இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
கிறிஸ்துவின் மகிமையின் உற்பத்தி ஸ்தானம் (செய்தி எண்: 14 ஏசாயா 53) டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால் ஏப்ரல் 21, 2013 அன்று கர்த்தருடைய நாள் காலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி. “அவர் தமது ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்”
|
ஜான் ட்ராப் அவர்கள் 17ம் நூற்றாண்டில் (1601-1669) வாழ்ந்த ஒரு சிறந்த பிரசங்கியார். “அவர் ஒரு ஊக்கமிக்க தொழிளாலர் என்றும் ஒரு அற்புதமான பிரசங்கியார் என்றும் சொல்லப்பட்டார். [அவர்] முழுவேதாகம விளக்கம் அளித்து, பூரிட்டன் வேத ஆராய்ச்சியை [ஒரு உதாரணம் நமக்குத் தருகிறது] சிறந்த முறையில் செய்திருக்கிறார்; விந்தையான நகைச்சுவை மிக்க ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்ட சன்மானம் பெறத்தக்கதாக அமைந்துள்ளது” (Elgin S. Moyer, Ph.D., Who Was Who in Church History, Keats Publishing, 1974, p. 410). இந்த ட்ராப் விளக்கவுரை ஸ்பர்ஜன் அவர்களால் அதிகமாக சிபாரிசு செய்யப்பட்டது. ஏசாயா 53ம் அதிகாரத்தைப்பற்றி, ஜான் ட்ராப் அவர்கள் சொன்னார், இந்த முழு அதிகாரத்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் கனமுள்ளதாக இருக்கின்றன, இவைகளில் அப்போஸ்தலர்களும் சுவிசேஷகர்களும், நமது இரட்சிப்பின் ஆழமான இரகசியங்களை விளக்குவார்கள், இவைகளுக்கு மிகுந்த மறியாதை கொடுப்பார்கள்... இவைகளை எழுதின தீர்க்கதரிசிக்கும்கூட, இவைகளை எழுதின போது, ஆவியானவரின் அதிகமான தூண்டுதல் இருந்திருக்க வேண்டும், ஏனென்றால் இங்கே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தாழ்மைப்படுத்துதல் மற்றும் உயர்த்துதல் இரண்டு நிலைகளையும் தெளிவாக அமைக்கிறார், மற்ற பழைய ஏற்பாட்டாளர் [எழுத்தர்கள்] புதியதிலிருந்து [ஏற்பாடு] வெளிச்சத்தை அநேக இடங்களில் கடன் பெற்றவர்களாக காணப்படுகிறார்கள், இந்த பிரசங்கம் பல இடங்களில் புது வெளிச்சம் தருகிறது (John Trapp, A Commentary on the Old and New Testaments, Transki Publications, 1997, volume III, page 410). மெய்யாகவே, இந்த காலையில் நமது பாடத்திற்கு “வெளிச்சம் தந்து” புதிய ஏற்பாட்டில் நாம் படிக்கும் ஆழமானவைகளை புரிந்து கொள்ள செய்கிறது. புதிய ஏற்பாட்டு விளக்கத்திற்குப் பதிலாக ஏசாயா 53, சுற்றிவரும் ஒரு வேறுவழியாக இருக்கிறது. புதிய ஏற்பாட்டை விளக்கிக்காட்ட ஏசாயா 53 உதவி செய்கிறது! இது வழக்கத்திற்கு மாறாக இருக்கிறது. டாக்டர் ஜேக் வார்ன், நமது பாடத்தைப்பற்றிச் சொன்னார், “இந்த கடைசி வசனம் (ஏசாயா 53ன்) இந்த அதிகாரத்தை ஒரு உற்சாகமான குறிப்போடு முடிக்கிறது: அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு தமது ஆத்துமாவை ஊற்றின இரட்சகரை இது கனப்படுத்துகிறது” (Jack Warren, D.D., Redemption in Isaiah 53, Baptist Evangel Publications, 2004, p. 31). “அவர் தமது ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்” (ஏசாயா 53:12). இப்பொழுதே, இந்த காலையிலேயே, தமது பிதாவானவர் கொடுத்த வெகுமதியை கிறிஸ்துவானவர் அனுபவித்துக் கொண்டிருக்கிறார் – “வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்”. பரலோகத்தில் ஒருவரும் கிறிஸ்துவை வெறுக்கவோ அல்லது ஒதுக்கவோ இல்லை. பரலோக துதர் சேனை முழுவதும் அவரை போற்றிப்புகழ்கிறார்கள்! பிதாவின் வலது பாரிசத்திலே, அவருடைய சிங்காசனத்தைச் சுற்றி மகிமை முழுவதும் விளக்கப்படுகிறது. இந்த கனத்தையும் மகிமையையும் பெற்றுக்கொள்ள கிறிஸ்து என்ன செய்தார்? ஏன் அவருக்கு “அநேகரை பங்காகக் கொடுப்பார், மற்றும்… பலவான்களை தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்”? இதற்கு பதில் என்னவென்றால் அவர் நான்கு காரியங்களைச் செய்தார். I. முதலாவதாக, அவர் தமது ஆத்துமாவை மரணத்தில் ஊற்றினார். “அவர் தமது ஆத்துமாவை மரணத்திலூற்றி....” (ஏசாயா 53:12). கிறிஸ்து இதை நிதானித்து யோசனைபண்ணி செய்தார். ஏதோ திடீர் என்று சரீர உணர்ச்சிவயப்பட்டதால் செய்யவில்லை, அக்கரையோடு யோசித்து செய்தார். வேண்டுமென்றே அவர் தம் ஆத்துமாவை ஊற்றினார், கொஞ்சங் கொஞ்சமாக, கடைசி முடியுமட்டுமாக ஊற்றினார், அதன்பிறகு சத்தமிட்டார், “முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்” (யோவான் 19:30). கிறிஸ்து இதை தாமாகவே மனப்பூர்வமாகச் செய்தார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவர் சொன்னார், “ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன்” (யோவான் 10:18). இது ஒரு முக்கியமானக் கருத்தாகும். இயேசு ஒரு விபத்தைப்போல மரித்துவிடவில்லை என்பதை நாம் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும். அவர் யோசித்து மரணத்திற்குச் சென்றார்; நமது பாவங்களுக்கு உரிய தண்டனைக் கிரயத்தை செலுத்த தமது ஜீவனை மனப்பூர்வமாகக் கொடுத்தார். சிலுவையிலே “அவர் தமது ஆத்துமாவை மரணத்திலூற்றினார்,” அவர் இதை செய்ய வேண்டுமென்ற அவசியத்தினால் அல்ல, ஆனால் உங்கள்நிமித்தமாக, மற்றும் என் நிமித்தமாக - அவரில் நம்பிக்கை வைப்பவர்களின் இரட்சிப்புக்காக அவர் செய்தார். அவரை நம்பு, பிறகு, பின்வாங்கி விடாதே. உனக்காக மரணமட்டுமாக தமது ஆத்துமாவை ஊற்றினதுபோல, நீயும் அவரை முழுமையாக நம்பி, உன்னுடைய ஆத்துமாவை ஊற்று. வா, கிறிஸ்துவுக்குள் இளைப்பாறு, அதன்பிறகு அவர் மகிமையினாலும் கனத்தினாலும் ஏன் முடிசூட்டப்பட்டார் என்று காண்பாய். அவர் பதவியினால் கனப்படுத்தப்பட்டார் காரணம் அவர் “ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்” (I பேதுரு 3:18). அவர் சிலுவையில் மரணம் அடைந்தது, அவருக்கு அதிக அளவு வெட்கத்தை கொண்டுவந்தது, இப்பொழுது அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றுக் கொண்டு “அநேகரை அவருக்குப் பங்காகவும்”, “பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகவும்” பங்கிட்டுக்கொண்டார். இவ்வாறாக, தேவன் “புறஜாதிகளை [அவருக்கு] சுதந்தரமாக” கொடுக்கிறார் (சங்கீதம் 2:8). இவ்வாறாக, தேவன் சொல்லுகிறார், “அவர் மானபங்கமான [வெட்ககரமான] மரணத்தை அடைந்தபடியால்… அவருக்கு வெகுமதியாக, பொல்லாத ஆவிகளை அழிக்கவும், கொள்ளையை ஜெயிக்கவும் செய்வேன்” (Trapp, ibid.). “துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்து கொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்” (கொலோசெயர் 2:15). “மரணத்தின் வல்லமைகள்”. அதைப் பாடுங்கள்! மரணத்தின் வல்லமைகள் தங்கள் கெடுதியை செய்தன, அவருக்கு மகிமையும் கனமும் கொடுக்கப்பட்டதற்குக் காரணம் அவர் பாவிகளை இரட்சிப்பதற்காக தமது ஆத்துமாவை மரணமட்டும் ஊற்றினார். வாருங்கள், அவரை நம்புங்கள்! வாருங்கள், அவரை முழுமையாக நம்புங்கள்! வாருங்கள், அவரை இப்பொழுது நம்புங்கள்! II. இரண்டாவதாக, அவர் பாவிகளில் ஒருவராக எண்ணப்பட்டார். “அவர் தமது ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்: பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்...” (ஏசாயா 53:12). கிறிஸ்து பாவிகளின் மத்தியில் தமது ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார். அவருடைய பூலோக ஊழியம் முழுவதிலும், அவர் பாவமுள்ள மக்கள் மத்தியிலேயே தொடர்பு கொண்டிருந்தார். அதை ஒரு பிரதான குற்றமாக பரிசேயர்கள் அவர்மேல் சாட்டினார்கள். அதினிமித்தமாக, அவர்கள் அவரை, “ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன்” (லூக்கா 7:34). அதுமட்டுமல்லாமல், அவருடைய சிலுவை மரணத்தின்போது, இரண்டு குற்றவாளிகளுக்கு நடுவில் அவர் சிலுவையில் அறையப்பட்டார். “அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்” (ஏசாயா 53:12). அதாவது, அவர்களோடு ஒருவராக அவர் (உறுதியாக) “எண்ணப்பட்டார்”. “அவர் அக்கிரமக்காரர் என்று அல்ல, ஆனால் திருடர்களோடு சிலுவையில் அறையப்பட்டதால் அப்படியாக அவர் நடத்தப்பட்டார்” (Jamieson, Fausset and Brown, volume 2, p. 733). மாற்கு சுவிசேஷம் சொல்லுகிறது, “அல்லாமலும் அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் இடது பக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடுகூடச் சிலுவைகளில் அறைந்தார்கள். அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேத வாக்கியம் அதனால் நிறைவேறிற்று” (மாற்கு 15:27-28). டாக்டர் எங் சொன்னார், “அங்கே வெறும் பாவிகள் அல்ல, ஆனால் மெய்யான குற்றவாளிகள்” (Edward J. Young, Ph.D., The Book of Isaiah, 1972, volume 3, p. 359). அங்கே “அக்கிரமக்காரர்கள்”. இதன் கிரேக்க வார்த்தை “அனோமோஸ்”, இதன் பொருள் சட்டத்திற்கு கீழ்ப்படிய வெளிப்படையாக மறுத்தல் (Vine). இவ்வாறாக, கிறிஸ்து மிக மோசமான பாவிகளோடு கணக்கிடப்பட்டார்! அன்னா வாட்டர்மேனின் இனிமையான பாடல் சொல்லுகிறது, என்னைப் போன்ற ஒருவனை இரட்சித்த போது, லூக்கா சுவிசேஷம் நமக்குச் சொல்லுகிறது இரண்டு கள்ளர்களில் ஒருவன் இரட்சிக்கப் பட்டான் (லூக்கா 