இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
இயேசு கிறிஸ்து தாமேJESUS CHRIST HIMSELF டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் |
எனது மனைவி இல்லினாவுக்கும் எனக்கும் இது ஒரு சிறந்த நாள். எங்கள் இருவருடைய பிறந்த நாட்களும் இன்று கொண்டாடப்பட்டது. இந்த சிறந்த நாளான, ஏப்ரல் 12ஆம் தேதி, என்னுடைய எழுபத்தினாலாவது பிறந்தநாள் ஆகும். 1958ல் என்னுடைய ஊழிய அழைப்பின் ஐம்பத்தி ஏழாவது ஆண்டு நிறைவு நாளும் இன்றுதான். ஆனால், நம்மில் அநேகருக்கும், நமது சபைக்கும் இன்று ஒரு சிறந்த நாளாகும். சரியாக நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஆறு அல்லது ஏழு இளம் மக்களோடு, மேற்கு லாஸ் ஏன்ஜல்ஸில் பெரிய பல்கலைகழகமான, UCLAவின் ஒரு சில பிளாக்குகளிலிருந்து, வெஸ்டுஉட் மற்றும் வில்சையர் போல்வேர்டுடின் மூலையில் இருந்த அப்பார்டுமென்ட்டில் இந்தச் சபையை நான் ஆரம்பித்தேன். இரண்டு மக்கள் மட்டும் இன்னும் இருக்கிறோம், அவர்கள் திருவாளர் ஜான்குக் மற்றும் நான் மட்டுமே. தேவனுடைய கிருபையினாலே, ஜானும் நானும் மட்டுமே இங்கே இந்தக் காலை வேளையிலே இருக்கிறோம் – நாற்பது வருடங்களுக்குப் பிறகு. இயேசு கிறிஸ்து ஸ்தோத்தரிக்கப்படுவாராக! இந்தச் சபையானது நாற்பது வருட சோதனைகளைக் கடந்து வந்தது. இஸ்ரவேல் மக்கள் நாற்பது வருடங்களை வனாந்தரத்திலே கடந்து வந்ததுபோல, இந்தச் சபையும் அநேக கஷ்டங்கள், அநேக பாடுகள், மற்றும் அதிகமான இடுக்கண்களைக் கடந்து வந்தது. அதைப்பற்றி அதிகமாக இன்று இரவில் நான் சொல்லுவேன். ஆனால் இங்கே நாம், லாஸ் ஏன்ஜல்ஸ் டவுன்டவுனின் மையமான இடத்தில் ஒரு பெரிய சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் சபையாக இருக்கிறோம். எல்லாவிதமான கஷ்டங்களின் ஊடாக, தேவன் நம்மோடு இருந்து மற்றும் நமது சபையின் நாற்பதாம் ஆண்டின் நிறைவை, ஒரு பெரிய வெற்றியாக கொண்டாட, இன்று நமக்குக் கொடுத்தார் என்று நாம் அறிந்திருக்கிறோம்! இயேசு கிறிஸ்து ஸ்தோத்தரிக்கப்படுவாராக! பாஸ்டர் ரோகர் ஹூப்மேன் கடந்த இரவு நமது ஜெபகூட்டத்தில் பேசினார். அவர் மறுபடியுமாக இன்று இரவு ஆண்டு நிறைவு விழாவில் பேசுவார். ஆனால் பாஸ்டர் ஹூப்மேன் இன்று காலை பிரசங்கிக்க வேண்டும் என்று நான் கேட்டபோது மறுத்துவிட்டார். அவர் சொன்னார், “டாக்டர் ஹைமர்ஸ் அவர்களே, ஞாயிற்றுக்கிழமை காலையில் நீங்கள் பிரசங்கிப்பதை நான் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று. பிறுகு, நான் என்ன சொல்ல வேண்டும் என்று ஜெபித்தபொழுது, மற்றொரு பாப்டிஸ்டு சபையில், ஆகஸ்டு 2010ல் நான் கொடுத்த ஒரு போதனையைத் திரும்ப பிரசங்கிக்க வேண்டும் என்று நான் நினைவு படுத்தப்பட்டேன். தயவுசெய்து என்னோடுகூட எபேசியர், இரண்டாம் அதிகாரத்துக்குத் திருப்பிக்கொள்ளவும். இது ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமத்தில் 