இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.
நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.
நீ கிறிஸ்துவிடம் வந்திருக்கிறாயா?HAVE YOU COME TO CHRIST? டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் நவம்பர் 9, 2003 கர்த்தருடைய நாள் மாலை வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி “உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவான் 5:40). |
கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் இருந்த மதத்தலைவர்கள் பழைய ஏற்பாட்டு வேதவசனங்களைக் கவனமாகப் படித்தார்கள். ஆனால் கிறிஸ்துவைப்பற்றி வேதவசனங்கள் சொன்ன காரியங்களை அவர்கள் தவறவிட்டுவிட்டார்கள் – அதனால், அவர்கள் கிறிஸ்துவிடம் வரவில்லை, மற்றும் அவர் மூலமாக இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளவுமில்லை. அவர்கள் மத்தியில் ஒரு வழக்க சொல் இருந்தது, “வேதவாக்கியங்களால் அவர்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணினார்கள்” (Matthew Henry, யோவான் 5:39 பற்றின குறிப்பு). ஆனால் இயேசு தம்மைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகள் வேதவாக்கியங்களே என்று சொன்னார், “வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணு கிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிற வைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவான் 5:39-40). அவர்கள் வேதத்தின் வார்த்தைகளை நம்பிக்கொண்டிருந்தார்கள், ஆனால் அந்த வேதத்தின் வார்த்தைகளில் பேசப்பட்ட கிறிஸ்துவை அவர்கள் நம்பவில்லை. டாக்டர் வால்வோர்டு சொன்னார், “இன்றும் அதேபோல அநேக மக்கள் வேத ஆராட்சியே போதும் அதுவே அதற்கு ஒரு முடிவு என்று நினைக்கிறார்கள்” (Walvoord and Zuck, The Bible Knowledge Commentary, Victor Books, 1984, volume II, p. 292). அவர்கள் வேதத்திற்கு வந்தார்கள், மற்றும் வேத வார்த்தைகளை நம்பினார்கள் – ஆனால் அவர்கள் கிறிஸ்துவினிடத்திற்கு வரவில்லை மற்றும் அவரை நம்பவில்லை. “உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவான் 5:40). கிறிஸ்துவை தவிர மற்றகாரியத்துக்கு வரவும், கிறிஸ்துவை தவிர மற்றகாரியத்தை நம்பவும் தக்க ஒரு பயங்கரமான போக்கு விழுந்துபோன மனிதவர்க்கத்தில் இருக்கிறது. “அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்” (ஏசாயா 53:3). “அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது” (சகரியா 11:8). “அவர்கள்: இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள்” (யோவான் 19:15). இந்த விதமாகவே எல்லா மக்களும் கிறிஸ்துவை கருதுகிறார்கள். கிறிஸ்துவின் கிருபைக்கு வெளியே, ஒருவழியாகவோ அல்லது வேறுவிதமாகவோ, எல்லா மக்களுக்கும் இப்படியே சொல்லப்படுகிறது, “உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவான் 5:40). தேவனுடைய கிருபையே அல்லாமல், எந்த மனிதனும் ஒருபோதும் கிறிஸ்துவிடம் வரமுடியாது. இயேசு சொன்னார், “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” (யோவான் 6:44). இன்று மாலையிலே தேவன் உன்னை