இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
கிறிஸ்துவின் மூலமாக கிடைத்த திருப்தி மற்றும் நீதிமானாக்குதல்(செய்தி எண்: 13 ஏசாயா 53) டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால் ஏப்ரல் 14, 2013 அன்று கர்த்தருடைய நாள் காலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்து கொள்வார்” (ஏசாயா 53:11). |
இந்த வசனத்தின் ஒவ்வொரு வார்த்தையும் நமது கவனத்தை கவரும்படியான அர்த்தம் நிறைந்தவைகளாக இருக்கின்றன. அதனால் இந்த பாடத்தின் வழியைவிட்டு நான் தூரமாகச் சென்று, அதிக எடுத்துக்காட்டுகளை கொடுக்கமாட்டேன். இந்த வசனத்தின் அற்புதமான கருத்துக்களை எடுத்துக்காட்ட இந்த செய்தியே போதுமானது; அவைகளில் ஆழமான கருத்துக்கள் அடங்கியிருந்தாலும் இன்று மாலையில் நமது சபைக்கு வந்திருக்கும் ஒவ்வொரு பார்வையாளரும் மிகவும் எளிமையான, ஆழமான, தெளிவான கருத்துக்களை அறிந்து கொண்டு தங்கள் வீடுகளுக்கு செல்லுவர்கள், “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்” (ஏசாயா 53:11). இந்த வசனத்திலிருக்கும் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும்படியாக கர்த்தர்தாமே உங்களுடைய இருதயத்தைத் திரந்தருள்வாராக. இந்த வசனத்தை பிரசங்கிக்கும்பொழுது, நாங்கள் உங்களுக்கு சொல்லுவது என்னவென்றால், “என்னிடத்தில் வந்து, உங்கள் செவியை சாய்த்துக் கேளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமா பிழைக்கும்”. இந்த வசனம் மூன்று காரியங்களைக் குறித்துப் பேசுகிறது. முதலாவதாக, தேவனுடைய நீதியை கிறிஸ்து திருப்திபடுத்துதல். இரண்டாவதாக, அநேகரை நீதிமானாக்கும் கிறிஸ்துவைப் பற்றின அறிவு. மூன்றாவதாக, விசுவாசிக்கும் பாவியின் பாவத்தைச் சுமந்து முழுமையாக கிருபாதாரபலியான கிறிஸ்து. “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்” (ஏசாயா 53:11). I. முதலாவதாக, தேவனுடைய நீதியை கிறிஸ்துவின் பாடுகள் திருப்திபடுத்துதல். “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்... ” (ஏசாயா 53:11). டாக்டர் ஜூர்ஜன் மோல்ட்மான் (1926-) என்பவர் ஒரு ஜெர்மானியர் அவரை இரண்டாம் உலக மகாயுத்தத்திற்கு பிறகு சிறைபடுத்திக் கொண்டுபோய் பிரிட்டீஸ் சிறையில் அடைத்து வைத்தனர். அவரது சிறைவாசத்தின்போது அவர் வேதாகமத்தை படிக்க ஆரம்பித்தார். அந்த சிறைவாசத்தின் அனுபவத்தோடு மற்றும் வேதாகமத்தை படித்ததை வைத்து, திரித்துவ தேவன் மற்றும் வரலாறு: திரித்துவத்திற்குக் கொடுக்கப்படும் இறையியல் (History and the Triune God: Contributions to Trinitarian Theology) (Crossroad, 1992) எழுதினார். டாக்டர் மோல்ட்மான் ஒரு தாராளமான வேதாந்த சாஸ்திரியாவார், அவர் எழுதின அநேக காரியங்களை நிச்சயமாக நான் ஏற்றிச் சொல்ல மாட்டேன். இருந்தாலும், அவருக்கு சில உட்பார்வைகள் உண்டு. உதாரணமாக, மோல்ட்மான் “தேவனால் கைவிடப்பட்ட” மனுக்குலத்தை சார்ந்த தமது பொறுப்பு சிலுவை என்று தேவன் அறிவித்ததாக காண்கிறார். தேவன் பாவிகள்மீது வைத்த