இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
இயேசுவில் பழங்கால நம்பிக்கை (செய்தி எண்: 15 ஏசாயா 53) டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால் ஜூன் 7, 2015 அன்று கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி. “அவரை விட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்” (ஏசாயா 53:3). |
“அவரை விட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்”. இந்த வார்த்தைகள் இஸ்ரவேலில் “சிலுவையில் அறையப்பட்ட ஒரு மேசியா மீதுண்டான வெறுப்பினால்” சொல்லப்பட்டவை என்று ஒரு நவீனகால விமர்சகர் சொன்னார். கிறிஸ்துவின் நாட்களில் இருந்த யூத மக்களை மட்டும் குறிப்பதாக இந்த வார்த்தைகளை அவர் மட்டுப்படுத்துகிறார். ஆனால் மூடி அவர்கள் சொன்னதை நான் விரும்புகிறேன், “வேதாகமம் அதிக அளவில் வெளிச்சம் கொடுத்து விமர்சிக்கிறது”. இல்லை, இந்த வசனம் வெறும் கிறிஸ்துவை “வெறுத்த” இஸ்ரவேலரை மட்டும் குறிப்பதல்ல. இந்த வசனத்தின் ஆரம்பமே இதைத் தெளிவாக்குகிறது. அது சொல்வதென்னவென்றால், “அவர் அசட்டைபண்ணப் பட்டவர், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவர்”. யூதர்களுக்கு மட்டுமல்ல, ஆனால் “மனுஷரால்” என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது! “மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவர்” – வெறும் யூதர்களால் மட்டுமல்ல. “வேதாகமம் அதிக அளவில் வெளிச்சம் கொடுத்து விமர்சிக்கிறது.” “வேதத்தின் மேற்கோள்” என்று சீர்திருத்தவாதிகள் பேசுகிறார்கள். அதன் பொருள் வேதவசனத்தை வேதவசனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வேதாகமத்தில் ஒரு விஷயத்தைப்பற்றி மற்ற இடங்களில் தேவன் என்ன சொல்லுகிறார் என்று கண்டு கொள்ள வேண்டும். ஏசாயா 49:7ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம், “இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவர்....” (ஏசாயா 49:7). எனவே, இங்கேயும், “மனுஷர்” என்று பொதுவாகவே “பரிசுத்தருமாகிய” இயேசுவை, அசட்டை செய்வதாக பார்க்கிறோம். புதிய ஏற்பாட்டில், இயேசுதாமே சொன்னார், “உலகம் உங்களை பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்” (யோவான் 15:18). இவ்வாறாக இந்த இழக்கப்பட்ட உலகத்திலே கிறிஸ்துவை சிலர் மிகவும் கசப்பாக வெறுப்பதைப் பார்க்கிறோம். மற்றவர்கள் அவரை நினைக்காதிருக்கிறர்கள் மற்றும் தங்கள் முகங்களை அவருக்கு மறைத்துக் கொள்ளுகிறார்கள். “அவரை விட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம் ” (ஏசாயா 53:3). மனுஷர்களும் மற்றும் மனுஷிகளும் பலவிதங்களில் தங்கள் முகங்களை இயேசுவை விட்டு மறைத்துக் கொள்ளுகிறார்கள். அவைகளில் மூன்றை இங்கே கவனிப்போம். I. முதலாவதாக, முழுமையான அலட்சியத்தினால் கிறிஸ்துவைவிட்டு தங்கள் முகங்களை மறைத்துக் கொள்பவர்கள். பாஸ்டர் வார்ம்பிரான்டு அவர்கள் எழுதின, Tortured for Christ என்ற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு வருடமும் அதை வாசிப்பேன். