Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய
ராஜ்யத்தில் பிரவேசித்தல்

ENTERING THE KINGDOM
THROUGH MUCH TRIBULATION
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

ஏப்ரல் 24, 2016 அன்று கர்த்தருடைய நாள் காலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, April 24, 2016

“அந்தப் பட்டணத்தில் அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அநேகரைச் சீஷராக்கினபின்பு, லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பி வந்து, சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள்” (அப்போஸ்தலர் 14:21-22).


நான் சமீபத்தில் இரண்டு வாலிபரிடமிருந்து 25 வருடங்களுக்கு முன்பாக நமது சபையில் ஏற்பட்ட பெரிய பிளவைப்பற்றிப் பேசுவதை நிறுத்த வேண்டும் என்று சொல்லக் கேட்டேன். நான் எதிர்காலத்தைப்பற்றிப் பேச வேண்டும் என்றும் மற்றும் கடந்த காலத்தில் நமது மக்கள் கடந்துவந்த பயங்கரமான காரியங்களைக் குறித்துப் பேச வேண்டாம் என்றும் அவர்கள் சொன்னார்கள். நான் எப்பொழுதும் கேலிப்பரியாசம் செய்வதை கவனிக்கிறேன், விஷேசமாக நண்பர்களிடமிருந்து. இந்த வாலிபர்கள் என்னுடைய நண்பர்கள். ஆனால் அவர்கள் தவறாக இருக்கிறார்கள்! முற்றிலும் தவறாக இருக்கிறார்கள்! உண்மையாக நான் அந்த பயங்கரமான பிளவைப்பற்றி போதுமான அளவிற்கு பிரசங்கிக்கவில்லை. நான் மறுபடியும், மறுபடியும், மறுபடியுமாகக் கண்டிப்பாக அதைப்பற்றி பிரசங்கிக்க வேண்டும் என்று தேவன் எனக்குக் காட்டினார் - அந்தச் செய்தி உங்கள் இருதயத்தில் ஊடுருவிப்பாய்ந்து உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்வரை! அதை இன்னும் அதிகமாகப் பிரசங்கிக்க வேண்டும்! ஆமாம், அதிகமாக அதிகமதிகமாக - மறுபடியும், மறுபடியும், மறுபடியுமாகக் கண்டிப்பாக அதைப்பற்றி பிரசங்கிக்க வேண்டும்!

அந்தக் கதை மிகவும் எளிமையானது. அப்பொழுது 500 பேர் எங்கள் சபையில் இருந்தோம். ஆனால் எங்கள் சபையிலிருந்த ஒரு குறிப்பிட்ட “தலைவர்” நான் மிகவும் எதிரிடையாக இருப்பதாகச் சொன்னார். நான் மக்களிடம் அதிகம் எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.

அவர் என்னை ஒரு சர்வாதிகாரி மற்றும் கொடுங்கோலன் என்றும் அழைத்தார் ஏன்னென்றால் கிறிஸ்து பிரசங்கித்ததை நான் பிரசங்கித்த காரணத்தால் – “தன் சிலுவையைச் சுமந்து கொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்” (லூக்கா 14:27). அதனால் நானூறுபேர் “எளிதான” வாழ்க்கை வாழும்படி எங்கள் சபையை விட்டுப் போய்விட்டார்கள். அவர்களுக்கு என்ன சம்பவித்தது? நல்லது, அந்த “பழைய தலைவர்” ஒரு பதினான்கு அல்லது பதினைந்துபேரை தனது “எளிதான” ஞாயிறு-காலை-மட்டும் சபை என்ற அளவில் ஒரு சிறிய சபையைத் தனக்காக வைத்து கொண்டார். மற்றவர்கள் நான்கு திசையிலும் சிதறிப் போனார்கள். அவர்களில் ஒருவரும் வெற்றியுள்ள கிறிஸ்தவர்களாக மாறவில்லை, அல்லது தேவனுக்காக எதையும் அதிகமாகச் செய்யவில்லை. அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை உலர்ந்து போனது, அவர்கள் இலையுதிர் கால இலைகளைப் போல விழுந்து போனார்கள். கிறிஸ்து இவ்வாறாகச் சொன்னார், “கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல” (லூக்கா 9:62).