தமது அன்பை சிலுவையிலே வெளிப்படுத்தினார், பிதாவிடமிருந்து பிரிவு வேதனையை குமாரனாகிய தேவன் அனுபவித்தார், “உள்ளிருந்து வெளியிலிருக்கும்” வேதனைப்பாடுகளை அறிந்து கொள்ளும்படி தேவன் அனுமதித்தார்.” இவைகளில் அதிகமானவற்றை மோல்ட்மான் சரியாக கொண்டுவரவில்லை, ஆனால் சிறையின் பாடுகளை திரித்துவர் சிலுவையில் அடைந்த பாடுகளுக்கு கொண்டு வருகிறார், அதனால், இது முக்கியமான ஒரு கருத்து என்று, நான் நினைக்கிறேன். என்னுடைய பார்வையில், இது ஓரளவிற்கு உபயோகமான கருத்தாக இருக்கும் - அதாவது சிறையின் பாடுகள் திரித்துவர் சிலுவையில் அடைந்த பாடுகள். “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்” (ஏசாயா 53:11). ஸ்பர்ஜன் சொன்னார், இந்த வார்த்தைகளில் பிதாவாகிய தேவன் தமது குமாரனைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார், அவர் ஆத்தும வருத்தத்தை அனுபவித்ததற்கு, உரிய திருப்தியான பலனைக் குறித்த உறுதியை அறிவிக்கிறார். இரட்சிப்பின் காரியத்தில் பரிசுத்த திரித்துவம் ஒன்றுபட்டு இங்கு செயல்படுவதை பார்க்கும் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது! (C. H. Spurgeon, The Metropolitan Tabernacle Pulpit, Pilgrim Publications, 1980 reprint, volume 61, p. 301). “அவர்”, அதாவது, பிதாவாகிய தேவன்; “தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்”, அதாவது, தமது குமாரனுடைய ஆத்தும வருத்தத்தை; “திருப்தியாவார்.” இதை ஸ்பர்ஜன் சொல்லும்பொழுது, “இந்த வார்த்தைகள் பிதாவாகிய தேவன் தமது குமாரனைக் குறித்துப் பேசுவது போன்றதாகும்” என்று பார்க்கிறோம். “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்” (ஏசாயா 53:11). “தமது ஆத்தும வருத்தம்” என்பது நமது பாவங்களுக்காக, அவர் தமது பாடுகளின்போது அனுபவித்த கிறிஸ்துவின் உள்ளான வேதனை மற்றும் தாங்க முடியாத துயரத்தைக் குறிக்கும். கிறிஸ்துவின் சரீரப்பாடுகளை நாம் குறைவாக மதிப்பிடக் கூடாது. பொந்தியு பிலாத்துவின் கட்டளையால் கிறிஸ்து கசையடிப் பட்டு மரணம் அடைந்ததை நாம் ஒருபோதும் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கிறிஸ்து துப்பப்பட்டதையும் மற்றும் முட்கிரீடம் சூட்டப்பட்டதின் முக்கியத்துவத்தையும் நாம் ஒருபோதும் குறைவாக மதிப்பிடக் கூடாது. அவருடைய கைகளும் மற்றும் பாதங்களும் உருவக்குத்தப்பட்டதையும், சிலுவையிலே நமக்காக அவர் அடைந்த வலி மற்றும் தாகத்தை நிச்சயமாக நாம் குறைவாக மதிப்பிடக் கூடாது. “இன்னும்” ஸ்பர்ஜன் சொன்னபோது, “தமது ஆத்தும வருத்தம் உயர்ந்த காரியம் என்றார். அதைதான் இந்த பாடம் பேசுகிறது... இயேசுகிறிஸ்து [அவ்வளவதிகமாக] பாடுபட்டார் அதை உணர்த்தவும் மற்றும் எந்த வார்த்தைகளாலோ அல்லது உருவகத்தினாலோ உங்களுக்கு என்னால் எடுத்துக் காட்டமுடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை” Spurgeon, ibid., pp. 302-303). “ஆத்தும வருத்தம் என்று சொல்லும்போது கிறிஸ்துவின் ஆத்துமா பட்ட