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ரூமேனியாவிலே கம்யூனிஸ்ட்களால் அவர் அடைந்த கொடூரமான சித்தரவதைகளை சொன்னார். அவர் சொன்னார், அந்தக் கொடுமையான சித்தரவதைகளும் மிருகத்தனமான காரியங்களும் இடைவிடாமல் நடந்தன. நான் அந்த வதைசெய்பவர்களால் கொடுமை படுத்தப்பட்டு இனிமேலும் நான் அறிக்கை செய்வேன் என்ற நம்பிக்கை அவர்களுக்கு அற்றுப்போனபிறகு, அதிக திகைப்பும் மற்றும் நினைவு இழந்த நிலையில் எனது சிறையறையில் கொண்டுவந்து விடப்பட்டேன். அங்கே அரை மரணமாக, கவனிப்பாரற்ற நிலையில், கிடந்து சிறிது பெலன் கிடைத்ததும் மறுபடியுமாக வதை செய்தார்கள். இந்த நிலையிலே அநேகர் மரித்தார்கள்… அதைத் தொடர்ந்த ஆண்டுகளில், அநேக வித்தியாசமான சிறைகளில், அவர்கள் என்னுடைய நான்கு முதுகெலும்புகளை முறித்தார்கள், மற்றும் அநேக எலும்புகளை உடைத்தார்கள். அவர்கள் ஒரு டஜன் இடங்களில் என்னை செதுக்கினார்கள். அவர்கள் என்னுடைய உடலிலே தீயினால் எரித்து பதினெட்டு ஓட்டைகளைப் போட்டார்கள்... (Richard Wurmbrand, Tortured for Christ, Living Sacrifice Books, 1998 edition, pp. 38, 39). கிறிஸ்துவை வெறுக்கும் கம்யூனிஸ்ட்கள் மற்றும் மற்ற சோசியலிஸ்டுகள் அளவிட முடியாத அளவிற்கு இருக்கிறார்கள். இன்றும் அமரிக்காவிலும்கூட இயேசுவையும் அவரை பின்பற்றுகிறவர்களையும் அதிமான அளவு தாக்குதல்களை சோசியலிஸ்டுகள் நடத்தி வருவதை பார்க்கிறோம் – வெள்ளை மாளிகையிலிருந்து பள்ளி வீடுகள் வரைக்கும். டாக்டர் டி. ஜேம்ஸ் கென்னடி ஒரு ஆளுகை செய்யும் பாஸ்டர். அவர் சொல்வதாவது, “நமது காலத்தில் ‘ஏற்றுக்கொள்ளக்கூடிய’ ஒரே தவறான அபிப்பிராயம் கிறிஸ்தவர்களுக்கு விரோதமான பட்சாதாபம் ஆகும்”. இப்பொழுது உயர்ந்த பதவியிலிருக்கும் அநேக மக்கள் முழுமையான அலட்சியத்தினால் தங்கள் முகங்களை கிறிஸ்துவுக்கு மறைத்துக் கொண்டு இருக்கிறார்கள். கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களும் சிறிதளவாகிலும் கிறிஸ்துவில் இருப்பவர்களும் நிச்சயமாக நமது பாடத்தை நிறைவேற்றுகிறார்கள், “அவரை விட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்” (ஏசாயா 53:3). II. இரண்டாவதாக, அக்கறையில்லாமல் கிறிஸ்துவைவிட்டு தங்கள் முகங்களை மறைத்துக் கொள்பவர்கள். இந்த மாலையிலே இங்கிருக்கும் உங்களில் சிலரை அது குறிக்கிறது! நீங்கள் கிறிஸ்துவை காயப்படுத்த வேண்டும் என்று நினைக்கவும், அல்லது “கிறிஸ்தவம் மதியீனமானது” என்று சத்தமிட்டு சொல்லவும் மாட்டீர்கள். பாஸ்டர் வார்ம்பிரான்டு அவர்களுக்கு கம்யூனிஸ்ட்கள் செய்த கொடுமைகளை பற்றி சொன்னதை நினைத்துப் பாருங்கள். நீங்கள் சொல்வதாவது, “நான் அப்படிப்பட்ட காரியங்களை ஒருபோதும் செய்யமாட்டேன்!” நான் அதை விசுவாசிக்கிறேன். அந்த கம்யூனிஸ்ட் கொடுமைக்காரர்களில் ஒருவரைப்போல நீங்கள் இயேசுவைத் தாக்குவீர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இருந்தாலும்...! ஆனால் இருந்தாலும்...! நீங்கள் இயேசுவின்மீது வெளிர்ந்த முகத்தோடு காட்டும் அக்கறையின்மையில் நமது பாடத்தின் வசனத்தை நிறைவேற்றுகிறீர்கள். “அவரை விட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம் ” (ஏசாயா 