இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
பிலாத்து மற்றும் புரோகுல்லாPILATE AND PROCULA டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் “அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்ய வேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள்” (மத்தேயு 27:19). |
எதிர்பார்த்தபடி, யு.எஸ். நியூஸ் அண்டு வோல்டு ரிப்போர்ட் மற்றும் நியூஸ்வீக் இரண்டும் சொல்லுகிறது கிறிஸ்துவை சிலுவையில் அறைய ரோம தேசாதிபதி, பொந்தி பிலாத்துவை குறித்து வேதாகமம் விளக்கமாக சொல்லுவது தவறு. நியூஸ்வீக் சொன்னது, பிலாத்து மனித உருவாக இல்லை என்பதாக [மால்] கிப்சன் சித்தரிக்கிறார் [தி பாஸன் ஆப் கிரைஸ்ட்]. அலெக்ஸான்டிரியாவின் பிலோவுக்கு, பரிபூரணமானது என்னவெனில் “வளைக்கமுடியாத, பிடிவாதமான, மற்றும் கொடூரமான ஒழுங்கமைதி,” மற்றும் கலகம் உண்டாக்குபவர்களை சோதனை இன்றி செயலாக்குபவர் (நியூஸ்வீக், பிப்ரவரி 16, 2004, ப. 48). நியூஸ்வீக் தொடர்ந்து சொல்லுகிறது நான்கு சுவிசேஷங்களையும் எழுதினவர்கள் தங்கள் வழிக்கு வெளியே சென்று விளக்கமாக சொன்னது “கேட்போரை எவ்வளவுக்கு அதிகமாக கவர்ச்சிக்க முடியுமோ அவ்வளவாக” கிறிஸ்தவத்தை ஒரு நல்ல வெளிச்சத்தில் உருவாக்க ரோம தேசாதிபதியைப்பற்றி விளக்கம் அளித்தனர் (ஐபிட்). யு.எஸ். நியூஸ் அண்டு வோல்டு ரிப்போர்ட் சொன்னது, பொந்தி பிலாத்து கிப்சன்சுக்கு (அல்லது சுவிசேஷங்களுக்கு) தூரமாக இருந்தார் ஏறக்குறைய சாதகமான [இரக்கமுள்ள] நபராக இருந்தார், பிரதான ஆசாரியர்கள் இயேசுவை தண்டிக்க சொன்னதால் தடுமாற்றம் அடைந்தார். அவர், முதலாம் நூற்றாண்டு சரித்திர ஆசிரியர் ஜோசபஸ் போலவும், தொடர்பு படுத்தாமல், ஒரு வசைபெயரெடுத்த பரிபூரணமுறடான, கலகம் செய்பவர்களையும் விரைவாக சிலுவையில் அறையக்கூடியவர் (யு.எஸ். நியூஸ் அண்டு வோல்டு ரிப்போர்ட் , மார்ச் 8, 2004, ப. 42). வேதாகமத்தை விசுவாசிக்கும் கிறிஸ்தவர்களாக, நாம் டைம், நியூஸ்வீக், யு.எஸ். நியூஸ் அண்டு வோல்டு ரிப்போர்ட், மற்றும் பொதுவாக உலகியல் சார்ந்த மீடியாக்கள் கிறிஸ்தவத்தைப்பற்றி விமர்சனம் செய்யும்பொழுது அவைகளை நம்பக்கூடாது என்று நாம் அறிந்திருக்கிறோம். உதாரணமாக, நியூஸ்வீக் நான்கு சுவிசேஷங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவைக் குறித்த பிலாத்துவின் செயல்பாடுகளில் பிலோவுக்குச் சந்தேகம் வந்ததைக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் பிலோ இயேசுவுக்கும் பிலாத்துக்கும் இடையில் என்ன நடந்தது என்பதைப் பற்றி ஒரு கண்கண்ட சாட்சியாக இருக்க முடியாது. பிலோ எருசலேமுக்கு நூறுக்கணக்கான மைல்கள் தூரத்தில் உள்ள, எகிப்தைச் சேர்ந்த, அலெக்ஸாண்டிரியாவில் பிறந்து வளர்ந்தார். அவர் இயேசுவையோ அல்லது பிலாத்துவையோ ஒருபோதும் பார்த்ததில்லை! அவர் இரண்டாம் கை அறிவிலிருந்து மட்டுமே எழுதினார். அந்தப் பிரிடானிகா கலைகளஞ்சியம் சொல்லுகிறது பிலோ “தன்னுடைய முழுவாழ்க்கையையும் அலெக்ஸாண்டிரியா வில் கழித்தவர் என்று வெளிப்படையாக புலப்படுகிறது” (பிரிடானிகா கலைகளஞ்சியம், 1946, வால்யூம் 17, ப.757). யு.