தைச் செலுத்தும்படி, அவர் உங்களுடைய ஸ்தானத்திலே மரித்தார். உங்களுடைய எல்லா பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்க அவர் சிலுவையிலே தமது இரத்தத்தைச் சிந்தினார். நீங்கள் இயேசுவை விசுவாசிக்க விரும்பினால், தயவுசெய்து டாக்டர் கேஹன் அவர்களை இன்று இரவிலே சந்தியுங்கள், அல்லது அவருடைய வீட்டில் உள்ள அலுவலகத்துக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, டாக்டர் கேஹன் அவர்களிடம் அவரைச் சந்திக்கும் சமயத்தை உறுதி படுத்திக் கொள்ளுங்கள், அதனால் நீங்கள் இரட்சிக்கப்படுவதை பற்றி அவர் உங்களுக்கு ஆலோசனை வழங்க முடியும். தேவன் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக! ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்திற்கு முன்னால் திரு. ஆபேல் புருதோம் வாசித்த வேத பகுதி: லூக்கா 14:16-23.
பிரசங்கத்திற்கு முன்னதாகப் பாடப்பட்ட தனிப்பாடலைப் பாடியவர்
திரு. பென்ஜமின் கின்சாடு கிரிபீத்:
“Bring Them In” (Alexcenah Thomas, 19th century).