ஆம், இந்தக் கட்டிடத்தைக் காப்பாற்றின “அந்த 39” மக்களைப் பற்றி நான் பிரசங்கிக்கப் போகிறேன். சபையிலிருந்து பிரிந்து உலகத்துக்குத் திரும்பிப் போன அந்த நானூறு மக்களைப் பற்றியும் நான் பிரசங்கிக்கப் போகிறேன்! ஆம், பிரசங்கிக்கப் போகிறேன்! சில பின்வாங்கினவர்கள் மற்றும் சபையில் கலகம் செய்தவர்கள் என்னைப்பற்றி, “அவன் ஒரு வயதானவன் புற்றுநோய் உள்ளவன் மற்றும் அவன் அதிக காலம் இருக்க மாட்டான்” என்று சொன்னார்கள். அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்! நான் இன்னும் சாகவில்லை! நான் அறமறுப்பையும் புதிய பெலவீனமான சுவிசேஷத்தையும் இன்று இந்தக் காலை வேளையில் வெறுப்பதுபோல நாற்பது வருடங்களுக்கு முன்பாக நான் வெறுத்தேன்! ஆம், வெறுத்தல் என்பது சரியான வார்த்தை. நான் வெறுக்கிறேன்! வெறுப்பு - வெறுப்பு! பரிசுத்த வெறுப்பாக, ஏனென்றால் கிறிஸ்து தாமே அதை வெறுக்கிறார்! வேதம் சொல்லுகிறதாவது, “நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்புங்கள்” (ஆமோஸ் 5:15).

கிறிஸ்துவானவர் அறநெறி இல்லாத, சோம்பலான புதிய சுவிசேஷத்தையுடைய, பெலவீனமான லவோதிக்கேயா சபையைப் பார்த்துச் சொல்கிறார் – கிறிஸ்து சொல்வதாவது, “உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்” (வெளி. 3:16). ஆம்! “நான் உங்களை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்” (Ryrie, NASV margin). “நான் வாந்திபண்ணிப் போடுவேன்! நான் வாந்திபண்ணிப் போடுவேன்! நான் வாந்திபண்ணிப் போடுவேன், துப்புவேன், கக்குவேன் – என் வாயிலிருந்து வெளியேற்றுவேன்!” டாக்டர் சார்லஸ் சி. ரெய்ரி சொன்னார், “அந்த வெதுவெதுப்பான அல்லது மற்றவர்களோடு கலந்து போன அல்லது மையத்தில் உள்ள... கர்த்தரை விட்டு பின்வாங்கின சபையானது, அவருடைய நோக்கத்தை அழிக்கிறது” (Ryrie Study Bible; வெளிப்படுத்தல் 3:16-ன் மேற்குறிப்பு).

லவோதிக்கேய வெதுவெதுப்பான நிலைமைக்கு பரிகாரம் என்ன? புதிய சோம்பலான சுவிசேஷம் மற்றும் கலகத்தைக் குணமாக்குவற்கு மருந்து என்ன? குணமாக்கும் மருந்து நம்முடைய வார்த்கைகளில் உள்ளது:

“நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள் (அப்போஸ்தலர் 14:22).

அப்போஸ்தலனாகிய பவுல் மற்றும் அவருடைய உதவியாளனாகிய பர்னபாஸ் லிஸ்திராவுக்கும், இக்கோனியாவுக்கும் மற்றும் அந்தியோகியாவுக்கும் திரும்பி வந்தார்கள். அவர்கள் அந்த நகரங்களுக்கு திரும்ப வந்து அங்கு இருந்த புதிய கிறிஸ்தவர்களுக்குப் போதனை செய்தார்கள். டாக்டர் தாமஸ் ஹேல் தமது விமர்சனத்தில் இதைச் சொன்னார். அவர் சொன்னதாவது,

         ஒரு இடத்தில் ஒரு தரம் மட்டும் சுவிசேஷத்தை பிரசங்கம் செய்வது போதுமானது அல்ல. அங்கே உள்ள புதிய விசுவாசிகளுக்கும் போதனை செய்து அவர்களை விசுவாசத்தில் உறுதி படுத்த வேண்டியதும் அவசியமாக இருக்கிறது. இதைத் தான் பவுலும் பர்னபாசும் செய்தார்கள். அவர்கள் புதிதாக [மாற்றப்பட்டவர்கள்] வந்தவர்களை எச்சரித்து நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள். அவர்கள் கிறிஸ்துவோடு கூட சுதந்தராக இருக்க விரும்பினால் அவர்களும் அவருக்காகப் பாடுபட வேண்டியது அவசியமாகும் (Thomas Hale, M.D., The Applied New Testament Commentary, Chariot Victor Publishing, 1997; note on Acts 14:22).