23:39-43) என்று. டாக்டர் ஜான் ஆர். ரைஸ் சொன்னார், “படுமோசமான பாவியும் தைரியம் இழந்து போகக் கூடாது என்பதற்காகவே சிலுவையிலிருந்த கள்ளனை இரட்சித்தார்....” (John R. Rice., D.D., The King of the Jews, Sword of the Lord, 1980 reprint, p. 475). டாக்டர். மெக் கீ சொன்னார், இருவருக்கும் [அந்த இரண்டு கள்ளர்களுக்கும்] இடையில் வித்தியாசம் என்ன? எந்த வித்தியாசமும் இல்லை - இரண்டுபேரும் கள்ளர்கள். வித்தயாசம் உண்மையில் இருக்கிறது அதாவது ஒரு கள்ளன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்தான் மற்றும் ஒருவன் விசுவாசிக்கவில்லை (J. Vernon McGee, Th.D., Thru the Bible, Thomas Nelson, 1983, volume IV, p. 354). “அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார்” இயேசு தம்மைத்தாமே படுமோசமான பாவிகளின் ஸ்தானத்தில் வைத்துக் கொண்டார் என்பதை இந்த வாக்கியம் காட்டுகிறது. அவர் பாவிகளில் ஒருவராக எண்ணப்பட்டபடியினால் பாவிகள் இரட்சிக்கப்பட முடியும். ஆனால் நீ அவரை நம்ப வேண்டும் அப்பொழுதுதான் இரட்சிக்கப்பட முடியும். கிறிஸ்து பாவிகளின் ஸ்தானத்தில் நிலையாக நின்றபடியினாலும், மற்றும் அவர்களுடைய பாவங்களை தம்மேல் எடுத்துக் கொண்ட படியினாலும், அவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு சாத்தியமாக்கின படியினாலும் அவர் இப்பொழுது கனப்படுத்தப்படுகிறார். “அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார்” அதனால் இவ்வாறாக அவர் கனப்படுத்தப் படுகிறார். “ஆமாம், எனக்குத் தெரியும்!” பாடலை சேர்ந்து பாடவும்! எனக்குத் தெரியும், ஆமாம், எனக்குத் தெரியும், III. மூன்றாவதாக, அநேகருடைய பாவத்தை அவர் சுமந்தார். நாம் அனைவரும் எழுந்து நின்று, “அநேகருடைய பாவத்தை அவர் சுமந்தார்” என்ற வார்த்தைகள் வரையிலும், நமது பாடத்தை சத்தமாக வாசிப்போம். “அவர் தமது ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்...” (ஏசாயா 53:12). நீங்கள் அமரலாம். “அநேகருடைய பாவத்தை அவர் சுமந்தார்”. அப்போஸ்தலனாகிய பேதுரு இவ்வாறாகச் சொல்லுகிறார், “அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சிலுவையின்மேல் சுமந்தார்” (I பேதுரு 2:24) இது பதிலாக உண்டான இரட்சிப்பு. கிறிஸ்து உன்னுடைய பாவத்தை எடுத்துக்கொண்டு “தமது சொந்த சரீரத்திலே” சிலுவையில். உன்னுடைய பாவத்திற்கான தண்டனைக் கிரயத்தை அவர் தம்மேல் ஏற்றுக்கொண்டு உன்னுடைய ஸ்தானத்தில் அவர் மரித்தார். கிருபாதார பலியாகிய பதிலாக மரணம் இல்லாமல் சுவிசேஷம் இல்லை. பாவிகளுக்காக அவர் அடைந்த கோர மரணம் சுவிசேஷத்தின் முக்கியமான இருதயம் போன்றது. ஸ்பர்ஜன் சொன்னார், இப்பொழுது, இந்த மூன்று காரியங்கள் - அவர் தமது ஆத்துமாவை மரணத்தில் ஊற்றினார், மற்றும் பாவிகளின் தண்டனைக் கிரயத்தை சுமந்தார்; அதாவது அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார், மற்றும் பாவிகளோடு பக்கத்திற்கு பக்கமாக நின்றார்; அதற்கு அடுத்து, அவர் மெய்யாகவே அவர்களுடைய பாவங்களை