இழுத்துக் கொண்டிருக்கிறாரா? உனக்குக் கிறிஸ்து வேண்டும் என்று நீ உணருகிறாயா? அவர் இல்லாமல் நீ இழக்கப்பட்டிருக்கிறாய் என்று நீ உணருகிறாயா? அப்படியானால், உன்னுடைய பொய்யான யோசனைகளிலிருந்து வெளியே வர தேவன் தாமே, கிறிஸ்துவிடம் உன்னை இழுக்கிறார். நான் என்ன சொல்லுகிறேன் என்பதை ஜாக்கிரதையாக கவனி, உன்னுடைய பொய்யான யோசனைகளை விட்டுவிடு, கிறிஸ்துவிடம் வா. இது வரையிலும், நீ கிறிஸ்துவிடம் வரவில்லை. இது வரையிலும், கிறிஸ்து உன்னிடம் சொல்லியிருக்கிறார், “உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவான் 5:40). I. முதலாவதாக, கிறிஸ்துவிடம் வருவதற்குப் பதிலாக மக்கள் என்ன செய்கிறார்கள். ஒரு பெந்தகோஸ்து அல்லது கரிஸ்மேடிக் பின்னனியிலிருந்து வந்த மக்கள் அனுபவங்கள் ரீதியாக அல்லது உணர்வுபூர்வ இரட்சிப்பு வருகிறது என்று அடிக்கடி நினைக்கிறார்கள். மனிதனுக்கும் தேவனுக்கும் இடையில் மத்தியஸ்தரான கிறிஸ்துவின் ஸ்தானத்தை “பரிசுத்த ஆவி” எடுத்துக் கொள்ளுகிறது (I தீமோத்தேயு 2:5ஐ கவனிக்கவும்). இயேசுவின், மெய்தத்துவம், “பரிசுத்த ஆவிக்கு” கொடுக்கப்படுகிறது. “உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவான் 5:40). ஒரு ரோமன் கத்தோலிக்க பின்னனியிலிருந்து வந்த மக்கள் கிறிஸ்துவின் ஸ்தானத்தை தவம் நோன்பு – சகாயம், அறிக்கை, மற்றும் நற்கிரியைகளுக்குக் கொடுக்க தூண்டப்படுகிறார்கள். தங்கள் பாவங்களை ஒன்றன்பின் ஒன்றாக அறிக்கைசெய்து, அல்லது நாளுக்கு நாள் கிறிஸ்துவை பின்பற்ற முயற்சி செய்வதால் இரட்சிக்கப்பட முயற்சி செய்கிறார்கள். இந்த மனித கிரியைகள் கிறிஸ்துவுக்குப் பதிலாக அவர்களுக்கு இருக்கின்றன. “உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவான் 5:40). மற்ற உலக மதங்களின் பின்னனியில் இருக்கிறவர்கள், குறிப்பாக புத்தமதம், இந்துமதம், இஸ்லாமதம், யூதர்மதம், போன்றவைகளின் இரட்சிப்பு கிறிஸ்துவை சார்ந்ததல்ல என்று நம்புகிறார்கள். அவர்கள் கிறிஸ்துவை “ஒரு பெரிய தீர்க்கதரிசி” என்று ஒருவேளை உதட்டளவில் சொல்லலாம், ஆனால் கிறிஸ்து மட்டுமே அவர்களை இரட்சிக்க முடியும் என்று அவர்கள் விசுவாசிப்பதில்லை. அவர்கள் பொதுவாக தங்கள் இரட்சிப்புக்காக “ஒரு நல்ல வாழ்க்கை” வாழ்வதை சார்ந்திருக்கிறார்கள். “உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவான் 5:40). பாப்டிஸ்ட்களும் மற்றும் சுவிசேஷகர்களும் கிறிஸ்துவை தவிர மற்றதை சார்ந்துகொள்ள சோதிக்கப்படுகிறார்கள். டாக்டர் ஜான் ஆர். ரைஸ் சொன்னார், மில்லியன் கணக்கான சபை உறுப்பினர்கள் மாற்றப்படாதவர்களாக, மறுரூபமாக்கப்படாத பாவிகளாக தேவ கோபக்கினைக்குக் கீழாக வாழுகிறார்கள். இன்று நரகத்தில் எண்ணிக்கைக்கு அடங்காத மில்லியன் கணக்கான... ஆஸ்தீகர்கள் பாப்டிஸ்டுகள்... ஒருபோதும் மெய்யாக இரட்சிக்கப்படாத நிலையில் [நரகத்துக்கு], போயிருக்கிறார்கள். [அவர்கள்] வழியை தவறவிட்டவர்கள், பொய்யான நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் மற்றும் இப்பொழுது வேதனைப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள் (Dr. John R. Rice, Religious