23ம் வசனத்தின் விமர்சனத்தில், பவுலும் பர்னபாசும் போதனை செய்த அனைத்து கிறிஸ்தவர்களும் புதியவர்கள் என்று டாக்டர் ஹேல் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அந்தச் சபைகளில் “மூப்பர்களாக” சொல்லப்பட்டவர்களும் “புதிய விசுவாசிகளாக இருந்தார்கள்” என்று சொல்லுகிறார் (ஐபிட்., வசனம் 23). பவுலும் பர்னபாசும் போதனை செய்த அந்த புதிய கிறிஸ்தவர்களுக்கு “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்” என்று சொன்னார்கள் (அப்போஸ்தலர் 14:22). மத்தேயு ஹென்றியின் விமர்சனம் கூறுவதாவது, “அவர்களுக்கு மட்டும் அல்ல, ஆனால் நாமும் கூட கண்டிப்பாக: பரலோகத்திற்குப் போகும் அனைவரும் பாடுகளும் கஷ்டங்களும் கண்டிப்பாக எதிர்பார்த்தே ஆகவேண்டும்... ஒருவேளை இது அவர்களுக்கு அதிர்ச்சிதரக்கூடியதாக நினைக்கலாம், அவர்களை சோர்வடையவும் செய்யலாம். இல்லை... அது அவர்களுக்கு உறுதிபாட்டை உண்டாக்க உதவி செய்யும், மற்றும் கிறிஸ்துவுக்காக அவர்களை நிலைப்படுத்தும்... ‘கிறிஸ்து இயேசுவில் தேவபக்தியாக நடக்க விரும்புகிற யாவரும் துன்பப்படு(வார்)கள்’… கிறிஸ்துவின் சீஷர்கள் தங்கள் சிலுவையைச் சுமந்தாக வேண்டும்” (Matthew Henry’s Commentary on the Whole Bible; note on Acts 14:22)

இயேசுவே, நான் என் சிலுவையை எடுத்துக் கொண்டேன்,
     எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றுகிறேன்;
வெறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, கைவிடப்பட்டவனாக,
     நீரே, இதுமுதல், எனக்கு எல்லாமுமாக இரும்;
என் ஆசையெல்லாம் அழித்துப்போடும்,
     நான் தேடினதும், சேர்த்ததும், மற்றும் அறிந்ததும்
இருந்தாலும் என் செல்வாக்கு என்ன,
     தேவனும் பரலோகமும் இன்னும் என் சொந்தம்!
(“Jesus, I My Cross Have Taken” by Henry F. Lyte, 1793-1847).

“நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள்” (அப்போஸ்தலர் 14:22).

I. முதலாவதாக, இரட்சிக்கப் படுவதில் உபத்திரவம்.

இந்தப் பாடம் அதைப்பற்றிப் பேசுகிறது, “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்”. “உபத்திரவம்” என்ற வார்த்தையின் கிரேக்க பதம் “திலிப்சிஸ்” என்பதாகும். அதன் பொருள் “அழுத்தம், பாரம், கஷ்டம், நெருக்கம்” (திடமான) என்பதாகும். வேதத்தில் காணப்படும் நமது முற்பிதாக்களின் மாற்றத்தை நினைத்துப் பாருங்கள். யாக்கோபின் மாற்றம் அவைகளில் ஒன்று.

“யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான். அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி, அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினாலே அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று” (ஆதியாகமம் 32:24, 25).

யாக்கோபோடு போராடின “மனிதர்” யாரெனில் அது தேவனுடைய குமாரனாகும், அதற்கு யாக்கோபு சொன்னதாவது, “நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான். அவன் பெனியேலைக் கடந்துபோகையில், சூரியன் உதயமாயிற்று. அவன் தொடைச்சுளுக்கினாலே நொண்டி நொண்டி நடந்தான் [NASV] (ஆதியாகமம் 32:30, 31). அதன் பிறகு யாக்கோபு தனது மீதியான வாழ்நாளில் நொண்டி நொண்டி நடந்தான் ஏன் என்றால் அவன் போராடும்போது அவன் காயப்பட்டான், அவனுடைய பெயர் யாக்கோபிலிருந்து இஸ்ரவேலுக்கு மாற்றப்பட்டது “அதன் பொருள் ‘அவன் தேவனோடு போராடினான்’ என்பதாகும்” (Ryrie Study Bible). உங்களுடைய சொந்த இரட்சிப்பை நினைத்துப் பாருங்கள். நீ தேவனோடு போராடவில்லையா? நீ கிறிஸ்துவை நம்பினபோது போராட்டமில்லையா?