எஸ். நியூஸ் அண்டு வோல்டு ரிப்போர்ட் சரித்திர ஆசிரியர் ஜோசப்ஸ் குறிப்பிட்டுள்ளது. ஜோசப்ஸ் கி.பி. 37 வரையிலும், இயேசுவானவர் சிலுவையில் அறையப்பட்ட நான்கு வருடத்திற்குப் பிறகும் அவர் பிறக்கவே இல்லை. (பிரிடானிகா கலைகளஞ்சியம், வால்யூம் 13, ப.153). பிலோ எகிப்திலே வாழ்ந்தார். அவர் எருசலேமில் ஒருபோதும் இருந்ததே இல்லை. ஜோசப்ஸ் அதுவரையிலும் பிறக்கவே இல்லை. நான்கு சுவிசேஷத்தில் அப்போஸ்தலர்களால் எழுதப்பட்ட தகவல்களைக் கண்கண்ட சாட்சிகளுக்கு விரோதமாக குறிப்பிடுவது நேர்மையற்றதாகும். மத்தேயு அங்கே இருந்தார். என்ன நடந்தது என்று அவர் பார்த்தார். மாற்கு அங்கே இருந்தார். என்ன நடந்தது என்று அவர் பார்த்தார். யோவான் அங்கே இருந்தார். என்ன நடந்தது என்று அவர் பார்த்தார். லூக்கா தமது சுவிசேஷத்தில் என்ன நடந்தது என்று பார்த்த கண்கண்ட சாட்சிகளான பேதுருவும் மற்றவர்களும் சொன்னதை வைத்து எழுதினார். அவர்கள் மெய்யாகவே அங்கே இருந்தார்கள். அவர்கள் கண்கண்ட சாட்சிகள். பிலோ எருசலேமுக்கு நூறுக்கணக்காண மைல்கள் தூரத்தில் ஆப்ரிக்காவில் வாழ்ந்தார் ஜோசப்ஸ் அதுவரையிலும் பிறக்கவே இல்லை! நியூஸ்வீக், மற்றும் யு.எஸ். நியூஸ் அண்டு வோல்டு ரிப்போர்ட் இரண்டும் அப்போஸ்தலர்களின் கண்கண்ட சாட்சிகளைப் புறக்கணித்தன, அதுவரையிலும் பிறக்காத ஒரு மனிதனுடைய அறிக்கைக்குச் சாதகமாக எழுதுகின்றன, மற்றும் எருசலேமுக்கு நூற்றுக்கணக்காண மைல்களுக்கு அப்பால், வடஆப்ரிக்காவில் வாழ்ந்த மற்றொரு மனிதனுடைய அறிக்கைக்கு சாதகமாக எழுதுகின்றன! அது எனக்கு ஒருபுற சாய்வான அறிக்கையாக காணப்படுகிறது! ஆனால் செய்தி மீடியாக்களில் ஒருபுற சாய்வான அறிக்கை இருப்பதை நாம் அறிந்து கொண்டோம் – கிறிஸ்தவத்துக்கு விரோதமாக. அவர்கள் மற்ற பெரிய மதங்களுக்கு இதை செய்யமாட்டார்கள், ஆனால் அவர்கள் கிறிஸ்தவத்துக்கும் வேதாகமத்துக்கும் எதிராக ஒவ்வொரு தருணத்திலும் சப்பையடி கொடுக்கிறார்கள். அவர்களிடமிருந்து இதை நாம் எதிர்பார்க்கிறோம். டேவிட் லிம்பா சொன்னதைபோல, கிறிஸ்மஸ் மற்றும் ஈஸ்டர் காலங்களில் வேதாகம கிறிஸ்தவத்தை மட்டுப்படுத்தி கதைகள் மிக செல்வாக்கோடு பரவி வருவதை நீங்கள் எப்போதாவது கவனித்தது உண்டா? 1996ல் பரிசுத்த வார காலத்தில் காலம்னிஸ்டு டான் பீடர் இதை கிரகித்தார், நியூஸ்வீக் மற்றும் யு.எஸ். நியூஸ் அண்டு வோல்டு ரிப்போர்ட் இரண்டும் கிறிஸ்தவத்தை மட்டுப்படுத்தும் மேல்பக்க கதைகளை வெளியிட்டன (டேவிட் லிம்பா, உபத்திரவம்: முற்போக்காளர்கள் எப்படியாக கிறிஸ்தவத்துக்கு விரோதமாக போராடுகிறார்கள், ரெக்னரி பப்ளிசிங், 2003, ப. 271). எப்படியாக கிறிஸ்தவத்துக்கு விரோதமாக இந்த முற்போக்காளர்களின் செய்தி அரங்குகளில் ஒருசாய்வான அறிக்கைகளை அநேக நடுத்தரமாக மதிக்கப்பட்ட எழுத்தாளர்கள் கவனித்திருக்கிறார்கள். பொந்தி பிலாத்துவை புதிய ஏற்பாடு வெள்ளை அடிக்கவில்லை. பிலாத்து ஒரு முரடான ரோமதேசாதிபதியாக இருந்தான் என்று சொல்லுவதற்கு பிலோ அல்லது ஜோசப்ஸ் நமக்கு வேண்டியதில்லை. லூக்கா 13:1-2ல் கலிலேயாவில் அநேக யூதர்களைக் கொன்றான் என்ற ஒரு சம்பவத்தைச் சொல்லுகிறது. வேதாகம விளக்க அகராதி இதை நமக்குச் சொல்லுகிறது பிலாத்து ஒருபோதும் யூதர்களோடு