But Lost, Sword of the Lord, 1939, p. 8). டாக்டர் ரைஸ் அதன்பிறகு சொன்னார், அநேக நேரங்களில் இது வேதத்திலிருந்து கொண்டுவரப்படுகிறது, பொய்யான நம்பிக்கையை சார்ந்திருப்பதினால் ஒருவர் ஏமாற்றப்படுவதற்கான அபாயகரமான ஒரு ஆதாரம் மெய்யாகவே உள்ளது, அவர் நித்தியமாக இழக்கப்பட்டவர் என்று இறுதியில்தான் காண்டு கொள்ளுவார் (ibid.). பாப்டிஸ்ட்களும் மற்றும் சுவிசேஷகர்களும் கிறிஸ்துவை தவிர “பாவிகளின் ஜெபத்தை” அடிக்கடி சார்ந்துகொள்ளுகிறார்கள். அவர்கள் சொல்லுகிறார்கள், “அவர் என்னை இரட்சிக்கும்படி நான் அவரிடம் கேட்டேன். அது போதாதா?” இல்லை, அது போதாது! நீ இரட்சிக்கப்பட வேண்டுமானால் கிறிஸ்துவிடம் வரவேண்டியது அவசியம்! உன்னுடைய சொந்த ஜெபங்களை நீ நம்பியிருக்க கூடாது! நீ தேவகுமாரனை நம்பி இருக்க வேண்டியது அவசியமாகும்! கிறிஸ்து தம்மிடம் கேட்க வேண்டுமென்று சொல்லவில்லை. கிறிஸ்துவிடம் வரவேண்டும் என்று அவர் சொன்னார். கிறிஸ்து சொன்னார், “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28). நீ அவரிடம் வருவதற்கு பதிலாக, அவரை கேட்டுக்கொண்டிருக்கும்படி ஏமாற்றப்பட்டிருக்கலாம்! மற்றவர்கள் கிறிஸ்துவிடம் வருவதற்குப் பதிலாக, வேதம் சொல்லுகிறபடி என்று ஏமாற்றப்பட்டிருக்கலாம். வேதத்திலிருந்து “இரட்சிப்பின் திட்டத்தை” அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர்களுடைய பாவங்களுக்காக கிறிஸ்து மரித்தார் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்த வேத உண்மைகளை அவர்கள் விசுவாசிக்கிறார்கள், ஆனால் அவர்கள் இயேசுவிடம், ஒருபோதும் வரவில்லை. டாக்டர் வால்வோர்டு சொன்னதைபோல, “இன்றும் அதேபோல அநேக மக்கள் வேத ஆராய்ச்சியே போதும் அதுவே அதற்கு ஒரு முடிவு என்று நினைக்கிறார்கள்.” இயேசு சொன்ன அந்த பரிசேயர்களைவிட நீ எப்படி வித்தியாசமாக இருக்கிறாய்? இயேசு அவர்களிடன் சொன்னார், “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணு கிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிற வைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவான் 5:39-40). இவர்கள், பிறகு, கிறிஸ்துவிடம் வருவதற்குப் பதிலாக சிலகாரியங்களைச் செய்கிறார்கள். அப்படிப்பட்ட தவறை செய்ய உனக்கு வாய்ப்பு இருக்கிறதா? II. இரண்டாவதாக, கிறிஸ்துவிடம் வருவதற்குப் பதிலாக மற்றவழிகள் ஏன் உன்னை இரட்சிக்காது. நீ கடைசி நியாயத்தீர்ப்பில், தேவனுடைய சிங்காசனத்துக்கு முன்பாக நிற்கும்போது, இயேசு உன்னிடம் சொல்லுவார், “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்” (மத்தேயு 7:23). அவரை விட்டு நரக அக்கினிக்கு அகன்றுபோங்கள் என்று அவர் உனக்கு ஏன் சொல்லுவார்? ஏனென்றால் அவர் “ஒருக்காலும் உன்னை அறியவில்லை.” அவர் ஒருக்காலும் உன்னை அறியாததற்குக் காரணம் நீ ஒருக்காலும் அவரிடம் வரவில்லை! அது அவ்வளவு எளிமையானது! ஜெபத்தின் வார்த்தைகளைச் சொல்லி அல்லது வேதத்தில் உள்ள ஏதோ சிலவற்றை விசுவாசித்து நீ இரட்சிக்கப்பட வேண்டும் என்று முயற்சி செய்தாய். ஆனால் அப்படிப்பட்ட