இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
கிறிஸ்துவின் காயங்கள்THE WOUNDS OF CHRIST¬ டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால் ஜூன் 26, 2016 அன்று கர்த்தருடைய நாள் காலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி “தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்” (லூக்கா 24:40). |
நான் கிறிஸ்துவின் காயங்களைப்பற்றி பிரசங்கிக்கப் போகிறேன். அவர் சிலுவையிலே ஆணிகளால் அறையப்பட்டிருந்தார். அவர் மரித்தோரிலிருந்து உயிர்தெழுந்த பிறகும்கூட அவருடைய கைகளிலும் பாதங்களிலும் ஓட்டைகள் இருந்தன. அவர் மரித்தோரிலிருந்து உயிர்தெழுந்த பிறகு அவர்களுக்கு அந்த காயங்களைக் காட்டினார். உன்னுடைய பாவங்களின் தண்டனை கிரயம் முழுவதையும் செலுத்த அவர் சிலுவையிலே ஆணிகளால் அறையப்பட்டார். உன்னுடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட வேண்டுமானால் அதற்கு ஒரேவழி இயேசுவினிடத்தில் வந்து அவரை விசுவாசிப்பது மட்டுமே. ஆனால் உன்னுடைய பாவத்தின் குற்றத்தை உணரும்வரையிலும் நீ இயேசுவை நம்பமாட்டாய். நல்லவராக மாறுவதன் மூலமாக உங்களை நீங்களே இரட்சித்துக்கொள்ள முயற்சி செய்யலாம். ஆனால் நீங்கள் ஒரு இழக்கப்பட்ட பாவி என்று ஏற்றுக்கொள்ள விரும்ப மாட்டீர்கள். இயேசு சிலுவையிலே மரித்ததன் மூலமாக உன்னுடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கக்கூடியவர் அவர் ஒருவர் மட்டுமே என்று ஏற்றுக்கொள்ளவும் விரும்ப மாட்டீர்கள். காய் பிராங் செய்தது போல நீ ஒரு பாவி என்று ஏற்றுக்கொள்ள விரும்ப மாட்டீர்கள். காய் சொன்னார், “நான் ஒரு பாவி என்று அறிந்தேன். நான் ஒரு நல்ல பிள்ளையாக இருக்க முயற்சி செய்தேன், ஆனால் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு முயற்சி செய்தாலும் என்னை நானே மாற்றிக்கொள்ள முடியவில்லை. நான் பாவங்களில் மூழ்கியவன் என்று உணர்ந்து கொண்டேன், அதனால் நான் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தவனானேன்... நான் நம்பிக்கையற்று இருக்கிறவனாய் உணர்ந்தேன்”. கடந்த ஞாயிறு காலையில் எனது செய்தியில் அதே வார்த்தைகளை வாசித்தேன், என்னால் என்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை. நான் ஒரு பாவி என்று அறிந்தேன். நான் நம்பிக்கையற்று இருக்கிறவனாய் உணர்ந்தேன். இருந்தாலும் சில மணி நேரங்களுக்குப் பிறகு ஒரு சீன பெண்ணிடம் அவள் இரட்சிக்கப்பட்டாளா என்று கேட்டேன். அவள், “ஆம்” என்று சொன்னாள். எப்படி இரட்சிக்கப்பட்டாள் என்று கேட்டேன். அவள் தானாகவே நல்லவளாக மாறினதாகச் சொன்னாள். இப்பொழுது அவள் தன் பெற்றோருக்குக் கீழ்ப்படிவதாகச் சொன்னாள். அவளாகவே தன்னை நல்லவளாக மாற்றிக் கொண்டாள்! அவள் சொன்தை நம்ப எனக்குக் கடினமாக இருந்தது! அவளாகவே தன்னை மாற்றிக் கொண்டாள். அவளாகவே தன்னை நல்லவளாக மாற்றிக் கொண்டாள்! நம்பமுடியாதது! அவள் எங்கள் சபையில் நீண்டகாலமாக இருந்தவள். உங்களை நீங்களாகவே நல்லவர்களாக மாற்றிக்கொண்டு இரட்சிப்படைய முடியாது என்ற என் பிரசங்கத்தை, அவள் மேலும் மேலும் கேட்டவள். தன்னுடைய பாவகிரயத்தை சிலுவையிலே மரித்து செலுத்தின, இயேசு ஒருவர் மூலமாக மட்டுமே, இரட்சிக்கப்பட முடியும் என்ற என்னுடைய பிரசங்கத்தை மேலும் மேலும் கேட்டவள். இருந்தாலும் அந்த பிரசங்கங்கள் அனைத்தும் அவளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை! அவள் தன்னைத் தானாகவே மாற்றிக்கொள்ள முடியும் தானாகவே இரட்சிக்கப்பட முடியும் என்று தொடர்ந்து சிந்தித்தாள். இயேசு என்று கூட அவள் குறிப்பிடவில்லை. அவருடைய கிருபாதார பலியாகிய இரத்தத்தையும் அவள் குறிப்பிடவில்லை! ஒரு முறைகூட