பிரபலமாக மாறினதில்லை. அவர்களுடைய மத உணர்வுகளில் புண்படுத்தவும் மற்றும் தனது கொள்கை குறிக்கோளில் பிடிவாதமாகவும் இருந்தான். ஆனால் அவனது ஆளுகையில் யூதர்கள் எதிர்ப்புத் தெரிவித்துக் கோப மூட்டினபொழுது, அவன் அடிக்கடி பின்னிரங்கி, தனது பெலவீனத்தை வெளிப்படுத்தினான்... தனது பார்வைக்கு நலமாக தோன்றும் சொந்த சுயஇலக்குகளைக் கொண்ட நோக்கமில்லாத சாதனையாளருக்குப் பிலாத்து ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறான். இயேசுவானவரின் கபடின்மையை அவன் அடையாளம் கண்டு இருந்தாலும் மற்றும் நீதியை நடப்பித்து மற்றும் இயேசுவானவரின் குற்றமின்மையை உறுதிசெய்ய அவனுக்கு அதிகாரம் இருந்தபோதிலும், தனது உத்தியோகத்தின் அதிகாரத்தோடு ஒரு தனிப்பட்ட விளைவுக்குரிய பொறுப்பெடுத்துச் செயல்படுவதற்குப் பதிலாக திரளான மக்களுடைய கோரிக்கைக்கு அவன் ஒப்புக் கொடுத்தான் (ஹர்பர்ட் லாக்யர், சீனியர், எடிட்டர், வேதாகம விளக்க அகராதி, தாமஸ் நெல்சன், 1986, ப.842). அதன் பிறகு, எதனால், இயேசுவானவரை சிலுவையில் அறைய அவன் அரைகுறை மனதுடன் தயங்கினான்? அதற்கு மூன்று பிரதான காரணங்கள் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்: அந்த அரசியல் சூழ்நிலை, அவனுடைய மனைவியின் எச்சரிக்கை, மற்றும் அவனது பெலவீனமான நிலைமை. ஒரு வாரத்துக்கு முன்பாகதான் திரளான மக்கள் கூட்டம் எருசலேமுக்கு இயேசுவானவரை வரவேற்பு கொடுத்ததை அறிந்து விழிப்போடு இருந்திருக்க வேண்டும். அவர்கள் சத்தமிட்டார்கள், “முன்நடப்பாரும் பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தி னாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத் திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள். அதற்கு ஜனங்கள் இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்” (மத்தேயு 21:9-11). இது நிச்சயமாக தேசாதிபதியின் கவனத்துக்கு வந்திருக்கும். அவன் இதற்கு முன்பாகவே இயேசுவானவரை குறித்து நினைத்துக் கொண்டிருந்தான். அதன் பிறகு இயேசுவானவர் தேவாலயத்தை சுத்தம் செய்தார். “இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியிலே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து: என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார். அப்பொழுது, குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களைச் சொஸ்தமாக்கினார் (மத்தேயு 21:12-14). பிலாத்து இவைகளையும்கூட, எல்லாம் அறிந்திருந்தான். ஒரு தேசாதிபதியாக, பிலாத்து, இயேசுவானவர் எருசலேமுக்குள் வெற்றியோடு பிரவேசித்தது – தேவாலயத்தை சுத்தம் செய்தது, தெய்வீக சுகமளித்தது இவைகளை எல்லாம் கேள்விபட்டு இருந்தான். அதன்பிறகு இயேசுவானவரை அவனிடம் கொண்டு வந்தார்கள். அவன் இயேசுவானவரிடம் கேள்வி கேட்டான், “அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்ல வில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப் பட்டான்” (மத்தேயு 27:14). இரண்டாவதாக, அவனுடைய மனைவி அவனுக்கு ஒரு செய்தி அனுப்பினாள். நாம் எழுந்து நின்று மற்றும் மத்தேயு 27:19ஐ சத்தமாக வாசிப்போம், “அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்ய வேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள்” (மத்தேயு 27:19). நீங்கள் அமரலாம், பழங்கால வழக்கத்தின்படி அவனுடைய மனைவி ஒரு யூதமதத்துக்கு மாறினவளாக இருக்க வேண்டும். பிலாத்தும்கூட எந்தவிதத்திலும் ஒரு நவீன மனிதனாக இருந்திருக்க முடியாது. ஒரு ரோமனாக, அநேக தெய்வங்கள்மீது விசுவாசம் வைத்திருந்திருப்பான், ஆவிகள் – பொல்லாத மற்றும் நல்லவைகள், சகுணங்கள் மற்றும் கனவுகள் மீது விசுவாசம் வைத்திருந்திருப்பான். வேதாகம பதிவின்படி, பிலாத்து தனது மனைவியோடு நெருக்கமாக இருந்ததாக காணப்படுகிறது. அவளுடைய பெயர் கிளாடியா புரோகுலா என்பதாகும். பிலாத்து இப்படியாக ஒரு முக்கியமான வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும்போது அவள் இப்படி ஒரு செய்தியை அனுப்பினது, அவர்கள் மத்தியில் இருந்த உணர்ச்சிப்பூர்வமான நெருக்கத்தைக் காட்டுகிறது. அதனால், இந்த நம்பத்தக்க செயல்பாடுகளின் காட்சியை இந்தப் பஸ்கா வாரத்தில் காண்கிறீர்கள். கிறிஸ்துவானவர் எருசலேமுக்குள் வெற்றியோடு பிரவேசித்ததை அறிவீர்கள், அந்த மக்கள் அனைவரும் கோஷமிட்டு அவரைப் பாராட்டினார்கள். அதன்பிறகு தேவாலயத்தை சுத்தம் செய்தது நடந்தது. மால் கிப்சன் சொன்னது சரி என்று நான் நினைக்கிறேன் பிலாத்து சொன்னதைப்பற்றி அவர் சொன்னபொழுது, “நீங்கள் நகரத்துக்குள்ளே வரவேற்ற தீர்க்கதரிசி இவர் இல்லையா? இந்தப் பைத்தியகாரதனத்தை எனக்கு விவரிக்க உங்களால் முடியுமா?” (சிஎப். நியூஸ்வீக், பிப்ரவரி 16, 2004, ப. 49). அது உண்மையாக ஒலிக்கிறது. அந்தவிதமான எண்ணங்கள்தான் சரியாக பிலாத்துக்கு இருந்திருக்க வேண்டும் என்று அதிகமாக விரும்பப்படுகிறது. அதன்பிறகு, அவனுடைய மனைவி வழக்கு நடந்து கொண்டிருக்கும் பொழுது அவனுக்கு – இயேசுவானவரைப்பற்றி எச்சரிக்கையாக ஒரு செய்தி அனுப்பினாள். தனிசுவை திறம்கொண்ட தெய்வீக செய்தி ஒரு குருட்டு நம்பிக்கை கொண்ட ரோமனை அந்த நேரத்தில் கலங்க செய்திருக்க வேண்டும். மூன்றாவதாக, பிலாத்து அதிக பெலவீனமான நிலைமையில் இருந்தான். வாதிடுபவராகிய லீ ஸ்ரோபெல் சொல்லுகிறார் அவர் நினைவுபடுத்துகிறார் ... அவர்கள் ரோம தலைவரை விளக்கமாக வர்ணித்த காரணத்தால் சில திறனாய்வாளர்கள் சுவிசேஷங்களின் நுணுக்கத்தை குறித்து எப்படியாக கேள்வி கேட்டார்கள். அவன் எண்ண உறுதி இன்றி தடுமாறினான் மற்றும் இயேசுவானவரை அவன் கொலைக்குக் கொடுத்ததன் மூலமாக கொந்தளிக்கும் யூதர்களின் கும்பலின் நெருக்கத்துக்கு இணங்க சித்தமாக இருந்தான், மற்ற சரித்திர ஆசிரியர்கள் அவனை பிடிவாதமுள்ள மற்றும் அடம்பிடிக்கிற ஒருவனாக சித்தரிக்கிறார்கள். அந்த மூன்று காரணங்கள் இயேசுவானவரை சிலுவையில் அறைவதில் பிலாத்தின் தடுமாற்றத்துக்கு வேறு சிறப்பியல்பு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இயேசுவானவர் ஓரளவிற்குத் தெய்வீக வல்லமை பெற்றிருந்தார் என்பதை சந்தேகமில்லாமல் பிலாத்துவின் நவீனமனம் பார்த்திருக்கும். வேதாகமம் சொல்லுகிறது “தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்” [அதிகமாக வியப்படைந்தான்] அவனுடைய கேள்விகளுக்கு வெகுசில பதில்களே