காரியங்கள் ஒருவரையும் இரட்சிக்காது. வேதம் சொல்லுகிறது, “அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்” (யோவான் 6:28-29). இயேசுவை விசுவாசிக்கும் “கிரியை” மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது! “இயேசுவை விசுவாசிப்பது” என்பது வேறுவிதமாக சொன்னால் “இயேசுவிடம் வருவது.” “இயேசுவை விசுவாசித்து” மற்றும் “அவரிடம் வருவது” என்பது ஒரே காரியத்தை இரண்டு வித்தியாசமான வழிகளில் சொல்லுவதாகும். இயேசு சொன்னார், “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான். தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (யோவான் 6:44-47). இந்தப் பகுதியில், நாம் பார்ப்பது, இயேசுவிடம் வருவது மற்றும் இயேசுவை விசுவாசிப்பது என்பது ஒரே காரியத்தை இரண்டு வித்தியாசமான வழிகளில் சொல்லுவதாகும். இப்பொழுது, உனக்கு என்னுடைய கேள்வி இதுதான் – நீ இயேசுவிடம் வந்தாயா? இயேசுவை நீ விசுவாசித்து இருக்கிறாயா? இயேசுவிடம் வருவது என்பது இரட்சிப்பைக் கொடுக்கும் வேறொன்றும் இல்லை – ஏனென்றால் இயேசு ஒருவர்தான் இரட்சிக்க முடியும் வேறொருவராலும் முடியாது! இயேசு ஒருவர்தான் உன்னுடைய பாவங்களுக்குரிய கிரயத்தை செலுத்த சிலுவையிலே மரித்தார் வேறொருவரும் இல்லை. இயேசு ஒருவர்தான் உனக்கு ஜீவனைக்கொடுக்க மரித்தோரிலிருந்து சரீரப்பிரகாரமாக உயிர்த்தெழுந்தார் வேறொருவருமில்லை. “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” (அப்போஸ்தலர் 4:12). நீ இயேசுவிடம் வரவேண்டியது அவசியம் இல்லையானால் நீ இரட்சிக்கப்பட முடியாது. மற்றமுறைகள் எல்லாம், மற்றவழிகள் எல்லாம், நரகத்துக்கு நடத்தும். ஆனால் நீ இதுவரையிலும் அவரிடம் வரவில்லை, அல்லவா? அவரைப்பற்றி வேதம் சொன்னதை நீ விசுவாசித்தாய். உன்னை இரட்சிக்கும்படியும் நீ அவரிடம் கேட்டாய். ஆனால் நீ இதுவரையிலும் அவரிடம் வரவில்லை – அல்லவா? “உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவான் 5:40). III. மூன்றாவதாக, கிறிஸ்துவிடம் நீ வந்ததை அல்லது வராததை எப்படி அறிந்து கொள்ளுவது. நீ சொல்லலாம், “கிறிஸ்துவிடம் நான் வந்ததும் அல்லது வராததும் எனக்கு தெரியாது. அதை நான் எப்படி சொல்ல முடியும்?” இதை சொல்லும் வழிமுறை II கொரிந்தியர் 13:5ல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்போஸ்தலர் பவுல் சொன்னார், “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள்...” (II கொரிந்தியர் 13:5). இந்த வசனத்தைபற்றி, ஸ்பர்ஜன் சொன்னார், உங்களை நீங்களே சோதித்துப் பாருங்கள் நீ ஒரு தவறு செய்தால் இந்த உலகத்திலே தவிர, நீ ஒருபோதும் அதை சரிசெய்து கொள்ள முடியாது... எனது ஆத்துமா நரகத்தில் தள்ளப்பட நான் விடமுடியாது. நம்மை நாமே சோதித்து பார்க்காவிட்டால், நீயும் நானும் ஓடிக்கொண்டிருப்பது என்ன ஒரு பயம் நிறைந்த துணிகரமான ஆபத்துக்குரியது! அது ஒரு நித்தியமான ஆபத்து; அது ஒரு நித்தியமானது தேவனுடைய நன்மையான பரலோகம், அல்லது அவருடைய நித்திய சாபமான நரகம் என்ற ஆபத்தாகும். அப்போஸ்தலன் நன்றாக சொன்னார், “உங்களை நீங்களே சோதித்துப் பாருங்கள்” (C. H. Spurgeon, “Self Examination,” The New Park Street Pulpit, Pilgrim