இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
அண்டத்தின் பாவம், குறிப்பிட்ட பாவம் மற்றும் பாவத்திற்கான குணமடைவு (பிரசங்க எண் 7 ஏசாயா 53ன் மீதானது) Dr. R. L. ஹைமர்ஸ், Jr. பாப்டிஸ்ட் டேபர்னேக்கல், லாஸ் ஏஞ்சலஸில் பிரசங்கிக்கப்பட்ட ஒரு செய்தி “நாமெல்லாரும் ஆடுகளைப்போல் வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்” (ஏசாயா 53:6). |
தென்னக பாப்திஸ்து குழுமத்தின் அறநெறி மற்றும் சமய விடுதலையுரிமைக் குழுவின் தலைவராக பண்டிதர் ரிச்சர்டு லேண்ட் உள்ளார். கிறிஸ்தவத்தின் அடிப்படைத் தகவுகளைக் குறித்து வியத்தகு விதத்தில் அறிவற்ற ஒரு கலாச்சாரத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோமென பண்டிதர் லேண்ட் அறிந்திருக்கிறார். அவர் சொன்னார்: அமெரிக்காவில் சமயப் பற்று இல்லாதிருப்பதைக் குறித்து டைம் பத்திரிக்கையில் ஒரு செய்திக் கட்டுரையை வாசித்தேன். ஒரு ஆலய ஆராதனையில் கலந்து கொண்ட ஒரு தம்பதியர் போதகரைப் பார்க்க வந்தனர். அவர்கள் சொன்னார்கள், “கூட்டல் அடையாளத்தில் தொங்கிக்கொண்டிருக்கிற அந்த மனிதர் யாரென எங்களது விடலைப் பருவ மகன் தெரிந்துக்கொள்ள விரும்புகிறான்.”அவர் இயேசு என்றோ, அது சிலுவையென்றோ அப்பெற்றோருக்குக் தெரியவில்லை. (“கூட்டல் அடையாளத்தில் ஒரு மனிதர்,” உலகம் பத்திரிக்கை, ஆகஸ்டு 1, 2009, பக்கம் 24). இயேசு யார் என்பதைப் பற்றியோ அவர் என்ன செய்தார் என்பதைப் பற்றியோ பல மாந்தர் மிகவும் சொர்ப அறிவுள்ளவர்களாயிருப்பது திகைப்பைத் தருகிறது. தவறு எங்கிருக்கிறதென்றால், நமது சபைகளில் பெரும்பாலானவற்றில் கிறிஸ்துவானவரைப் பற்றி மிகவும் குறைவாகவே பிரசங்கிக்கப்படுகிறது. ஆனால் பாவிகளுக்காக அவர் சிலுவையில் மரித்தார் என்ற உன்மையைக் கேட்காமல் எந்த ஒரு ஞாயிரு ஆராதனையிலும் நீங்கள் கலந்துகொள்ள முடியாது. இயேசு சிலுவையில் மரித்தபோது அவர் நமது பாவங்களைச் சுமந்து அவற்றிற்காக பரிகாரம் செய்தார். நமது எல்லாப் பாவங்களையும் சுத்திகரிக்க அவர் சிலுவையில் இரத்தம் சிந்தினார். ஸ்பர்ஜன் சொன்னார்: “இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தைக் குறித்து பிரசங்கிக்காத சில பிரசங்கிமார்கள் இருக்கிறார்கள். அவர்களைக் குறித்து ஒன்றை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன் - அவர்கள் பிரசங்கிப்பதைக் கேட்க ஒருபோதும் போகாதீர்கள்! அவர்கள் சொல்வதை கேளாதீர்கள்! இரத்தமில்லாத எந்த ஒரு ஊழியமும் ஜீவனற்றது, அந்த ஊழியம் யாருக்கும் பிரயோஜனமற்றது” (C H ஸ்பர்ஜன், 'கிறிஸ்துவின் இரத்தம் மூலம் விடுதலை' ஆகஸ்டு 2, 1874). கிறிஸ்து நமது பாவங்களைச் சுமப்பாரென்னும் கருத்து ஏசாயா 53ம் அதிகாரத்தில் திரும்ப குறிப்பிடப்படுகிறது. “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்” (ஏசாயா 53:4). “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்” (ஏசாயா 53:5). “நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது” (ஏசாயா 