கொடுத்தார். மற்றும், அதனால், அவன் தயக்கமுள்ளவனானான். அவன் தனது மனைவியின் வித்தியாசமான கனவை நினைத்தான். இயேசுவானவர், “இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது...” (யோவான் 19:11). எப்படியோ, அவனுடைய நம்பிக்கை உள்ள, புறசமய இருதயத்தில், அவன் தெய்வீகத்தோடு சலக்கிரனை செய்தான் என்று அறிந்து கொண்டான் – தேவனோடு. அவனுடைய மனைவியின் வார்த்தைகள் அவனுடைய மனதில் நுழைந்தது, “நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்ய வேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள்” (மத்தேயு 27:19) பிலாத்தின் மனைவி அவனுக்கு அனுப்பிய செய்தியை அதிக நெருக்கமாக பார்ப்போம். I. முதலாவதாக, அது பாவத்துக்கு விரோதமான ஒரு எச்சரிக்கை. அது ஒரு தெய்வ செயலான கனவாக இருந்தது. பழைய ஏற்பாட்டில் தேவன் அடிக்கடி கனவின் மூலமாக பேசினார். எகிப்திலே தேவன் பார்வோனிடம் ஒரு கனவின் மூலமாக பேசினார். தேவன் நெபுகாத்நேச்சாரிடம் ஒரு கனவின் மூலமாக பேசினார். தேவன் யோசேப்பிடம் ஒரு கனவின் மூலமாக பேசினார், மற்றும் அவனிடம் குழந்தை இயேசுவை எகிப்துக்கு எடுத்துச் சென்று ஏரோது ராஜாவிடமிருந்து தப்பிக்கொள்ளும்படி அவர் சொன்னார். புரோக்குல்லாவின் கனவு மன உளச்சலோடு இருந்தது. அவள் சொன்னாள், “அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன்…” (மத்தேயு 27:19). “பாடுபட்டேன்” என்பதற்குக் கிரேக்க வார்த்தை “பாஸ்சோ” என்பதாகும். இது அப்போஸ்தலர் 1:3ல் “பாடுபட்ட” என்ற வார்த்தை உபயோக படுத்தப்பட்டுள்ளது, இது கிறிஸ்துவின் பாடுகளை, கிறிஸ்துவின் கஷ்டங்களைக் குறிப்பதாகும். பிலாத்தின் மனைவி, புரோகுல்லா, தனது கனவிலே கிறிஸ்துவின் பயங்கரமான பாடுகளில் சிலவற்றைக் கண்டிருப்பாள். அவளுடைய கனவனுடைய எதிர்காலத்தில் சில பயங்கரமானதை அவள் கண்டிருக்க வேண்டும். அவளுடைய கனவு நிச்சயமாக பாவத்துக்கு விரோதமாக ஒரு எச்சரிப்பாகும். மற்றும் அது பிலாத்தின் மனசாட்சியோடு பேசியது. புரோகுல்லா அவனிடம் சொன்னாள் இயேசுவானவர் ஒரு “நீதிமான்”, ஒரு நேர்மையான மனிதர். பிலாத்துடைய சொந்த மனசாட்சி அவளோடு ஒத்துக்கொண்டது. இந்தக் காரியத்துக்காக அவன் கைகளைக் கழுவினபோது, அவன் இயேசுவானவரை “இந்த நீதிமான்” என்று அழைத்தான், அது அவனுடைய மனைவி கிறிஸ்துவைப்பற்றி கொடுத்த விளக்கத்தின் எதிரொலி (மத்தேயு 27:24). பிலாத்து தன்னுடைய மனைவியின் வார்த்தைகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவன் தயக்கம் காட்டினான். அவன் தனது மனசாட்சியினால் ஒருபக்கம் இழுக்கப்பட்டான், மற்றும் மறுபக்கமாக மக்களுடைய பயத்தினால் இழுக்கப்பட்டான். அதன்பிறகு அந்த மக்கள் கூட்டம் கூச்சலிட்டது, “யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலை பண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்” (யோவான் 19:12). அது அவனை கோட்டின்மீது தள்ளிவிட்டது. டாக்டர் ரெய்ரி சொல்லுகிறார், அவன் யூதமக்களின் வழக்கத்துக்கு மாறாக இருக்கிறான் அல்லது ஒரு சூழ்நிலையைக் கட்டுப்படுத்த அவனால் முடியவில்லை என்ற மற்றொரு அறிக்கையைக் கொண்டு ரோமுக்குப் போவதற்கு அவன் விரும்பவில்லை – முன்பாகவே திபேரிய ராயனுக்கு [சக்ரவர்த்தி] குற்றச்சாட்டுகள் உருவாக்கப்பட்டது (Charles C. Ryrie, Ph.D., The Ryrie Study Bible, மாற்கு 15:1ன் குறிப்பு) அதனால் மனிதருக்குப் பயப்படும் பயம் பிலாத்துக்கு ஏற்பட்டது புரோகுல்லாவின் எச்சரிக்கையைப் புறக்கணித்தான், அவனுடைய சொந்த மனசாட்சிக்கு விரோதமாக போனான், மற்றும் பாவம் செய்தான். வேதாகமம் சொல்லுகிறது, “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்” (நீதிமொழிகள் 29:25). இந்த மாலையிலே இங்கிருக்கும் மக்கள் கிறிஸ்துவை நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். பிலாத்துவைபோல, கிறிஸ்துவைப்பற்றி எச்சரிக்கபட்டவராக நீ இருக்கலாம். நீ பாவத்தை விட்டு திரும்பி கிறிஸ்துவை நம்ப வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கலாம். நீ அதை செய்வாயா? பிலாத்து செய்ததைபோல “உனது கைகளை கழுவ” மற்றும் இயேசுவானவரை விட்டு போக, பலமான சோதனை உனக்கு வரலாம். மக்கள் உன்னை “ஒரு வெறியனாக” மாறிவிடாதே என்று சொல்லலாம். அவர்கள் உன்னை கிறிஸ்துவைவிட்டு வெளியே இழுக்க முயற்சி செய்வார்கள். நீ எந்த வழியிலே போவாய்? நீ கிறிஸ்துவிடம் வந்து இரட்சிக்கப்படுவாயா? அல்லது கிறிஸ்துவுக்கு விரோதமாக இருப்பவர்களால் பின்னுக்கு இழுக்கப்படுவாயா? பிலாத்துக்கு இருந்த அதே தெரிந்து கொள்ளுதல்தான் உனக்கும் இருக்கிறது. பிலாத்தின் மனைவி அவனை எச்சரித்தாள், ஆனால் அவன் தயங்கினான் – அதிகமான நீளம்! II. இரண்டாவதாக, அது ஒரு எச்சரிக்கை அது புறக்கணிக்கப்பட்டது. இங்கே தவறு செய்ய வேண்டாம். பிலாத்து தன் மனைவியின் எச்சரிப்பைத் தள்ளிவிட்டான். அவளுடைய தெய்வீக ஆலோசனையை அவன் கவனிப்பதற்குப் பதிலாக திரளான மக்களைப் பின்பற்றினான். ஜான் ட்ராப் சொல்லுகிறார், “இது மனிதமின்மை [கோழைத்தனம்] இல்லையா மற்றும் பிலாத்தை தவறாக நடத்தினது பொதுமக்களுடைய மதிப்பு, மற்றும் அவனை அவ்வளவாக பேசாமல் இருக்க செய்தது, அவனால் அந்த அநேக தலைகளான திரள்கூட்டத்தை மறுக்க முடியவில்லை?” (ஜான் ட்ராப், A Commentary on the Old and New Testaments, Transki Publications, 1997ன் மறுபதிப்பு, வால்யூம் V, ப. 271). பிலாத்து தன் மனைவியை ஏன் கவனிக்கவில்லை? ஏனென்றால் சுயநல விருப்பம் மற்றும் பயங்கொள்ளித்தனம். அவளை கவனித்தால் அவனது தேசாதிபதி பதவி போய்விடும் என்று பயந்தான். நீ கிறிஸ்துவை நம்பினால் சிலவற்றை இழந்து விடுவோம் என்று பயப்படுகிறாயா? நான்கு தடவை பதிவாகியுள்ள இயேசுவானவர் சொன்னது, “தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான்” (மத்தேயு 16:25; மாற்கு 8:35; லூக்கா 9:24; லூக்கா 17:33). உங்கள் வேதாகமத்தில் மத்தேயு 16:25-26க்கு திருப்பிக் கொள்ளுங்கள். இந்த இரண்டு வசனங்களை நாம் எழுந்து நின்று சத்தமாக வாசிப்போம். இயேசுவானவர் சொன்னார், “தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” (மத்தேயு 16:25-26). நீங்கள் அமரலாம். இயேசுவானவர் சொன்னார் நீ உனது ஜீவனை அதன் போக்கிலே விட்டு அதை பற்றிக்கொள்ள வேண்டுமென்று நீ தேடினால், உனது ஜீவனை நீ இழந்து போவாய். நீ உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும் உன் சொந்த ஜீவனை