சுமந்தார்.... அது அவரை தீட்டு படுத்தவில்லை, ஆனால் மனிதனை தீட்டுப்படுத்தின பாவத்தை கழித்துப் போட முடிந்தது - இந்த மூன்று காரியங்கள் நமது கர்த்தராகிய இயேசுவின் மகிமைக்குக் காரணமாக [ஆகும்]. தேவனுக்கு, இந்த மூன்று காரியங்களும், மற்றொன்றாக, பலவான்களை தமக்கு கொள்ளையாக பங்கிடவும், அநேகரை அவருக்கு பங்காக கொடுக்கவும் முடிந்தது (C. H. Spurgeon, The Metropolitan Tabernacle Pulpit, Pilgrim Publications, 1975 reprint, volume XXXV, page 93). “ஆமாம், எனக்குத் தெரியும்!” பாடலை சேர்ந்து பாடவும்! எனக்குத் தெரியும், ஆமாம், எனக்குத் தெரியும், IV. நான்காவதாக, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டார். அந்த வார்த்தை இவ்வாறாக முடிகிறது, “அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டார்” (ஏசாயா 53:12). சிலுவையிலே, கிறிஸ்து பாவிகளுக்காக ஜெபித்தார், ஜெபித்து “அக்கிரமக்காரருக்காக பரிந்து பேசினார்”, அவர் கதறும் போது, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34). இவ்வாறாக சிலுவையிலே தொங்கினவராக பாவிகளுக்காக ஜெபித்தார். இன்னும், இப்பொழுதும் பரலோகத்திலே, இயேசு பாவிகளுக்காக ஜெபிக்கிறார், “வேண்டுதல் செய்யும்படிக்கு [நமக்காக] அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவர்” (எபிரேயர் 7:25). அவர் சிலுவையிலே மரித்தபொழுது பாவிகளுக்காக பரிந்து பேசினார். இன்றும் அவர் பரலோகத்திலே, பிதாவின் வலது பாரிசத்திலிருந்து தொடர்ந்து பாவிகளுக்காக ஜெபிக்கிறார். இயேசு செய்த இந்த நான்கு காரியங்களின் காரணமாக இப்பொழுது அவர் பிதாவின் வலது பாரிசத்திலே, மகிமையாக உயர்த்தப்பட்டிருக்கிறார். இப்பொழுது கிறிஸ்து பெற்றிருக்கும் மகிமை அவர் பாவிகளை இரட்சிக்க செய்த நான்கு காரியங்களுக்கு தொடர்புடையது! “அவர் மனுஷரூமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்: பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்” (பிலிப்பியர் 2:8- 11). ஆனாலும் கவனியுங்கள், இயேசுவுக்கு இரட்சிக்கும் வல்லமை இருந்தாலும், தங்களுக்கு இரட்சிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று நினைப்பவர்களை அவர் இரட்சிக்க முடியாது. ஸ்பர்ஜன் இப்படியாக எழுதுகிறார், ஒருவேளை [உனக்கு] பாவமே இல்லையானால் அதிலிருந்து அவர் [உன்னை] சுத்திகரிக்க முடியாது. அவரால் முடியுமா?.... நீங்கள் மிகவும் நல்லவர்கள், மரியாதைக்குரிய மக்கள், உங்கள் வாழ்நாள் முழுவதிலும் எந்த தவறும் ஒருபோதும் செய்யாதவர்; உங்களுக்கு இயேசு என்னவாக இருக்கிறார்? ஒருவேளை, நீங்கள் உங்கள் சொந்த வழியில் போகிறீர்கள், நீங்களே உங்களைக் கவனித்துக் கொள்ளுகிறீர்கள்.... ஐயோ! இது போலியானது.... உங்களை நீங்களே, உள்ளான இருதயத்தை பார்த்தால் எரிந்த ஒரு சிமினி விளக்கைப்போல ஒருபோதும் சுத்தம் செய்யாமல் கருப்பாக இருக்கும். [உன்] இருதயம் தீட்டான கிணறு போன்றது. ஓ, இதை நீ பார்ப்பாயானால், தவறான நீதியை விட்டு