53:5). “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:5). “கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்” (ஏசாயா 53:6). “என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்” (ஏசாயா 53:8). “அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரண பலியாக ஒப்புக்கொடுக்கும்போது” (ஏசாயா 53:10). “அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்” (ஏசாயா 53:11). “அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து...” (ஏசாயா 53:12). கிறிஸ்துவானவர் நமது குற்றங்களைத் தம்மேல் ஏற்றுக்கொண்டு, நமது பாவங்களினிமித்தம் நம் ஸ்தானத்தில் பாடுப்பட்டு அவைகளுக்கு முழுமையான பரிகாரத்தை உண்டாக்குவாரென ஏசாயா 53ல் பல முறை கூறப்பட்டுள்ளது. ஆனால், நமது வேதபகுதியில் ஒரு புதிய கருத்து கொடுக்கப்படுகிறது. ஏன் கிறிஸ்து பாடுபட வேண்டும், ஏன் பாவமறியாத கிறிஸ்துவானவர் மனிதரின் பாவத்தைச் சுமக்க வேண்டும் என்பதைப் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது. “நாமெல்லாரும் ஆடுகளைப்போல் வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்” (ஏசாயா 53:6). நமது வேதபகுதி மூன்று குறிப்புகளாக பிரிக்கப்படலாம். I. முதலாவதாக, அனைத்து மனுக்குலத்தின் பாவத்தின் பொதுவான அறிக்கை. தீர்க்கதரிசி சொன்னார், “ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து ...” (ஏசாயா 53:6). அனைத்து மனுக்குலத்தின் உலகளாவிய பாவநிலை குறித்த ஒரு தெளிவான கூற்று இது. “நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து.” இதனை அப்போஸ்தலனாகிய பவுல் இன்னும் தெளிவுபடுத்துகிறார், “யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே. அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை.” (ரோமர் 3:9-11). “நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து,” நாம் ஒவ்வொருவரும் அப்படித்தான்! ஆடுகளைப்போல, தேவனுடைய கட்டளையென்னும் வேலியை நாம் உடைத்துப் போட்டுவிட்டோம், வழிதப்பிச் சென்று, நாமெல்லாரும் தேவனை விட்டுத் தூரம் சென்றுவிட்டோம். அப்போஸ்தலனாகிய பேதுரு சொன்னார், “'சிதறுண்ட ஆடுகளைப் போலிருந்தீர்கள்” (I பேதுரு 2:25). பேதுரு இங்கு பயன்படுத்தியுள்ள கிரேக்க வார்த்தையின் பொருள், பாதுகாப்பு மற்றும் சத்தியத்தைவிட்டு அலைந்து திரிவதும் ஏமாற்றப்படுவதுமாகும் (ஸ்ட்ராங்). பரிசுத்த வேதாகமம் அனைத்துலக மாந்தரையும் இவ்வாறாகவே விவரிக்கிறது. “நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து...” (ஏசாயா 53:6). பாவம் மனிதனைத் தரங்கெட்டுப் போகப் பண்ணுகிறப்படியால் அவன் ஒரு மிருகத்தோடு ஒப்பிடப்படுகிறான். அவன் மிருகம் போல மாறி விடுகிறான். ஆனால் நாம் ஒரு புத்திசாலித் தனமான விலங்கோடு ஒப்பிடப்படவில்லை. எளிய மனதுடைய ஆட்டோடு மனிதன் ஒப்பிடப்படுகிறான். நகரத்தில் வாழும் உங்களுக்கு ஆடுகளின் பேதைத்தனத்தை அறிய ஒரு வாய்ப்பு இல்லாமலிருக்கலாம். ஆயினும் பரிசுத்த வேதாகம நாட்களின் மக்களுக்கு ஆடுகளின் அறிவற்ற நிலை குறித்து