அதன் பிறகு பவுலின் மாற்றத்தை நினைத்துப்பார். அவன் கிறிஸ்துவினால் எதிர்கொள்ளப்பட்டான் அதற்கு அவன் ஆண்டவரே, “நீர் யார் என்றான். அதற்குக் கர்த்தர் நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே: முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்” என்றார் (அப்போஸ்தலர் 9:5). டாக்டர் ஹென்றி எம். மோரிஸ் அவர்கள் இவ்வாறு சொல்கிறார், “ஒரு முரட்டாட்டமுள்ள மிருகத்தைப்போல, தனது கடினத்தன்மையினால் துன்புறுத்தும் பொருள்மீது உதைக்கும் குதிரையைப்போல அவன் நடந்து கொண்டான்” (The Defender’s Study Bible). “அவன் நடுங்கித் திகைத்து ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான்” (அப்போஸ்தலர் 9:6). அதன்பிறகு பவுல் மாற்றமடைவதற்கு முன்பாக மூன்று நாள் குருடனாக மற்றும் உபவாசத்தோடு இருந்தான் (அப்போஸ்தலர் 9:17).

அதன் பிறகு கிறிஸ்துவ சரித்திரத்தில் பெருந் தலைவர்களைப் பற்றிப் படித்துப்பார் – அகஸ்டியன், லூத்தர், பனியன், ஒய்ட்பீல்டு, வெஸ்லி, ஸ்பர்ஜன் போன்றவர்கள். அவர்கள் இரட்சகரை நம்புவதற்கு முன்பாக - அவர்கள் அனைவரும் மிகுந்த உபத்தரவம், அழுத்தம், கடும்வேதனை, அதிக பாவ பாரத்தினால் மிகவும் ஆழமாக வேதனை அடைந்தவர்கள். எந்த விதமான துயரமும், பாவ பார உணர்வும் இல்லாமல் நீ மெய்யாக மாறுதல் அடைந்துவிட முடியும் என்று நினைக்கிறாயா? நீ தவறான தீர்மானங்களை எடுக்கலாம். ஆனால் பாவத்தில் வேதனையான உணர்த்துதல் இல்லாமல் ஒரு மனிதனும் உண்மையான மாறுதலை அடைந்துவிட முடியாது. சிலர் கொஞ்சம் கண்ணீர் விட்டுவிட்டால் அவர்கள் பெலவீனமானவர்கள் என்று பிசாசு சொல்லுவான். அதனால் அவர்கள் உணர்வடைதலை “வீரத்தோடு” எதிர்ப்பார்கள். அது வீரம் அல்ல! அது முட்டாள்தனமான பிடிவாதம் - தேவனுடைய ஆவியானவரை எதிர்த்தல்! அவர்களை இரட்சிக்க சிலுவையில் மரித்த கிறிஸ்துவை எதிர்க்கிற காரியமாகும் . அந்த மனிதன் ஒரு முகமதியனைவிட எந்த விதத்திலும் சிறந்தவன் அல்ல, அவன் சிறு பிள்ளைகளை அடிப்பதும், பெண்களைக் கற்பழிப்பதும், வாலிபர்களின் தலைகளைப் பட்டயத்தால் வெட்டுவதும் வீரம் என்று நினைக்கிறான். நீ உன்னுடைய பாவத்திற்காக எப்பொழுதாவது கண்ணீர் விட்டு இருக்கிறாயா? “நீ ஒரு போதும் அப்படிச் செய்ய வேண்டியது இல்லை”, என்று அவன் சொல்லுவான். “உங்களால் என்னைப் பெலவீனப்படுத்திவிட முடியாது. நான் ஒரு குழந்தை அல்ல அழுவதற்கு!” என்று அவன் பெருமை பாராட்டுவான். நீ பிசாசைவிட எந்த விதத்திலும் மேலானவன் அல்ல - சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு முன்பாகப் பணிந்து கொள்ள மறுப்பதால்! ஒரு மனிதன் தன் பாவத்திற்காக கண்ணீர்விட பயப்படுவானானால் அவன் தன் இருதயத்திலே கோழை. அவன் “வீரன் அல்ல” அவன் “கோழையான மனிதன்.” அது சர்வ வல்ல தேவனுக்கு முன்பாக தன் பாவத்திற்காகக் கூட்டத்தில் அழுது கண்ணீர்விட பயப்படுகிற ஒரு கோழையான கூட்டம்!

“நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் [வேதனையும் கனமான இருதயத்தோடும்] தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள் (அப்போஸ்தலர் 14:22).

II. இரண்டாவதாக, பரிசுத்தத்திற்காக உபத்திரவப் படுதல்.

மனம் மாற்றப் படும் சமயத்தில் உபத்திரவப் படுவது மட்டும் அல்ல - ஒரு கிறிஸ்துவனாக முதிர்ச்சி அடைவதற்கும் உபத்திரவம் தேவையாக இருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார்,

“அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம். மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற படியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது” (ரோமர் 5:3-5).

நான் ஜான் மெக் ஆர்த்தர் அவர்களோடு கிறிஸ்துவின் இரத்தத்தைக் குறித்த காரியத்தில் ஒத்துக் கொள்ளவே மாட்டேன். அந்த முக்கியமான தலைப்பில் அவர் மிகவும் தவறாக இருக்கிறார்! ஆனால் அவருடைய ரோமர் 5:3-5ன் விமர்சனம் மிகச் சரியாக இருக்கிறது. அவர் சொன்னார், “உபத்திரவம், அழுத்தம் என்பதற்காக உபயோகப்படுத்தப்படும் வார்த்தை, ஒலிவம் அல்லது திராட்சையிலிருந்து நசுக்கிப் பிழிந்து அதிலுள்ள திரவத்தை வெளியே எடுப்பதைக் குறிக்கும். இங்கே சாதாரணமான வாழ்க்கையில் உண்டாகும் அழுத்தமல்ல, ஆனால் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு உண்டாகும் தவிர்க்க முடியாத தொந்தரவுகள்... அப்படிப்பட்ட கஷ்டங்கள் அதிக ஆவிக்குரிய லாபத்தைக் கொடுக்கும்... பொறுமை, இந்த வார்த்தை சகிப்புத்தன்மையைக் குறிக்கிறது, பலியாகிவிடாமல் மிகப்பெரிய பாரமான அழுத்தத்தைச் சகித்துக் கொண்டு இருக்கும் திறமையாகும்... உபத்திரவங்கள் உற்பத்தி செய்யும் நன்மைகளுக்காக கிறிஸ்தவர்கள் உபத்திரவத்தில் மேன்மை பாராட்டலாம்” (The MacArthur Study Bible).