விலகுவாய்! [ஆனால்] அப்படி இல்லையென்றால், இயேசுவுக்குள் உனக்கு ஒன்றுமில்லை. அவர் தமது மகிமையை பாவிகளிடம் பெறுவார், உன்னைப் போன்ற சுய பெருமையுள்ளவர்களிடம் அல்ல. ஆனால், குற்ற உணர்வு உள்ளவர்களே, அதாவது… உங்கள் குற்றங்களை அறிக்கையிடுங்கள், இயேசு செய்த அந்த நான்கு காரியங்களை தெளிவாக நினைத்துப் பாருங்கள், அதை பாவிகளுக்காக செய்தார், அவ்வாறு பாவிகளுக்காக செய்தபடியினால் அவர் இன்று கனமும் மகிமையும் மகத்துவமும் பெற்றிருக்கிறார்... [அதனால்] எவ்வளவு இருதயபூர்வமாக [உன்னிடம் மன்றாடுகிறேன்] தேவகுமாரனாகிய இயேசுவை நம்பு என்று கேட்கிறேன், அவர் குற்றமுள்ள மனிதனுக்காக மாம்சமானார், இரத்தம் சிந்தி மரித்தார்! நீ அவரை நம்பினால், உன்னை அவர் ஏமாற்றமாட்டார், ஆனால் நீ இரட்சிக்கப்படுவாய், உடனடியாக இரட்சிக்கப் படுவாய் மற்றும் நித்தியமாக இரட்சிக்கப்படுவாய் (Spurgeon, ibid., page 95). ஆமென்! “ஆமாம், எனக்குத் தெரியும்!” பாடலை இன்னும் ஒரு முறை சேர்ந்து பாடவும்! எனக்குத் தெரியும், ஆமாம், எனக்குத் தெரியும், இயேசுவினால் உன்னுடைய பாவங்கள் சுத்தம் பண்ணப்பட நீ விரும்பினால், தயவு செய்து பின்னால் உள்ள ஆடிட்டோரியத்திற்கு இப்பொழுது செல்லவும். டாக்டர் கேகன் அவர்கள் உங்களை ஒரு அமைதியான இடத்திற்கு அழைத்துச் செல்லும் இடத்தில் நாம் பேசமுடியும். திரு கிரீப்பித் அந்த பாடலை மறுபடியும் பாடும்பொழுது சீக்கிரம் செல்லவும். எனக்குத் தெரியும், ஆமாம், எனக்குத் தெரியும், திரு லீ அவர்களே, தயவுசெய்து வந்து ஏற்றுக்கொண்டவர்களுக்காக ஜெபிக்கவும். இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால், டாக்டர் ஹைமர் அவர்களுக்கு e-mail அனுப்புங்கள். அவர் உங்களிடமிருந்து பதிலைப் பெற விரும்புகிறார். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றும் குறிப்பிடவேண்டும். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் e-mail: rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம். ஆனால், முடிந்தால் ஆங்கிலத்தில் எழுதவும். தபால் மூலம் அனுப்பவிரும்பினால், அவரது விலாசம்: Dr. Hymers P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்ளலாம்: (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்களைப் பயன்படுத்த Dr. Hymers அவர்களின் அனுமதி பிரசங்கத்திற்கு முன்னால் டாக்டர் க்ரெய்டென் L. சேன் வாசித்த வேத பகுதி: ஏசாயா 53:6-12. |
முக்கிய குறிப்புகள் கிறிஸ்துவின் மகிமையின் உற்பத்தி ஸ்தானம் (செய்தி எண்: 14 ஏசாயா 53) டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால் “அவர் தமது ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்”
I. முதலாவதாக, அவர் தமது ஆத்துமாவை மரணத்தில் ஊற்றினார்,
II. இரண்டாவதாக, அவர் பாவிகளில் ஒருவராக எண்ணப்பட்டார்,
III. மூன்றாவதாக, அநேகருடைய பாவத்தை அவர் சுமந்தார்,
IV. நான்காவதாக, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டார், |