வேதனையைக் குறிக்கும்” (ibid., p. 302), அவரது இருதயத்தின் வேதனை, அவருடைய முக்கிய பாகத்தின் தாங்கமுடியாத வலியையும் குறிக்கும். “வருத்தம்” என்ற பதமானது, கிறிஸ்து மனித பாவபாரத்தையும் மற்றும் பிதாவாகிய தேவனுடைய நியாயத் தீர்ப்பும் அவர்மீது வந்ததின் நிமித்தமாக, “தமது ஆத்துமா”வில் அனுபவித்த துக்கத்தையும், பாடுகளையும் மற்றும் வலியையும் காட்டுகிறது. இது கிறிஸ்துவினால் அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக, அவரை கசையால் அடிப்பதற்கு முன்பாக, அவர் சிலுவையில் அடிக்கப் படுவதற்கு முன்பாக, கெத்சமனே தோட்டத்தில் தெளிவாக அனுபவிக்கப்பட்டது. அவர் தமது ஆத்துமாவில் அனுபவித்த துக்கமும் பாடுகளும் மற்றும் வலியும் சிலுவையில் தொடர்ந்தன. டாக்டர் கில் எழுதுவதுபோல, அவருடைய ஆத்துமாவில் வருத்தம் என்பது அவர் சகித்த வேதனைகளையும் அவர் பட்டபாடுகளையும் குறிக்கும், தமது மக்களின் இரட்சிப்புக்காக அவர் செய்த கிரியையும்; அவரது கீழ்படிதல் மற்றும் மரணம், அவரது துக்கங்களும் பாடுகளும்; குறிப்பாக தெய்வீகக் கோபத்தின் உணர்வோடு, அவரது ஆத்துமாவில் பிரசவ-வேதனை, சந்தேகக்குறிப்போடுள்ள கர்ப்ப வேதனை [பிரசவத்தின் போது படும் வேதனை]; மற்றும் சகல துக்கம் நிறைந்த பாடுகளும் அவர் கடந்து வந்த மரண வேதனையையும் குறிக்கும் (John Gill, D.D., An Exposition of the Old Testament, The Baptist Standard Bearer, 1989 reprint, volume 5, p. 315). “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்... ” (ஏசாயா 53:11). “திருப்தியாவார்” இது தேவ கோபத்திற்கான கிருபாதார பலியைக் குறித்துப் பேசுகிறது. பிதாவாகிய தேவன் “திருப்தியானார்” அல்லது, அவருக்குப் பதிலாக நாம் ஏற்றுக் கொள்ளப் பட்டோம், என்று சொல்லலாம், “பாவமறியாத அவரை நமக்காக பாவமாக்கினார்” (II கொரிந்தியர் 5:21). “நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே” (I யோவான் 2:2). “கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்” (ரோமர் 3:26). டாக்டர் ஜான் மேக்ஆர்த்தர் அவர்கள், கிறிஸ்துவின் இரத்தம் தவறுகளின்மேல் இருந்தாலும், சரியாகச் சொன்னார், [கிருபாதார பலி] என்ற வார்த்தையின் பொருள் “சாந்தப்படுத்துதல்” அல்லது “திருப்திபடுத்துதல்” ஆகும். இயேசுவின் சிலுவைபலியானது பாவத்திற்குறிய தண்டனையாக தேவனுடைய பரிசுத்தத்தின் எதிர்பார்ப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது… அதனால் இயேசுவானவர் கிருபாதாரபலியானார் அல்லது தேவனைத் திருப்திபடுத்தினார் (John MacArthur, D.D., The MacArthur Study Bible, Word Publishing, 1997, note on I John 2:2). எனக்கு வித்தியாசமாகக் காணப்படுவது என்னவென்றால் தவறுகள் இரத்தத்தின் மீது இருந்தாலும், கிருபாதாரபலியில் சரியாக இருக்கிறார்! இவ்வாறாக, கிருபாதாரபலியும், பாவத்திற்கு விரோதமாக இருந்த தேவனுடையக கோபத்தை சாந்தப்படுத்துதலையும், கிறிஸ்து தமது துக்கம் மிகுந்த வேதனையில் அனுபவித்தார். இயேசுவின் பாடுகள், பாவத்திற்கு