1251ஆம் பக்கத்தில் இருக்கிறது. எபேசியர் 2:19, 20ஐ நான் வாசிக்கும்போது எழுந்து நிற்கவும். “ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசி களுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளென்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசு கிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்” (எபேசியர் 2:19, 20). நீங்கள் அமரலாம். இங்கே இந்த வசனங்களில் அப்போஸ்தலனாகிய பவுல் சபை தேவனுடைய வீட்டார் என்று நமக்குச் சொல்லுகிறார். அதன்பிறகு அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களின் அஸ்திபாரத்தின்மேல் சபை கட்டப்பட்டிருக்கிறது என்றும் நமக்குச் சொல்லுகிறார், ஆனால் அதற்கு இயேசுகிறிஸ்து தாமே “பிரதான மூலைக்கல்லாயிருக்கிறார்.” டாக்டர் வெர்னான் மெக்ஜீ இதன் அர்த்தத்தை சொன்னார் “கிறிஸ்துவின் கன்மலைமீது அந்த சபை கட்டப்பட்டு உள்ளது” (Thru the Bible, Volume V, Thomas Nelson, p. 241; note on Ephesians 2:20). டாக்டர் எ. டி. ராபர்ட்சன் சொன்னார், “அக்ரோகோனியாஸ்... பிரதான அஸ்திபாரமான கல்” (Word Pictures, Broadman, 1931; note on Ephesians 2:20). இயேசுகிறிஸ்து தாமே நமது சகல வேலைகளிலும் அஸ்திபாரமாக, மற்றும் நமது சகல வாழ்க்கையிலும் அஸ்திபாரமாக இருக்கிறார். “இயேசுகிறிஸ்து தாமே” இந்த சபைக்கு அஸ்திபாரமாக இருக்கிறார். இந்தக் காலையில் நமது பாடமாக எபேசியர் 2:20ன் கடைசி வார்த்தைகளை நான் எடுத்துக்கொள்ளுகிறேன். “இயேசுகிறிஸ்து தாமே” (எபேசியர் 2:20). இந்தப் போதனையின் கருபொருள் இயேசுகிறிஸ்து தாமே ஆகும். கிறிஸ்தவ விசுவாசம் அடங்கி இருப்பது வேறொன்றும் இல்லை அதிஅற்புதமான இயேசுகிறிஸ்து தாமே ஆகும். இயேசுகிறிஸ்துவைப் போல ஒருவரும் ஒருபோதும் இருந்ததும் இல்லை மற்றும் ஒருபோதும் இருக்கப்போவதுமில்லை. அவர் மனித சரித்திரத்தில் முற்றிலும் ஒப்பற்றவராகும். இயேசுகிறிஸ்து தாமே தேவ மனிதனாக இருக்கிறார். இயேசுகிறிஸ்து தாமே பரலோகத்திலிருந்து இறங்கி வந்தவர் மற்றும் மனிதர்கள் மத்தியில் வாழ்ந்தார். இயேசுகிறிஸ்து தாமே நமது பாவங்களுக்காகப் பாடுபட்டார், இரத்தம் சிந்தினார் மற்றும் மரித்தார். நம்மை நீதிமான்களாக்க இயேசுகிறிஸ்து தாமே மரித்தோரிலிருந்து சரீரபிரகாரமாக உயிர்த்தெழுந்தார். இயேசுகிறிஸ்து தாமே தேவனுடைய வலது பாரிசத்துக்கு ஏறிசென்றார் நமக்காக ஜெபத்தில் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். இயேசுகிறிஸ்து தாமே தமது ராஜ்யத்தை பூமியின்மேல் நிறுவி ஒரு ஆயிரம் வருடங்கள் அரசாட்சி செய்ய திரும்ப வரப்போகிறார். அதுதான் இயேசுகிறிஸ்து தாமே ஆகும்! அந்தப் பல்லவியை எழுந்து நின்று பாடுங்கள்! இயேசுவை மட்டுமே, நான் பார்ப்பேனே,
இயேசுவை மட்டுமே, அவரன்றி வேறில்லை,
அதன்பிறகு எனது பாடல் எப்பொழுதும் இப்படி இருக்கும் –
இயேசு! இயேசு மட்டுமே!