நன்றாகத் தெரியும். மேய்ப்பன் அவைகளைக் கவனமாய் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவை வழிதவறிச் சென்றுவிடும். ஆடுகளுக்கு ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும் - வழிதவறிச் செல்வது! தொழுவத்தில் எங்காவது ஒரு சிறு திறப்பு இருந்தால் போதும். அதை ஆடுகள் எளிதில் கண்டுபிடித்து, வழிதவறிச் சென்றுவிடும். ஆயினும் தொழுவத்திற்கு வெளியே சென்ற ஆடு திரும்ப உள்ளே வர முயலுவதில்லை. பாதுகாப்பான இடத்தை விட்டு ஆடுகள் இன்னும் தொலைவாக, இன்னும் தொலைவாக சென்று விடுகின்றன. மனிதனும் அப்படித்தான். தீமை செய்வதில் ஞானமாயிருக்கும் அவன், நல்லதைச் செய்வதில் முட்டாளாயிருக்கிறான். கிரேக்க கட்டுக் கதையில் வருவதைப் போல, பாவத்தைத் தேடிச் செல்வதில் மனிதனுக்கு ஒரு நூறு கண்கள் இருக்கின்றன. ஆனால் தேவனைத் தேட வேண்டும் என்கிறபோது பர்திமேயுவைப் போல அவன் குருடனாகிவிடுகிறான். அண்டம் தழுவிய வியாதியான பாவத்தைப் பற்றி அப்போஸ்தலானகிய பவுல் இவ்வாறு கூறுகிறார்: “அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடனபடிக்கைகளுக்கு அந்நியரும் நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக் கொள்ளுங்கள்.” (எபேசியர் 2:12). “அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதயக் கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து...” (எபேசியர் 4:18). மனுக்குலம் தேவனைவிட்டு விலகி வெகுதூரம் சென்றுவிட்டதை இவ்வசனங்கள் வெளிப்படுத்திக் காட்டுகின்றன. “நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து...” (ஏசாயா 53:6). நமது வேதவசனப் பகுதியில், அனைத்து மனுக்குலத்தின் பாவத்தைக் குறித்த ஒரு பொதுவான அறிக்கையிடுதல் காணப்படுகிறது. தேவனை விட்டு விலகிச் சென்ற மனுக்குலம் நூற்றுக் கணக்காண போலி மதங்களுக்குள்ளும் தவறான கொள்கைகளுக்குள்ளும் சென்று விக்கிரகங்களையும் மாயையான தேவர்களையும் பொய் கிறிஸ்துக்களையும் வழிபாடு செய்ய ஆரம்பித்துவிட்டது. 'அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு தங்கள் இருதயக் கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்தார்கள்' (எபேசியர் 4: 18). II. இரண்டாவதாக, ஒவ்வொருவரும் அந்த குறிப்பிட்ட பாவத்தை தனிப்பட்ட ரீதியில் அறிக்கை செய்தல். நமது வேத வசனப் பகுதி தொடர்ந்து சொல்கிறது, “நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழித்தப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்” (ஏசாயா 53:6). மனித வம்சத்தின் பாவத்தை அறிக்கையிடுதலை ஆதரிக்கும் வண்ணமாக ஒவ்வொரு தனி மனிதனும் குறிப்பிட்ட பாவத்தை அறிக்கையிடும் தனிப்பட்ட அறிக்கையிடுதல் உள்ளது. 