இல்லை! இயேசு என்ற பெயரைக்கூட அவள் ஒரு முறையும் சொல்லவில்லை! இந்த காலை நேரத்தில் உங்களுக்குச் சொல்லுகிறேன் - நீ ஒரு நம்பிக்கையற்ற பாவி என்று உணராவிட்டால் நீ ஒரு போதும் இரட்சிக்கப்பட முடியாது. நீ ஒரு நம்பிக்கையற்ற பாவி என்று உணராவிட்டால் இயேசுவின் தேவையை ஒருபோதும் உணரமாட்டாய் - உனது பாவங்களுக்காக கிரயத்தை செலுத்த சிலுவையிலே மரித்த இயேசு. மற்றும் என்னுடைய இந்தக் காலைப் பிரசங்கம் உங்களுக்கு ஒன்றும் பிரயோஜனமாக இருக்காது - பரிசுத்த ஆவியானவர் உன்னுடைய பாவமுள்ள மற்றும் நம்பிக்கையற்ற நிலைமையை உணர்த்தாதவரை. உன்னுடைய பாவமுள்ள மற்றும் நம்பிக்கையற்ற நிலைமையை உணரும்போது மட்டுமே இயேசு தமது கைகளிலும் பாதங்களிலும் ஆணித்துளைகளை ஏன் அவர்களுக்குக் காட்டினார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். “தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்” (லூக்கா 24:40). தம்முடைய கைகளிலும் கால்களிலும் இருந்த காயங்களை அவர்களுக்கு ஏன் காண்பித்தார்? அதற்கு என்ன காரணம்? காயங்களை அவர்களுக்கு ஏன் காண்பித்தார்? ஏன் என்பதற்கு மூன்று காரணங்களை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன், “தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்” (லூக்கா 24:40). I. முதலாவதாக, இயேசு காயங்களை அவர்களுக்கு காண்பித்தார் அதனால் சிலுவையில் அறையப்பட்ட அதே நபர்தான் இவர் என்று நாம் அறிந்து கொள்ளுகிறோம். இயேசு சிலுவையிலே மரிக்கவில்லை என்பதாக சமரச மறையியல் ஞானக் கோட்பாடுடைய முற்பட்டகாலக் கிறிஸ்துவ சமயக் கிளையினர் சொன்னார்கள். இயேசு சிலுவையிலே மரிக்கவில்லை என்று முஸ்லிம்களின் குரான் சொல்லுகிறது. தேவன் தம்முடைய குமாரனை அப்படிப்பட்ட கொடூரமான மரணத்தை அடையும்படி விட்டிருப்பார் என்று இன்று அநேக மக்கள் நம்பாமல் இருக்கிறார்கள். இயேசுவின் சிலுவை மரணத்தைப்பற்றி அவிசுவாசம் இருக்கக்கூடும் என்று அவர் அறிந்திருந்தார். ஏன் என்பதற்கு இதுதான் முதலாவது காரணம், “தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்” (லூக்கா 24:40). இயேசு தாம் பாடுபட்டு சிலுவையிலே மரித்தார் என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினார். அதனால், சீஷர்கள் தமது காயங்களை பார்க்கவும், அதைத் தொடவும் அனுமதித்தார். அப்போஸ்தலனாகிய யோவான், கண்கண்ட சாட்சியாக, சொல்வதாவது “நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததும்” (I யோவான் 1:1). டாக்டர் வாட்ஸ் சொன்னார், பாருங்கள், அவருடைய தலையிலும், கைகளிலும், பாதங்களிலும், சிலுவையிலே, சிலுவையிலே, “தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்” (லூக்கா 24:40). II. இரண்டாவதாக, இயேசு காயங்களை அவர்களுக்குக் காண்பித்தார் அதனால் அவரே நம்முடைய பாவங்களுக்காக நமக்குப் பதிலாகப் பாடுபட்டவர் என்று நாம் அறிந்து கொள்ளுகிறோம். யோவான் ஸ்நானகன் சொன்னார், “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29). ஆனால் இயேசு நமது பாவங்களை எப்படி எடுத்துப் போடுவார் என்று சரியாகச் சொல்லவில்லை. இயேசு மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும் வரையிலும் அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை, “…அவர்தாமே தமது சரிரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்” (I பேதுரு 2:24). அவருடைய கைகளிலும் மற்றும் கால்களிலும் ஆணிபாய்ந்த தழும்புகளை பார்த்த பிறகு மட்டுமே அவர்கள் அறிந்து கொண்டார்கள், “கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுப்பட்டார்” (I பேதுரு 3:18). அதுதான் இரண்டாவது