நாம் உறுதியான கிறிஸ்தவர்களாக மாறுவதற்குக் காரணமாக அமைபவை உபத்திரவம், அதிகமான அழுத்தம் மற்றும் சோதனைகள் மற்றும் இருதய பாரம். அந்த இரண்டு வாலிபர்கள் ஒலிவாஸ் பிளவைப் பற்றி நான் பேச கூடாது என்று சொன்னபொழுது, அது சாத்தானுடைய சத்தம் அவனே அவர்களுடைய மனதில் அதை வைத்தான் என்று அறிந்து கொண்டேன். அவர்கள் தவறானவர்கள். நமது உண்மையுள்ள மக்கள் இந்தச் சபையை காப்பாற்ற கடந்துவந்த பயங்கரமான சோதனைகளைப் பற்றிப் பிரசங்கிக்க வேண்டுமென்ற அதிகமான தீர்மானத்தை அது எடுக்கும்படி செய்தது. இந்தவிதமான பாடுகளை ஏற்க நீங்களே மறுத்து எப்படி நீங்கள் உறுதியான கிறிஸ்தவர்களாக மாற முடியும் என்று நம்புகிறீர்கள்? நமது சபையைக் காப்பாற்றியவர்களை “அந்த 39” என்று அழைக்கிறோம். 39 நபர்கள் கஷ்டப்பட்டார்கள் அதனால் உங்களுக்கு இந்த அருமையான ஆலயம் கிடைத்திருக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கையை உங்களுக்காகத் தியாகம் செய்தார்கள். அப்படி இருக்கும் போது அவர்களைப் பற்றி பேசக் கூடாது என்று சொல்லுவதற்கு உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது? உங்களுக்கு என்னவொரு தைரியம்! நீங்கள் கர்த்தருக்காக ஒருபோதும் ஒன்றும் தியாகம் செய்யவில்லை! உங்களுக்குத் தேவன் உண்மையுள்ளவராகக் காணப்படவில்லை என்று நீங்கள் உணர்வதில் ஆச்சரியம் இல்லை! உங்களைப் பற்றித் தவறாக நீங்களே நினைப்பதில் ஆச்சரியம் இல்லை, நீங்கள் உங்கள் விசுவாசத்தையும் வைராக்கியத்தையும் இழந்து விட்டீர்கள்! நல்ல கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டுமானால் நீங்கள் உபத்திரவத்தின் ஊடாக “அந்த 39” பேர்களைப் போலப் போயாக வேண்டும். நீங்கள் என்ன உபத்திரத்தைக் கடந்து வந்து இருக்கிறீர்கள்? ஒன்றும் இல்லை! உங்களுக்காக எல்லாம் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதினால் நீங்கள் காரியங்களை எளிதாக எடுத்துக் கொள்ளுகிறீர்கள்! நீங்கள் சோதனை மற்றும் சிலுவை சுமப்பதையும் மற்றும் தியாகங்களையும் மறுத்தால், நீங்கள் ஒருபோதும், திருமதி சாலாஸ்சார், அல்லது கார்லா பெபவுட், அல்லது டாக்டர் கேஹன், அல்லது பென் கிரிபித், அல்லது ஆபேல் புருதோம், அல்லது திரு. சாங், அல்லது திருமதி ஹைமர்ஸ் போன்றவர்களைப் போல உறுதியான கிறிஸ்தவர்களாக மாறவே முடியாது. நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்கு உங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்ய மறுத்தால் ஒருபோதும் நல்ல கிறிஸ்தவர்களாக இருக்கவே முடியாது!

அந்த இரவிலே டாக்டர் கேஹன் என்னுடைய வாழ்க்கையைப் பற்றிக் கொடுத்த பிரசங்க செய்தியை உங்களில் சிலர் விரும்பவில்லை. சிலர் இது மிகவும் எதிரிடையானது என்று நினைத்தீர்கள். “இப்படி எல்லாம் கடந்து வர யார் விரும்புவார்கள்? என்று நீங்கள் நினைத்தீர்கள். நல்லது, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இப்படியாகக் கடந்து வராமல் இருந்திருந்தால் இந்தக் காலையிலே இப்படி ஓர் ஆலயம் இங்கே இருந்திருக்காது! நான் இப்படி எல்லாம் கடந்து வராமல் இருந்திருந்தால் நீங்களும் இங்கே இருந்திருக்கவும் முடியாது! உங்கள் “சபைப் பிள்ளைகள்” இங்கே இருந்திருக்க மாட்டார்கள்! நான் இப்படியாக கடந்து வரவில்லையானால் நீங்களும் இங்கே தோன்றி இருக்கமாட்டீர்கள்! நான் உங்கள் பெற்றோரை கிறிஸ்துவுக்குள் நடத்தினேன். அவர்களுடைய விவாகத்தை நான் நடத்தி வைத்தேன். நரகரீதியில் சபை பிளவுப்பட்ட போது நான் அவர்களை மேய்த்துப் பராமரித்தேன். இவ்வகையான உபவத்திரவங்களையும் வேதனைகளையும் நான் கடந்து வராவிட்டால் சபை பிள்ளைகளாகிய நீங்கள் உயிரோடு இருந்திருக்க மாட்டீர்கள்!