(“இயேசுவை மட்டுமே, நான் பார்ப்பேனே,” நீங்கள் அமரலாம். இயேசுகிறிஸ்து தாமே என்ற பாடம் மிகவும் ஆழமானது, மிகவும் விஸ்தாரமானது, மற்றும் மிகவும் முக்கியமானது அதை ஒரு போதனையில் ஒருபோதும் நம்மால் விவரிக்க முடியாது. இயேசுகிறிஸ்து தாமே என்பதைப்பற்றி இந்தக் காலையில் நாம் சில கருத்துக்களை மட்டுமே தொடமுடியும். I. முதலாவது, இயேசுகிறிஸ்து தாமே மனித வர்க்கத்தின் மூலமாக நிந்திக்கப்பட்டார் மற்றும் புறக்கணிக்கப்பட்டார். சுவிசேஷக தீர்க்கதரிசியாகிய ஏசாயா இதைத் தெளிவாக்குகிறார் அவர் சொன்னபொழுது, “அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார், அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டை பண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்” (ஏசாயா 53:3). டாக்டர் டோரி சொன்னார், “இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைக்க [கொள்ள] தவறுவது அதிஸ்டவசமல்லாதது அல்ல, அது ஒரு பாவம், ஒரு துக்ககரமான பாவம், ஒரு குற்றமுள்ள பாவம், ஒரு அழிக்கும் பாவம்” (R. A. Torrey, D.D., How to Work for Christ, Fleming H. Revell Company, n.d., p. 431). தீர்க்கதரிசியாகிய ஏசாயா கிறிஸ்துவை நிந்திக்கும் மற்றும் புறக்கணிக்கும் இந்தப் பாவத்தை விவரித்தார், கிறிஸ்துவிடம் இருந்து தங்கள் முகங்களை மறைத்துக்கொள்ளும் இழக்கப்பட்ட மக்களுக்கு உண்டாகும் உள்ளான சீரழிவை விவரித்தார். மனிதனுடைய முழுமையான சீரழிவின் மிகப்பெரிய நிரூபணம் என்னவென்றால் அவர்கள் இயேசுகிறிஸ்துவைப் பற்றி மிகவும் குறைவாக நினைப்பார்கள். இழக்கப்பட்ட மனித வர்க்கம் நித்திய தண்டனையான அக்கினி கடலுக்குப் பாத்திரர் ஆவார்கள் என்பதற்கு மிகப்பெரிய நிரூபணம் என்னவென்றால் அவர்கள் துணிகரமாக மற்றும் வழக்கமாக அவரை விட்டு தங்கள் முகங்களை மறைப்பார்கள். ஒரு மாற்றப்படாத நிலையில் மனிதர் இயேசுகிறிஸ்துவை நிந்திப்பார்கள். மனிதனுடைய முழுமையான சீரழிவில், அவர்கள் இயேசுகிறிஸ்துவைப் பற்றி உயர்வாக நினைக்கமாட்டார்கள். உனது மனசாட்சியில் குத்தப்படும் வரையில், உனது பாவத்தினால் நீ உணர்த்தப்படும்வரையிலும், உனது இருதயம் தேவனுடைய காரியத்தில் மரித்ததாக உணரும் வரையிலும், நீ தொடர்ந்து இயேசுகிறிஸ்துவை நிந்திப்பாய் மற்றும் புறக்கணித்துக்கொண்டே இருப்பாய். நமது சபையில் போதனைக்குப் பிறகு விசாரணை அறையிலே, அது நடப்பதை நாம் பார்க்கிறோம். மக்கள் அநேக காரியங்களைச் சொல்லுவதை நாம் கேட்கிறோம். அவர்கள் வேதவசனங்களைப்பற்றி பேசுகிறார்கள். அவர்கள் இந்தக் காரியத்தையும் அந்தக் காரியத்தையும் “உணர்ந்து கொண்டதாக” பேசுகிறார்கள். அவர்கள் என்ன உணர்ந்தார்கள் மற்றும் என்ன