காரணம், “தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்” (லூக்கா 24:40). நம்முடைய பாவங்களுக்குரிய கிரயத்தை செலுத்தும்படியாக அவர் பாடுப்பட்டு மரித்தார் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார், அதனால் நாம் பாவம் மற்றும் நரகத்தில் இருந்து காப்பாற்றப்படமுடியும். அவர் தம்முடைய ஆணிகள் பாய்ந்த கரங்களையும் பாதங்களையும் நாம் பார்த்து சிலுவையிலே தேவனுடைய கோபம் அவர்மேல் விழுந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார், அதை நாம் அறிந்து கொள்ள “…கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு… கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்.” (ரோமர் 3:24-26) அதனால்தான், “தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்” (லூக்கா 24:40). டாக்டர் வாட்ஸ் அவர்களின் கவியைப் பாடவும்! பாருங்கள், அவருடைய தலையிலும், கைகளிலும், பாதங்களிலும், “சிலுவையிலே.” அதைப் பாடுங்கள்! சிலுவையிலே, சிலுவையிலே, “தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்” (லூக்கா 24:40). III. மூன்றாவதாக, இயேசு காயங்களை அவர்களுக்கு காண்பித்தார் அதனால் எல்லா காலங்களுக்கும் அவரே இரட்சகர் என்று நாம் அறிந்து கொள்ளுகிறோம். கிறிஸ்து தம்முடைய காயங்களையும் மற்றும் இரத்தத்தையும் பரலோகத்துக்கு எடுத்துச் சென்று நமக்கு நித்திய மீட்பை உண்டுபண்ணினார். “அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்” (எபிரெயர் 9:24). இயேசுவானவர் பரலோகத்திலே தேவனுடைய வலது பாரிசத்தில், தழும்புகளோடு தேவனுக்கு முன்பாகவும் மற்றும் தூதர்களுக்கு முன்பாகவும் உட்கார்ந்திருந்து எப்பொழுதும் நினைவுப்படுத்துவதாவது, “நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்” (I யோவான் 2:2). இருந்தாலும் உலகத்தில் அநேக மக்கள் இயேசுவை இன்று நிராகரிக்கிறார்கள். அநேக மக்கள் தங்கள் சொந்த நற்கிரியைகள் மூலமாகவும் மற்றும் தங்கள் மத நம்பிக்கை மூலமாகவும் இரட்சிக்கப்பட விரும்புகிறார்கள். அதனால் அவர்கள், கர்த்தரின் இரட்சிப்பை அளிக்கவல்ல இயேசுவைப் புறக்கணிக்கிறார்கள். இயேசு ஒருவரே தேவனை அடையக்கூடிய ஒரே வழி ஏனென்றால் அவர் மட்டுமே நம்முடைய பாவங்களுக்காகப் பாடுபட்டு மரித்து கிரயத்தைச் செலுத்தினார். வேறெந்த மத தலைவரும் அதைச் செய்யவில்லை – கன்பியுசியஸ் அல்ல, புத்தர் அல்ல, முகமது அல்ல, ஜோசப் ஸ்மித் அல்ல, மற்ற எவரும் அப்படிச் செய்யவில்லை! இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே இப்படியாகச் சொல்லப்பட முடியும், “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப் பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:5). இயேசுவுக்கு மட்டுமே இப்படியாகச் சொல்லப்பட முடியும், “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” (I தீமோத்தேயு 1:15). இயேசுவுக்கு மட்டுமே இப்படியாகச் சொல்லப்பட முடியும், “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:8). அதனால்தான், “தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்” (லூக்கா 24:40). டாக்டர் வாட்ஸ் அவர்களின் கவியைப் பாடவும்! பாருங்கள், அவருடைய தலையிலும், கைகளிலும், பாதங்களிலும், “சிலுவையின் அருகே.” கவியை மறுபடியும் பாடவும்! சிலுவையிலே, சிலுவையிலே, இயேசு இரண்டாவது முறையாகத் திரும்ப வரும்போதுகூட, தமது கைகளிலும் கால்களிலும் சிலுவையிலே ஏற்பட்ட தழும்புகளின் அடையாளத்தை உடையவராகயிருப்பார். சகரியா தீர்க்கதரிசியின் மூலமாக, கிறிஸ்து சொன்னார், “அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்” (சகரியா 12:10). வாழும்பொழுது