விரோதமாக இருந்த தேவனுடைய கோபத்தை சாந்தப்படுத்தி, கிருபாதாரபலியினால், தேவனுடைய நீதியை “திருப்திப்படுத்தி” விட்டது. “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவமறியாத அவரை [குமாரனாகிய கிறிஸ்துவை] நமக்காக பாவமாக்கினார் [பிதாவாகிய தேவன்]” (II கொரிந்தியர் 5:21). “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்...” (ஏசாயா 53:11). நாம் இரட்சிக்கப்படுவதற்கு ஏதுவாக இருக்கும்படியாக, கிறிஸ்துவின் பாடுகள் தேவனுடைய நீதியை திருப்திபடுத்திவிட்டது. II. இரண்டாவதாக, கிறிஸ்துவைப் பற்றின அறிவு அநேகரை நீதிமானாக்குதலுக்குக் கொண்டுவருதல். நாம் அனைவரும் எழுந்து நின்று, பாடத்தின் வசனமான “அநேகரை நீதிமானாக்குவார்” என்ற வார்த்தை முடியும்வரை, சத்தமாக வாசிப்போம். “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்... ” (ஏசாயா 53:11). நீங்கள் அமரலாம். தீர்க்கதரிசியாகிய ஏசாயா கிறிஸ்துவை தேவனுடைய “தாசன்” என்று ஏசாயா 52:13ல் குறிப்பிடுகிறார். மற்றும் இங்கே, நமது பாடத்தில், கிறிஸ்துவானவர் தேவனுடைய “தாசனாகிய நீதிபரரர்” என்று அழைக்கப்படுகிறார். கிறிஸ்து நீதிமான் ஏன் என்றால் “அவர் பாவம் அறியாதவர்” (II கொரிந்தியர் 5:21). அவர் பாவமற்ற தேவகுமாரன், பிதாவாகிய தேவனுக்கு “தாசனாகிய நீதிபரரர்”. கிறிஸ்து அநேகரை “நீதிமானாக்குவார்” (v. 11). இங்கே சுவிசேஷத்தின் இருதயம் இருக்கிறது. நாமாக தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து நீதிமானாக்கிக் கொள்ள முடியாது, எனவே “எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப் படுவதில்லை” (ரோமர் 3:20). நாம் சுபாவத்திலேயே பாவிகளாக இருப்பதால் நம்மை நாமே நீதிமான்களாக்கிக் கொள்ள முடியாது. கிறிஸ்துவின் நீதியை நமக்குள் ஏற்றுக் கொள்வதன் மூலமாகவே நாம் நீதிமான்களாக எண்ணப்பட முடியும். “ஏற்றுக் கொள்ளுதல்” என்பது சட்டரீதியானது. கிறிஸ்துவின் நீதியை சட்டரீதியாக நமக்குள் ஏற்றுக் கொள்வதன் மூலமாகவே நாம் நீதிமான்களாக எண்ணப்பட முடியும். தேவனுடைய “தாசனாகிய நீதிபரரர் தம்மைப் பற்றும் அறிவினால் அவர்களுக்கு தமது நீதியைக் கொடுப்பதன் மூலமாக அநேகரை [நீதிமானாக்குவார்]!” (ஏசாயா 53:11). “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்....” (ஏசாயா 53:11). ஜான் ட்ராப் நமக்கு, கார்டினல் கான்டார்னஸ் அவர்கள் வேறொரு கத்தோலிக்க கார்டினல் பிகியஸ் மூலமாக மரணதண்டனை விதிக்கப்பட்டதை நினைவு படுத்துகிறார். கான்டார்னஸ் இந்த வசனத்தை அப்படியே எழுத்தின்படி விசுவாசித்தார், அதனால் அவர் ஒரு “கலகக்காரராக” அழைக்கப்பட்டார் மற்றும் “மனிதனுடைய நீதிமானாகிற காரியமானது தேவனுடைய இலவசமான இரக்கத்தினாலும் கிறிஸ்துவின் மேன்மையினாலும் [கிடைப்பது]” என்று நம்பினபடியினால் மரண தண்டனை கொடுக்கப்பட்டார் (John Trapp, A Commentary on the Old and New Testaments, 1997 reprint, volume III, pp. 410-411, note on Isaiah 53:11). ஆனால் கார்டினல் கான்டார்னஸ் அவர்கள் சொன்னது