'நாமெல்லாரும் அவனவன் தன்தன் வழியிலே போனோம்'. ஒருவன் கூட தேவனுடைய வழியில் செல்ல தாமாக தெரிவு செய்யவில்லை. ஒவ்வொறு நிகழ்விலும் மனிதர் 'தன்தன் வழியை' தெரிவு செய்தனர். பாவத்தின் இதயமே இங்குதான் உள்ளது. அதாவது தேவ சித்தத்திற்கு எதிராக நமது சொந்த வழியைத் தெரிந்துகொள்வது. நமது சொந்த வாழ்வை நாமே கட்டுப்படுத்த விரும்பினோம். தேவனுக்கு ஒப்புக்கொடுக்க நமக்கு மனமில்லை. கிறிஸ்துவை நம்ப மறுக்கும் நாம் அவரின் ஆளுமைக்கு நம்மை அர்ப்பணிக்க மனமற்றிருக்கிறோம். நமது வேத பகுதி, 'அவனவன் தன்தன் வழி' என ஒருவனது சொந்த தனிப்பட்ட பாவத்தை சுட்டிக் காட்டுகிறது. ஓவ்வொரு மனிதனும் மனுஷியும் மற்றவர்களிடமிருந்து மாறுபடக்கூடிய ஒரு பிரதான பாவத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஒரே பெற்றோரால் வளர்க்கப்படும் இரு பிள்ளைகள் வெவ்வேறான, வாடிக்கையான பாவங்களைக் கொண்டிருப்பார்கள். ஒரு மகன் ஒரு விதமான பாவம் செய்வான், மற்றொருவன் வேறு விதமான பாவம் செய்வான். 'நாமெல்லாரும் அவனவன் தன்தன் வழியிலே போனோம்'. ஒருவன் வலது புறமும் அடுத்தவன் இடது புறமும் செல்கிறார்கள். ஆனால் இருவரும் தேவனுடைய வழியை நிராகரிக்கிறார்கள். கிறிஸ்துவானவரின் நாட்களில் தேவனுடைய பிரமானத்தைக் கடுமையாய் எதிர்த்த அஞ்ஞானிகள் இருந்தனர். தேவனை தங்களது வாழ்வினில் விட்டுவிட்டு மாம்சத்துக்குரிய பாவங்களை வாஞ்சித்துச் செய்த பாவிகள் இருந்தனர். தங்களது சுயநீதியினால் இறுமாப்படைந்து, பிறரைக் காட்டிலும் தாங்கள் நல்லவர்களென எண்ணிய பரிசேயர்கள் இருந்தார்கள். தேவதூதர்களையும் பிசாசுகளையும் நம்பாத சதுசேயர் இருந்தனர். அவர்கள் மாம்சீக பாவங்களில் ஈடுப்படவில்லை. அவர்கள் ஆயக்காரரைப் போல பாவத்தில் வாழவில்லை, பரிசேயரைப் போல போலிப் பற்றுடையவர்களாயும் இருக்கவில்லை. ஆனாலும் தங்களது சொந்த வழியில் தேவனுடைய சத்தியத்திற்கு எதிராய் அவர்கள் செயல்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரையும் குறித்து இவ்விதமாகக் கூறலாம், “நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழித்தப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்” (ஏசாயா 53:6). உங்களில் சிலர் கிறிஸ்தவக் குடும்பங்களில் வளர்க்கப்பட்டிருக்கலாம், ஆயினும் சுவிஷேத்தின் வெளிச்சத்தை நிராகரித்ததினால் நீங்கள் பாவம் செய்திருக்கிறீர்கள். அது உங்களது 'சொந்த வழி'. மற்றவர்கள் சில குறிப்பிட்ட பாவத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கலாம். அதை நினைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு மிகுந்த கலக்கமுண்டாகிறது. ஆயினும் நம்மில் சிலர் கிறிஸ்துவானவரை நம்பி மன்னிப்பையும் சமாதானத்தையும் கண்டடைவதைவிட குற்ற உணர்வோடு தொடர்ந்து வாழ்வதைத் தெரிந்துக்கொள்கிறார்கள். வேறு சிலர் கிறிஸ்துவானவரைத் தொடர்ந்து நம்ப மறுக்கிறார்கள். 'நாமெல்லாரும் அவனவன் தன்தன் வழியிலே போனோம்'. இன்னொறு நபர் இவ்வாறு கூறலாம், 'நான் என் இருதயத்தைக் கடினப்படுத்தியிருக்கிறேன். கிறிஸ்துவானவர் தேவை என்னும் மன உறுத்தல் எனக்கு இருந்தது, ஆனால் இப்போது அவ்வாறாக நான் உணரவில்லை. தேவன் தமது உக்கிர கோபத்தில் இனிமேல் நான் அவரது இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என ஆணையிட்டுள்ளாரோ இப்போது என அஞ்சுகிறேன். தேவன் என் மீது நம்பிக்கையை இழந்து விட்டாரென பயமாயிருக்கிறது.' ஆனால் நமது