கிறிஸ்துவினிடத்தில் திரும்பாதவர்கள், துக்கத்தோடு நரகத்திலே நித்திய காலமாகப் புலம்புவார்கள். ஸ்பர்ஜன் என்ற பெரியவர் சொன்னார், “அந்தத் திறந்த கைகளும் குத்தப்பட்ட விலாவும் உனக்கு விரோதமாகச் சாட்சியாக இருக்கும், உனக்கே விரோதமாக இருக்கும், அவரைப் புறக்கணித்து நீ மரிப்பாயானால், பொல்லாத கிரியைகள் செய்த கிறிஸ்துவின் விரோதிகளோடு நித்திய காலமாகயிருப்பாய்” (C. H. Spurgeon, “The Wounds of Jesus,” The New Park Street Pulpit, Pilgrim Publications, volume V, p. 237). “தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்” (லூக்கா 24:40). ஆனால் மறுபடியும், ஸ்பர்ஜன் சொன்னார், ஏழையான பாவியே.... நீ [இயேசுவிடம்] வருவதற்குப் பயப்படுகிறாயா? அவருடைய கைகளைப் பார் - அவருடைய கைகளைப் பார், அவைகள் உன்னை ஊக்குவிக்கவில்லையா?... அவருடைய விலாவைப் பார், அவருடைய இருதயத்திற்குச் செல்ல எளிதான வழி இருக்கிறது. அவருடைய அந்தப் பக்கம் திறக்கப்பட்டுள்ளது. அவருடைய அந்தப் பக்கம் [உனக்காக] திறக்கப்பட்டுள்ளது.... ஓ பாவியே, அவருடைய காயங்களை விசுவாசித்து உதவிபெற மாட்டாயா! அவைகள் தோல்வி அடைய முடியாது; கிறிஸ்துவின் காயங்கள் அவர்மேல் நம்பிக்கை வைப்பவர்களைக் குணமாக்கும் (ibid., page 240). “தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்” (லூக்கா 24:40). எவான்ஜிலின் பூத் என்ற, இரட்சண்ணிய சேனையின் மூத்தவர், நன்றாகச் சொன்னார், கிறிஸ்துவின் காயங்கள் திறந்து இருக்கிறது, இயேசுவிடம் வா. இயேசுவை நம்பு. உன்னுடைய பாவத்துக்கு கிரயத்தை செலுத்த இயேசு சிலுவையிலே மரித்தார். இயேசுவிடம் வா. இயேசுவை நம்பு. நீ சிறந்தவனாகமாற முயற்சிப்பதை நிறுத்து. அது உன்னை ஒருபோதும் இரட்சிக்காது. இயேசு ஒருவரால் மட்டுமே உன்னை பாவத்திலிருந்தும் மற்றும் நரகத்திலிருந்தும் இரட்சிக்க முடியும்! ஆமென். இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால், டாக்டர் ஹைமர் அவர்களுக்கு e-mail அனுப்புங்கள். அவர் உங்களிடமிருந்து பதிலைப் பெற விரும்புகிறார். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றும் குறிப்பிடவேண்டும். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் e-mail: rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம். ஆனால், முடிந்தால் ஆங்கிலத்தில் எழுதவும். தபால் மூலம் அனுப்பவிரும்பினால், அவரது விலாசம்: Dr. Hymers P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்ளலாம்: (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்களைப் பயன்படுத்த Dr. Hymers அவர்களின் அனுமதி பிரசங்கத்திற்கு முன்னால் ஆபேல் புருதோம் வாசித்த வேத பகுதி: யோவான் 20:24-29. |
முக்கிய குறிப்புகள் கிறிஸ்துவின் காயங்கள் THE WOUNDS OF CHRIST டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால் “தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்” (லூக்கா 24:40). (யோவான் 19:34, 35, 41; 20:1, 5, 6-7, 9, 19; I. முதலாவதாக, இயேசு காயங்களை அவர்களுக்கு காண்பித்தார் அதனால் சிலுவையில் அறையப்பட்ட அதே நபர்தான் இவர் என்று நாம் அறிந்து கொள்ளுகிறோம், I யோவான் 1:1.
II. இரண்டாவதாக, இயேசு காயங்களை அவர்களுக்குக் காண்பித்தார் அதனால் அவரே நம்முடைய பாவங்களுக்காக நமக்குப் பதிலாகப் பாடுபட்டவர் என்று நாம் அறிந்து கொள்ளுகிறோம், யோவான் 1:29; I பேதுரு 2:24; 3:18;
III. மூன்றாவதாக, இயேசு காயங்களை அவர்களுக்கு காண்பித்தார் அதனால் எல்லா காலங்களுக்கும் அவரே இரட்சகர் என்று நாம் அறிந்து கொள்ளுகிறோம், எபிரெயர் 9:11-12, 24; I யோவான் 2:2; யோவான் 14:6; ஏசாயா 53:5;
|