53:3). நீங்கள் சபைக்கு வந்து அப்படியே இங்கு உட்காருகிறீர்கள். நான் இயேசுவைப்பற்றிப் பேசும்போது உங்கள் கண்கள் பளபளக்கிறது. உங்களில் சிலர் கண்களை மூடிக்கொள்கிறீர்கள். மற்றவர்கள் தங்கள் இருதயத்தை மூடிக்கொள்கிறீர்கள். வெளிர்ந்த அக்கறையின்மையால், உங்கள் முகங்களை இயேசுவிடமிருந்து மறைத்துக் கொள்கிறீர்கள். ஒரு பிரசங்கம் செய்யக்கூடிய மனிதன் இப்படி செய்யக்கூடும். நான் சென் பிரான்சிஸ்கோவின் வடக்குப் பகுதியில் உள்ள தென்பிராந்திய பாப்டிஸ்ட் செமினாரில் இருக்கும்போது, டாம் என்ற பெயருள்ள ஒரு மாணவன் அங்கு இருந்தான். அவன் என்னுடைய நண்பனாக மாறினான். டாம் ஒரு பிரசங்கி. ஆனால் ஒரு ஞாயிற்றுக்கிழமை அவனுடைய சொந்த பிரசங்கமே அவனுடைய இருதயத்தை உருவக் குத்தினது! அவன் அதற்கு மேலும் பேசமுடியாதபடி மிகவும் அதிகமாக அழ ஆரம்பித்தான். அவன் மேடையிலிருந்து இரங்கி பலிபீடத்தில் முழங்கால்படியிட்டான். பிறகு இரட்சகருக்காக அன்பில்லாததை அறிக்கையிட்டு மனஸ்தாபப்பட்டான். அங்கே, ஆச்சரியத்தோடிருந்த கூட்டதினருக்கு முன்பாக, தனது முகத்தை இயேசுவிடமிருந்து மறைத்ததை அறிக்கையிட்டு மனந்திரும்பினான். அவன் இரட்சகரை நம்பினான், பிறகு மெய்யான கிறிஸ்தவனானான். அவன் மிகவும் இளகின இருதயமுள்ளவனாக மாறினான். நான் தங்கி இளைப்பாரும் அறைக்கு என்னோடு ஒவ்வொரு வியாழன் மாலையிலும் கூடிஜெபிக்கும்படி ஒருவரை கூட்டி வருவான். அப்படி ஒருநாள் கூடும்போது 125 பேருக்கு மேலாக எனது அறையில் நிறைய, ஒருவரை ஒருவர் நெருக்க ஆரம்பித்து வெளி அறையிலும் ஜன்னலுக்கு வெளியிலும் நின்று கொண்டிருந்தனர். வேதத்திற்கு விரோதமாகப் பேசின விரியுரையாளர்களுக்கு எதிராக டாம் என் பின்னே நின்றான். அந்த செமினரி தலைவருக்கு எதிராக அவருடைய முன்கதவுக்கு என்னோடுகூட வந்தான். மற்றவர்கள் அவனை “ஹைமர்ஸின் மதவைராக்கியன்” என்று அழைத்தாலும் அதையும் பார்க்காமல் அவன் எனக்கு துணை நின்றான். அவன் இழக்கப்பட்ட தென்பிராந்திய பாப்டிஸ்ட் பிரசங்கிகளிலிருந்து பிரிந்து, உண்மையான கிறிஸ்தவனாக இருந்தான். அவன் இயேசுவுக்காக அக்கறையில்லாத வெளிர்ந்த நிலமையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதினால் அவனுடைய மனந்திரும்புதல் நிகழ்ந்தது. சில வருடங்களுக்குப் பிறகு டாம் மரித்தான். அவனுடைய மனைவிக்கு நான் கொஞ்சம் பணம் அனுப்பினேன். அந்த தென்பிராந்திய பாப்டிஸ்ட் செமினரியில் வேதத்திற்காக நடந்த போராட்டத்தில் எனக்கு துணைசெய்ததற்கு நன்றியாக என்னால் செய்ய முடிந்த குறைந்த பட்ச உதவி அவ்வளவுதான். டாமுடைய இருதயத்தை திறந்து, இயேசுவுக்கு தனது முகத்தை மறைப்பது எவ்வளவு பாவம் என்று காட்டின தேவனுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தனது சொந்த பிரசங்கத்தின் மூலமாகவே அவன் இரட்சிக்கப்பட்டதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்! ஒருவர் சொன்னார், “டாக்டர் ஹைமர்ஸ், நானும் டாமைப் போல மாறவேண்டும் என்று நீங்கள் நினைக்கமாட்டீர்கள், அப்படித் தானே?” தேவனே எனக்கு உதவி செய்வீராக! அவர் இருந்ததற்கு பாதியளவிற்கு