என்னுடைய 75ஆவது பிறந்த நாளில் ஒரே ஒரு சபைப் பிள்ளை மட்டுமே எனக்கு ஒரு பிறந்த நாள் அட்டை அனுப்பினான்! “அந்த 39” பேரும் எனக்கு அட்டைகள் மற்றும் நன்றிக் குறிப்புகள் அனுப்பினார்கள். ஆனால் ஒரே ஒரு சபைப் பிள்ளை மட்டும் எனக்கு ஓர் அட்டை அனுப்பினான். அந்தச் சிறுவன் நம்முடைய சபையில் பிறந்து மற்றும் இரட்சிக்கப்பட்டவன், அவன் மட்டுமே, மற்ற எல்லா பிள்ளைகளிலும், பிறந்தநாள் அட்டை அனுப்பினான். அவன் எழுதின வார்த்தைகள் என் இருதயத்தை மகிழ்வித்தது,

அன்புள்ள டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு,

         75 ஆம் வருட மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் இயேசுவுக்காகச் செய்த ஊழியம் மற்றும் உண்மையுள்ள பணிகளுக்காகத் தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக! உங்களைப் போன்ற ஒரு போதகருக்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்! நீங்கள் கிறிஸ்துவுக்காகக் கடினமான வாழ்க்கை வாழ்வதற்காக நன்றி சொல்லுகிறேன். உங்கள் அற்புதமான வாழ்க்கை கிறிஸ்துவின் சாட்சியாக இருக்கிறது! நீங்கள் ஒரு உண்மையுள்ள கிறிஸ்துவனின் மாதிரியாக இருப்பதற்காக நன்றி. இயேசுவின் நிமித்தமாக உங்கள் வாழ்க்கை அற்புதமான வாழ்க்கையாக இருக்கிறது உங்கள் வாழ்க்கையின் காரணமாக அநேகர் தொடப்படுகிறார்கள். “நீங்கள் உறுதிப்பட்டவர்களாகவும், அசையாதவர்களாகவும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாகவும் இருப்பீர்களாக”. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களே, நீங்கள் எனக்கு அந்த வார்த்தையை நினைவு படுத்தினீர்கள், இந்த சபையானது முன்னேறிச் சென்று உங்களுடைய தரிசனத்தை எடுத்துச் செல்லவும் கிறிஸ்துவுக்காகச் சுடரைப் போலப் பிரகாசிக்கவும் வேண்டுமென்று ஜெபம் செய்கிறேன்! தேவன் உங்களை ஆசிர்வதித்துக் காத்துக்கொள்வாராக, கிறிஸ்துவின் பெயராலே, (அதில் அவன் தனது பெயரைக் கையெழுத்திட்டிருந்தான்). அவனுடைய பெயருக்குக் கீழே I யோவான் 2:17 எழுதி இருந்தது,

“உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”

மற்றப் பிள்ளைகளாகிய உங்கள் மீது எனக்குக் கோபம் இல்லை. இல்லவே இல்லை. நான் உங்களுடைய ஆத்துமாக்களுக்காகப் பயப்படுகிறேன். நான் உங்களுக்காக ஜெபித்துக் கொண்டும் இருக்கிறேன், சில நேரங்களில் இரவு முழுவதும் ஜெபிக்கிறேன். நான் உங்களுக்காகப் பயப்படுகிறேன் ஏனென்றால் நான் அறிந்திருக்கிறேன்,

“நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்” (அப்போஸ்தலர் 14:22).

நீங்கள் “அந்த 39” பேரைப் போற்றிப் புகழாவிட்டால் - அவர்களை நேசிக்காவிட்டால் மற்றும் அவர்களுடைய சுய தியாகத்தின் மாதிரியைப் பின்பற்றாவிட்டால் - என்னுடைய கனவுகள் மற்றும் தரிசனங்களின் மகத்தான சபையின் அங்கமாக நீங்கள் ஒருபோதும் மாற முடியாது. ஒருவன் தன் கழுத்தை கடினப்படுத்தி, “நான் இதை ஒருபோதும் செய்யமாட்டேன்”, என்று சொன்னால் அவன் தேவனுடைய ராஜ்யத்தில் நுழைய முடியாத அபாயத்தில் இருக்கிறான். வேதம் சொல்வதாவது, “அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்” (நீதிமொழிகள் 29:1). இயேசு சொன்னார்,

“ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக. இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்” (வெளிப்படுத்தல் 2:5).

தயவுசெய்து எழுந்து நின்று உங்கள் பாட்டுத்தாளில் உள்ள 3வது பல்லவியைப் பாடவும்.

