இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
சாந்தப் படுத்துதலின் விளக்கம் (செய்தி எண்: 9 ஏசாயா 53) டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால் ஏப்ரல் 7, 2013 அன்று கர்த்தருடைய நாளில் காலை வேளையில் லாஸ் “இடுக்கணிலும் நியாயத் தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப் பட்டார்” (ஏசாயா 53:8). |
இதற்கு முன் வசனத்திலே கிறிஸ்துவின் அமைதியைக் குறித்து ஏசாயா நமக்கு சொன்னார், “அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார் ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப் போலவும், தன்னை மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” (ஏசாயா 53:7). டாக்டர் எட்வர்டு ஜே. யங் கூறுகிறார், “கிறிஸ்து பாடுபடும்போது பொறுமையும் அமைதியுமாக இருந்தார் என்பதை அழுத்தமாக எடுத்துரைத்தபின்பு, தீர்க்கதரிசி இப்பொழுது மிக விளக்கமாக அவரது பாடுகளை எடுத்துரைக்கிறார்” (Edward J. Young, Ph.D., The Book of Isaiah, Eerdmans, 1972, volume 3, p. 351). “இடுக்கணிலும் நியாயத் தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்” (ஏசாயா 53:8). இந்த வசனத்தை இயற்கையாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். (1) கிறிஸ்துவின் பாடுகள், (2) கிறிஸ்துவின் வம்சம் மற்றும் (3) நமது பாவங்களின் நிமித்தமாக கிறிஸ்துவின் கொடூரமான பலி. I. முதலாவதாக, இந்த பாடம் கிறிஸ்துவின் பாடுகளைக் குறித்த விளக்கத்தைத் தருகிறது. “இடுக்கணிலும் நியாயத் தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்… ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்” (ஏசாயா 53:8). கிறிஸ்து கெத்சமனே தோட்டத்திலே கைது செய்யப்பட்டார். அவர் தேவாலயக் காவலர்களாலே பிரதான ஆசாரியர்களிடம் கொண்டுபோய் விடப்பட்டார். அவர்கள் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கும் மற்றும் யூதருடைய சனகரீப் சங்கத்திற்கும் முன்பாக அவரை கொண்டு வந்தார்கள். இந்த சங்கத்திலே பொய் சாட்சிகள் மூலமாக அவர் நியாயந்தீர்க்கப்பட்டார். இயேசு கூறுவதாவது, “மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்கள்” (மத்தேயு 26:64). அதன் பிறகு பிரதான ஆசாரியன் சொன்னான், “உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள் [சனகரீப் சங்கத்தார்] மரணத்திற்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள். அப்பொழுது அவருடைய முகத்தில் துப்பி, அவரை குட்டினார்கள் [அடித்தார்கள்]; சிலர் அவரை கன்னத்தில் அறைந்து” (மத்தேயு 26:66-67). “விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவை கொலை செய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனை பண்ணி” (மத்தேயு 27:1). ஆனால் ரோம சட்டப்படி இதை செய்ய அவர்களுக்கு சட்டப்பூர்வமான அதிகாரமில்லை, அதனால், “அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய (ரோம) பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்பு கொடுத்தார்கள்” (மத்தேயு 27:2). பிலாத்து இயேசுவை விசாரித்தான், “இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புகொடுத்தான்” (மத்தேயு 27:26). இவ்வாறாக, நமது இந்த பாடப்பகுதி நிறைவு பெறுகிறது, “இடுக்கணிலும் நியாயத் தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார் [பிரதான ஆசாரியர்களிடம் மற்றும் பிலாத்துவுக்கு முன்பாக கொண்டுபோய் விடப்பட்டார்] .... ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார் [சிலுவை மரணத்தின் மூலமாக]” (ஏசாயா 53:8). யூத சனகரீப் சங்கம் மற்றும் பிலாத்து மூலமாக இயேசுவானவர் சிறை படுத்தப்பட்டதால் “இடுக்கணிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்” என்ற வார்த்தைகள் நிறைவேற்றப்பட்டது. காய்பாவுக்கும் மற்றும் பிலாத்துவுக்கும் முன்பாக அவர் சோதிக்கப் பட்டபோது “நியாயத் தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்” என்ற வார்த்தைகள் நிறைவேறினது. “ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்” என்ற வார்த்தைகளை நிறைவேற்ற அவர் இடுக்கணிலும் நியாயத் தீர்ப்பிலுமிருந்து எடுக்கப்பட்டு, கல்வாரி மலைக்கு கொண்டு போகப்பட்டு சிலுவையிலே அறையப்பட்டு மரித்தார். டாக்டர் ஜான் கில் (1697- 1771) சொன்னார், இடுக்கணிலும் நியாயத் தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அதாவது, நீதி என்ற பெயரிலே, அவருடைய ஜீவன் கொடூரமான முறையில் எடுக்கப்பட்டது; ஆனால் [மெய்யாகவே] அவருக்கு [படுமோசமான] அநீதி இழைக்கப்பட்டது; பொய்யான குற்றச்சாட்டு அவருக்கு விரோதமாக சுமத்தப்பட்டது, பொய் சாட்சிகள் மூலம் [லஞ்சம் கொடுத்து பொய்யான சாட்சியம் கூற வைத்து, அவருக்கு எதிராக பொய் வாக்குமூலம் வாங்கினார்கள்], அவருடைய ஜீவன் பொல்லாதவர்களின் கரங்களால் எடுக்கப்பட்டது [கொடுக்கப்பட்டது] அப்போஸ்தலர் 8:32ன்படி, [“அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டு போகப்பட்டார்; மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாதிருக்கிற ஆட்டுக் குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்”]. அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப் போடப்பட்டது; அவருக்கு பொதுவான நீதியும் [பெற்றுக்கொள்ளவில்லை] கிடைக்கவில்லை (John Gill, D.D., An Exposition of the Old Testament, The Baptist Standard Bearer, 1989 reprint, volume V, p. 314). நமது பாடம் சொல்லுவதுபோல, “இடுக்கணிலும் நியாயத் தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்… ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்...” (ஏசாயா 53:8). II. இரண்டாவதாக, இந்த பாடத்தில் கிறிஸ்துவின் வம்சம் வம்சத்தைப் பற்றின விளக்கம் கொடுக்கப்படுகிறது. இந்த வாக்கியத்தின் மையத்திலுள்ள பகுதியை விளக்குவது சற்று கடினமானதாகும், “இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்…” (ஏசாயா 53:8). “அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்?” இந்த வாக்கியம் எதைப்பற்றிச் சொல்கிறது என்று டாக்டர் கில் கூறுவதாவது “அந்த காலத்தையும் [அல்லது அவர் இருந்த சமயத்திலிருந்த சந்ததியையும்], அவர் வாழ்ந்த காலத்திலிருந்தவர்களையும், அவரிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டாவர்களையும், பொல்லாத குற்றம் செய்தவர்களையும், அவற்றை வாயால் [முழுமையாக] விவரிக்க முடியாதவையாகவும், மனித எழுதுகோலால் [முழுமையாக] எழுத முடியாததாகவுமானது” (Gill, ibid.). தீமையில்லாத