நீங்கள் மாறினாலும் நான் பரலோக தூதர்களுக்கு முன்பாக களிகூருவேன்! இங்கே வாராவாரம் வந்து உட்கார்ந்து அலட்சியமாக, உயிர்பிக்கப்படாமல், அக்கறையில்லாமல் இருக்கும் இளைஞர்களே – டாமைப் போல சிறிதளவாவது மாறவேண்டுமென்று தேவனிடம் வேண்டுகிறேன்! இப்பொழுது, இப்படி பார்க்கலாம் - 1971 அல்லது 1972 செமினாரில் நீங்கள் இருப்பதாக வைத்துக் கொள்ளுவோம்? நான் உங்களுடைய பாஸ்டர் இல்லை, நீங்கள் வேறு சபையிலிருந்து அங்கே வந்திருக்கிறீர்கள்? யோசித்துப் பாருங்கள்! வேதத்திற்கு விரோதமாக எதிர்த்து தாக்கும் அந்த விரியுரையாளர்களுக்கு எதிராக நான் நிற்கிறேன் என்னை பின்னுக்கு இழுப்பீர்களா? யோசித்துப் பாருங்கள்! நீங்கள் என்னை பின்னுக்கு இழுப்பீர்களா? அல்லது “குளிர்ந்த” நிலையிலிருந்து வெளியே இருப்பீர்களா? யோசித்துப் பாருங்கள்! இப்பொழுது, உங்களுக்கு நீங்களே நேர்மையாக இருந்து, உங்களில் சிலர் குளிர்ந்துபோய் தனிமையாக இருப்பதை ஒத்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் வெறும் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு “ஹைமர்ஸின் மதப்பற்று” என்ற முத்திரை இல்லாமல் இந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று நினைக்கிறீர்கள், இல்லையா? நீங்கள் இருக்கும் வழியிலிருந்து உடனடியாக மாறுதலடைந்து கிறிஸ்துவுக்காக வைராக்கியமுள்ளவர்களாக மாறிவிட முடியாது, இல்லையா? யோசித்துப்பார்! சபைக்கு உள்ளும் வெளியுமாக கலக்கத்தோடு அலைந்து கொண்டிருப்பவர்கள் அந்த விடுதலையின் பாடசாலைக்குள் வரமுடியாது என்று நான் விசுவாசிக்கிறேன். இல்லை, இப்பொழுது இருக்கிற வெளிர்ந்த அக்கறையற்ற நிலைமையிலேயே இருந்திருப்பீர்கள்! நீங்கள் இப்படி சொல்ல வேண்டியதாக இருக்கும், “அவரை விட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம் ” (ஏசாயா 53:3). III. மூன்றாவதாக, அசட்டையோடு கிறிஸ்துவைவிட்டு தங்கள் முகங்களை மறைத்துக் கொள்பவர்கள். நீங்கள் நீண்ட காலமாக உங்கள் முகத்தை கிறிஸ்துவைவிட்டு மறைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் கிறிஸ்துவைப்பற்றி பேசுகிறேனா இல்லையா என்று நீங்கள் கவலைப்படுவதில்லை. நான் மனோதத்துவத்தைக் குறித்து பேசினால் நீங்கள் உங்கள் இருக்கைகளில் நிமிர்ந்து உட்கார்ந்து கவனத்தோடு செவிகொடுக்கிறீர்கள். நான் அரசியல் பேசினால் ஒவ்வொரு வார்த்தையையும் சரியாக கவனிக்க வேண்டுமென்று உங்கள் இருக்கையிலிருந்து முன்னுக்குத்தள்ளி அமர்ந்து கவனிக்கிறீர்கள். வேததீர்க்க தரிசனங்களை பற்றிப்பேசும் சமயங்களில், அந்த செய்திக்கு முழுகவனம் செலுத்துகிறீர்கள். நான் சில வாரங்களுக்கு முன்பாக வேத தீர்க்கதரிசன இஸ்ரவேலைப்பற்றி பேசினபொழுது அந்த செய்திக்கு முழுகவனம் செலுத்தி ஊக்கமாக கவனித்தீர்கள், ஏன் என்றால் அது உங்களுக்கு ஒரு புதிய பாடமாக இருந்தது. ஆனால் நான் சுவிசேஷத்திற்கு திரும்பினபொழுது, உங்கள் கண்கள் மூடிக்கொண்டது. நான் இயேசுவைப்பற்றி பேசினபொழுது நீங்கள் விருப்பமிழந்து போனீர்கள்! இளைஞர்களாகிய நீங்கள் கல்லூரி படிப்பிற்காக ஏராளமான