எல்லாம் இயேசுவுக்கே, எல்லாம் இயேசுவுக்கே!
     என்னில் உள்ள எல்லாம் மீட்டுக்கொண்ட வல்லவர்க்கே:
என்னுடைய எல்லா நினைவுகளும் வார்த்தைகளும் செய்கைகளும்,
     என்னுடைய எல்லா நாட்களும் மற்றும் என்னுடைய நேரங்களும்.
எல்லாம் இயேசுவுக்கே! எல்லாம் இயேசுவுக்கே!
     என்னுடைய எல்லா நாட்களும் மற்றும் என்னுடைய நேரங்களும்;
எல்லாம் இயேசுவுக்கே! எல்லாம் இயேசுவுக்கே!
     என்னுடைய எல்லா நாட்களும் மற்றும் என்னுடைய நேரங்களும்.

என்னுடைய கைகள் அவருடைய கட்டளைகளை நிறைவேற்றட்டும்,
     என்னுடைய கால்கள் அவருடைய வழிகளில் ஓடட்டும்;
என்னுடைய கண்கள் இயேசுவை மட்டும் பார்க்கட்டும்,
     என்னுடைய உதடுகள் அவருடைய துதியைப் பேசட்டும்.
எல்லாம் இயேசுவுக்கே! எல்லாம் இயேசுவுக்கே!
     என்னுடைய உதடுகள் அவருடைய துதியைப் பேசட்டும்;
எல்லாம் இயேசுவுக்கே! எல்லாம் இயேசுவுக்கே!
     என்னுடைய உதடுகள் அவருடைய துதியைப் பேசட்டும்.

என் கண்கள் இயேசுவின் மேல் வைக்கப்பட்டபடியால்,
     பின்னான எல்லாவற்றையும் என் காட்சியிலிருந்து இழந்தேன்;
என் ஆவிக்குரிய தரிசனத்தில் கட்டப்பட்டேன்,
     சிலுவையில் அறையப்பட்டவரைப் பார்த்துக் கொண்டு.
எல்லாம் இயேசுவுக்கே! எல்லாம் இயேசுவுக்கே!
     சிலுவையில் அறையப்பட்டவரைப் பார்த்துக் கொண்டு;
எல்லாம் இயேசுவுக்கே! எல்லாம் இயேசுவுக்கே!
     சிலுவையில் அறையப்பட்டவரைப் பார்த்துக் கொண்டு.
(“All For Jesus,” Mary D. James, 1810-1883).

கிறிஸ்து உன்னுடைய பாவங்களுக்குறிய கிரயத்தைச் செலுத்த சிலுவையிலே மரித்தார். உன்னுடைய எல்லா பாவங்களையும் கழுவ அவர் தம்முடைய இரத்தத்தைச் சிந்தினார். உனக்கு நித்திய ஜீவனைக் கொடுக்க அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் இப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறார். நீ உன்னுடைய பாவத்திலிருந்து திரும்பி இயேசுவை நம்பும்பொழுது, அவர் உன்னை உடனடியாக இரட்சிக்கிறார். நீ இயேசுவின் மூலமாக இரட்சிப்பு அடைவதைக் குறித்து எங்களோடு பேச விரும்பினால் தயவு செய்து டாக்டர் கேஹன் அவர்களிடம் ஆடிடோரியத்திற்கு இப்பொழுதே பின்னால் செல்லவும். ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்திற்கு முன்னால் திரு. ஆபேல் புருதோம் வாசித்த வேத பகுதி: அப்போஸ்தலர் 14:19-23.
பிரசங்கத்திற்கு முன்னதாகப் பாடப்பட்ட தனிப்பாடலைப் பாடியவர் திரு. பென்ஜமின் கின்சாடு கிரிபீத்: “Living For Jesus” (Thomas O. Chisholm, 1866-1960).


முக்கிய குறிப்புகள்

அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசித்தல்
ENTERING THE KINGDOM
THROUGH MUCH TRIBULATION

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

“அந்தப்பட்டணத்தில் அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அநேகரைச் சீஷராக்கினபின்பு, லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பி வந்து, சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள்” (அப்போஸ்தலர் 14:21-22).

(லூக்கா 14:27; 9:62; ஆமோஸ் 5:15; வெளிப்படுத்தல் 3:16)

I. முதலாவதாக, இரட்சிக்கப்படுவதில் உபத்திரவம், ஆதியாகமம் 32:24, 25, 30, 31; அப்போஸ்தலர் 9:5, 6, 17.

II. இரண்டாவதாக, பரிசுத்தத்திற்காக உபத்தரவப்படுதல், ரோமர் 5:3-5;
I யோவான் 2:17; நீதிமொழிகள் 29:1; வெளிப்படுத்தல் 2:5.