தேவகுமாரனை அவர்கள் அநீதியாக மற்றும் கொடூரமாக நடத்தினதை வாசிக்கும் போது நமது இருதயத்தில் கண்ணீர் வருகிறது! இதை ஜோசப்ஹார்ட் (1712-1768) தமது துக்க கீதத்தில் இவ்வாறாக எழுதுகிறார், புறக்கணிக்கப்பட்ட அந்த (பயங்கர இடத்திலே) – இயேசு ஜான் டிராப் (1601-1669) சொன்னார், “அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்? [யாரால் விவரிக்க முடியும்] அவர் வாழ்ந்த காலத்திலிருந்த மனிதர்களின் பொல்லாப்பை?” (John Trapp, A Commentary on the Old and New Testaments, Transki Publications, 1997 reprint, volume 3, p. 410). ஏன் யூத தலைவர்கள் இயேசுவை சிலுவையில் அறைய வேண்டும் என்று எண்ணினார்கள் என்பதையும் ஏன் ரோமாபுரி வீரர்கள் “அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி… அவரைச் சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்” (மாற்கு 15:19-20) என்பதையும் மனித வார்த்தைகளால் விவரிப்பது கடினம். “மரணத்திற்கேதுவான தொன்றும் அவரிடத்தில் காணாதிருந்தும், அவரைக்கொலை செய்யும்படிக்குப் பிலாத்துவை வேண்டிக் கொண்டார்கள்” (அப்போஸ்தலர் 13:28). ஜான் டிராப் இதை, “அவருடைய வம்சத்தை யாரால் சொல்லவோ அல்லது விவரிக்க முடியும்?… அவர் வாழ்ந்த காலத்திலிருந்த மனிதர்களின் பொல்லாப்பை” என்று எழுதுகிறார். “இடுக்கணிலும் நியாயத் தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்....” (ஏசாயா 53:8). டாகடர் யங் சொன்னார், “அந்த வினைச்சொல் [விவரிக்கிறது] தியானத்தை திணிக்கிறது அல்லது ஏதோ ஒன்றைக் குறித்த தீவிரமான கருத்தை கொடுக்கிறது.... அவர்கள் [அவரது மரணத்தின் அர்த்தத்தை] யோசித்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை” (Young, ibid., p. 352). இந்த நாளில் ஏதாவது வித்தியாசமிருக்கிறதா? லட்சக் கணக்கான மக்கள் கிறிஸ்து சிலுவையிலே மரித்ததைப்பற்றி அதற்கு தீவிரமான கவனம் செலுத்தாதபடிக்குக் கேள்விப் பட்டார்கள். “அவர்கள் அவரது மரணத்தின் அர்த்தத்தை யோசித்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் அப்படிச் செய்ய வில்லை.” கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை யார் தீவிரமாக எடுத்துக் கொள்ளுகிறார்கள்? நீங்கள் எடுத்துக் கொள்ளுகிறீர்களா? கிறிஸ்துவின் மரணத்தைக் குறித்து யோசிக்க நேரம் செலவிடுகிறீர்களா மற்றும் அது உங்களுக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது? “அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்? அவர் வாழ்ந்த காலத்திலிருந்த மனிதர்களின் பொல்லாப்பை” என்று ஜான் ட்ரேப் எழுதுகிறார். இருந்தாலும் இன்று மனந்திரும்பாதிருக்கிற மக்கள் மெய்யாகவே இயேசுவை சிலுவையிலரைந்த மக்களைப் போலவே இருக்கிறார்கள். கிறிஸ்துவின் மரணத்தின் முக்கியத்துவத்தை தீவிரமாக நினைக்க விருப்பமில்லை. நமது தியேட்டர்களில் “கிறிஸ்துவின் பாடுகள்” (The Passion of the Christ) என்ற திரைப்படம் வெளியிடப்பட்டபோது அநேக செய்தி வியாக்கியானர்கள் இந்த படத்தை பார்ப்பவர்கள் மத்தியில் அதிகமான விளைவை உண்டாக்கும் என்று சொல்லி இருந்தார்கள். நற்செய்தியில் பெரிய எழுப்புதலை ஏற்படுத்தும் என்று சொன்னார்கள். சிலர் அதிகமான வாலிபர்கள் கூட்டம் சபைகளுக்கு வரும் என்று சொன்னார்கள். 