வேத பகுதியின் மீதமுள்ள பாகத்தை கவனமாய்ப் பார்போமென்றால், நமக்கு இன்னும் நம்பிக்கை உண்டு என்பதை அது தெளிவுபடுத்தும்! III. மூன்றாவதாக, பொது நலனுக்காகவும் பாவிகளுக்கும் பதிலாகவும் தன்னைப் பலியாக ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவானவரின் மரணம். எழுந்து நின்று நமது வசனப் பகுதியை வாசியுங்கள். வசனத்தின் கடைசிப் பாகத்தைச் சற்று கவனமாகப் படிக்கவும், “கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.” “நாமெல்லாரும் ஆடுகளைப்போல் வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்” (ஏசாயா 53:6). இப்போது நீங்கள் அமரலாம். பண்டிதர் எட்வர்டு J. யெங் சொன்னார், இவ்வசனத்தின் முதல் பாதி தாசரின் பாடுகளுக்கான காரணத்தை வரையறுக்கிறது. நம்மெல்லாருடைய அக்கிரமங்களையும் தாசரின் மீது தேவன் தாமே சுமத்தி அவரைப் பாடுகளுக்குட்படுத்துவதை மறு பாதி உறுதிப்படுத்துகிறது. 'விழப் பண்ணினார்' என்பதின் அர்த்தம் கடுனமாக தாக்குவது அல்லது அடிப்பதாகும். நாம் செய்த தவறின் தண்டனை திரும்பி நம்மைத் தாக்காமல் நமது ஸ்தானத்தில் கிறிஸ்துவைத் தாக்குகிறது. நமது பாவம் அவரைத் தாக்கும்படி தேவன் செய்தார். நமக்கு சொந்தமான குற்ற உணர்வு நமது பதிலாளியான அவரைத் தாக்கும்படி தேவன் செய்தார். நமது குற்றங்களுக்கான தண்டனையை பதிலாளியான கிறிஸ்து சுமந்து தீர்த்தார். ஆடுகளுக்காக மேய்ப்பனானவர் தமது ஜீவனைக் கொடுத்துள்ளார் (எட்வர்டு J. யெங், Ph.D., ஏசாயா புஸ்தகம், எர்டுமென்ஸ், 1972, பகுதி 3, பக்கம் 349-350). “நாமெல்லாரும் ஆடுகளைப்போல் வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப் பண்ணினார்” (ஏசாயா 53:6). “இயேசுவின் மீது சுமத்தப்பட்ட தனிநபரின் பாவம்” என்ற தலைப்பிலான பிரசங்கத்தில் ஸ்பர்ஜன் கூறுகிறார், ஒழுங்குணர்ச்சியைக் குலைக்கின்ற பாவங்கள், லோத்தின் பாவங்கள் இங்கு உள்ளன. அவைகளை நான் குறிப்பிட இயலாது. தாவீதின் பாவங்களைவிட அவை வேறுப்பட்டவை. தாவீதின் பாவங்கள் மனாசேயின் பாவங்களைப் போலன்று. மனாசேயின் பாவங்கள் பேதுருயின் பாவங்களைப் போல் அல்ல. பேதுரு வத்தியாசமான விதத்தில் பாவம் செய்தார். பாவியான ஸ்திரீ, அவளை பேதுருவோடு ஒப்பிட இயலாது. அவளது குணலட்சனத்தை லீதியாளோடு சேர்த்துப் பார்க்க முடியாது. லீதியாளை பிலிப்பிய சிறைத் தலைவனில்லாமல் பார்க்க இயலாது. இவர்கள் யாவரும் ஒன்றுபோல் இருக்கிறார்கள், இவர்களனைவரும் ஏகமாய்க் கெட்டுப் போனார்கள். ஆயினும் இவர்களெல்லாரும் வேறுப்பட்டவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் வழிகளுக்குத் திரும்பிவிட்டார்கள். ஆண்டவரோ அவர்களுடைய அக்கிரமத்தை தம் மேல் விழப் பண்ணினார். இயேசுவின் இரத்தமென்னும் மாபெரும் சுவிசேஷ மருந்தண்டைக்கு நாம் வருகையில், பண்டைக்கால மருத்துவர்களால் கெத்தோலிக்கோன் என அழைக்கப்பட்ட சர்வலோக ஓளஷதம் அங்கு இருக்கிறது. அது அனைத்து ரோகத்தையும் போக்குகிறது. அது குற்ற உணர்வால் ஏற்படும் தனிமைப்படுத்துதலை அகற்றுகிறது. இந்தப் பாவத்திற்காகவே