Publications, 1981 reprint, volume IV, p. 429). டாக்டர் ஜெ. வெர்னான் மெக்ஜீ II கொரிந்தியர் 13:5க்கு இந்த வர்ணனையை தருகிறார், நாம் விசுவாசமுள்ளவர்களோ அல்லது இல்லையோ என்று நம்மை நாமே சோதித்து பார்க்க வேண்டுமென்று பவுல் சொல்லுகிறார். நாம் இந்தக் காரியத்தை எதிர்கொள்ள விருப்பமுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியமாகும் (J. Vernon McGee, Thru the Bible, Thomas Nelson, 1983, volume V, p. 145). ஆஷாயெல் நெட்லிடன், இரண்டாம் எழுப்புதலின் தலைசிறந்த சுவிசேஷகர், சொன்னார், இந்த காரியத்தில் [சுயபரிசோதனையில்], ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் தானே தனிமையாக நியாயத்தீர்ப்பில் அமரவேண்டும். உங்கள் ஆத்துமாவோடு உண்மையாக சலக்கிரனை செய்யுங்கள். ஒன்றுமில்லாததைவிட ஒரு பொய்யான நம்பிக்கை மோசமானது. இந்த முக்கியமான தருணத்தில் ஒரு தவறு நேர்ந்தால் அது மிகவும் ஆபத்தானது. நீ ஓய்வாக அமர்ந்திருக்கும் பரலோகத்தின் நம்பிக்கையின் அஸ்திபாரம் நன்றாக சோதிக்கப்பட வேண்டும், இல்லையானால் உனது தவறை அதிக காலதாமதமாக நீ கண்டுபிடிப்பாய் (Asahel Nettleton, Sermons From the Second Great Awakening, International Outreach, 1995 reprint, pp. 323, 333). உனது இரட்சிப்பின் நேரத்திற்கு திரும்ப சென்று யோசித்துப்பார். நீ இயேசுவிடம் வந்தாயா? அல்லது வேறு ஏதாவது காரியம் செய்தாயா? “ டாக்டர் நெட்லிடன் சொன்னதுபோல, நீ ஓய்ந்து அமர்ந்திருக்கும் பரலோகத்தின் நம்பிக்கைகளின் அஸ்திபாரம் நன்றாக சோதிக்கப்பட வேண்டும்.” நீ மெய்யாகவே கிறிஸ்துவிடம் வந்தது உண்டா? கிறிஸ்துவாக இருக்கிறாரா, அவரே உனது நம்பிக்கைகளின் அஸ்திபாரமாக? நீ மெய்யாகவே கிறிஸ்துவிடம் வரவில்லையானால் பிறகு திரும்பி வா, நீ இன்று இரவு அவரிடம் வரவேண்டும். இயேசு சொன்னனார், “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோவான் 6:37). இயேசு சொன்னனார், “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28). எனது நம்பிக்கை இயேசுவின் இரத்தம் மற்றும் நீதியினால் குறைவில்லாமல் கட்டப்பட்டிருக்கிறது. நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452. (பிரசங்கத்தின் முடிவு) இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர் போதனைக்கு முன்பாக வேதவசனம் வாசித்தவர் டாக்டர் கெரிங்டன் எல். சான்: யோவான் 5:39-47. |
முக்கிய குறிப்புகள் நீ கிறிஸ்துவிடம் வந்திருக்கிறாயா? HAVE YOU COME TO CHRIST? டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால் “உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவான் 5:40). (யோவான் 5:39; ஏசாயா 53:3; சகரியா 11:8; யோவான் 19:15; 6:44) I. முதலாவதாக, கிறிஸ்துவிடம் வருவதற்குப் பதிலாக மக்கள் என்ன செய்கிறார்கள், I தீமோத்தேயு 2:5; மத்தேயு 11:28.
II. இரண்டாவதாக, கிறிஸ்துவிடம் வருவதற்குப் பதிலாக மற்றவழிகள் ஏன் உன்னை இரட்சிக்காது, மத்தேயு 7:23;
III. மூன்றாவதாக, கிறிஸ்துவிடம் நீ வந்ததை அல்லது வராததை எப்படி அறிந்து கொள்ளுவது, II கொரிந்தியர் 13:5; யோவான் 6:37. |