2004ல் அந்த திரைப்படம் வெளியிடப்பட்டது. அது ஒன்பது வருடங்களுக்கு முன்பாக. அநேக காலங்கள் கடந்தன ஆனால் அந்த செய்தி வியாக்கியானர்கள் சொன்னது சரியா. மெய்யாகவே கோரமான வகையில் கிறிஸ்துவின் பாடுகளை படத்தில் விவரித்து இருக்கிறார்கள் அதைப் பார்த்த அநேகரிடையில் மனதளவில்தான் விளைவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இப்பொழுது அதைப் பார்ப்பவர்களிடையில் நிலையான எண்ணத்தை உண்டாக்கவில்லை. அவர்கள் தங்கள் சுயத்தை மையமாகக் கொண்ட மற்றும் பாவமான வாழ்க்கைக்குத் திரும்பி போய்விட்டார்கள். அதுதான் பாவத்தின் மெய்யான சாராம்சம். கிறிஸ்துவின் பாடுகளைப்பற்றி மனந்திரும்பாத மக்களுக்கு ஒரு சிறிய துக்க அனுபவம் மட்டுமே இருக்கும். ஆனால், சிறிதளவில் பட்சாதாபப்படுவார்கள் அவ்வளவுதான். அதன்பிறகு மணிக்கணக்கில் “வலைதளங்களிலும்”, பணப்பேராசையிலும், தேவனற்ற வாழ்க்கையிலும், முடிவில்லா வீடியோ விளையாட்டுகளிலும் ஈடுபட்டு, ஞாயிற்றுக் கிழமை சபைக்குச் செல்லாமல், தங்களை படைத்த தேவனைப்பற்றி மிகச்சிறிய அளவில் சிந்தித்து, தங்களை இரட்சிக்க சிலுவையிலே பாடுபட்ட கிறிஸ்துவை மறப்பார்கள். “அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்?” இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது இருந்த மக்களைப் போலவே உங்கள் வமசத்திலும் காணப்படுவது ஏன்! அவர்கள் சுயநேசத்துக்காகவும், தேவனற்ற காரியங்கள் செய்பவர்களாகவும், பாவத்தால் கிடைக்கும் சந்தோஷத்துக்காகவே வாழ்பவர்களாகவும் உள்ளனர். உங்கள் மத்தியிலிருக்கும் மக்களைப் போன்ற பரிபூரண படம் போல இது இல்லையா? நீ மெய்யாகவே உனக்கு நேர்மையாக இருப்பாயானால், உன்னையே இது விளக்குவதாக உணரவில்லையா? எல்லாவற்றையும்விட தேவனைப்பற்றி சிந்திப்பதற்கு நீ எவ்வளவு நேரம் செலவிடுகிறாய்? ஒவ்வொரு நாளும் ஜெபத்திற்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறாய்? உன்னுடைய அனுதின வாழ்க்கையை கிறிஸ்து சிலுவையில் சிந்தின இரத்தம் எவ்வளவாக பாதித்திருக்கிறது? நீ மெய்யாகவே உனக்கு நேர்மையாக இருப்பாயானால், இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது இருந்த மக்கள் கிறிஸ்துவை புறக்கணித்தார்கள், சிலுவையில் அறைந்தார்கள், பிறகு தங்கள் பாவ வழியில் நடந்து தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள்; இவர்களுக்கும் உனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று ஒப்புக்கொள்வாய் என்று நான் நினைக்கிறேன். அதுதான் பாவத்தின் மெய்யான சாராம்சம். அதுதான் பாவத்தின் மெய்யான குணாதிசயம். அதுதான் நீ ஒரு பாவி என்று நிரூபிக்கிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது இருந்த மக்களைப் போலவே ஒவ்வொரு அணு அளவிலும் குற்றவாளியாக காணப்படுகிறாய். நீ இங்கே ஆலயத்திற்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் தவறாமல் வந்தாலும், உனக்கு “தேவபக்தியின் வேஷம்” மட்டுமே இருக்கிறது (II தீமோத்தேயு 3:5). இது உனக்கு உண்மையாக தெரியவில்லையா? “எல்லாரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களானார்கள்” (ரோமர் 3:23) என்பது உனக்கு உண்மையில்லையா? அப்படியாக இவையெல்லாம் உனக்கு உண்மையாக இருக்கும்பொழுது, சர்வ வல்லமையுள்ள