நஷ்டப்படுத்தினால் உனக்கு லாபம் என்ன? பிலாத்துத் தவறானதை தெரிந்து கொண்டான். அவன் தேசாதிபதியாக – இன்னும் மூன்று வருடங்கள் – காத்துக்கொண்டான் ஆனால் அவன் தனது ஆத்துமாவை இழந்தான். ஜோசப்ஸ் சமாரியருக்குள்ளே ஒரு படுமோசமான போராடுபவனைப்பற்றி சொல்லுகிறார், அவன் பிலாத்தின் மேலதிகாரி, சீரிய தேசாதிபதி விட்டலஸ்க்கு, ஒரு குற்றச்சாட்டை கொடுத்தான். விட்டலஸ் அதை பதிவு செய்தான் மற்றும் ரோமில் சக்கரவர்த்திக்கு முன்பாக நிற்கும்படி கட்டளை இட்டான் மற்றும் தனது நடத்தைக்காக பதில் சொன்னான்... அவன் நாடு கடத்தப்பட்டான் என்று எசுபியஸ் தகவல் அளிக்கிறார்... கவுல் என்ற நாட்டுக்கு (பிரான்ஸ்) அங்கே அவன் இறுதியாக தற்கொலை செய்து கொண்டான் (Illustrated Dictionary of the Bible, ibid). பிலாத்து தன் மனைவி மூலமாக தேவன் கொடுத்த எச்சரிப்பை தள்ளிவிட்டான். பிலாத்து எல்லாவற்றையும் இழந்து போனான் – அவனுடைய ஆத்துமா உட்பட. கிறிஸ்து என்று அழைக்கப்பட்ட இயேசுவின் வழக்கை அவன் நடத்தினான் அந்த ஒரேகாரணத்துக்காகதான் நாம் அவனை நினைவுகூருகிறோம்! பிலாத்தின் மனைவி அவனை எச்சரித்தாள் – ஆனால் அவன் அவளுடைய எச்சரிப்பை தள்ளிவிட்டான். III. மூன்றாவதாக, அது ஒரு சமாளிக்க முடியாத முக்கியத்துவம் வாய்ந்த எச்சரிக்கை ஆகும். பூரிடன் விமர்சகர் ஜான் ட்ராப் குறிப்பிடுகிறார் தியோபைலாக்ட், என்பவர் சொன்னார், “Opus providentie Dei; non ut solveratur Christus, sed ut servaretur uxor,” – “ஒரு தேவ அருள் உள்ள தேவனுடைய வேலை; கிறிஸ்துவை காப்பாற்றும்படி அல்ல, ஆனால் அவளுடைய கணவனை காப்பாற்ற,” (ஜான் ட்ராப், A Commentary on the Old and New Testaments, Transki Publications, 1997ன் மறுபதிப்பு, வால்யூம் V, ப. 271). தியோபைலாக்ட் ஒரு திறமைவாய்ந்த மற்றும் நல்லறிவுடைய பன்னிரண்டாம் நூற்றாண்டின் கிரேக்க வேதாகம விளக்க உரையாளராகும். புரோகுல்லாவின் எச்சரிக்கை கிறிஸ்துவை காப்பாற்றும்படி கொடுக்கப்பட்டது அல்ல, ஆனால் அவளுடைய கணவனுக்கு சேவைசெய்ய கொடுக்கப்பட்டது என்று அவர் நமக்கு சொல்லுகிறார். “நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்ய வேண்டாம்” (மத்தேயு 27:19). அந்த கனவின் மூலமாக தேவன் அவளுடைய கணவனுக்கு நன்றாக சேவைசெய்தார், ஆனால் அவன் தனது மனைவியின் எச்சரிக்கையைத் தள்ளிவிட்டான். தயவுசெய்து அப்போஸ்தலர் 13:28-31க்கு திருப்பிக்கொள்ளுங்கள். நாம் எழுந்து நின்று இந்த நான்கு வசனங்களைச் சத்தமாக வாசிப்போம். “மரணத்திற்கு ஏதுவானதொன்றும் அவரிடத்தில் காணாதிருந்தும், அவரைக் கொலைசெய்யும்படிக்குப் பிலாத்துவை வேண்டிக்கொண்டார்கள். அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து (சிலுவை) இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள். தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார். தம்முடனே கூடக் கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குப் போனவர்களுக்கு அவர் அநேகநாள் தரிசனமானார் அவர்களே ஜனங்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சிகளா யிருக்கிறார்கள்” (அப்போஸ்தலர் 13:28-31). இயேசுவானவர் ஜீவிக்கிறார். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். பிலாத்து மரித்திருக்கிறான். அவன் தன்னுடைய மனைவியின் தெய்வீக எச்சரிப்பை கவனிக்க தவறிவிட்டான். அவன் தன் ஆத்துமாவை என்றென்றுமாக – நரகத்தில் இழந்து போனான். கடைசி நியாயதீர்ப்பின் சமயத்தில் புரோக்குல்லா நின்று தனது சொந்த கணவன், பிலாத்தை, ஆக்கினைக்குத் தீர்ப்பாள் என்று ஸ்பர்ஜன் சொன்னார். மத்தேயு 12:42 ஸ்பர்ஜன் மனதில் இருந்தது, “தென்தேசத்து ராஜஸ்திரீ… நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்” (மத்தேயு 12:42). ஸ்பர்ஜன் சொன்னார், அந்தப் பெரிய கடைசி நாளை குறித்து ஏதோ நான் கற்பனை துண்டாக பாவனை செய்யவில்லை, நியாய சிங்காசனத்திலே இயேசுவானவர் உட்கார்ந்திருக்கும்பொழுது, பிலாத்து தன் சரீரத்திலே செய்த செயல்களுக்காக நியாயதீர்ப்பை பெற்றுக்கொள்ள அங்கே நிற்பான், அவனுடைய மனைவி அவனுக்கு விரோதமாக அவனை ஆக்கினை தீர்ப்புச் செய்ய சாட்சியாக வேகமாக கொண்டு வரப்படுவாள். இது போன்ற அநேக காட்சிகள் அங்கே இருக்கும் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது, நாம் இன்னும் நமது பாவத்திலே நிலைத்திருப்போமானால், நாம் மிகவும் சிறந்தவகையில் நேசித்தவர்கள் அதிக பளுவான நிரூபணங்களை நமக்கு விரோதமாக கொண்டு வருவார்கள். நான் ஒரு சிறுவனாக இருந்தபொழுது இது என்னை எப்படி பாதித்தது என்று எனக்குத் தெரியும் எனது தாயார், தனது பிள்ளைகளுக்கு முன்பாக இரட்சிப்பின் வழியை வைத்தபிறகு, எங்களுக்குச் சொன்னாள், “நீ கிறிஸ்துவை வேண்டாம் என்று மறுத்து அழிந்துபோனால், உனது சார்பாக என்னால் கெஞ்ச முடியாது மற்றும் நீங்கள் அறியாமல் இருந்தீர்கள் என்றும் சொல்ல முடியாது. இல்லை, உனது ஆக்கினை தீர்ப்புக்கு ஆமென் என்றுதான் நான் சொல்ல வேண்டும்.” என்னால் அதை தாங்க முடியவில்லை! எனது ஆக்கினை தீர்ப்புக்கு “ஆமென்” என்று எனது அம்மா சொல்லுவாரா? மற்றும் இருந்தாலும், பிலாத்தின் மனைவியே, உன்னால் வேறு என்ன செய்ய முடியும்? எல்லாரும் உண்மையைச் சொல்லும்பொழுது, உனது கணவன் கனிவாக மற்றும் ஊக்கமாக உன்னால் எச்சரிக்கப்பட்டான் மற்றும் இருந்தாலும் அந்த இரட்சகரை அவருடைய சத்துருக்களிடம் ஒப்படைத்தான்? பிலாத்தின் மண்டபத்திலே இயேசுவானவர் நிற்கிறார் – நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் போதனைக்கு முன்பாக வாசிக்கபட்ட வேதப்பகுதி: மத்தேயு 27:15-24. |
முக்கிய குறிப்புகள் பிலாத்து மற்றும் புரோகுல்லா PILATE AND PROCULA டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் “அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்ய வேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள்” (மத்தேயு 27:19). (மத்தேயு 21:9-11, 12-14; 27:14; யோவான் 19:11)
I. முதலாவதாக, அது பாவத்துக்கு விரோதமான ஒரு எச்சரிக்கை, யோவான் 19:12; மத்தேயு 27:24;
II. இரண்டாவதாக, அது ஒரு எச்சரிக்கை அது புறக்கணிக்கப்பட்டது, மத்தேயு 16:25-26; மாற்கு 8:35; லூக்கா 9:24; 17:33. III. மூன்றாவதாக, அது ஒரு சமாளிக்க முடியாத முக்கியத்துவம் வாய்ந்த எச்சரிக்கை ஆகும், அப்போஸ்தலர் 13:28; மத்தேயு 12:42. |