சரியானது! மற்றும் மற்ற கார்டினல்கள் தவறானவர்கள்! “என் தாசனாகிய நீதிபரரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை [நீதிமானாக்குவார்].” அந்த வார்த்தைகள் மரிப்பதற்கு தகுதியானவைகளா? மெய்யாகவே, அவைகள் தகுதியானவைகள்! நம்முடைய பாப்டிஸ்ட் மற்றும் புரோட்டஸ்ட்டன்ட் விசுவாசத்தின் இருதயம் அதுவாகும்! ஃபின்னேயை பின்பற்றும் தீர்மானம் செய்பவர்கள், கத்தோலிக்க போதனையைப் போல, நமக்கு நாமே நீதிமானாக்கிக் கொள்ள முடியாது! ஓ, முடியாது! “இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லை” (கலாத்தியர் 2:15). “இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப் படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது” (கலாத்தியர் 3:24). கிறிஸ்துவே, தேவனுடைய “தாசனாகிய நீதிபரரர்” அநேகரை நீதிமானாக்குவார்! ஆனால் இது எப்படி நடக்கும்? கிறிஸ்து எப்படி “அநேகரை நீதிமானாக்குவார்”? ஏதோ ஒரு சில பாவங்களை விட்டுவிட்டு தங்கள் சொந்த கிரியைகளை செய்வதால் அவர்களை நீதிமான்களாக்குவாரா? இல்லை! அது கத்தோலிக்க மார்க்கம் மற்றும் தீர்மான மார்க்கம்! அவர்கள் ஒரு “பாவியின் ஜெபத்தை” சொல்லுவதன் மூலமாகவோ அல்லது செய்தியின் முடிவில் “முன்னே வருவதன்” மூலமாகவோ அவர்கள் நீதிமான்களாக முடியுமா? இல்லை! அது கத்தோலிக்க மார்க்கம் மற்றும் தீர்மான மார்க்கம்! அவர்கள் “இரட்சிப்பை அறிந்ததாலும்” யோவான் 3:16 வசனத்தை மனப்பாடமாகத் தெரிந்துவைத்திருப்பதாலும், “பாவியின் ஜெபத்தை” சொல்வதாலும் நீதிமான்களாக்குவாரா? இல்லை! அதுவும்கூட, கத்தோலிக்க மார்க்கம் மற்றும் தீர்மான மார்க்கம்! பிறகு, எப்படி நீ, நீதிமானாக்கப்பட முடியும்? தேவனுடைய பார்வையில் பரிசுத்தராக மற்றும் நீதிமானாக மாற எப்படி முடியும்? அது நித்தியமானக் கேள்வி! அதுதான் யோபுவின் புத்தகத்தில் பில்தாத் கேட்ட பெரிய கேள்வி! அவன் சொன்னான், “மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமனாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?” (யோபு 25:4). அதற்கான பதில் நமது பாடத்தின் வார்த்தைகளிலிருந்து ஒலிக்கிறது. “என் தாசனாகிய நீதிபரரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமானாக்குவார்” (ஏசாயா 53:11). அல்லது, ஸ்பர்ஜன் அதை மொழிபெயர்த்ததைப்போல, “அவருடைய அறிவினால் என் தாசனாகிய நீதிபரரர் அநேகரை நீதிமானாக்குவார்” (C. H. Spurgeon, The Metropolitan Tabernacle Pulpit, Pilgrim Publications, 1980 reprint, volume 63, p. 117). மற்றும் இப்படியாக ஸ்பர்ஜன் சொன்னார், கிறிஸ்துவின் தியாக பலிக்கான விளைவை பெற்றுக் கொள்ளும்படியாக நான் வழி முழுவதுமாக அறிந்து கொண்டும் மற்றும் விசுவாசித்துக் கொண்டும் இருந்தேன் - செய்ததினால் அல்ல... “நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப் படுவதில்லையே”. “நியாயப்பிரமாணத்தின் மூலமாக பாவத்தை அறிகிற அறிவு கிடைக்கிறது”. “கிருபையும் மற்றும் சமாதானமும் இயேசு கிறிஸ்து