தேவனுடைய கோபத்திலும் மற்றும் நியாயத் தீர்ப்பிலுமிருந்து நீ எப்படித் தப்பித்துக் கொள்ளுவாய்? Rev. Iain H. Murray தமது சமீப வெளியீட்டுப் புத்தகமான டாக்டர் மார்டீன் லாய்டு- ஜோன்ஸ்ஸின் வாழ்க்கை குறிப்பில் சொல்கிறார், லாய்டு-ஜோன்ஸ் அவர்கள் மனிதனுடைய குற்றத்திற்கு வரும் அபாயத்தை குறித்து பிரசங்கிக்கும்போது, தேவகோபத்தின் நிச்சயத்தை அர்த்தப்படுத்துவார். மனம் மாறாதவர்கள் மீது ஏற்கனவே இருக்கும் கோபம் வரப்போகும் பாவத்திற்குத் தண்டனையாகிய நரகம்... அந்த இடத்தில் அவர்கள் ‘புழு சாகாது அக்கினி அவியாது’ (Iain H. Murray, The Life of Martyn Lloyd-Jones, The Banner of Truth Trust, 2013, p. 317). III. மூன்றாவதாக, கிறிஸ்துவின்பாடுகளின் ஆழமான அர்த்தத்தை விளக்கும் பாடம். தயவு செய்து எழுந்து நின்று ஏசாயா 53:8ஐ சத்தமாக வாசிக்கவும். கடைசி வாக்கியத்திற்கு அதிக கவனம் செலுத்தி படிக்கவும், “என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்”. “இடுக்கணிலும் நியாயத் தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப் பட்டார்” (ஏசாயா 53:8). நீங்கள் அமரலாம். டாக்டர் மெரில் எப். அங்கர் சொன்னார், பதினேழு நூற்றாண்டுகளாக [ஏசாயா 53ம் அதிகாரத்தின் மேசியாவை பற்றின விளக்கம்] ஒரே விளக்கமாக கிறிஸ்தவர்கள் [மற்றும்] யூத அதிகாரிகாரிகளுக்கு இருந்து வந்தது. [அதன் பிறகு யூதர்கள்] கிறிஸ்துவுக்குள் அந்த அதிகாரத்தின் வசங்கள் குறிப்பிட்ட வகையில் நிறைவேறினபடியினால் வெளிப்படையாக விளக்கமளித்தார்கள் (Unger, ibid., p. 1293). இன்று அநேக யூத அறிஞர்கள் ஏசாயா 53ம் அதிகாரம் முழுவதும் கிறிஸ்துவை குறித்தது அல்ல, அவைகள் ஒட்டுமொத்த யூதர்களின் பாடுகளைக் குறிப்பதாகும் என்று சொல்லுகிறார்கள். யூதர்கள் பொய் கிறிஸ்தவர்களால் கொடுமையாக துன்புறுத்தப் பட்டிருக்கலாம், அது நமது பாடத்தின் மெய்யான அர்த்தமல்ல, அது தெளிவாகச் சொல்லுகிறது, “என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் [பாவம்] அவர் வாதிக்கப்பட்டார்” (ஏசாயா 53:8). இந்த வாக்கியத்தில் “என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்,” டாக்டர் ஹன்றி எம். மோரீஸ் சொன்னார், “அவர் ‘என்னுடைய மக்களுக்காக’ மரித்தார் - அதாவது இஸ்ரவேலருக்காக - இந்த பகுதியிலே இஸ்ரவேலர் அல்ல அநேகர் குற்றஞ்சாட்டினார்கள்” [கிறிஸ்துவை] (Henry M. Morris, Ph.D., The Defender’s Study Bible, Word Publishing, 1995, p. 767). இவ்வாறாக, அடிக்கப்பட்டது யூதர் அல்ல, அவர்களுடைய ஸ்தானத்திலே, அவர்களுடைய பாவங்களுக்காக, அவர்களின் மற்றும் நம்முடைய பாவத்தண்டனைக் கிரயத்தை செலுத்தும்படியாக, கிறிஸ்து அடிக்கப்பட்டார். நம்முடைய பாவத்தண்டனைக் கிரயத்தை செலுத்தும்படியாக அவர் சிலுவையில் அறையப்பட்டார்! டாக்டர் ஜான் கில் சொன்னார் “என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப் பட்டார்”, இந்த வார்த்தைகள் யூத மக்களுக்கும் மற்றும் தெரிந்து கொள்ளப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும்கூட பொறுந்தும் - யூத மக்களின் பாவங்களுக்காகவும் மற்றும் “தமது மக்களாகிய” கிறிஸ்தவர்களின் பாவங்களுக்காகவும் கிறிஸ்து அடிக்கப் பட்டார் என்பதைக் காட்டும்படியாக (கில், ஐபிட்., பக்கம் 