இந்த ஓளஷதம் உண்டாக்கப்பட்டதுபோல இருக்கிறது. (C. H. ஸ்பர்ஜன், “இயேசுவின் மீது சுமத்தப்பட்ட தனிநபரின் பாவம்,” மாநகர ஆசரிப்புக் கூடார பலிபீடம், யாத்ரீகன் வெளியீடுகள், 1977 மறுபதிப்பு, பாகம் XVI, பக்கம் 213-214). கிறிஸ்துவானவரை நம்புங்கள். கிறிஸ்துவானவருக்கு அர்பணியுங்கள். அவரை விசுவாசிக்கிற நீங்கள் ஒருபோதும் வெட்கம் அடைவதில்லை. ஏனெனில், 'கர்த்தர் நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப் பண்ணினார்' . நாம் குற்றவாளிகள், கெட்டவர்கள், உதவியில்லாதவர்கள்; நீங்கள் இயேசுவை நம்புவீர்களா? அவருக்கு உங்களை அர்ப்பணித்து, ஒப்புக்கொடுத்து அவரின் மேல் நம்பிக்கை வைப்பீர்களா? அவரது இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட்டு, சிலுவையில் பதிலாளியாக அவர் தம்மைப் பலியிட்டுவிட்டபடியால் நியாயத்தீர்ப்பிலிருந்து மீட்கப்படுவீர்களா? கிறிஸ்துவானவர் மீது மட்டும் சார்ந்துகொள்ளும் விசுவாசத்தைத் தேவன் உமக்களித்து, அவருக்கு ஒப்புக்கொடுத்து இரட்சிக்கப்பட பிதாவாகிய கடவுள் கிருபை செய்வாராக! நாம் அனைவரும் எழுந்து நிற்போம். இயேசுவானவர் மீது நம்பிக்கை வைப்பதைப் பற்றி நீங்கள் எங்களோடு பேச விரும்பினால் உடனடியாக உங்களது இருக்கையை விட்டு, இந்த பிரசங்க மண்டபத்தின் பின்னால் செல்லவும். ஒரு அமைதியான அறையில் பண்டிதர் கேகன் உங்களோடு பேசுவார். கிறிஸ்துவானவருக்கு ஒப்புக்கொடுத்து அவரது பரிசுத்த இரத்தத்தால் பாவத்திலிருந்து கழுவப்படுவதைக் குறித்து நாம் பேசலாம்! சகோ லீ அவர்கள் முன்னாக வந்து மாறுத்தரம் அளித்தவர்களுக்காக ஜெபிப்பார். இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால், டாக்டர் ஹைமர் அவர்களுக்கு e-mail அனுப்புங்கள். அவர் உங்களிடமிருந்து பதிலைப் பெற விரும்புகிறார். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றும் குறிப்பிடவேண்டும். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் e-mail: rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம். ஆனால், முடிந்தால் ஆங்கிலத்தில் எழுதவும். தபால் மூலம் அனுப்பவிரும்பினால், அவரது விலாசம்: Dr. Hymers P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்ளலாம்: (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்களைப் பயன்படுத்த Dr. Hymers அவர்களின் அனுமதி Dr. கிரேடன் L. சான் மூலம் பிரசங்கத்திற்கு முன் வாசிக்கப்பட்ட வேதபகுதி: ஏசாயா 52:13-53:6. |
முக்கிய குறிப்புகள் அண்டத்தின் பாவம், குறிப்பிட்ட பாவம் மற்றும் பாவத்திற்கான குணமடைவு (பிரசங்க எண் 7 ஏசாயா 53ன் மீதானது) Dr. R. L. ஹைமர்ஸ், Jr. “நாமெல்லாரும் ஆடுகளைப்போல் வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்” (ஏசாயா 53:6). (ஏசாயா 53:4, 5, 6, 8, 10, 11, 12) I. முதலாவதாக, அனைத்து மனுக்குலத்தின் பாவத்தின் பொதுவான II. இரண்டாவதாக, ஒவ்வொருவரும் அந்த குறிப்பிட்ட பாவத்தை III. மூன்றாவதாக, பொது நலனுக்காகவும் பாவிகளுக்கும் பதிலாகவும் |