மூலமாக வந்தது”, அவைகள் விசுவாசத்தினாலும் மற்றும் அறிதலினாலும் - அவரை அறிவதன் மூலமாக... அவர் மூலமாக... நாம் நீதிமான்களாகிறோம்” (ibid.). “ஒருவன் கிரியை செய்யாமல் பாவிவை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்” (ரோமர் 4:5). “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது நீ இரட்சிக்கப் படுவாய்” (அப்போஸ்தலர் 16:31). “என் தாசனாகிய நீதிபரரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்” (ஏசாயா 53:11). கிறிஸ்துவின் பாடுகள் தேவனுடைய நீதியை திருப்தி படுத்துகிறது. கிறிஸ்துவே அநேகருக்கு நீதிமானாக்குதலைக் கொண்டு வந்தார் என்று அறிந்து கொள்ளுவோம். மற்றும் – III. மூன்றாவதாக, பாவியின் பாவத்தைச் சுமக்கும் கிறிஸ்து முழுமையான கிருபாதாரபலியை பாவிகளுக்குக் கொண்டு வருகிறார். தயவு செய்து எழுந்து நின்று நமது பாடத்தை கடைசி ஆறு வார்த்தைகளுக்கு மிகுந்த கவனம் செலுத்தி வாசிப்போம். “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்து கொள்வார்” (ஏசாயா 53:11). நீங்கள் அமரலாம்.கிறிஸ்து “அநேகரை, அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்ளுவதன் மூலமாக நீதிமானாக்குவார்”. அதாவது, அவர்களுடைய பாவங்களை அவர் சுமந்து கொள்வார். நம்முடைய நீதிமானாக்குதலின் முழுமையும், நம்முடைய பாவ நிவாரணம் மற்றும் இரட்சிப்பின் முழு அஸ்திபாரமும், இந்த வசனத்தில் வெளிப்படுத்தப்படுகிறது, “அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்”. ஏசாயா 53:5 சொல்லுகிறது, “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப் பட்டார்: நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:5). ஏசாயா 53:6 சொல்லுகிறது, “கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்” (ஏசாயா 53:6). ஏசாயா 53:8 சொல்லுகிறது, “என் ஜனத்தின் மீறுதலின் நிமித்தம் அவர் வாதிக்கப் பட்டார்” (ஏசாயா 53:8). மற்றும் I பேதுரு 2:24 சொல்லுகிறது, “அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்” (I பேதுரு 2:24). நமது பாடத்தை ஸ்பர்ஜன் மொழிபெயர்த்ததுபோல “…அவருடைய அறிவினால் என் தாசனாகிய நீதிபரரர் அநேகரை நீதிமானாக்குவார்.” கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முதலாவது கருத்து இங்கே இருக்கிறது - தெளிவாக மற்றும் எளிதாக இருக்கிறது. கிறிஸ்துவின் பாடுகள் தேவனுடைய நீதியை திருப்தி செய்தது. கிறிஸ்துதாமே நீதிமானாக்குதலை கொண்டுவருகிறவர் என்று அறிந்து கொள்வோம். கிறிஸ்துவை விசுவாசத்தின் மூலமாக அறிந்து கொள்ளும் பாவிகளுக்கு பாவத்தை-சுமக்கும் கிறிஸ்துவானவர் முழுஇரட்சிப்பை கொண்டு வருகிறார். அற்புதமான சுவிசேஷம்! அற்புதமான மீட்பு! இதுபோல ஒன்று இதற்கு முன்போ அல்லது இதற்கு பின்போ, வரலாற்றில் ஒருபோதும் நிகழ்ந்தது இல்லை! “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்து கொள்வார்” (ஏசாயா 53:11). வேறு ஒரு இரவிலே வெஸ்லியும் நானும் நடிகர் ஜான் கேரடைனைப் பற்றி