314). டாக்டர் கில் இந்த வார்த்தையின் சரியான அர்த்தத்தை கொண்டு வெளியே வருகிறார் என்று நான் நினைக்கிறேன், “என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப் பட்டார்” (ஏசாயா 53:8). தமது மக்களின் பாவத்தண்டனைக் கிரயத்தை செலுத்தும்படியாக கிறிஸ்து சிலுவையிலே “அடிக்கப்பட்டார்”, அது யூதர்களோ அல்லது புறஜாதிகளோ யாராகிலுமிருக்கலாம். அவருடைய மரணமானது பதிலிடையானது (Substitutionary), நம்முடைய பாவத்தண்டனைக் கிரயத்தை செலுத்தும்படியாக அவர் மரித்தார். அது சாந்தப்படுத்தக்கூடியது (propitiatory), பாவிகள் மீது இருந்த தேவகோபத்தைத் திருப்பக்கூடியது. ஆனால் ஒரு நிபந்தனை இருக்கிறது. கிறிஸ்து உன் பாவத் தண்டனைக் கிரயத்தை செலுத்தும்படியாக மரித்ததை நீ கண்டிப்பாக நம்பி விசுவாசிக்க வேண்டும். கிறிஸ்துவை நம்பத் தவறினவர்களை அவர் பாவத் தண்டனைக் கிரயத்தை செலுத்தும்படியாக சிலுவையிலே மரித்தது இரட்சிக்க முடியாது. நீ இயேசுவிடம் உன்னை ஒப்புவித்தால் மட்டுமே உன்னுடைய பாவங்கள் தேவனுடைய பதிவேட்டிலிருந்து இரட்சகரின் இரத்தத்தின் மூலமாக முற்றிலும் நீக்கப்படும். நீ இந்த வசனத்திலுள்ள எல்லா சத்தியங்களையும் அறிந்திருந்தும் நீ இழக்கப்பட்டு போய்விடலாம். பிசாசுகளுக்கு இந்த சத்தியங்களைக் குறித்த முழுமையான அறிவு இருக்கிறது, ஆனால் அது அவைகளை இரட்சிக்காது. அப்போஸ்தலனாகிய யாக்கோபு சொல்லுகிறார், “பிசாசுகளும் [பேய்கள்] விசுவாசித்து, நடுங்குகின்றன” (யாக்கோபு 2:19). பிசாசுகளுக்கு கிறிஸ்துவின் தியாகபலியாகிய மரணத்தைப் பற்றிய “தலை அறிவு” (Head Knowldege ) மட்டுமே இருக்கிறது. நீ இரட்சிக்கப்படவேண்டும் என்று விரும்பினால் கண்டிப்பாக இன்னும் தொடர்ந்து போகவேண்டியதாக இருக்கிறது. நீ உண்மையாக கிறிஸ்துவுக்கு ஒப்பு கொடுத்து அவரை நம்பி கீழ்ப்படிந்திருக்க வேண்டும். கர்த்தருடைய கிருபையுள்ள கிரியையினாலே மாறுதலடைய வேண்டும் அல்லது சிலுவையிலறையப்பட்ட உன்னுடைய மனப்பாடத்திலுள்ள அவரைப்பற்றய நினைவோடு நரகத்திற்குப் போவாய். டாக்டர் A.W. டோசர் (Tozer) “முடிவாக்கப்படுதலை” எதிர்த்தும், உண்மையான மத மாற்றத்தை ஆதரித்தும் கூறுவதை கவனியுங்கள். டாக்டர் A.W. டோசர் கூறுகிறார், மதமாற்றம் முழுமையும் எந்திரமயமானதும் மற்றும் ஆவியற்றதுமாக நடைபெறுகிறது. நீதியான வாழ்க்கை வாழாமல் விசுவாசம் அப்பியாசிக்கப்படலாம் மற்றும் ஆதாமின் தான் என்ற அகந்தை தன்னிலிருப்பதை அறியாமல் செயல்படலாம். கிறிஸ்துவை “ஏற்றுக் கொள்பவர்கள்”, அவருக்காக எந்தவிதமான சிறப்பான அன்பும் காட்டப்படாமல் தங்கள் ஆத்துமாவிலே அவரை ஏற்றுக்கொள்ளலாம். (A. W. Tozer, D.D., The Best of A. W. Tozer, Baker Book House, 1979, page 14). “மதமாற்றம் முழுமையும் எந்திரமயமானதும் மற்றும் ஆவியற்றதுமாக நடைபெறுகிறது” – இதோடு, அது கிறிஸ்தவமற்றது என்றும் நான் கூற விரும்புகிறேன்! அடிக்கடி கிறிஸ்து இல்லாமல் “தீர்மானம் எடுக்கச் செய்பவர்கள்” எளிமையான மற்றும் விரைவான ஒரு ஜெபத்தை செய்வித்து, ஞானஸ்நானம் கொடுத்து, அதோடு காரியத்தை முடிவிற்கு கொண்டு வந்துவிடவிரும்புவார்கள். அடிக்கடி கிறிஸ்துவின் மரணமும் மற்றும் உயிர்த்தெழுதலும் குறிப்பிடுவது கடினமாகக் காணப்படுகிறது. அடிக்கடி அவற்றை முழுவதுமாக