செய்தார்கள் என்று நம்மிடம் சொல்லுவார்கள். அவர்கள் வழக்கமாக சொல்லி முடிப்பார்கள், “அதன்பிறகு நான் இயேசுவிடம் வந்தேன்” என்று. அவ்வளவுதான்! அவர்களால் இயேசுவைப்பற்றி வேறொரு வார்த்தையும் சொல்ல முடியாது! இயேசுகிறிஸ்துவைப்பற்றி சொல்ல அவர்களிடம் ஒன்றுமிருக்காது! அவர்கள் எப்படி இரட்சிக்கப்பட முடியும்? பெரிய ஸ்பர்ஜன் சொன்னார், “சுவிசேஷத்திலிருந்து கிறிஸ்துவை வெளியே எடுத்துவிடும் பரிதாபகரமான ஒரு சுபாவம் மனிதர் மத்தியில் காணப்படுகிறது” (C. H. Spurgeon, Around the Wicket Gate, Pilgrim Publications, 1992 reprint, p. 24). இரட்சிப்பின் திட்டத்தை அறிந்திருப்பது உன்னை இரட்சிக்க முடியாது! வேதத்தை அதிகமாக அறிந்திருப்பது உன்னை இரட்சிக்க முடியாது! அதிகமான போதனைகளை கேட்பது உன்னை இரட்சிக்க முடியாது! பாவத்துக்கு வருத்தப்படுவது உன்னை இரட்சிக்க முடியாது! அது யூதாசை இரட்சிக்கவில்லை, இல்லையா? உனது வாழ்க்கையை பிரதிஸ்டை செய்வது உன்னை இரட்சிக்க முடியாது! உனது கண்ணீர் உன்னை இரட்சிக்க முடியாது! நீ இயேசுகிறிஸ்துவை நிந்திப்பதை மற்றும் புறக்கணிப்பதை நிருத்தவில்லையானால் – உனது முகத்தை அவருக்கு மறைப்பதை நீ நிருத்தவில்லையானால் – நீ இயேசுகிறிஸ்துவிடம் தாமே இழுத்துவரப்படவில்லையானால் உனக்கு ஒன்றும் உதவி செய்ய முடியாது! அந்தப் பல்லவியை மறுபடியும் எழுந்து நின்று பாடுங்கள்! இயேசுவை மட்டுமே, நான் பார்ப்பேனே, நீங்கள் அமரலாம். II. இரண்டாவது, முழுவேதாகமத்தின் மையமான கருபொருள் இயேசுகிறிஸ்து தாமே ஆகும். இயேசுகிறிஸ்துதாமே உங்களுடைய சிந்தனையின் மையமான கரு பொருளாக இருக்க வேண்டும் என்று நாங்கள் உங்களுக்குச் சொல்லுவது காரணமற்றதாக இருக்குமா? இருக்காது, இது காரணமற்றது அல்ல. ஏன், அதை நினைத்துப்பார், இயேசுகிறிஸ்துதாமே முழுவேதாகமத்தின் மையமான பெரிய கருபொருள் ஆகும் – ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரையிலும்! கிறிஸ்துவானவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு எம்மாவூருக்கு நடந்து சென்ற இரண்டு சீஷர்களை அவர் சந்தித்தார். அவர் அவர்களுக்குச் சொன்ன காரியமும் இன்று நமக்குப் பொருந்துகிறது. “அப்பொழுது அவர் அவர்களை நோக்கி தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லா வற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்” (லூக்கா 24:25-27). மோசேயின் ஐந்து புத்தகங்களிலிருந்தும், மற்றும் வேதாகமத்தின் மீதியான முழுமையிலுமிருந்து அவர்களுக்கு விளக்கினார், “வேதவசனங்கள் எல்லாவற்றிலிருந்தும் தம்மைபற்றிய காரியங்களைக் கிறிஸ்து அவர்களுக்கு விளக்கி காட்டினார்”. இன்னும் என்ன