இன்டர்நெட்டில் படித்துக் கொண்டிருந்தோம். மற்ற எல்லா நடிகர்களையும்விட அவர், 300 திரைப்படங்களுக்கு மேலாக நடித்திருக்கிறார். அவர் இத்தாலியில் உள்ள, மிலானில், மரித்தபோது அவருடைய மகன் ஒருவருடைய வீட்டிற்கு அந்த உடலை சவப்பெட்டியில் வைத்துக் கொண்டு வந்தார்கள். அந்த மகன் அதிகமாக மது குடித்திருந்தான். அவன் பெட்டியைத் திறந்து மரித்த தன்னுடைய தகப்பனுடைய வாயில் மதுவை ஊற்றினான். இப்பொழுது, நான் உங்களைக் கேட்கிறேன், அந்த செத்துப்போன மனிதன் மதுவை ருசித்திருக்க முடியுமா? முடியாது! கிறிஸ்து நம்மை இரட்சிக்க தக்கதாக அவர் செய்த அதிசயமான காரியங்களை நான் உங்களிடம் பேசினபோது, உங்களால் ருசிக்க முடியவில்லை. ஏன் முடியவில்லை? ஏன் என்றால் நீங்கள் ஆவிக்குரியபடி மரித்துப் போய் இருக்கிறீர்கள். “நீங்கள் பாவத்தில் மரித்தவர்கள்” என்று வேதம் சொல்லுகிறது (எபேசியர் 2:5). அதுதான் பாவத்தின் தன்மை. நீ கிறிஸ்துவின் காரியங்களில் மரித்து இருக்கிறாய். நீ அவைகளை ருசிக்க முடியாது. நீ அவைகளை உணர முடியாது. ஜான் கேரடைனின் மரித்த சரீரம் அந்த சவப்பெட்டியில் இருந்ததுபோல, தேவனுடைய காரியங்களில் நீ மரித்தவனைப் போல இருக்கிறாய். கிறிஸ்து உனக்கு ஜீவனைக் கொடுக்கப் போகிறார் அல்லது நீ நித்தியகாலமாக நஷ்டமடையப் போகிறாய்! “நிர்ப்பந்தமான மனிதன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” (ரோமர் 7:24) என்று நீ கதற வேண்டிய அவசியம் உனக்கு இருக்கிறது. ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, தனது உள்ளத்தின் ஆழத்திலிருந்து அப்படி கதறும்போது, அவர்கள் இரட்சிப்புக்கு அருகில் இருக்கிறார்கள். நீ அப்படி கதறி இருக்கிறாயா? நீ தேவனுக்கு மரித்திருக்கிறாய் என்ற உணர்வு ஏற்பட்டு, கிறிஸ்து மட்டுமே காப்பாற்ற முடியும் என்று நினைத்திருக்கறாயா? நீ கிறிஸ்துவுக்கு மாற்றப்பட்டிருக்கிறாயா? இல்லை என்றால், இப்பொழுது உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக் குட்டியாகிய கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பாயா? அவரை நோக்கிப் பார்த்து, அவரை நம்புவாயா? திரு. கிரீபித் அவர்கள் சற்று முன்பாக பாடின பாடலின் வார்த்தைகளை கொஞ்சம் கேளுங்கள். நீ பாவத்திலிருந்து விடுதலையாக விருப்பம் உண்டேயானால், இந்தப் பிரச நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் பிரசங்கத்திற்கு முன்னால் டாக்டர் க்ரெய்டென் L. சேன் வாசித்த வேத பகுதி: ஏசாயா 53:1 - 11. |
முக்கிய குறிப்புகள் கிறிஸ்துவின் மூலமாக கிடைத்த திருப்தி மற்றும் நீதிமானாக்குதல் (செய்தி எண்: 13 ஏசாயா 53) SATISFACTION AND JUSTIFICATION – டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால் “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்து கொள்வார்” (ஏசாயா 53:11). I. முதலாவதாக, தேவனுடைய நீதியை கிறிஸ்துவின் பாடுகள்
II. இரண்டாவதாக, கிறிஸ்துவைப் பற்றின அறிவு அநேகரை III. மூன்றாவதாக, பாவியின் பாவத்தைச் சுமக்கும் கிறிஸ்து
|