விட்டுவிடுகிறார்கள்! வேதாகமம் அப்படி போதிப்பதில்லை. நீ உன்னுடைய பாவக்குற்றத்தை உணரவேண்டும், பாவத்திலிருந்தும் அதன் விளைவுகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ள கிறிஸ்துவிடம் வருவதைத்தவிர வேறுவழி இல்லை என்று கண்டு கொள்ள வேண்டும், அவருக்கு முன்பாக உதவியற்ற நிலையில் உன்னை ஒப்புக் கொடுக்க வேண்டும், உன்னுடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து அவரை விசுவாசிக்க வேண்டும். அப்பொழுதுதான், அப்பொழுது மட்டுமே, தீர்க்கதரிசியாகிய ஏசாயா சொல்லுவதை அனுபவப்பூர்வமாக நீ அறிந்து கொள்ள முடியும். “என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப் பட்டார்” (ஏசாயா 53:8). நீ இயேசு கிறிஸ்துவை நம்பி விசுவாசிக்கும்போது, அவருடைய இரத்தம் உனது பாவங்களைச் சுத்தம் செய்கிறது மற்றும் நீ மனமாற்றம் அடைகிறாய் - ஆனால் அதற்கு முன்பாக இது நடைபெறுவதில்லை. இல்லை, இதற்கு முன்னர் இது ஒருபோதும் நடைபெறவில்லை. நீ இரட்சிக்கப்பட விரும்பினால் இயேசு கிறிஸ்துவை நம்ப வேண்டும்! நாம் அனைவரும் எழுந்து நிற்போம். இயேசுவை நம்புவதைப்பற்றி நீங்கள் எங்களோடு பேச விரும்பினால் தயவு செய்து உங்களிடத்தை விட்டு பின் பகுதியில் இருக்கும் ஆடிட்டோரியத்திற்கு செல்லவும். டாக்டர் கேகான் உங்களை ஒரு அமைதியான இடத்திற்கு அழைத்துச் செல்வார். அங்கே கிறிஸ்துவுக்கு உங்களை ஒப்புகொடுப்பதைப் பற்றியும் மற்றும் உங்கள் பாவங்கள் அவருடைய பரிசுத்த இரத்தத்தால் கழுவி சுத்திகரிப்பது பற்றியும் நாங்கள் உங்களோடு பேசமுடியும்! திரு. லீ அவர்களே, தயவுசெய்து வந்து ஒப்புகொடுத்தவர்களுக்காக ஜெபிக்கவும். ஆமென். இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால், டாக்டர் ஹைமர் அவர்களுக்கு e-mail அனுப்புங்கள். அவர் உங்களிடமிருந்து பதிலைப் பெற விரும்புகிறார். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றும் குறிப்பிடவேண்டும். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் e-mail: rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம். ஆனால், முடிந்தால் ஆங்கிலத்தில் எழுதவும். தபால் மூலம் அனுப்பவிரும்பினால், அவரது விலாசம்: Dr. Hymers P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்ளலாம்: (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்களைப் பயன்படுத்த Dr. Hymers அவர்களின் அனுமதி செய்திக்கு முன்னதாக வேதவசனம் வாசித்தவர் டாக்டர் கிரைட்டன் எல். சான் : ஏசாயா 53:1-8 |
முக்கிய குறிப்புகள் சாந்தப் படுத்துதலின் விளக்கம் (செய்தி எண்: 9 ஏசாயா 53) டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ் ஜூனியர் அவர்களால் “இடுக்கணிலும் நியாயத் தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப் பட்டார்” (ஏசாயா 53:8). (ஏசாயா 53:7)
I. முதலாவதாக, இந்த பாடம் கிறிஸ்துவின் பாடுகளைக் குறித்த விளக்கத்தைத் தருகிறது. ஏசாயா 53:8அ; மத்தேயு 26:64, 66-67; 27:1-2, 26;
II. இரண்டாவதாக, இந்த பாடத்தில் கிறிஸ்துவின் வம்சத்தைப் பற்றின விளக்கம் கொடுக்கப்படுகிறது. ஏசாயா 53:8ஆ; மாற்கு15:19-20;
III. மூன்றாவதாக, கிறிஸ்துவின்பாடுகளின் ஆழமான அர்த்தத்தை விளக்கும் பாடம் ஏசாயா 53:8இ; யாக்கோபு 2:19. |