நேரத்தையும் சக்தியையும் செலவிடுகிறீர்கள். உங்கள் வகுப்புகளில் முதன்மைபெற மணிக்கணக்காக படிக்கிறீர்கள். மிகவும் முன்னதாக எழுகிறீர்கள். அதிக நேரம் படித்து தாமதமாக படுக்கிறீர்கள். அப்படி கஷ்டப்படாவிட்டால் இப்பொழுது நல்ல இடம் கிடைக்காது என்பதனால் உங்கள் கடின உழைப்பிற்காக மகிழ்ச்சி அடைகிறேன். பள்ளியிலே கஷ்டப்பட்டு படிப்பதற்காக உங்களை வாழ்த்துகிறேன். ஆனால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஒருமணி நேரங்கூட ஒருபோதும் தரித்திருந்து வேத ஆராய்ச்சியை கவனிக்கவோ, அல்லது உங்களுக்குத் தரப்படும் அச்சிட்ட இந்த செய்திகளை படிக்கவோ, கவனம் செலுத்த மாட்டோம் என்கிறீர்கள். உங்கள் ஆத்துமாவை இரட்சிக்க உங்களுக்காக மரித்த கிறிஸ்துவைக் குறித்து படிக்க, ஒரு மணிநேரம் முன்னதாக வரவேண்டும் என்று ஒருபோதும் நினைக்க மாட்டேன் என்கிறீர்கள். உங்களை நேசித்து உங்களுக்காக பரலோகத்திலே ஜெபித்துக் கொண்டிருக்கும் கிறிஸ்துவைவிட, மற்றெல்லா உலக காரியங்களும் உங்களுக்கு பெரிதாக இருக்கிறது. இங்கே சபையிலேயும்கூட, இயேசுவைக் குறித்து பிரசங்கிக்கும் பொழுது, உங்கள் மனதை மற்ற முக்கியமான காரியங்களுக்காக அலைய விடுகிறீர்கள். நான் உங்கள் விசாரணை அறைக்கு வரும்போதெல்லாம், இயேசுவைக் குறித்து நீங்கள் பேசிக்கொள்வதை கேட்கவே முடிவதில்லை. உங்களைப்பற்றி பேசுகிறீர்கள், ஆனால் இயேசுவைப் பற்றி நீங்கள் பேசுவதை நான் கேட்கவில்லை. அவர் உங்கள் சிந்தனையில் இல்லை. நீங்கள் என்ன உணர்கிறீர்கள் - அல்லது உணராமல் இருகிறீர்கள் என்பது பற்றி மட்டுமே அதிக நேரம் பேசுகிறீர்கள்! உங்களை நிச்சயப்படுத்தி கொள்ள உணர்வுகளை பார்க்கிறீர்கள், ஆனால் இயேசுவை மட்டும் பார்க்க மாட்டோம் என்கிறீர்கள். நீங்கள் உங்கள் நிச்சயமில்லாததைப் பற்றி பேசுகிறீர்கள், ஆனால் இரட்சகரைப்பற்றி நீங்கள் பேசுவது இல்லை, அவர் ஒருவரே உங்களுக்கு நிச்சயமான இரட்சிப்பைக் கொடுக்கக்கூடியவர்! உங்களில் சிலர், “எனக்கு நொறுங்குண்ட இருதயம் இல்லை” என்று நினைக்கிறீர்கள். நான் உங்களுக்கு சொல்லுகிறேன், “நொறுங்குண்ட இருதயத்தைப் பார்க்க வேண்டாம், இயேசுவை நோக்கிப் பாருங்கள்!” ஆனால் நான் அவருடைய பெயரை குறிப்பிடும்போது உங்கள் கண்கள் மூடுவதைப் பார்க்கிறேன், மற்றும் நீங்கள், “நான் உணர வேண்டும். நான் காப்பாற்றப்பட்டேன் என்ற உணர்வு வேண்டும்!” என்று நினைக்கிறீர்கள். நான் சொல்லுகிறேன், “இல்லை, உங்களுக்கு வேண்டியது எல்லாம் இயேசு”. ஆனால் நான் அவருடைய பெயரை குறிப்பிடும்போது உடனடியாக நீங்கள் விருப்பத்தை இழக்கிறீர்கள். நான் சொல்லுகிறேன், “சிலுவையிலே இரத்தம் சிந்தி கொண்டிருக்கும் இயேசுவை, இப்பொழுது பாருங்கள்”. ஆனால் நீங்கள் உங்களையே திரும்பி பார்க்கிறீர்கள். உங்களுக்குள் ஒரு உணர்வு வரவேண்டுமென்று பார்க்கிறீர்கள்! உங்களையே நீங்கள் பார்ப்பதில் இருந்து உங்களை திருப்பி இயேசுவை நோக்கி பார்க்க வைக்க என்னால் முடியவில்லை! நான் ஒரு தீர்க்கதரிசியின் வசனத்தைக் குறிப்பிடுகிறேன், “கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்படுங்கள்” (ஏசாயா 55:6). ஆனால் உங்களை அதிகமாக நேசித்த