தெளிவாக வேண்டும்? முழுவேதாகமத்தின் மையமான பெரிய கருபொருள் இயேசுகிறிஸ்துதாமே ஆகும்! வேதாகமத்தின் பிரதானமான கருபொருள் இயேசுகிறிஸ்துவாக இருக்கிறபடியினால், உன்னுடைய நினைவுகளுக்கும் மற்றும் உனது வாழ்க்கைக்கும் இயேசுகிறிஸ்து தாமே பிரதானமான கருபொருளாக கொண்டிருப்பது சரியான காரணமல்லவா? இயேசுகிறிஸ்துவைப்பற்றியே இந்தக் காலையில் ஆழமாக நினையுங்கள், என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்! அதைப் பாடுங்கள்! இயேசுவை மட்டுமே, நான் பார்ப்பேனே, இயேசுகிறிஸ்துவை மட்டுமே அறிந்து கொள்ளுவது, ஒரு மெய்யான இரட்சிப்பு என்று நான் விசுவாசிக்கிறேன், உனக்கு இதுவரை நடந்த எல்லாவற்றிலும் அதுவே மிகவும் முக்கியமானதாக இருக்க முடியும். நீ இயேசு கிறிஸ்துவைதாமே மெய்யாக நம்பினால் உனக்கு மிகச்சிறிதளவு ஆலோசனை போதுமானது. 90% கிறிஸ்தவ சகல ஆலோசனைகளையும்விட இயேசு கிறிஸ்துவைப் பற்றிய ஒரு மெய்யான ஞானம் போதுமானது என்று நான் விசுவாசிக்கிறேன்! ஒரு மெய்யான மாறுதலில், ஒரு நபர் கிறிஸ்துவை அறிந்து கொள்ளும்போது, அவர் இவ்வாறாக கிறிஸ்துவைக் கண்டு கொள்ளுவார், “அவரே [கிறிஸ்து] அவருக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (I கொரிந்தியர் 1:31) நம்முடைய சபைகளில் நாம் “தீர்மானஇஸத்திலிருந்து” வெளியே வந்தால், மக்கள் கிறிஸ்துவில் மெய்யாக மாற்றப்பட்டதை நாம் நிச்சயப்படுத்திக்கொண்டால், இன்று சபைகளில் செய்யப்படும் 90% கிறிஸ்தவ ஆலோசனைகளை அதன் தேவையைத் தவிர்க்க முடியும்! இயேசுகிறிஸ்துதாமே ஆலோசகராக இருப்பாராக! அதைப் பாடுங்கள்! இயேசுவை மட்டுமே, நான் பார்ப்பேனே, III. மூன்றாவது, இயேசுகிறிஸ்துதாமே அந்த சாராம்சம், அந்த மையமான சாதனம், சுவிசேஷத்தின் இருதயமாக இருக்கிறார். இயேசு கிறிஸ்துதாமே சுவிசேஷத்தின் இருதயமாக இருக்கிறார் என்று தீர்க்கதரிசியாகிய ஏசாயா சொன்னார், “நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்” (ஏசாயா 53:6). “கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்”. உனது ஸ்தானத்திலே, கிறிஸ்துவின் பிரதிநிதியான, ஈடுசெய்யும் மரணமானது, தேவனுடைய கோபத்துக்கான கிரயத்தை உன்னுடைய இடத்திலிருந்து பாடுபட்டார் என்பது – சுவிசேஷத்தின் இருதயமாக இருக்கிறது! இயேசு கிறிஸ்துதாமே உன்னுடைய பாவங்களை அந்த இருளில் கெத்சமெனேயில் தன்மேல் ஏற்றுக்கொண்டார். இயேசு கிறிஸ்துதாமே அந்தத் தோட்டத்தில், சொன்னார், “என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண் இயேசு கிறிஸ்துதாமே சொன்னார், “அவர் மிகவும் வியாகுலப்பட்டு… அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44). கெத்சமெனே