கிறிஸ்துவை தேடாமல், நீங்கள் உங்கள் உணர்ச்சியையும் பரவசத்தையும் தேடுகிறீர்கள்! “அவரை விட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம் ” (ஏசாயா 53:3). இயேசுவைவிட்டு உங்கள் முகங்களை திருப்பாதபடி நிருத்துங்கள் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் இயேசுவை நோக்கி பார்த்த உடனே, அவர் உங்களை இரட்சிப்பார். ஒருவேளை நீ இரட்சிக்கப் பட்டதைப்போல “உணராது” இருக்கலாம். இயேசுவினால் நான் இரட்சிக்கப்பட்ட நாளில், நான் இரட்சிக்கப்பட்டதைப்போல “உணர”வில்லை. அந்த நாளில் நான் இரட்சிக்கப்பட்டேன் என்றே எனக்குத் தெரியாது, அநேக மாதங்கள் கடந்த பிறகே நான் அதை உணர்ந்தேன். அந்த நாளில் நான் அறிந்ததெல்லாம் இயேசுவே. அதற்கு முன்பாக அவரைப்பற்றின காரியங்களை நான் விசுவாசித்தேன், ஆனால் அந்த நாளிலே - நான் ஒன்று மட்டுமே சொல்ல முடியும் - அது இயேசுவே! அது மிகவும் பழங்கால நம்பிக்கை, ஆனால் அது இயேசுவில் நம்பிக்கை, மிகவும் எளிமையானது, மிகவும் புராதனமானது - ஆனால் அது இயேசுவே! பாஸ்டர் வார்ம்பிராண்டு அநேகர் கிறிஸ்துவுக்காக கம்யூனிஸ்ட்களால் கொடுமைபடுத்தப்பட்டதைப் பார்த்தார். அநேகர் கைது செய்யப்பட்டதையும் பார்த்தார், இருந்தாலும் கம்யூனிஸ்ட் காவலர்களும், இயேசுவை நம்பினார்கள். பாஸ்டர் வார்ம்பிராண்டு சொன்னார், ஒரு காலத்தில் தனிப்பட்டவர்கள் விசுவாசத்திற்குள் வந்தார்கள் - அது மிகப்பழங்கால நம்பிக்கை - இந்த நம்பிக்கை முனனேறுகிறது மற்றும் வளர்கிறது. அது ஜெயிக்கும் என்று நிச்சயத்திருக்கிறோம் ஏனென்றால் பூமிக்கடியில் உள்ள சபைகள் வெற்றிபெறுவதை மறுபடியும் மறுபடியுமாகப் பார்க்கிறோம். கிறிஸ்து கம்யூனிஸ்ட்களையும் மற்ற “விசுவாசத்தின் எதிரிகளையும்” நேசிக்கிறார். அவர்களும் கிறிஸ்துவுக்காக ஜெயிக்கப்பட வேண்டும் மற்றும் ஜெயிக்கப்பட முடியும் (Wurmbrand, ibid., p. 115). ரெவ். ஆலன் எம். பேக்கர் அவர்கள் பிரிஸ்பிட்டேரியன் எவான்ஜிலிக்கல் பெலேஸிப்பில் ஒரு சுவிசேஷகர். அவர் எழுதின “உறுதித்தன்மை” என்ற கட்டுரையில் ஜீன் 1, 2015ஆம் ஆண்டில், ஐஎஸ்ஐஎஸ் (ISIS) தீவிரவாதிகள் 21 மனிதர்களின் தலையைத் துண்டித்ததை பேக்கர் சொல்லுகிறார். அவர் சொன்னார், சிலமாதங்களுக்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் (ISIS) தீவிரவாதிகள் காபிடிக் கிறிஸ்துவர்களின் தலையைத் துண்டித்தபிறகு, முதலில் 21 பேர் என்று சொல்லப்பட்டது. ஆனால், அது 20 பேர் தான். ஒருவர் சாடுவை சேர்ந்த ஆப்பிரிக்கன், அவர் கிறிஸ்து அல்லாதவர். அவர்கள் அனைவரும் கடற்கரையில் முழங்கால் படியிட்டபொழுது கிறிஸ்துவ விசுவாசத்தை மறுதலிக்க தருணம் கொடுக்கப்பட்டது மற்றும் முகமது தான் அல்லாவின் கடைசித் தூதுவர் என்று அறிக்கை செய்யவும் சொல்லப்பட்டது, அதற்கு ஒவ்வொரு காபிடிக் விசுவாசிகளும் மறுத்துவிட்டனர். கடைசியாக சாடுவில் இருந்து வந்த ஆப்பிரிக்கருக்கு தருணம் கொடுக்கப்பட்ட போது, இந்த கிறிஸ்தவர்கள் தங்கள் கர்த்தரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்துவை மறுதலிக்க மறுத்த, அவர்களுடைய நம்பிக்கையைப் பார்த்த, அவர் சொன்னார், “அவர்களுடைய தேவன் என்னுடைய தேவன்”. அவ்வாறு சொல்லி அவர்களோடு மரித்தார், சில நொடிகள் மட்டுமே வாழ்ந்த ஒரு கிறிஸ்தவர், தனித்து நின்றவர், இறுதிவரை, மரணபரியந்தம் உண்மையாக இருந்தார் ( “Steadfastness” by Allen M. Baker, The Banner of Truth Trust, June 1, 2015. அதைப் பற்றி வாசிக்க இங்கே சொடுக்கவும்) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டு மரித்த கள்ளனுக்கு இந்த பூமியிலே சில நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது அதிலே அவன் இரட்சிக்கப்பட்டான். அவனுக்கு கொஞ்சம் மட்டுமே தெரியும். பாஸ்டர் வர்ம்பிரன்டு வார்த்தையின்படி, அவனுடைய நம்பிக்கை மிகவும் “பழமையானது”. ஆனால் அவன் இயேசுவை விசுவாசித்த தருணத்தில் இரட்சிக்கப்பட்டான். மற்றும் இரட்சகர் அவனிடம் சொன்னார், “இன்றைக்கு நீ என்னுடனேகூட பரதீசிலிருப்பாய்” (லூக்கா 23:43). இன்று இந்த மாலையிலே அந்த மனிதனைப் போலவே யாராவது இயேசுவை விசுவாசிப்பார்கள் என்று எனக்குத் தெரிகிறது. இது மிகவும் எளிமையான, “பழமையான” நம்பிக்கையாகும், ஆனால் நீங்கள் இயேசுவை சிறிதளவாவது நம்பினாலும், நிரூபனத்திற்காகப் பார்க்காமல், எந்த தற்பரிசோதனை இல்லாமல், இயேசுவை மட்டுமே நம்பினால், இயேசு உன்னை இரட்சிப்பார். எளிமையான, பெலவீனமான, “பழமையான”, குழந்தைபோன்ற விசுவாசம் இயேசுவில் வைக்க வேண்டும் - அது மட்டுமே உனக்கு தேவையானது. ஒருமுறை கூட உன்னைத் திரும்பிப் பார்க்காதே. ஒருமுறை கூட எந்தவிதமான உணர்வையும் எதிர்ப்பார்க்காதே. இயேசுவை மட்டுமே பார்த்துவிடு. அதை விடுத்து வேறெதையும் நினைக்காதே. அதை பரிசோதிக்காதே. அதை ஆராய்ச்சி செய்யாதே. இயேசுவை விசுவாசி அவ்வளவுதான். மற்ற எல்லாவற்றையும் இயேசு பார்த்துக் கொள்ளுவார். ஒரு வேளை நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தாலும், இயேசுவின் மேலுள்ள இந்த விசுவாசத்தின் விதை வளரும். ஆனால் நீங்கள் கண்டிப்பாக இயேசுவையே நம்ப வேண்டும் - எப்பொழுதும் மிக சிறதளவாக, எப்போதும் மிக எளிமையாக, எப்போதும் இருக்கும் இடத்திலிருந்தே, எப்போதும் மிகவும் பழமையாக. அவ்வளவாக நீங்கள் இயேசுவை விசுவாசிக்கலாம். நீங்கள் அவரிடம் போகலாம், நிச்சயத்திற்காக உங்களுடைய சொந்த உணர்வுகளை சோதிக்காதபடிக்கு, அவரிடமே எல்லாவற்றையும் விட்டுவிடலாம். இயேசுவிடம் விட்டுவிடு. பிறகு, ஒருவேளை நீங்கள் இரவில் தூங்கிக் கொண்டிருந்தாலும், இயேசுவின் மேலுள்ள இந்த விசுவாசத்தின் விதையானது, பாஸ்டர் வார்ம்பிராண்டு சொன்னதுபோல, “வளரும் மற்றும் முன்னேறும்”. ஒரு மிகவும் பெலவீனமான, பழமையான, சிறகடிக்கும் நம்பிக்கையை இயேசுவின் மீது வைப்பதே உனக்குத் தேவையானது! சிறிது நேரத்திற்கு முன்பாக திரு கிரிப்பித் பாடின பாடலைப் பாடுங்கள். அது இயேசுவில் இருக்கும் எளிமையான, எந்த உணர்வும் இல்லாத நம்பிக்கையைக் குறித்துப் பேசுகிறது! நான் ஆயிரம் வழிகளில் வீணாக முயற்சித்தேன் சமீபத்திலே ரஷியாவிலிருந்த ஒரு மனிதனிடமிருந்து எனக்கு ஒரு இ-மெயில் வந்தது. இந்த செய்தியை எங்களுடைய இணையதளத்தில் அவர் பார்த்திருக்கிறார். அவர் சொன்னார், “என்னுடைய பெயர் விளாடிமிர். கடந்த சில நாட்களாக, நான் உங்களுடைய செய்தியை ரஷிய மொழிப்பெயர்ப்பில் படித்தேன். உங்களுடைய வார்த்தைகள் மூலமாக தேவன் என்னைத் தொட்டார் நான் இன்னும் அந்த செய்தியைப் பற்றி நினைத்துக் கொண்டே இருக்கிறேன். எனக்காக ஜெபம் பண்ணுங்கள்”. இதுதான் விசுவாசத்தின் விதை! அது நடப்பட்டதிலிருந்து, நீ தூங்கும் போதும் வளர்ந்து கொண்டே இருக்கும்! உன்னுடைய பாவங்களுக்கான கிரயத்தை செலுத்த இயேசு சிலுவையிலே மரித்தார். உன்னுடைய எல்லா பாவங்களை சுத்தம் பண்ண அவருடைய இரத்தம் தயாராக உள்ளது. அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார். இப்பொழுது அவர் பிதாவின் வலது பாரிசத்தில் உயிரோடு இருக்கிறார். அவரை மட்டும் நம்பு. அவரை மட்டும் நம்பு. இயேசுவின் மீது பெலவீனமான மற்றும் பழமையான நம்பிக்கை என்றாலும் ஏற்றுக்கொள்ளப்படும். அவரை நம்புகிற அனைவரையும் அவர் இரட்சிப்பார்! அதன்பிறகு வேதத்தை விசுவாசிக்கும் ஒரு சபைக்கு போ, அந்த சபையின் கதவு திறக்கும் போதெல்லாம் அங்கே இரு! கிறிஸ்துவில் வளருவதற்கு அதுதான் வழி! ஒரு கிறிஸ்துவன் ஆவதற்கு நீ சபைக்குப் போக வேண்டியதில்லை என்று அநேகர் சொல்லுவார்கள். அவர்களை நம்பாதே! பரலோகப் பிதாவே, இந்த செய்தியைக் கேட்கிற அல்லது படிக்கிற யாராக இருந்தாலும் எளிமையான விசுவாசத்தோடு இயேசுவுக்குள் வரவேண்டுமென்றும் - இரட்சிக்கப்பட வேண்டுமென்றும் அவருடைய நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். அவருடைய பெயராலே, ஆமென். இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால், டாக்டர் ஹைமர் அவர்களுக்கு e-mail அனுப்புங்கள். அவர் உங்களிடமிருந்து பதிலைப் பெற விரும்புகிறார். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றும் குறிப்பிடவேண்டும். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் e-mail: rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம். ஆனால், முடிந்தால் ஆங்கிலத்தில் எழுதவும். தபால் மூலம் அனுப்பவிரும்பினால், அவரது விலாசம்: Dr. Hymers P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்ளலாம்: (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்களைப் பயன்படுத்த Dr. Hymers அவர்களின் அனுமதி பிரசங்கத்திற்கு முன்னால் ஆபேல் புருதோம் வாசித்த வேத பகுதி: லூக்கா 23:39-43. |
முக்கிய குறிப்புகள் இயேசுவில் பழங்கால நம்பிக்கை (செய்தி எண்: 15 ஏசாயா 53) டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால் “அவரை விட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம் ” (ஏசாயா 53:3). (ஏசாயா 49:7; யோவான் 15:18) I. முதலாவதாக, முழுமையான அலட்சியத்தினால் கிறிஸ்துவைவிட்டு தங்கள் முகங்களை மறைத்துக் கொள்பவர்கள், ஏசாயா 53:3. II. இரண்டாவதாக, அக்கறையில்லாமல் கிறிஸ்துவைவிட்டு தங்கள் முகங்களை மறைத்துக் கொள்பவர்கள், ஏசாயா 53:3. III. மூன்றாவதாக, அசட்டையோடு கிறிஸ்துவைவிட்டு தங்கள் முகங்களை மறைத்துக் கொள்பவர்கள், ஏசாயா 55:6; 53:3; லூக்கா 23:43. |