தோட்டத்தில் இயேசு கிறிஸ்துதாமே கைது செய்யப்பட்டார். சனகரிப் சங்கத்துக்கு முன்பாக இயேசு கிறிஸ்துதாமே இழுத்துச் செல்லப்பட்டார், முகத்தில் அடிக்கப்பட்டார், பரியாசம் பண்ணப்பட்டார் மற்றும் அவமானபடுத்தப்பட்டார். அவர்கள் இயேசு கிறிஸ்துவைதாமே முகத்தில் துப்பினார்கள்! அவர்கள் இயேசு கிறிஸ்துவைதாமே தாடி மயிரைப் பிடித்து இழுத்துப் பிடுங்கினார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவைதாமே பொந்தி பிலாத்துவுக்கு முன்பாக எடுத்துச் சென்றார்கள், ஒரு ரோம சாட்டையினாலே முதுகிலே அடிக்கப்பட்டார், முட்கிரீடம் சூட்டப்பட்டார், அவருடைய நெற்றியிலிருந்து ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துவின் முகத்தில்தாமே இரத்தம் வழிந்தது, அவரை அடையாளம் காணமுடியாதபடி அவரது முகம் அடிக்கப்பட்டது, “மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தது” (ஏசாயா 52:14). “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:5). இயேசு கிறிஸ்துதாமே பிலாத்தின் கோர்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டார், சிலுவையை இழுத்துக்கொண்டு கொலை செய்யும் இடத்துக்குச் சென்றார். இயேசு கிறிஸ்துதாமே சபிக்கப்பட்ட மரத்தில் ஆணிகளால் அடிக்கப்பட்டார். இயேசு கிறிஸ்துதாமே கைகளிலும் பாதங்களிலும் ஆணிகளால் அடிக்கப்பட்டு வேதனைபட்டது மட்டுமல்ல – ஆனால் அதைவிட அதிகமான வேதனையை அவர் அனுபவித்தார் “கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்” (ஏசாயா 53:6). இயேசு கிறிஸ்துதாமே “தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்” (I பேதுரு 2:24). டாக்டர் வாட்ஸ் சொன்னார், பாருங்கள், அவருடைய தலை, அவருடைய கைகள், அந்தப் பல்லவியை எழுந்து நின்று பாடுங்கள்! இப்போது கூட்டமாகப் பாடுங்கள்! இயேசுவை மட்டுமே, நான் பார்ப்பேனே, நீங்கள் அமரலாம். IV. நாலாவது, இயேசு கிறிஸ்துதாமே நித்திய சந்தோஷத்தின் ஊற்றாக இருப்பவர் அவர் மட்டுமே. அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து ஒரு முத்திரையிட்ட கல்லரையில் அடக்கம் செய்தார்கள். ஆனால் மூன்றாவது நாள், அவர் சரீரபிரகாரமாக மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்! அதன்பிறகு சீஷர்களிடம் இயேசு வந்து நடுவே நின்று சொன்னார், “உங்களுக்குச் சமாதானம்” (யோவான் 20:19). “அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்” (யோவான் 20:20). “சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்” (யோவான் 20:20). இயேசு கிறிஸ்துதாமே அவர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தார் “சீஷர்கள் கர்த்தரைக்கண்டு”. நீ இயேசு கிறிஸ்துவைதாமே அறிந்து கொள்ளும் வரையிலும், ஆழமான சமாதானத்தை மற்றும் கர்த்தருடைய சந்தோஷத்தை, ஒருபோதும் அறிந்துகொள்ள முடியாது! ஓ, இந்தக் காலையிலே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் – நான் இயேசு கிறிஸ்துவைதாமே நம்பின அந்த நேரத்தை என்னால் நினைவுகூர முடிகிறது! என்ன ஒரு பரிசுத்தமான அனுபவம்! நான் அவரிடத்தில் விரைந்தேன்! அல்லது, அதற்குப் பதிலாக, அவர் என்னிடம் விரைந்து வந்ததைப்போல இருந்தது. அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் எனது பாவத்திலிருந்து நான் சுத்தமாக கழுவப்பட்டேன்! தேவகுமாரன் மூலமாக நான் ஜீவிக்கும்படியாக செய்யப்பட்டேன்! அந்தப் பல்லவியை எழுந்து நின்று பாடுங்கள்! இயேசுவை மட்டுமே, நான் பார்ப்பேனே, நீங்கள் அமரலாம். நீ இயேசு கிறிஸ்துவிடம்தாமே வா! உன் வாழ்க்கைக்கு வெளியே இரட்சகரை விட்டுவிட வேண்டாம். உன் சாட்சிக்கு வெளியே இரட்சகரை விட்டுவிட வேண்டாம். ஸ்பர்ஜன் அழைக்கும் காரியத்துக்கு ஒப்புக்கொடுக்க வேண்டாம் “சுவிசேஷத்திலிருந்து கிறிஸ்துவைதாமே வெளியே விடும்... பரிதாபகரமான சுபாவம்”. வேண்டாம்! வேண்டாம்! நீ இயேசு கிறிஸ்துவிடம்தாமே இப்பொழுதே வா. நான் பாடும்பொழுது இந்த வார்த்தைகளை ஜாக்கிரதையாக கவனியுங்கள். நான் இருக்கிறவண்ணமாக, ஒரு சாக்கும் சொல்லாமல், உனது பாவங்களுக்குரிய தண்டனை கிரயத்தைச் செலுத்தும்படியாக இயேசு சிலுவையிலே மரித்தார். உன்னுடைய சகல பாவங்களிலிருந்தும் உன்னை சுத்திகரிக்க இயேசு தமது பரிசுத்த இரத்தத்தைச் சிந்தினார். இயேசுவிடம் வா. அவரை நம்பு மற்றும் அவர் உன்னை சகல பாவங்களிலிருந்தும் இரட்சிப்பார். ஆமென். நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் போதனைக்கு முன்பாக வேதப்பகுதி வாசித்தவர்: திருவாளர் அபேல் புரதோம்: ஏசாயா 53:1-6. |
முக்கிய குறிப்புகள் இயேசு கிறிஸ்து தாமே JESUS CHRIST HIMSELF டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்கள் “இயேசுகிறிஸ்து தாமே“ (எபேசியர் 2:20). I. முதலாவது, இயேசுகிறிஸ்து தாமே மனித வர்க்கத்தின் மூலமாக நிந்திக்கப்பட்டார் மற்றும் புறக்கணிக்கப்பட்டார், ஏசாயா 53:3. II. இரண்டாவது, முழுவேதாகமத்தின் மையமான கருபொருள் இயேசுகிறிஸ்து தாமே ஆகும், லூக்கா 24:25-27; I கொரிந்தியர் 1:31. III. மூன்றாவது, இயேசுகிறிஸ்துதாமே அந்தச் சாராம்சம், அந்த மையமான சாதனம், சுவிசேஷத்தின் இருதயமாக இருக்கிறார், ஏசாயா 53:6; மாற்கு 14:34; லூக்கா 22:44; ஏசாயா 52:14; 53:5; I பேதுரு 2:24. IV. நாலாவது, இயேசு கிறிஸ்துதாமே நித்திய சந்தோஷத்தின் ஊற்றாக இருப்பவர் அவர் மட்டுமே, யோவான் 20:19, 20. |